வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகளும், வாழ்த்துக்களும்!
சற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், தமிழ்நதி)
முதல் பரிசுக்குரிய சிறுகதை: (பரிசுத் தொகை ரூ.10000)
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - எம்.ரிஷான் ஷெரீப்
இரண்டாவது பரிசுக்குரிய சிறுகதைகள்: (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.5000/-)
1.இரைச்சலற்ற வீடு - ரா.கிரிதரன்
2. யுகபுருஷன் – அப்பாதுரை
தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.1000/- வீதம்)
1.படுதா - போகன்
2.சுனை நீர் – ராகவன்
3.உயிர்க்கொடி - யாழன் ஆதி
4,அசரீரி - ஸ்ரீதர் நாராயணன்
5.பெருநகர சர்ப்பம் - நிலா ரசிகன்
6.கொடலு - ஆடுமாடு
7.கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப் பாண்டியன்
8.பம்பரம் - க.பாலாசி
9.அப்ரஞ்ஜி - கே.ஜே.அசோக்குமார்
10.முத்துப்பிள்ளை கிணறு - லஷ்மிசரவணக்குமார்
11.கல்தூண் - லதாமகன்
12.கருத்தப்பசு - சே.குமார்
13.மரம்,செடி,மலை - அதிஷா
14.அறைக்குள் புகுந்த தனிமை - சந்திரா
15.வார்த்தைகள் - ஹேமா
இந்த சிறுகதைத் தொகுப்பிற்கு முதல் பரிசு பெற்ற கதையான “காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்” என்ற பெயரே வைக்கப்படுகிறது. தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாக வம்சி பதிப்பகத்தின் சார்பில் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் புத்தக வெளியீடு நடத்தி அதில் பரிசுத்தொகை வழங்குவதற்கு திட்டம் இருக்கிறது. அதுகுறித்து வம்சி பதிப்பகத்திலிருந்து, வெற்றிபெற்ற பதிவுலக எழுத்தாளர்களுக்கு மெயில் அனுப்பப்படும்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டுக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்றும் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வம்சி சிறுகதைப் போட்டி மற்றும் குடும்ப நூலகம்
“வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள் என்ன ஆச்சு?”. தொலைபேசிகள், பின்னூட்டங்கள், தனி மடல்களில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நானும் பதிலுக்கு பவா.செல்லத்துரையையும், அவரது துணைவியார் ஷைலஜா அவர்களையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.
“பொறுங்க தோழர், நடுவர் குழுவில் நாஞ்சில் நாடனுக்கும், பிரபஞ்சனுக்கும் அனுப்பி வைத்துவிட்டோம். தமிழ்நதி அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. விரைவில் அனுப்பி வைத்துவிடுகிறோம்”
“நாஞ்சில் நாடன் காரைக்குடி பக்கம் ஷூட்டிங் சம்பந்தமாக இருக்கிறார். வர சில நாட்கள் ஆகுமாம்.”
“பிரபஞ்சன் இன்னும் சில கதைகள் மட்டுமே படிக்க வேண்டியிருக்கிறதாம். ஓரிரு நாட்களில் அவரது முடிவைச் சொல்லிவிடுவார்.”
”தமிழ்நதிக்கு தாமதமாக அனுப்ப முடிந்தது. விரைவில் படித்துவிட்டுச் சொல்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார்.”
“நாஞ்சில் நாடன் படித்துவிட்டு முடிவுகள் சொல்லிவிட்டார்.”
“பிரபஞ்சனும் படித்துவிட்டு முடிவுகள் சொல்லிவிட்டார்”
இப்படியே தொடர்ந்த உரையாடல்களின் கடைசியாக இன்று காலை வம்சி பதிப்பத்தின் சார்பில் ஷைலஜா அவர்கள், ”நாளை தமிழ்நதி முடிவுகள் சொல்லி விடுவார். புத்தாண்டுச் செய்தியாக அறிவித்துவிடலாம்” எனச் சொன்னார். கொஞ்சம் தைரியமாக தீராத பக்கங்களின் பக்கம் வந்திருக்கிறேன்.
நண்பர்களே, மன்னியுங்கள். இந்த சிறுகதைப் போட்டியில் அறிவித்த தேதிக்கு ஒரு மாதம் கழித்துத்தான் முடிவு சொல்கிற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. தொகுப்பிற்கான கதைகள் ஒரளவுக்கு முடிவு செய்து அச்சுக்கு அனுப்பக் கூடிய நிலையில் இருப்பதாகவும், தமிழ்நதி அவர்கள் முடிவுகள் தெரிவித்தவுடன் இறுதி செய்துவிடலாம் எனவும், நிச்சயம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு தொகுப்பை கொண்டு வந்துவிட முடியும் எனவும் பவா.செல்லத்துரை இப்போதும் உத்திரவாதம் கொடுத்திருக்கிறார். எழுத்தாளர்கள் பிரபஞ்சனும், நாஞ்சில்நாடனும் அறிவித்த முடிவுகளைக் கேட்டேன். சொல்ல முடியாது, அதை வம்சி இறுதி செய்தபிறகே சொல்வோம் என்று சிரிக்கிறார். ஆனால் பிரபஞ்சனும், நாஞ்சில் நாடனும் முதலிரண்டு கதைகளை ஒன்றுபோல் சொல்லியிருக்கிறார்கள் என ஆச்சரியமாகச் சொன்னார்.
நண்பர்களே இன்னும் ஒருநாள் பொறுத்துக்கொள்ளுங்கள் முடிவுகளுக்காக. உங்களோடு நானும் காத்து இருக்கிறேன்.
பாரதி புத்தகாலயம் சார்பில் குடும்ப நூலகம் என ஒரு திட்டம் யோசிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கொரு நூலகம் அமைப்பதற்கான ஆரோக்கியமான சிந்தனையுடன் இது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
குறைந்த பணம் செலுத்தி, அதிக தள்ளுபடியில் உங்களுக்குத் தேவையான எவ்வகையானப் புத்தகங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.100 செலுத்தி குடும்ப நூலகத்தின் உறுப்பினராகுங்கள்.
ரூ.2000/- செலுத்தி ரூ.3000/- மதிப்புள்ள புத்தகங்களையும்,
ரூ.5000/- செலுத்தி ரூ.8000/- மதிப்புள்ள புத்தகங்களையும்
ரூ.12000/- செலுத்தி ரூ.20000/- மதிப்புள்ள புத்தகங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
அணுகுவீர்:
பாரதி புத்தகாலயம்
421,அண்ணா சாலை
தேனாம்பேட்டை
சென்னை- 18
தொலைபேசி: 044- 24332424 / 24332924
ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
என்றும் புதிது!
அடிக்கடி நான் வாசிக்கும் புத்தகங்களில் ஒன்று “the greatest works of kahlil Gibran". கலீல் கிப்ரான் எப்போதும் மிக நெருக்கமானவராக இருக்கிறார். கவிதைகளாய், சொற்சித்திரங்களாய் அவர் தரும் காட்சிகள் நமக்குள் காலவெளிகளைத் தாண்டி விரிகின்றன. அங்கே வாழ்வின் தத்துவங்ளும், உண்மைகளும் கனிந்து கிடக்கின்றன. அவை எப்போதும் அன்றலர்ந்ததாக இருக்கின்றன. நமக்குள் நிறைந்திருக்கும் புதிர்களை அவிழ்க்கின்றன. இதையெல்லாம் கலீல்கிப்ரான் யாருக்குச் சொல்கிறார், எதற்குச் சொல்கிறார் என்ற கேள்விகள் நமக்குள் எழுந்தால், இலக்கியத்தின் மேன்மை தெரிய வரும்.
ஒருவரியில் ஆயிரம், பல்லாயிரம் ஆண்டுகளைத் தாண்டிச் சொல்லும் இந்த இரு சொற்சித்திரங்களை நான் பலமுறை வாசித்திருந்தாலும், ஒவ்வொரு தடவையும் அவை புதிய செய்திகளைச் சொல்கின்றன. இதற்கு விளக்கம் அளிப்பது கலீல் கிப்ரானையும், இலக்கியத்தையும் அவமரியாதைச் செய்வதாகும்.
(1)
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அண்டை வீட்டுக்காரன் என்னிடம், “துயரம் மிகுந்ததாகவும், வெறுமை நிறைந்ததாகவும் இருப்பதால், நான் வாழ்க்கையை வெறுக்கிறேன்” என்றான்.
நேற்று, இடுகாடு வழியாகச் செல்லும்போது அவனது கல்லறை மீது வாழ்க்கை நடனமாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன்.
(2)
ரொம்ப காலத்துக்கு முன்னால், எல்லோரையும் நேசித்ததாலும், எல்லோராலும் நேசிக்கப்பட்டதாலும் அந்த மனிதனை சிலுவையில் அறைந்தார்கள்.
நேற்று அவனை மிக விநோதமாக மூன்று தருணங்களில் பார்த்தேன்.
முதல் தடவை, ஒரு போலீஸ்காரனிடம், ஒரு விபச்சாரியை சிறைக்குக் கொண்டு செல்ல வேண்டாமென்று வேண்டிக்கொண்டு இருந்தான். இரண்டாவது சமயம், எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டவனோடு உட்கார்ந்து மதுவருந்திக்கொண்டு இருந்தான். மூன்றாவதாக ஒரு தேவாலயத்தில் உணவுக்காக அதை வழங்குபவரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
சு.வெங்கடேசனுக்கு சாகித்திய அகாதமி விருது!
எனது நெருங்கிய நண்பரும், எங்கள் இயக்கத்தின் தோழரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளருமாகிய சு.வெங்கடேசனுக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. அவர் எழுதிய ஒரே நாவலும், முதல் நாவலுமான ‘காவல் கோட்டத்திற்கு’ இந்த விருது கிடைத்திருக்கிறது. சந்தோஷம்தான். சி.பி.எம் கட்சி, எழுத்தாளர் சங்கம், எங்களைப் போன்ற அவரது நண்பர்கள் இதுகுறித்து பெருமிதமும், புளகாங்கிதமும் அடையும் இந்த நேரத்தில் பணிவோடு சில விஷயங்களை சொல்ல வேண்டியிருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்களை பகிர்வதற்கு முன்பு சில விஷயங்களை மனந்திறந்து பேச வேண்டியிருக்கிறது.
வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற தமிழ் இலக்கிய உலகின் வசீகரமான பரப்பில் சு.வெங்கடேசனோடு நம்மையும் சேர்த்து ஆட்கொண்டவர்களுக்கு இந்த விருது இன்னும் கிடைக்கவில்லை. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற இலக்கிய ஜாம்பவான்கள் படைத்த நாவல்களையும், இலக்கிய படைப்புகளையும் தாண்டி சு.வெங்கடேசனுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. ‘ஆழி சூழ் உலகு’ , ‘கொற்கை’ படைத்த ஜே.டி.குருஸும் ‘மீன்காரத்தெரு’, ‘கருத்த லெப்பை’ போன்ற அற்புதமான நாவல்களைப் படைத்த ஜாகீர் ராஜாவும் காத்திருக்கிறார்கள். இவர்கள் எனக்குத் தெரிந்த ஆளுமைகள். இன்னும் இது போல பலரைச் சொல்லலாம். இவர்களுக்கெல்லாம் கிடைக்காத இந்திய அரசின் இலக்கிய பீட விருதுகளில் ஒன்று சு.வெங்கடேசனுக்கு கிடைத்திருக்கிறது.
சென்றமுறை எழுத்தாளர். நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தபோது அவர் இதனை சொல்லாமல் சொல்லி, தமிழுக்கு இன்னும் இருபத்தைந்து பேருக்காவது விருது கொடுக்க வேண்டும் என்றார். தோழர். சு.வெங்கடேசனும் அந்த உண்மையையும், பண்பையும் இச்சமயத்தில் வெளிப்படுத்த வேண்டும். அதுதான் தமிழ் இலக்கிய உலகிற்கும், படைப்பாளிகளுக்கும் அவர் செய்கிற மரியாதை.
அந்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி, உங்களையும் வாழ்த்துகிறேன், வெங்கடேசன்!
யார் நல்லவர், யார் கெட்டவர்?
நாற்காலிக்கு மிக நெருக்கமாக யாரும் சுற்றி வரக் கூடாது என்பது ஆட்டத்தின் கணக்கு. நாற்காலியை விட்டுத் தள்ளிப் போய் சுற்றக் கூடாது என்று ஆட்டக்காரர்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். ஒன்றுபோல ஒரே பாதையில் அவர்கள் வட்டமாக சுற்றிச் சுற்றி வருகிறார்கள். யாவரும் தத்தம் இடைவெளிகளில் கவனமாயிருக்கின்றனர்.
யாரும் யாரையும் தள்ளிவிடக் கூடாது என்பது ஆட்டத்தின் ஒழுக்கம். தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதில் ஒவ்வொரு ஆட்டக்காரனும் எச்சரிக்கையாயிருக்கிறான். பாட்டு நின்று நாற்காலியை நோக்கிப் பாயும் வேகத்தில், யாராவது ஒருவன் கீழே விழுந்து யாரோ ஒருவர் தன்னை தள்ளிவிட்டதாக எப்போதும் சொல்கிறான். அந்தக் குரலுக்கு அவகாசம் கொடுக்காமல் பாட்டு மீண்டும் ஆரம்பித்துவிடுகிறது.
யாரையாவது ஒருவனை வெளியேற்ற வேண்டும் என்பது ஆட்டத்தின் விதி. காதில் பாட்டும், கண்ணில் நாற்காலியுமாக சுற்றிக்கொண்டு இருக்கும் அவர்கள் நெஞ்சில் எப்படியாவது தனக்கு ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே முழுக்க நிறைந்திருக்கிறது. யாரிடமும் மற்றவர்களுக்கான இடம் துளியும் இல்லை.
ஒரே ஒரு நாற்காலியில் யார் உட்காருகிறார் என்பதே ஆட்டத்தின் முடிவு. தமக்கான ஆட்டக்காரனை அடையாளம் கண்டபடி சுற்றி நிற்கும் கூட்டம் பிரிந்து பிரிந்து கிடக்கிறது. யார் வெற்றி பெறுவார், யார் தோற்பார் என அலைமோதிக் கொள்கிறது.
இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் யாரறிவார்?
பாதை தெரியுது பார்!
திங்கள் அன்று காலை தீக்கதிரின் முதல் பக்கத்தில் பார்த்த அந்தப் புகைப்படம் நிறைய சிந்தனைகளைக் கிளர்த்திப் பரவசம் கொள்ள வைத்தது.. சாலையில் ஒரு பெண் கைப் பையோடு நடக்கிறார். அதில் என்ன புதிதாய் என்று எடுத்துக் கொள்ள முடியாத அருங்காட்சி அது. அவர் எங்கே, எந்தப் பின்னணியில் இப்படி நடக்க நேர்ந்தது என்பது தான் அந்தப் படத்தின் அழகைக் கூட்டுவது. சொல்லப் போனால் அந்தப் படம் ஏன், இன்னும் கூடப் பெரிதாய் செய்தித் தாளின் ஆறு பத்திகளையாவது அடைத்துக் கொண்டு இடம் பெற்றிருக்கக் கூடாது என்று கூடத் தோன்றியது. சங்ககிரி அருகே சந்நியாசிப்பட்டி கிராமத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து இடிக்கப் பட்ட தீண்டாமைச் சுவர்....என்ற குறிப்புடன் வந்திருக்கும் இந்தப் புகைப்படத்தில், இன்னும் நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் தீண்டாமை வெளியில் - நொறுக்கப்பட்ட கற்குவியல்களைக் கடந்து அந்தப் பெண் நடக்கும் திசையில் அவரை வரவேற்கும் வெயில் சுடர்விட்டுத் துலக்கமாகத் தெரியவும் செய்கிறது.
சுவர் இடிக்கப் பட்ட இடம் சங்ககிரி சன்னியாசிப்பட்டி என்றாலும், அது திறந்து வைத்த பாதையில் இதுவரை இடித்துத் தகர்க்கப்பட்ட சுவர்களின் கதையும், இனி அப்படியான கட்டுமானத்திற்கு எதிரான விழிப்புணர்வுக்கும் உறுதிக்குமான பிரகடனங்களும் சேர்ந்தே வெளிப்படுகின்றன.
உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வின் போது மதுரை மாவட்ட முன்னணிச் செயல்வீரர்களின் கண்களில் பட்டது. தீக்கதிரிலும், ஹிண்டு நாளேட்டிலும் செய்தி வெடித்தது. சுவர் மீது மின்சாரக் கம்பிகளை நட்டவர்களுக்கே 'ஷாக்' அடிக்கும் வண்ணம் கொதித்தெழுந்தது போராட்டம். வழக்கம்போல் தொடர் பேச்சுவார்த்தைச் சுழலில் சோர்வடையவைத்து விஷயத்தைத் தானாக மரித்துப் போக விடச் செய்வதில் வல்லவராக இருந்த ஆட்சியாளர்களையும், அதிகார வர்க்கத்தையும் அதிர வைக்கும் முனைப்போடு போராட்டம் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரவும், மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையில் சுவர் அது செல்ல வேண்டிய கதிக்குக் கொண்டு சேர்க்கப் படும் என்று அறிவிக்கப் படவும் தட தட என்று ஒரு பகுதிச் சுவரை இடித்துத் தள்ளுகிற வேலையை மாவட்ட நிர்வாகம் செய்து முடித்தது.
சுவர் இடிப்பு ஒரு பெரிய சாதனை என்று நாம் சொல்லிக் கொள்ளவில்லை. அவமானத்தின் சின்னம் தகர்க்கப்பட்டதை அடையாளபூர்வமாக அங்கீகரிக்கவே கேட்டுக் கொண்டோம். சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் குறுக்குச் சுவர் என்பது எத்தனை வன்மம் நிறைந்தது என்பதை அம்பலப் படுத்திய இயக்கத்தையும், அது உடைத்தெறியப்படுவது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் உரக்க எடுத்துச் சொன்னோம். துரதிருஷ்டவசமாக ஒரு சில வட்டாரங்களில் இருந்து இது ஒரு பெரிய வேலையா என்ற மிகுந்த ஏளனப் பார்வையோடும், ஆலய நுழைவு-தீண்டாமைச் சுவர் இடிப்பு...இதெல்லாம் இந்தக் காலத்திற்கான செயல் திட்டங்களா என்ற நிராகரிப்போடும், இதனால் எல்லாம் சாதியம் ஒழிந்து விடுமா என்ற கொச்சையான கேள்வியோடும் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டன.
சுவர் ஓரிடத்தில் அல்ல, ஒரு மாவட்டத்தில் மட்டிலுமல்ல....என தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு சாதியவாதிகள் ஊர் ஊராய் வைத்திருந்த வேலைகள் ஒவ்வொன்றாக பொதுமக்கள் பார்வைக்குத் தெரியவந்தன.....அது இன்னதென்று தெரியாதிருந்த தலித் மக்களும் தாமாகவே அதன் பிறகு அப்படியான தடுப்பு அரண்களை அவர்களாகப் பின்னர் ஒரு கட்டத்தில் கண்டு பிடிக்கவும், அகற்றியாக வேண்டும் என்று குரல் கொடுக்கவும் தொடங்கினார்கள்.
திருச்சி எடமலைப் பட்டி புதூர், சேலம் ஆட்டையம்பட்டி, வேலூர், துரைப்பாடி இரும்பு கேட், சேலம், மகாத்மா காந்தி நகர், கோவை பெரியார் நகர், கோவை நாகராஜபுரம்............என இதுவரை இடிபட்ட சுவர்களின் வரிசையில் தற்போது புதிதாகக் கட்டிய மாத்திரத்தில் அடையாளம் கண்டு இடிக்கப்பட்ட சுவராய்ப் போனது சங்ககிரி சன்னியாசிப்பட்டி சுவர்.
எண்பதுகளின் தொடக்கத்தில் ஆங்கில நாளேடு ஒன்றில் சண்டிகார் அருகே ஒரு சிற்றூரில் இருக்கும் நாடறிந்த பெரிய பொதுத் துறை வங்கி ஒன்றின் மேலாளர் எழுதியிருந்த கடிதம் வந்திருந்தது. அவரது கிளையின் கடை நிலை ஊழியர் ஒன்பது முறை வீடு மாற்ற முடிந்திருக்கும் அந்த ஊரில், தன்னால் ஒரே ஒரு வீட்டில் கூடக் குடியேற முடியவில்லை என்றும், தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்திருப்பதே அதற்குக் காரணம் என்றும் குமுறி வெடித்திருந்தார் அவர். இட மாற்றலில் சென்னைக்கு வந்த எனது நண்பர் ஒருவர், புதிய இடத்தில் மதிய உணவு நேரத்தின் போது தாம் கொண்டு வந்திருந்த உருளைக் கிழங்குக் கறியை ஆசையோடு வாங்கிக் கொண்ட சக ஊழியர் ஒருவர், பிறகு யாரோ சாடையால் இவரது சாதியை உணர்த்தியத்தில் அருவருத்துப் பின்னர் தான் பாராதவாறு அதைக் குப்பைக் கூடையில் கவிழ்த்துவிட்டுப் போனதை வேதனையோடு பகிர்ந்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு காலமான எழுத்தாளர் ஆர் சூடாமணி அவர்களின் "நெருப்பு" என்ற அருமையான சிறுகதையில் தனது மகனின் நண்பனே ஆனாலும், தன்னால் தனது வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்படும் தாழ்த்தப்பட்ட வாலிபன் அந்த வீடு எரியும்போது உட்புகுந்து தனது பேரக் குழந்தையின் உயிரைக் காப்பதான நிலையில் உளவியல் அதிர்ச்சிக்குள்ளாகும் பெரியவர் ஒருவரின் சாதியத் தீ பேசப்படும். அந்த இடத்தில் அவர் இப்படி உணர்வதாக சூடாமணி எழுதியிருப்பார்: "என்னுள் நேர்ந்த இந்த மன மாற்றம் யாரும் அறியாமல் இரவில் மடலவிழும் பூவாய் இருப்பதில் என்ன பிரயோசனம், எல்லோரும் அறியும் வண்ணம் ஓர் ஓவியச் செயலால் இந்த உலகுக்கு நான் உணர்த்த வேண்டாமா.." பின்னர் அவர் அவனை தமது இல்லத்தில் தம்மருகே உட்கார்ந்து உணவுண்ணச் சொல்லும்போது, வட மாநிலம் ஒன்றில், தாழ்த்தப்பட்ட ஒருவர் தவறான புகாரை முன்வைத்து மரத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்ட செய்தியைக் காட்டி விட்டு அந்த வாலிபன் நகர்வதாக முடியும் அந்தக் கதை.
விதவிதமான வடிவங்களில் இன்னும் தொடரும் தீண்டாமை, தீண்டாமையை வாழவைத்துக் கொண்டிருக்கும் அடிப்படை வருணாசிரம ஏற்பாடு, ஏகாதிபத்திய உலகமயத்தின் நெருப்பில் எரிந்து விடாத பக்குவத் தொலைவில் இருந்து கொண்டு சொகுசாகக் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் நிலவுடைமை சமூகத்தின் சாதிய ஒடுக்குமுறை இன்னவற்றுக்கு எதிரான போராட்டம் பல வடிவங்களில், பல முனைகளில், பல்வேறு தளங்களில் முன்னெடுக்கப் பட வேண்டியதாகிறது. கண்ணுக்குத் தெரியும் சுவர்களை அதிகாரத்தின் எதிரே நின்று தகர்த்தெறிய நடக்கும் போராட்டங்கள் ஒரு புறம். மனிதர்களின் மரபணுக்குள் வளைக்கமுடியாத கம்பிகளின் வலுவோடு எழும்பி நிற்கும் சாதியச் சுவர்களை இடிப்பது எத்தனை சவாலான வேலை என்பதையும் அன்றாட வாழ்க்கை நமக்குக் கற்பித்துக் கொண்டே இருக்கிறது.
முதல் மனிதனாக, நிலவில் கால் வைத்த நீல் ஆம்ஸ்டிராங், தான் சாதாரணமாய் எடுத்து வைத்த ஓரடி அது, ஆனால் மனிதகுலத்திற்கு ஒரு அசுரப் பாய்ச்சல் என்று வருணித்தார். சன்னியாசிப்பட்டி சுவர் நொறுக்கப்பட்டு விரியும் பாதையில் இந்தப் பெண்மணி நடப்பதும் அப்படித் தான். அது அவருக்கு சாதாரண ஒரு நடை தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் கம்பீரத்தோடு எடுத்துவைக்கும் வெற்றி நடை அது.
- எஸ்.வி.வேணுகோபாலன்
(இன்று அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள். அவரது வாழ்க்கை நமக்கு வழிகாட்டுகிறது)
மாதவராஜ் பக்கங்கள் - 38
“அப்பாவுக்கு உடம்பு சரியில்ல, வயிற்று வலியில் கஷ்டப்பட்டார். ஆஸ்பத்தியில் சேர்த்திருக்கிறோம்” என தீபா போன் செய்து, ஞாயிறோடு ஞாயிறு எட்டு, இன்று ஒன்பது நாளாகிவிட்டது. மருத்துவரீதியான காரணங்கள் அறிவதற்கு இரண்டு மூன்று நாட்களாக, எங்களுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்கள் வந்து ஆதரவாய் இருந்தபோதிலும் அந்த சமயத்தில் அருகிலிருந்து உறுதியோடு எதிர்கொண்ட தீபாவை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
பித்தப்பை அகற்றப்பட்டு, இரண்டு நாட்கள் இன்டென்சிவ் கேரில் கவனிக்கப்பட்டு, தனியறையில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பகலில் உறவினர்களும், அவரது நண்பர்களும் வந்து பார்த்துவிட்டுச் சென்ற பிறகு இரவுகளில் அவரும் நானும் மட்டுமே அந்த அறையில் இருந்தோம். கண்கள் மூடியபடி இழுத்துவிடும் மூச்சுக்கு அசையும் அவரது உடலைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். உற்சாகமாய் நண்பர்களோடு பேசுகிற, கடகடவென்று சிரிக்கிற, ஆங்காரமாய் முகம் நிமிர்ந்து ஆரவாரிக்கிற, சிலிர்த்து பாரதியாரின் கவிதைகளை பாடுகிற, கர்வம் அடைகாக்கும் மௌனம் சாதிக்கிற அவரின் கோலங்கள் எல்லாம் நினைவுக்கு வந்துகொண்டு இருந்தன. இடியோசையுடன் மின்னிய வெளிச்சங்கள் இளகி, ஒரு விளக்கின் திரியின் மீது கொண்ட அமைதியான ரூபம் போலிருந்தது.
ரீபிரிண்ட் செய்யப்பட்ட அவரது புத்தகங்கள் சிலவற்றை நண்பர் ஒருவர் கொடுத்துச் சென்றிருந்தார். எனக்குப் பிடித்தமான அவரது முன்னுரைகளின் தொகுதி அதிலிருந்தது. எடுத்துப் படித்தேன். ஜெயகாந்தன் என்னோடு உரத்த குரலில் பேச ஆரம்பித்தார். மங்கிய அறை பிரகாசமானது.
நேற்று இந்த நேரம் சென்னையிலிருந்து சாத்தூருக்குக் கிளம்பினேன். இன்று மாலை அம்மு போன் செய்தாள். “அப்பாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறதாம். இன்னும் இரண்டு நாட்களில் அப்பாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடலாம் என டாக்டர் சொன்னார்”.
மாதவராஜ் பக்கங்கள் -37
இப்போதுதான் கொஞ்சம் ஆசுவாசம் ஏற்பட்டு இருக்கிறது. இனி அடிக்கடி தீராதப் பக்கங்கள் வரமுடியும் என நினைக்கிறேன். வம்சி சிறுகதைப் போட்டி, பதிவர் ராகவனின் சிறுகதைத் தொகுப்பு ஏற்பாடு, எப்போதும் இரு(ழு)க்கும் இயக்க வேலைகள், இடையில் சில நாட்கள் தங்கிவிட்டுப் போன வைரல் காய்ச்சல் தாண்டி இந்தப் பக்கம் அவ்வப்போது எட்டிப்பார்க்கவே முடிந்தது.
வம்சி சிறுகதைப் போட்டிக்கு 370க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்திருந்தன. அவைகள் அனைத்தையும் பிரிண்ட் எடுத்து, தொகுத்து நடுவர்குழுவுக்கு அனுப்பி வைப்பது சிரமமானது. நடுவர்களுக்கு இருக்கும் பல்வேறு பணிகளுக்கு இடையே அனைத்துக் கதைகளையும் படித்துத் தேர்ந்தெடுப்பது மிகச் சிரமமானது. எனவே கதைகள் அனைத்தையும் படித்து, அவைகளில் முக்கியமான கதைகளாகக் கருதியவைகளை வம்சி பதிப்பகம் நடுவர்குழுவுக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டது. அதன்பொருட்டு படித்த கதைகளில் கிடைத்த வாசக அனுபவம் அலாதியானது. போட்டி முடிவுகளுக்குப் பிறகு அவைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். நடுவர் குழுவுக்கு தாமதமாகவே கதைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே முடிவுகள் வரவும் காலதாமதமாகலாம். அன்புடன் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆரம்பத்தில் கவிதைகளாய் எழுதிக்கொண்டு இருந்த நமது பதிவர் ராகவன் சென்ற வருடத்திலிருந்து சிறுகதை எழுதத் தொடங்கினார். அவரது கதைகளை மெச்சி ஏற்கனவே தீராத பக்கங்களிலும் எழுதப்பட்டு இருக்கிறது. வலைப்பக்கங்களில் தொடர்ந்து பல நண்பர்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். எழுத்தாளர் ஜெயமோகன், அம்பை போன்றவர்கள் அவரது கதைகளை குறிப்பிட ஆரம்பித்தார்கள். எழுத்தாளர் வண்ணதாசன் ராகவனைக் கொண்டாடினார் என்றுதான் சொல்ல வேண்டும். தனது சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட வேண்டுமென்று ராகவன் விருப்பம் தெரிவித்தார். அந்தப் பணியையும் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டேன். எழுதப்பட்ட 36 கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்து, எழுத்துப் பிழைகள் சரிசெய்து தொகுத்திருக்கிறேன். வண்ணதாசன் முன்னுரை எழுதித் தர சம்மதித்து இருக்கிறார். ஒன்றிரண்டு நாட்களில் அனுப்பி வைத்துவிடுவேன். வம்சி பதிப்பகம் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வர சம்மதித்து இருக்கிறது. ஆண் பெண் உறவுகள் குறித்து, நுட்பமாகப் பேசும் சிறுகதைத் தொகுப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
தீராத பக்கங்களில் எழுதியவற்றிலிருந்து இரண்டு தொகுப்புகள் இந்த வருடம் கொண்டு வரவேண்டுமென்று நினைத்தேன். முடியுமா என்று தெரியவில்லை. சீட்டுக்கட்டு நாவல் நான்கு அத்தியாயங்களோடு நிற்கிறது. இயக்குனர் மகேந்திரன் குறித்த ஆவணப்பட வேலைகளும் தேங்கிவிட்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசனிடம் பேட்டிக்கு நேரம் கேட்டிருந்தோம். சில மாதங்களுக்கு முன்பு திடுமென ஒருநாள் அவரது உதவியாளர், “நாளை சென்னைக்கு வாருங்கள். கமல்ஹாசன் நேரம் ஒதுக்கியிருக்கிறார்” என்றார். நாங்கள் சாத்தூர், மதுரை, திருநெல்வேலி என அங்கங்கு இருக்கிறோம். எல்லோரும் இணைந்து உடனடியாக புறப்படுவது சாத்தியமில்லாமல் போனது. இன்னொருநாள் வருகிறோம் என்றோம். அந்த இன்னொருநாள் வரவேயில்லை. இயக்குனர் மகேந்திரன் அவர்களிடம் சமீபத்தில் ஒருமுறை போனில் பேசியபோது, “படம் இருக்கட்டும் மாதவராஜ், வீட்டிற்கு வாருங்கள். பேசிக்கொண்டு இருப்போம்” என்று சிரித்தார். என்னால் அப்படி இயல்பாய் சிரிக்க முடியவில்லை.
முழுதாக எதிலும் ஈடுபட முடியாமல், நாட்கள் அதன் போக்கில் இழுத்துக்கொண்டு இருக்கின்றன. ஓடிக்கொண்டு இருக்கிறேன்.
என்ன சொல்ல வருகிறது தினமணி - 2
சனிக்கிழமை (நவம்பர் 19) அன்றைய தலையங்கத்தின் தொடர்ச்சியாக, தீதும் நன்றும் பிறர் தர வாரா II என்ற தலைப்பில், திங்கள் கிழமை அதே விஷயத்தின் மீது அடுத்த தலையங்கம் எழுதி இருக்கிறது. தினமணி. முதல் தலையங்கத்தில், குடிக்கிற தமிழன் (!), பாலுக்கும், பஸ்சுக்கும் கூடுதல் காசு செலவழிக்கட்டுமே என்று எழுதிய கை, இப்போது அதே தமிழன் மீது கரிசனம் பொங்கி வழிய (மதுவில் நுரை பொங்குமே அதே போல!), இப்படியா அநியாயத்திற்கு ராவோடு ராவா கட்டணங்களை ஏற்றுவது, திடு திப்பென்று உயர்த்தியதால் மக்கள் எப்படி திக்கு திசை தெரியாமல் திணறிப் போகிறார்கள்...என்று அப்படியே பிளேட்டைத் திருப்பிப் போட்டு எழுதி இருக்கிறது.
போக்குவரத்து, மின் வாரியம் எல்லாவற்றிலும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் நிர்வாகச் சீர்கேட்டை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இத்தனை நஷ்டத்திற்கு வந்திருக்காதாம். (அதில் அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் அடக்கம் என்பதைக் குறிப்பிட்டுவிடாத அடக்கம் தினமணியிடம்). கட்டண உயர்வு, வரி உயர்வு என்பதெல்லாம் எந்த அரசாலும் தடுக்க முடியாத விஷயம் என்றாலும் அதைக் கடைசி கட்ட வேலையாகத் தான் செய்ய வேண்டுமாம். அதுவும் தவிர இப்படி கட்டணங்களை உயர்த்தி எல்லாம் பிரச்சனைகளைச் சரி செய்துவிடவும் முடியாதாம். இது ஏனுங்க சனிக்கிழமை கண்ணுக்கே பிடிபடல?
அப்புறம், சென்னை மாநகரில் மூன்று கோடி பேர் பேருந்துகளில் பயணம் செய்கிறார்களாம், மாநிலத்தில் அரசு பேருந்துகளை நம்பி இருப்போர் கூலி விவசாயிகள், கணக்கர்கள் என மாதம் ஐயாயிரம் ஊதியம் தாண்டாத அப்பாவிகள் தான் அதிகமாம், அவர்களிடம் முன் அறிவிப்பு செய்யாமல், எந்தத் தேதியில் இருந்து கட்டண உயர்வு என்று சொல்லாமால் கொள்ளாமல் திடீரென்று உயர்த்திய கட்டணம் கேட்டதால் அவர்கள் எத்தனை அவதிக்கு ஆளாகி, எவ்வளவு வசை பாடி, எத்தனை சாபமிட்டு பேருந்திலிருந்து பாதி வழியில் இறங்கிப் போனார்கள், பாவம் என்று உச்சு கொட்டுகிறது தினமணி.
ஆனாலும் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல், இதற்கெல்லாம் முதல்வர் ஜெயலலிதா காரணமில்லையாம், அவருக்குத் தவறான ஆலோசனை சொல்லும் அதிகாரிகள் தானாம் - பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று முதல்வருக்கு எடுத்துச் சொல்லத் தவறி விட்டார்களாம். இப்படியான ஆட்களைப் பக்கத்தில் வைத்திருப்பது எழுபது கோடி பகைவர்களை வைத்திருப்பதற்குச் சமம் என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறாராம். ஐயோ பாவம், ஒன்றும் அறியாத, முறையான தகவல்கள் சொல்லப்படாத முதல்வர் இத்தனை பழி பாவத்திற்கும், மக்களின் சாபத்திற்கும் உள்ளாக வேண்டி வந்துவிட்டதாம்.
ஆனாலும், இப்போது கட்டண உயர்வுக்கும், விலை உயர்வுக்கும் முதல்வர் அளித்திருக்கும் விளக்கங்களை வரிக்கு வரி ஏற்றுக் கொள்கிறதாம் தினமணி. அப்படிப் போடு.
பொதுத் துறை நஷ்டப் படக் கூடாது என்னும் கரிசனத்தால் பொது மக்களை போட்டுத் தள்ளுகிறேன், பொறுத்துக் கொள்ளுங்கள் என்ற அரசின் திசை மாற்று வேலைக்கு தாளம் போடுகிறது தினமணி. அவ்வளவு கரிசனம் பொதுத் துறை மீது கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், மக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் தனியார் பேருந்துகளை அரசின் வசம் எடுத்துக் கொள்ள வேண்டியது தானே....தேவையற்ற போட்டியில் இறங்கி, தரமற்ற ரசாயனக் கலவை சேர்த்து அதிக லாபம் வைத்து விற்றுக் கொண்டிருக்கும் தனியார் பால் நிறுவனங்களை தன் வசம் அரசு எடுத்துக் கொள்ளும் என்று சொல்ல வேண்டியது தானே, தமது ஆட்சிக் காலத்தில் போக்குவரத்தில்-மின்வாரியத்தில் ஊழலுக்கும், நிர்வாகச் சீர்கேட்டிற்கும் காரணமாகவும் அல்லது துணை போயிருக்கும் சொந்தக் கட்சிக்காரர்களும், அரசியல் செல்வாக்காளர்களும் செம்மையாகத் தண்டிக்கப் படுவார்கள் என்று பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டியது தானே.
தினமணி இந்தத் திசையில் எல்லாம் யோசிக்காதுதான், நமக்கும் தெரியும். ஆனால், தமிழக மக்கள் அத்தனை பேருக்கும் தான் ஏக பிரதிநிதியாகத் தன்னைத் தானே வரித்துக் கொண்டு மேற்படித் தலையங்கத்தின் கடைசி வரியில் போட்டிருக்கிறதே ஒரு போடு, அதைக் கேளுங்கள்: முதல்வருக்காக மக்கள் எந்தச் சுமையையும் தாங்குவார்களாம், நம்பிப் பாரத்தை ஏற்றி வைக்கலாமாம், ஆனால் பாறாங்கல்லை ஏற்றி வைத்தால் எப்படி என்று பேச்சு வார்த்தை நடத்தி முடிக்கிறார் ஆசிரியர்.
ராவோடு ராவாக ஏற்றப்பட்ட கட்டணங்களின் தாக்குதலில் மக்கள் படும் அவதியை மூன்று நாள் பொறுத்தாவது புரிந்த மாதிரி எழுதியிருக்கும் இந்த தலையங்கத்தில், கட்டண உயர்வையும், பால் விலை உயர்வையும் கேட்டு அடுத்த நொடியே ஆனந்தக் கூத்தாடும் பலதரப்பு முதலாளிகள் சங்கங்கள், ஆளும் கட்சியின் ஜால்ரா அமைப்புகள் பற்றியும், அதன் அரசியல் குறித்தும் இப்போதும் வாய் திறக்காதிருப்பதேன் ?
முதல் நாள் தமிழர்களைக் குடிகாரர்கள் என்று சாடிய தினமணி இன்று தான் 'தெளிந்து' கொண்டு உயர்த்திய கட்டணத்தின் அவஸ்தைகளை மக்கள் படுவதைத் திடீரென்று புரிந்து கொண்டது மாதிரி காட்டிக் கொள்வது ஒரு புறம், ஆனாலும் ஆட்சியில் இருப்போரைத் தாங்கிப் பிடிப்பது இன்னொரு புறம். பாவங்கள், சாபங்கள், அவஸ்தைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் வலுவான எதிர்ப்பாக உருப்பெறும் என்று தெரிந்ததால் - மக்கள் எதிர்ப்பின் சக்தியைப் புரிந்ததால் ஏற்படும் நடுக்கம் அன்றி வேறென்ன...அதனால் தான், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று சனிக்கிழமை சொல்லும்போது, இந்த நிலைமைகளுக்கெல்லாம் மக்களே காரணம் என்று பொருள் படுத்திய தினமணி, அந்த வாக்கியம் ஆட்சியாளர்க்கும் பொருந்தும் என்று இரண்டாவது தலையங்கத்தில் எழுதுவது அதைத் தான் பொருளாக்குகிறது.
வழக்கம் போல் இதற்கும் அடியில் பொருத்தமான திருக்குறள் போடவேண்டுமே, விடுவார்களா? மிகவும் படித்திருந்தாலும் உலக இயற்கை நியதி அறிந்து அரசன் செயல்படவேண்டும் என்று வள்ளுவர் சொல்லி இருக்கும் திருக்குறளை ஓசைப் படாமல் கீழே போட்டுக் கதையை முடித்து விட்டது தினமணி. அது தினமணிக்கும் பொருந்தாதா!
- எஸ்.வி.வேணுகோபாலன்
வெறிநாய்க்கு உரிமை வந்து வீட்டுக்காரனைக் கடிக்குது

1958ல் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இத்தனை வருடம் கழித்தும் இந்தப் பாடல் அப்படியே வாழ்வை படம் பிடித்துக் காட்டுகிறதே! ‘என்ன இருந்தாலும் மனுஷன் இப்படி ஆடக் கூடாது’ வரியில் மனுஷன் என்பதற்குப் பதிலாக அவரவர்க்குப் பிடித்த வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளலாம்!
ஒருவன்: மூளை நெறஞ்சவங்க
காலம் தெரிசவங்க
மூத்தவங்க படிச்சவங்க
வாழுகின்ற நாடு –இது
மற்றவன்: மூச்சு திணறுதுங்க
முளியும் பிதுங்குதுங்க
பாத்துக்குங்க கேட்டுக்குங்க
ஜனங்கள் படும்பாடு – இது
ஒருவன்: நெலமை இப்படி இருக்குது
நீதி கெடந்து தவிக்குது
கொடுமை மேலே கொடுமை வளர்ந்து
நெருக்குது - அது
அருமையான பொறுமையைத்தான்
கெடுக்குது - ஊர் [நெலமை]
மற்றவன்: பாதை மாறி நடக்குது,
பாஞ்சு பாஞ்சு மொறைக்குது
பழமையான பெருமைகளைக்
கொறைக்குது - நல்ல
பழக்கமெல்லாம் பஞ்சு பஞ்சாப்
பறக்குது - ஊர் [நெலமை]
ஒருவன்: என்ன இருந்தாலும் மனுஷன்
இப்படி ஆடக் கூடாது
மற்றவன்: ஏழைகளை அடிச்சுப் பறிக்கும்
எண்ணம் உடம்புக்காகாது
ஒருவன்: காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
கவனிக்காமெப் போகாது - ஊர் [நெலமை]
ஒருவன்: அன்பு வளர்த்த கோட்டைக்குள்ளே
அகந்தை புகுந்து கலைக்குது
மற்றவன்: வரம்பு மீறி வலுத்த கைகள்
மக்கள் கழுத்தை நெரிக்குது
ஒருவன்: விருப்பம் போல நரிகள் சேர்ந்து
வேட்டையாடிக் குவிக்குது
மற்றவன்: வெறிநாய்க்கு உரிமை வந்து
வீட்டுக்காரனைக் கடிக்குது - ஊர் [நெலமை]
(பாடலை நினைவுபடுத்திய தோழர். அகத்தியலிங்கம் அவர்களுக்கு நன்றி.)
என்ன சொல்ல வருகிறது, தினமணி?
தமிழ்க் கவிதைகளில் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அற்புதச் சொற்சித்திரத்தில் வரும் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற வாக்கியம் போல வேறொன்று இஷ்டப்படியான பிரயோகதிற்குக் கையாளப்படுகிறதா என்று தெரியவில்லை. இந்தத் தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் தினமணி (18 11 2011) தலையங்கத்தில், தமிழக அரசு அண்மையில் உயர்த்தியிருக்கும் பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம் குறித்து அலசப்பட்டிருக்கிறது. சரியாகச் சொல்வதானால், விலை உயர்வை விடுத்து மக்களை அடித்துத் தோய்த்து அலசிப் பிழிந்து காயப் போட்டிருக்கிறார் ஆசிரியர் கே வி.
மின் துறையைப் பொறுத்தவரையில் மத்திய அரசுக்கு இணையாக சம்பளம், கூடுதல் ஆள் நியமனம் தான் பற்றாக்குறைக்குக் காரணமாம். ஆறாவது ஊதியக் குழு வழங்கிய ஊதிய உயர்வில் மிக அதிக சதவீதத்தில் உயர்ந்தது உயர் அதிகாரிகள் ஊதியமே தவிர, சாதாரண நிலையில் இருப்போரது ஊதியம் அல்ல. இன்றும் கூட மின்துறை உள்ளிட்டு அரசின் பல துறைகளில் காலியிடங்கள் லட்சக் கணக்கில் இருக்க ஏதோ தறிக்கெட்ட அளவில் கூடுதல் ஆள் நியமிக்கப் பட்டது போல் பேசுகிறது தினமணி. இருந்தாலும் தவிர்த்திருக்கலாமே கட்டண உயர்வை என்று அரசுக்கு வலிக்காமல் பஞ்சுப் பொதியால் சும்மா குட்டுவது போல் ஒத்தி எடுக்கிறது. இதுவாவது பரவாயில்லை, பால் விலை குறித்தும், பஸ் கட்டண தடாலடி உயர்வு பற்றியும் அடுத்த பத்திகளில் பிரமாத அலசல் செய்து தினமணி இறுதியாகக் கூறுவது என்ன தெரியுமா..
தமிழர்கள் அநியாயத்திற்குக் குடிக்கிறார்களாம். எங்கே இருந்து இந்தக் கண்டு பிடிப்பு? மது விற்பனை மாதம் தோறும் கூடிக் கொண்டே வருகிறதாம். ஆகவே, குடிக்கிற தமிழன், பாலுக்கும் பஸ்சுக்கும் கொஞ்சம் கூடுதலாகக் கொடுக்கட்டுமே என்று அரசு நினைத்தால், அதற்காக யாரைக் குறை சொல்வது என்று தத்துவ முத்தாகக் கொட்டுகிறது நிறைவு வாசகம்.
ஒரு மாநிலத்தின் குடிமக்கள் அனைவருமே 'குடி' மக்கள் என்ற அறிவியல் ஆய்வை எப்படி மேற்கொண்டது தினமணி? ஆராயாமல் சாராயத்தைப் பற்றி தோராயமாகப் பேசுவதன் உட்கருத்து என்ன? உயர் ஊதிய, மேல் தட்டு, நவ நாகரிக உலகத்தினர் வீட்டுக்குள்ளே பார் வைத்துக் கொண்டு பரவசம் கண்டாலும் அவர்களுக்கு வரிச்சலுகை, தொழில் ஊக்கக் கடன்களுக்குக் குறைந்த வட்டி, கடன் திரும்பச் செலுத்த மறுத்தால் வட்டிக் குறைப்பு, வட்டி கழிப்பு, கடனே தள்ளுபடி என்றெல்லாம் சலுகைகள்! சாதாரண மக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி மது நுகர்வோராக இருந்தால் ஒட்டு மொத்த மக்கள் மீது தண்டனையா? இது அரசின் அனைத்து அடாவடி விலை உயர்வு, கட்டண உயர்வு நடவடிக்கைகளையும் நியாயப் படுத்திவிடுமா?
தி மு க எதிர்ப்பை மட்டும் வசதியாக வைத்துக் கொண்டு, முந்தைய ஆட்சியில் ஏன் விலை உயர்வு செய்யவில்லை என்று கேட்டு இப்போதைய உயர்வை நியாயப் படுத்தும் தினமணி சாதாரண மக்கள் தன்னெழுச்சியாக எதிர்ப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது..இடதுசாரிகள் எதிர்ப்புக்கு என்ன சால்ஜாப்பைத் தேடப் போகிறது?
இலவசங்களின் அரசியலை, அ தி மு க, தேர்தல் அறிக்கையில் முன்வைக்கும் போதும் சரி, இப்போது இந்தத் தலையங்கத்தில் அதை ஒட்டி விவாதித்து இலவசங்களால் அரசுக்கு ஏற்படும் பளுவைப் பற்றி பிரலாபிக்கும் போதும் சரி, வலிக்கு ஒத்தடம் கொடுக்கும் பரிவோடு எழுதுகிறது தினமணி. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான பணம், தாழ்த்தப்பட்ட / மலை சாதி மக்களுக்கான சிறப்பு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து எடுக்கப் பட்டது என்ற விஷயங்கள் எல்லாம் மார்க்சிஸ்ட் கட்சி அம்பலப் படுத்தியதை எல்லாம் மறந்து விட்டதா தினமணி?
தி மு க அரசின் நடவடிக்கைகளின் மீதும், தனி நபர்களின் மீதும் கட்டம், கட்டமாக, பக்கம் பக்கமாகக் கட்டுரை ஸைசுக்கு வசனம் எழுதி கேலிச் சித்திரங்கள் தீட்டிக் கொண்டிருந்த கார்ட்டூனிஸ்ட் மதி அவர்கள், அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்றம் பிரச்சனையோ, இப்போதைய இந்த விலை உயர்வு-கட்டண உயர்வு விஷயங்களையோ கண்டித்தோ, விமர்சித்தோ தனது தூரிகையை எடுத்து மையில் தோய்க்கவே இல்லையே, நெடுநாள் விடுப்பா, தவிர்க்க வேண்டிய கடுப்பா?
மத்திய அரசு கடைப்பிடிக்கும் தவறான உலகமயக் கொள்கைகளால் ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை இந்த உயர்வுகள் இன்னும் எத்தனை மோசமாகத் தாக்கும் என்று ஒற்றை வரி கூட இல்லாத இந்தத் தலையங்கம் யார் ரசிப்புக்காக எழுதப்பட்டது?
யார் செய்தாலும் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பற்றி நடுநிலை நின்று பேசுவது என்பது தானே தினமணியின் அறிவிக்கப்பட்டிருக்கும் குறிக்கோள். மன்னவரே எதிர் நின்றாலும், புலி தின்ன வரேன் என்றாலும் மெய் சொல்லல் நல்லதப்பா தம்பி என்ற பாவேந்தன் குரல், பாரதி கொண்டாடியான ஆசிரியர் அறியாததா?
குசும்புக்கெல்லாம் குசும்பாக - அன்றாடம் தலையங்கத்தின் கீழே பொருத்தமான திருக்குறளைத் தேடி எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் தினமணி ஆசிரியர், இந்தத் தலையங்கத்தின் கீழே, இடுக்கண் வருங்கால் நகுக என்ற திருக்குறளைத் தேடி எடுத்துப் போட்டிருப்பது கிண்டலுக்கா, சமாதானத்தை உற்பத்தி செய்வது (Manufacturing the consent) என்று அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி வருணிப்பாரே அந்த வேலையா?
- எஸ் வி வேணுகோபாலன்
நீதிமன்றங்களை விமர்சிக்க நீங்கள் யார்?
நீங்கள் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் நோக்கி ‘யுவர் ஆனர்’ என்பதைத் தாண்டி ஒரு வார்த்தை பேசிவிடக் கூடாது. அவர்கள் அப்படியொரு உயர்ந்த பீடங்களில் வீற்றிருக்கிறார்கள். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவராக போற்றப்படுகிறார்கள். இந்த ஞானமில்லாமல் கேரளாவில் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.வி.ஜெயராஜன் சில வார்த்தைகளைப் பேசிவிட்டார்.
நடைபாதையோரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கூடாது என கேரளாவில் நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்து இருக்கிறது. அதை விமர்சனம் செய்து, ‘நீதிபதிகள் நடைமுறை வாழ்வைப் பற்றி அறியாதவர்கள்’ என ஒரு பொதுக்கூட்டத்தில் எம்.வி.ஜெயராஜன் 2010 ஜூனில் பேசியிருக்கிறார். மக்கள் புழங்கும் இடங்களில் கருத்துக்களைச் சொல்லத்தானே கூட்டங்கள் நடத்துவதன் நோக்கம் என்கிற அர்த்தத்தில் அவர் இதைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வானம் இடிந்து விட்டது. பூமி பிளந்து விட்டது. நீதிபதிகள் நெற்றிக்கண்ணைத் திறந்து விட்டனர்.
எம்.வி.ஜெயராஜன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று போடப்பட்டது. வழக்கு விசாரணையிலும் அவர், “மக்களுக்கு விரோதமாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது அதை விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமை உண்டு” என்றே தன் நிலையில் உறுதியாக இருந்தார். இப்போது நீதிமன்றம் அவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யக்கூட அவருக்கு உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது. ஜனநாயக மாண்புகளுக்கும், அரசியல் சாசன நெறிகளுக்கும் எதிரானது என்று மார்க்சிஸ்ட் கட்சி, இந்தத் தீர்ப்பையே இப்போது குற்றம் சாட்டியிருக்கிறது. நவம்பர் 14ம் தேதி, கேரள உயர்நீதிமன்றத்தின் முன்பாகவே ஆரப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்திருக்கிறது.
இதற்கு முன்னர் தோழர் இ.எம்.எஸ் அவர்கள் “நீதிமன்றங்களும் வர்க்கச் சார்புடையவை” என்று கூறிய கருத்துக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு அப்போது நாடு முழுவதும் பேசப்பட்டது.
நீதிமன்றங்களில் ஊழல் நடப்பதில்லை. நீதிபதிகள் லஞ்சம் வாங்குவதில்லை. நீதிபதிகள் நில அபகரிப்பு செய்வதில்லை. நீதிபதிகள் தவறான தீர்ப்புகள் வழங்குவதில்லை. நீதிபதிகள் பாரபட்சம் பார்ப்பதில்லை. அப்படியிருக்கும்போது, “நீதிபதிகள் நடைமுறை வாழ்வைப் பற்றி அறியாதவர்கள்” என்று தோழர். எம்.வி.ஜெயராஜன் சொல்லியிருப்பது குற்றம்தானே? தோழர். இ.எம்.எஸ் பேசியதும் குற்றம்தானே?
இதற்கு கொஞ்சங்கூட சம்பந்தமில்லாத செய்தி ஒன்று. தான் அன்றைய தினம் டெல்லியில் தேசீய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதால், 22.10.2011 அன்று பெங்களூரில் தனி நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று சொல்லிவிட்டு, டெல்லிக்கும் போகாமல் பெங்களூரூக்கும் போகாமல் போயஸ் கார்டனிலேயே இருந்த ஜெயலலிதா மீது ‘நீதிமன்ற அவமதிப்பு’ குற்றச்சாட்டு ஏன் எழவில்லை? இப்படி யாருக்காவது கேள்வி எழலாம். அது உங்கள் சிந்தனையிலேயே இருக்கட்டும். வாயைத் திறந்து மட்டும் கேட்டு விடாதீர்கள்.
நடுவீதியில் நிற்கவைத்து மன்மோகன்சிங்கை விசாரிப்போம்!
கொஞ்சங்கூட இரக்கமற்ற இப்படியொரு பிரதமரை இதுவரை தேசம் கண்டிருக்காது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஒருபுறம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அடித்தட்டு மக்களுக்குத் தங்கள் அன்றாட வாழ்க்கையே சுமையாக, மூச்சுத் திணறுகிறார்கள். எரிகிற தீயில் எண்ணெயாக மீண்டும் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டு இருக்கிறது. கடும் எதிர்ப்புகள் பலதரப்பில்லும் இருந்து எழுந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் மன்மோகனோ, “எரிபொருட்களுக்கு இனியும் மானியம் கொடுக்க முடியாது ” என்று முகத்தில் அறைகிற மாதிரி பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் இருந்துகொண்டு இந்திய மக்களுக்கு பதில் சொல்கிறார். அதோடு நிறுத்தவில்லை. இனி டீசல், கேஸ், மண்ணென்ணெய் போன்ற எரிபொருட்களின் விலைகளும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்காது, அவற்றையும் கைவிடத் திட்டமிட்டு இருப்பதாக அறிவிக்கிறார்.
சென்ற ஜூன் 2010ல் பெட்ரோல் விலை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கைவிடப்பட்டு, சந்தைக்கு திறந்துவிடப்பட்டது. அதன் பின்புதான் 13 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 15 மாத காலத்தில் 23 ருபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.200/- ஆக உயர்ந்துவிடும் என்கிறார்கள். கேட்டால், சர்வதேசச் சந்தையில் கச்சாப் பொருட்களின் விலை உயர்வு என்றும், ஆயில் கம்பெனிகளுக்கு தொடர்ந்து நஷ்டம் எனவும் கதையளந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆயில் கம்பெனிகளின் நஷ்டத்தைச் சரிகட்ட விலைகள் அவ்வப்போது உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மக்களின் பணத்தை தாங்களாகவே எடுத்துக்கொள்ள முதலாளிகளுக்கு உரிமம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் ‘சந்தைக்குத் திறந்துவிடுவதன்’ சூத்திரம். மக்களிடமிருந்து ஆயில் கம்பெனிகள் தங்கள் ‘நட்டத்தை சரிகட்ட ’ இப்படிக் கொள்ளை அடிக்கலாமாம். ஆனால் எதிர்காலமே இடிந்துபோயிருக்கும் மக்களுக்கு அரசு மானியம் கொடுக்கக் கூடாதாம். இதுதான் ‘பொருளாதார சீர்திருத்தங்களின்’ சூட்சுமம். ஆனால் இந்த ஆயில் கம்பெனிகள் ஒவ்வொரு வருடமும் லாபம் சம்பாதித்துக்கொண்டே இருக்கின்றன என்பதுதான் உண்மை.
மன்மோகன்சிங் திட்டமிட்டபடி டீசல், மண்ணெண்ணெய், கேஸ் விலைகளை நிர்ணயிக்கும் உரிமையை சந்தைக்கே விட்டால் என்னவாகும் என்பதை கற்பனை செய்யவே பயங்கரமானதாய் இருக்கிறது. அரசின் இந்த முடிவை நியாயப்படுத்திப் பேசும்போது, மன்மோகன்சிங் கொட்டிய வார்த்தைகள் கொழுப்பெடுத்தவை. “நமது வாய்ப்புகளுக்கு மேல் வாழ்வதற்கு ஆசைப்படக் கூடாது. பணம் ஒன்றும் மரத்தில் காய்க்கவில்லை.” என்று சொல்ல எத்தனை நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்? மக்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளையெல்லாம் ஒவ்வொன்றாக பறித்துவிட்டு, அவர்களை ஓட்டாண்டிகளாக்கிவிட்டு, ‘இனி நீங்கள் செத்துத் தொலையுங்கள்” என்றுதானே அவர் சொல்கிறார்?
சாமானிய மக்களுக்கு அவர்கள் உழைப்பதற்கான குறைந்தபட்ச ஊதியமே கிடைக்காதபோது, பணம் எப்படி அவர்களுக்கு மரத்தில் காய்க்கும். உடலும் உள்ளமும்தான் காய்த்துப் போகிறது. ஆனால் முதலாளிகளுக்கு இந்த தேசத்தின் தூண், துரும்பு அனைத்திலும் பணம் காய்த்துக்கொண்டே இருக்கிறது. அப்படிக் காய்த்தவைதான் சுவீஸ் வங்கிகளில் கோடி கோடியாய் கொட்டி வைக்கப்படுகிறது. மேலும் மேலும் என வெறிகொண்டு காடு, மலை, கடல் என எல்லாவற்றையும் சுருட்டப்பார்க்கிறது. எம். பிக்களை விலைக்கு வாங்க முடிகிறது. ஹெலிகாப்டர்கள் வந்திறங்கும் மாடிகளோடு நூறு கோடியில், இருநூறு கோடியில் ஆடம்பர பங்களாக்கள் கட்டப்படுகின்றன. சுரண்டியேப் பெருத்த அவர்களுக்கு சிறு சிராய்ப்பு ஏற்பட்டாலும் துடிப்பவைதான் மன்மோகன் வகையறாக்களின் சதையும் இரத்தமும்.
நேரடியாக மக்களிடமிருந்து வராமல் உலகவங்கியிலிருந்து புறவாசல் வழியாக பிரதமராகி உட்கார்ந்துகொண்டு இப்படியான வசனங்களை பேசிக்கொண்டு இருக்கிறார் மன்மோகன்சிங். சந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என அல்லும் பகலும் யோசிப்பவருக்கு, அதற்காகவே உயிர் வாழ்பவருக்கு இந்த தேசம் சுதந்திரமாக இருக்க வேண்டும், இந்த தேசத்தின் அனைத்து மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்?
இந்த ஏகாதிபத்திய எடுபிடி நடத்தும் ஆட்சியின் அலங்கோலங்களை எதிர்த்து இதோ இன்று நவமபர் 8ம் தேதி மத்தியில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் வீதிக்கு வந்து சிறை புகும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றன. வாழ்த்துவோம். சேர்ந்து நிற்போம். மன்மோகன்சிங்கின் ஆட்சி மீதான பொது விசாரணையின் ஆரம்பம் இது. நடுவீதியில் நிற்க வைத்து மன்மோகன் வகையறாக்களுக்கு ஒருநாள் தீர்ப்பெழுதுவார்கள் மக்கள். அதுவரை லோக்பால் மசோதாவில் பிரதமரை விசாரிக்கலாமா, வேண்டாமா என அவர்கள் பேசிக்கொண்டு இருக்கட்டும்.
ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் நன்றி : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டம் ஒன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமயமாதல் என்ற பெயரில் உருவான அக-புற நெருக்கடிகள் எளியமனிதர்களை மூச்சுத்திணறச் செய்து ஒடுக்கிவருகிறது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தங்கள் மீது திணிக்கப்பட்ட எதேச்சதிகாரத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து தெருவில் இறங்கிப் போராடி வெற்றி பெற்று வருகிறார்கள்.
துனீசியா நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாக அதிகாரத்திலிருந்து எதேச்சதிகார ஆட்சி நடத்திய அதிபர் சைன் எட் அபிடைன் பென் அலி அரசு அந்நாட்டு மக்களின் எழுச்சியால் தூக்கி எறியப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன் றான, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத்தில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். அடக்கு முறைகளைப் பற்றிய பயமின்றி கடல் போன்று மக்கள் திரண்டு ஆட்சி அதிகாரத்தைத் தூக்கி எறிந்து புதிய அரசை உருவாக்கியிருக்கிறார்கள்.
எண்ணெய் வளத்திற்காக பல ஆண்டுகாலமாக அமெரிக்கா தன் பிடியில் வைத்திருந்த வெனிசுலாவிலும் இது போன்ற மக்கள் எழுச்சியே அதிபர் சாவேஸ் அரசை உருவாக்கியது. இந்த எல்லா மக்கள் எழுச்சிகளுக்கும் ஒரே அடித்தளம்தான் உள்ளது. அது தான் ருஷ்யப் புரட்சி என்று அழைக்கப்படும் நவம்பர் புரட்சி.
மனிதகுல வரலாற்றில் பெரும் பான்மை நாடுகள் போரின் வழியாக கைப்பற்றப்பட்டு அடிமையாக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான மனிதர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். அந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள் இரண்டாம் பட்ச பிரஜைகளாக நடத்தப்படுவார்கள். அந்த நிலையை மாற்றி ஒரு தேசத்தின் அரசியல் மாற்றத்தை மக்களே முன்நின்று நடத்தியது ருஷ்ய புரட்சியில் தான் நடந்தேறியது.
ஜாரின் அதிகார ஒடுக்குமுறைகளைத் தாங்கமுடியாமல் மக்கள் ஒன்று திரண்டு நிலப்பிரபுத்துவ அதிகாரத்தைத் தூக்கி எறிந்து பொதுவுடைமை ஆட்சியை உருவாக்கிக் காட்டியதே ருஷ்யபுரட்சியின் அளப்பரிய சாதனை.
அது தற்செயலாக உருவான ஒன் றில்லை, உருவாக்கப்பட்டது. அதன் பின்னே மார்க்ஸின் சிந்தனைகளும் லெனினின் வழிகாட்டுதலும் களப்பணியாளர்களின் ஒன்று திரண்ட போராட்டமும் கலைஇலக்கியவாதிகளின் இடைவிடாத ஆதரவும் ஒன்று சேர்ந்திருக்கிறது.
ருஷ்யப் புரட்சி குறித்து நிறைய வரலாற்று ஆவணங்கள், வீரமிக்க சம்பவங்கள் இருக்கின்றன. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான மைக்கேல் ஷோலகோவின் "டான் நதி அமைதி யாக ஓடிக் கொண்டிருக்கிறது" என்ற நாவல் புரட்சி காலகட்ட ரஷ்யாவை மிகவும் துல்லியமாகச் சித்தரிக்கிறது. நவம்பர் புரட்சியைப் பற்றிய ஐசன் ஸ்டீனின் அக்டோபர் அல்லது உலகை குலுக்கிய பத்து நாட்கள் என்ற திரைப் படம் ஒரு அரிய ஆவணக்களஞ்சியம். அந்தப் படத்தை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது உடல் சிலிர்த்துப் போய்விடுகிறது.
ருஷ்யப் புரட்சியை நினைவு கொள்ளும்போது அதை ஒரு மகத்தான வரலாற்றுச் சம்பவம் என்று மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதிலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக் கொண்டோம், வரலாறு நமக்கு எதை நினைவு படுத்துகிறது, எதை நாம் முன்னிறுத்திப் போராடவும் முன்செல்லவும் வேண்டியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது.
கம்யூனிசம் வீழ்ந்துவிட்டது, இனி பொதுவுடைமை சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தும் அரசு ஒருபோதும் உருவாகாது என்ற பொய்ப்பிரச்சாரத்தை உலகின் முக்கிய ஊடகங்கள் அத்தனையும் கடந்த பல வருசங்களாகத் தொடர்ச்சியாக செய்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அது நிஜமில்லை என்பதையே கிரீஸ், பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கல், பின்லாந்து என்று ஐரோப்பாக் கண்டத் தின் சகல போராட்டங்களும் நிரூபணம் செய்தபடியே இருக்கின்றன.
ஊடகச் செய்திகளால் அவற்றை மறைக்க முடியவில்லை. ஐரோப்பாவில், அரபு நாடுகளில் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் மக்கள் எழுச்சி எதை அடையாளம் காட்டுகிறது. புரட்சி ஒரு போதும் தோற்றுப்போவதில்லை என்பதைத்தானே காட்டிக் கொண்டிருக்கிறது. வீதியில் இறங்கிப் போராடும் மக்கள், தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதற்குச் சான்றாக ருஷ்ய புரட்சியையே நினைவு கொள்கிறார்கள். அதுதான் நவம்பர் புரட்சியின் உண்மையான வெற்றி.
ருஷ்யப் புரட்சி வரலாற்றில் பல முன்மாதிரிகளை உருவாக்கியது. அந்த மாற்றம் மானுடவிடுதலையின் ஆதார அம்சங்கள் தொடர்பானது. நாகரீகம் அடையத் துவங்கிய நாளில் இருந்தே மனிதர்கள் சம உரிமையுடன் வாழும் கனவுகளுடன் தான் வாழ்ந்து கொண் டிருந்தார்கள். ஆனால் அதை எந்தச் சமூக அமைப்பும் அவர்களுக்குத் தர முன்வரவில்லை. மன்னராட்சியும் அதைத் தொடர்ந்த பிரபுக்களின் ஆட்சியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்திற்கே முதல் உரிமை தந்தது.
வறுமையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் மதவாத இனவாத ஒடுக்குமுறைகளும் எளிய மனிதர்களை வாட்டி வதைத்தன. அந்த இன்னல்களில் இருந்து அவர்களை மீட்டெடுத்து, மக்களுக்கான அரசை உருவாக்கியதோடு பொதுவுடைமை என்ற சித்தாந் தத்தை வாழ்வியல் நெறியாக உருமாற்றியது. ரஷ்ய புரட்சியின் காரணமாக ருஷ்யாவில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட் டன. தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது. ஜாரின் பிடியில் இருந்த அண்டை நாடுகள் அனைத்திற்கும் விடுதலை வழங்கப்பட்டது. ரஷ்யா சுதந்திர நாடாக, முழுமையான சோசலிச நாடாக அறிவிக்கப்பட்டது.
இந்த முன்முயற்சிகள் உலகின் பலதேசங்களுக்கும் வழிகாட்டுவதாக இருந்தன. நவம்பர் புரட்சியைப் போல ஒன்று தங்களது நாட்டிலும் உருவாகி விடாதா என்ற ஏக்கம் உலகெங்கும் தோன்றவே செய்தது. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானமேதைகள் இதை வெளிப்படையாகவே ஆதரித்து, அறிவியல் பூர்வமான சமூகமாற்றம் என்று கொண்டாடினார்கள்.
நவம்பர் புரட்சியால் உருவான முக்கிய பாடம் உலகின் சகல அதிகார அடக்குமுறைகளையும் மக்கள் நினைத்தால் தூக்கி எறிந்து மாற்றிவிட முடியும் என்பதே. அதனால்தான் ருஷ் யப்புரட்சி மகாகவி பாரதிக்கு உத்வேகமான யுகப்புரட்சியாகியிருக்கிறது. மாய கோவ்ஸ்கியை நம் காலத்தின் மகத்தான கனவு நிறைவேற்றப்பட்டது என்று கொண்டாடச் செய்திருக்கிறது.
மனித சமூகத்தின் சகல கேடுகளுக்கும் உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற பன்னாட்டு முதலாளிகளின் பொருளாதார அராஜகமே. அது வளர்ந்து வரும் நாடு களைப் பரிசோதனை எலிகளைப் போலாக்கி, தனது சொந்த லாபங்களுக்குப் பலிகொடுத்து வருகிறது. அன்றாட வீட்டு உபயோகப்பொருளில் துவங்கி ஆயுதவிற்பனை வரை சகலமும் பொருளாதார அராஜகத்தின் கைகளில் தானிருக்கிறது. ஆனால், பொது வுடைமை சித்தாந்தத்தைத் தனது வழி காட்டுதலாக எடுத்துக் கொண்ட நாடுகள் இதிலிருந்து மாறுபட்டு, மக்களின் உண்மையான வளர்ச்சிக்கான செயல்பாடுகளையே மேற்கொள்கின்றன.
உதாரணத்திற்கு, வெனிசுலா, லத் தீன் அமெரிக்க நாடுகளின் தலைவாசல் போலுள்ள சிறிய நாடு. உலகின் பெட்ரோலிய ஏற்றுமதியில் 3வது இடத்தை வகிக்கிறது. அதாவது, இங்கிருந்து நாளொன்றுக்கு 26 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. அதை நேரடியாகக் கொண்டு செல்ல மிகநீண்ட குழாய்கள் பதிக்கப்பட்டிருக் கின்றன. அவற்றின் வழியே ஆதாயம் அடைபவை அத்தனையும் அமெரிக்க கம்பெனிகள். நாட்டின் அறுபது சதவீத மக்கள் வறுமையாலும் நெருக்கடியா லும் வாடினார்கள்.
கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்குப் புறக்கணிக்கப்பட்டு தனியார்மய மாக்கப்பட்டன. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு போராடினர். தேர்தல் வந்தது, உழைக்கும் மக்கள், தமது உணர்வுகளைப் பிரதிபலித்த சாவேஸை வெற்றி பெறச் செய்தனர்.
சாவேஸ், அதிபர் பதவிக்கு வந்ததும். எண்ணெய் வருவாயை விழுங்கிக் கொழுத்து வந்த முதலாளித்துவ நிறுவனங்கள் தமது வருவாயில் குறிப்பிட்ட ஒரு பங்கை மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்குக் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று சட்டமியற்றினார். உடனே அவரை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய முயற்சி மேற்கொள்ளப் பட்டு, சாவேஸ் சிறைப்பிடிக்கப்பட்டார். ஆனால் மக்கள் எழுச்சியால் அது முறியடிக்கப்பட்டது. இது சாவேஸ் என்ற தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, பன்னாட்டு வணிக மேலாதிக்கத்துக்கு எதிராகப் போராடிவரும் உழைக்கும் மக்களுக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.
வெனிசுலாவின் புதிய அரசு பல வழிகளில் உலகிற்கு வழிகாட்டுகிறது. அங்கு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வயது வரம்பு கிடையாது. குழந்தைகளுக்கு இருவேளை உணவுடன் கல்வி அளிக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. தனியார் உரிமையிலிருந்த பயிரிடப்படாத நிலங் களை ஏழை விவசாயிகளுக்கு சாவேஸ் அரசு பகிர்ந்தளித்து வருகிறது. இதற்கு முன்னோடியாக உள்ளது கம்யூனிச அரசான கியூபாவின் ஆட்சி முறை.
அமெரிக்காவில் 417 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 330 பேருக்கு ஒரு டாக்டர் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் கியூபாவில் 155 பேருக்கு ஒரு டாக்டர், அதாவது 50 வீடுகளுக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். அதனால் ஏழை எளிய மக்களுக்கு முறையான சிகிச்சைகள் கிடைப்பதோடு இறப்பு சதவீதமும் வெகு வாகக் குறைந்திருக்கிறது. அங்கே மருத்துவர்கள் நோயாளிகளின் வீடு தேடிவந்து சிகிச்சை செய்வதோடு மரபு மருத்துவத்தையும் நவீன மருத்துவத்தையும் ஒன்றாகவே மேற்கொள்கிறார்கள்.
இன்னும் கூடுதலாகச் சொல்வதாயின், கியூபாவில் மருத்துவக்கல்வி முற்றிலும் இலவசம். அமெரிக்காவில் ஒரு மாணவன் மருத்துவம் படிக்கத் தேவைப்படும் பணம் குறைந்த பட்சம் 70 லட்ச ரூபாய். அதே மருத்துவம் கியூபாவில் இலவசமாகக் கிடைக்கிறது. இது கியூபாவிற்கு மட்டும் எப்படிச் சாத்தியமானது. காரணம், அங்கே மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல, அது ஒரு சேவை. நோய்மையுற்ற மனிதனை நலமடையச் செய்யும் உயரிய சேவை. ஆகவே மருத்துவம் இலவசமாகக் கற்பிக்கப்படுகிறது. சிகிச்சை அளிக்கப்படுகிறது, இது தான் சோசலிசம் கண்ட கனவு.
உலகமயமாக வேண்டியது ஆயுதங்களும் அணுகுண்டுகளும் வெறுப்பும் வன்முறையுமில்லை, அனைவருக்குமான கல்வி, அடிப்படை சுகாதாரம், சமாதானம், பெண்களுக்கான சம உரிமை இவையே உடனடியாக உலக மயமாக்கப்பட வேண்டியவை என்கிறது கியூபா. இந்த கருத்தாக்கங்கள் யாவுமே ருஷ்யபுரட்சியில் இருந்துதான் வேரூன்றி வளர்ந்து வந்திருக்கிறது.
முன்னெப்போதையும் விட இன்று பொதுவுடைமைச் சித்தாந்தம் அதிகம் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உள்ளாகி வருவதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால் அந்த விமர்சனத்தில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்துத் தெளிவடைய வேண்டிய அவசியம் இருக்கிறது.
கியூபா தேசத்தின் நல்லெண்ணத் தூதுவராக பணியாற்றியவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் அவர் இடதுசாரிகளை நேசிப்பதுடன் மக்கள் அரசிற்கான உறுதுணை செய்பவராக இருக்கிறார். அவரது வட்டசுழல் பாதையில் ஜெனரல் என்ற நாவல் வெளியான இரண்டாம் நாள் தனது அத்தனை அரசுப்பணிகளுக்கும் ஊடாக அதிபர் பிடல் காஸ்ட்ரோ அந்த நாவலைப் படித்து முடித்து உடனே ஒரு விமர்சனக் கட்டுரையும் எழுதினார். கட்சிப்பணிகள், அரசுப்பணிகள் அத்தனைக்கும் இடையில் கலைஇலக்கிய ஈடுபாட்டினை தக்க வைத்திருப்பதே காஸ்ட்ரோவின் வெற்றிக்கான முக்கிய ரகசியம்.
இது போன்ற விருப்பம் லெனினுக்கும் இருந்தது. அவர் தனது போராட்டக் காலத்திலும் தலைமறைவு நாட்களிலும் உன்னதமான இசையையும் டால்ஸ்டாய், கோகல், கார்க்கி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் ஆழ்ந்து படித்து அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டதோடு அந்தப் படைப்பாளிகளைக் கொண்டாடவும் செய்தார்.
இலக்கியம் உருவாக்கிய நம்பிக்கைகள் தான் பல தேசங்களிலும் அதிகாரத்தை தூக்கி எறியச் செய்திருக்கிறது. அதையே வரலாறு நினைவுபடுத்துகிறது என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். ஆகவே தொடர்ந்து நல்ல இலக்கியங்களை வாசிப்பதும் விடாப்பிடியாக கலை இலக்கிய ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வதுமே சரியான பொதுவுடைமைவாதிக்கான அடையாளங்களாக இருக்க முடியும்.
நவீன தமிழ் இலக்கியத்தை உரு வாக்கியதிலும் ருஷ்ய இலக்கியத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஸ்டெப்பி யும் பீட்டர்ஸ்பெர்க்கும் சைபீரிய தண்டனைக் கூடங்களும் மௌனப்பனியும் தமிழ் எழுத்தாளர்கள் மனதில் அழியாத சித்திரங்களாக உள்ளன.
அன்றும் இன்றும் ருஷ்ய இலக்கியங்கள் உலகெங்கும் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம், அது துயருற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வை, உண்மையாகவும் நேர்மையாகவும் பதிவு செய்ததாகும். ருஷ்ய இலக்கியத்தின் பிரதான உணர்ச்சியே வேதனை தான் என்று சிமியோவ் என்ற விமர்சகர் குறிப்பிடுகிறார். உண்மை தான் அது. பசி, வறுமை, சிதறுண்ட குடும்ப உறவுகள், அதிகார நெருக்கடி, கொடுங்கோன்மை என்று சொல்லில் அடங்காத வேதனைகளை மக்கள் அனுபவித்த துயரத்தையே ரஷ்ய படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் முதன்மைப்படுத்தினார்கள்.
ருஷ்ய படைப்பிலக்கியங்களை மறு வாசிப்பு செய்தலும், உரிய கவனப் படுத்துதலும், ருஷ்ய சினிமாவின் தனிப்பெரும் ஆளுமைகளான ஜசன்ஸ்டீன், வெர்தோ, டவ்சென்கோ, போன் றவர்களின் திரையாக்கங்களை ஊரெங்கும் திரையிட்டு வரலாற்றை நினைவுபடுத்துவதும் இன்று இடது சாரிகள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய கலைஇலக்கியச் செயல்பாடாகும்.
மார்க்சின் காலத்தில் இருந்த தொழிலாளர்களுக்கும் இன்றுள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்று பல் வேறு இனம், மதம், சாதி, சார்ந்த வேறுபாடுகளுடன் சிக்கலான வேலைப் பிரிவினையைக் கொண்டவர்களாக நவீன உழைக்கும் வர்க்கம் உள்ளது. அதிலும் மிக அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் தொழிலாளர்களாக பணியாற்றிவரும் காலகட்ட மிது. ஆகவே அவர்களை ஒன்றுதிரட்டி அவர்களின் வழியே மக்கள் எழுச்சியை உருவாக்குவது அதிக சவாலும் போராட்டங்களும் நிரம்பியது.
பின்நவீனத்துவ சிந்தனையாளர் பியே போர்த்தியோ (pierre Bourdieu) இன்றுள்ள உலக அரசியல் நெருக்கடிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "நியாயமற்ற விதிகளை உருவாக்கி அதை நாமாக கைக்கொள்ள வைப்பதுடன், அதற்கு மறுப்பேயில்லாமல் ஒத்துப்போகச் செய்வதுமே உலகமய மாக்கல் செய்யும் தந்திரம்'' என்கிறார்.
எந்த நோக்கமும் இல்லாமல் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் உயர்ந்த நோக்கம் ஒன்றின் பொருட்டு நம் உயிரை விடுவது மேலானது என்ற அடையாள அட்டையை ஏந்திய படியே எகிப்தில் மக்கள் திரள் திரளாக கூடி நின்று முழக்கமிட்டது எகிப்திய அரசை நோக்கி மட்டுமில்லை; உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக் கள் அனைவரையும் நோக்கித்தான். ஆகவே அந்தக் குரலுக்கு செவிசாய்க் கவும் அதன் உத்வேகத்தில் செயல்படவும் தயாராவதே ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் உண்மையான நன்றியாகும்.
-எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்
ஜெயலலிதாவின் முடிவுக்கு எதிராக இணையத்திலிருந்து திரளும் குரல்கள்!
சென்னையிலிருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வன்மமான முடிவினை எதிர்த்து கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்களின் எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. நம் பதிவர்களும் தங்கள் கண்டனக்குரலை வலைப்பக்கங்களில் பதிவு செய்தவண்ணம் இருக்கின்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்திலிருந்தும், இந்திய மாணவர் சங்கத்திலிருந்தும் ஜெயலலிதாவின் முடிவைனை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளன.
பதிப்பாளர்கள் பலருக்கும் இத்தகைய அராஜக முடிவில் கடும் அதிருப்தி இருந்தபோதிலும் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிக்கத் தயங்குவதாகவும், அதனால் அரசின் ஆர்டர்கள் கிடைக்காமல் போய்விடும் என அஞ்சுவதாகவும் ஒரு பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. ஆனால், பாரதி புத்தகாலயம் சார்பில் வெளிவரும் புத்தகம் பேசுது இதழ் தனது சமூகக் கடமையைப் பொறுப்பாகச் செய்துள்ளது. அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் முடிவைக் கைவிடக் கோரி இன்று ஒரு ஆன்லைன் பெட்டிஷனுக்கு இணையத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதுவரை 800க்கும் மேற்பட்ட நண்பர்கள் அதில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். தாங்களும் இந்த காரியத்திற்கு ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்!
ஆன்லைன் பெட்டிஷனில் கையெழுத்திட:
பெட்டிஷனில் தாங்கள் ஏன் கையெழுத்திடுகிறோம் என்று பலரும் தங்கள் எதிர்ப்புக்குரல்களை அங்கே அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அவைகளை இங்கே பதிவு செய்கிறோம்.
-
This is irresponsible leadership - a betrayal of people's trust. Not good for anyone except that it satisfies her ego. Is this revenge politics? "Revenge is gerat thing, for a mosquto" - Swami Vevekananda
-
-
ungalin thani manitha palivaangalukku, thamilargalin panaththil uruvaana thamilakaththin arivuk karuvoolaththai illamal seivathu sariyalla. uruvaagupaval thaan pen. urukkulaippaval alla.
-
-
The Hon'ble CM may establish a world class children hospital in Tambaram next to sanatorium where abundant govt land is available and it is a more convenient location for people from different places can access.construct.Not destruct.
-
-
சிறப்பான நூலகத்தை சிதைப்பது அறிவுக்கொலையாகும்.அவர்கள் திட்டமிட்ட இடத்தில் இன்னொரு நூலகம் கட்டட்டும்.அது ஆரோக்கியமான போட்டி.இருப்பதை கெடுப்பது பாசிசபுத்தி.மருத்துவமனை இன்னொரு இடத்தில் கட்டலாம்.ஜெ வின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் சனாதன வர்ணாஸ்ரம பாசிச வன்மம் தெரிகிறது.
-
-
Madness by the lady ... always a step ahead of her arch rival...
-
-
குழந்தைகளுக்கான மருத்துவமனைதான் நோக்கு எனில் அதற்கு வேறு இடம் பார்க்கலாம். அரசியல் கால்புணர்ச்சிக்காக எங்கள் நூலகத்தை இழக்க முடியாது..
-
-
திமுக ஆட்சியில் செய்த அனைத்துமே மாற்றவேண்டும் என்று தாந்தோன்றித்தனமாக நினைப்பதை எதிர்க்கிறேன்.
-
-
நல்ல மருத்துவர் என்றும் மூளைக்கு பதிலாக இதயத்தையும், இதயத்திற்கு பதிலாக மூளையையும் மாற்ற மாட்டார்.
-
-
There are lot of places to build a hospital. That is the right place for a library. It is very close to Anna University, IIT, and other study centres... The place where central jail was there could be converted to a hospital. It will be a centre place people coming from other parts of the state can also have an easy approach. Since it is close to Central and Egmore station...
-
-
Dear CM - We understand your motive. Please remember we have voted you to power and we can bring you down if you don't stop such moves, that is nothing but political vengeance.
-
-
Madness by the lady ... always a step ahead of her arch rival...
-
-
சிறப்பான நூலகத்தை சிதைப்பது அறிவுக்கொலையாகும்.அவர்கள் திட்டமிட்ட இடத்தில் இன்னொரு நூலகம் கட்டட்டும்.அது ஆரோக்கியமான போட்டி.இருப்பதை கெடுப்பது பாசிசபுத்தி.மருத்துவமனை இன்னொரு இடத்தில் கட்டலாம்.ஜெ வின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் சனாதன வர்ணாஸ்ரம பாசிச வன்மம் தெரிகிறது.
-
-
To withdraw the decision of shifting Anna Centenary Library.
-
-
The library must remain as library. This is an act of vengeance. It will do no good for anyone. This decision is stupid. Jayalalitha gives a slight edge to Karunanidhi herself.
-
-
It is not easy to convert a building that was built for a library into multi-super-specialty hospital as a hospital requires several features including enough rooms to accommodate in-patients. Instead of playing vendetta politics and wasting public money, this government should instead build a new multi-super-specialty hospital for children in some other area of the city. I hope the government heeds to public opinion.
-
-
I would like the Library to stay put. it is a world class facility.
-
-
Why dismantle a library to build a hospital. This is a waste of public money.
-
-
we expecting state developments. not your personal revenge. please. full fill the state, we are hope to get bright future based plans.. your are sitted here for represent' of tamil people. so. do ur duty. no more personal actions. madam.
-
-
DEAR MRS. JJ, DONT SHOW YOUR ADAMANT IN THIS ISSUE, YOUR MOTIVATION IS WHATEVET DMK DID YOU ARE GOING TO CHANGE ONE BY ONE, PL. STOP SUCH LIKE THAT RUBBISH ACTIVITIES HEREAFTER. WE ARE GIVEN 5 YEARS FOR DOING BETTER FOR PROPLES NOT FOR DOING LIKE THIS ACTIVITIES,IF YOU WANT TO BUILD CHILD HOSPITAL ALREADY ONE CHILD SPECIALIST HOSPITAL IS THER IN EGMORE,PLEASE UPGRADE THIS 7 BRINNG MORE FACILITIES.....
-
-
I want the library to be a library.
-
-
Its the largest library in asia,and its something we need to proud of for having it in our state.And moreover converting it will further burden the state s economy.pls leave it as it is and focus on improving the facilities rather than converting it.
-
-
புத்தகங்களை நேசிப்பவன் வாசிப்பவன் என்ற முறையில் ஒரு வாசகனாக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் நூலகம் அங்கேயே இருக்கட்டும் மாண்புமிகு முதல்வர் அவர்களே.
-
-
DEAR MRS. JJ, DONT SHOW YOUR ADAMANT IN THIS ISSUE, YOUR MOTIVATION IS WHATEVET DMK DID YOU ARE GOING TO CHANGE ONE BY ONE, PL. STOP SUCH LIKE THAT RUBBISH ACTIVITIES HEREAFTER. WE ARE GIVEN 5 YEARS FOR DOING BETTER FOR PROPLES NOT FOR DOING LIKE THIS ACTIVITIES,IF YOU WANT TO BUILD CHILD HOSPITAL ALREADY ONE CHILD SPECIALIST HOSPITAL IS THER IN EGMORE,PLEASE UPGRADE THIS 7 BRINNG MORE FACILITIES.....
-
-
வெட்கப்படுறேன். கடந்த தேர்தலில் இவர்களுக்கு வாக்களித்தேன் என்று நினைத்து...
-
-
The library is essential for the future tamil generation for their upliftment in the society.
-
-
Its the largest library in asia,and its something we need to proud of for having it in our state.And moreover converting it will further burden the state s economy.pls leave it as it is and focus on improving the facilities rather than converting it.
-
-
This library was built by people's money, not by karunanithi's money.Please understand this.
-
-
Just search new place for hospital. Don't change the atmosphere of existing library, again we can't build it like this.
-
-
I believe a building which was built specifically to solve a particular solution(library) solves that solution the best not some other(hospital).
-
-
I feel the Library should not be converted into Hospital.
-
-
Waste of public money. To dismantle the library is more waste of people's money & time. It was build to accommodate a library, how can it be changed to a hospital? Stupidity.
-
-
நூலக பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கட்டிடம் அந்த பயன்பாட்டிற்கே தொடர வேண்டும்.
-
-
The new government should not disturb the old government's flagship projects unless it affects the public directly. The new government should plan and create her own historical projects, which lives forever in the history. They should not destroy old governments historical projects due personal vendetta. It is like erasing the history. In our old kingdoms during war they destroyed monuments of the king who lose the war. The same practice continues still. That's how we lost all our originality, knowledge everything. Only Ego lives with us. We lost everything because of this mentality. God only save us from our politicians.
-
-
Construct!!! dun destruct!!!
-
-
its totally unacceptable its happened because of DMK, i request our CM pls reconsider your process...or else pls explain for this conversion.
-
-
Library is wealth of knowledge of all people including ADAMK members. please remove revence from your mind against karunanidhi's valuable decision.
-
-
I strongly condemn this act of putting public benefit beneath political vengeance. It is a continuous process of undermining education in the state which started with the attempted withdrawal of Samacheer Kalvi. I demand that these vulgar acts of using public offices for resolving personal enmities be stopped immediately.
-
-
Such a wonderful infrastructure should not be demolished since it was built by previous regime. Instead, the new govt shall think of innovative ideas that be reminded by people of TN and history.
-
-
Opposing to Shift the Library.
-
-
This library was built by people's money, not by karunanithi's money.Please understand this.
-
-
To Ms.Jayalalitha, ARE YOU MAD?
-
-
Dear CM,
Are you going to respect our concerns or step down? Such moves will work against you and your party. -
-
It is not easy to convert a building that was built for a library into multi-super-specialty hospital as a hospital requires several features including enough rooms to accommodate in-patients. Instead of playing vendetta politics and wasting public money, this government should instead build a new multi-super-specialty hospital for children in some other area of the city. I hope the government heeds to public opinion.
-
-
It has very good atmosphere for reading books. Near Anna University, a good high school, Observatory etc. Locting a padeatric complex would require more modifications.
-
-
My daughter enjoys the children's section, and this is one place where one can take young and old without cost for spending several hours joyfully and usefully. Why destroy a good thing? This is a very sorry statement on today's political culture.
-
-
Amma, We are waiting for something different [Modal State of India], not like this, Thank you – Muthu.
-
-
I agree to what other people have have expressed earlier while signing this petition.
-
-
The reason to shift seem to be good - but the intention seem to erase the name of the former CM from the place. Please, leave some genuine things as it is.. do not paint everything with politics.
-
-
This library has a specific infrastructure. practically huge public money is involved for constructing this library which you are quite aware. Just because of political vendetta that is the former DMK Government through its former Union Minister Balu did not gave environment nod for constructing the secretariat in the same area. Keeping that in mind you are planning to shift the same library which is unethical. Rather you could focus your attention on improving the conditions of all the govt.hospitals in TN especially the Children's Hospital in Egmore which has now become a corrupted hospital.
-
-
library is very very essential...not like new secretariat..pls change your decision..
-
-
am signing here because my dad and my whole family is paying tax. i cannot allow someone to waste it into crap projects like this.Completely biased ruthless move by a so called CM. If i allow this to happen , then you will even lay subway from your home to secretariat, instead of using over bridges built in DMK period.
-
-
நல்லது ஏதாவது நடக்கும் என நினைத்த தமிழர்களை பழி வாங்குகிறார் ஜெயலலிதா.
-
-
நான் வன்மையாக் கண்டிக்கிறேன்.
-
-
Please do not scrap such a landmark Library with another project which could be opened elsewhere in the city.
-
-
A good administrator should multiply good infrstructure. At a time when governments pay little attention to facilities like libraries we have got one and why should we loose that. Instead Jayalalitha should focus on building a new super speciality hospital for children and get name into history. This is not the way. pleaseeeeeeeeeee.
-
-
நான் வன்மையாக் கண்டிக்கிறேன்.
-
-
It is highly whimsical to change a library into a hospital just because of political rivalry! The building was designed to be a library and not a hospital. if it were turned into a hospital, it would have numerous service problems!
-
-
To save the tax money of people which is already spent in building up this library and to condemn the cracky decision taken by the ruling government.
-
-
Dont involve this issue for political this library for dedicate for Tamil like peoples.
Dear CM Miss Jaya Dont change this library. -
-
Library is wealth of knowledge of all people including ADAMK members. please remove revence from your mind against karunanidhi's valuable decision.
-
-
I want the library to be a library.
-
-
we expecting state developments. not your personal revenge. please. full fill the state, we are hope to get bright future based plans.. your are sitted here for represent' of tamil people. so. do ur duty. no more personal actions. madam.
-
-
சென்ற தேர்தல் முடிவுகள் மாற்றத்தை தேடி, வேறு வழி இல்லாமல் மக்கள் கொடுத்த முடிவு தானே தவிர ஆ தி மு க வும் அண்ணா ஹசாரே வும் ஒன்று என்று மக்கள் கூறியதாக நினைக்க வேண்டாம் .
தலைமைக்கு தேவையான பண்புகள் தவறி, சர்வதிகாரம் தலைவிரித்து ஆடினால் மக்கள் தீர்ப்பு இந்த முறையைவிட மிகவும் மோசமாக இருக்கும். மாண்புமிகு முதல்வர் அவர்களே , சற்றே சிந்தியுங்கள் !!! -
-
முதலில் சமசீர் கல்வி, இப்போ நூலகம். ஏன் நீங்க மட்டும் தான் நல்ல படிக்கனுமா?
-
-
Dear CM,
plan for new welfare schemes to people. don't destroy the good library in Asia. -
-
நல்லது ஏதாவது நடக்கும் என நினைத்த தமிழர்களை பழி வாங்குகிறார் ஜெயலலிதா.
-
-
நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.
-
-
please dont shift the library.
-
-
Please dont change the Library... Welcome to build multi specialty child hospital for some other place.....
-
-
am signing here because my dad and my whole family is paying tax. i cannot allow someone to waste it into crap projects like this.Completely biased ruthless move by a so called CM. If i allow this to happen , then you will even lay subway from your home to secretariat, instead of using over bridges built in DMK period.
-
-
Respected CM, I would request you to kindly add the features which is missing in this library instead of relocating. Ofcourse we have lot of space in and around chennai for the hospital. We people more regard you if this is fullfilled.
-
-
Dear CM,
plan for new welfare schemes to people. don't destroy the good library in Asia. -
-
library is very very essential...not like new secretariat..pls change your decision.
-
-
அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றம்.
-தமிழக அரசு அதிரடி.'கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை....?'
-
-
Honorable CM,I have voted for you to give good governance and not to settle any personal scores against your political rivals.Hope you'll change your decision based on wrong advice.
-
-
This library has a specific infrastructure. practically huge public money is involved for constructing this library which you are quite aware. Just because of political vendetta that is the former DMK Government through its former Union Minister Balu did not gave environment nod for constructing the secretariat in the same area. Keeping that in mind you are planning to shift the same library which is unethical. Rather you could focus your attention on improving the conditions of all the govt.hospitals in TN especially the Children's Hospital in Egmore which has now become a corrupted hospital.
-
-
because you don't move a library for political reasons...especially one that is so good. find another place for the hospital.
-
-
The reason to shift seem to be good - but the intention seem to erase the name of the former CM from the place. Please, leave some genuine things as it is.. do not paint everything with politics.
-
-
I agree to what other people have have expressed earlier while signing this petition.
-
-
i love books..!
-
-
IT IS ALREADY IN A VERY GOOD INFRASTRUCTURE,PLEASE DON"t DISTRUB THAT.
-
-
I oppose TN government announcement on ACL which is purely on political vendetta.
-
-
please dont shift the library.
-
-
The library must remain as library.
-
-
To save the tax money of people which is already spent in building up this library and to condemn the cracky decision taken by the ruling government.
-
-
தமிழக முதல்வர் உடனே தன் முடிவை மாற்றி அண்ணா நூலகத்தை தொடந்து செய்லபட அனுமதிக்கவேண்டுகிறேன்.
-
-
i want that library ...
-
-
Why dismantle a library to build a hospital. This is a waste of public money.
-
-
The library must remain as library. This is an act of vengeance. It will do no good for anyone. This decision is stupid. Jayalalitha gives a slight edge to Karunanidhi herself.
-
-
To withdraw the decision of shifting Anna Centenary Library.
-
-
சென்ற தேர்தல் முடிவுகள் மாற்றத்தை தேடி, வேறு வழி இல்லாமல் மக்கள் கொடுத்த முடிவு தானே தவிர ஆ தி மு க வும் அண்ணா ஹசாரே வும் ஒன்று என்று மக்கள் கூறியதாக நினைக்க வேண்டாம் .
தலைமைக்கு தேவையான பண்புகள் தவறி, சர்வதிகாரம் தலைவிரித்து ஆடினால் மக்கள் தீர்ப்பு இந்த முறையைவிட மிகவும் மோசமாக இருக்கும். மாண்புமிகு முதல்வர் அவர்களே , சற்றே சிந்தியுங்கள் !!! -
-
My daughter enjoys the children's section, and this is one place where one can take young and old without cost for spending several hours joyfully and usefully. Why destroy a good thing? This is a very sorry statement on today's political culture.
-
-
ஒவ்வொரு அங்கமும் சீர்பட செதுக்கப்பட்டிருக்கும் ’அண்ணா நூற்றாண்டு நூலகத்தை’ ஆசை ஆசையாய் கண்கள் கொள்ளாமல் பார்த்து, மகிழ்ந்து, உணர்ந்து வந்தவர்களுக்குத் தெரியும், அங்கே அடுக்கிவைக்கப்பட்டிருந்த அறிவுச்செல்வத்தின் அருமை. உள்ளிருந்த ஒவ்வொரு நிமிடமும் இது நான் வாழும் இடத்தில், வாழும் காலத்தில் அமைந்திருக்கிறது, அறிவுசார் எதிர்காலம் அமைந்திட ஆட்சியாளர்களுக்கும் கூட அதிசயமாய் எண்ணம் தோன்றிவிடத்தான் செய்கிறது என்று எண்ணி பெருமிதம் கொண்டிருந்தேன். எந்த ஆட்சியில் அது கட்டப்பட்டிருந்தாலும் என் உணர்வு இதுவாகத்தான் இருந்திருக்கும்.
நான் இப்போது நூலகம் செல்லாதவனாக இருக்கலாம். என் அலமாரியில் தூங்கும் புத்தகங்களை நான் இப்போது வாசிக்காமலிருக்கலாம். ஆனால் எவருக்கும் தீங்கிழைக்காத என் எண்ணம் வாசிப்பால் வந்தது. என் ரசனையும், சிந்தனையும் புத்தகங்கள் தந்தவை. என் பிள்ளைக்கு நான் செல்வத்தை தருவதையும் விட, நல்ல சிந்தனையையும், ஒழுக்கத்தையும், அன்பையும், தீது எண்ணா நல்மனத்தையும், நல்ல சுற்றுச்சூழலையும், வரலாற்று-அறிவியல்-அரசியல் அறிவையும், தந்துசெல்லவேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால் இவை அத்தனையையும் என் ஒருவனால் தரமுடியாது என்றும், வாசிப்பு என்ற ஒற்றைப் பழக்கத்தால் இவற்றை அடையச்செய்யமுடியும் என்றும் நம்புகிறேன். ஏனெனில் பிற ஊடகங்கள் நோயுற்றிருக்கும் ஒரு சமூகத்தின் கடைசி நம்பிக்கை புத்தகங்கள் மட்டுமே. அத்தகைய அரும் செல்வத்தை கொண்டுள்ள நூலகங்கள் மென்மேலும் பெருகவேண்டுமேயல்லாது, இருப்பவையும் அழியக்கூடாது என்பதே என் விருப்பம்.
-
-
மாற்றங்கள் ஏமாற்றம் தர கூடாது . உங்கள் மாற்றம் தவிர்பீர்.
-
-
வெட்கப்படுறேன். கடந்த தேர்தலில் இவர்களுக்கு வாக்களித்தேன் என்று நினைத்து...
-
-
Waste of public money. To dismantle the library is more waste of people's money & time. It was build to accommodate a library, how can it be changed to a hospital? Stupidity.
-
-
கோட்டூர் புரத்தில் கட்டப்பட்டுள்ள அண்ணா நூலகத்தை நூலக்மாகவே தொடர அனுமதிக்க வேண்டும்.
-