என்றும் புதிது!

kahlil-gibran-artwork (1)

 

அடிக்கடி நான் வாசிக்கும் புத்தகங்களில் ஒன்று “the greatest works of kahlil Gibran".  கலீல் கிப்ரான் எப்போதும் மிக நெருக்கமானவராக இருக்கிறார்.  கவிதைகளாய், சொற்சித்திரங்களாய் அவர் தரும் காட்சிகள்  நமக்குள் காலவெளிகளைத் தாண்டி விரிகின்றன. அங்கே  வாழ்வின் தத்துவங்ளும்,  உண்மைகளும் கனிந்து கிடக்கின்றன.  அவை எப்போதும் அன்றலர்ந்ததாக இருக்கின்றன. நமக்குள் நிறைந்திருக்கும் புதிர்களை அவிழ்க்கின்றன.  இதையெல்லாம் கலீல்கிப்ரான்  யாருக்குச் சொல்கிறார், எதற்குச் சொல்கிறார் என்ற கேள்விகள் நமக்குள் எழுந்தால், இலக்கியத்தின் மேன்மை தெரிய வரும். 

 

ஒருவரியில் ஆயிரம், பல்லாயிரம் ஆண்டுகளைத் தாண்டிச் சொல்லும் இந்த இரு  சொற்சித்திரங்களை நான் பலமுறை வாசித்திருந்தாலும்,  ஒவ்வொரு தடவையும் அவை புதிய செய்திகளைச் சொல்கின்றன. இதற்கு விளக்கம் அளிப்பது கலீல் கிப்ரானையும், இலக்கியத்தையும் அவமரியாதைச் செய்வதாகும்.

 

(1)

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அண்டை வீட்டுக்காரன் என்னிடம், “துயரம் மிகுந்ததாகவும், வெறுமை நிறைந்ததாகவும் இருப்பதால், நான் வாழ்க்கையை வெறுக்கிறேன்” என்றான்.

 

நேற்று, இடுகாடு வழியாகச் செல்லும்போது அவனது கல்லறை மீது வாழ்க்கை நடனமாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன்.

 

 

(2)


ரொம்ப காலத்துக்கு முன்னால், எல்லோரையும் நேசித்ததாலும், எல்லோராலும் நேசிக்கப்பட்டதாலும் அந்த மனிதனை சிலுவையில் அறைந்தார்கள்.

 

நேற்று அவனை மிக விநோதமாக மூன்று தருணங்களில் பார்த்தேன்.

 

முதல் தடவை, ஒரு போலீஸ்காரனிடம், ஒரு விபச்சாரியை சிறைக்குக் கொண்டு செல்ல வேண்டாமென்று வேண்டிக்கொண்டு இருந்தான். இரண்டாவது சமயம், எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டவனோடு உட்கார்ந்து மதுவருந்திக்கொண்டு இருந்தான். மூன்றாவதாக ஒரு தேவாலயத்தில் உணவுக்காக  அதை வழங்குபவரிடம்  சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அன்பு மாதவராஜ்,

    சொற்சித்திரங்கள் என்று நீங்கள் வரிசைப்படுத்திய இரண்டும் அற்புதமானவை...

    இரண்டாம் சொற்சித்திரம் அபாரம்...

    வாழ்க்கை புதிராய் இருப்பதில்லை எப்போதும், நாம் தான் அதன் சரியான முனையை தவறவிட்டு விடுகிறோம்.


    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  2. மாதவராஜ், உங்களைப்போலவே உங்கள் ரசனையும் எனக்கு பிடித்திருக்கு!

    பதிலளிநீக்கு
  3. இப்புத்தகம் தமிழில் கிடைக்கிறதா? எந்த பதிப்பகம்?

    பதிலளிநீக்கு
  4. மாதவராஜ் வம்சி சிறுகதைப் போட்டி முடிவு என்னாயிற்று! எப்பொழுதுதான் அறிவிப்பீர்கள்

    பதிலளிநீக்கு
  5. முதல் தடவை, ஒரு போலீஸ்காரனிடம், ஒரு விபச்சாரியை சிறைக்குக் கொண்டு செல்ல வேண்டாமென்று வேண்டிக்கொண்டு இருந்தான். இரண்டாவது சமயம், எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டவனோடு உட்கார்ந்து மதுவருந்திக்கொண்டு இருந்தான். மூன்றாவதாக ஒரு தேவாலயத்தில் உணவுக்காக அதை வழங்குபவரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்./
    இதயம் உள்ளவர்கள் அறையப்படுவதற்காகவே சிலுவைகள் செய்யப்படுகின்றனவோ! என்ன செய்ய, தச்சனை அறைந்த சிலுவையை செய்தவனும் ஒரு தச்சன்தானே!’அறியாமல் தவறு செய்யும் இவர்களை மன்னியும் பிதாவே!’ என்று அவன் சொன்னது அந்த தச்சனுக்காகவும் சேர்த்தே இருக்கக் கூடும்!...இக்பால்

    பதிலளிநீக்கு
  6. Oru Ulag mahaa Kavignanin arputha padaippugalai Remind panniyatharku mikka Nanri Sago. Naanum avaril karainthu irukkiren anega murai.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.நல்ல புத்தகங்களை படிக்கும் போதும், அதனுடனேயே பயணிக்கும் போதும், அதன் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்கிற
    போதும் கிடைக்கிற இன்பமே தனிதான்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!