நாற்காலிக்கு மிக நெருக்கமாக யாரும் சுற்றி வரக் கூடாது என்பது ஆட்டத்தின் கணக்கு. நாற்காலியை விட்டுத் தள்ளிப் போய் சுற்றக் கூடாது என்று ஆட்டக்காரர்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். ஒன்றுபோல ஒரே பாதையில் அவர்கள் வட்டமாக சுற்றிச் சுற்றி வருகிறார்கள். யாவரும் தத்தம் இடைவெளிகளில் கவனமாயிருக்கின்றனர்.
யாரும் யாரையும் தள்ளிவிடக் கூடாது என்பது ஆட்டத்தின் ஒழுக்கம். தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதில் ஒவ்வொரு ஆட்டக்காரனும் எச்சரிக்கையாயிருக்கிறான். பாட்டு நின்று நாற்காலியை நோக்கிப் பாயும் வேகத்தில், யாராவது ஒருவன் கீழே விழுந்து யாரோ ஒருவர் தன்னை தள்ளிவிட்டதாக எப்போதும் சொல்கிறான். அந்தக் குரலுக்கு அவகாசம் கொடுக்காமல் பாட்டு மீண்டும் ஆரம்பித்துவிடுகிறது.
யாரையாவது ஒருவனை வெளியேற்ற வேண்டும் என்பது ஆட்டத்தின் விதி. காதில் பாட்டும், கண்ணில் நாற்காலியுமாக சுற்றிக்கொண்டு இருக்கும் அவர்கள் நெஞ்சில் எப்படியாவது தனக்கு ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே முழுக்க நிறைந்திருக்கிறது. யாரிடமும் மற்றவர்களுக்கான இடம் துளியும் இல்லை.
ஒரே ஒரு நாற்காலியில் யார் உட்காருகிறார் என்பதே ஆட்டத்தின் முடிவு. தமக்கான ஆட்டக்காரனை அடையாளம் கண்டபடி சுற்றி நிற்கும் கூட்டம் பிரிந்து பிரிந்து கிடக்கிறது. யார் வெற்றி பெறுவார், யார் தோற்பார் என அலைமோதிக் கொள்கிறது.
இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் யாரறிவார்?
நல்லா பூசி மெழுகிரிங்க மாதவ் சார்
பதிலளிநீக்குவணக்கம் தோழரே நான் அ.தமிழ்ச்செல்வன் திருமங்கலம்,தமுஎகச மதுரை புறநகர் மாவட்டசெயற்குழுவில் இருக்கிறேன் இன்றைய வான்ம் என்ள வலைப்பூ நடத்துகிறேன்.இடுகைகளை படித்து தங்களது விமர்சனம் எதிப்பார்க்கிறேன்.தங்களது வாசகர்களுக்கு அறிமுக்பபடுத்துங்கள் ந ன்றி
பதிலளிநீக்குதேர்தல் என்பதே சூதாட்டம் தான் என்று இதை விட தெளிவாக யாரும் சொல்லி விட முடியாது
பதிலளிநீக்குநல்லாச் சொன்னிங்க
பதிலளிநீக்குநல்லவர்களைப் போல கெட்டவர்களும்..
பதிலளிநீக்குகெட்டவர்களைப் போல
நல்லவர்களும்..
ஆட்த்தின் பார்வையாளர்களுக்கு
உணர்த்தப்படுவதுதான்
ஆட்டத்தின் வெற்றியெனப்படுகிறது.
வணக்கம், நாள் பலவாயிற்று உரையாடி. இந்த விளையாட்டு யாருக்கானது. ஒண்ணுமே புரியல. நான் தொடர்பில் உள்ளேன் என்பதற்காகவும் இந்தப் பதிவு
பதிலளிநீக்குஇது விளையாட்டைப்பற்றி சொல்லப்பட்டுள்ளதா? அல்ல விஷயமாக சொல்லப்பட்டதா?
பதிலளிநீக்குயார் நல்லவர் கெட்டவர் யார் என்று யாரும் சொல்ல முடியாது.ஏன் எனில் நாம் நல்லவர கெட்டவரா நாம் சொல்லமுடியாது. ஆகவே யாரும் யாரையும் நல்லவர் கெட்டவர் என்று சொல்லகூடாது.
பதிலளிநீக்கு