வம்சி சிறுகதைப் போட்டி - கடைசி தேதி!

வம்சி சிறுகதைப் போட்டியின் கடைசி தேதி 31.10.2011 என்று குறிப்பிட்டு இருந்தோம். சில பதிவர்கள் கடைசி தேதியை  நீட்டிக்கலாமா என்று கேட்டிருந்தனர். வந்த சிறுகதைகளை வம்சி பதிப்பகத்தாருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் நடுவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நடுவர்கள் கதைகளைப் படித்து தேர்ந்தெடுப்பதற்கு போதிய அவகாசம் வேண்டும். இவையெல்லாற்றுக்கும் சேர்த்து ஒரு மாதமே அவகாசம் இருக்கிறது. அதன் பின், தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை சென்னை புத்தகக் கண்காட்சிக்கு முன்பு, புத்தகமாகக் கொண்டு வரவேண்டும். எனவே அதிக நாட்கள் இல்லை.  பதிவர்களின் விருப்பத்தை ஏற்று, இரண்டு நாட்கள் மட்டுமே தள்ளிவைக்கிறோம். நவம்பர் 2ம் தேதிக்குள் கதைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நவம்பர் 3ம் தேதி காலை 10 மணிக்கு இறுதிப்பட்டியல் அப்டேட் செய்யப்பட்டு விடும் என தெரிவித்துக்கொள்கிறோம்.  

வம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி!  

வம்சி சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகள்

Comments

3 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. சந்தோஷம்... இன்னும் அனுப்ப முயல்கிறோம்.

    ReplyDelete
  2. புதுசா எழுதி அனுப்பலாமா சார்? இந்த வருசம் சிறுகதை போட்டிக்கு தவிர எதுவும் எழுதலையே.

    ReplyDelete
  3. மூணு கதை அனுப்பியது போதும்னு நினைச்சேன், ரெண்டு நாள் நீட்டி நாலாவது கதைய எழுத வச்சுட்டீங்களே பாஸ்

    ReplyDelete

You can comment here