வெளிச்சத்தில் எல்லோரும் தெரிந்தவர்களாய் இருந்தார்கள். தூங்காமல் அரட்டை அடித்தபடி பழங்கள், சுவீட்கள், பூக்கள் என தனித்தனி தட்டுகளில் ஒன்றுபோல் வைத்துக்கொண்டு இருந்த போது எங்கள் அருகில் வந்து தரையில் உட்கார்ந்து கொண்டான் அவன். “நாளைக்குத்தான் கல்யாணம். இப்ப மாப்பிள்ளைக்கு இங்க என்ன வேலையாம்” என்று அந்தக் கல்யாணப் பொண்ணு அவனிடம் வெட்கத்தோடு கேட்டாள். அவனோ சிரித்துக்கொண்டு என் கண்களுக்குள் ஊடுருவினான். என் கையை எடுத்து, தன் உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டான். அவனைப் பார்த்து எத்தனை வருடம் ஆகிவிட்டது என்றிருந்தது. அப்படியேதான் இருந்தான். அப்புறம், தெருவிளக்கை மறைத்து நின்ற வேப்ப மர இலைகள் தலையைத் தடவிக்கொண்டிருக்க அந்த பால்கனி ஓரத்தில், மெல்லிய வெளிச்சத்தில் கையைப் பிடித்தபடி “நீயும் அப்படியே இருக்கிறாய்” என்றான். ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்த மாதிரி இருந்தது. அப்புறம் அவன் படுக்கையில் இருந்தான். காலைப் பிடித்துவிட்டான். வேண்டும் வேண்டும் போலிருந்தது. கால்விரலில் அவன் மூச்சும் ஈரமும் பட சிலிர்த்தேன். அது பிடிக்கும் என அவனுக்குத் தெரியும். பிடிக்கும் எல்லாமும் தெரியும். “அப்படியே இருக்கிறாய்” என்றேன் விம்மிப் போய். “நீயுந்தான்” என்றான். வெடித்து உன்மத்தமானேன். நனவு போலவே இருந்த யாவும் கலைந்து போனது அடங்காத ஒரு கணத்தில். இரவு விளக்கு உறுத்தியது. யார் கல்யாணம், யார் வீடு, யார் அவன்? தெரியவில்லை. கண்களைத் திரும்பவும் மூடி ஆழ்ந்தபோது, என் முகத்தில் வழக்கமான மூச்சுக்காற்று படர்ந்தது.
காலையில் சாப்பாட்டு மேஜையில் அவரும் குழந்தைகளும் உட்கார்ந்திருந்தனர். “இன்னிக்கு உங்களுக்குப் பிடித்த ரவா தோசை” என்றேன். அப்படியா என்று புன்னகைத்து என்னைப் பார்த்தவர், “இன்னிக்கு முகமெல்லாம் ஒரே களையாய் இருக்கு” என ஊடுருவிப் பார்த்தார். அதன் அர்த்தம் புரிந்தமாதிரி நானும் குழந்தைகளுக்குத் தெரியாமல் சிரித்தேன்.
இன்னும் புரியாத மாதிரியே இருக்குங்கா
பதிலளிநீக்குஅண்ணா செம ரொமான்சா இருக்கு !!!!!
பதிலளிநீக்குஅன்புடன் கிச்சான்!
Super... Romba azhaga ezhuthi irukkinga...
பதிலளிநீக்குகார்த்திகேயனி!
பதிலளிநீக்குஒவ்வொருவருக்குள்ளும் பிடித்தவர் என்ற பிம்பம் ஒன்று இருக்கிறது. அது கனவாகவே இருக்கிறது. அவ்வளவுதான்.
கிச்சான்!
ரொமான்ஸ் இதில் முக்கியமில்லை தம்பி.
சே.குமார்!
மிக்க நன்றி.