வம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி!


பத்திரிகைகளில் எழுதப்படும் பல சிறுகதைகளை விடவும் அருமையான சிறுகதைகளை வலைப்பக்கங்களில் நமது பதிவர்கள் எழுதி வருகிறார்கள். உள்ளடக்கத்திலும், வடிவ நேர்த்தியிலும், மொழியைக் கையாளுவதிலும் அவை சிறப்பானவையாக இருக்கின்றன. நிர்ப்பந்தகளும், வியாபாரத்தன்மைகளும் அற்று, மிக சுதந்திரமாக எழுத முடிகிறது இங்கே. பலரின் கண்பார்வையில் படாமலேயே பொக்கிஷங்களாய் அவை  கொட்டிக் கிடக்கின்றன. அவைகளை சேகரிக்க மீண்டும் முன்வந்திருக்கிறது வம்சி பதிப்பகம். இந்த தடவை ‘சிறுகதைப் போட்டி’ என நடத்துவதன் மூலமாக.

இதைப் போட்டி எனச் சொல்வது சரியாயில்லைதான். சிறந்த கதைகளைத் தேர்தெடுப்பதற்கான உத்தியாகவே இதனை அர்த்தம் கொள்வோமாக!  தேர்தெடுக்கப்படும் முதல் சிறந்த சிறுகதைக்கு ரூ.10000/-மும், இரண்டாவது சிறுகதைகள் இரண்டிற்கு தலா ரூ.5000/-மும் கொடுக்க வம்சி பதிப்பகம் முன்வந்திருக்கிறது.

மேலும், நல்ல சிறுகதைகளை தேர்ந்தெடுத்து சிறுகதைத் தொகுப்பாய் கொண்டு வருவது எனவும், அப்படி தொகுப்பிற்காய் தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.1000/- கொடுக்கவும் தீர்மானித்திருக்கிறது.

இந்தக் கதைகளைத் தேர்தெடுப்பதற்கான நடுவர் குழுவில், தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் இருக்கலாமே என்றேன். வம்சி பதிப்பகத்தின் சார்பில் பேசிய பவா செல்லத்துரை கொஞ்சமும் தயங்காமல் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், தமிழ்நதி ஆகியோர் பேர்களைச் சொன்னார்.

பதிவுலக நண்பர்கள் இந்த முயற்சியில் கலந்துகொண்டு, வலையுலகில் இருந்து தமிழுக்கு அற்புதமான சிறுகதைகளைத் தந்து உதவுமாறு கேடுக் கொள்கிறோம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1. 2011ல் எழுதிய சிறுகதையாக இருத்தல் வேண்டும்.
2. சிறுகதை எழுதியவர்கள் கண்டிப்பாக பதிவர்களாக இருத்தல் வேண்டும்.
3. சிறுகதைக்கான பதிவின் இணைப்பைத் தந்தால் போதுமானது.
4. பதிவர்கள் மட்டுமல்லாது, கதையை ரசித்தவர்களும் இணைப்பை அனுப்பலாம்.
5. ஒருவர் எத்தனை சிறுகதை இணைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
6. அனுப்ப வேண்டிய கடைசி தேதி:  31.10.2011 . அனுப்ப வேண்டிய முகவரி : jothi.mraj@gmail.com

 

* 30.11.2011 அன்று சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்.


* போட்டியில் தேர்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு 2012 ஜனவரியில் நடக்கவிருக்கும் சென்னைப் புத்தகத் திருவிழாவையொட்டி வெளியிடப்படும்.

 

வாழ்த்துக்கள்!

Comments

49 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. நல்ல ஆரம்பம். நிறையபேரு கலந்துகொண்டு சிறப்பிக்கவும்.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி அண்ணா.
    முயற்சிப்போம்...

    ReplyDelete
  3. அறிவிப்புக்கு நன்றி. நானும் பங்கு பெறுவேன்.

    ReplyDelete
  4. ஆஹா ! நல்ல போட்டி..லின்க் கொடுக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  5. திரு ராகவன் எழுதிய 'தேன் கூட்டு மெழுகு' ஒரு அருமையான கதை. அதன் இணைப்பு கீழே கொடுத்திருக்கிறேன். நீங்கள் அதை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளலாம். அந்த கதைக்கு பரிசு/அங்கீகாரம் கிடைத்தால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். மிக்க நன்றி.
    http://koodalkoothan.blogspot.com/2011/09/blog-post.html

    ReplyDelete
  6. பகிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. இத்தனை பக்கங்கள் அல்லது வரிகள் என எதாவது நிபந்தனை உண்டா தெரிய படுத்தவும்

    ReplyDelete
  8. லஷ்மி!
    சே.குமார்!
    புபட்டியன்!
    asiya omar!
    ரத்னவேல்!
    க.அசோக்குமார்!

    மிக்க நன்றி.

    ReplyDelete
  9. செல்வராஜ் ஜெகதீசன்!

    கவிதைகளுக்கான அறிவிப்புகள் இப்போதைக்கு இல்லை நண்பரே!

    ReplyDelete
  10. மதிவாணன்!

    இத்தனை பக்கங்கள் என்று அளவு கிடையாது. அதற்காக இருபத்தைந்து, முப்பது பக்கங்கள் என இருக்க வேண்டாம்.

    ReplyDelete
  11. நல்ல முயற்சி. பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க என் வாழ்த்துக்கள். நண்பர்களுடன் இத்தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  12. சிறுகதைப் போட்டிக்கு, பதிவரின் வலைப்பூவில் போட்ட கதைகள் மட்டும்தான் கொடுக்கணுமா? அல்லது இணைய இதழ்களில் வந்த கதைகளும் கொடுக்கலாமா?

    ReplyDelete
  13. ராமலஷ்மி!
    தங்கள் ஆதரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    சி.பி.செந்தில்குமார்!
    நன்றி நண்பரே!

    ஹூசைனம்மா!
    பதிவில் வெளியிடப்பட்டு, இதழ்களில் வந்த கதைகளாய் இருந்தால் அனுப்பலாம். முதலில் பதிவில் வெளிவந்திருக்க வேண்டும்!

    ReplyDelete
  14. எப்படி அனுப்புவது?

    ReplyDelete
  15. பகிர்விற்கு நன்றி.. பங்கு கொள்ள முயற்சிக்கிறேன் :-)

    ReplyDelete
  16. //முதலில் பதிவில் வெளிவந்திருக்க வேண்டும்//

    பதிவில் வெளியிடப்பட்டவைகளை (இணைய) இதழ்களில் ஏற்றுக் கொள்ளமாட்டார்களே? இணைய இதழ்களில் வந்த பின்பு தான், நம் பதிவில் வெளியிட முடியும்.

    ஆகையால், “இதழ்களில் வந்திருந்தாலும், (பின்னர்) பதிவிலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்” என்று எடுத்துக் கொள்ளலாமா?

    ReplyDelete
  17. அன்பின் மாதவராஜ் - அருமையான செயல் - வம்சி பதிப்பகத்திற்கு நன்றி. நல்ல கதைகளின் தொகுப்பு சிறப்பாக வெளிவர நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

    ReplyDelete
  18. மிக நல்ல முயற்சி இது. நானும் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்.. பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  19. ஆகையால், “இதழ்களில் வந்திருந்தாலும், (பின்னர்) பதிவிலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்” என்று எடுத்துக் கொள்ளலாமா?

    (பதில்வேண்டி நினைவூட்டல்)

    ReplyDelete
  20. ஹுஸைனம்மா!

    தாமதத்திற்கு மன்னியுங்கள். சுட்டியை அனுப்பி வையுங்கள்.:-))))

    ReplyDelete
  21. நான் ஆரம்பிச்சுட்டேன்...

    ReplyDelete
  22. இது வரை என் வலைப்பூவில் சிறுகதை எதுவும் எழுதியதில்லை. இந்த சிறுகதைப் போட்டிக்காக சிறுகதை எழுத நினைத்துள்ளேன். பரிசு கிடைக்காவிட்டாலும் பங்கு பெற்ற மகிழ்ச்சி போதும். மற்ற நன்பர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. என் கதைகளின் சுட்டிகள் கீழ் வருமாறு...

    தண்டனை என்ற தலைப்பில்
    http://kathaikkiren.blogspot.com/2011/10/blog-post_10.html

    அனைவரும் மனிதர்களே என்ற தலைப்பில்
    http://kathaikkiren.blogspot.com/2011/10/blog-post_09.html

    எனக்கு பிடித்த ஒரு கதை சேட்டைக்காரன் எழுதியது..
    http://settaikkaran.blogspot.com/2011/10/blog-post_07.html

    உங்கள் மின்னஞ்சலுக்கும் அனுப்பி உள்ளேன்

    ReplyDelete
  24. நல்ல முயற்சி இது பெரு வெற்றியடைய வாழ்த்துக்கள் நான் கூட முயற்சிக்கிறேன் கதை எழுத

    ReplyDelete
  25. புதிய இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்தச் செயல் எழுத்தாளர்களை/பதிவர்களை நிச்சயம் உற்சாகப் படுத்துவதாகவே இருக்கும்.

    தகவலுக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
  26. வம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி!"/


    அருமையான போட்டிக்கு பாராட்டுக்கள்>

    ReplyDelete
  27. மாதவண்ணே நீங்களும் சரி; வம்சியும் சரி; இணையத்தில் இயங்குபவர்களைத் தொடர்ந்து உற்சாகமூட்டி வருகிறீர்கள். என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  28. நல்ல விசயம் நண்பரே .கலந்து கொள்ள முயர்சிக்கிறேன் நண்பரே

    ReplyDelete
  29. அடடா! நல்ல முயற்சி. தெரியப்படுத்தியதற்கு நன்றி. நான் கதைகளை அனுப்பி விட்டேன்.

    ReplyDelete
  30. இந்த லிங்கை எனது பதிவில் இணைத்துவிட்டேன் சகோ!.. நல்ல முயற்சிக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  31. இதுவரை நான் எந்த போட்டியிலும் கலந்துகொண்டதில்லை..நானும் முயற்சி செய்கிறேன். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.நன்றி!!

    ReplyDelete
  32. என்னுடைய கதையின் சுட்டியை இணைத்துள்ளேன்.
    மொக்கராசுவின் கட்டில்
    http://alaiyallasunami.blogspot.com/2011/10/blog-post_27.html

    ReplyDelete
  33. http://shylajan.blogspot.com/2011/10/2011_30.html

    போட்டிகதை இந்த சுட்டியில் உள்ளது
    தாங்கள் அளித்துள்ள மின் அஞ்சலில் என்ன பிரச்சினை தெரியவில்லை அதில் அனுப்ப இயலவில்லை உதவவும் நன்றி
    ஷைலஜா

    ReplyDelete
  34. ஷைலஜா சொன்னதுதான், உங்கள் மெயில் ஐடியை கிளிக்கினால் போக மறுக்கிறது. இங்கேயே
    லிங்க் கொடுத்துள்ளேன்.

    http://nunippul.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete
  35. 1. http://blabsnblabs.blogspot.com/2011/03/kalaivaanee.html

    2. http://blabsnblabs.blogspot.com/2011/06/25.html

    3.http://blabsnblabs.blogspot.com/2011/04/blog-post_22.html

    நான் அனுப்பிய கதைகள் உங்களுக்கு வந்து சேர்ந்ததா என்று தெரியவில்லை. இருந்தாலும் இங்கே கதைகளின் தொடர்பை தந்துள்ளேன்

    ReplyDelete
  36. நான் அனுப்பிய கதைகள் உங்களுக்கு வந்து சேர்ந்ததா என்று தெரியவில்லை. இருந்தாலும் இங்கே கதைகளின் தொடர்பை தந்துள்ளேன்

    1. http://blabsnblabs.blogspot.com/2011/03/kalaivaanee.html

    2. http://blabsnblabs.blogspot.com/2011/06/25.html

    3. http://blabsnblabs.blogspot.com/2011/04/blog-post_22.html

    ReplyDelete
  37. பெற்றுக் கொண்ட கதைகளை குறித்த விபரங்களையும் உடனடியாக இடுகைகளாக தந்தமை பங்கு கொண்ட அனைவருக்கும் நிச்சயமாக மகிழ்ச்சி தரும்.

    ReplyDelete
  38. வம்சி சிறுகதைப் போட்டிக்காகப் பதிந்த முதல் கதையுடன் இந்த ஆண்டில் முன்னர் எழுதிய மூன்று கதைகளின் சுட்டிகளையும் இணைத்துள்ளேன், போட்டிக்கு.

    1. ஈரம்
    http://tamilamudam.blogspot.com/2011/10/blog-post_31.html

    2. வடம்
    http://tamilamudam.blogspot.com/2011/02/blog-post_27.html

    3. பிடிவாதம்
    http://tamilamudam.blogspot.com/2011/05/blog-post.html

    4. தாய் மனசு
    http://tamilamudam.blogspot.com/2011/07/blog-post_17.html

    நன்றி.

    ReplyDelete
  39. வம்சி சிறுகதைப் போட்டிக்காகப் பதிந்த முதல் கதையுடன் இந்த ஆண்டில் முன்னர் எழுதிய மூன்று கதைகளின் சுட்டிகளையும் இணைத்துள்ளேன், போட்டிக்கு.

    1. ஈரம்
    http://tamilamudam.blogspot.com/2011/10/blog-post_31.html


    2. வடம்
    http://tamilamudam.blogspot.com/2011/02/blog-post_27.html

    3. பிடிவாதம்
    http://tamilamudam.blogspot.com/2011/05/blog-post.html


    4. தாய் மனசு
    http://tamilamudam.blogspot.com/2011/07/blog-post_17.html

    நன்றி.

    ReplyDelete
  40. http://valluvam-rohini.blogspot.com/2011/03/blog-post_13.html

    ஹுஸைனம்மா கேள்வியும் அதற்கான பதிலும் கண்ட பின் போட்டிக்கான கதையை அனுப்பியுள்ளேன்.[நேற்று அனுப்பியிருந்தேன் .விவரம் தெரியவில்லை]

    ReplyDelete
  41. எனது கதைகளையும் அனுப்பியுள்ளேன்..
    அவற்றையும் போட்டியில் சேர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!!

    ReplyDelete
  42. சிறுகதைப் போட்டிக்கான என் கதையின் இணைப்பு இதோ.
    http://abimanyuonline.blogspot.com/2011/08/fiction.html


    நன்றி

    ReplyDelete
  43. நண்பர்களே,
    இரண்டு நாள் தாமதமாக அனுப்புவதற்கு மன்னிக்கவும். என்னுடைய கவனக்குறைவு தான். அதற்காக ஒரு நல்ல கதையா புறக்கணிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஈழத்தின் தளத்தில் இருந்து எழுதுகிறேன். ஊக்குவிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

    உஷ் .. இது கடவுள்கள் துயிலும் தேசம் : http://orupadalayinkathai.blogspot.com/2011/10/blog-post_06.ஹ்த்ம்ல்

    அக்கா எங்கே போனாள்? : http://orupadalayinkathai.blogspot.com/2011/10/blog-post_04.ஹ்த்ம்ல்

    அப்பா வருகிறார் : http://orupadalayinkathai.blogspot.com/2011/10/blog-post_24.ஹ்த்ம்ல்

    சுந்தர காண்டம் : http://orupadalayinkathai.blogspot.com/2011/10/blog-post_31.ஹ்த்ம்ல்

    நன்றி உங்கள் ஆதரவுக்கு,

    அன்புடன்,
    ஜேகே

    ReplyDelete
  44. நண்பரே,

    காலத்தின் கேடு - http://vijayashankar.blogspot.com/2011/11/blog-post.html

    நான் இந்த வருடம் எழுதியிருக்கும் ஒரு கதை, என் ப்ளாகில் இருக்கு.

    இந்த கதை வம்சி சிறுகதை போட்டிக்கு (2011) எழுதப்பட்டது.

    ReplyDelete
  45. என்னை வார்த்தெடுத்த பதிவுலகத்துக்கு நன்றி.
    நான் எழுதிய சில கதைகளின் லிங்க் கீழே கொடுத்திருக்கிறேன்
    தங்களின் பார்வைக்கு, நன்றி
    என்றென்றும் உன்னுடன் அன்புடன் ...
    http://venthayirmanasu.blogspot.com/2011/09/blog-post.html
    'செல்'லத் தொல்லைகள் 'சவால் சிறுகதை-2011 '
    http://venthayirmanasu.blogspot.com/2011/10/2011.html
    பெண் என்னும் பேரதிசயம் !!
    http://venthayirmanasu.blogspot.com/2011/05/blog-post_02.html
    http://venthayirmanasu.blogspot.com/2011/05/blog-post_03.html
    http://venthayirmanasu.blogspot.com/2011/05/blog-post_04.html

    ReplyDelete
  46. பதிவைவிட இன்னும் பல பேரை சென்று சேரும் அந்த ஆசையில்
    இதோ இன்னும் ஒரு கதை

    பகல் வீடு
    http://venthayirmanasu.blogspot.com/2011/03/blog-post.html
    http://venthayirmanasu.blogspot.com/2011/03/ii.html

    ReplyDelete
  47. வணக்கம்,

    இப்போட்டியில் நானும் பங்கேற்றுள்ளேன். இதற்கான முடிவுகள் எப்போது, எப்படி அறிவிக்க படும்? அறிந்து கொள்ள ஆவல்

    ReplyDelete

You can comment here