நேற்று குழந்தையை எதற்கோ சத்தம் போட்டான் அவன் . உம்மென்று, படுக்கையில் போய் சுருண்டு கொண்ட குழந்தையின் முதுகைத் தட்டிக்கொடுத்தாள் அவள். உடனே முகம் மலர்ந்து “அம்மா, அப்பாவிடம் பேசாதே” என்றது குழந்தை.
இன்று குழந்தையை எதற்கோ அடித்துவிட்டாள் அவள். அழுது புரண்ட குழந்தையை தூக்கி வைத்துக் கொஞ்சினான் அவன். அடுத்த கணம் கண்ணீரை துடைத்துக்கொண்டே, “அப்பா, அம்மாவிடம் பேசாதே” என்றது குழந்தை.
எதற்கோ சண்டை போட்ட அவனும் அவளும் பேசாமல்தான் இருந்தனர் இரண்டு மூன்று நாட்களாய்!
suuuuuuuuuuuuper
ReplyDeleteAbsolutely true. Very nice.
ReplyDeleteநச்
ReplyDeleteகுழந்தைகளிடம் பெரியவர்கள் கற்றுக்கொள்ள நிறையா இருக்குதான்.
ReplyDeletesuper....
ReplyDelete//உடனே முகம் மலர்ந்து //
ReplyDelete//அடுத்த கணம் கண்ணீரை துடைத்துக்கொண்டே//
அது தான் குழந்தைங்கறது...
பெரியவர்கள் தான் அவ்வளவு எளிதில் சமாதானம் ஆவதில்லை...
நல்ல பதிவு..
அருமை..அருமை..
ReplyDeleteஅண்டோ!
ReplyDeleteநன்றி
ஓலை!
நன்றி.
சூர்யாஜீவா!
நன்றி.
சே.குமார்!
நன்றி.
ஸ்வர்ணரேகா!
பெரியவர்கள் சமாதானம் ஆவதற்கு எவ்வளவு மனத்தடைகள் ஏற்பட்டு விடுகின்றன. நமது வளர்ச்சியில் அதுவும் ஒரு பரிமாணம் போலும்!
க.பாலாசி!
மிக்க நன்றி தம்பி.