ஒரு குட்டி எழுத்தாளர்!
‘வம்சி சிறுகதைப் போட்டிக்கு’ என்று குறிப்பிட்டு குட்டி குட்டியாய் மூன்று கதைகளை மெயிலில் அனுப்பியிருந்தார் பாஸ்கரன். தெரிந்த தோழர் அவர். திருநெல்வேலி சின்மயா வித்யாலயாவில் நான்காம் வகுப்பு படிக்கும் அவரது மகன் கௌதம் எழுதிய கதைகளாம். ஒரு குழந்தையின் மனவுலகம் அவைகளில் நம்பிக்கையோடு விரிந்துகொண்டு இருந்தது. எல்லாவற்றிலும் உதவுவதற்கு என்று யாராவது வந்தபடி இருந்தார்கள்.
அவருக்குப் போன் செய்தேன். “இவைகள் இணையத்தில் எழுதப்பட்டதா?’” என சிரித்தேன். “எனது ஃபேஸ்புக்கில் எழுதப்பட்டவை” என அவர் சிரித்தார். தொடர்ந்து, “இப்படி கதைகளை சொல்லிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கிறான். உங்களுக்கு அனுப்பி வைக்கத் தோன்றியது. எப்படியிருக்கு?” என்றார். “அருமையாக இருக்கிறது. அந்தக் குட்டி எழுத்தாளரை அவன் போக்கிலேயே விடுங்கள்” என்றேன். சினிமா, தொலைக்காட்சியை எல்லாம் மீறும் ஒரு குழந்தையல்லவா அவன்!
கௌதம் எழுதிய கதைகள்-
(1)
ஒரு நாள். மதிய நேரம். எறும்புகளுடைய உணவு சேகரிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்த எறும்புகள் நதியை கடந்திருந்த போது சில எறும்புகள் தண்ணீருக்குள் விழுந்து விட்டன. அப்போது ஒரு குருவி அதைப் பார்த்து உதவி செய்தது. அந்த குருவிக்கு நன்றி சொன்னது அந்த எறும்புகள். அந்த குருவியோட எதிரி ஒரு கழுகு. கொஞ்ச நேரம் கழித்து, ஒரு வேட்டைக்காரன் வந்தான். அந்த வேட்டைக்காரன் குருவியை சுடப்பார்த்தான். அதை ஒரு எறும்பு பார்த்தது. அந்த எறும்பு எல்லா எறும்புகளிடமும் சொன்னது. அப்படி நடக்கக்கூடாது என்று எல்லா எறும்புகளும் வேட்டைக்காரன் காலில் குத்தியது. வேட்டைக்காரனின் குறி தவறி குருவியோட எதிரி கழுகு மேல் சுட்டான். அந்த குருவி அதனுடைய மனைவியிடம் சொன்னது. அந்த எறும்புகள் இன்னும் மறக்கவேயில்லை.
(2)
ஒரு இடத்தில் ஒரு பாலைவனம். அதன் பெயர் தார் பாலைவனம். ஒருவன் அந்த பாலைவனத்தில் நடந்து போனான். “ஆகா என்ன சூடு. சாப்பிடவும் குடிக்கவும் எதுவும் இல்லியே”என்றான். அந்த பக்கம் ஒரு சிறிய பாறை இருந்தது. அந்தப் பாறை அருகே மணல் இருந்தது. அந்த மணலை தோண்டி பார்த்தால் தண்ணீர் இருக்கும். அவன் அந்த பாறையைப் பார்த்தான். அந்த மணல் சூடாக இருந்ததால் அவன் அதை தோண்டவில்லை. மதிய நேரமானது. சூடு பயங்கரமாக ஆனது. அவனுக்கு தண்ணீர் எங்கும் கிடைக்கவில்லை. அப்படியே சென்ற அவன் காணாமல் போய்விட்டான். “ஆமாம். நான் இப்போது எங்கே இருக்கிறேன். என் ஊர் எங்கே” என்றான். அவன் தண்ணீர் குடிக்காததால் மயக்கமடைந்தான். சில நேரம் கழிந்தது. அப்பொழுது ஒருவன் வந்து அவனுக்கு தண்ணீர் கொடுத்து எழும்ப வைத்தான். “ரொம்ப நன்றி, என் ஊர் ஜெய்ப்பூர். அந்த ஊருக்கு உங்களுக்கு வழி தெரியுமா?” என்று கேட்டான். அவனும் “ஆ, தெரியுமே. வா நாம் இரண்டு பேரும் போவோம்” என்றான். பிறகு அவர்கள் இரண்டு பேரும் ஊருக்கு சென்றார்கள்.
(3)
நூறு வருடங்களுக்கு முன்பு, பூமி என்னும் ஒரு கிரகம் ஒன்று இருந்தது. அப்பொழுது அங்கு மரங்களால் நிறைந்திருந்தது. ஆனால் இப்பொழுது நிறைய வீடுகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் வந்து விட்டதால் மரங்கள் கொஞ்சமாகத்தான் இருந்தது. ஒரு நாள் ஜப்பான் நாட்டில் டோக்கியோ என்னும் ஊரில் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனது பெயர் நோவிட்டா. ஒரு நாள் அவன் ஒரு காட்டுக்குள் சென்றான். அங்கே ஒரு பள்ளம். அந்த பள்ளத்துள் ஒரு கட்டிடம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுது அவன் “ஆகா, இப்படி அவங்க கட்டிடம் செய்வதற்காக மரங்களையெல்லாம் இடிக்கிறாங்களே, இப்படி செய்தால் மரங்களோட நிலமை என்னவாகும்” என்று அவன் பரிதாபப்பட்டான். அவன் பக்கம் சிறிய செடி. அவன் அதை வளர்ப்பதற்கு எடுத்து வீட்டிற்கு சென்றான். அடுத்த நாள் அங்கே ஒரு ஆகாய கப்பல். கப்பலில் மரங்களின் கூட்டம். அதற்கு உயிர் இருந்தது. அந்த மரங்களின் தலைவன் “எனக்கு ரொம்ப கோபமாகி விட்டது. அவங்க இப்படி மரங்களை இடிக்கிறது தப்பு. உடனே பூமியில் உள்ள மரங்களை எல்லாம் எடுத்து விடுங்கள்”என்று அவன் ஆணையிட்டான். ஆகாய கப்பலில் இருந்து ஒலி வந்தது. அந்த ஒலி பூமியிலிருந்து மரங்களையெல்லாம் எடுத்துச்சென்றது. அப்பொழுது அவனும் சேர்ந்து போனான். அவன் அங்கே போனதால் மரங்களின் தலைவன் கோபம் அடைந்தான். “மனிதன் இங்க ஏன் வந்தான்” என்று கேட்டான். “மரங்களுக்குமா உயிர் உண்டு?” என்றான் நோவிட்டா. மரங்களின் தலைவன் “அவனைக் கொன்று விடுங்கள்”என்றான். அவன் வளர்த்த செடி “வேண்டாம்,அப்படி செய்யாதீர்கள். அவனும் மரங்கள் வளரனும் என்று நினைக்கிறான். நீங்கள் பூமியிலுள்ள மரங்களை எல்லாம் எடுத்து விட்டால் எதுவும் உயிர் வாழ முடியாது. அதனால் மரங்களை எடுக்க கூடாது. அவனையும் கொன்று விடாதீர்கள்” என்றது. செடி சொன்ன வார்த்தைக்காகத்தான் அவனைக் கீழே விட்டார்கள். மரங்களையும் தான். பிறகு அவன் மரம் வளர்க்கத் துவங்கினான்.
வம்சி சிறுகதைப் போட்டி - கடைசி தேதி!
வம்சி சிறுகதைப் போட்டியின் கடைசி தேதி 31.10.2011 என்று குறிப்பிட்டு இருந்தோம். சில பதிவர்கள் கடைசி தேதியை நீட்டிக்கலாமா என்று கேட்டிருந்தனர். வந்த சிறுகதைகளை வம்சி பதிப்பகத்தாருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் நடுவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நடுவர்கள் கதைகளைப் படித்து தேர்ந்தெடுப்பதற்கு போதிய அவகாசம் வேண்டும். இவையெல்லாற்றுக்கும் சேர்த்து ஒரு மாதமே அவகாசம் இருக்கிறது. அதன் பின், தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை சென்னை புத்தகக் கண்காட்சிக்கு முன்பு, புத்தகமாகக் கொண்டு வரவேண்டும். எனவே அதிக நாட்கள் இல்லை. பதிவர்களின் விருப்பத்தை ஏற்று, இரண்டு நாட்கள் மட்டுமே தள்ளிவைக்கிறோம். நவம்பர் 2ம் தேதிக்குள் கதைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நவம்பர் 3ம் தேதி காலை 10 மணிக்கு இறுதிப்பட்டியல் அப்டேட் செய்யப்பட்டு விடும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
வம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி!
வம்சி சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகள்
ரத்தமும் மாமிசமும்
“அறுவடை முடிந்த வயக்காட்டில் நான் ஆண்பிள்ளைகளோடு சேர்ந்து கைப்பந்து விளையாடினேன். கிட்டிப்புல் விளையாடினேன். தூண்டில் போட்டு மீன் பிடித்தேன். மழைவெள்ளத்தில் பெரிய வள்ளத்தைச் செலுத்திப் போயிருக்கிறேன். மிகவும் உயரமான மாமரத்தைப் பிடித்து ஏறியிருக்கிறேன். பெண் என்பதையே மறந்து போனேன். அதனால்தானோ என்னவோ பெண்தானேயென்ற இளக்காரக் குற்றச்சாட்டு பின்னால் என்னைப் பாதிக்கவில்லை.”
தான் எழுத வந்த கதை பற்றிச் சொல்லும்போது மலையாள எழுத்தாளர் கிரேஸி இதைக் குறிப்பிடுகிறார். அதன் பரிமாணங்களை அவரது கதைகளை வாசிப்பவர் அறிய நேரிடலாம்.
அவரது கதைகள் சமூகத்தை அதிர்வுகளுக்குள்ளாக்குகின்றன. வாசிப்பவரை அலைக்கழிக்கின்றன. யாராலும் அவரது கதைகளை எளிதில் வாசித்துக் கடந்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். ஒவ்வொன்றிலும் அடி ஆழத்திலிருந்து பெருமூச்சுக்களும், புன்னகைகளும் வெளிப்படுகின்றன. எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளை தமிழில் எழுத்தாளர் உதயசங்கர் ‘நட்சத்திரம் விழும் நேரத்தில்’ என மொழியாக்கம் செய்திருக்க, வாசல் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அவரைப் பற்றியும், அவரது கதைகள் பற்றியும் இன்னொரு பதிவில் விரிவாகப் பேசுவோம். அதற்கு முன்பாக கிரேஸியின் ஒரு சிறிய கதை இங்கே-
ரத்தமும் மாமிசமும்
கர்த்தரிடம் அன்பு முற்றிப் போனதால்தான் குஞ்சுமேரி அவருடைய மனைவியானாள். சிறகுகள் இல்லையென்றாலும் அவள் சிஸ்டர் ஏஞ்சல் மேரியாகிவிட்டாள். எல்லா இரவுகளிலும் கர்த்தர் சுவர்க்கத்திலிருந்து செம்மறியாட்டின் ரோமங்கள் போல் மிதக்கிற மேகங்களின் துணையோடு அவளுடைய உறக்கத்திலிருந்து இறங்கி வந்தார். அவளுடைய இதயம் கர்த்தர் உதடுகளிலிருந்து உதிர்மணிகளைப் போலப் பொழிகிற வசனங்களைக் கொத்தியெடுத்துக் கொண்டு அதிகாலையின் பரிசுத்தத்தை நோக்கிப் பறந்து செல்கிறது.
படிப்பில் கெட்டிக்காரியானதால் சபை நடத்துகிற காலேஜில் ஆசிரியையானாள் சிஸ்டர் ஏஞ்சல் மேரி. டிபார்ட்மெண்ட்டிற்குள் வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்ததும் சிஸ்டர் ஏஞ்சல்மேரி அதிர்ந்து போய் நின்றாள்.
அங்கே கர்த்தர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இடதுகால் விரல்களை ஊன்றி கைகளை லேசாய் விரித்துக்கொண்டு முன்னால் சாய்ந்து நின்ற சிஸ்டர் ஏஞ்சல்மேரி ஒரு அன்னப்பறவையை நினைவுபடுத்தினாள். வெண்மையின் நிழல் கண்களில் குத்திய போது கர்த்தர் தான் வாசித்துக்கொண்டிருந்த தடிமனான புத்தகத்திலிருந்து முகத்தை உயர்த்தினார். கர்த்தருடைய அமைதியான நீலக்கண்களிலும், கருத்த முந்திரிப் பழக்குலைகளைப் போல தோள்களை உரசிக்கொண்டு கிடக்கிற தலைமுடிச் சுருள்களிலும் சிஸ்டர் ஏஞ்சல் மேரியின் பார்வை ஆச்சரியத்துடன் பறந்து சென்றது.
ஆர்வம் தாங்காமல் சிஸ்டர் ஏஞ்சல்மேரி, முன்னால் சென்று அவள் கையில் எடுத்த கர்த்தருடைய கைகளில் ஆணித்துளைகளைத் தடவினாள். கர்த்தர் அமைதியான புன்னகையோடு சொன்னார்: “காலம் எல்லா முறிவுகளையும் ஆற்றிவிடும்”
மாடப்புறாக்களைப் போன்ற மென்மையான இளம் சூடுள்ள அந்தக் கைகளில் ஆசையோடு முத்தமிட்டு கீழே வைத்த சிஸ்டர் ஏஞ்சல்மேரி பொங்கி வழிகிற கண்களைத் துடைத்தாள்.
அன்று இரவு சிஸ்டர் ஏஞ்சல்மேரி உறங்கவில்லை. கர்த்தர் ஆகாயத்திலிருந்து இறங்கி வரவுமில்லை.
அடுத்தநாள் மன உளைச்சலோடு சிஸ்டர் ஏஞ்சல்மேரி கர்த்தருடைய அறைக்குச் சென்றாள். கர்த்தருடைய மேலங்கியை உருவி ஒற்றை ரோமமும் இல்லாத நெஞ்சில் கருணையின் கனல் போல் ஜொலிக்கின்ற திருஹிருதயத்தைத் தடவினாள். அப்போதும் கர்த்தர் அமைதியாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்: “இதயத்திற்குப் போகிற வழி சரீரத்தினூடாகத்தான்”.
சிஸ்டர் ஏஞ்சல்மேரி கர்த்தருடைய திருமேனியில் சாய்ந்தாள்.
எத்தனை அறிவு?
ஏழாம் அறிவு இருக்கட்டும்.
டெல்லி சென்று மன்மோகன்சிங்கையும், சோனியாவையும் சந்தித்து நாட்டு நிலவரங்களைப் பேசியதாக கருணாநிதி சொல்கிறார். ஆனால் கனிமொழியின் ஜாமீனுக்கு சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லையென செய்திகள் வருகின்றன.
டெல்லியில் நடைபெறும் தேசீய வளர்ச்சி மன்றக் கூட்டத்துக்குச் செல்ல இருப்பதால் அக்டோபர் 22ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகமுடியாது என நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொல்கிறார். ஆனால் அந்த தேதியில், அந்தக் கூட்டத்துக்கு தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தான் செல்கிறார்.
மாற்றி மாற்றி தங்களுக்கே ஓட்டுப் போடும் தமிழர்களுக்கு எத்தனை அறிவு இருக்கும் என இந்த இரண்டு ‘யோக்கியசிகாமணிகளும்’ நினைத்துக்கொண்டு இருப்பார்கள்?
“ரெயிலைக் காணோம்”
உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்னைக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டியிருந்தது. மகளின் ஞாபகத்தில் டவுணுக்குச் சென்று ரெயிலில் முன்பதிவு செய்து வைத்தேன். “ரெயிலைப் பார்க்க வேண்டும், ரெயிலைப் பார்க்க வேண்டும்” என அவள் ரொம்ப நாளாய்ச் சொல்லிக்கொண்டு இருந்தாள். ‘இன்னும் எத்தனை நாளிருக்கு’ என ஒவ்வொரு காலையிலும் ரெயிலைப் பார்க்கக் கேட்டுக்கொண்டிருந்தாள் அந்தக் குழந்தை.
போகும் நாளன்று சீக்கிரமே ரெயில் நிலையத்திற்கு சென்று விட்டிருந்தோம். தண்டவாளங்களைப் பார்த்தபடி, ‘இதிலா ரெயில் வரும்’ என ஆச்சரியத்தோடு கேட்டாள். ரெயில் வரும் திசையைக் கேட்டு, அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். இரைச்சலோடு தூரத்தில் சின்னப் புள்ளியாய் இருந்து மெல்ல மெல்ல பெரிதாவது அதிசயம் போலிருந்திருக்க வேண்டும். அதை நோக்கிக் கையைக் கையை நீட்டியவளைத் தூக்கி வைத்துக் கொண்டேன். ‘தடக்’ ‘தடக்’கெனக் கடந்து நின்ற அந்த நீண்ட இயந்திரம் பார்த்து ‘ரெயில் ’, ‘ரெயில்’ எனக் கத்தினாள்.
ரெயிலின் உள்ளே ஏறிக் கொண்டோம். உட்கார இடம் பார்ப்பதில், சாமான்களை பத்திரமாக வைப்பதில் கவனமாக இருக்கும்போது குழந்தை எதேதோ பேசிக்கொண்டு இருந்தது. சில நிமிடங்களில் ரெயில் புறப்பட்டது. ‘நாம இப்போ ரெயிலில் போறோம்’ என்றேன் நிம்மதியோடும், சந்தோஷத்தோடும் மகளைப் பார்த்து. ‘ரெயிலைக் காணோம்’ என வெளியேக் கை நீட்டியபடி அவள் அழ ஆரம்பித்தாள்.
வம்சி சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகள்
வம்சி சிறுகதைப் போட்டிக்கு இதுவரை வந்த கதைகள் இங்கே தொகுக்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை மொத்தம் 121 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் அதிக பட்சமாக 49 கதைகள் அனுப்பி இருக்கின்றார்! அனைவருக்கும் வம்சியின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனுப்பிய கதைகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரியப்படுத்துங்கள்.
3.11.2011 காலை வரை அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இனி அப்டேட் செய்யப்படாது. திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் மட்டுமே தெரிவிக்கலாம், 3.11.2011 மாலை 5 மணிக்குள்!
பதிவுலகில் எழுதப்படும் அருமையான எழுத்தாளர்களை அடையாளம் காண, பதிவுலகிலிருந்து ஒரு ஆகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பினைக் கொண்டு வர அனைவருக்கும் ஒரு தாகம் இருக்கும் என நம்புகிறோம்!
1. படுதா - போகன்
2. மாயப் புன்னகை – சாம்ராஜ்யப் பிரியன்
3. தேன்கூட்டு மெழுகு - ராகவன்
4. மனம் - பழனிவேல்
5. மனித மரம் - அசோக்குமார்
6. பஞ்சாரம் - விமலன்
7. நாலு பேருக்கு நன்றி - சின்னப்பயல்
8. விட்டாச்சு லீவு - சின்னப்பயல்
9. கடம் - சின்னப்பயல்
10. உணர் கொம்புகள் - சின்னப்பயல்
11. எந்திரன் - சின்னப்பயல்
12. ராக்கெட் கூரியர் - சின்னப்பயல்
13. எப்ப போவீங்க - சின்னப்பயல்
14. காதல் பரிசு - சின்னப்பயல்
15. அப்பா - ஈரோடு கதிர்
16. நான் இறங்கினேன் அது ஏறியது - ஈரோடு கதிர்
17. கிளி - ஈரோடு கதிர்
18. செவத்தியின் பிஞ்சு காதல் - செபஸ்டின் ரொட்ரிக்ஸ்
19. தள்ளுபடி - செபஸ்டின் ரொட்ரிக்ஸ்
20. தங்க ஆஸ்பத்திரி - செபஸ்டின் ரொட்ரிக்ஸ்
21. மொட்டைக் கிறிக்கி - செபஸ்டின் ரொட்ரிக்ஸ்
22. காசோலை - செபஸ்டின் ரொட்ரிக்ஸ்
23. அறு - ஸபீர் ஹாபிஸ்
24. பயணம்- ஸபீர் ஹாபிஸ்
25. சுரண்டல் - ஸபீர் ஹாபிஸ்
26. றியாஸின் டைரி - ஸபீர் ஹாபிஸ்
27. அழகுதிரும் அவளெழில் - ஸபீர் ஹாபிஸ்
28. பசுமை மோகம் - ஸபீர் ஹாபிஸ்
29. சில நொடி மரணம் - ஸபீர் ஹாபிஸ்
30. டியூஷன் கடை - ஸபீர் ஹாபிஸ்
31. ஆற்றங்கரை - ஸபீர் ஹாபிஸ்
32. நான் மனம் அவள் - ஸபீர் ஹாபிஸ்
33. டைரியின் கடைசிப்பக்கம் - ஷக்தி
34. திரையும் அலைவரிசையும் - ஷக்தி
35. “வசீகரன்” விலங்கியல் 12ம் ஆண்டு - ஷக்தி
36. தடம் திரும்பா பிறழ்வுகள் - சதீஸ்குமார்
37. கடவுளாகும் சூட்சுமம் - சதீஸ்குமார்
38. ஒலிம்பிக் தங்கமும், திருடனின் மனைவிக்கு வந்த பங்கமும் - சதீஸ்குமார்
39. வெப்பம் விழுங்கும் நியூட்டன் - சதீஸ்குமார்
40. நிதர்சனங்களின் நிர்ச்சலனம் - சதீஸ்குமார்
41. மரணம் எனப்படுவது யாதெனில் - சதீஸ்குமார்
42. ஆல்புமின் பிரதேசம் - சதீஸ்குமார்
43. வல்லானின் வாகனம் - சதீஸ்குமார்
44. "பசீகரன்" என்னும் கடவுள் - சதீஸ்குமார்
45. சகுனம் - அமைதிச்சாரல்
46. இனியெல்லாம் - அமைதிச்சாரல்
47. பவளமல்லி - அமைதிச்சாரல்
48. அட்சிங்கு - அமைதிச்சாரல்
49. பொங்கல் மகிழ்ச்சி - அமைதிச்சாரல்
50. மனசெல்லாம் பூவாசம் - அமைதிச்சாரல்
51. நிழலின் அருமை - அமைதிச்சாரல்
52. பிழைக்கத் தெரியாதவர்? - என்.கணேசன்
53. ஊரப்பாக்கத்து கிழம் - புபட்டியான்
54. யாமுக்கா யாமுக் - ஆசியா உமர்
55. ஸ்வாமி - கிரி ராமசுப்ரமணியன்
56. உயிர்க்கொடி - யாழன் ஆதி
57. பொன்வண்டுகள் - சுப்புராஜ்
58. யாக்கை - அகல்விளக்கு
59. இரவு நேரப்பேருந்து நிறுத்தம் - அகல்விளக்கு
60. பம்பரம் - பழமைபேசி
61. தண்டனை - சுரேஷ் தனபால்
62. அனைவரும் மனிதர்கள் - சுரேஷ் தனபால்
63. கந்தல் - சேட்டைக்காரன்
64. அப்ரஞ்ஜி - கே.ஜே.அசோக்குமார்
65. இரண்டாம் படி - கே.ஜே.அசோக்குமார்
66. பெண்-குழந்தை-குமரி-அம்மா - விருட்சம்
67. கிழம் தாத்தாவா - விருட்சம்
68. அவளுக்குப்புரிந்தபோது - விருட்சம்
69. குதிரே குதிரே ஜானானா - விருட்சம்
70. தண்டனை - எம்.ரிஷான் ஷெரீப்
71. பூமராங் - எம்.ரிஷான் ஷெரீப்
72. காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - எம்.ரிஷான் ஷெரீப்
73. குங்குமச் சிமிழ் - சுப்புராஜ்
74. ஆதியில் காமம் இருந்தது - சரவணன்.பெ
75. விதி - சென்னைப் பித்தன்
76. சிலந்தி வலை - பழமைபேசி
77. பொதுப் புத்தி - கார்த்திக் பாலா
78. சீச்சு - கார்த்திக் பாலா
79. வினோதினியின் பூந்தொட்டி - கார்த்திக் பாலா
80. நொய்டாவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை - கார்த்திக் பாலா
81. நாகரத்தினம் - சென்னைப் பித்தன்
82. நடிகை - சென்னைப் பித்தன்
83. அஞ்சலி - வை.கோபாலகிருஷ்ணன்
84. உடம்பெல்லாம் உப்புச் சீடை - வை.கோபாலகிருஷ்ணன்
85. முக்குத்தி - வை.கோபாலகிருஷ்ணன்
86. வடிகால் - வை.கோபாலகிருஷ்ணன்
87. எங்கங்கும் எப்போதும் என்னோடு - வை.கோபாலகிருஷ்ணன்
88. யாதும் ஊரே யாவரும் கேளீர் - வை.கோபாலகிருஷ்ணன்
89. உண்மை சற்றே வெண்மை - வை.கோபாலகிருஷ்ணன்
90. முதிர்ந்த பார்வை - வை.கோபாலகிருஷ்ணன்
91. காலம் மாறிப் போச்சு - வை.கோபாலகிருஷ்ணன்
92. பஜ்ஜீன்னா பஜ்ஜிதான் - வை.கோபாலகிருஷ்ணன்
93. மடிசார் புடவை - வை.கோபாலகிருஷ்ணன்
94. அழைப்பு - வை.கோபாலகிருஷ்ணன்
95. இனி துயரம் இல்லை - வை.கோபாலகிருஷ்ணன்
96. நகரப் பேருந்தில் ஒரு கிழவி - வை.கோபாலகிருஷ்ணன்
97. நன்றே செய், அதுவும் இன்றே செய் - வை.கோபாலகிருஷ்ணன்
98. சூழ்நிலை - வை.கோபாலகிருஷ்ணன்
99. அட்டெண்டர் ஆறுமுகம் - வை.கோபாலகிருஷ்ணன்
100. ஏமாற்றாதே, ஏமாறாதே - வை.கோபாலகிருஷ்ணன்
101. சகுனம் - வை.கோபாலகிருஷ்ணன்
102. அன்னமிட்ட கைகள் - வை.கோபாலகிருஷ்ணன்
103. எலிசபெத் டவர்ஸ் - வை.கோபாலகிருஷ்ணன்
104. பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா - வை.கோபாலகிருஷ்ணன்
105. வந்து விட்டார் வ்.வ.ஸ்ரீ.! புதிய கட்சி ”மூ.பொ.போ.மு.க.” உதயம் - வை.கோபாலகிருஷ்ணன்
106. சுடிதார் வாங்கப் போறேன்! - வை.கோபாலகிருஷ்ணன்
107. சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி] - வை.கோபாலகிருஷ்ணன்
108. வாய் விட்டுச் சிரித்தால் ..... - வை.கோபாலகிருஷ்ணன்
109. மறக்க மனம் கூடுதில்லையே - வை.கோபாலகிருஷ்ணன்
110. ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் - வை.கோபாலகிருஷ்ணன்
111. அமுதைப்பொழியும் நிலவே! - வை.கோபாலகிருஷ்ணன்
112. மலரே குறிஞ்சி மலரே! - வை.கோபாலகிருஷ்ணன்
113. காதலாவது கத்திரிக்காயாவது! - வை.கோபாலகிருஷ்ணன்
114. ஆசை - வை.கோபாலகிருஷ்ணன்
115. பவழம் - வை.கோபாலகிருஷ்ணன்
116. அவன் போட்டக் கணக்கு - வை.கோபாலகிருஷ்ணன்
117. திருமண மலைகளும் மாலைகளும் - வை.கோபாலகிருஷ்ணன்
118. டிஸ்மிஸ் - வை.கோபாலகிருஷ்ணன்
119. யார் முட்டாள்? - வை.கோபாலகிருஷ்ணன்
120. தங்கமே தங்கம் - வை.கோபாலகிருஷ்ணன்
121. வரம் - வை.கோபாலகிருஷ்ணன்
122. கொட்டாவி - வை.கோபாலகிருஷ்ணன்
123. பெயர் சூட்டல் - வை.கோபாலகிருஷ்ணன்
124. பிரமோஷன் - வை.கோபாலகிருஷ்ணன்
125. எட்டாக்க[ன்]னிகள் - வை.கோபாலகிருஷ்ணன்
126. புது வண்டி - வை.கோபாலகிருஷ்ணன்
127. குவியமில்லா ஒரு காட்சிப் பேழை - அழகிய இளவேனில்
128. வசை - அழகிய இளவேனில்
129. தந்தையின் பெருமை - அழகிய இளவேனில்
130. கொடலு - ஆடுமாடு
131. எருமையின் எமன் - விசு
132. உயிர்சங்கிலி - விசு
133. இது வயசுக் கோளாறு!! - சென்னைப் பித்தன்
134. மிச்சம் - சுரேஷ் தனபால்
135. உயிர்த்தெழும் வினாக்குறிகள் - சேட்டைக்காரன்
136. “ஓரடி முன்னே.. ஈரடி பின்னே…! - பகத்சிங்
137. ஞானலோலன் - பிரகாஷ்
138. அன்னதாதா - பிரகாஷ்
139. உள்ளுறங்கும் அரவம் - பிரகாஷ்
140. ரெண்டாங்கல்யாணம் - ஹூசைனம்மா
141. ஒரு குரல் - சின்னப்பயல்
142. கதிர் - என்.உலகநாதன்
143. சாரிங்க, எனக்கு வேற வழி தெரியலை! - என்.உலகநாதன்
144. ரவியின் காதல் கதை - என். உலகநாதன்
145. முனுசாமி சிரித்தான் - என்.உலகநாதன்
146. ராஜன் - என்.உலகநாதன்
147. வீடு - என்.உலகநாதன்
148. அமுதா - என்.உலகநாதன்
149. சேகர் அண்ணா - என்.உலகநாதன்
150. சவால் சிறுகதை -என்.உலகநாதன்
151. வேட்டை - தேவா
152. புவனா - தேவா
153. மழை - தேவா
154. தெரு - தேவா
155. போலாம்... ரைட் - தேவா
156. நான், அவள் மற்றும் மழை - தேவா
157. மஞ்சு - தேவா
158. பேயி இருக்கா இல்லையா? - தேவா
159. கிராமத்தாய்ங்கதான் நாங்க... - தேவா
160. நாச்சியா - தேவா
161. உமா - தேவா
162. அய்யனாரே - தேவா
163. சிலந்திவலை - பழமைபேசி
164. முள்ளிவாய்க்கால் செதுக்கிய முகம் - அமல்ராஜ்
165. மழை - அசோக்குமார்
166. வெள்ளி பூஜை - அமல்ராஜ்
167. ஆணும் பெண்ணும் - மோகன்குமார்
168. நீளும் கனவு - கவின்மலர்
169. அண்ணன் - கவின்மலர்
170. அறைக்குள் புகுந்த தனிமை - சந்திரா
171. தொலைவதுதான் புனிதம் - சந்திரா
172. ஒரு கனவின் கதை - கார்த்திகைப் பாண்டியன்
173. என்னா ஒரு வில்லத்தனம் - கார்த்திகைப் பாண்டியன்
174. மழை விளையாட்டு - கார்த்திகைப் பாண்டியன்
175. கூடு - கார்த்திகைப் பாண்டியன்
176. கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப் பாண்டியன்
177. நில அபகரிப்பு - T.V.ராதாகிருஷ்ணன்
178. கண்மணி,இரவு,மற்றும் மழை - நிலாரசிகன்
179. அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு… - சித்திரைவீதிக்காரன்
180. பால்ய கர்ப்பங்கள் - சுப்புராஜ்
181. யுத்தமும், வாழ்க்கையும் - தமிழ் உதயம்
182. மண்மகள் - சரவணகார்த்திகேயன்
183. மனையடி சரித்திரம் - ஞானசேகர்
184. அங்காடி நாய் - ஞானசேகர்
185. அக்காவின் அண்ணன் - ஞானசேகர்
186. நினைவுகள் சுடுவதில்லை - சே.குமார்
187. ரெங்கநாயகி - சே.குமார்
188. சுமைதாங்கி - சே.குமார்
189. கருத்தப்பசு - சே.குமார்
190. கண்ணாடி சிதறல்கள் - சே.குமார்
191. எண்ணக்கதிர்கள் - நிர்மல்
192. மரணக்குழி - நிர்மல்
193. சாமியின் மறைவு - நிர்மல்
194. ஒரு கதைசொல்லியின் கதை - நிர்மல்
195. சிவப்பு நிறக் கைக்குட்டை - நிர்மல்
196. குண்டு காதல்! - விக்கி தக்காளி
197. செளம்யாவின் காதல்! - விக்கி தக்காளி
198. தந்தைசொல் - மீனாஷி
199. யுக புருஷன் - மீனாஷி
200. மூத்த குடி - மீனாஷி
201. மொக்கராசுவின் கட்டில் - விச்சு
202. பஸ் - லதானந்த்
203. குளுவான் - லதானந்த்
204. கடைசிக்குறிப்பு - லதானந்த்
205. அடிக்காதீங்க அவன் என் மகன் - லதானந்த்
206. நீலப்பசு - லதானந்த்
207. நான்தான் சமையக்காரி அலமேலு! - சென்னைப்பித்தன்
208. வரலாறு மட்டுமல்ல; கணிதமும் முக்கியம் அமைச்சரே! - சுப்புராஜ்
209. வார்த்தைகள் - ஹேமா
210. யயாதியின் மகள் - நிலாமகள்
211. அனுபவி ராஜா அனுபவி - பாலசுப்பிரமணியன்
212. பரமனின் கழுத்தில்... ரங்கனின் படுக்கையில் - ஷக்தி
213. கானல் நீர் - ஹேமா
214. விட்டு விடுதலையாகி - சாகம்பரி
215. மயிலம்பூ - சாகம்பரி
216. மறைபொருள் கண்டுணர்வாய் - சாகம்பரி
217. ஆசுவாசம் - பாலுசத்யா
218. கதை கதையாம் காதலாம் - சில்வியாமேரி
219. சின்னஞ்சிறு சந்தோஷங்கள் - தமிழ் உதயம்
220. பாம்பு புகுந்த காதை - யுவகிருஷ்ணா
221. 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும் - இ.பா.சிந்தன்
222. நான் அவனில்லை - இ.பா.சிந்தன்
223. லோகுவின் ஆசை - சென்னைப்பித்தன்
224. பெருநகர சர்ப்பம் - நிலாரசிகன்
225. அடைக்கலம் - ஷைலஜா
226. சுனைநீர் - ராகவன்
227. முன்னுறை முக்கியம் - விசு
228. அம்பாள் மகள் - கனக தூரிகா
229. குப்பை - கனக தூரிகா
230. மனம் எனும் மாயக்கண்ணாடி - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
231. இரட்டை முகம் - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
232. மது ஏன் அப்படி செய்தாள் - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
233. கனவு தேசம் - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
234. மரப்பாவை - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
235. பட்ட மரம் - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
236. சுடர் ஓளி - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
237. பிள்ளை மனம் - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
238. பாசக் கிறுக்கு - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
239. கரும்புக் காட்டு நாகம் - கே.ஜி.கௌதமன்
240. குருவிக் கூடு - குமரி எஸ். நீலகண்டன்
241. இது மருமக்கள் சாம்ராஜ்யம் - குமரி எஸ். நீலகண்டன்
242. ஈரவலி - குமரி எஸ். நீலகண்டன்
243. சாரங்கனும் சில மீன் குஞ்சுகளும் - குமரி எஸ். நீலகண்டன்
244. ஒரு நாள் ஒருபொழுது - ராமச்சந்திரன் உஷா
245. கலைவாணி(பற்களை சுத்தமாக வைத்துகொள்ளவும்) - பாரதி
246. ஒரு வெள்ளிக்கிழமையின் 25 பைசா - பாரதி
247. குறும்படமும் குவாட்டர் வோட்காவும் - பாரதி
248. அடைக்கலம் - ஷைலஜா
249. வாழ்க்கைப்பாடம் - ஷைலஜா
250. மறு அறிமுகம் - ப.சரவணன்
251. ராதாவின் (40) ராவுகள் - சித்தூர் முருகேசன்
252. வதம் - க.பாலாசி
253. மரம்,செடி,மலை - அதிஷா
254. தேன்மிட்டாய் - அதிஷா
255. அண்டி கிறிஸ்து - ஸ்பெ
256. வணக்கம் வைக்காதே - சீனுவாசன்
257. முடிவுரையிலிருந்து முன்னுரை - ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்
258. ஐகோர்ட் திருகாணி - சுகுமார் ஆனந்தன்
259. இருபாதை ஒரு பயணம் - சுகுமார் ஆனந்தன்
260. ஒரு வீட்ல பேய் - சுகுமார் ஆனந்தன்
261. லஞ்சம் - சுகுமார் ஆனந்தன்
262. லேப்டாப்..லப்...டப் - சுகுமார் ஆனந்தன்
263. என்னமோ நடக்குது - சுகுமார் ஆனந்தன்
264. நூடுல்ஸ் - நம்பிக்கை பாண்டியன்
265. மரணதண்டனை - என்.உலகநாதன்
266. தாமிரபரணித் தண்ணீர் - கோமா
267. இரைச்சலற்ற வீடு - ரா.கிரிதரன்
268. திறப்பு - ரா.கிரிதரன்
269. ஈரம் - ராமலஷ்மி
270. வடம் - ராமலஷ்மி
271. பிடிவாதம் - ராமலஷ்மி
272. தாய் மனசு - ராமலஷ்மி
273. லிஃப்ட் மாமா - ஆர்.வி.எஸ்
274. சொல்லும் கொல்லும் - சுந்தரா
275. வடக்குவீட்டு சாமி - சுந்தரா
276. சாயங்காலங்கள் - ஸ்ரீராம்
277. விடியும் வரை காத்திரு - ஸ்ரீராம்
278. மாம்ப(பா)லம் - ஸ்ரீராம்
278. நாய்மனம் - ஸ்ரீராம்
279. பிற்பகல் - ஸ்ரீராம்
280. பிளேடு - ஸ்ரீராம்
281. மீண்டும் வாழ்வேன் - ஸ்ரீராம்
282. முத்துப்பிள்ளை கிணறு - லஷ்மி சரவணக்குமார்
283. பொம்பள மனசு - வெண்புரவி அருணா
284. கடவுள் இருக்கிறாரா, இல்லையா - ரிஷபன்
285. சிவப்பின் நிறம் பெண்மை - சா.விஜயலட்சுமி
286. ஒரு பயணத்தில் - மாலினி கௌரிசங்கர்
287. கத்தியின்றி... ரத்தமின்றி - அருண் காந்தி
288. அவளுக்கு யாரும் இணையில்லை - அருண்காந்தி
289. சௌந்தரம் கிழவியும் இலந்தை மரமும் - அருண்காந்தி
290. அறந்தாங்கியார் - அருண்காந்தி
291. தேன்மொழி என் காதலி - அருண்காந்தி
292. வரையாடு - அருண்காந்தி
293. பலூன் - சத்யராஜ்குமார்
294. எதுவரை இந்த பயணம் - தமிழ் உதயம்
295. இறந்தவன் - சித்ரன்
296. கருப்பு நிலா - பாண்டியன்
297. உறவு - எப்.நிஹாஸா
298. அவள் அப்படித்தான் - எப்.நிஹாஸா
299. அவள் - கிரகம்
300. தமிழச்சி - கிரகம்
301. ரயில் பயணத்தில் - கிரகம்
302. ஒரு பொய் - செல்வ கணபதி
303. துரும்பிலும் இருப்பான் - ஷைலஜா
304. மேட்டர் - ராஜன்
305. ஒரு கிறிஸ்மஸ் கதை - சிறில் அலெக்ஸ்
306. ஹாஸ்பிடல் - மிடில் கிளாஸ் மாதவி
307. ஃபிஃப்டி- ஃபிஃப்டி - மிடில் கிளாஸ் மாதவி
308. தண்ணி - மிடில் கிளாஸ் மாதவி
309. அங்காடித் தெரு - மிடில் கிளாஸ் மாதவி
310. தம்பிக்கு எந்த ஊரு? - ப. அருண்
311. பெஸ்டம்பர் - ப. அருண்
312. கடவுளே! - ப. அருண்
313. மூன்றாவது ரேங்க் - ப. அருண்
314. மரண மயக்கம் - ப. அருண்
315. தாமரையைக் காணவில்லை - ப. அருண்
316. சாகாவரம் - ப.அருண்
317. அமெரிக்கா - ப.அருண்
318. ஆறுவது சினம் - சீனுவாசன்
319. ‘நா’ வினால் சுட்ட வடு - வை.கோபாலகிருஷ்ணன்
320. தை வெள்ளிக்கிழமை - வை.கோபாலகிருஷ்ணன்
321. ஜாதிப்பூ - வை.கோபாலகிருஷ்ணன்
322. மாமியார் - வை.கோபாலகிருஷ்ணன்
323. மனசுக்குள் மத்தாப்பூ - வை.கோபாலகிருஷ்ணன்
324. குறுக்கு வழி - அபிமன்யு
325. திமிறி எழு! - புதுவைப்பிரபா
326. ஏழையின் செல்வம் - புதுவைப்பிரபா
327. பள்ளிக்கூடம் - புதுவைப்பிரபா
328. அந்நியன் - புதுவைப்பிரபா
329. அறவாழி பிறவாழி - ராதாகிருஷ்ணன்
330. உஷ் .. இது கடவுள்கள் துயிலும் தேசம் - ஜேகே
331. அக்கா எங்கே போனாள்? - ஜேகே
332. அப்பா வருகிறார் - ஜேகே
333. சுந்தர காண்டம் - ஜேகே
334. மயில் - ஷைலஜா
335. கனவு மெய்ப்படும் - புதுவைப்பிரபா
336. இன்னிக்கு நமக்கு நேரமே சரியில்லை - ரஹிம் கசாலி
337. அட்சயதிரிதியை அன்று நகை வாங்கினால் யாருக்கு நல்லது - ரஹிம் கசாலி
338. அம்மா என்றொரு பெண் - ஹேமா
339. ஆதி தாழம் - லதாமகன்
340. நிழற்பெருவெளி - லதாமகன்
341. நல்லதோர் வீணை - லதாமகன்
342. கேமிராவிலிருந்து - லதாமகன்
343. கல்தூண் - லதாமகன்
344. நேர்த்திக்கடன் - செல்வக்குமார்
345. மத்தாப்பூ - சங்கீதா
346. காலத்தின் கேடு - விஜயசங்கர்
347. குழியைத் தூக்கி கிணற்றுக்குள் வீசிய செல்வா - ப.செல்வக்குமார்
348. நிழலின் கதை - ப.செல்வக்குமார்
349. ஆடி வெள்ளியும் கோழி முட்டையும் - ப.செல்வக்குமார்
350. மிமிகிரி - ப.செல்வக்குமார்
351. காயம் - ப.செல்வக்குமார்
352. ராங் நம்பர் - ப.செல்வக்குமார்
353. மீன் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதா - ப.செல்வக்குமார்
354. நிலவுக்கு ஒரு பயணம் - ப.செல்வக்குமார்
355. தெரிந்த வேலை - ப.செல்வக்குமார்
356. எதிர்வினை - நம்பிக்கை பாண்டியன்
357. அசரீரி - ஸ்ரீதர் நாராயணன்
358. நிராகரித்தல் - ஸ்ரீதர் நாராயணன்
359. மெமரி ப்ளஸ் - ஸ்ரீதர் நாராயணன்
360. அஞ்சு பொண்டாட்டி ரங்கசாமி - ஸ்ரீதர் நாராயணன்
361. வெண்டிங் மெஷின் - ஸ்ரீதர் நாராயணன்
362. விக்ரோம் - ஸ்ரீதர் நாராயணன்
363. அங்கார...இங்கார.... - “ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி
364. ஸார் வாள்!!! - “ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி
365. பாலகிருஷ்ணன் வீடு - “ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி
366. காலாவதியான தாய் - ஜி.பிரபாகரன்
367. காதல் கண்ணாடி - ஜி.பிரபாகரன்
368. பரதேசியும் ஒரு தேசியும் - ஜி.பிரபாகரன்
369. இதுவும் கடந்து போகும் - சூர்யஜீவா
370. பகல் வீடு - ருஃபினா ராஜ்குமார்
371. தர்ப்பை - ரா.கிரிதரன்
372. உயிரைச் சுமக்கும் காற்று - பொன்ராஜ்
373. மொழி - கதிரவன்
அன்புச் சகோதரி ஆஜர்!
“நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்”
”பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நீங்கள் எவ்வாறு தொடர்ச்சியாக விலக்குக் கோர முடியும். பொதுமக்களிடமிருந்து விலகியிருக்க நீங்கள் விரும்புவது ஏன்?”
"விசாரணை நடைபெறும் இடத்தை விமான நிலையத்திற்கு அருகில் மாற்ற வேண்டும்”
“நீங்கள் இதற்கு மேல் என்ன எதிர் பார்க்கிறீர்கள். ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் விசாரணை முடிந்தவுடன் வீட்டிற்குச் சென்றுவிடப் போகிறீர்கள்”
“கர்நாடக மாநில அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை”
“தயவுசெய்து காரியப் பொருத்தத்தோடு நடந்துகொள்ளுங்கள். பாதுகாப்பு குறித்த கவலை எங்களுக்கும் உண்டு. உச்சநீதிமன்றம் இது தொடர்பாக உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே எந்தவித பயமும் தேவையில்லை”
இப்படி நீண்ட கதையில் ஒருவழியாக அன்புச்சகோதரி இன்று ஆஜராகிறாராம். இங்கே குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரின் பொய்களும், சால்ஜாப்புகளும்தான் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாய் இருக்கின்றன. நாடறிந்த இந்த ‘உயர் மக்களுக்குத்தான்’ எத்தனை சலுகைகள், எவ்வளவு உரிமைகள்! கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
வாழ்க ஜனநாயகம், வாழ்க சமத்துவம், வாழ்க சுதந்திரம்!
ஓட்டுத் தொல்லை
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இங்கு ஒருத்தர் படுத்துகிற பாடு தாங்க முடியவில்லை. பைக்கில் அவசரமாகச் சென்று கொண்டு இருக்கும்போது நேர் எதிரே மறித்தபடி வந்து சிரிப்பார். “என்ன சார் ஆபிஸுக்கா” அல்லது “எங்க பஜாருக்கா” என்று அக்கறை மிகுந்த ஞானத்தோடு கேட்பார். வேறு வழியே இல்லாமல் ஒப்புக்கு சிரித்தபடி வேகம் குறைத்து நின்றேயாக வேண்டும். அல்லது அவர் மீது வண்டியை ஏற்றியாக வேண்டும்.
“அப்புறம் சார்” என்று மேலும் கீழுமாக பார்ப்பார். நானும் விழிப்பேன். “சார் ஓட்டு நமக்குத்தான்” என்று அருகில் இருக்கும் இரண்டு மூன்று பேரிடம் சொல்லிக்கொள்வார். “அட அசடே, வழியை விடேன்” என்று சொல்ல முடியாமல் நானும் சிரிப்பேன். பொல்லாத நாகரீகம்! ரொம்ப என்னைத் தெரிந்த மாதிரி, “சார் கம்யூனிஸ்ட் கட்சி தெரியும்ல” என்றும் சொல்லி அவரே சிரித்துக்கொள்வார். மற்றவர்களும் ‘அப்படியா’ என்பது போல பார்ப்பார்கள். எந்த அளவும் மாறாமல் அதே பாவனைகள். நான் சிரிக்க மாட்டேன். முகபாவம் பிடிபட்டுவிடும் போல. “சார் ரொம்ப பிஸியான ஆள். தொந்தரவு செய்யக் கூடாது” என்று சொல்லிக்கொள்வார். நான் அதற்கும் சிரிக்க மாட்டேன். திரும்பவும் சிரித்துக்கொள்வார் அவராகவே. நிதானமாக என்னை உற்றுப் பார்த்து “சார், நம்ம சின்னம் தெரியும்ல?” என்று ஒரு கேள்வியை கேட்பார். அந்த கருமாந்திரம் நினைவுக்கும் வந்து தொலையாது. “தெரியும்” என்று சொல்லி நழுவப் பார்ப்பேன். பைக்கில் கையை வைத்துக்கொண்டு “பாத்தீங்களா, மறந்துட்டீங்க” என்பார். பேண்ட்டின் கால்ச்சட்டைக்குள் கையை விட்டு பிளாஸ்டிக்கில் செய்த ஒரு சாவியைத் தந்து “ இனும மறக்கக்கூடாது” என்பார். சரியென்ற பிறகே வழிவிடுவார்.
இது போதாது என்று வீட்டுக்கும் தினந்தோறும் சாயங்காலம் வந்துவிடுவார். “சார் மேலே நீங்க விரும்புற எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுங்க. நா அதுக்கு வரல்ல. கீழ வார்டுக்கு மட்டும் எனக்குப் போட்டுருங்க” என்பார். சிரிப்பேன். “என்ன சார் சிரிக்கிறீங்க. நான் மாஸ்டர் டிகிரி படிச்சிருக்கேன். கை நிறைய சம்பாதிக்கேன். எனக்கு இது தேவையில்ல. ஆனாலும் நிக்கிறேன். எதாவது நம்ம வார்டு மக்களுக்குச் செய்யணும்னு பாக்குறேன். இங்க சாக்கடை வசதியில்ல. இந்தப் பகுதிக்கு விளையாட்டரங்கம் இல்ல. ஒரு ருபாய்க்கு ஒரு குடம் மினரல் வாட்டர் ஏற்பாடு செய்ய முடியல. இப்படி நிறைய இருக்கு. எவனுக்கும் துப்பில்ல. அதுக்குத்தான் நாந் துணிஞ்சிட்டேன். சுயேச்சையாய் நின்னு நம்மால முடிஞ்சத செய்வோம்னு நிக்கிறேன். அரசியல்வாதிங்கள நம்பி ஏமாந்தது போதும். எனக்கு ஒட்டுப் போடுங்க” என்று அதே வசனங்களை முன்னே பின்னே மாறாமல் சொல்வார். தாங்கொண்ணா சிரிப்பும், எரிச்சலும் வரும். சரி, சரியென்று தலையாட்டி அனுப்பி வைப்பேன்.
நேற்று அந்த பார்ட்டி, புதிய உத்தியொன்றை கண்டுபிடித்துவிட்டார். சுவரில்தானே சின்னங்களை வரையக் கூடாது, போஸ்டர் ஓட்டக் கூடாது எனத் தடையிருக்கிறது என்பதை யோசித்து தனது மாஸ்டர் டிகிரி அறிவால் ஒரு மாஸ்டர் பிளான் தயாரித்துவிட்டார். ஐந்தாறு சின்னப் பையன்களை பிடித்து அவர்களுக்கு காசு கொடுத்து, இந்தப் பகுதியில் இருக்கும் மரத்தின் இலை, கிளைகளிலெல்லாம் சாவி சின்னப் போஸ்டர்களைக் குத்த வைத்துவிட்டார். அந்தப் புதுமையில் அவரே புளகாங்கிதம் அடைந்து, கிட்டத்தட்ட ஜெயித்தே விட்ட மாதிரி ரவுண்ட் வந்தார். வெறும் இடியும், மின்னலாய் கலையும் வானம் நேற்று உண்மையிலேயே பொங்கி எழுந்துவிட்டது. அடித்த மழையில் எல்லாப் போஸ்டர்களும் தெரு வழியே ஓடிக்கொண்டு இருந்தன. பார்த்துப் பார்த்து சிரித்துக் கொண்டேன். ‘மழையைப் போற்றுதூஉம், மழையைப் போற்றுதூஉம்!’
இன்று காலையில் அவரைப் பார்த்தேன். வழக்கம் போல் வழியை மறித்துக் கொண்டார். கடுப்பேற்ற வேண்டும் போலிருந்தது. “என்ன சார் ஒங்க போஸ்டரை எல்லாம் நேத்து மழையடிச்சுப் போயிட்டோ?’ எனக் கேட்டேன். “ஆமா சார். அப்படியாவது மழை பெஞ்சுதே” என சிரித்தார். “நம்மால எதாவது நல்லது நடந்தா சரிதான்” என்று சொல்லிக்கொண்டே என்னைப் பார்த்து, “அப்புறம் சார்...” என மேலும் கீழும் பார்த்தார்.
வெயிலோடு விளையாடி......
மருத்துவரைப் பார்க்க வந்திருந்த அந்த இளம் பெண் எப்போதும் சோர்வும், உடல் வலியும் இருப்பதற்கு எந்த சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை என்று தனது பிரச்சனையை எடுத்துச் சொன்னார். வழக்கமான கேள்விகள், பதில்கள்.. கடந்து போய்க் கொண்டிருந்த நேரத்தில் ஒரு கட்டத்தில் மருத்துவர் கேட்டிருக்கிறார்: உடற்பயிற்சி எதுவும் கொஞ்ச நேரமாவது செய்வதுண்டா....?
சரியாய்ப் போச்சு, காலையில் ஆறு மணிக்கு வேலைக்குப் புறப்பட்டா, இராத்திரி பத்து மணிக்கு வந்து அடைய வேண்டியிருக்கு வீட்டுக்குள்ள, இதில் எங்கே சார் உடற்பயிற்சி, கடல் பயிற்சி என்று அலுப்போடு பதில் வந்திருக்கிறது. கிட்டத் தட்ட நழுவிப் போயிருக்க வேண்டிய ஒரு பொறி சட்டென்று தட்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு பரிசோதனையை செய்துவருமாறு எழுதிக் கொடுத்திருக்கிறார். அதன் முடிவு தெரிந்தபோது, மருத்துவர் பார்த்த கோணம் சரி என்றானது. அந்தப் பெண்ணுக்கு வைட்டமின் D சத்து குறைவு. அதனால் தான் பல வேறு பிரச்சனைகள் தீர்க்க முடியாமல் ஆகிக் கொண்டிருந்தது. அது சரி, வைட்டமின் D குறைவாக இருக்கக் கூடும் என்ற சிந்தனை மருத்துவருக்கு எதனால், எப்போது ஏற்பட்டது?
காலை விடியலின்போது வீட்டைவிட்டுப் புறப்படுபவர் இரவு நேரத்தில் தான் திரும்புகிறார் என்றால் நேரடி சூரிய வெளிச்சமே அவர் மீது பட்டிருக்க வாய்ப்பில்லையே என்று யோசித்திருக்கிறார். நேரடியாக கதிரவனின் கதிர்கள் மூலம் மட்டுமே உடலுக்கு இலகுவாக வாய்க்கக் கூடிய வைட்டமின் D சத்து இந்த இளம் பெண்ணுக்கு கிடைக்காமலே போய்க் கொண்டிருப்பதன் பிரதிபலிப்பை உடல் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. உணர்ந்து தேடுபவர்களுக்கு பிடிபடும் தடயம் அது. இதற்குப் பிறகு இந்த மருத்துவர் வேறு சில நோயாளிகளுக்கும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இதே போலவே D வைட்டமின் பரிசோதனை எடுக்கச் சொல்லி இருக்கிறார். அதிர்ச்சியான விஷயம் ஐம்பது பேரை எடுக்கச் சொன்னதில், இரண்டு பேருக்கு மட்டுமே இந்தச் சத்து உரிய விகிதத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது.
அந்த இளம் பெண்ணுக்கு மருந்துகளோடு முக்கிய அறிவுரையாக மருத்துவர் சொன்னது, கொஞ்சம் வெயில் படுமாறு அன்றாட வாழ்க்கை அட்டவணையில் மாற்றம் செய்யவேண்டும் என்பது. அதிகம் வெயிலில் சுற்றாதே, வேகாத வெயிலில் ஏன் வந்தே, யப்பா மண்டையப் பொளக்குது வெயிலு...என்று நாம் பேச நேரும் இந்த வெயிலில் உடல் தனது முக்கியமான தேவையைப் பெற்றுக் கொள்கிறது என்பது தான் இப்போது நாம் விவாதிக்க இருப்பது.(கைம்மாறு எதுவும் எதிர்பாராது, சூரியன் வழங்கும் இலவச வைட்டமின் D திட்டம் இது!).
தோல் சேகரிக்கும் வைட்டமின் Dயை கல்லீரல் உரிய முறையில் உடலுக்குத் தேவையான சத்தாக மாற்றிக் கொடுக்கிறது. நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் கால்சிய சத்து, எலும்புகளுக்குப் போய்ச் சேர வைட்டமின் D பங்களிப்பு முக்கியமானது. வைட்டமின் D பற்றாக்குறை இருக்கும்போது நாம் எவ்வளவு கால்சியம் சேர்த்துக் கொண்டாலும், கால்சியம் மாத்திரைகளாகவே உட்கொண்டாலும் அதை உடல் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பது இயற்கையின் நுட்பமான அம்சம்!
அதிக வெயில் மறுக்கப்பட்டிருக்கும் குளிர் நாடுகளில் வைட்டமின் D சத்து உணவோடு சேர்த்து (Food Supplements) சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. நம்மூரில் இதெல்லாம் கிடையாது.(அதற்கும் இப்போது ஒரு லாபவெறி வர்த்தகக் கும்பல் புறப்பட்டிருப்பது இந்தக் கட்டுரை எழுதும் அன்று ஒரு பத்திரிகைச் செய்தியில் தெரியவந்தது...இந்தியாவிலும் பால், வெண்ணை, மாவு ஆகியவற்றில் வைட்டமின் D சத்து கலந்து சிறப்புவகை உணவுப் பொருள்கள் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறார்களாம். தற்போது ஆயிரம் குழந்தைகளுக்கு அந்தச் சிறப்பு பால் கொடுத்து சோதனை செய்து கொண்டிருக்கிறார்களாம். இதன் பக்க விளைவுகள் பற்றியோ, வெயில் தேசத்தில் இத்தகைய சோதனைகளுக்கெல்லாம் என்ன தேவை என்பது குறித்தோ யாரும் கவலை கொள்வதில்லை. பல ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்து தவறு என்று சொல்வதற்குள் எத்தனை சேதம் நடந்து முடிந்துவிடும் என்பதை இப்போதே எச்சரிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது).
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி என்று 'கர்ணன்' போலவே நாமும், 'ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயான' பகலவன் உதவியை நன்றியோடு பெற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவர்களுக்குப் பார்வை நேரம் இருப்பது போல் பகலவனின் 'பார்வை நேரம்' நமக்குத் தேவையான சத்து கிடைக்க தோதான நேரம், பத்து மணி முதல் மூன்று வரை என்று எடுத்துக் கொள்ளலாம். நல்ல வெயில் நேரம் என்று நீங்கள் முணுமுணுத்துக் கொள்வது கேட்கிறது. உடலின் கால் பாகமாவது கதிரவன் பார்வைக்குப் படும்படி அரை மணி முதல் ஒரு மணி நேரம் வாரத்துக்கு மூன்று நாளாவது இந்தச் சத்தை நாம் சேகரித்துக் கொள்வது நல்லது. ஆனால் நடைமுறையில் நடப்பது என்ன?
கொஞ்சம் நமது உடைகளையும், நமது அன்றாட வாழ்நாள் கடந்து போகும் தன்மையையும் ஒரு சேர யோசித்துப் பாருங்கள். இறுக்கமான நமது உள்ளங்களைப் போலவே நமது உடைகளும் அமைந்துவிடுகின்றன. இலேசில் இளகாத வாழ்க்கை நமது வாழ்க்கை. போதாததற்கு வெயிலில் போனால் கறுத்துவிடுவோம் என்ற அச்சம் வேறு நமக்கு. தப்பித் தவறி, நமது முயற்சிகளையும் மீறி வெயில் பட்டுவிடுகிற முகத்தின் மீதும் நாம் பாதுகாப்பு (யாருக்கு?) கிரீம் வகையறாக்களை தடவி வைத்துக் கொள்கிறோம்...இதை எல்லாம் கொஞ்சம் 'மறுவாசிப்பு' செய்வது நமக்கு நல்லது.
இயற்கையின் வினோதம் பாருங்கள். தோல் வெளுப்பாக இருந்தால் விரைவாக வைட்டமின் D சத்தை சூரிய ஒளியிலிருந்து எடுத்துக் கொண்டுவிடுமாம். கறுப்புத் தோல் இருப்போர் கொஞ்சம் அதிக நேரம் வெயிலில் அலைந்தால் தான் தேவையான சத்தை உறிஞ்சிக் கொள்ள முடியுமாம். இப்படி தேவையான அளவு இந்த குறிப்பிட்ட வைட்டமின் சத்து இல்லாவிட்டால் தான் என்ன என்கிறீர்களா? தலை முதல் கால் வரை எத்தனையோ வித நோய்கள் வராது தடுக்கவும், அப்படியே வந்துவிட்டால் அந்த நோய்கள் தீவிரம் அடையாமல் மட்டுப்படுத்தவும் வைட்டமின் D சீருடை அணியாத பாதுகாவலராக இருந்து செயல்படுகிறார். அது மட்டுமல்ல, ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ஹார்மோன் வளத்தைப் பெருக்கி (Fertility Improvement) குழந்தைப்பேறு இனிதே அமையவும் உதவுகிறது வைட்டமின் D.
வெயிலை வெள்ளை ஆடையாக வருணித்த நற்றிணைப் பாடலில் இன்னொரு சுவாரசியமான செய்தியும் வருகிறது. தலைவனைப் பார்த்து, தோழி கூறுகிறாள்: 'நீ தலைவியைப் பிரிந்தால், பசலை நோய் அவளது அழகைத் தின்றுவிடும்..' வைட்டமின் D குறைந்தால் உடல் வெளிறி இரத்த சோகை ஏற்பட்டால் வரும் பசலை நோய் போல் ஆகிவிடும். அதாவது சூரிய ஒளி மறுக்கப்பட்ட இலைகள் வெளிறிப் போவது போல் வாடிவிடுகிறது உடல்.
உளச் சோர்வு, மனப் பிறழ்வு, நுரையீரல் நோய்கள், அடிக்கடி சளி, தொண்டை அழற்சி, ஈரல் பாதிப்புகள், ஓயாத உடல் வலி, எலும்பு தேய்தல், ரிக்கட்ஸ் நோய் (இதைத் தான் தொடக்கப் பள்ளியிலே கற்றுக் கொடுத்திருக்காங்களே..)...என நீளும் இந்தப் பட்டியல் வைட்டமின் D இல்லாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகளைப் பேசுகிறது. வியப்புக்குரிய இன்னொரு செய்தியையும் காதில் போட்டுக் கொள்ளுங்கள். புற்று நோய் வராது தற்காத்துக் கொள்ளவும், புற்று நோய் இருப்போர்க்கு தீவிரமாகாது கட்டுப்படுத்தவும் கூட வைட்டமின் D அரிய சேவை ஆற்றுகிறது. கொஞ்சம் யோசியுங்கள், செயற்கை கிரீம் வகையாறக்கள் வைட்டமின் D கிடைப்பதையும் கெடுத்து, அவற்றின் பக்க விளைவுகளால் நோய்கள் ஏற்படவும் (புற்று நோய் உள்பட!) காரணம் ஆகின்றன என்று ஆய்வுகள் சொல்லும்போது நமது வாழ்க்கை முறையை இயற்கையோடு ஒத்திசைவாய் மாற்றுவோமே..
இப்போது சொல்லுங்கள், இனி ரயிலிலோ, பேருந்திலோ வெயில் அடிக்கும் இருக்கையைத் தவிர்க்க விரும்புவீர்களா, அடித்துப் பிடித்துப் போய் உட்கார துடிப்பீர்களா! முழுவதுமாகக் குளிர் சாதன வசதி செயயப்பட்ட பள்ளிக்கூடம் தேடிக் குழந்தைகளைச் சேர்ப்பீர்களா, வெயிலோடு போய் விளையாட்டு மைதானம் முக்கியம் என்று முடிவெடுப்பீர்களா? நாற்பது வயதுக்குமேல் உடல் நல பிரச்சனைகளுக்கு யார் தீர்வு கொடுப்பார்கள் என்று தடுமாறிக் கொண்டிருப்பீர்களா, காலா காலத்தில் தேவையான சத்துக்களை முன் கூட்டியே சேகரித்துக் கொள்வீர்களா? வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்து நோய் நொடிகளை முற்ற வைத்துக் கொள்வோமா, வாசல் திறந்து வெளி உலகக் காற்றையும், கதிரையும் பருகி வியாதியிலிருந்து விடுதலை தேடுவோமா?
இனி, கால் கடுக்க யாராவது அலுவலகத்திற்கு வெளியிலோ, வகுப்பறைக்கு வெளியிலோ நிற்க நேரும்போது, வைட்டமின் D சேகரித்துக் கொள்ளத்தான் இங்கே நிற்கிறேன் என்று சொல்லி சமாளித்துக் கொள்ளலாம். தேர்தலில் அலைந்து வாக்கு கேட்டும் தோல்வியைத் தழுவ நேர்ந்த வேட்பாளரிடம், அட விடுங்க 'வசூல்' (நாம் குறிப்பிடுவது வைட்டமின் D வசூல்) தான் தேத்திக்கிட்டோம்ல....அப்புறம் பார்த்துக்கலாம்..என்று சமாதானம் சொல்லலாம்.
மருத்துவர் பரிசோதனை செய்யச் சொன்ன ஐம்பது பேரில் இரண்டு பேருக்குத் தான் வைட்டமின் D போதுமானதாக இருந்தது என்று பார்த்தோம் அல்லவா.. குறைவாக இருந்தவர்களில் பள்ளி மாணவர்கள், மாலை நேரத்தில் மட்டும் பயிற்சி செய்யும் ஒரு கால் பந்து வீரர் எல்லோரும் இருந்தனராம். அது தான் நல்ல வெயில் நேரத்தைப் பயனபடுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வது. உரிய தேவைக்கான வைட்டமின் பெற்றிருந்த அந்த இரண்டு பேர் யார் என்று கேட்கிறீர்களா...ஒருவர் 83 வயது பாட்டி. இன்னொருவர் 55 வயது ஆண் ! பாட்டி வீட்டைச் சுற்றித் தோட்டம் போட்டு வேளை தவறாமல் பராமரிப்பவராம். அடுத்தவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்- வீதி வீதியாய் வசூலுக்கு அலைபவர். இதுதான் பெரிசு இரண்டுக்கும் வைட்டமின் சத்துக் குறைவு என்ற பேச்சே எழவில்லை.
மண்டை வெடிக்கும் வரை, சன் ஸ்ட்ரோக் வரும் வரை வெயிலில் அலைய வேண்டாம், நியாயம் தான், ஆனால் வெயில் படாத திருமேனி என்ற பட்டம் நமக்கு எதற்கு?
வைட்டமின் D பயன்பாடு பற்றிப் பேசும்போது கல்லீரலும், சிறுநீரகமும் கூட செயல் திறனுள்ளதாக இருந்தால் தான், அது முழுமையாகப் பயன்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த இரண்டின் நலன் காப்பது உடல் நலனைக் காப்பதில் முக்கிய இடம் பெறுகிறது.
குயில் பாட்டின் வசீகர வரிகளில் ஒன்றில், மகாகவி பாரதி, கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலே பண் கூத்து என்னும் இவற்றின் சாரமெல்லாம் ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான் கலந்து காதல் வெயிலில் காய வைத்த கட்டியினால் காதலியின் மேனியைச் செய்தான் பிரமன் என்பதாக எழுதியிருப்பார். வெயிலின் உருக்கம் காதலில் கொப்பளிப்பதைப் பார்த்தீர்களா..காதல் வெயில் ஒரு புறம் இருக்கட்டும், வெயிலின் மீது காதல் கொள்வோமாக.
(மருத்துவர் பி வி வெங்கட்ராமன், M .D (ஓமியோபதி)
அவர்களது ஆலோசனைக் குறிப்புகளிலிருந்து எஸ்.வி.வேணுகோபாலன்)
பா.ஜ.கவுக்கு நெஞ்சுவலி!
எதிர்பார்த்தது போல எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. ஆனால் அதைப் பற்றிய செய்தி அல்ல இது
.
ஊழலை எதிர்த்து பா.ஜ.க பிதாமகர் அத்வானி ஊரெல்லாம் ரதயாத்திரை செய்துகொண்டு இருக்கும்போது இப்படியொரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது. தென்னிந்தியாவில் இந்துத்துவாவின் முதல் முதலமச்சர் என பீற்றிக்கொண்டதையெல்லாம் இனிச் சொல்லி மார்தட்டிக் கொள்ள முடியாது. அவர்களது எடியூரப்பா நேற்று நிலமோசடி வழக்கில் சிக்கி ஊழல் குற்றச்சாட்டில் சிறையலடைக்கப்பட்டு இருக்கிறார். “:பாரத் மாதா கீ ஜெய்!” பாரத மாதாவின் நிலம் தானே அவர் மோசடி செய்ததும்.
“அத்வானியின் பிரச்சாரத்தை சீர்குலைக்க காங்கிரஸ் செய்யும் சதி” என ஒப்புக்கு சில குரல்கள் கேட்கின்றன. கடந்த ஒரு வருடமாக அம்பலப்பட்டு , நாறிப் போன விவகாரம் இது. சுஷ்மா சுவராஜிலிருந்து பல தலைவர்கள் வந்து சமாதானம் செய்து, இந்த ஊழலை மூடி மறைக்க மாறி மாறி செய்த ஜனநாயக அசிங்கங்கள் யாவையும் மக்கள் விலாவாரியாக பார்த்து இருக்கின்றனர். திடுக்கிடும்படியாக சொல்ல எந்தச் செய்தியும் கைவசம் இல்லையென்று அரசியலில் பழுத்த பழமான அத்வானிக்கு நன்றாகத் தெரியும்.
ஏற்கனவே தங்கள் கட்சியில் ஊழல் செய்தவர்களின் லிஸ்ட்டையெல்லாம், இந்த யாத்திரைப் புழுதியில் மறைத்துவிடலாம் என கங்கணம் கட்டியவர் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் எடியூரப்பா. காங்கிரஸின் ஊழலையெல்லாம் பட்டியலிட்டு, தாங்கள் உத்தமர்கள் என காட்டிக்கொள்ள முயன்ற அத்வானியின் தகிடுதித்தம் இனி பலிக்காது. பிரதமர் பதவிக்காக அவர் நடத்திய அசுவமேதயாகத்தில் குதிரையின் கால் ஒடிந்துவிட்டது.
காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கும் பொருளாதாரக் கொள்கைகளில் எந்த வித்தியாசமும் கிடையாது. ஒருநாள் செலவுக்கு 32 ருபாய் வைத்திருந்தால், அவர் வறுமைக்கோட்டைத் தாண்டி விட்டார் என அளவுகோலிட்ட அலுவாலியாதான் காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கும் கைகாட்டி. அந்த ஏகாதிபத்திய ஏஜண்டை, முதலாளிகளின் உற்ற நண்பனை இரண்டு கட்சிகளுமே பகைத்துக்கொள்ள மாட்டார்கள். இதுதான் முதாளித்துவ அமைப்பின் மையப்புள்ளி. இந்திய ஜனநாயகத்தின் ஊற்றுக்கண்.
‘காங்கிரஸ் ரொம்பவே அம்பலப்பட்டுவிட்டது. அதனை இப்போதைக்கு காப்பாற்ற முடியாது” என முடிவுக்கு வந்துதான் ‘ஊழல்’ என்னும் அஜண்டாவை இந்திய முதலாளித்துவம் தயார் செய்தது. ஊழல் ஒழிப்புதான் நாட்டின் சர்வரோக நிவாரணி என அன்னா ஹசாரேக்கள் மூலம் பிரச்சாரம் செய்தது. அதற்கான விளம்பரம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது ஊடகங்கள் மூலம். மேலும் வரும் ஐந்தாண்டிற்கு தங்கள் கதையை அவர்கள் வளமாக ஓட்ட வேண்டும்.
காங்கிரஸ் இல்லையென்றால், இந்திய முதலாளிகள் ஆட்சி அதிகாரத்துக்கான மாற்றாக தங்களையே முன்னிறுத்த வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் ஆசை.. அதற்காக சகல குட்டிக்கரணங்களையும் அடித்து பார்க்கிறார்கள். அத்வானியின் ரத யாத்திரை, மோடியின் உண்ணாவிரதம் எல்லாம் அந்த வேண்டுதலின் பொருட்டுத்தான். இவை யாவுக்கும் சேர்த்துத்தான் வேட்டு வைத்திருக்கிறார் எடியூரப்பா இப்போது.
பா.ஜ.கவுக்கு வந்திருக்கும் நெஞ்சுவலியைப் பற்றிய செய்தியே இது.
போட்டோ: சிக்னல், டிராபிக் ஜாம் எல்லாம் அவைகளுக்கு இல்லை!
இந்தக் காட்சி உங்களை என்ன செய்கிறது, உங்களுக்கு என்ன சொல்லத் தோன்றுகிறது?
இன்று வந்த வண்ணக்கதிர் பத்திரிகையின் பின்பக்க அட்டையில் வந்த படம் இது. காமிராவில் பதிவு செய்தவர் பிரகாஷ். இயந்திர இரைச்சல்கள் நடுவே, பறவைகளின் சத்தங்களை கேட்க முடிந்த அவருக்கு வாழ்த்துக்கள்.
அன்னா ஹசாரே : காவிக்குதிருக்குள் கதர் குல்லா
(நண்பரின் போட்டோஷாப் உருவகம் இது)
ஊழலை ஒழிக்கப் போகிறேன் பேர்வழி என்று கதர்குல்லாவோடு கிளம்பியவர், இப்போது காங்கிரஸை ஒழித்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். ஹரியானாவில் இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார் காந்தியவாதியான அன்னா ஹசாரே. அங்கு காங்கிரஸ் தோற்றால் ஜெயிக்கபோவது பா.ஜ.க. ஆக, அவர் யாருக்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கிறார் என்பதைச் சொல்ல ஒன்றும் மெனக்கெட வேண்டியதில்லை இங்கு. ஊழல் செய்வதில், மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகளில் காங்கிரஸுக்கும் பா.ஜ.கவுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருந்தால், இரண்டு கட்சிகளுக்கும் எதிராக போர்க்கோலம் பூண்டிருக்க வேண்டியதுதானே?
இப்படி அன்னா ஹசாரேவின் அரசியலும், சித்தாந்தங்களும் ஒவ்வொன்றாக வெளிப்படும் காலம் இது.
ஊழலை ஒழிப்பதில் இவரோடு கூடவே இருந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து ஒரு கருத்தைச் சொல்லிவிட்டார். காஷ்மீர் மக்களிடையே பொது வாக்களிப்பு நடத்தி, காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துவிட்டார். அவ்வளவுதான், கருத்து சுதந்திரத்தை எப்போதுமே மதிக்காத சங்பரிவாரம் உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் பூஷணை தாக்கிவிட்டனர். எல்லோரும் அந்த காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்துக் கொண்டிருக்கும் வேளையில், அன்னா ஹசாரே, “இது அவருடைய சொந்தக் கருத்து, எங்களை கலந்தாலோசிக்கவில்லை” என நேற்றுவரை தன் கூட இருந்தவரை சட்டென்று கழற்றி விட்டிருக்கிறார். அத்தோடு நில்லாமல், “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இனியும் அப்படியே இருக்கும்.அதற்காக நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம். நான் உயிரையும் விடுவேன். காஷ்மீர் குறித்து பூஷண் தெரிவித்த கருத்துக்காக அவர் எங்களது குழுவிலிருந்து நீக்கப்படுவாரா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்” என தனது கருத்தையும் வெளியிட்டு இருக்கிறார். அகண்ட பாரதம் பேசும் வெறிபிடித்த ஒரு வலதுசாரியின் குரலும் தொனியும் அப்படியே ஒலிக்கிறது இந்த இடத்தில்.
அன்னா ஹசாரேவா அல்லது அண்ணா ஹசாரேவா என்று நண்பர் ஒருவர் அந்தப் பெயரை தமிழில் எப்படி எழுதவேண்டும் என விளக்கியிருந்தார். ஆனால், வரலாற்றில் அந்தப் பெயரை எப்படி எழுத வேண்டும் என்பது தெளிவாகிவிட்டது.
‘ரவுடிகள்’தாம் ‘பொதுமக்களாக’ மாறிவிட்டனர்!
"ரவுடிகளின் நண்பனாக இருந்த காவல்துறை இப்போது பொதுமக்களின் நண்பனாக மாறிவிட்டது”
எல்லாம் தன்னால்தான் நிகழ்கிறது என்று திருவாய் மலரும் ஜெயலலிதா தற்போது உதிர்த்த முத்துக்களில் ஒன்று இது. தனது நான்கு மாத ஆட்சியின் மகிமையாக இதனை அம்மையார் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
கருணை மிக்க அம்மையாரின் ஆட்சியில் மனம் மாறிய இந்த மைந்தர்கள்தான் பரமக்குடியில் ஆறு தலித் மக்களைச் சுட்டுக் கொன்றவர்கள். இதே இவர்கள் ‘ரவுடிகளின் நண்பர்களாக’ இருந்தபோது திருநேல்வேலியில், தாமிரபரணியாற்றங்கரையில் தலித் மக்களை கொன்று குவித்திருந்தார்கள்.
அப்போதும் போராடும் இளைஞர்களை அடித்தார்கள். இப்போதும் அடித்துவிட்டார்கள். இன்னும் தொழிலாளர்கள், மாணவர்கள், வக்கீல்கள் என அடிப்பதற்கு ஐந்தாண்டில் காலங்கள் இருக்கவே இருக்கின்றன.
காக்கிச்சட்டை மாறவில்லை. சல்யூட் மாறவில்லை. லத்தி மாறவில்லை. துப்பாக்கி மாறவில்லை. ஆட்சியும் மாறவில்லை. பேயும், பிசாசும் மாறவில்லை.
‘ரவுடிகள்’தாம் ‘பொதுமக்களாக’ மாறிவிட்டனர்!
தமிழ் இலக்கிய உலகம்தான் அவருக்குக் கடன்பட்டிருக்கிறது!
எழுத்தாளர் கோணங்கி குறித்து எழுத்தாளர் பவா எழுதிய பதிவை கடுமையாக விமர்சனம் செய்து ஸ்ரீரசா என்னும் நண்பர் பின்னூட்டமிட்டு இருந்தார். “ ஊராரின் உழைப்பையெல்லாம் எழுத்தின் பெயராலும், ஊர்சுற்றி என்கிற உன்னதப் பெயராலும் உறிஞ்சி வாழும் அட்டை வாழ்க்கை வாழ்பவர் கோணங்கி.” என இழிவானக் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இன்று எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அந்தப் பதிவுக்கு ஒரு பின்னூட்டமிட்டு இருக்கிறார்.
அன்பு மாது..
கோணங்கியின் கூடப்பிறந்த அண்ணன் என்கிற முறையில் ஓரிரு வரிகளை மட்டும் இங்கே பதிவிட விரும்புகிறேன். கோணங்கி எங்களோடுதான் வாழ்கிறார். எங்கள் உழைப்பை அவர் உறிஞ்சுவதாக எங்கள் வீட்டில் யாரும் நினைப்பதில்லை. அவருக்கு உதவிய நண்பர்கள் யாரும் அப்படி நினைப்பதாக இன்றுவரை நாங்கள் கருதியதில்லை. அன்பினாலும் இலக்கிய ஈடுபாட்டினாலுமே அவர்கள் உதவுகிறார்கள். அவருடைய உழைப்பு காசுக்காக இல்லை என்பதில் எங்கள் வீட்டில் யாருக்கும் வருத்தமில்லை. எழுத்துக்காக அவர் அளவுக்குக் கடுமையாக உழைக்கிற படைப்பாளிகள் தமிழில் மிகக்குறைவு. அந்த உழைப்பை எங்கள் குடும்பம் மதிக்கிறது. நண்பர் குறிப்பிடுவது போல கோணங்கி தன்னிடம் உறிஞ்சிவிட்டார் என யாரேனும் கருதினால் அது எத்தனை லட்சமாக இருந்தாலும் அதனைத் திருப்பித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ச.தமிழ்ச்செல்வன்
படித்து முடித்ததும் கலங்கிப் போனேன். எழுத்தாளர். தமிழ்ச்செல்வனை ஓரளவுக்கு அறிந்தவன் என்ற முறையில், இந்த வார்த்தைகளுக்குள் எவ்வளவு வலி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இப்படியொரு விமர்சனம் வர, தீராத பக்கங்கள் எதோ ஒருவகையில் காரணமாயிருந்துவிட்டதோ என வருத்தமும் வருகிறது. ஆனால் அந்த ஒருவரைத் தவிர கருத்துக்கள் தெரிவித்த அனைவருமே கோணங்கி என்னும் இலக்கிய ஆளுமை குறித்தும் அவரது அர்ப்பணிப்பு குறித்தும் அழுத்தமாகவேச் சொல்லியிருந்தார்கள் என்ற ஆறுதலும், நம்பிக்கையும் கூடவே இருக்கிறது. ஒரே ஒருமுறை அவரோடு பேசிய நமது பதிவர் ராகவனின் பின்னூட்டம் எல்லாவற்றையும் சொல்வதாக இருக்கிறது.
கோணங்கியோடு பழகியவர்கள் மட்டும் இருக்கிறார்கள். கோணங்கியின் பேச்சை மட்டும் கேட்டவர்கள் இருக்கிறார்கள். கோணங்கியின் எழுத்துக்களை படித்தவர்கள் மட்டும் இருக்கிறார்கள். பழகிப் படித்தவர்களும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்கிறவராகத்தான் கோணங்கியின் சித்திரம் இருக்கிறது. உதயசங்கர் எழுதியிருந்த பதிவு அதைத்தான் காட்டுகிறது.
“ஒரு அமைப்பு செய்ய வேண்டியதை ஒருத்தன் செஞ்சிருக்கான்!”. மார்கோஸ் குறித்த சிறப்பிதழாக கோணங்கியின் கல்குதிரை வந்தபோது இலக்கிய விமர்சகரும், தேர்ந்த வாசிப்பாளருமான எஸ்.ஏ.பெருமாள் சொன்னது இது. தமிழ் இலக்கிய வெளிக்கு கோணங்கி ஆற்றியிருக்கும் நல்ல காரியங்களை காலம் அவ்வப்போது சரியாகவேப் பதிவு செய்து வைத்திருக்கிறது.
தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கோணங்கி குறித்து சொல்ல விரும்புவது ஒன்றுதான் இப்போது. “தமிழ் இலக்கிய உலகம்தான் அவருக்கு கடன்பட்டு இருக்கிறது!”
குமாரபுரம் ஸ்டேஷன் கனவு
உதயசங்கர், கிருஷியுடன்…
குமாரபுரத்தில்தான் இப்போது ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிவதாக எழுத்தாளர் உதயசங்கர் சொன்னதும், “கு.அழகிரிசாமியின் குமாரபுரம் ஸ்டேஷனா!” என்றேன். சிரித்துக்கொண்டே “அதேதான்” என்றார். ஒருதடவை அங்கு சென்று கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வரவேண்டும் என்று ஆசை வந்தது. ‘பவுர்ணமியன்று வாருங்கள். அப்படியொரு தனிமையும் ஏகாந்த மனநிலையும் வாய்க்கும்” என்றார் அவர். கவிஞர் கிருஷியிடம் இதைப் பற்றி போனில் சொன்னதும், “சார்வாள் நானும் வர்றேன்” என்றார். இப்படித்தான் குமாரபுரம் செல்வது முடிவானது.
நேற்று பவுர்ணமி. சாயங்காலத்திலிருந்தே மேகமாய் இருந்தது. சின்னதாய் மழை பெய்துவிட்டும் கலையாமல் ஒரு முடிவோடு இருந்த மாதிரி இருந்தது. கோவில்பட்டி திருநெல்வேலி நெடுஞ்சாலையில், நாலட்டின்புதூர் தாண்டியதும் இடப்பக்கம் குமாரபுரம் என குறுஞ்சாலை பிரிந்தது. பத்து நிமிடங்களுக்குள் ஒரு ரெயில்வே கேட் வந்தது. அதனையொட்டி நான்கைந்து டியூப் லைட்டுகள் வெளிச்சத்தில் அந்தக் கட்டிடம் மரங்கள் சூழ நின்றிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறெந்தக் கட்டிடமும் இல்லை. கைகாட்டியின் சிவப்பு வெளிச்சங்களைத் தவிர, சின்னச் சின்னப் புள்ளி வெளிச்சங்கள் மிகுந்த இடைவெளியோடு வெகுதூரத்தில் தெரிந்தன. நிலவைக் காண முடியவில்லையென்றாலும் அதன் ரசம் ஊறிய வெளியெல்லாம் புலனாகியது. இரவின் நிழல் உருவமாய் மயங்கிக் கிடந்தது குறுமலை . ‘பிளாட்பாரத்தில் நான்கைந்து மரங்கள் இருந்தன’ என்று கு.அழகிரிசாமி எவைகளைச் சொல்லியிருப்பார் என பார்த்துக்கொண்டு இருந்தேன்.
உதயசங்கருக்கு நேற்று நைட் ஷிப்ட் கிடையாது. எங்களுக்காக காத்திருந்தார். “வந்தாச்சா” என்று சிரித்தார். “அண்ணே , இங்க வண்டியேற இறங்க யாராவது வருவாங்களா?” என்று அவரிடம் கேட்டான் கார்த்தி. “நாப்பது வருசத்துக்கு முன்னால கு.அழகிரிசாமி கேட்டது இது. இங்க வர்றவங்க எல்லாரும் கேட்டுக்கிட்டு இருக்காங்க. கிராஸிங் சமயத்துலதான் இங்க வண்டிகள் நிற்கும்” என்றார்.
நைட் ஷிப்டுக்கு வந்திருந்த பன்னீர் செல்வ பாண்டியனும் எங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர்தான். “இருபது வருசத்துக்கு முந்தி இதே ஸ்டேஷனில் வேலை பார்த்திருக்கேன். அப்ப இந்த இடம் பூராவும் கொத்தமல்லி, தட்டாம் பயிறு, கடலைன்னு ஒரே பச்சை பசேல்னு இருக்கும். இப்ப எல்லாம் போச்சு அப்பல்லாம் வெவசாயத்துக்கு இங்க ஆட்கள் வரப் போக இருப்பாங்க “ என்றார். ஸ்டேஷன் எதிரே கருவேல மரங்களும் உடை மரங்களும் நின்றபடி எங்களை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தன.
கவிஞர் கிருஷியும் திருநெல்வேலியிலிருந்து வந்து சேர்ந்தார். “நிறைந்திருக்கும் இந்த அமைதியே ஒரு சங்கீதம் போல இருக்கு” என்றார். கு.அழகிரிசாமிக்கு பிடித்து இருந்த இசைப் பைத்தியமும் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். தாடியைத் தடவிக்கொண்டே கிருஷி பேசுவதும், கேட்பதும் ஒரு அழகு. பிடித்தமான பானத்தை சுவையோடு மெல்லப் பருகுவது போல இருக்கும். ஸ்டேஷனை சுற்றி வந்தோம். ரெயில்வே கிராஸிங் சாலையில் அப்படியே நடந்து சென்றோம். அங்கங்கு உட்கார்ந்து கொண்டோம். எல்லாம் பேச்சின் திசையிலேயே நடந்தது.
எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எல்லாம் போன பிறகு, இரவு பதினோரு மணிக்கு மேல்தான் நிலா வந்தது. கு.அழகிரிசாமிதான் குறுமலையாய் இருக்கிறார் என அப்போது தெரிந்தது. கரிசல் மண்ணில் ஒரு விழா எடுக்க வேண்டும் அவருக்கு. அந்தக் கனவை மீண்டும் எங்களுக்கு குமாரபுரம் ஸ்டேஷன் தந்திருந்தது.
சமாதானம்
நேற்று குழந்தையை எதற்கோ சத்தம் போட்டான் அவன் . உம்மென்று, படுக்கையில் போய் சுருண்டு கொண்ட குழந்தையின் முதுகைத் தட்டிக்கொடுத்தாள் அவள். உடனே முகம் மலர்ந்து “அம்மா, அப்பாவிடம் பேசாதே” என்றது குழந்தை.
இன்று குழந்தையை எதற்கோ அடித்துவிட்டாள் அவள். அழுது புரண்ட குழந்தையை தூக்கி வைத்துக் கொஞ்சினான் அவன். அடுத்த கணம் கண்ணீரை துடைத்துக்கொண்டே, “அப்பா, அம்மாவிடம் பேசாதே” என்றது குழந்தை.
எதற்கோ சண்டை போட்ட அவனும் அவளும் பேசாமல்தான் இருந்தனர் இரண்டு மூன்று நாட்களாய்!
ஒரு கல்விப் போராளியின் கதை
ஒரே ஒரு வாக்கியம் தான் அது. இரண்டு குழந்தைகளுக்கு இடையேயான உரையாடலில் அதன் ஒலியளவு மிக அற்பமானது. அதை ஒரு பெரிய நாவலுக்கிடையே, பத்திரிகைச் செய்திக்கு நடுவே, அலைபேசி குறுஞ்செய்தியின் ஊடே வைத்தால் அதை நீங்கள் எளிதில் கவனிக்காது கடந்து போவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
சரி போகட்டும், இப்போது ஒரு பயிற்சி செய்து பார்ப்போம் வாருங்களேன், "உனக்குப் படிக்கத் தெரியாது..."என்ற வாக்கியத்தை வெவ்வேறு முறையில் உரக்கச் சொல்லிப் பாருங்கள். பெரிதாய்த் தெரியவில்லை இல்லையா.. சரி, நீங்கள் சொல்ல வேண்டாம், உங்களை ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு சிறுமி என்று கற்பித்துக் கொள்ளுங்கள், உங்களைப் பார்த்து, 'அந்தப் புத்தகத்தை எடுக்காதே, உனக்குப் படிக்கத் தெரியாது...' என்று உங்கள் எதிரே இருந்துகொண்டு யாரோ சொல்கிறார்கள்........ இப்போது தெரிகிறதா வலி? அந்த வலி உங்களை உங்கள் ஆயுட்காலம் ஆட்டிப்படைத்தால்..? அந்த அவமானச் சொற்கள் உங்கள் வாழ்நாள் முழுமையும் உங்களுக்கு எதிரே இருந்து மறைய மறுத்தால்..?
சாம், பாட்சி மெக்லியூத் தம்பதியினர் பெற்றெடுத்த பதினேழு குழந்தைகளில் பதினைந்தாவது சுட்டிப் பெண் தான் மேரி. மேலே நீங்கள் வாசித்த, இனி உங்கள் வாழ்விலும் நீங்கள் மறக்க முடியாத, அந்த இழிவான சொற்களைத் தனது மூளையில், கரங்களில், இதயத்தில் ஊன்றிக் கொண்டு ஆனால் நடைமுறையில் அதை மறுத்துப் பெரிய கல்வியாளராக மலர்ந்து நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்தவர் மேரி பெக்லியூத் பெத்யூன்.
படிக்கத் தெரியாது என்று தனக்குப் பின்னும் எந்தக் கறுப்பின மனிதரும் நிராகரிப்பின் அருவருப்பைச் சுவைக்கக் கூடாது என்று உழைத்து சாதித்தவர். அமெரிக்காவின் அற்புதக் கறுப்பின மனிதர்கள் வரிசையில் முக்கிய இடத்தை அடையாளப்படுத்திக் கொண்ட மேரி அவர்களின் கதை, ஒரு திரைப்படம் உங்களை நம்பவைக்க இயலாத சாகசங்களும், திருப்பங்களும் நிறைந்தது. ஆனால் உண்மையின் ஒளி நிரம்பியது. அதன் மிகச் சுருக்கமான, ஆனால் ஆழத்தை உணர்த்திவிடத் தக்க காத்திரமான பதிவாக வெளிவந்திருக்கிறது, கமலாலயன் ஆக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் பருத்திப்பண்ணை ஒன்றில் காலை கருக்கலில் வீட்டை விட்டு வெளியேறி மதியம் உணவுக்கு ஒரு நடை எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் இரவு கவியும் நேரம் வரை உழைக்கும் பெற்றோருக்கு உதவியாகக் களம் இறங்கும் பிள்ளைகளில் ஒருவராக அறிமுகமாகும் மேரியை, அண்டை வீட்டில் வசிக்கும் ஒரு வெள்ளைக்காரச் சிறுமி உனக்குப் படிக்கத் தெரியாதென அவமதித்து விடுகிறார். அது தான் அவரது சுயமரியாதை வில்லில் பூட்டிய நாணாக இருந்து அடுத்தடுத்த அம்புகளை வேகமாக எய்துவதற்கு அடிப்படை ஆகிவிடுகிறது.
கேட்டால் உதவி மறுக்க முடியாத கொஞ்சும் கெஞ்சுதலோடும், தாகத்தோடும் எப்படியோ உயர்கல்வி வரை படித்து முடிக்கும் மேரி தனது ஒரே இலட்சியம் கறுப்பினக் குழந்தைகளுக்கு உகந்த மேம்பட்ட கல்வியை வழங்குவது என்று தெளிவாக இருக்கிறார். அவரது பரிசோதனைகள் பின்னர் அழகாக கருக்கொள்ளவும், உருக்கொள்ளவுமாக அமைகிறது அவரது வாழ்க்கை வரலாறு.
ஐந்து சிறுமிகளும், தனது மகனுமாக ஆறே குழந்தைகளோடு பள்ளி தொடங்க நினைத்தபோது அவரிடம் இருந்தது வெறும் ஒன்றரை டாலர்கள். அடடா...அதற்குப் பின் அவர் திரும்பிப் பார்க்க நேர்ந்ததில்லை. பிச்சை புகாமல், கற்கை நன்றே என்று புதிய கீதம் இசைத்தார் அவர். தனது பள்ளித் தேவைகளுக்காக ஒற்றை ஒற்றை நாணயத்தையும் அவர் வலியோடும், வேதனையோடும் வசூலித்தார். அந்த நிறுவனம் இன்று பெரிய பல்கலையாக (பெத்யூன்-குக்மன் பல்கலைக் கழகம்) பரிணமித்திருக்கிறது.
எந்த வசதியுமற்ற பழங்காலக் கட்டிடம் ஒன்றில் அவர் பள்ளி நடந்துகொண்டிருந்த போது, அங்கே வந்த கனவான் ஒருவர் நீங்கள் சொன்ன அந்தப் பெரிய பள்ளி எங்கே இருக்கிறது என்று கேட்க, எனது இதயத்தில் என்று மேரி பதிலிறுப்பது அத்தனை அழகு. யார் தான் மறுக்க முடியும் உதவிக்கு! பள்ளிக்கு அருகில் இருக்கும் சிறைக்கூடத்தின் கைதிகள் வருகிறார்கள் - பழங்களும் இன்ன பிறவும் பள்ளிக்கு வழங்க! நொந்து போன தமது இதயங்களைக் குழந்தைகளின் இசைப்பாடல்களால் குளிர்வித்துக் கொண்டவர்கள் அவர்கள். இன்னொருமுறை உள்ளூர் தொழிலாளர்கள் வாசலில் காத்திருக்கிறார்கள், தங்களது எளிமையான ஒரு நன்கொடையோடு. ஒரு கட்டத்தில் மிகப் பெரும் தொகையை ஆர்ப்பாட்டமின்றி ஒரு மூதாட்டி கொடுத்துவிட்டுச் செல்கிறாள். மேரியின் கனவுப் பள்ளி எழும்பி நின்றுவிடுகிறது...
மேரியின் வாழ்க்கைக் கதையை வாசிக்கையில் சிங்கிஸ் ஐத்மாத்தவின் அற்புத நவீனமான 'முதல் ஆசிரியர்' அடிக்கடி நினைவுக்கு வந்து போகிறது. பாப்ளார் மரங்கள் தெரியும் மலைக்குன்றுகள் மீதில் அமைந்தது துய்ஷேனின் எளிய பள்ளி. மேரியின் பள்ளி, பொதுக் குப்பைகள் கொட்டும் இடத்தை விலைக்கு வாங்கி எழுப்பப்படுகிறது. பள்ளிகளில் மட்டுமல்ல, மருத்துவமனையிலும் கருப்பர்கள் சந்திக்கும் கசப்பான நிராகரிப்பைக் கண்ணுறும் அவர், ஈரமிக்க மனிதர்கள் பலரது உதவிகளோடு வசதிமிக்க மருத்துவமனை ஒன்றையும் நிறுவுகிறார்.
அடிமையாய்த் தமது வாழ்வின் துயர நதிகளில் மூச்சுத் திணறிய பழைய வாழ்வை மறந்திராத தமது தாயை மேரி வரவழைத்துத் தனது சாதனையைக் கண்கொண்டு பார்க்க வைக்கும் இடமும், சின்னஞ்சிறுமியாய் தாம் இருக்கையில் தமக்கான தொடக்கக் கல்வியின் கதவுகளைத் திறந்து வைத்த வெள்ளைக்காரப் பெண்மணியின் முன்பாகவே பின்பு ஒரு விருதைப் பெரும் அந்த சிலிர்க்கவைக்கும் மேடையும், வெள்ளை நிறவெறி மிக்க 'கு க்ளக்ஸ் கிளான்'(KKK) அமைப்பின் தீவிரவாதப் படையின் அணிவரிசைக்கு அஞ்சாது தமது பள்ளிக்கூடத்தின் விளக்குகளை எரியவைத்துத் துணிச்சலாக வாசலில் நிற்பதும், அடுத்தநாள் தடையை உடைத்துத் தேர்தலில் போய் கருப்பர்களை வாக்களிக்க வைப்பதுமான நிகழ்வும்...என நூல் முழுக்க ஒரு நாவலுக்குரிய பிரமிப்பூட்டும் உண்மை நடப்புகளின் தெறிப்புகளைக் காண முடியும்.
பருத்திப் பண்ணையின் சாதாரண உழைப்பாளிச் சிறுமி, அமெரிக்க அதிபருடைய (ரூஸ்வெல்ட்) ஆலோசகராக உயரும் வரலாற்றின் அடிக்கட்டுமானம் எத்தனை சீரிய உழைப்பிலானது, மதிப்பு மிக்கது, வியக்க வைப்பது என்பதை, தன்னடக்கத்தோடு ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் கமலாலயன், மூல நூலின் குரலை (அதன் விவரங்கள் இல்லாத ஒரே குறை தான் இதில் சொல்லத் தக்கது) இயல்பான தமிழ் வாசிப்புக்கு ஒத்திசைவாக வளமாக வழங்கியிருப்பது சம காலத்தில் நீடித்துக் கொண்டிருக்கும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்திற்கு ஊக்கமிக்க ஓர் இலக்கியக் கொடை.
இணையதளத்தின் சாத்தியத்தில் தேர்ச்சியான கருப்பு-வெள்ளை (சிலேடை தற்செயலானது!) படங்களோடு, மாரிஸ் கை வண்ணத்தில் அசத்தி ஈர்க்கிற அட்டைப்படத்தையும், உள்ளே ஸ்ரீரசாவின் அற்புதமான ஓவியங்களையும் உள்ளடக்கி காலத்தின் பொருத்தமான நூலை வெளியிட்டிருக்கும் 'வாசலுக்கு' வாழ்த்துக்கள்.
உனக்குப் படிக்கத் தெரியாது
- கமலாலயன்
96 பக்கங்கள். விலை ரூ.60/-
வாசல் வெளியீடு. மதுரை.
தொடர்பு எண்:98421 02133.
-எஸ்.வி.வேணுகோபலன்
உலக இலக்கியவாதிகளை உள்ளூரில் அலைய வைத்தவர்!
என்ன காரணம் என்று தெரியவில்லை, ஒருவருக்கு ரொம்பவே பொத்துக்கொண்டு வந்துவிட்டது. எழுத்தாளர் கோணங்கியோடு பழகிய காலத்தின் ஈரம் சொட்ட சொட்ட எழுத்தாளர் பவா எழுதியிருந்ததை இங்கு பகிர்ந்திருந்தேன். கோணங்கியின் படைப்பு, அதன் தன்மை குறித்தெல்லாம் பவா அதில் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. சமகால எழுத்தாளன் ஒருவன் மீது பரஸ்பரம் கொள்ள வேண்டிய மரியாதையும், நட்பு கொண்ட சக மனிதனோடு இருந்த நெருக்கமும்தான் அதில் நெகிழ்வோடு சொல்லப்பட்டு இருந்தது. எழுத்தை நேசிக்க வைக்கும் மொழியாக அது இருந்தது. அவ்வளவுதான். பொங்கி எழுந்துவிட்டார் அந்த ஒருவர். ‘மென்மை தோல் போர்த்திய தடித்தவர்கள்’ என்று எனக்கும் பவாவுக்கும் பட்டம் கட்டினார். கோணங்கியின் கல்குதிரை சாணிகூடப் போடாது என கால்நடை அறிவோடு பின்னூட்டத்தில் அறச்சீற்றம் கொள்ளவும் செய்தார்.
நிற்க. இந்த சமயத்தில்தான் எழுத்தாளர் உதயசங்கரும் கோணங்கி பற்றி எழுதியிருந்ததைப் படிக்க நேர்ந்தது. “அய்யய்யோ இன்னும் ஒரு மென்மை தோல் போர்த்திய தடித்த மனிதரா!” என கடகடவென்று சிரித்தேன்.. உதயசங்கர் எழுதியிருந்த ‘முன்னொரு காலத்திலே’ புத்தகத்திலிருந்து இன்னும் சில நினைவலைகளை பகிர்வதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன். இது அவைகளில் ஒன்று.
உலக இலக்கியவாதிகளை உள்ளூரில் அலைய வைத்தவர்!
-உதயசங்கர்
எழுதத் துவங்கும் எல்லா எழுத்தாளர்களும் காண்கிற கனவைத் தான் நானும் கண்டேன். நம் எழுத்தின் மூலம் மிகப் பெரும் பிரளயமே நிகழப் போகிறது என்று ஒவ்வொரு கவிதை எழுதும் போதும், சிறுகதை எழுதும் போதும் நினைத்திருக்கிறேன். அப்படியிருக்க ஒரு சிறுகதை பிரசுரமாகி பலரும் பாராட்டியும் விட்டால் என்ன ஆகும். ஒரு தினுசாக முகத்தை வைத்துக் கொண்டு தரையில் கால் பாவாமல் தலைக்குப் பின்னால் இலக்கிய ஒளிவட்டம் எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறதா என்று அவ்வப்போது பார்த்துக் கொண்டே சுற்றினேன். இதில் யாருடைய ஒளிவட்டம் ரொம்ப பவர்புல்லானது என்று சர்ச்சை வேறு. நல்ல கூத்து தான்.
1980ஆம் ஆண்டு மார்ச் மாத செம்மலரில் என்னுடைய முதல் கதையான ‘மஞ்சு’ பிரசுரமானது அப்போது தமிழ்ச் செல்வனுக்கும் இரண்டோ மூன்றோ கதைகள் பிரசுரமாகியிருந்தன. எனவே சிறுகதை எழுத்தாளர் என்ற கர்வத்தோடு நான் அன்றாடம் தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசிக்கொண்டும், புத்தகங்களை வாசித்துக் கொண்டு மிருந்தேன். தண்டவாளங்களைத் தாண்டி யதும் தனியாக இருந்தது அந்த வீடு. அந்த வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் தமிழ்ச்செல்வனின் தம்பி ஒருவர் சிரித்து வரவேற்பார். நான் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது அவரும் அதே பள்ளியில் எனக்கு மூத்த மாணவராக இருந்தார். பேச்சுப்போட்டியில் அடுக்குமொழியில் பேசி பரிசுகளை வெற்றி கொண்டிருக்கிறார். அவர் பேசும்போது கண்களை அடிக்கடிச் சிமிட்டி சிமிட்டிப் பேசுவார். அது தான் அவர் மீதான தனிக் கவனம் கொள்ள வைத்தது என்று நினைக்கிறேன் நான் கல்லூரி முடித்த காலத்தில் அவர் கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரும் புத்தகங்களை வாசித்துக் கொண்டிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு சிரிப்பு சில வார்த்தைகள் இப்படித் தான் இருந்தது அவருடனான ஆரம்ப கால உறவு. பின்னால் அவர் தமிழிலக்கியத்தின் மிகப்பெரிய ஆளுமையாக வருவார் என்றோ எனக்கு மிக நெருக்கமான நண்பராக மாறுவார் என்றோ கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் இளங்கோ என்ற இயற்பெயருக்கு சொந்தக்காரரான எழுத்தாளர் கோணங்கி.
மிகக் குறுகிய காலத்தில் மிக முக்கியமான எழுத்தாளராக பரிணமித்தவர் கோணங்கி. தன்னுடைய தனித்துவமிக்க பார்வையினாலும், மொழி நடையினாலும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தவர். இலக்கியத்திற்காகவே வாழத் துணிந்தவர். இலக்கியத்தை ஒரு தவமாக இயற்றி வருபவர் கோணங்கி. 80 களில் அவருடைய மிக நெருக்கமான நண்பனாக இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.
கோவில்பட்டி மாதிரி மிகச் சிறிய நகரத்தில் இத்தனை இலக்கிய ஆளுமைகள் உருவானது அதுவும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகவும் ஆச்சரியமளிக்கிற ஒரு நிகழ்வாகவே தோன்றுகிறது. மிகவும் பயந்த, தயக்கம் கொண்ட, தொட்டாற் சிணுங்கியான என்னை விரல் பிடித்து உலகத்தைச் சுற்றிக் காட்டியவர் கோணங்கி. எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று எல்லோரையும் நேரில் சென்று சந்திக்க வைத்தார். மிகச் சிறந்த ஊர்ச் சுற்றியான அவருடன் பல ஊர்களுக்கும் திடீர் திடீரென கிளம்பிப் போய் விடுவேன். புதிய மனிதர்கள் புதிய நிலப்பரப்பு, புதுப்புது அனுபவங்கள், வாழ்க்கையில் இன்பம் மட்டுமே பொழிந்த நாட்கள் அவை. ஜோதி விநாயகத்தின் மீது அவருடைய பற்று, மரியாதை அன்பு நட்பைத் தாண்டிய ஈர்ப்பு மிக்கது. ஜோதி விநாயகத்தின் ஆளுமையின் விகசிப்பை உணர்ந்த மிகச் சிலபேர்களில் கோணங்கியும் ஒருவர்.
புத்தகங்களைச் சேகரிப்பதற்காகவென்று சென்னை சென்று பசியும் பட்டினியுமாக அலைந்து திரிந்து இரண்டு பெட்டிகள் நிறையப் புத்தகங்களைச் சேகரித்து கோவில்பட்டிக்கு அனுப்பி வைத்தார். அந்தப் புத்தகங்கள் அனைத்தையும் அவர் படித்தாரோ இல்லையோ நாங்கள் படித்தோம். அதுவரையில் பெயரளவில் கேள்விப்பட்டிருந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள், க.நா.சு, உலகச் சிறந்த இலக்கிய நூல்களாக அறிமுகம் செய்திருந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு வந்திருந்தார் கோணங்கி.
அதன் பிறகு கோணங்கியின் வீடு முத்துச்சிப்பி இருந்த தெற்கு திசையை நோக்கி தினமும் எழுத்தாளர்களின் படையெடுப்பு நடந்தது. கோவில்பட்டியின் தெருக்களில் அனடோல் பிரான்ஸூம் ஆர்தர் கொய்ஸ்லரும், நதானியல் ஹாதர்னும், நட் ஹாம்சனும், எமிலிஜோலாவும், மாப்பசானும், செல்மாலாகர்வவ்வும், ஆர்தர் ஜி.வெல்ஸும், தாமஸ்மானும், பால்சாக்கும், யஹர்மன் கெஸ்ஸேயும், அலைந்து திரிந்து கொண்டிருந்தனர். மாதாங்கோவில் தெருவில் அனடோல் பிரான்ஸ் நின்று கொண்டிருந்தார் என்றால் வ.உ.சி. நகர் தெருவில் தாமஸ்மான் இரண்டு எழுத்தாளர்கள் பேசுகிற ஒரு சொல்லையும் கேட்காமல் விட்டுவிடக் கூடாது என்று பின்னாலேயே போய்க் கொண்டிருந்தார். ஊரணித் தெருவில் சிகரெட் புகையுடன் சுருட்டின் வாசனையும் கலந்து வந்தது அங்கே நட்ஹாம்சன் சிரித்துக் கொண்டிருந்தார். ரயில்வே ஸ்டேன் பெஞ்சில் யாரையோ வழியனுப்ப வந்த மாதிரி செல்மாலாகர்லவ் அந்த எழுத்தாளர்கள் முன்னால் நடை பழகிக் கொண்டிருந்தார். காந்தி மைதானத்து இருளில் மின்னுகிற பச்சை நிறக்கண்கள் பால்சாக்கின் கண்களல்லவா. நடுநிசியில் தெற்கு பஜார் தெருவில் எமிலிஜோலா ஆழ்ந்த சிந்தனையுடன், அங்கே சுற்றிக் கொண்டிருந்த ஒரு பைத்தியக் காரனைக் கவனித்துக் கொண்டிருந்தார். எட்டையபுரம் ரோட்டில் மாப்பசான் அடல்டரி பற்றிய விவாதத்தில் கலந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கங்கே தெருமுக்குகளிலும், டீக்கடையிலும், சிகரெட் புகைமூட்டத்திற்கு நடுவே தங்களுடைய படைப்புகள் குறித்து இளம் எழுத்தாளர்கள் பேசுவதைக் கேட்க நகரெங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தனர். அற்புதமான அந்த நாட்கள் உன்னதமான அந்த இலக்கியங்களின் வழி நாங்கள் உலகை அறிந்தோம் கோணங்கி இல்லையயன்றால் இது நிகழ்ந்திருக்குமா என்று தெரியவில்லை. கோவில்பட்டிக்கு அவர் நன்றிக்கடன் செலுத்திவிட்டார். உலக இலக்கிய வாதிகளை அழைத்து வந்ததின் மூலம். அதைவிட தன் வாழ்வை இலக்கியத்துக்காக அர்ப்பணித்ததின் மூலம் கோவில்பட்டிக்குப் பெருமை சேர்த்து விட்டார் கோணங்கி.
இதோ இப்போதும் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார் கோணங்கி. அவருடன் இளம் எழுத்தாளர் ஒருவர் கூடவே திரிகிறார். அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அவருடைய ஆளுமையின் மீது, அர்ப்பணிப்பின் மீது உறுதியின் மீது மிகுந்த பொறாமையுணர்வுடன் கூடவே அலைகிறார்கள். அவருடன் பிரயாணம் செய்பவர்கள் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் அவர் சற்றும் தளராது சுற்றித் திரிந்து கொண்டேயிருக்கிறார். அவருடைய பரபரப்பான கண்கள் தேடிக் கொண்டேயிருக்கின்றன.
கோணங்கி ! என் அன்பு நண்பா ! உனக்கு தலை வணங்குகிறேன். கோவில்பட்டியும் தலை வணங்குகிறது.
மக்கள் மத்தியில் தமிழ்ச் சினிமா இயக்குனர்கள்!
“எவ்வளவோ சொல்ல நினைக்கிறோம். ஆனால் இதற்கே கடுமையாய் போராட வேண்டியிருக்கிறது” என்கிறார்கள் தமிழ்ச்சினிமாவில் சில அழுத்தமான தடயங்களை அண்மையில் பதித்திருக்கும் இயக்குனர்கள். விருதுநகரில் நடந்து முடிந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி நடந்த கலை இலக்கிய இரவில் வெளிப்பட்ட அவர்களது வார்த்தைகள் இவை. இயக்குனர்கள் ஜனநாதன், சசி, சுசீந்தரன், வசனகர்த்தா பாஸ்கர்சக்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இயக்குனர்கள் வசந்த பாலனும், ராதா மோகனும் கடைசி நேரத்தில் வர இயலாமல் போனதை தெரிவித்தனர். தமுஎகசவின் மாநிலத் தலைவரும் எழுத்தாளருமான தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியைத் தொகுக்கவும், இயக்குனர்களோடு மேடையில் உரையாடவும் செய்தார். அந்தக் காட்சிகள் இரண்டு வீடியோப் பகுதிகளாய் இங்கே. இன்னும் இருக்கிறது, அவை விரைவில்....
ஏவாளின் ஆதாம்
வெளிச்சத்தில் எல்லோரும் தெரிந்தவர்களாய் இருந்தார்கள். தூங்காமல் அரட்டை அடித்தபடி பழங்கள், சுவீட்கள், பூக்கள் என தனித்தனி தட்டுகளில் ஒன்றுபோல் வைத்துக்கொண்டு இருந்த போது எங்கள் அருகில் வந்து தரையில் உட்கார்ந்து கொண்டான் அவன். “நாளைக்குத்தான் கல்யாணம். இப்ப மாப்பிள்ளைக்கு இங்க என்ன வேலையாம்” என்று அந்தக் கல்யாணப் பொண்ணு அவனிடம் வெட்கத்தோடு கேட்டாள். அவனோ சிரித்துக்கொண்டு என் கண்களுக்குள் ஊடுருவினான். என் கையை எடுத்து, தன் உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டான். அவனைப் பார்த்து எத்தனை வருடம் ஆகிவிட்டது என்றிருந்தது. அப்படியேதான் இருந்தான். அப்புறம், தெருவிளக்கை மறைத்து நின்ற வேப்ப மர இலைகள் தலையைத் தடவிக்கொண்டிருக்க அந்த பால்கனி ஓரத்தில், மெல்லிய வெளிச்சத்தில் கையைப் பிடித்தபடி “நீயும் அப்படியே இருக்கிறாய்” என்றான். ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்த மாதிரி இருந்தது. அப்புறம் அவன் படுக்கையில் இருந்தான். காலைப் பிடித்துவிட்டான். வேண்டும் வேண்டும் போலிருந்தது. கால்விரலில் அவன் மூச்சும் ஈரமும் பட சிலிர்த்தேன். அது பிடிக்கும் என அவனுக்குத் தெரியும். பிடிக்கும் எல்லாமும் தெரியும். “அப்படியே இருக்கிறாய்” என்றேன் விம்மிப் போய். “நீயுந்தான்” என்றான். வெடித்து உன்மத்தமானேன். நனவு போலவே இருந்த யாவும் கலைந்து போனது அடங்காத ஒரு கணத்தில். இரவு விளக்கு உறுத்தியது. யார் கல்யாணம், யார் வீடு, யார் அவன்? தெரியவில்லை. கண்களைத் திரும்பவும் மூடி ஆழ்ந்தபோது, என் முகத்தில் வழக்கமான மூச்சுக்காற்று படர்ந்தது.
காலையில் சாப்பாட்டு மேஜையில் அவரும் குழந்தைகளும் உட்கார்ந்திருந்தனர். “இன்னிக்கு உங்களுக்குப் பிடித்த ரவா தோசை” என்றேன். அப்படியா என்று புன்னகைத்து என்னைப் பார்த்தவர், “இன்னிக்கு முகமெல்லாம் ஒரே களையாய் இருக்கு” என ஊடுருவிப் பார்த்தார். அதன் அர்த்தம் புரிந்தமாதிரி நானும் குழந்தைகளுக்குத் தெரியாமல் சிரித்தேன்.
1க்கு எதிராக 99: படங்கள் சொல்லும் அமெரிக்காவின் கதை!
‘வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்’ என செப்டம்பர் 17ல் சிறு பொறியாய் ஆரம்பித்த இயக்கம் இன்று அமெரிக்காவின் பல நகரங்களிலும் பரவிக்கொண்டு இருக்கிறது. பெரும் உரையாடல்களும், விவாதங்களும் எழும்பிக்கொண்டு இருக்கின்றன. ஜனநாயகத்தை மொத்தக் குத்தகை எடுத்துக்கொண்டதாய் பேசும் அமெரிக்க பேரரசு, தன் மக்கள் மீதே தாக்குதல் நடத்த ஆரம்பித்திருக்கிறது. அதிபர் ஒபாமா “அவர்கள் விரக்தியான நிலையில் இருக்கிறார்கள்” என வெள்ளை மாளிகையில் தன் இயலாமையைப் பூசி மழுப்பிக்கொண்டு இருக்கிறார். இந்தப் போராட்டம் அல்லது இயக்கம் குறித்த பலவித கண்ணோட்டங்களும், விமர்சனங்களும் இன்னொருபுறம் வெளிவருகின்றன. எல்லாவற்றுக்கும் மத்தியில், ஆர்ப்பாட்டக்காரர்களின் வார்த்தைகளில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் முதலாளித்துவத்தையும், முதலாளிகளையும் கடுமையாக வெறுக்கிறார்கள் என்பதே அது. இந்த படங்கள் அதைச் சொல்கின்றன.
அம்பலமாகிறது ரிலையன்ஸ் - மன்மோகன் கள்ளக்கூட்டணி
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புயல் இன்னும் ஓயாத நிலையில், மன்மோகன் சிங் அரசு மற்றுமொரு ஊழல் புயலில் சிக்கியுள்ளது. கிருஷ்ணா-கோதாவரி கழிமுகப் பகுதியில் இயற்கை எரிவாயு எடுத்து விற்பனை செய்வதற்கு டி.6 எனப் பெயரிடப்பட்ட மிகப்பெரும் கடலோரப் பகுதியை முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அளித்ததில் வரலாறு காணாத ஊழல் நடந்திருப்பதை மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
இந்த ஊழல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படவேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் பொதுச் செயலாளருமான தபன்சென், கடந்த 6 ஆண்டுகாலமாக வலியுறுத்தி வருகிறார். இந்த முறைகேடுகளில் பெட்ரோலிய அமைச்சகத்திற்கு தொடர்புண்டு; பிரதமருக்கும், அவரது அலுவலகத் திற்கும் கூட தொடர்பு உண்டு என தபன்சென் கூறி வரும் குற்றச்சாட்டுக்களை, தலைமை தணிக்கை அதிகாரியின் இறுதி அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராகவும் உள்ள தபன்சென், கிருஷ்ணா-கோதாவரி எரிவாயுப்படுகையில் நடந்துள்ள ஊழல்களில் பிரதமருக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும் ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசுக்கும் இடையே நிலவுகிற கள்ளக் கூட்டணியை, இந்து நாளேட்டின் செய்தியாளர் சுஜய் மேதூதியாவுக்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார்.
கேள்வி: தலைமை தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) இறுதி அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், கிருஷ்ணா-கோதாவரி படுகையில் (கேஜி படுகை) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்து ஒரு முழுமையான விசாரணைக்கு அரசு உத்தரவிடுமா?
தபன்சென்: இந்த விவகாரத்தில் நீண்ட காலத்திற்கு முன்பே விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருக்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகாலமாக நான் எந்த பிரச்சனைகளை எழுப்பி வந்தேனோ, அவற்றை தற்போது சிஏஜி உறுதிப்படுத்தியுள்ளது. கேஜி படுகையில் உள்ள டி.6 பிளாக் பகுதியில் ஊழல் நடக் கவில்லை என்று சாதிப்பதற்கே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சிக்கிறது. இந்த படுகையில் நாட்டின் வளத்தை நேர்மையற்ற முறையில் உறிஞ்சியெடுத்து, அதன்மூலம் நாட்டின் கருவூலத்தை வற்றிப் போகச் செய்யும் விதத்தில் மோசடியில் ஈடுபட்டுள்ள ஒரு தனியார் நிறுவனத்தை பாதுகாக்கவே அரசு முயற்சிக்கிறது. இந்த நிறுவனத்தின் எரிவாயு விலையை மிகவும் அநியாயமான முறையில் உயர்த்தி நிர்ணயிப்பதற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தது முதல் ஒவ் வொரு நடவடிக்கையும் மேற்படி தனியார் நிறுவனத்தை திருப்திப்படுத்துவதற்காகவே அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேஜி படுகையிலிருக்கும் எரிவாயு வளத்தை, அரசுக்கு மிக மிக சொற்பமான தொகையை கொடுத்து விட்டு, அகழ்ந்து எடுத்துக்கொண்ட மேற்படி நிறுவனம், தங்கமுலாம் பூசிய ஒரு பொருளை தங்கத்தின் விலைக்கே விற்பதைப் போல, வெளிச்சந்தையில் மிகப்பெரும் அளவில் விலை வைத்து விற்பதற்கு அனுமதிக்கப்பட் டது. இந்த தனியார் நிறுவனம் தான் எடுக்கும் இயற்கை எரிவாயுவின் விலையை எந்த அளவிற்கு உயர்த்த வேண்டுமென்று விரும்பியதோ அந்த அளவிற்கு அரசே உயர்த்தி அறிவித்தது. இந்த குறிப்பிட்ட நடவடிக்கைதான் இந்நிறுவனத்திற்கும் அரசாங்கத்தின் உயர் மட் டத்தில் இருக்கும் கள்ளத்தனமான, மோசடித் தனமான, தீய கூட்டணி இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
கேள்வி: கேஜி படுகை ஊழல் விவகாரத்தில் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டிய மிக முக்கிய அம்சம் எதுவெனக் கருதுகிறீர்கள்?
தபன்சென்: இந்த விவகாரம் எரிசக்தி வளத்துடன் நேரடியாக தொடர்புடையது. மக்களின் வாழ்வோடும் நாட்டின் வளர்ச்சியோ டும் நெருங்கிய தொடர்பு கொண்டதும், மிக முக்கிய வாழ்வாதாரமும் ஆகும். இதை கையாண்டிருக்கும் விதம், ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. எனவே கேஜி படுகை யில் உள்ள டி.6 பிளாக் எனும் பகுதியில் நடந்துள்ள முறைகேடுகள் முதன்மை முக்கியத்துவத்தோடு விசாரிக்கப்படவேண்டிய தேவை உள்ளது.
இங்கு எரிவாயு எடுக்கும் திட்டத்தில் முதல் நாளிலிருந்தே திட்டமிட்ட மோசடிகள் அரங்கேறியுள்ளன. இப்படுகையில் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி கோரும் விதமாக முதலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ‘கள மேம்பாட்டுத் திட்டம்’ ஒன்றை உருவாக்கி சமர்ப்பித்தது. இந்த திட்டத்தின்படி, மேற்கண்ட டி.6 பிளாக்கிலிருந்து நாள் ஒன் றுக்கு 40 மில்லியன் மெட்ரிக் கனஅடி என்ற அடிப்படையில் இயற்கை எரிவாயுவை, 2.47 பில்லியன் டாலர் செலவில் உற்பத்தி செய்ய அனுமதி கோரியது. பின்னர் திடீரென மேற்கண்ட ‘கள மேம்பாட்டுத்திட்டம்’ திருத்தப்பட்டது. அதில் உற்பத்திஇலக்கு என்பது இரண்டு மடங்காக அதாவது, 80 மில்லியன் மெட்ரிக் கனஅடி என உயர்த்தப்பட்டது. ஆனால், இதற்கு ஆகும் செலவு நான்கு மடங்காக, அதாவது 8.84 பில்லியன் டாலராக அதிகரித்துக்காட்டப்பட்டது. இந்த ஒட்டுமொத்த திட்டமும் எரிசக்தி துறையின் ஹைட்ரோ கார்பன் பிரிவின் பொது இயக்குநர் வி.கே.சிபல் என்பவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவர் தான் தற்போது சிபிஐ விசாரணையை எதிர் கொண்டிருக்கிறார். வெறும் 33 நாட்களிலேயே இந்த ஒப்புதலை அவர் அளித்திருக்கிறார். இவ்வளவு மிகப்பெரும் தொகை மோசடியாக அதிகரித்து காட்டப்பட்டுள்ள திட்ட அறிக்கைக்கு அவர் எப்படி ஒப்புதல் அளித்தார் என்பதே நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளி யேயும் சந்தேகங்களை எழுப்புவதற்கு அடிப்படையாக அமைந்தது.
கேள்வி: சர்வதேச அளவில் இயற்கை எரிவாயு விலைகள் குறைந்துகொண்டிருந்த தருணத்தில், 2007ம் ஆண்டில், அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவானது ரிலையன்ஸ் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட எரிவாயுவின் விலை ஒரு யூனிட்டுக்கு (இயற்கை எரிவாயுவை மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் என்ற அலகில் அளவிடுகிறார்கள். இங்கு ஒரு யூனிட் என்பது மேற்கண்ட மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டில் 1 பங்கு என்று பொருள் கொள்ளலாம்) 4.2 டாலர் என நிர்ணயித்தது அநியாயமானது என கருதுகிறீர்களா?
தபன்சென்: துரதிருஷ்டவசமாக இன்றைக்கு ஒட்டுமொத்த அரசுநிர்வாகமே கார்ப்பரேட் நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் என்ன விலை நிர்ணயிக்கவேண்டுமென்று சொன்னதோ, அந்த விலையையே அரசு நிர்ணயித்து ஒப்புதலும் அளித்தது. அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிடம், தாங்கள் எடுக்கும் எரிவாயுவின் விலையை யூனிட் ஒன்றுக்கு 4.3 டாலர் என நிர்ணயிக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வற்புறுத்தியது. ஆனால் ஏற்கெனவே பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல்மின் கழகம் (என்டிபிசி) சர்வதேச அளவிலான டெண்டரில், ஒரு யூனிட் எரிவாயு உற்பத்தி செய்து கொடுப்பதற்கு 2.34 டாலரே செலவாகும் என குறிப்பிட்டுள்ளது என்பதை நினைவுகூர வேண்டும். லாபம் இல்லாமல் வெறுமனே யூனிட் ஒன்றுக்கு 2.34 டாலர் என்று என்டி பிசி நிறுவனம் விலை நிர்ணயித்திருக்க முடியாது. ரிலையன்ஸ் நிறுவனமே கூட உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு பதில் மனுவில், ஒரு யூனிட் எரிவாயு உற்பத்தி செய்வதற்கான அடிப்படைச் செலவு 2 டாலருக்கும் குறைவானதே என்று ஒப்புக்கொண்டி ருக்கிறது. இந்தப்பின்னணியில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்ப்பந்தத்திற்கு ஏற்ப, ஒரு யூனிட்டிற்கு 4.2 டாலர் என எரிவாயுவிற்கு விலை நிர்ணயம் செய்யக்கூடாது என்று பெட்ரோலியத்துறை தொடர்பான செயலாளர்களின் குழு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போ தைய மின்சாரத்துறை அமைச்சரும், உரத்துறை அமைச்சரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இவர்களது கருத்துக்கள், மேற்படி அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து, யூனிட் ஒன்றுக்கு 4.2 டாலர் என விலை நிர்ணயம் செய்துவிட்டால், அதற்கு முன்னதாக சர்வதேச அளவிலான டெண்டரில், யூனிட் ஒன்றுக்கு 2.34 டாலர் என்று என்டிபிசி நிறுவனம் குறிப்பிட்டிருப்பதன் அடிப்படையில் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இரண்டுபெரும் திட்டங்களான கந்தார் மற்றும் கவாஸ் ஆகிய எரிவாயு உற்பத்தி திட்டங்களில் ரூ.24 ஆயிரம் கோடியை பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி இழக்க வேண்டிய ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் கூட, கொஞ்சமும் வெட்கமின்றி, ரிலையன்ஸ் நிறுவனம் கூறிய அதிகபட்ச விலைக்கு ஒப்புதல் அளித்தது அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு.
மிகக்குறைந்த செலவில் எடுக்கப்படும் எரிவாயுவுக்கு மிக அதிக விலை நிர்ணயித்து, தங்க முலாம் பூசிய பொருளை தங்கத்தின் விலைக்கே விற்ற கொடுமை எந்த அளவிற்கு கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டுமோ, அதே அளவிற்கு அமைச்சர்கள் குழுவே கூடி எரிவாயு விலையை நிர்ணயித்த விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும். ஒரு தனியார் நிறுவனத்திற்காக எரிவாயுவின் விலை மிகக்கடுமையாக உயர்த்தப்பட்டு, அதன் சுமைகள் அனைத்தும் ஏற்றப்பட்ட இந்த நாட்டின் மக்களிடம் உண்மை உரத்துச் சொல்லப்படவேண்டும். இந்த தருணத்திலும் கூட நான் அரசாங்கத்திற்கு கேள்வி எழுப்பினேன். எந்த அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனம் எரிவாயுவின் விலையை யூனிட் ஒன்றுக்கு 4.3 டாலர் என்று நிர்ணயித்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டது என விளக்கமளிக்க வேண்டுமெனக்கோரி கடிதம் எழுதினேன். ஆனால் அதிகாரமளிக்கப்பட்டக்குழு 4.3 டாலர் அல்ல; 4.2 டாலர் என்றுதான் விலை நிர்ணயிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது எனக்கூறி நாட்டு மக்களை முட்டாளாக்கும் பதிலை தெரிவித்தது.
கேள்வி: இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் பிரதமரின் பங்கும், பிரதமர் அலுவலகத்தின் பங்கும் இருக்கிறது என எப்படிக்கூறுகிறீர்கள்?
தபன்சென்: இந்த விவகாரத்தில் பிரதமருக்கும் அவரது அலுவலகத்திற்கும் நேரடி யாக பங்கு இருக்கிறது என நான் கூறுகிறேன். பல்வேறு வழக்குகளில் விவரங்கள் பிரதமருக்கும் தெரியும் என்று கூறப்படுவதைப் போல அல்ல இந்த வழக்கு. இந்த விவகாரத்தில் பெட்ரோலிய அமைச்சகம் மட்டுமே குற்றவாளியாக இருக்க முடியாது; ஒட்டு மொத்த நடவடிக்கைகளிலும் இவருக்கு பங்கு இருக்கிறது என்று பிரதமரை நோக்கி விரல் நீட்டாமல் இருக்க முடியாது. ஏனென்றால் இவ்வளவு மிகப்பெரிய காரியத்தை தனிப்பட்ட முறையில் செய்வதற்கான அதிகாரம் பெட்ரோலிய அமைச்சகத்திடம் இல்லை. இதில் எங்களுக்கு சம்பந்தமில்லை என்று கூறி மற்றவர்கள் கைகழுவிவிட்டுப் போக முடியாது. 2007ல் இந்த முறைகேடுகள் குறித்து பிரதமருக்கே நேரடியாக கடிதம் எழுதினேன். நான்கு முறை ஐந்து முறை கடிதங்கள் எழுதினேன். ஒரே ஒரு கடிதத்திற்கு மட்டும், உங்கள் கடிதம் கிடைத்தது என்று பதில் வந்தது.
கிருஷ்ணா-கோதாவரி படுகையின் டி-6 பிளாக்கில் எரிவாயு உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன?
தபன்சென்: ரிலையன்ஸ் நிறுவனம், மேற்கண்ட கே.ஜி.படுகை டி-6 பிளாக்கில் எத்தனை பெரிய ஊழலில் ஈடுபட்டது என்பது, அந்நிறுவனம் தனது பங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை பாரத் பெட்ரோலியத்திற்கு விற்றபோதுதான் முழுமையாக தெரியவந்தது. நாளொன்றுக்கு 80 மில்லியன் மெட்ரிக் கனமீட்டர் என்ற அடிப்படையில் எரிவாயுவை உற்பத்தி செய்ய, 8.84 பில்லியன் டாலர் அளவிற்கு உற்பத்திச் செலவு ஆகும் என்ற தங்களது திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அதற்குப் பின்னர் இந்த உற்பத்தியில் 30 சதவீதத்தை 7.2 பில்லியன்டாலர் என்ற அடிப்படையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு விற்றிருக்கிறார்கள். எனவே உண்மையில் உற்பத்திச்செலவு எவ்வளவு என்பது அவர்களுக்கு ஏற்கெனவே தெரியும். அதுமட்டுமின்றி, இந்த உடன்பாட்டின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு வந்து சேரவேண்டிய பங்கு கிடைப்ப தற்கே 10 ஆண்டுகள் ஆகும். ஆனாலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்குமான உடன்பாட்டை அரசு அவசர அவசரமாக மேற்கொண் டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் விலை நிர்ணயங்களில் முரண்பாடுகள் இருக்குமானால், இந்த உடன்பாட்டையே மறுபரிசீலனை செய்யவேண்டுமென மீண்டும் அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இந்த உடன் பாடு முழுமையடைந்ததன் காரணம் என்னவென்றால், தனது பாதையில் எந்த ஒரு தடைக்கல்லும் வந்துநிற்கக்கூடாது என்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணமே. தற்போது எரிவாயு உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது திருத்தப்பட்ட கள மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் எண்ணெய் கிணறுகளை தோண்டாததன் விளைவாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பெட் ரோலிய அமைச்சகமே கூறுகிறது. மேற்கண்ட திட்டத்தின்படி 80 மில்லியன் மெட்ரிக் கன மீட்டர் அளவிற்கு உற்பத்தி செய்வோம் என ரிலையன்ஸ் நிறுவனம் அரசுக்கு உறுதியளித்திருந்தாலும், இன்றுவரையிலும் சுமார் 40 மில்லியன் மெட்ரிக் கன மீட்டர் அளவிற்கே உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த அளவிற்குத் தான் அந்நிறுவனம் கட்டமைப்பு ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இது அப்பட்டமான முறைகேடு; மோசடித்தனம். இப்போது அவர்கள் மீண்டும் எரிவாயு விலையை உயர்த்த வேண்டும் என்ற கருத்துக்களை பரப்பத் துவங்கிவிட்டார்கள். யூனிட் ஒன்றுக்கு 5.2 டாலர் அல்லது 5.3 டாலர் என விலையை உயர்த்த வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். இதற்காகவே உற்பத்தியை நிறுத்தி வைத்து, திட்டமிட்டு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.
(இந்து நாளேடு, அக். 4)
தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்
நன்றி: தீக்கதிர்