பாகிஸ்தான் : மத அடிப்படைவாதத்தின் கோரமுகம்!சல்மான் தசீர், ஆசியா பீபீயுடன்

ப்படியொரு நெருக்கடியில் பாகிஸ்தான் இருக்கிறது என்பதையும், என்ன விதமான அச்சத்தில் அங்குள்ள மக்கள் உறைந்து போயிருக்கிறார்கள் என்பதையும் சல்மான் தசீரின் கொலை உலகுக்கு உணர்த்திக்கொண்டு இருக்கிறது. மத அடிப்படைவாதத்தின் கோரப் பிடியில் ஒரு தேசம் சிக்குண்டு இருப்பதை வேதனையோடு பார்க்க வேண்டியிருக்கிறது.

சல்மான் தசீர் ஒன்றும் சாதாரண மனிதர் அல்லை. பாகிஸ்தானில் பஞ்சாபின் ஆளுனர். ஆளும் கட்சியில் மிக முக்கியமானவர். அதிபர் சர்தாரிக்கு நெருக்கமானவர். அப்பேர்ப்பட்டவரைத்தான், அவரது பாதுகாவலர்களின் ஒருவனான ஹூசேன் காதரே சுட்டிக் கொன்றிருக்கிறான். “அவரைக் கொன்றது நியாயமே” என்று பகிரங்கமாக மத அடிப்படைவாதிகள் பிரகடனம் செய்கிறார்கள். அவரது இறுதிச்சடங்கில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது, அவருக்காகப் பேசுபவர்களுக்கும் இதே நிலைதான் என்று சத்தமாய் சொல்கிறார்கள். கொலையாளியான 26 வயது காதரை கொண்டாடுகிறார்கள். கோர்ட்டுக்கு அவன் அழைத்து வரப்பட்டபோது,  ரோஜா இதழ்களை அவன் மீது சொரிந்து  “இறைவன் மகத்தானவன்” எனப் போற்றுகிறார்கள். அரசு வேடிக்கப் பார்க்கிறது. மெல்ல முணுமுணுக்கும் சிலரைத் தவிர பொதுவாக, மக்கள் வாய்களை இறுக மூடிக் கொள்கிறார்கள். இந்தக் காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் ஒருவரால் உள்வாங்க முடியுமானால் பாகிஸ்தான் என்னும் நம் அண்டைய தேசம் எந்தவிதமான சூழலில் விழிபிதுங்கி நிற்கிறது என்பதை எந்த விளக்கமும், விவரணைகளும் இல்லாமல் உணர முடியும்.

ஆசியா பீபீ என்னும் சிறுபான்மை கிறித்துவ மதத்தைச் சார்ந்த பெண்மணி, முகம்மது நபியை இழிவாகப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டார். பாகிஸ்தானின் மத நிந்தனைச் சட்டத்தின் பிரகாரம் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. மத நம்பிக்கையுள்ளவராயிருந்தாலும், மனிதாபிமானமும், மதச்சார்பின்மைப் பார்வையும் கொண்டு இருந்த சல்மான் தசீர் இதனைக் கண்டித்தார். சிறையில் இருக்கும் ஆசியா பீபீயைச் சந்தித்து, ஆதரவாகப் பேசியதோடு, பத்திரிகையாளர்களுக்கு, மத நிந்தனைச் சட்டத்தை கறுப்புச் சட்டமென பேட்டியளித்தார். இந்த மத நிந்தனைச் சட்டம், சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கும், அச்சத்தில் வாழ்வதற்குமான ஏறபாடாகவே தொடர்ந்து  இருந்து வருகிறது. அதை எதிர்த்த ஜனநாயக வேட்கை கொண்ட மனிதர்களின் ஒற்றைக்குரலாக சல்மான் தசீர் இருந்தார். அடங்காத வெறுப்பும், தீராத கோபமும் கொண்ட இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் மூர்க்க உருவமாய் காதர், முகம்மது நபியின் பேரில் அவரைச் சுட்டிக்கொன்று, “என் கடமையை செய்திருக்கிறேன்” என அறிவித்திருக்கிறான்.

‘அவன் மட்டும் இந்தக் காரியத்தைச் செய்தானா, அவனுக்குப் பின்னால் எந்த அமைப்பு இருந்தது’ என்று இப்போது விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் விசாரிக்க வேண்டிய வேறு முக்கிய விஷயங்களும் இருக்கின்றன. ஜனநாயகம், மதச்சார்பின்மை, பாதுகாப்பு என ஒரு தேசத்தின் பலமுனைகளுக்கும் சேதம் ஏற்பட்டு இருக்கும் இந்த நேரத்திலும், இந்த படுகொலை குறித்து கருத்துச் சொல்கிறவர்கள் கவனமாக இருக்கிறார்கள். அரசு, பத்திரிகைகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பிலும் வார்த்தைகளுக்கிடையில் ஒரு கனத்த மௌனம் அடைந்து கிடப்பதைப் பார்க்க முடிகிறது. அதுதான் பாகிஸ்தான் என்னும் நிலப்பரப்பின் விதியாகக் கிடக்கிறது. கொலையைக் கண்டிப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். கொலையைக் கண்டித்து விட்டு, இறைவன் மீது தீவீர நம்பிக்கை உள்ளவர்களின் செயல் இது என முணுமுணுக்கிறார்கள். இதே அபிப்பிராயங்கள்தான் தற்கொலைத் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாகும்போதும் வெளிப்படுகிறது.  “இந்தச் செயல் மோசமானது” என்று சொல்லிவிட்டு “இஸ்லாத்திற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் கோபம் இப்படி வெளிப்படுகிறது” என்ற வார்த்தைகளைத்தான் கேட்க முடியும்.

இத்தனைக்கும், மத அடிப்படைவாதக் கட்சிகள் பாகிஸ்தானில் தேர்தல்களில் வெற்றி பெறுவது இல்லை. அதில் தெளிவாக இருக்கிற மக்கள், ஏன் இதுபோன்ற சோதனையான நேரங்களில் மௌனம் சாதிக்கிறார்கள் என்பதுதான் ஆராயப்பட வேண்டியதும், அறியப்பட வேண்டியதும் ஆகிறது. மத நம்பிக்கையுள்ள மக்களிடம், மத அடிப்படைவாதிகளால், ஆதிக்கம் செலுத்தவும், செல்வாக்கு கொண்டு இருக்கவும் முடிந்திருக்கிறது. இதனை முறியடிக்க கிளம்பும் முயற்சிகள் மிக குரூரமாகவும் முளையிலேயே கிள்ளியெறிவதில் மதவெறியர்கள் வன்மத்தோடு இருக்கிறார்கள். அமைகின்ற அரசுகளும் மதச்சார்பின்மை, ஜனநாயகம் குறித்து அழுத்தமாகப் பேசாமல், மத அடிப்படைவாதிகளோடு சமரசம் செய்துகொள்வதாக இருக்கின்றன. இவைதாம் இன்று பாகிஸ்தானின் சாபமாகவும், மக்களின் மௌனமாகவும் திரண்டு நிற்கிறது.

‘இந்தியா எவ்வளவோ பரவாயில்லை’ என்று சொல்வதையும் இந்த நேரத்தில் கேட்க முடிகிறது. உண்மைதாம். இந்தியாவில் மதச்சார்பின்மையை, ஜனநாயகத்தைத் தூக்கிப் பிடிக்கிற சக்திகள் ஓரளவுக்கு வலுவாக இருக்கின்றன. அவர்களின் தொடர்ந்த பிரச்சாரங்களினால், இயக்கங்களினால்தான் ‘பரவாயில்லை’ எனச் சொல்ல முடிகிறது. இதனை பாகிஸ்தான் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதே வேளையில், மத அடிப்படைவாதம் என்பது எவ்வளவு குரூரமானது எனபதையும், பெரும்பான்மை அடிப்படைவாதம் எப்பேர்ப்பட்ட பாசிசத்தை உள்ளடக்கியது என்பதையும், மௌனம் சாதித்தால் இந்தியாவில் இந்துத்துவா சக்திகளும் இத்தகைய  தீய சக்திகளாக உருப்பெறும் என்கிற அபாயத்தையும் பாகிஸ்தானிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போது அதற்கான வெளிச்சமும் பாகிஸ்தானில் தெரியத்தான் செய்கிறது. இத்தனை மிரட்டல்களுக்குப் பின்னரும் மெழுகுவர்த்திகளோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் சல்மான் தசீர் என்னும் அந்த மகத்தான பாகிஸ்தானியப் புதல்வனுக்கு இறுதி மரியாதை செலுத்தியிருக்கிறர்கள். கீழே, ஒரு குழந்தையின் கையில் வைத்திருக்கும் அந்த செய்தியில்தான் நாம் இப்போது நம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது.

_50675291_010947374-2

கருத்துகள்

30 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. சகோ.மாதவராஜ் அவர்களே...

  மத நம்பிக்கை என்றால் என்ன?

  அடிப்படைவாதம் என்றால் என்ன?

  மத அடிப்படைவாதம் என்றால் என்ன?

  இஸ்லாமிய மத அடிப்படைவாதம் என்றால் என்ன?

  பெரும்பான்மை அடிப்படைவாதம் என்றால் என்ன?

  தயவு செய்து சொல்லுங்களேன்....

  Please....
  Please....
  Please....

  உங்களை கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. Sir,

  very good ARTICLE...

  Actually, Pakistan shall be a reminder / benchmark to us that we should control our share of hindutva fanatics.

  With our Hindutva goons getting more support, we are becoming a hindu Pakistan...

  பதிலளிநீக்கு
 3. y every time talking abt Hindu terrorism, No hindu's mind having terrorism. May be some one having revenge because they or their love oneafftected already.

  பதிலளிநீக்கு
 4. சகோ.மாதவராஜ் அவர்களே...

  For eg. a man who strictly follows fundamentals of traffic rules is called as 'traffic fundamentalist'.

  Is he good or the who does not follow the traffic fundamentals is good?

  On the same basis the who follows the islamic fundamentals must be termed as 'islamic fundamentalist'. Who doesn't follow must be anti-islamic fundamentalist or in other words non-muslim.

  Ok. What is the islamic fundaments of this issue?

  முஹம்மது நபி(ஸல்)அவர்களை பற்றியும் அவரின் மனைவி பற்றியும் அவதூறு கூரியவனுக்கும் எப்போதும் இஸ்லாத்திற்கும் நபிக்கும் எதிராக சதித்திட்டம் தீட்டி நபிக்கு பல இன்னல்களை செய்பவனுமான அப்துல்லாஹ் பின் உபைஹ் ஒருநாள் இயற்கைமரணம் அடைந்தபோது சிலர் தடுத்தும் அவனுக்காக பிரார்த்தித்து இறுதித்தொழுகை நடத்த முன் வந்தார்கள், நபி(ஸல்).

  தன்னை இரத்தம் வழிந்தோட கல்லால் அடித்த தாயிப் மக்களின் மனமாற்றத்திற்கு பிரார்த்திதார்களே அன்றி கிஞ்சித்தும் கடுஞ்சொல் கூறவில்லை, நபி(ஸல்).

  இதுதான் இஸ்லாமிய மத அடிப்படைவாதம்.

  இதனடிப்படையில் அந்த பாகிஸ்தானிய சட்டம் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்துக்கு எதிரானது..!

  அதை தூக்க வேண்டும் என்று சொன்ன சல்மான் தசீர் தான் மத அடிப்படைவாதி.

  இவரைக்கொன்ற கொலைகாரன் இஸ்லாமிய அடிப்படையை பின்பாற்றாத கொடூர மனித விலங்கு. இவன் சொர்க்கம் செல்ல ஆசைப்படும் நல்லவனா? இல்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்றால் நேரடி நரகம் என்பதும், அரசாங்கம் மட்டுமே தண்டிக்க அனுமதி பெற்றது என்பதும் இஸ்லாமிய அடிப்படைவாதம். இந்த அடிப்படைகளை மீருபவன் மத விரோதி. அடிப்படைவாதி அல்ல.

  ஆக.

  இங்கே ஒரு நல்ல மத அடிப்படைவாதி, ஒரு இஸ்லாமிய மத விரோதியால் கொல்லப்பட்டார் என்பதே சரி.

  திருடனை திருடன் என்றும் போலிசை போலிஸ் என்றும் அழையுங்கள். மாற்றி அழைக்க வேண்டாம். குழப்பமாக இருக்கிறது.

  வேண்டுமானால், இந்த அரக்கனை 'ஜியா உல் ஹக்கிய சட்ட அடிப்படைவாதி' என்று சொல்லிக்கொள்ளுங்கள். I don't care.

  --இப்படிக்கு,
  ஒரு இஸ்லாமிய மத அடிப்படைவாதி,
  (என்னை மனிதத்தமையுள்ளவனாக வாழ வைத்திருப்பதே இஸ்லாமிய மத அடிப்படைவாதம்தான்)

  பதிலளிநீக்கு
 5. மிகவும் சிறந்த கட்டுரை.

  பதிலளிநீக்கு
 6. இது பாகிஸ்தானால் விதைக்கப்பட்ட பிரச்சினை என்றாலும் இன்றைக்கு பாகிஸ்தானின் பிரச்சினை மட்டுமல்ல. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் உண்மையான முகம் இது தான்.

  இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஏதோ அமெரிக்காவுக்கும் தலிபான் கும்பலுக்கும் இடையில் நடக்கும் போரல்ல. அது மனிதர்களுக்கும் காட்டுமிராண்டி கும்பலுக்கும் இடையில் நடக்கும் போர்.

  இதில் நான் எந்த பக்கம் என்பதில் நான் தெளிவாகவே இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. //
  முஹம்மத் ஆஷிக் said...
  சகோ.மாதவராஜ் அவர்களே...

  மத நம்பிக்கை என்றால் என்ன?

  அடிப்படைவாதம் என்றால் என்ன?

  மத அடிப்படைவாதம் என்றால் என்ன?

  இஸ்லாமிய மத அடிப்படைவாதம் என்றால் என்ன?

  பெரும்பான்மை அடிப்படைவாதம் என்றால் என்ன?

  தயவு செய்து சொல்லுங்களேன்....

  Please....
  Please....
  Please....

  உங்களை கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன்...

  //

  ஏன், நீங்களே கூட சொல்லலாமே?

  பதிலளிநீக்கு
 8. @ அதுசரி(?!)

  //இஸ்லாமிய பயங்கரவாதத்தின்//

  //இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு//

  //காட்டுமிராண்டி கும்பலுக்கும்//

  நன்றி சகோதரர்... அதுதவறு ச்சே... அதுசரி.

  //ஏன், நீங்களே கூட சொல்லலாமே?//---எழுதியவரிடம் கேட்டறிந்து கொள்வதே சரி என்று நினைக்கிறேன். அதுசரிதானே சகோ.?

  பதிலளிநீக்கு
 9. அந்த ஏக இறையின் கருணை உங்கள் மீது நிலவட்டுமாக.
  அன்பின் சகோதரர் மாதவராஜ்,
  முஹம்மத் ஆஷிக் கேட்ட அதே கேள்விகள் தான் எனது கேள்விகளும்,
  இக்கேள்விகளுக்கு பதில் தாங்களாவது அல்லது இங்கு கருத்து தெரிவித்திருக்கின்ற சில மெத்த படித்த மேதாவிகளாவது தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன்....

  பதிலளிநீக்கு
 10. கேள்விகளுக்கு பதில் தருவீர்கள் தானே. அல்லது இதுவும் கடந்து போகும் என்று நரசிம்மராவ் பாணியில் இருந்து விடுவீர்களா மாதவராஜ்?

  பதிலளிநீக்கு
 11. @முஹம்மத் ஆஷிக்

  இங்கே ஒரு நல்ல மத அடிப்படைவாதி, ஒரு இஸ்லாமிய மத விரோதியால் கொல்லப்பட்டார் என்பதே சரி.

  திருடனை திருடன் என்றும் போலிசை போலிஸ் என்றும் அழையுங்கள். மாற்றி அழைக்க வேண்டாம். குழப்பமாக இருக்கிறது. ////

  உங்கள் எண்ணம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..ஆனால், வார்த்தை விளையாட்டுகளினால் என்ன பயன் நண்பரே.....?  நீங்கள் இசுலாம் மதத்தின் மேல் நம்பிக்கை வைத்து, இது சரி இது தவறு என பிரிக்கிறீர்கள்... என்னைப் போல் கடவுளை நம்பாதவர்கள், மனித நேயத்தில் நம்பிக்கை வைத்து, யார் நல்லவர் யார் கெட்டவர் என்றும் பெயரிடுகிறோம்.... அவ்வாறு பெயரிடும்போது, பிரச்சினையின் மூலத்தை பயன்படுத்தி 'இன்ன' மத அடிப்படைவாதி என அழைக்கிறோம்....

  உங்களுக்கு பிரச்சினை என்னவென்று புரிகிறதல்லவா, அதுவே முக்கியம்...

  பதிலளிநீக்கு
 12. @நன்றி.. சகோ.ஷேக்தாவூத்.

  @சகோ.Sengathir Selvan K

  //மனித நேயத்தில் நம்பிக்கை வைத்து, யார் நல்லவர் யார் கெட்டவர் என்றும் பெயரிடுகிறோம்.... //--சரி. அப்படி என்றால்.....,

  "பாகிஸ்தான் : மத அடிப்படைவாதத்தின் எதிரிகளின் கோரமுகம்!"---என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும்.

  //பிரச்சினையின் மூலத்தை பயன்படுத்தி 'இன்ன' மத அடிப்படைவாதி என அழைக்கிறோம்....//--அதைத்தான் தலைகீழ் தவறான பயன்பாடு என்கிறேன். நான் அவ்வளவு தெளிவாக வாதத்தை உதாரணத்துடன் கிளிபபிள்ளைக்கு சொல்றது மாதிரி சொல்லிட்டேன்... ஆனால்...
  //உங்களுக்கு பிரச்சினை என்னவென்று புரிகிறதல்லவா, அதுவே முக்கியம்...//---'நீ எக்கேடு கெட்டால் எனக்கென்ன' என்று என் மீது ஏறி மிதித்து செல்கின்றீர்கள். நான் எப்படி 'புரிந்தால் சரி' என போக முடியும்?

  பிற நாடுகளின் மீதான அமெரிக்காவின் முதலாளித்துவ பொருளாதார,ஆயுத அடக்குமுறை அத்துமீறலை சொல்லும் என் பதிவில் நான்...
  //"அமெரிக்கா: கம்யுனிஸ அடிப்படைவாதத்தின் கோரமுகம்"// ---என்று தலைப்பு இட்டால்... "அமெரிக்க பிரச்சினை எதோ புரிந்தால் சரி" என்று சும்மா போவாரா சகோ.மாதவராஜ்? "டேய் முட்டாளே" என்று என்னிடம் பின்னூட்ட சண்டைக்கு வந்தால்தான் அவர் உண்மையான கம்யுநிஸவாதி அல்லவா?

  சகோ.மாதவராஜ் அவர்களே?
  சரி... இதற்கு என்னதான் உங்கள் பதில்? இது உங்கள் தளம்தானே? உங்கள் பதிவுதானே?

  பதிலளிநீக்கு
 13. முஹம்மது ஆஷிக்!

  மிகப்பெரிய விளக்கங்கள் இல்லாமல், சாதாரணமாகப் பேசுவோம். ஒன்றின் மீது நம்பிக்கை கொள்வது தவறில்லை. அந்த ஒன்று மட்டுமே யாவற்றையும் விட சிறந்தது, புனிதமானது என்னும் வெறி கொள்வது என்பது தீங்கானது. நம்பிக்கைக்கும், அடிப்படைவாதத்திற்குமான விஷயம் இங்குதான் இருக்கிறது.

  தனக்கு இருக்கும் நம்பிக்கை போன்று, அடுத்தவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் மதிக்கவோ, போற்றவோத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் இழிவுபடுத்தாமலாவது இருக்கத் தெரிய வேண்டும். இதுவே, பல்வேறு நம்பிக்கைகள், வழிகள் கொண்டு இருக்கிற மனித சமூகத்தில் இணக்கங்களை ஏற்படுத்தும். இதற்கு ஊறு விளைவித்து, தன்னுடையது மட்டுமே உயர்ந்தது என நிலைநாட்ட முயற்சிக்கும்போது, சமூகத்தில் பதற்றங்கள் ஏற்படுகின்றன.

  இதுகுறித்து, தாங்கள் முன்னும் பின்னுமாய் குழப்பங்களோடு நிறையச் சொல்லி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 14. சகோதரர் மாதவராஜ் அவர்களுக்கு

  உங்களுடைய பதிலிற்கும் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

  ஏங்க ஏ மேலேயும் நான் நம்பிக்கை கொண்டியுக்கிற இஸ்லாத்தின் மீதும் சாக்கடை தண்ணியை அள்ளி வீசுறீங்கன்னு கேட்டா

  நீ அடுத்த மதத்தையும் கொள்கைகளையும் தவறு என்று சொல்லாதே என்கிறீர்கள்

  நாங்க எப்பா எங்க கொள்க மட்டும்தான் சரியானது அடுத்த கொள்கைகள் தவறானவைன்னு சொன்னோம் கொஞ்சம் விளக்கவும்

  பதிலளிநீக்கு
 15. சகோதரர் மாதவராஜ்

  மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்
  முஹம்மது நபி(ஸல்)

  தனது கைகளாலும் நாவாலும் பிறரைப் பாதுகாப்பாவனே முஸ்லிம்
  முஹம்மது நபி(ஸல்)

  எவரிடத்தில் மனிதகுலத்தின் உயிரும் உடைமைகளும் பாதுகாப்பாக உள்ளனவோ அவரே முஸ்லிம்
  முஹம்மது நபி (ஸல்)

  அண்டைவீட்டுக்காரனுக்குக் கைகாளலும் நாவினாலும் தொல்லை தருபவன் முஸ்லிமல்லன்

  அண்டைவீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவன் முஸ்லிம் அல்லன்
  முஹம்மது நபி(ஸல்)

  மேலும் முஸ்லிம்களே அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரிடம் பிரார்த்தனை புரிகின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள்
  (அல்குர்ஆன்6:108)

  ”ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லாமனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்”
  (அல்குர்ஆன்:5:32)

  உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு என்னுடைய மார்க்கம் எனக்கு
  (அல்குர்ஆன் 109:6)
  இந்த அடிப்படைகளை பின்பற்றும் அடிப்படைவாதி நான் நீங்கள் அடிப்படைவாதி என்று யாரை சொல்லுகிறீர்கள் தயவுசெய்து சொல்லுங்கள்

  பதிலளிநீக்கு
 16. சகோதரர் மாதவ ராஜ்,

  முகம்மது ஆஷிக் மிகவும் அருமையாக கேள்விகளை தொகுத்துள்ளார், அதற்கு தக்க பதில் சொல்லுங்கள். சகோதரர் ஹைதர் அலி அவர்கள் ஒரு இஸ்லாமிய அடிப்படை வாதி எப்படி இருப்பன் என்று கேள்வியின் மூலமே பதிலும் அளித்துள்ளார், இதை பின் தொடர்பவானே இஸ்லாமிய அடிப்படை வாதி. இதை தான் நானும் பின் தொடர்கிறேன் ஏன் என்றால் நானும் இஸ்லாமிய அடிப்படை வாதியே. இந்த பின்னூட்டங்களை படித்தாவது தெரிந்து கொள்ளுங்கள் மத அடிப்படை வாதி யார். அடிப்படை வாதி யார் இல்லை என்று. இதை மனதில் நிலை நிறுத்தி கொண்டு மீண்டும் ஒருமுறை நீங்கள் எழுதிய பதிவை நீங்களே ஒருமுறை படித்து பார்க்கவும் அப்பொழுது புரியும் உங்களுக்கு.
  என்றும் அன்புடன்
  சகோதரன் ஜே ஜே

  பதிலளிநீக்கு
 17. neengalumaa maathavaraj?????

  mathangal, mathanambikkai illai, aprm, manithaabimaanam.. ithellam vidunga,..

  intha ulagathula ellarukkum avanavan thaai romba paasathirkuriyaval..

  avala yaarum thappa paesumbothu ovvoruthanoda reactioanum vaeru maathiriya irukkum..

  inga paatha sila manithaabimaanigal, en thaaiyai paththi thappa paesurathu un karuththu suthanthiramnu amaithiyaa irukkalaam..

  enna pola thaai paaaththin adippadaivaathigal avana engalaala mudinja alavukku ketta vaarthaigal solli thittalaam. avan naasama pogattumnu vaendika kooda seiyalam.

  enagalukkum maelaa sakthi ulla silar avangala thakkavum seiyalaam.

  nammaiyum nammoda piranthavangaliyum saeththu oru chinna vattathukkulla adainjidura oru thaaiku ipdi reaction nu sonna, islama nambikkai konda ella muslimkalaiyum kaaya paduthurathu pola nabigala paththi thappa paesumbothu vilaivugal athigama irukkumillaiya..

  naa periya arivu jeeviya paesa varala.. ella vitha unarvugalum ulla oru saraasari manusa piraviya paesuraen..

  athu yaen, islaaththa thappa paesurathu ellarukkum ippo avlo pidikkuthu?

  ungala naa nadunilai vaathinu than ninaichaen, ninaichittu irukkaen..
  antha manusana kolai senjathu thappunu sonna mathavaraj antha ponnu senjathu thappunu sollavae illiyae..

  marubadiyum kaekkuraen,
  neengalumaa???

  பதிலளிநீக்கு
 18. பின்னூட்டங்கள் பார்த்து பயமா இருக்கு!

  பதிலளிநீக்கு
 19. பாகிஸ்தான் பத்தி நல்லதோ கெட்டதோ எதுவும் பேசாதிங்க, எல்லோருக்கும் கோவம் வருதில்லே!

  பதிலளிநீக்கு
 20. Nisha,

  recenta 'thai mel sathiyam' padam paarthinngala?

  rajini supera nadichirupaare...?

  பதிலளிநீக்கு
 21. மனித நேயத்தில் நம்பிக்கை வைத்து, யார் நல்லவர் யார் கெட்டவர் என்றும் பெயரிடுகிறோம்.... //--சரி. அப்படி என்றால்....., ////


  இந்து / இசுலாம் போன்ற மதங்களின் அவசியமில்லாமல் மனித நேயம் என்ற‌ மனிதனின் பரிணாம உள்ளுணர்வை வைத்து தரம் பிரிப்போம் என்று பொருள்...  அதைத்தான் தலைகீழ் தவறான பயன்பாடு என்கிறேன். நான் அவ்வளவு தெளிவாக வாதத்தை உதாரணத்துடன் கிளிபபிள்ளைக்கு சொல்றது மாதிரி சொல்லிட்டேன்... ஆனால்.../////

  ஹாஹா... இசுலாமிய கிளிப்பிள்ளைக்கு வேண்டுமெனில் உங்களின் தர்க்கம் விளங்கியிருக்கலாம்.....

  நீங்கள் எல்லோரையும் இசுலாமிய கண்னோட்ட்த்துடன் அணுக வேண்டும் என எதிர்ப்பார்க்கக் கூடாது....

  என்னைப் போன்ற இசுலாமியரல்லாத பலருக்கு இசுலாம் மட்டும்தான் தான் தெரியும்.. நீங்கள் அர்த்தம் கற்பிக்கும் 'இசுலாமிய அடிப்படைவாதம்' தெரியாது.....

  எந்தவொரு கொள்கையையும் / மதக் கோட்பாடுகளையும் அதன் உள்ளர்த்தத்தை உணராமல், பகுத்தறியாமல், வறட்டுத்தனமாக பின்பற்றுதலை ஆங்கிலத்தில் 'fundementalist' என்பார்கள்.. அதையே தமிழில் அடிப்படைவாதம் என்கிறொம்.. இப்படியொரு கருத்தாக்கம் ச்மரச, சுதந்திர சமூகத்தில் தேவை என்கின்றோம்..

  ஆனால், இவ்வாறு வறட்டுத்தனமாக பின்பற்றுதலை மத விரோதி என அழைப்பது மதரீதியாக அரசாளும் (பாசிச) சமூகத்தில்தான் பொருந்தும்.


  'நீ எக்கேடு கெட்டால் எனக்கென்ன' என்று என் மீது ஏறி மிதித்து செல்கின்றீர்கள். நான் எப்படி 'புரிந்தால் சரி' என போக முடியும்?///

  எந்தவொரு சமூகத்திலும் இந்த 'அடிப்படைவாதம்' உள்ளது... இசுலாம் சம்பந்தப்பட்ட சமூகத்திலும்தான்..

  இதை இகழ்ச்சியாக‌ நினைத்தால், இசுலாம் சம்பந்தப்பட்ட சமூகத்தில் நான் சொல்லும் 'அடிப்படைவாதம்' இல்லை என் நிரூபியுங்கள்..

  பிற நாடுகளின் மீதான அமெரிக்காவின் முதலாளித்துவ பொருளாதார,ஆயுத அடக்குமுறை அத்துமீறலை சொல்லும் என் பதிவில் நான்...
  //"அமெரிக்கா: கம்யுனிஸ அடிப்படைவாதத்தின் கோரமுகம்"// ---என்று தலைப்பு இட்டால்... "அமெரிக்க பிரச்சினை எதோ புரிந்தால் சரி" என்று சும்மா போவாரா சகோ.மாதவராஜ்? "டேய் முட்டாளே" என்று என்னிடம் பின்னூட்ட சண்டைக்கு வந்தால்தான் அவர் உண்மையான கம்யுநிஸவாதி அல்லவா?

  எந்தவொரு கொள்கையும் விமர்ச்சனத்துக்கு உட்பட்டதுதான்... அதை விவாதிக்க வேண்டுமே தவிர மென்டாலொட்டியை வளர்க்கக் கூடாது...

  பதிலளிநீக்கு
 22. Sengathir Selvan K அவர்களுக்கு

  //என்னைப் போன்ற இசுலாமியரல்லாத பலருக்கு இசுலாம் மட்டும்தான் தான் தெரியும்..//

  அண்ணே ஒங்களுக்கு எந்த வகையான இஸ்லாம் தெரியுமுன்னு சொன்ன இந்த கிளிப்புள்ள தேரிஞ்சுகிருமுள்ள

  ஒங்களுக்கு எந்த இசுலாம் மட்டும் தெரியும் சொல்லுங்கண்ணே

  பதிலளிநீக்கு
 23. //பாகிஸ்தான் பத்தி நல்லதோ கெட்டதோ எதுவும் பேசாதிங்க, எல்லோருக்கும் கோவம் வருதில்லே!//

  அட பைத்தியகாரங்களா??நீங்க பாக்கிஸ்தான பத்தி பேசுனா என்ன பங்ளாதேஷ பத்தி பேசுனா எங்களுக்கென்ன???

  நடந்த சம்பவத்தோட உண்மைத்தன்மை தெரியாமல் யார் அடிப்படை வாதி,யார் பயங்கரவாதி என பிரித்தரியும் தெளிவில்லாமல் உளரினால்,அதுக்கு ஒப்பாரி வைக்க நாலு பேர்வேரையா...

  முஸ்லீம்களை பொருத்தவரை சல்மான் தசீருகே ஆதரவு...பாக்கிஸ்தானிய சட்டத்திற்கோ,அல்லது அந்த கொலைகாரனுக்கோ ஆதரவு இல்லை,இல்லவே இல்லை....

  இது குறித்த முழுமையான விபரங்களை அறிய நாடினால்...

  http://pinnoottavaathi.blogspot.com/2011/01/blog-post_09.html

  இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

  பதிலளிநீக்கு
 24. நபியே! (ஏக இறைவனை) மறுப்போருடனும் , நயவஞ்சகர்களுடனும் போரிடுவீர்களாக! அவர்களிடம் கடுமையாக நடப்பீராக! அவர்களின் புகலிடம் நரகம். (குரான் 9 : 73 )


  வேதம் கொடுக்கப்பட்டோரில், அல்லாவையும் இறுதி நாளையும் நம்பாமல், அல்லாவும் அவரது தூதரும் விலக்கியவற்றை விலக்காமல் , உண்மையான மார்கத்தை கடைபிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தமது கைகளால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள். (குரான் 9 : 29 )


  நமது வசனக்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல் கருகும்போதெல்லாம் அவர்கள் வேதனையை உணருவதற்காக வேறு தோள்களை அவர்களுக்கு மாற்றுவோம். (குரான் 4:56 )  so -called அடிப்படைவாதிகளுக்கும், அண்ணன் ஹைதர் அலிக்கும் ,

  மேலேயுள்ள வசனங்களில், அல்லாவை நம்பாதவர்களுடன் போரிடுமாறு முஸ்லீம்களுக்கு ஆணையிடப்படுகிறது. இதை நீங்கள் மறுப்பீர்களாயின் மூன்றாவது வசனத்தில் உள்ள வேதனையை அனுபவிக்க நேரிடும் என்று வேறு அச்சுறுத்தப் படுகிறது. பாகிஸ்தான் அரசும், காதரும் இந்த வசனங்களை செயல்படுத்தியவர்கள் தாமே?


  அவர்கள்தானே இசுலாத்தை கடைப்பிடித்து அல்லா சொன்னதை செய்தவர்கள்? அப்படியானால் அவர்கள் தானே உண்மையான அடிப்படைவாதிகள்? அப்படியிருக்க, இஸ்லாத்தின் சில வசனக்கள் நிகழ்கால நடைமுறைக்கு உதவாது என்றுணர்ந்தோ என்னவோ :) , அல்லாவை நம்பாதவர்கள் மேல் சகோதரத்துவம் காட்ட முயல்கிற நீங்கள் ஏன் 'அடிப்படைவாத' அந்தஸ்துக்கு ஆசைப்பட வேண்டும்?

  -Potemkin

  பதிலளிநீக்கு
 25. நிஷா அவர்களுக்கு,

  தாயைப் பழித்தால் சினமுறுவதைப் போல அல்லாவைப் பழித்ததால் (அல்லது அப்படிக் கூறப்படுவதால்) ஆசியா பீபி மேல் கொலைவெறி கொள்பவர்களை ஆதரிக்கிறீர்கள். சரி நீங்கள் ஒரு பெண் என்பதால் கேட்கிறேன்.  போர்களின் போது தோற்கடிக்கப்பட்ட எதிரியின் மனைவியையும் மகளையும் அடிமையாக்கிகொள்ள இஸ்லாம் அனுமதித்துள்ளது.
  கீழே உள்ள வசனத்தில் அவ்வாறு அடிமைப்படுத்தப்பட்ட பெண்ணுடனான பாலியல் உறவையும் இஸ்லாம் அங்கீகரிக்கிறது. அந்தப் பெண்ணும் ஒரு தாய் தானே?  "அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. (குரான் 4:3 )"

  பதிலளிநீக்கு
 26. தம்பி போதேம்கின் எப்புடியிருக்கீக

  ஒங்ககிட்ட பேசி எம்புட்டு நாளாச்சு நல்லாயிருக்கீகளா?

  தம்பி போதம்கின் சுட்டிகாட்டிய குர்ஆன் வசனம்.

  நபியே! (ஏக இறைவனை) மறுப்போருடனும் , நயவஞ்சகர்களுடனும் போரிடுவீர்களாக! அவர்களிடம் கடுமையாக நடப்பீராக! அவர்களின் புகலிடம் நரகம். (குரான் 9 : 73)

  முரளி மனோகர் ஜொஷி ஒரு மேடையில் சுட்டி காட்டிய குர்ஆன் வசனம்.
  கபிர்களை கானும் இடங்களிலேல்லாம் வெட்டுங்கள்.

  என்ன தம்பி ஒங்க குரலும் மனோகர் ஜொஷி குரலும் ஒரே மாதிரி ஒலிக்கிது

  எது எப்புடி ஒலிச்சாலும் நாங்க ஒங்களுக்கு வெளக்கம் சொல்ல தயார இருக்கோம்

  இப்புடியா தலைப்பையும் தூரையும் விட்டுபுட்டு கேலையே பிடுச்சு ஆட்டுனது மாதிரிய கேள்வி கேக்குறது?

  காபிர் இறைமறுப்பளர்கள் யார்?
  இந்த வசனம் எந்த சூழலில் இறங்கியது?

  காபிர் என்றால் ஒரு விஷயத்தை மறுக்கக் கூடியவர்கள் என்று பொருள்

  வசனம் இறங்கிய சூழல்
  முஹம்மது நபி அவர்களையும் அவரை பின்பற்றிய தோழர்களின் வீடு வாசல் சொத்து சுகங்கள் எல்லாத்தையும் பறிச்சுப்புட்டு மாக்கவை விட்டு பத்தி விட்டாய்ங்க மதீனாவுக்கு அகதியாக வந்து தனி அரச உருவாக்கி அவுக பாட்டுக்கு இருக்கும்போது
  இந்த மக்கா காரய்ங்க ஒங்கள நிம்மதியா இருக்க விட்டுறுவமா என்கிற ரீதியில்
  மதீனா மீது படையே தேரட்டிகிட்டு சண்டைக்கி வாந்தய்ங்கே
  இந்த சூழலில் முஹம்மது நபி மதீனாவியுள்ள பெண்களையும் குழந்தகளையும் அவர் எற்படுத்தியிருந்த சிறு இஸ்லாமிய அரசையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பிலிருந்த ஆட்சியாளர் என்ற முறையில் எறங்கிய வசனம் தான்
  (குரான் 9 : 73)
  ஹிட்லர் படைகள் லெனின் கிரேடு வரை ரஷ்யாவில் உள்ளே புகுந்து முன்னேறிய போது ஸ்டாலின் என்ன பூங்கொத்து கொடுத்த வரவேற்றார்
  செம்படை வீரர்களே தேசபக்தர்களே ஹிட்லரின் நாசி படைகளை சுடுங்கள் வெட்டுங்கள் குத்துங்கள் என்று தானே சொன்னார் அவரு சொல்லியும் சண்ட போட வரமா இருந்த ரஷ்யர்களை பார்த்து ஸ்டாலின் நீங்களல்லாம் தேச பக்தர்களா என்று கேட்பார்யல்லாவா
  ரஷ்யர்கள் எதிரி நாட்டு படையிடம் தாங்கள் நாட்டு ராணுவ நகர்வுகளை நயவஞ்சக தனமாக போட்டு கொடுத்தல் ஸ்டாலின் என்ன செய்வார் அல்லது என்ன செய்திருப்பார்
  (தம்பி கொஞ்சம் நீளமா போச்சு)
  மறுபடிக்கிம் வர்ரேன்

  பதிலளிநீக்கு
 27. //என்ன தம்பி ஒங்க குரலும் மனோகர் ஜொஷி குரலும் ஒரே மாதிரி ஒலிக்கிது//

  கள்ளு குடிச்சிட்டு வாந்தி எடுத்தவய்ங்களுக்கு , பாலப் பாத்தாலும் குமட்டாத்தாண்ணே செய்யும்.

  ஆனா பாருங்க... நீங்க படிக்கிறதும் பின் லேடன் படிக்கிறது ஒரே குரான் என்றாலும், ரெண்டு பேரு குரலும் ஒரே மாதிரி இருக்கறதா எனக்கு தோண மாட்டேங்குது.


  சரி உங்க வெளக்கத்த குடுத்து முடிங்க , அப்புறம் பேசுவோம் பொறுமையா...

  பதிலளிநீக்கு
 28. ஏய் ! இப்ப கவர்ணர கொன்னு புட்டான்களே அதுக்கு என்னபதில் ? அத விட்டுட்டு நாங்க மத அடிப்படை வாதி இல்ல என்றால் என்ன அர்த்தம் ?


  சரவணன்

  பதிலளிநீக்கு
 29. ஆரோக்கியமான பின்னூட்டங்கள் இல்லை எனவே இங்கே வாதிடுவது தேவையற்றது.

  உங்கள் இடுகை உண்மையை உரத்துச்சொல்கிறது. இந்துத்துவ வாதிகள் கூறும் போலி மதசார்பின்மையற்றவர்களாக நாம் இருந்தால் நம்மீது கல்லடி படாது.

  சல்மான் தசீர் மதச்சார்பின்மைக்காக உயிர்நீத்தார். மதம் ஒரு அரசைப் பிடித்தால் என்ன நிலைமையாகும் என்பதற்கு பாகிஸ்தான் சாட்சியாக உள்ளது. மனிதர்களை நல்வழிப்படுத்த மதம் தோன்றியது, ஆனால் மதங்களின் பெயரால் நட்க்கும் கலவரங்களும் யுத்தங்களும் மிகுந்த பயத்தையளிக்கிறது.

  மதச்சார்பின்மை எனும் கோசத்தை இன்னும் உயர்த்திப்பிடிப்போம்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!