நான்
பிறக்கும்போது கருப்பு
வளர்ந்தபோது கருப்பு
வெயிலில் நடந்தபோது கருப்பு
குளிரில் உறைந்தபோது கருப்பு
வெறித்து நின்ற போது கருப்பு
உடல்நலம் குன்றியபோது கருப்பு
இறந்த போதும் கருப்பு
நீயோ
பிறப்பில் இளஞ்சிவப்பு
வளர்ந்ததில் வெள்ளை
வெயிலில் சிவப்பு
குளிரில் நீலம்
வெறிப்பில் மஞ்சள்
உடல்நலம் குன்றியதில் பச்சை
இறப்பிலோ சாம்பல்
இந்த நீதான்
என்னை நிற பேதம் கொண்டவனாய் பார்க்கிறாய்?
(ஒரு கருப்பினக் குழந்தையின் இக்கவிதையை புதிய ஆசிரியன் பத்திரிகையில் வெளியிட்டு இருந்தார்கள். அதன் மொழியாக்கம்)
கருத்து சூப்பர்..
ReplyDeleteஇதற்கு முன் எங்கேயோ படித்ததாய் ஞாபகம்
ReplyDeleteஅருமை பகிர்வுக்கு நன்றி
குழந்தையின் ஏக்கப் பார்வையே கவிதையின் வலியை உணர்த்தி விடுகிறது.
ReplyDeleteForward Mailல் ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறேன். தமிழிலும் அற்புதம் :)
ReplyDeletereal one:
ReplyDeleteWhen I born, I black
When I grow up, I black
When I go in Sun, I black
When I scared, I black
When I sick, I black
And when I die, I still black
And you white fellow
When you born, you pink
When you grow up, you white
When you go in sun, you red
When you cold, you blue
When you scared, you yellow
When you sick, you green
And when you die, you gray
And you calling me colored??
this is better when u read it in English..
க"று"ப்பு தானே நிறத்திற்கு.
ReplyDeleteஉக்கிரமாய் ஒலிக்கிறது கருப்பின் குரல். அந்த இறுதி வரிகளும், படமும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி மாது அண்ணா.
ReplyDeleteDear Mathavaraj,
ReplyDeletethayavu seythu manniththu vidungal... tamil font illai ennidam.
karuppina kuzhandhaikal endru solvadhu ingu migapperiya thavaru... africa kuzhanthaikal endru solkiraarkal... colored... enbadhu inge avamathikkum oru sol.
kavithai abaaram... africa kuzhanthaikal maha azhagu mathavaraj... avarkalin kankal... kannam... minukku thol... karuppu minnal keetrukal.
anbudan
ragavan
தம்பி கூர்மதியன்!
ReplyDeleteமிக்க நன்றி.
தர்ஷன்!
நான் இப்போதுதான் புதிஉய ஆசிரியன் எனும் பத்திரிகையில் பார்த்தேன்.
அம்பிகா!
வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
நிலாரசிகன்!
மிக்க நன்ரி தம்பி.
வெண்காட்டான்!
இந்தக் கவிதையைத்தான் இங்கே மொழியாக்கம் செய்யத் துணிந்தேன். நீங்கள் சொல்வது போல, ஆங்கிலத்தில், இன்னும் அடர்த்தியும், ஆழமும் இருக்கிறது.
கையேடு!
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பலரும் இப்படி எழுதுகிறார்கள். நன்றி.
செ.சரவணக்குமார்!
மிக்க நன்றி தம்பி.
ராகவன்!
நீங்கள் எப்படி எழுதினாலும் சந்தோஷமே. ‘colored' என்னும் வார்த்தைக்கு நீங்கள் சொன்ன விளக்கமே உண்மை. அதைத் தமிழாக்கம் செய்வது எப்படி? கவிதையின் தொனி மாறுகிறது, இல்லையா?