சாரு நிவேதிதா: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல!



சாரு நிவேதிதாவின் எழுத்துக்களை நான் தொடர்ந்து படிப்பதில்லை. இப்படிச் சொல்வதில் எனக்கு எந்த அவமானமுமில்லை. அவருக்குத்தான் அவமானம்.
என் பிரியத்துக்குரிய எழுத்தாளர் ஷாஜஹான்தான் முதன்முதலில் சாரு நிவேதிதா என்பவரை இப்படி எனக்கு அறிமுகப்படுத்தியவர். இருபது வருடங்களுக்கு மேலிருக்கும் நடந்தது இது. மதுரையில் ஒரு நாடகவிழாவில் தன்னுடையதையும்  அரங்கேற்றியிருக்கிறார் இந்த சாரு நிவேதிதா. மங்கை, அரசு, முகில், குணசேகரன் போன்ற அற்புத கலைஞர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில் சாரு நிவேதிதாவின் நாடகம் அசிங்கங்களை அதிர்வுகளாக்கி அரங்கமேறி இருக்கிறது.  முதல் காட்சியிலேயே,  பின்னணி இசையின் சுருதியோடு ஒருவன்  ‘சுய இன்பம்’ காண்பதாக, குறியீடுகளற்ற அப்பட்டமான  காட்சி.  இலக்கியம், அதன் போக்குகள்,  அதன் இஸங்கள் எல்லாம் ஒரளவுக்கு அறிந்திருந்த மங்கை போன்றவர்கள் உட்கார முடியாமல் அரங்கை விட்டு வெளியேற, ஆத்திரமடைந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர்கள் , “நாடகத்தை நிறுத்துங்கள்” என்று கலகம் செய்திருக்கின்றனர். மேடைக்குப் பின்னாலிருந்து வந்த இந்த சாரு நிவேதிதா அலட்சியமாகவும்,  எழுத்தாளர் சங்கத் தோழர்களை மோசமாகவும் பேசியிருக்கிறார். அவ்வளவுதான். அங்கேயே, சாரு நிவேதிதா புரட்டி புரட்டி எடுக்கப்பட்டிருக்கிறார். அடித்தவர்கள் ஒன்றும் சாதரணமானவர்கள் இல்லை. மகத்தான படைப்பாளிகளும், கலைஞர்களும்! கொடுத்து வைத்தவர்தான் சாரு!

இந்த நிகழ்ச்சி எனக்கு சாரு நிவேதிதா என்பவரைப் பற்றி சில பிம்பங்களை எழுப்பியது. தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக எதையும் பொதுவெளியில் செய்யத் துணிபவர். கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துவதைச் சாக்காக வைத்து, அநாகரீகங்களை அரங்கேற்றத் துடிப்பவர்.  தனது படைப்புக்கள் அசாதாரணமானவை என்பதை நிலைநிறுத்துவதற்காக  சதா நேரமும் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டு இருப்பவர். இன்றுவரை அவரைப் பற்றிய இந்த சித்திரங்கள் சிதையாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார் சாரு நிவேதிதா என்பது முக்கியமான ஒன்றுதான். சிறுபத்திரிக்கைகள், இந்தியா டுடே, தெரிந்த இலக்கிய நண்பர்கள் மூலமாக நான் தொடர்ந்து அறிந்தவை வழியாகத்தான் இதனை நிச்சயம் செய்கிறேன், பாரும், போதையுமாகாவே அவை இருந்தன.

ஜமீலா, கேப்டன் மகள், கடலும் கிழவனும், அன்னை வயல், புத்துயிர்ப்பு, அன்னா கரீனா, மோக முள், கடல் புறத்தில் என சதா நேரமும் படித்துக் கிடந்த எனது கடந்த காலத்தில் ஒருநாள்,  சாரு நிவேதிதாவின்  ‘பேன்சி பனியனை’  சோமு ஏனும் நண்பர் தந்தார். சில பக்கங்கள் படித்து விட்டு, புத்தகத்திற்கு எந்த சேதாரமுமில்லாமல் திருப்பிக் கொடுத்தேன். அவர் குறித்து எனக்கு இருந்த பிம்பங்கள் மேலும் கெட்டியாயின. எழுத்தாளன் என்பவன் இந்த பரந்த சமூகத்தில் நுட்பமாக பார்க்கத் தெரிந்தவன்,   மனித செல்களுக்குள் துயரங்களாகவும், சந்தோஷங்களாகவும் ஊடுருவத் தெரிந்தவன் எனும் எனது புரிதல்கள்  சாரு நிவேதிதாவின் கதைகளில் ஈடேறவில்லை.  காதலோ, காமமோ  அவைகளைச் சொல்வதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் சில நிர்ணயங்கள் வேண்டும் என்றே நினைக்கிறேன்.  அவைகளை ரகசியமாக உணரும்படியாக பட்டவர்த்தனமாகச் சொல்வதை விட, பட்டவர்த்தனமாக உணரும்படி ரகசியமாகச்  சொல்லத் தெரிய வேண்டும். இங்கே பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், புஷ்பா தங்கதுரைகளின் அதீத வடிவமாகவே சாரு நிவேதிதா  தென்பட்டார். தன்  புத்திசாலித்தனம், தன் வக்கிரம், தன் அரிப்புகள், தன்  குறியைக் காட்டுவது எழுத்தாளனின் பணியல்ல . அது யாருடைய பணியாக இருக்கும் என்பதை ஆராய்வது நோக்கமுமல்ல.

இருப்பினும், சென்ற புத்தகக் கண்காட்சியில் நான் அதிகமாக வாங்கிய புத்தகங்கள் வா.மு.கோமுவுடைய புத்தகங்களும், சாரு நிவேதிதாவின் புத்தகங்களும்தான்.  இணையத்தில், இவர்கள் இருவருடைய எழுத்துக்கள் பற்றி விவாதிக்கப்பட்டதும், நான் மதிக்கும் பதிவர்கள் சிலரின் நிர்ணயிப்புகளுமே இதற்கு காரணம். இருபது வருடங்களாக எனக்குள் கிழித்திருந்த  கோடுகளைத்  தாண்டிச் சென்று பார்த்தேன்.  எனது அபிப்பிராயங்களை மாற்றிக்கொள்ளவும் சித்தமாயிருந்தேன்.  தலையில் அடித்துக்கொண்டு திரும்பி வந்தேன். தாங்க முடியாத நாற்றமெடுத்தது.  ஒரே வாந்தியும், குமட்டலுமாக இருந்தது. இவர்களின் புத்தகங்களையும், எழுத்துக்களையும் உயிர்மை போன்ற பதிப்புகள் எப்படி வெளியிடுகின்றன என்று  எனக்குத் தெரியவில்லை. எதையும் விற்றுக் காசாக்குவது என மனுஷ்யபுத்திரனும் துணிந்து விட்டார் போலும். வருத்தத்தோடு சில பதிவர்களிடம் இதனைப் பகிர்ந்துகொண்ட போது, “அதை  முதலில்படித்திருக்கக் கூடாது. இதைப் படியுங்கள்..” என்றார்கள்.  எனக்கு அந்த துணிச்சல் இல்லை. ராச லீலாவை நான் படிக்கவில்லை. படிக்கவும் போவதில்லை.

ஒரு படைப்பை வைத்து ஒரு எழுத்தாளனை அறிவதும், ஒரு படைப்பை விட்டு விட்டு ஒரு எழுத்தாளனை அறிவதும் தவறே.  முழுப் படைப்புகளையும் படித்துவிட்டுத் தான்  எழுத்தாளனை மதிப்பிட முடியும் என்பதும் சரியே. அதற்காக சாரு நிவேதிதா போன்றவர்களின்  அனைத்துப் படைப்புகளையும் படித்து, குமட்டலும் வாந்தியுமாய் அவஸ்தைப்பட நான் தயாரில்லை.  ஒரு படைப்பில், சில எழுத்துக்களில் எழுத்தாளனின் நாடியும், நரம்பும் தெரிந்துவிடும். சமீபத்தில் நடந்த அவரது புத்தகங்களின் வெளியீடுகளையொட்டி அவர் எழுதிய பதிவுகள், நேற்று பெண்களைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு அவரது பதில் வரை படித்துக் கடுப்பாகிப் போயிருக்கிறேன்.  இவரிடமிருந்தெல்லாம் எழுத்தையும், அதில் அற்புதங்களையும் ரசிக்க முடியுமென்றால் , நான் அதெல்லாம் தெரியாத பாமரனாகவே இருக்க விரும்புகிறேன்.

இதோ, இன்றைக்கு நான் படித்த ராகவனின் ’சுனை நீர்’ போல ஒரு கதையை யார் எழுதினாலும் நான் அவர்களை மதிப்பேன், அது சாரு நிவேதிதாவாக இருந்தாலும்!

(இன்னும் எழுதுவேன்)

கருத்துகள்

37 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ம்ம்ம்...சரி...சரி...காய்ச்ச மரம் தான் கல்லடி படும்.. இல்லேன்னா, சாருவைப் பத்தி இப்படி மெனேக்கிட்டு இவ்வளவு எழுதுவீங்களா?

    பதிலளிநீக்கு
  2. I tried to read "ZERO DEGREE" but couldnt complete it as i got the same feelings.The book still lying,uncared.but charus blog is quite interesting to read,his comments on films were quite accepptable.but novels we can just ignore.but not charu.His views were very daring,though argueable.He is indeed a Great writer.BENJAMIN DAVID

    பதிலளிநீக்கு
  3. I had the same feelings when i read the "ZERO DEGREE" and coudnt finish yet.We can ignore his Novels,but not CHARU.His blog is very interesting to read,and it makes you addictive.His comments on movies were quite acceptable.He is indeed a great writer,though most of his views were arguable-BENJAMIN DAVID.

    பதிலளிநீக்கு
  4. Anna,
    Avar ananda vikatanil eluthi kondirupathai vaithe solli vidalam avar eper patta eluthalar endru avlo vum suya puranam....

    பதிலளிநீக்கு
  5. //ஒரு படைப்பில், சில எழுத்துக்களில் எழுத்தாளனின் நாடியும், நரம்பும் தெரிந்துவிடும்.//
    சரியா சொன்னீங்க

    பதிலளிநீக்கு
  6. சரியாகத்தான் எழுதி இருக்கிறீர்கள்..

    சரக்கு இல்லாதவர்...

    பதிலளிநீக்கு
  7. சாரு நிவெதிதா பற்றிய உங்கள் இடுகையைப் படித்தேன்.அவர் அன்று போட்ட நாடகத்தின் பெயர் "இரண்டாவது ஆட்டம்".அப்போது இளஞர்களாக, மாணவர்கா,ளாக இருந்த,ஸ்ரீரசா(டாக்டர்.ரவிகுமார் ஆறுமுகம்( தீயணைக்கும் படை அதிகாரி) ராகவன்(பெத்தானியாபுரம்) ஷாஜகான்(ஆசிரியர்) ஆகியோர் நாடகத்தை நிறுத்தசெய்தனர். இந்த நாடகத்தைப் போட அனுமதிக்க வேண்டும் என்றும் அது அவருடைய ஜனநாயக உரிமை என்றும் கூக்குரலேழுப்பியவர்களில் டாக்டர்.குணசெகரன்,பொதியவெற்பன் ஆகியோர் உண்டு.(என்னுடைய இடுகை 69 ல் விரிவாக எழுதியிருக்கிறேன்) ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் 10ம் 10ம் கூட்டினால் இருபது வரும் வகுப்பறையில் எவனாவது 30 வரும் என்று சொன்னால் எல்லோரும் திரும்பிப் பார்ப்பார்கள் பாருங்கள் அதுபோல் தான் கவனிக்கப்படவேண்டும் என்னும் attention seeking mania கொண்டவர்தான் சாரு இவர்களைப் போன்றவர்களைப் பற்றி எழுதி நேரம் வீணடிக்காமல் வேறு நல்ல பதிவுகளை தாருங்கள்

    பதிலளிநீக்கு
  9. /////////உண்மைதான் 10ம் 10ம் கூட்டினால் இருபது வரும் வகுப்பறையில் எவனாவது 30 வரும் என்று சொன்னால் எல்லோரும் திரும்பிப் பார்ப்பார்கள் பாருங்கள் அதுபோல் தான் கவனிக்கப்படவேண்டும் என்னும் attention seeking mania கொண்டவர்தான் சாரு இவர்களைப் போன்றவர்களைப் பற்றி எழுதி நேரம் வீணடிக்காமல் வேறு நல்ல பதிவுகளை தாருங்கள//////

    நான் சொல்ல வேண்டியதும் இதுதான். ......மற்றொருவர் எனக்குமுன்னாள் சொல்லிவிட்டார்.
    சாரு = சாக்கடை

    பதிலளிநீக்கு
  10. //ஒரு படைப்பில், சில எழுத்துக்களில் எழுத்தாளனின் நாடியும், நரம்பும் தெரிந்துவிடும்.//

    சரியான கருத்து அண்ணா.

    பதிலளிநீக்கு
  11. மாதவராஜ் அவர்களுக்கு,

    மலத்தை பற்றியும் ஒருவன் எழுதவேண்டுமே...அதைதான் சாரு எழுதுகிறார்.. இதை எஸ்.ராவோ ஜெமோ, நாஞ்சிநாடனோ எழுத முடியாது. அவர்களுடைய எழுத்து வேறு.. இவரோட எழுத்துவேறு....

    மனித மலத்தை மனிதன் தலையில் சுமந்துயிருக்கிறான்... அதை பற்றி எவன் எழுதுகிறான்... உலகமெல்லாம் சுகமாயிருக்குது என்றே எழுதுகிறார்கள் பலர்... அதில் என்ன இருக்கிறது என்பதை அப்படியே போட்டு உடைப்பவர்தான் சாரு..

    திரும்பவும் சொல்கிறேன்... ஒரு நாஞ்சிலோ, ஜெமோவோ, எஸ்ராவோ மாதிரி சாருவால் எழுதமுடியாது ஆனால் சாரு எழுப்பும் கேள்விகளை எந்த கொம்பனும் எழுப்பமுடியாது.

    உதாரணம்: ஒரு பெரிய இசையமைப்பாளர் தான் பெரிய ஆள் ஆனவுடன், பெரிய பெரிய கோவில்களுக்கு கோடிகணக்கில் செலவு செய்கிறார்... ஆனால் அவர் சார்ந்த சமூதத்திற்கு என்ன செய்தார்...? சங்கராச்சாரியார்களுடன் உட்கார்ந்து போஸே கொடுத்தார். (இதுபோல் சாரு தன் எழுத்துகளின் ஊடே நிறைய கேள்விகளை முன்வைக்கிறார்).

    சாருவை புரிந்துக்கொண்டால் பொக்கிஷம்.. இல்லையேல் மலம்தான்.. பின்பென்ன வாந்திதான்.

    பதிலளிநீக்கு
  12. சாருவை அசிங்கபடுத்தவதாக நினைத்து பிகேபி ராஜேஷ்குமார் புஷ்பா தங்கதுரை ஆகியவர்களையும் ஏன் இப்படி எழுதுகிறீர்கள் ?

    பதிலளிநீக்கு
  13. இது பின் தொடர்தலுக்காக

    பதிலளிநீக்கு
  14. "சாரு நிவேதிதாவின் எழுத்துக்களை நான் தொடர்ந்து படிப்பதில்லை. இப்படிச் சொல்வதில் எனக்கு எந்த அவமானமுமில்லை. அவருக்குத்தான் அவமானம்"

    சாரு நிவேதிதாவின் எழுத்துக்களை நான் தொடர்ந்து படிப்பதில்லை. இப்படிச் சொல்வதில் எனக்கு எந்த அவமானமுமில்லை. அவருக்குத்தான் அவமானம்.

    பதிலளிநீக்கு
  15. Respected Sir

    I have not read any of his books. But hve read his essays appearing in magazines and his blog.

    Your estimate of the author is too personal. By the same yardstick, any great writer of the past can also be rejected as unreadable: for e.g Kanndadasan and Jeyakaantan.

    Every writer is a narcissist. Narcissism gives them a strong tonic to write in the way they like: in the case of Charu, as Ashok has said, bold, very bold.

    A living and vibrant literature needs authors of various kinds, as some have said.

    If you reject Charu as useless, you are not rejecting him; but rejecting a style only.

    Tamil lit will be poorer if we want our writers to write only in the style or styles as we approve. Your approval is to be considered positive only in private lives or public lives of individuals, not authors. You can rate him as an individual. As an author, he cant be rated by you. You are trying to put him in your chains !

    His personal life, his efforts to grab lime light and attention - are all to be taken as eccentricities of a writer.

    In all lit, such writers - eccentric and maverik - are always there. In the West, people consider them as assets to their lit. They are proud of them. They encourage them, although such writers annoy too much. Gene, in French who wrote from prison. Oscar Wilde for homosexulity. DH Lawrence for philandering.

    But in Tamil we want to rate our writers and if they dont fulfil our standards and values, we condemn them.

    With ur stern scale or scale which doesnt allow eccentricities, you cant go near European lit, like French or English. Such lit abound with maverikes and sometimes incarcerated criminals, philanderors, and even petty thieves.

    Sorry to say, your blogpost is an expression of immaturity. Lit is not communist manifesto. Pl understand that and allow writers to be as they like, not as you like.

    Regards

    Jo Amalan Rayen Fernando

    பதிலளிநீக்கு
  16. //ஒரு படைப்பை வைத்து ஒரு எழுத்தாளனை அறிவதும், ஒரு படைப்பை விட்டு விட்டு ஒரு எழுத்தாளனை அறிவதும் தவறே. முழுப் படைப்புகளையும் படித்துவிட்டுத் தான் எழுத்தாளனை மதிப்பிட முடியும் என்பதும் சரியே.//

    இப்பத்தான் தேசிய நீரோட்டத்தில இணைஞ்சிருக்கீங்கன்னு தோனுது..

    ப்ச்....என்னத்தச் சொல்ல...

    பதிலளிநீக்கு
  17. நான் படித்த வரை பி.கே.பியும் ராஜேஷ்குமாரும், நல்ல பொழுதுபோக்கு மற்றும் சமூக நாவல்களை எழுதியதாகவே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. \\சாருவை புரிந்துக்கொண்டால் பொக்கிஷம்.. இல்லையேல் மலம்தான்..\\

    சாருவை புரிந்துக்கொண்டால் மலம்.. இல்லையேல் பொக்கிஷம்தான்.. :)))

    பதிலளிநீக்கு
  19. அசோக்
    மனித மலத்தை பற்றி பலர் அருமையாக எழுதுகிறார்கள் . பெருமாள் முருகனின் 'பீ' எ‌ன்ற சிறுகதை படித்து பார்க்கவும். சாரு மலம் பற்றி எழுதுவது அசலாக இ‌ல்லை. ஆனா‌‌‌ல் சாரு தகவல் தொழில்நுட்ப காலத்தில் சிதைந்துப்போன பாலியல் திரிபுகளை (எஸ்.எம்.எஸ்/போன்/இன்டர்நெட் செக்ஸ்) ஓரளவு அசலாக பதிவு செய்கிறார் எ‌ன்று நம்புகின்றேன். டெல்லியில் நடந்த சீக்கியர் கலவரத்தை பற்றி சாரு ஒரு கதையில் விவரித்திருப்பார். அதிலும் ஓரளவு அசல் தன்மை இருக்கும்.

    பதிலளிநீக்கு
  20. சாருவின் 'அவ்வா' எ‌ன்ற சிறுகதை படித்தேன். அவர் திட்டமிட்டே கதையின் மைய சரடை சிதைத்து எழுதியிருப்பதாக படுகிறது. (பின்நவீனத்துவம்?) பெருமாள் முருகனின் 'பீ' சிறுகதை அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    http://tamilnanbargal.com/fb_cb/21040/tamil-kathaigal/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE

    பதிலளிநீக்கு
  21. என்ன சொல்றது? பேச்சுலககில் தீப்பொறி ஆறுமுகம் ஒரு சூப்பர் ஸ்டாராத்தான் இருந்தார். எந்தவித கட்டுப்பாடும் இல்லாத இணையதள எழுத்துலகில் சாரு நிவேதிதா தீப்பொறி ஆறுமுகம் போலஓர் சூப்பர் ஸ்டார்தான் போலும்!

    உங்க கடின முயற்சிக்கு (அவர் நாவலை ரசிக்க முயன்ற) நன்றி.

    தோல்விதான் வெற்றிக்கு முதல்ப்படி என்பதெல்லாம் பிதற்றல். I dont think you can ever succeed in reading and appreciating this notorious writer's trashy novels!

    பதிலளிநீக்கு
  22. ***எழுதமுடியாது ஆனால் சாரு எழுப்பும் கேள்விகளை எந்த கொம்பனும் எழுப்பமுடியாது.***

    அப்படியா?

    Mr. Ashok!

    நீங்க என்ன உலக மஹா மேதையா? இப்படி பெரிய அத்தாரிட்டி மாதிரி பேச? சாருக்கு அடுத்து.

    அவர் எழுப்பும் கேள்விகளை தொகுத்து வழங்குங்கள். நிச்சயம் அதே கேள்விகளை 100 பேர் இல்லை 1000 பேர் ஏற்கனவே கேட்டு இருப்பார்கள். அது உமது சிறிய உலக அறிவுக்கு எட்டவில்லை! அவ்ளோதான்!

    I challenge you here, your statement is absurd and disputed by several people.

    Take the challenge and address this issue if you really menat whatever hell you wrote!

    பதிலளிநீக்கு
  23. யவனராணி கடல்புறா-சரித்திர நாவல்கள் எழுதிய சாண்டில்யன் விவரிப்பில் இலைமறை காய் மறையாக செக்ஸ் இருக்கும்.சுஜாதா-வின் கதையில் இழையோடுவதை எல்லோராலும புரிந்துகொள்ள முடியாது.இன்றும் நீலப்படங்கள்,செக்ஸ் புத்தகங்கள் அதிகமான அளவில் விற்பனையாவது உண்மையே.ராஜேஷ்குமார் செக்ஸாக எழுதுவதில்லை.புஷ்பா தங்கதுரையின் எழுத்தில் ஆபாசம் இருக்காது.இவர்களுடன் சாருவை குறிப்பிடுவதே,மிகப்பெரிய தவறு.நாலாந்தர பேச்சு,அருவருக்கத்தக்க,அசிங்கமான,பொதுவில் பேசமுடியாத,ஏன் அடுத்தவரிடம் பேச கூசும் வார்த்தைகளை அச்சிலேற்றும் ஒருவரை பற்றி என்னவென்று சொல்ல.இவருக்கு ஒரு சில்லறைகள் கூட்டம்.(வக்கிரத்தை ரசிப்பதற்கு உலகமெங்கும் ஒரு கூட்டம் உள்ளது) இவரை(!)ப்பற்றி மிகச்சரியாக ஒரு கலைஞன் இவரது விழாவிலேயே இவர் எதிரிலேயே சொன்ன கமன்ட்:சரோஜாதேவி(புத்தகம்)போல எழுகிறார்,என்பது மிக சரியாக சொல்லப்பட்ட வார்த்தை.அதை ரசிப்பவர்கள் ரசிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  24. மதிப்பிற்குரிய மாது அவர்களே,
    நான் சாருவின் புத்தகங்களை வாசித்ததே கிடையாது. சில நாட்களுக்கு முன் தான் அவரின் ஜீரோ டிகிரி யை வாசிக்க ஆரம்பித்து உள்ளேன். ஜீரோ டிகிரி வாசிக்க ஆரம்பித்தவுடன், நான் புரிந்த சில விஷயங்கள், இது மற்ற நாவல்களைப் போல் சுலபமாக வசித்து புரிந்து கொள்ளகூடியது அல்ல. நிறய விசயங்களை மறைமுகமாக, நாம் தேடி புரிந்து கொள்ள வேண்டிஉள்ளது. சில நுட்பமான விசயங்களும் உள்ளன என்பது தான். இது பின் நவீனத்துவ எழுத்து இப்படி தான் இருக்குமோ என்னவோ, இன்னும் அவரின் எழுத்துக்களை அலசி ஆராய்ந்து படித்துகொண்டிருகிரேன். இந்த நாவலை என்னை போல் படிக்க ஆரம்பித்த
    (சாருவை முதல் முறையாக வாசிக்கும்) என் நண்பர் ஒருவன், என்னை விட பல படி மேல் சென்று, அதாவது ஜீரோ டிகிரியீன் ஒரு அதியத்தியயதிர்கே பல மணி நேரம் இணையத்தளத்தில் தேடி, அவற்றில் மறைந்துள்ள நடந்த கதையையும் வரலாற்று நிகழ்வுகளையும் எசிஸ்ட்இனிசிம் என்ற புதிய விசயத்தையும், பின் நவீனத்துவ எழுத்துகளை எப்படி de construct செய்து புரியவேண்டும் என விளக்கிய போது, நான் வியந்து விட்டேன்.

    மாது, நீங்கள் ஏன் ஒரு முறை ஜீரோ டிகிரி நாவலை வாசிக்க கூடாது. எனுடைய கருத்து என்னவெனில், ஒரு எழுத்தாளனை, அவனது படைப்புகளை முழுவதுமாக படிக்காமல், கருத்து கூறுவது சரி அல்ல. மேலும் ஒரு படைப்பை படிக்காமல், அதில் நுட்பமான விஷயங்கள் இல்லை என்ன கூறுவதும் சரி அல்ல என நினைகிறேன்.
    இந்த இணைப்புகளையும் வசித்து பாருங்கள்


    http://pichaikaaran.blogspot.com/search?updated-max=2011-01-01T02%3A02%3A00-08%3A00&max-results=1


    http://pichaikaaran.blogspot.com/search?updated-max=2010-12-30T08%3A57%3A00-08%3A00&max-results=1



    http://pichaikaaran.blogspot.com/2010/12/mrinzo-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE.html



    http://pichaikaaran.blogspot.com/2010/12/how-to-deconstruct-text-with-zero.html

    பதிலளிநீக்கு
  25. நண்பர்களுக்கு!

    வணக்கம்.

    பலவிதமான கருத்துக்கள் வந்திருக்கின்றன. அனைவருக்கும் நன்றி.

    சாரு நிவேதிதா குறித்து எழுதுவது/என் கருத்தை வெளியிடுவது தேவையற்றது, முடிந்தவரையில் நல்ல இலக்கியங்கள் என நான் அறிந்தவற்றை அறிமுகம் செய்வதோ அல்லது பேசுவதோ உத்தமம் என்றுதான் நினைத்திருந்தேன். இணையவெளியில் சாரு நிவேதிதா குறித்து அங்கங்கு நடக்கும் உரையாடல்களை சில நேரங்களில் படித்தும், பல நேரங்களில் படிக்காமலும் கடந்து விடுவேன். சமீபத்தில் அவரது புத்தக வெளியீட்டு விழாவையொட்டி நடந்த சர்ச்சைகளும், அதற்கு சாரு நிவேதிதாவின் எதிர்வினைகளும் படிக்க நேர்ந்த போதும், ‘எதற்கு இத்தனை மூச்சிறைப்புகள்’ என கடந்துவிடவே செய்தேன். சமீபத்தில், ‘பெண்களைப் பற்றிய அவரது பார்வைகளை’ ஒரு கேள்வி பதிலாக வெளிப்படுத்தியிருந்ததுதான் last straw on camel's back ஆனது. அதனாலேயே ‘எழுதுவதெல்லாம் எழுத்தல்ல’ என்றும் தலைப்பிட்டேன்.
    ஒரு எழுத்தளனின் நல்ல படைப்புக்கள் ரசிக்கத் தெரிந்தவர்கள், சமூக வெளியில் இப்படி அலங்கோலமாய் இடறி விழும்போது, சுட்டிக்காட்டவும் வேண்டும். அதை, அவரை நேசிக்கும் அறிவுஜீவிகள் சுட்டிக்காட்டாமல், அவருக்கு ஆதரவான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது, என்னைப் போன்றவர்கள் இப்படி ‘அபத்தமாகவாவது’ பேசியாக வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  26. விநாயக்.. அது சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்... நன்றாகவே பதிவுசெய்துயிருப்பார், பெருமாள்முருகனின் சிறுகதை படிக்கவில்லை..

    அவ்வா... ஏதோ ஆலிவுட் படம் போலான திரைகதைதான் :)
    //மைய சரடை சிதைத்து எழுதியிருப்பதாக படுகிறது//
    அப்படியா தெரிகிறது?

    பதிலளிநீக்கு
  27. Ya Mr.Varun

    Thanks for your எதிர்வினை...

    உலக மகா மேதை... யோசிச்சு பாத்தாக்கா... அப்படிதான் தெரியுது... உங்கள் பின்னூட்டத்த படிச்சபிறகு நீங்க ஒரு உலக மகா மேதையாதான் இருக்கனும்... நன்னி :)

    பதிலளிநீக்கு
  28. com.madav.
    You have done a good job which any ordinary human being should do.
    padichchavan suthum vaadum saithal iyoonu povan/ niraya per ippadi pogirargal. /abathamagavavathu pesi aaga vendi irrukkirathu/ wrong madav. you have done an excellent job while many writers are dumb with their pens full of silent lies. Be proud you have represented true conscious of the makkal ilakkiyam.
    we join alongwith shajahan, srirasa and many others who have come out with conciousness.
    thank you madav.
    na ve arul

    பதிலளிநீக்கு
  29. ஒரு எழுத்தளனின் நல்ல படைப்புக்கள் ரசிக்கத் தெரிந்தவர்கள், சமூக வெளியில் இப்படி அலங்கோலமாய் இடறி விழும்போது, சுட்டிக்காட்டவும் வேண்டும். அதை, அவரை நேசிக்கும் அறிவுஜீவிகள் சுட்டிக்காட்டாமல், அவருக்கு ஆதரவான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது, என்னைப் போன்றவர்கள் இப்படி ‘அபத்தமாகவாவது’ பேசியாக வேண்டியிருக்கிறது.//

    அன்புள்ள திரு. மாதவராஜ் அவர்களுக்கு,

    1. Self-righteousness is the devil's masterpiece to make us think well of ourselves. ‍ - Thomas Adams

    2. யார் நல்ல எழுத்தாளன் என்று தனியொரு எழுத்தாளரோ அல்லது குறிப்பிட்ட சங்கமோ சான்றிதழ் வழங்கி விட முடியாது...

    2. என்னைப் பொறுத்தவ்ரை, பாலியல் சொல்லாடல்களுக்காக சாருவை தாக்குபவர்கள் மற்றும் அவரது வாசகர்களை வக்கிரம் பிடித்தவர்கள் என வர்ணிப்பவர்கள், சுதந்திர சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்......

    3. சாருவின் எழுத்தில் உள்ளோடும் மனித நேயத்தை, கலாச்சாரத்தைக் காப்பதாகச் சொல்லும் இந்து மக்கள் கட்சி அறிய முடியாது.... ஏனெனில் பாலியல் சொல்லாடல்கள் மட்டுமே கலாச்சாரத்தைக் கெடுப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.

    4. சாருவின் எழுத்தில் உள்ளோடும் தனி மனித சுதந்திர வேட்கையை, மக்களின் சர்வாதிகாரம் எனும் அரசியல் அதிகாரம் நோக்கி பயணிக்கும் இடதுசாரிகள் உணர முடியாது...

    5. பாலியல் சொல்லாடல்கள் நாற்றமெடுப்பதாக சொல்லும் இவர்கள் சமூகத்தில் நிறைந்திருக்கும் பாலியல் தொட்ர்பான கொடுமைகள் எதுவும் அவ்வளவு இல்லை என மறுக்கச் சொல்கிறார்கள்..அவ்வாறு இருந்தாலும், ஜவ்வாது நிறைய அப்பி எழுதச் சொல்கிறார்கள்..

    6. சமூகச் சீர்கேட்டிற்கு எத்தனையோ துன்பம் / கொலைகள் விளைவித்த எண்ணற்ற கொள்கைகள் அல்லது கோட்பாடுகளை விடவா, சாருவின் எழுத்து கெட்டது?

    பதிலளிநீக்கு
  30. எங்கோ போய் அங்கிருந்து தற்செயலாய் இங்கு வந்தேன்.ஆச்சரியமான அதிர்ச்சி. என்னை அறிமுகப்படுத்தி இருப்பதற்கு மிகவும் நன்றி.
    காதல் கவிதைகள் மட்டுமின்றி சமூகம் சார்ந்தவையும் நிறைய எழுதியிருக்கிறேன். சிலம்பின் புலம்பல், எட்டி உதை, கதைக்க வேண்டாம், உசிரோ உசிரு இப்படி.
    இன்னும் என்னை தகுதியாக்கிக் கொள்ள முனைப்போடு இருக்கிறேன்.
    நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  31. மிக அருமையான பதிவு.
    இவர்கள் தான் இன்றைய இலக்கியத்தின் பாதுகாவலர்கள் என தங்களை நினைத்துக் கொள்வதும் அதை பலர் சிலாகிப்பதும் கொடுமை. மிஷ்கினும் சாருவும் அடித்துக் கொள்வதைப் பார்த்தீர்களா ?

    பதிலளிநீக்கு
  32. @ ashok
    //ஒரு பெரிய இசையமைப்பாளர் தான் பெரிய ஆள் ஆனவுடன், பெரிய பெரிய கோவில்களுக்கு கோடிகணக்கில் செலவு செய்கிறார்... ஆனால் அவர் சார்ந்த சமூதத்திற்கு என்ன செய்தார்...? சங்கராச்சாரியார்களுடன் உட்கார்ந்து போஸே கொடுத்தார்.//

    தேவை இல்லாமல் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாதவரை பற்றி எழுதுவது நாகரீகம் இல்லை. இளையராஜா செய்தது என்ன செய்யாதது என்ன என்பது கேள்வி இல்லை. சாருவின் எழுத்தை பற்றி எழுதுங்கள். சாருவே இளையராஜாவை குறித்து நிறைய உளறி இருக்கிறார். நீங்களும் உளற வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  33. சாரு - தமிழ் எழுத்துலக கழிவு. தமிழ் எழுத்தாளர்களில் ஆக கடைந்தெடுத்த கழிவு நீர்.
    கழிவின் மணம் விரும்புவோர் எப்பொழுதும் உளர்.

    பதிலளிநீக்கு
  34. please read a letter from the wife of saru ( writter )to nithyananda samy ( bogus samiyar )

    பதிலளிநீக்கு
  35. அஞ்சறை மணிவண்டி எழுத்தாளன் சாரு குட்டி இல்ல பாருக் குட்டி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!