எல்லாம் சட்டப்படிதான்!

snakes

முயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு நினைத்தது. எனவே ஒரு சட்டம் இயற்றி முயலிடம் அறிவித்தது.

“முயலே நான் சொல்வதைக் கேள். நான் இனி மேல் முன்கூட்டியே சொல்லாமல் உன் வீட்டுக்குள் நுழைய மாட்டேன். கதவைத் தட்டி முன் அனுமதி பெற்றுத்தான் வருவேன். சொல்லாமல் வீட்டுக்குள் வந்துவிட்டால், நீ பயப்படாமல் என்னிடம் புகார் செய்யலாம். அந்த உரிமையை உனக்கு கொடுக்கிறேன்”

இப்படி ஒரு சட்டத்தையும், உரிமையையும் அறிவித்த பிறகு ’இந்தச் சட்டத்தை முயல் சரியாக பயன்படுத்துமா, பயன்படுத்தாதா?’ என யோசித்த பாம்பு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒருநாள் முயலின் வீட்டுக்குள் புகுந்து முயலின் குட்டி ஒன்றை விழுங்கி விட்டது. பின்னர் வெளியே வந்து நின்று கொண்டது. முயல் புகார் செய்ய வருகிறதா இல்லையா என காத்திருந்தது.

நீண்ட நேரம் ஆகியும் முயல் வெளியே வரவில்லை. பாம்புக்கு கோபம் அதிகரித்துக் கொண்டே போனது. பொறுமையிழந்து முயலின் வீட்டுக்குள் பாய்ந்து சென்று முயலைப் பிடித்து கேட்டது.

“நான் கொண்டு வந்த சட்டத்தை நீ ஏன் பின்பற்றவில்லை?”

முயல் அமைதியாகப் பதில் சொன்னது.”குற்றவாளியும் நீதான். நீதிபதியும் நீதான். நான் எந்தக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க எந்த நீதிபதியிடம் முறையிடுவது? நீயே சொல்லு.”

பாம்பு கோபத்தோடு சீறி, முயலைக் கவ்வி ஒரே வாயில் விழுங்கி விட்டது. பின்னர் இப்படி அறிவித்தது:

“இந்த முயலைக் கொன்றது சும்மா இல்லை. சட்டப்படிதான். அனைத்துச் சட்ட நெறிமுறைகளும் சரியாகவே பின்பற்றப்பட்டுள்ளன. ஆமாம்”.

 

பி.கு: இது ஒரு சீனப் பழங்கதை. எப்போது படித்தாலும் புதிதாகவே இருக்கிறது. சமகால வாழ்வையும் பல சமயங்களில் ஒப்பிட முடிகிறது. சமூகத்தின் நியாய அநியாங்களை புரிய வைக்கிறது.  அமைப்பின் கோளாறுகளை சொல்லிக்கொண்டே இருக்கிறது.

 

*

கருத்துகள்

22 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நான் தான் முதல்ல!
    அருமையான கதை.

    பதிலளிநீக்கு
  2. /*எப்போது படித்தாலும் புதிதாகவே இருக்கிறது. */
    சில விஷயங்கள் காலத்தைத் தாண்டி வாழ்வதாலோ? :-(

    பதிலளிநீக்கு
  3. சட்டம் இயற்றும் சட்டமன்றமும், அதை செயல்படுத்த / பாதுகாக்க வேண்டிய நிர்வாகமும், அவ்வாறு சரியாக நடக்கிறதா என்று கண்காணித்து நீதி வழங்க வேண்டிய நீதித்துறையும் தனித்தனியாக இயங்க வேண்டிய அவசியத்தை கூறும் கதை

    பதிலளிநீக்கு
  4. நிகழ்கால அரசியல் நிலவரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் எத்தனை எத்தனை மலைப்பாம்புகள் நம் மத்தியில் :(

    பதிலளிநீக்கு
  5. எல்லா காலங்களுக்கும்
    ஒத்தவாரு நிறை பழங்கதைகளை
    சொல்லிவைத்துள்ள முன்னோர்களை
    எப்படிப் பார்ப்பது தீர்க்கதரிசியாகவா
    அல்லது அறிவுஜீவி என்றா குழப்பம் தான்.ஆனால் அவர்கள் வாழ்த்து வாழ்க்கையை முழுமையாக உணர்ந்து
    அதன் அனுபவத்தில் இவைகளை பலவடிவங்களில் நம் வாழ்வோடு இணைத்து வைத்துள்ளார்கள் எனபது
    மட்டும் திடமாக கூற முடியும்
    உங்களுடைய சீன குட்டி நீதி கதையை
    படித்ததில் மகிழ்ச்சியே

    பதிலளிநீக்கு
  6. இக்கதை படிக்கயில் சாதாரணமாக
    இருந்தாலும் தற்கால ஏகாதிபத்தியத்தியத்தை தோலுரிக்கின்றதே அதன் கருத்து

    பதிலளிநீக்கு
  7. \\”குற்றவாளியும் நீதான். நீதிபதியும் நீதான். நான் எந்தக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க எந்த நீதிபதியிடம் முறையிடுவது? நீயே சொல்லு.” பாம்பு கோபத்தோடு சீறி, முயலைக் கவ்வி ஒரே வாயில் விழுங்கி விட்டது. பின்னர் இப்படி அறிவித்தது: “இந்த முயலைக் கொன்றது சும்மா இல்லை. சட்டப்படிதான். அனைத்துச் சட்ட நெறிமுறைகளும் சரியாகவே பின்பற்றப்பட்டுள்ளன. ஆமாம்”. பி.கு: இது ஒரு சீனப் பழங்கதை.\\

    பாவம் முயல் போன்ற........

    பதிலளிநீக்கு
  8. நீங்க அமெரிக்காவை சொல்லலையே??

    அப்ப சரி!!!! கதை சூப்பர்

    பதிலளிநீக்கு
  9. அமெரிக்காவுக்கு ஏன் போகனும். இங்க மட்டும் என்ன வாழுதாம்?

    பதிலளிநீக்கு
  10. //முயல் அமைதியாகப் பதில் சொன்னது.”குற்றவாளியும் நீதான். நீதிபதியும் நீதான். நான் எந்தக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க எந்த நீதிபதியிடம் முறையிடுவது? நீயே சொல்லு.”//

    பல நேரங்களில் இப்படி உணரும்படியாய் இருந்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  11. ம்ம்ம்.. //சமகால வாழ்வையும் பல சமயங்களில் ஒப்பிட முடிகிறது. சமூகத்தின் நியாய அநியாங்களை புரிய வைக்கிறது. அமைப்பின் கோளாறுகளை சொல்லிக்கொண்டே இருக்கிறது.//

    இதை உடைச்சே ஆகணும்..

    தோழமையுடன்

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  12. தீபா!

    முதல் வருகைக்கு முதல் நன்றி.

    அமுதா!

    ஆமாம் காலத்தைத் தாண்டி வாழ்பவை எப்போதும் நிலைத்து நிற்கும்.

    புருனோ!
    உங்கள் புரிதலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. ரிஷான் செரிப்!

    தமிழன் கறுப்பி!

    வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ஆ.முத்துராமலிங்கம்!

    உண்மைதான் இவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய இலக்கியச் செல்வங்கள்.

    //இக்கதை படிக்கயில் சாதாரணமாக
    இருந்தாலும் தற்கால ஏகாதிபத்தியத்தியத்தை தோலுரிக்கின்றதே அதன் கருத்து//

    புரிதலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அறிவே தெய்வம்!

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க. (பேரில் அறிவு இருக்கிறது.... இதைப்பற்றித்தான் இப்போது விவாதம் நடந்து கொண்டிருக்கிறதுங்க.)

    பதிலளிநீக்கு
  16. ஆதவா!

    உண்மை அமெரிக்காவையும் சுடும்.

    பதிலளிநீக்கு
  17. சந்தனமுல்லை!

    வேலன்!

    யாத்ரா!

    தம்பி முகமது பாருக்!

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  18. அனைத்து கால கட்டங்களுக்கும் பொருந்தும் இந்த "சட்டப்படிகள்" !!!!!

    :)

    பதிலளிநீக்கு
  19. பதி!

    மங்களூர் சிவா!

    உங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. இந்த கதை எல்லா காலத்திற்குமே பொருந்தி வரும். இனி என் மனதை விட்டும் இந்த கதை நீங்காது.

    நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!