மாதவராஜ் பக்கங்கள் 5

இடதுசாரிக் கட்சிகளுக்குத்தான் பெரும் தோல்வி என்பதே இந்தத் தேர்தல் சொல்லும் முக்கிய செய்தி.

இந்திய முதலாளி வர்க்கம், மிகுந்த நிம்மதியோடும், சந்தோஷத்தோடும் இன்று கொண்டாடும். தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுகிற அரசு அமைந்திருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவதை எதிர்ப்பதிலிருந்து, ‘சீர்திருத்தங்களுக்கு’ முட்டுக்கட்டை போடும் எம்.பிக்களின் எண்ணிக்கை 64லிருந்து பாதிக்கும் குறைந்துவிட்டது அவர்களுக்கு உற்சாகத்தையே அளிக்கும்.

காங்கிரஸ் தனியாகவே ஏறத்தாழ 190 இடங்களைப் பிடித்திருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சிகளோடு 250 இடங்களைத் தொட்டு ஆட்சியமைக்கும் இடத்தை நெருங்கிவிட்டது. கருத்துக்கணிப்புகளையும் மீறிய வெற்றிதான் இது சந்தேகமில்லாமல். ஆந்திராவிலும் சுயபலத்தில் அக்கட்சி எட்டியிருக்கும் இடம் ஆச்சரியமானது. பா.ஜ.கவும் நிச்சயமாக வலுவானக் கட்சியாகவே வெளிப்பட்டு இருக்கிறது. எந்தச் செல்வாக்கையும் அவை இழந்துவிடவில்லை. இடதுசாரிக் கட்சிகளே இழந்திருக்கின்றன.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். முப்பது வருடங்களுக்கும் மேலே தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த இடதுசாரிக்கட்சிக் கட்சிகள் முதன்முறையாக அடிவாங்கி இருக்கின்றன. கேரளாவிலும் அதே கதிதான். சி.பி.எம்மின் உட்கட்சிப் பூசல்கள் அங்கு சாதாரண மக்களுக்கும் தெரிந்திருந்தது.

இந்தத் தேர்தல், அதன் நடைமுறையில் உள்ள பெரும் ஊனங்கள், முதலாளித்துவ ஊடகங்களின் வலிமையான பிரச்சாரம், சந்த்ர்ப்பவாதங்கள் என பல காரணங்கள் இருந்த போதும் இடதுசாரிக் கட்சிகள் இந்தத் தோல்வியை, தங்களின் தோல்வியாக முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். தங்களுக்கு எதிராக யார் யாரெல்லாம் இருப்பார்கள், என்னென்ன செய்வார்கள் என்பது இடதுசாரி அரசியல் புரிந்தவர்களுக்குத் தெரியும். அவர்களின் கை ஓங்கிவிட்டது என்று சொல்லும் அதே நேரம். தங்கள் கை இறங்கிவிட்டது என்று சொல்லவும் மனநிலை வரவேண்டும். அதுவே ஒரு முழுமையான சுயபரிசோதனை செய்துகொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கும்.

கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்த நாலரை ஆண்டுகளில் இடதுசாரிக் கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எவ்வளவோ மக்களுக்கான ஆற்றியிருக்கின்றன. தகவல் அறியும் சட்டத்திலிருந்து, கிராமங்களில் நூறுநாள் வேலை என நலத்திட்டங்கள் இடதுசாரிக் கட்சிகளின் யோசனையாலும், வலியுறுத்தலாலும் தான் நிறைவேற்றப்பட்டன. அவை எல்லாவற்றையும் காங்கிரஸ்தான் இன்று அறுவடை செய்திருக்கிறது. இதில் எங்கே ஊனம் என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

அவசர அவசரமாக மூன்றாம் அணி ஒன்றை உருவாக முனைந்ததில், ‘நடைமுறைத் தந்திரங்களை’ செயல்படுத்துவதில் இடதுசாரிக் கட்சிகளிடம் ஒரு தீர்க்கமும் தெளிவும்
இல்லை என்றே மக்கள் கருதியிருக்கிறார்கள். மக்களின் மனநிலையை புரிந்துகொள்வதில், அவர்களுக்குப் புரிகிற மாதிரி அரசியல் நடத்துவதில் மிகப்பெரும் தேக்கம் இருக்கிறது.

இவைகளைச் சரி செய்யா விட்டால், வெற்று ஊகங்களாலும், நம்பிக்கைகளாலும் மட்டுமே இடதுசாரிகள் அரசியல் நடத்துவதாக, இந்தக் கருத்துக் கணிப்புகள் நடத்துகிற விற்பன்னர்கள் சிரிக்கிற நிலைமைதான் உருவாகும்.

தேசத்தின் சாதாரண, அடித்தட்டு மக்களின் நலனை முன்வைத்து, அவர்களின் வாழ்வின் விடியலுக்காய் இயங்குகிற இடதுசாரிக் கட்சிகள் தங்களை சரி செய்து கொண்டு முன்னை விடவும் வீர்யத்தோடு செயலாற்ற காலம் அழைக்கிறது. தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தங்களை புனரமைத்துக் கொண்டு பயணத்தை தொடர்வார்கள்.

பசித்த குழந்தைகளின் விலா எலும்புகளில் வாழ்வின் வலி உறைந்திருக்கிறது. காலம் காலமாய் வஞ்சிக்கப்பட்ட மக்களின் கண்ணீரில் இருட்டு நிரம்பியிருக்கிறது. பங்குச் சந்தைப் புள்ளிகளை கும்பிடுபவர்கள் இந்த பாவப்பட்டவர்களை ஒருபோதும் பொருட்டாக நினைக்கப் போவதில்லை. அந்த எளியவர்களுக்கு ஆதரவாக நிற்க இங்கு இடதுசாரிகளைத் தவிர யார் இருக்கிறார்கள்?

சமயவேல் எழுதிய-

பிரியம் விதைத்த காட்டில்
நெருப்பு முளைத்தாலும்
பிடுங்கி எறிந்து விட்டு
மீண்டும் உழுது வைப்போம்!

என்னும் கவிதை வரிகளில் தொனிக்கும் நம்பிக்கை, இந்தத் தோல்வியை விடவும் முக்கியமானது. பெரியது.

 

*

கருத்துகள்

22 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. நீங்கள் சொல்வது உண்மைதான்..

  பதிலளிநீக்கு
 2. திருந்தாது, அவர்களும் தோல்வி ஒப்புக்கொண்டு ஒரு அணலைஸிஸ் செய்யனும் அதன் பின்பு இன்றை கால கட்டத்திற்க்கு பிளான் செய்யனும்.

  பதிலளிநீக்கு
 3. தங்கள் கருத்து மிகவும் சரியே... என்ன செய்ய..

  மூன்றாவது கூட்டணி, மாற்றுக் கூட்டணி போன்றவற்றை அமைத்த கட்சிகள் சில இடங்களில் வெற்றியையும் சில இடங்களில் தோல்வியையும் அடைந்துள்ளன! அவர்களது சீஸை பறித்தது யார்? நந்திகிராமமா? நானோவா? சந்தர்ப்பவாதமா?

  பதிலளிநீக்கு
 4. கிராமங்களில் நூறுநாள் வேலை என நலத்திட்டங்கள் இடதுசாரிக் கட்சிகளின் யோசனையாலும், வலியுறுத்தலாலும் தான் நிறைவேற்றப்பட்டன. அவை எல்லாவற்றையும் காங்கிரஸ்தான் இன்று அறுவடை செய்திருக்கிறது. இதில் எங்கே ஊனம் என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. //

  தேர்ந்த அரசியல் நோக்கு. வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்த பல மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றியைப் பரிசளித்திருப்பது இந்தத் திட்டம்தான்.

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா16 மே, 2009 அன்று 10:52 PM

  'தகவல் அறியும் சட்டத்திலிருந்து, கிராமங்களில் நூறுநாள் வேலை என நலத்திட்டங்கள் இடதுசாரிக் கட்சிகளின் யோசனையாலும், வலியுறுத்தலாலும் தான் நிறைவேற்றப்பட்டன'

  Right to Information Act was the outcome of a long struggle in which civil society played a major role. Aruna Roy and others played an important role. Left too had a role in this.But left came into the scene much later.NREGA again was an idea that was proposed even earlier.It was implemented in Maharastra fiest and a bureacrat thought about it.Later civil society picked up the idea and was
  supported by academics like Jean Dreze.Left put presure in making it a reality. But you cant give all the credit to left for both.

  left lost because of hubris. your party behaved like a big brother. it refused kozhikode seat to jd(s.
  even cpi had problems with cpim in kerala. same in west bengal where left treated forward block and rsp badly. left overestimates its power.it underestimated the people.
  left took anti-usa and anti-bjp positions to stupid levels.bjp has lost the battle but can regain the strength and try to win the battle next time.if left fails to learn lessons from this defeat it will end up as a regional party with significant presence in three states.cpi may vanish in another 15years as it has faiiled to grow.
  cpim can survive but it has to reinvent itself.the left's domiinance in west bengal may end if this trend continues.

  if you read only theekathir and PD you will end up as a fool repeating what the party says. try to read outlook, tehelka, seminar,
  economic and political weekly etc.
  the last two are important publications.all are in web
  and can be read without any
  subscription.

  பதிலளிநீக்கு
 6. இடது சாரிகள் தானு வாழ மாட்டார்கள் (ஏனென்றால் அவர்களுக்கு வாழத் தெரியாது), மற்றவர்களையும் வாழ விட மாட்டார்கள். (ஏனென்றால் அவர்களுக்கு எப்போது வயத்தெரிச்சல்).

  இவர்கள் தோற்றதால் நாட்டில் அரசியல் தெளிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  பதிலளிநீக்கு
 7. மாதவராஜ் சார் வரிசையாக அரசியல் பற்றி வருவதால் ஓட்டு மட்டும் போட்டுச் செல்கின்றேன்!!

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா17 மே, 2009 அன்று 7:52 AM

  Have you not seen Com.Prakash Karat's press meet after the results.He accepted the defeat gracefully and said that this defeat needs serious examination.If at all there is any mistakes committed Left will go to people,correct the mistakes and reorient themselves.This is an opportunity to bounceback at the Right,centre parties and neo-liberals.

  பதிலளிநீக்கு
 9. // அந்த எளியவர்களுக்கு ஆதரவாக நிற்க இங்கு இடதுசாரிகளைத் தவிர யார் இருக்கிறார்கள்? //

  உண்மையோ உண்மை.

  பதிலளிநீக்கு
 10. com......
  a very correct view in correct time.......
  this is the correct time for to review our pattern of work.....
  over all the world, communist movement met lot of setback...
  but from that experience they come forward....
  that s history...
  every action there must be a equal and opposite reaction.......
  that s science....

  we shall over come some day...

  பதிலளிநீக்கு
 11. இடது சாரிகள் தானு வாழ மாட்டார்கள் (ஏனென்றால் அவர்களுக்கு வாழத் தெரியாது),

  உண்மைதான் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கும் கலை (அதனால்தான் கலைஞர் என் சொல்கிறார்களோ) அவர்களுக்கு தெரியவில்லை.

  மற்றவர்களையும் வாழ விட மாட்டார்கள். (ஏனென்றால் அவர்களுக்கு எப்போது வயத்தெரிச்சல்).

  அந்த மற்றவர்கள் முதலாளிகளே. அதிகபட்ச முன் எச்சரிக்கை தடைக்கல்லே. தடைக்கல்லை முன்னேரதுடிக்கும் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இதுவே இந்த தேர்தல் அவர்களுக்கு சொல்லும் பாடம்.

  (பி.கு. நான் கம்னியூஸ்ட் அல்ல)

  பதிலளிநீக்கு
 12. எல்லா முன்னேற்ற திட்டங்களுக்கும் தடை விதிப்பார்கள் இடது சாரிகள் என்றொரு குற்றச்சாட்டு உண்டு.

  ஆனாலும், ஏழை மக்களுக்கு அவர்களது ஆதரவு தேவை, இல்லாவிட்டால் முதாளித்துவ முதலைகள் அவர்களை விழுங்கி விட வாய்ப்புண்டு.

  மூன்றாவது அணியில் யார் தலைவர், அவர்களது திட்டம் என்ன என்பதை தெளிவாக மக்களுக்கு கொண்டு சேர்க்கவில்லை என்பதே அவர்களது தோல்விக்கு முக்கிய காரணங்கள்.

  பதிலளிநீக்கு
 13. அன்பின் மாதவராஜ்

  நல்ல கட்டுரை - ஆழ்ந்த சிந்தனை - இடது சாரியினர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருப்பது பாராட்டத்தக்கது.

  இறுதியில் கவிதை அருமை அருமை - பீனிக்ஸ் பறவை போல விழ விழ எழ வேண்டும்

  நல்வாழ்த்துகள் மாதவராஜ்

  பதிலளிநீக்கு
 14. http://ceaselesscriticism.wordpress.com/2009/05/17/of-disappointments-and-celebrations/#comment-265
  -நண்பர் ஒருவரது கருத்துகள்.

  நல்ல கட்டுரை. இடதுசாரிகளைப் போலவே நம்ம தேசத்தில் படுதோல்வியடைந்த பா.ம.க-விற்கும் எதாவது சொல்லுங்கள் சார்!

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லா18 மே, 2009 அன்று 1:13 AM

  Good article. Few things to CPM...

  I think CPM should have brought more infrastructure development to Bengal and Kerala using their influence in the last govt.

  In Kerala CPM is behaving like Congress no-2 ie like capitalist parties. Kerala CPM leaders totaly quit the simplicity in their personal and public life.

  In Kerala, earlier Party sacked M.V.Ragavan for supporting to have alliance with Muslim League.
  But now Pinarai Vijayan unnecessaryly invited the controvesial PDP(MADANI) to the alliance. That caused lot of damage to the party among public and in LDF alliance itself.

  Alliance with JJ is an absurd.

  Mukilan

  பதிலளிநீக்கு
 16. The defeat is the Left is a dangerous development. This was the only political force that consistently opposes neoliberalism, which is ravaging the lives of a majority of Indians, and communalism, which divides the people and weakens their resistance to neoliberalism. The American imperialism and Indian corporate houses will use this opportunity to make the Left irrelevant in Indian politics. They can achieve this if the Left concentrates only on winning elections and going to Parliament and Assemblies. They will not succeed if the Left stands with the people and fights the disastrous effects of neoliberalism. The Left's style of functioning should undergo a sea change for this.

  பதிலளிநீக்கு
 17. பெயரில்லா18 மே, 2009 அன்று 11:55 AM

  நவீன் பட்நாயக் ஒரிசாவில் பெரு முதலாளிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்.அங்கு ஆதிவாசிகள்
  போராடுகிறார்கள்.கனிம வளங்களுக்காக பெரு முதலாளிகள்
  படையெடுக்கிறார்கள்.டாடாக்களுக்கும்,
  மிட்டல்களுக்கு ஆதரவாக இருக்கும்
  பட்நாயக் அரசு எதிர்ப்போரை ஒடுக்குகிறது. அவருடன் கூட்டு வைத்துக் கொண்டிருக்கும்
  கட்சி எப்படி நியோலிபரலிசத்தை,
  உலகமயமாதலை எதிர்ப்பதாக
  சொல்லிக் கொள்ள முடியும்.
  படநாயக்கும்,மன்மோகன் சிங்கும்
  ஒரே பொருளாதரக் கொள்கையைத்
  தான் பின்பற்றுகிறார்கள்.பாஜகவை
  உதறினால் ஒருவர் புனிதரா?

  கேரளாவில் இந்த தோல்விக்கு
  காரணம் என்ன.அங்கு முஸ்லீம் மதவாத சக்திகளுடன்
  கொஞ்சிக் குலாவியது சிபிஎம். மே.வங்கத்தில் அவர்களை குஷிப்படுத்த தஸ்லீமாவை துரத்தினீர்கள்.சச்சார்
  கமிட்டி ரிப்போர்ட்டை தலையில்
  தூக்கிவைத்துக் கொண்டு சலுகைகளை வாரித்தந்தீர்கள். மே.வங்கம், கேரளாவில்
  முஸ்லீம் ஒட்டுகள் கூட
  எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை.
  சலுகைகளை பெற்ற முஸ்லீம்களும் ஆதரவு தரவில்லை.கிறித்துவ மதஅமைப்புகள் எப்போதும்
  காங்கிரஸ் பக்கம்.ஆக கேரளாவில்
  மதவாத சிபிஎம் கூட்டணிக்கு மரண
  அடி.இந்த அடி தேவைதான்.

  பதிலளிநீக்கு
 18. பதிவைவிடவும் பின்னூட்டங்கள் ஆழமாகவும் சீரியஸ்ஸாகவும் வந்துள்ளது மிக ஆரோக்கியமாக இருக்கிறது.சில வரிகள் கூர்மையாக நம்மைத் தாக்கினாலும் அவற்றில் உள்ள உண்மைகள் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட வேண்டியவை.

  பதிலளிநீக்கு
 19. தீபா!
  தீப்பேட்டி!
  சுரேஷ்!
  செந்தில்வேலன்!
  செல்வேந்திரன்!
  அனானி!
  ரெங்குடு!
  ஆ.முத்துராமலிங்கம்!
  அனானி!
  ஜோதி!
  இலக்கியா!
  ஆதவா!
  ஜோ!
  சீனா!
  வெங்கிராஜா!
  அனானி!
  விஜயன்!
  அனானி!
  தமிழ்ச்செல்வன்!

  அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி. இடதுசாரிகளின் அர்ப்பணிப்பும், செய்த தவறுகளும் மிக நேர்மையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தவறுகளிலிருந்து பாடம் பெற்று மீண்டும் சக்தியோடு வெளிப்படுவார்கள் எஅன் நம்பிக்கை இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் தோழர்,

  இந்த தேர்தல் முடிவுகள் சற்று மணவலி கோடுத்தாலும் .நமக்கு நல்ல பாடம்,
  இதில் சி.ஐ.ஏ. பங்கும் கவனிக்கதக்கது. மற்றும் நம் பாராளுமண்ற முறை ஒரு பிரசார கருவி மட்டுமே.
  பணம் கோடிக்கணக்கில் விளையாடியுள்ளது .
  இது போக கையை நம் தோள்மீது 4.5 ஆண்டுகள் சுமந்துள்ளோம் .
  கடைசி மாதங்களில் 3ம் அணி திட்டம் எண்பது ,நிலையண ஆட்சி என்ற கோசம் இன்மை, ஊடகம் இன்மை போன்ற பலகரணங்ள்

  ஆணால் தற்போதாவது மூண்றவது அணி அமைத்து , அதை முன்நடத்த முயற்சி எடுத்துள்ளோம்.இதன் நீட்சியாக இடதுசாரி ஆணி அமையவேண்டும்.
  ஆடுத்த ஆண்டுகளிள் வலுவாண , கடுமையாண போராட்டங்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் .குறிப்பாக சி.பி.எம்.(Mamtha :-we do not oppose all the left, Cp.i.,r.s.p,frwd block. But only the cpm ) என்னென்றால் சி.பி.எம்.தான் தனது நிலையில் வலுவக போராடுகிறது

  நமக்காண ஊடகம் எண்பது முக்கிய அம்சம்.அதை அடைய வேணும்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!