இந்த வாரம் 29.2.1012 தேதியிட்ட குமுதம் பத்திரிகையில், காவல் கோட்டம் நாவல் குறித்த சில செய்திகள் வெளியாகி இருக்கிறது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் சு.வெங்கடேசன் ஆகியோரைத் தொடர்புகொண்டு கருத்துக்கள் கேட்டு இருக்கின்றர். அதில் தீராத பக்கங்களில், கடந்த ஒரு வார காலமாக காவல் கோட்டம் குறித்து எழுதியவைகளிலிருந்து குமுதம் பத்திரிகை கீழ்க்கண்டவாறு எடுத்துச் சொல்கிறது:
மாதவராஜ் என்ற தோழரும் அடுக்கடுக்காக பல தகவல்களை முன்வைத்து ‘காவல்கோட்டத்தை விமர்சித்து வருகிறார். ‘சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது போன்றவை இந்திய அரசின் விருதுகளே. ஒரு முதலாளித்து அரசின் கைகளில் இருந்து நீட்டப்படும் விருதை தனக்கும், தன் எழுத்துக்கும் கிடைத்த உயர்ந்தபட்ச அங்கீகாரம் என இடதுசாரிக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் பெருமிதம் கொள்ள மாட்டர்கள். பிரமைகளிலும் மயக்கங்களிலும் மூழ்கிட மாட்டார்கள். அப்படி ஆகிறவர்கள் நிச்சயம் இடதுசாரி எழுத்தாளர்களாக இருக்க மாட்டார்கள்’ என்கிறார் மாதவராஜ்.
‘தன் கட்டுரையில் ஜெயகாந்தன் பற்றி உயர்வு நவிற்சியிலேயே அணுகும் மாதவராஜ், வெங்கடேசனை சாமானியனைப் போல பேசியிருப்பது நல்லதாகப்படவில்லை. மாதவராஜ், ஜெயகாந்தனின் மருமகன் என்பதால் இந்தப் பாச உணர்ச்சி மேலிடுகிறது’ என்கிறார் இன்னொரு மார்க்சிஸ்ட் ஊழியர்.
காவல்கோட்டம் நாவல் பற்றிய அடுக்கடுக்கான பல தகவல்களில், குமுதம் பத்திரிகைக்கு எது முக்கியமானதாகப் பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. காவல்கோட்டம் என்ற நாவலின் உருவம், அதன் எழுத்துநடை, எழுதப்பட்ட விதம், எதைப் பேசுகிறது, எதைப் பேச மறுக்கிறது, அதற்குள் புதைந்திருக்கும் அரசியல் என விரிவாக எழுதப்பட்ட யாவும் குமுதத்திற்கு முக்கியமானதாகப் படவில்லை.
பொதுவாக விருதுகள் பற்றியும் இடதுசாரி எழுத்தாளர்கள் பற்றியும் சொல்லப்பட்ட ஒரு கருத்தை மட்டுமே (அதுவும் அரைகுறையாக) தெரிவிப்பது, குமுதம் இந்த மொத்த விவாதங்களையும் திசை திருப்பவுதாக மட்டுமல்ல, நோக்கத்தையே கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது. எழுத்தாளர் ஜெயகாந்தனை முன்வைத்து சொன்ன விஷயம் ‘யாராயிருந்தாலும் உண்மை தெரியாமல் பேசவும் கூடாது, யாராயிருந்தாலும் அதற்கு தலையாட்டவும் கூடாது’ என்பதுதான் ஒழிய இதில் உயர்வுநவிற்சி என்ன இருக்கிறது? ஜெயகாந்தனின் மருமகன் என்று ஏன் சொல்லப்படவேண்டும்? மேலும் காவல் கோட்டம் நாவல் பற்றிய பிரதான விஷயமா அது? அதையும் எதோ கிசிகிசு பாணியில் எழுதியிருப்பதைப் படிக்கும் குமுதத்தின் வாசகர்கள் விஷயம் தெரியாமல் அவரவர்க்கேற்ப அர்த்தம் கொள்ளச் செய்வதாகவும் இருக்கிறது. இது தரமானது அல்ல. நேர்மையானதும் அல்ல. எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.
இச்சர்ச்சைகள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன், “இன்றைக்கு விருது கிடைத்த பின்னால் இந்நாவலை விமர்சிக்கும் அவரது சக கட்சிக்காரர்கள் நாவல் வெளிவந்தபோது, மௌனமாயிருந்தார்களே. அது ஏன்? நாவல் வெளிவந்தபோது இந்த வசையை வெளியிட்டு இருந்தால் அதில் ஒரு நியாய உணர்ச்சி இருப்பதாக நான் நம்பியிருப்பேன்” என்று ஓரிடத்தில் சொல்வதாக வருகிறது. விருது கிடைத்த பிறகு எழுந்த சர்ச்சையையொட்டித்தான் நாவலைப் படித்தேன். படித்தபிறகுதான் விமர்சனம் செய்யத் துணிந்தேன். இதில் என்ன தவறு? ஒரு படைப்பைப் பற்றிய விமர்சனம் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம். இந்த காலத்திற்குள் வந்து சொல்ல வேண்டுமென்பதற்கு, இங்கு என்ன ஏலமா நடக்கிறது? நீங்கள் நம்புங்கள் அல்லது நம்பாதிருங்கள். அது பிரச்சினையில்லை. ஆனால் ‘வசை’ என்று எப்படிச் சொல்கிறீர்கள். இதே ‘வசை’ என்ற சொல்லைத்தான் எழுத்தாளர் சு.வெங்கடேசனும் பயன்படுத்துகிறார்.
மேலும் எழுத்தாளர் ஜெயமோகன், “எழுத்தாளர்களுக்கென்று கம்யூனிஸ்ட் கட்சியில் 1770 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது இதுவரை காவல்கோட்டத்தைப் போல ஒரு உருப்படியான வேலையைச் செய்திருக்கிறர்களா?” என கேள்வி எழுப்பி இருக்கிறார். சு.வெங்கடேசனையும், காவல்கோட்டத்தையும் முன்வைத்து ஒட்டுமொத்த எழுத்தாளர் சங்க அமைப்பையே ஜெயமோகன் கேலி செய்திருப்பதாகவும், இழிவுபடுத்தியிருப்பதாகவுமே உணர்கிறேன். எழுத்தாளர் கு.அழகிரிசாமி எங்கள் பிதாமகனாக இன்னும் தன் எழுத்துக்களில் வாழ்கிறார். தமிழ் இலக்கியத்தில் முற்போக்கு எழுத்தாளர்களின் பங்கு ஒரு மகத்தான அத்தியாயம். மலரும் சருகும் எழுதிய எழுத்தாளர்.டி.செல்வராஜிலிருந்து, தாகம், சங்கம் போன்ற நாவல்களைப் படைத்த எழுத்தாளர் கு.சின்னப்பாரதியிலிருந்து அது ஆரம்பிக்கிறது. சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் வழியே பயணிக்கிறது. எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயசங்கர், ஆதவன் தீட்சண்யா, பவா.செல்லத்துரை, ஷாஜஹான் என , இன்னும் பல எழுத்தாளர்களாய் அது தன் எல்லைகளை அழகாக விரித்திருக்கிறது. இவர்களின் படைப்பு யாவும் உருப்படாதவை என ஒற்றை வார்த்தையில் நிராகரிக்கிறீர்கள். முற்போக்கு எழுத்தாளர்கள் குறித்த உங்கள் அபிப்பிராயம் இதுவே எனில், கோணலான உங்கள் இலக்கியப் பார்வையை சொல்லும் அளவுகோலும் அதுவேயாகட்டும். இப்பேர்ப்பட்ட நீங்கள் பாராட்டுவதாலும் நாங்கள் காவல்கோட்டத்தை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்தை விலாவாரியாகச் சொல்லி, எழுத்தாளர் சு.வெங்கடேசன் அதுகுறித்து மட்டுமே பேசுவதாக முடிப்பதில் குமுதத்தின் பார்வையும் சார்பும் மிகத் தெளிவாக இருக்கிறது. நாவலைப் பற்றி எழுகிற ஆரோக்கியமான, தீவிரமான உரையாடல்களையெல்லாம் குமுதமும் சேர்ந்து சிதைக்கப் பார்க்கிறது. இதற்கு ‘இலக்கிய சர்ச்சை’ என்று தலைப்பு வேறு. இலக்கியமும் இல்லை. சர்ச்சையுமில்லை. எழுதியவர் இணையத்தில் நன்கு அறிமுகமான ‘கடற்கரய்’. கஷ்டம்தான்.
நான் இன்னும் 'காவல் கோட்டம்' படிக்கவில்லை. ஆனால் உங்களுடைய மதிப்புரையைப் படித்தவரையில் நீங்கள் எழுத்தாளர் சு.வெங்கடேசனை மட்டம்தட்டி எழுதியதாக எங்கும் தெரியவில்லை. மற்றபடி எழுத்தாளர் ஜெயமோகன் இப்படித் தவறான வாதங்களை முன்வைத்துத் தம்முடைய தரம் என்ன என்பதை வாசகர்களுக்குக் காட்டியிருக்கிறார்! அவ்வளவே!
பதிலளிநீக்கு‘வசை’ என்ற சொல்லைத்தான் சு.வெங்கடேசனும், எழுத்தாளர் ஜெயமோகனும் பயன்படுத்துகிறார்கள்.
பதிலளிநீக்குஇந்த ஒற்றுமையை தான் பெத்தானியாபுரம் முருகானந்தம் தனது கடிதத்தில் ( http://maduraimarxist.blogspot.in/2012/02/blog-post_04.html ) மிக விரிவாக எடுத்துறைக்கிறார்.
இவர்களின் ஜாதிய துதிபடல், செங்கல் பூஜை சார்ந்த கருத்தாக்கங்கள், தொடங்கி இவர்கள் காவல் கோட்டத்திற்கு எதிராக எழுதப்படுவது அனைத்தும் ‘வசை’ என்று கூறுவது வரை அனைத்தும் ஒற்றையுடன் இருப்பதை குமுதம் அம்பலப்படுத்தியுள்ளது.
முற்போக்கு படைப்பாளிகளையும் அமைப்பையும் கொச்சைப்படுத்துவதற்கு இந்த சந்தா்ப்பத்தை ஜெயமோகன் பயன்படுத்தியிருக்கிறாா். சு.வெ. ஒரு சொரனையுள்ள பொ.செ என்றால் முதல் கண்டனம் அவாிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆனால் அமைப்பு எக்கேடுகெட்டால் என்ன? அவரது புகழ் வாழ்க எனும் கோசங்கள் எட்டு திக்கும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற இயல்புகொண்ட சு.வெ-யிடம் இதை எதிா்பாா்க்கமுடியாதுதானே. மீண்டும் முருகானந்தம் சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது. இந்த சு.வெ-ஜெயமோகன் கூட்டணி தமுஎகச விற்கு இன்னும் எத்தனை கேடுகளை விளைவிக்கப்போகிறதோ தொியவில்லை. அமைப்பை இந்த கும்பலிடம் பாதுகாப்பது உண்மையான தமுஎகச வினாின் முக்கியப் பணி.
பதிலளிநீக்கு***தன் கட்டுரையில் ஜெயகாந்தன் பற்றி உயர்வு நவிற்சியிலேயே அணுகும் மாதவராஜ், வெங்கடேசனை சாமானியனைப் போல பேசியிருப்பது நல்லதாகப்படவில்லை.***
பதிலளிநீக்குநீங்க சு வெங்கடேசன் பற்றி நல்லா எழுதியதாகத்தான் எனக்கு ஞாபகம். அப்புறம் ஜெயகாந்தன் லெவெல் மற்ரும் ரெப்யூட்டேஷன் கொஞ்சம் அதிகம்தான்னு நான் நம்புறேன். நான் நியாயமாக யோசித்ததுக்குக் காரணம் உங்க "பின்புலம்" எனக்குத் தெரியாது. அது எவ்ளோ நல்லது பாருங்க!
*** மாதவராஜ், ஜெயகாந்தனின் மருமகன் என்பதால் இந்தப் பாச உணர்ச்சி மேலிடுகிறது’ என்கிறார் இன்னொரு மார்க்சிஸ்ட் ஊழியர்.***
இந்த வரியை குமுதம் எழுதியது ஒரு கேவலமான செயல். குமுதம் பத்திரிக்கை எப்போதுமே தரம் தாழ்ந்ததுதான் என்பதை எடுத்துக்காட்ட சமீபத்திய உதாரணம் இது.
உங்களுக்கு ஒண்ணு சொல்லனும் மாதவராஜ். நீங்க "இன்னாரு"னு எனக்கு இப்போத்தான் தெரியுது. அதனால உங்க மேலே மரியாதை கூடப்போதா இல்ல கொறையப்போதானு எனக்குத்தெரியலை. குமுதம் எழுதிட்டுப்போறான் விடுங்க, நீங்க இதை கோடிட்டுக் காட்டியது (உங்க "பின்புலத்தை") எதுக்குனு தெரியலை. ஆனால், இதை வேணுமென்றே கோடிட்டுக்காட்டி நீங்க யாரு, உங்க சொந்த பந்தம் யாரு, உங்க சாதி என்னனு வெளியுலகுக்கு எடுத்துச் சொல்ல இதை பயன்படுத்தியதாக ஊர் உலகம் சொல்லத்தான் போகுது, அப்படி வெளியே சொல்லலைனாலும் பரவாயில்லை நெனைக்கத்தான் போகுது.
I think you would have looked better if you had not revealed who your relatives are! You lose your "originality" right here! :(
நண்பர்களே!
பதிலளிநீக்குசும்மா வசை, காழ்ப்புணர்ச்சி என்று பேசுவதை விட்டு எழுத்தாளர்கள் ஜெயமோகன், சு.வெங்கடேசன் உட்பட இன்னும் காவல் கோட்டம் நாவலைக் கொண்டாடும் யாரும், அதன் உருவம் மற்றும் உள்ளடக்கம் குறித்து விவாதிக்கத் தயார் என்றால் நானும் தயாராக இருக்கிறேன். தற்கால சமூகத்துக்கு ஏற்ற எந்த மீள்வாசிப்புமற்று ஒரு வரலாற்றைப் புனைவது பெரும் கேடு. அதைச் சொல்லியாக வேண்டும்.
தோழர் “புற்றில் உறையும் பாம்புகள்” அஷ்வ கோஸின் பழைய சிறுகதை தொகுப்பு . இங்கும் புற்றில் உறையும் பாம்புகள் வெளிவர தொடங்கியிருக்கின்றன. நல்லது தானே
பதிலளிநீக்குமாமனாரின் இன்ப வெறி வசனகர்தா இடதுசாரிகளின் மீது அள்ளி வீசும் அவதூறுகள் சில - தோழர்கள் அவசிய வாசிக்க.....
பதிலளிநீக்கு'என்னுடைய எல்லாக் கருத்துக்களும் மேலானவையே, கொஞ்சம் படித்துப் பாருங்கள்'
'முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலேயே இரண்டாயிரம் உறுப்பினர்களாம். இரண்டாயிரம் எழுத்தாளர்கள்! இதைவிட அதிக எழுத்தாளர்கள் அ.தி.மு.க. இலக்கிய அணியில்மட்டும்தான் இருக்கமுடியும்!'
'மூத்த பெரும்படைப்பாளிகள் இருக்கையில் இப்படிக் கொடுக்கலாமா என்றெல்லாம் குமுறும் தோழர்களுக்கு ஆ.மாதவன், ஹெப்ஸிபா ஜேசுதாசன், ஞானக்கூத்தன், நாஞ்சில்நாடன், பூமணி, வண்ணநிலவன், வண்ணதாசன் என மூத்த சாதனையாளர்களின் வரிசையே இருக்கும்போது மேலாண்மை பொன்னுச்சாமி பரிசு பெற்றபோது ஒன்றும் தோன்றவில்லை. மேலாண்மை அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் என அமைப்புக்குள் இருந்து ஒரு குரல்கூட எழவில்லை. மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய ஒரு கதையைக்கூட நல்ல கதை என என்னால் சொல்லமுடியாது.'
'வெங்கடேசனுக்கு இது தேவைதான். அவர்தான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலர் என நினைக்கிறேன். பத்துப்பதினைந்து வருட காலமாக அவர்தான் அந்த சங்கத்தின் கருத்துக்களை சொல்லிக்கொடுக்கிறார். அமைப்பின் உறுப்பினர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியுமா என்று மட்டும் பார்ப்பதுடன் நின்றுவிடாமல் இலக்கியத்தின் சில அடிப்படைகளையாவது சொல்லிக்கொடுக்க முற்பட்டிருந்தால் இப்போது வசை வரும்போது கொஞ்சம் புத்திசாலித்தனமாக வந்திருக்கும். அதைப்பற்றி நாலுபேரிடம் கௌரவமாகச் சொல்லவாவது முடிந்திருக்கும்.'
சி.சரவணகார்த்திகேயன் அவர்கள் எழுதிய காவல் கோட்டம் – ஓர் அனுபவம் விமர்சனத்தில் அவர் சமீபத்தில் சில வரிகள் பின்னுட்டமாக சேர்த்திருக்கிறார்...
பதிலளிநீக்குகாவல் கோட்டம் பற்றி பெத்தானியாபுரம் முருகானந்தம் என்பவரின் முக்கியமான தகவல் பகிர்வு: http://maduraimarxist.blogspot.in/2012/02/blog-post_04.html
நாவலுக்கு உதவிய தரவுகள் பற்றிய பின்னணிக்குறிப்புகள் பற்றிய குறிப்பு எதுவும் தரப்படவில்லை என்று எனது விமர்சனத்திலேயே நான் குறிப்பிட்டு இருந்தேன். அதைக் குரித்து விரிவாக விமர்சித்து plagiarism என்ற அடிப்படையில் பேசுகிறது இப்பதிவு.
சாம்ராஜ் புற்றில் உறையும் பாம்புகள் வெளிவர தொடங்கியிருக்கின்றன.. அதில் எனக்கு மிகவும் பிடித்து பெத்தானியாபுரம் முருகானந்தம் மாமனாரின் இன்ப வெறி என்கிற படத்திற்கு வசனம் எழுதி பிழைப்பு நடத்திக் கொண்டே இடதுசாரிகளுக்கு அறிவுரை கூறும் எழுத்தாளரை பற்றிய விவரி்த்திருப்பது தான், தமிழ் சூழலும் இப்படி நமக்கு தெரியாத விஷயங்கள் எத்தனையோ.
பதிலளிநீக்கு//ஜெயமோகன், சு.வெங்கடேசன் உட்பட இன்னும் காவல் கோட்டம் நாவலைக் கொண்டாடும் யாரும், அதன் உருவம் மற்றும் உள்ளடக்கம் குறித்து விவாதிக்கத் தயார் என்றால் நானும் தயாராக இருக்கிறேன். //
பதிலளிநீக்குகாவல்கோட்டமும் தோழர்களும் http://www.jeyamohan.in/?p=25268
இந்த பதிவில் காவல்கோடத்திற்கு ஜெயமோகன் எழுதிய விமர்சனம் ஏற்கனவே 5 பாகங்களாக இருக்கிறது ,
ப டித்துவிட்டு விவாதிக்கலாம் .
@வருண்!
பதிலளிநீக்குஇதனாலெல்லாம் எனது ஒரிஜினாலிட்டி குறைந்துவிடும் என நினைக்கவில்லை.அது தேவையில்லை இங்கே என்பதே நான் சொல்ல வந்தது.
@MAYAN!
பதிலளிநீக்கு//முற்போக்கு படைப்பாளிகளையும் அமைப்பையும் கொச்சைப்படுத்துவதற்கு இந்த சந்தா்ப்பத்தை ஜெயமோகன் பயன்படுத்தியிருக்கிறார்.// உண்மையே. நிச்சயம் சு.வெங்கடேசன் இதை ரசிக்க மாட்டார். தனது கண்டனங்களைத் தெரிவிப்பார். தமுஎகச ஒரு மகத்தான கலை இலக்கிய இயக்கம். அதற்கு எந்த கேடுகளையும் விளைவிக்க முடியாது.
@சாம்ராஜ்!
வருகைக்கு நன்றி. புற்றில் உறையும் பாம்புகள் என்ற சொல்லாடல் தேவையா?
@Arangasamy K.V!
பதிலளிநீக்கு5 பாகங்கள் என்றதும் மலைப்புத்தான் வருகிறது. சரி, முதலில் படித்துவிடுகிறேன். பிறகு விவாதிக்க முடியுமா என பார்க்கிறேன்.
//“இன்றைக்கு விருது கிடைத்த பின்னால் இந்நாவலை விமர்சிக்கும் அவரது சக கட்சிக்காரர்கள் நாவல் வெளிவந்தபோது, மௌனமாயிருந்தார்களே. அது ஏன்?// என்னும் ஜெயமோகனின் கேள்வியை ஏன் உங்களுக்கு எனச் சுருக்கிக்கொள்கிறீர்கள்? “இன்று தான் படித்தேன்; படித்தவுடன் எழுதுகிறேன்; இதில் என்ன தவறு?” என உங்கள் நிலையில் கேட்பது நூற்றுக்கு நூறு சரிதான்! ஆனால் ஒரு வேளை ‘காவல் கோட்டத்தின்’ உள்ளடக்கத்தைப் பற்றிச் சரியான அளவில் விவாதங்கள் நடத்தப்படவில்லை எனில்,
பதிலளிநீக்கு“கட்சிக்காரர்கள்” என அவர் கேட்பது சரியாகத் தானே படுகிறது! // “எழுத்தாளர்களுக்கென்று கம்யூனிஸ்ட் கட்சியில் 1770 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது இதுவரை காவல்கோட்டத்தைப் போல ஒரு உருப்படியான வேலையைச் செய்திருக்கிறர்களா?”// இது போன்ற கேள்வியை எழுப்பும் ஜெயமோகன், தம்முடைய இணையப் பதிவுகளில், ‘அருந்ததிராயும் ஐஸ்வர்யாராயும்’ என்பன போன்ற தரம் குறைந்த, தனியாள் தாக்குதலே மிகுந்த, எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிப் பேசாமல் எழுத்தாளர்கள் மீது அவதூறுகள் வீசுகின்ற அளவில் தரம் குறைந்து தான் செயல்படுகிறார். அப்படிப்பட்டவரிடம் இப்படிப்பட்ட வினாவைத் தான் எதிர்பார்க்க முடியும்.
// எழுத்தாளர்கள் ஜெயமோகன், சு.வெங்கடேசன் உட்பட இன்னும் காவல் கோட்டம் நாவலைக் கொண்டாடும் யாரும், அதன் உருவம் மற்றும் உள்ளடக்கம் குறித்து விவாதிக்கத் தயார் என்றால் நானும் தயாராக இருக்கிறேன்.// நெஞ்சார வரவேற்கின்றேன். கட்சி, இயக்கம் என இறுகிப் போன மனத்துடன் இல்லாமல் திறந்த மனத்துடன் செயல்பட முயல்வதாக நான் நம்பும் நீங்களும் மனச்சான்றே இல்லாமல் கொள்கைகளையும் அக்கொள்கைகளைப் பின்பற்றுவோரையும் தாறுமாறாக எழுதித் தூற்றும் ஜெயமோகனும் கருத்துக்குக் கருத்து என்னும் அளவில் மோதும் போது தான் தங்களுடைய தரமும் தெரியும்; ஜெயமோகனின் தரமும் தெரியும். தயவு செய்து ஜெயமோகனின் பதிவுகளைப் (ஐந்து என்றாலும்) படித்து எழுதுங்கள். விட்டு விடாதீர்கள்.
பாசிச ஒநாயின் அடியாட்கள் இங்கு அனுப்பபடுவார்கள் என்று நேற்றே அறிந்தேன், எதற்கும் நீங்கள் இன்னும் ஒரு முறை எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவை வாசியுங்கள்.
பதிலளிநீக்குhttp://www.keetru.com/literature/review/s_ramakrishnan.php
Minakshi negotiated with the latter with a view to nullifying the arrangements agreed upon, in return for, it is said, one crore of rupees. Chanda Sahib consented to her terms, and is said to have sworn by the Koran to safeguard her interests at any cost. He did not scruple to break his solemn vow, and imprison Mlnakshi in her palace. The latter's miseries overwhelmed her, and she put an end to her own life by taking poison.
பதிலளிநீக்குHistory Of The Nayaks Of Madura- R Sathianathaier - Page 254
காவல் கோட்டமநாவலின் முப்பதாவது அத்யாயம் பக்கம் 255ல் இதே விஷயம் எப்படியிருக்கிறது பாருங்கள்
மீனாட்சி ஒப்புக் கொண்டாள். ஆனால் பங்காரு ஒப்புக் கொள்ளாமல் திருச்சியின் மீது படை எடுத்தார். சாந்தா சாகிப்பின் உதவியை நாடி பணம் கொடுத்தார். அதை விட அதிகமான பணத்தை மீனாட்சி தந்தபோது மீனாட்சியை அரசியாக ஏற்பதாகவும் படை உதவி செய்வதாகவும் குரானின் மீது சத்தியம் செய்துதந்தார். 1736ல் சந்தா சாகிப் தனது படையை வலிமை படுத்திக் கொண்டு மீண்டும் திருச்சி வந்தார். நேசசக்தி என்பதால் வழிவிட்ட கோட்டைக்குள் புகுந்தபின்பு அரசி மீனாட்சியை சிறைப்படுத்திவிட்டு நிர்வாகத்தை கவனிக்கத் துவங்கினார். மீனாட்சி நஞ்சுக் குப்பியை எடுத்து திறந்து அப்படியே வாயில் கவிழ்த்துவிட்டாள். (காவல் கோட்டம் பக்கம் 255.)
(பக்கம் நம்பர் கூட காப்பி அடிக்கப்பட்டுள்ளது)
இதற்கு பெயர் எல்லாம் என்ன என்று யாராவது சொல்லுங்க சார்????
திராவிடச்சார்புள்ள வரலாற்றாய்வாளரான ஆ. இரா. வேங்கடாசலபதி என்றால் இந்த பாசிச ஒநாய் என்ன மாதிரியான சார்புள்ளவர்?????????
பதிலளிநீக்குஇதனையும் வாசியுங்கள்
களவியல் காரிகை
ஆ. இரா. வேங்கடாசலபதி
http://www.kalachuvadu.com/issue-110/page70.asp
தற்கால சமூகத்துக்கு ஏற்ற எந்த மீள்வாசிப்புமற்று ஒரு வரலாற்றைப் புனைவது பெரும் கேடு. அதைச் சொல்லியாக வேண்டும்,,,,,,,,
பதிலளிநீக்குமாதவராஜ்,
இது போன்ற கருத்துக்களை, இது போன்ற தறுணத்தில், இங்கே உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
தற்கால சமூகத்துக்கு ஏற்ற எந்த மீள்வாசிப்புமற்று ஒரு வரலாற்றைப் புனைவது பெரும் கேடு. அதைச் சொல்லியாக வேண்டும்......
பதிலளிநீக்குமாதவராஜ், உங்களது இந்த கருத்தை, இந்த தறுணத்தில், இங்கே எதிர்பார்க்கவில்லை
நிச்சயம் ஜாதிகளால் ஒரு சமூகம் பிளவுபட்டு, தீண்டாமை கொடுமையால் அவதிப்படும் போது இந்த ஜாதிய மீள்வாசிப்பு, இந்த ஜாதிய பெருமிதன் நம்மை இன்னும் பாதாளங்களுக்கே அழைத்துச் செல்லும்.
பதிலளிநீக்கு//திராவிடச்சார்புள்ள வரலாற்றாய்வாளரான ஆ. இரா. வேங்கடாசலபதி என்றால் இந்த பாசிச ஒநாய் என்ன மாதிரியான சார்புள்ளவர்?????????
பதிலளிநீக்கு//
பாசிஸ ஓநாய் போன்ற வார்த்தைகளெல்லாம் ஸ்டாலின் காலத்தவை , இன்னும் கொஞ்சம் நவீனகாலத்திற்கு வரலாம் இடதுசாரிகள் :)
மகஇக ஆட்களை பாருங்கள் , விளக்குபிடிப்பர்கள் ,பொட்டை , மாமாவேலை இதெல்லாம் இப்போது சொல்வதில்லை , காலத்திற்கேற்ப முன்னேறி விதவிதமான வசைகள் உபயோகிக்கிறார்கள் தோழர் :)(உபயம் வினவு.காம்
மானமனாரின் இன்ப வெறி என்று அவர் எழுதும் போது
பதிலளிநீக்குபாசிஸ ஓநாயும் தான் இருந்து விட்டு போகட்டுமே.........
உங்கள் அளவுக்கு ஹிந்து தத்துவ கஞ்சா மரபு எங்களுக்கு தெரியாத அய்யா சாமி
இத்தனை பேர் புதிதாக பதிவிட்டிருக்கிறார்கள். தீராத பக்கக்கங்களில் இது வரை பதிவிடாதவர்கள் ஜெ மோ னின் எரிச்சல் தந்த உத்வேகத்தால், இவர்களும் இவர்களது பங்குக்கு சொரிந்து விட்டு போகிறார்கள். ஒரு அரைபக்க கடிதம் எழுதக் கூட துணியாதவர்கள், இப்போது மாய்ந்து மாய்ந்து விமர்சிக்கிறார்கள். என்னே கரிசனம்.
பதிலளிநீக்குஇடது என்பது ஒரு கொள்கை, மனித, சமூக அறிவியலின் ஒரு சாரம். அது தன் மண்ணின் மக்களின் உணர்வுகளோடு, அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் மீதான மரியாதையோடு போராடுபவர்கள்.
நிச்சயமாய், ஒரு சாதியை பிரதிநிதிப்படுத்துவதற்காக, தமிழில் எழுதிக்கொண்டே, அதன் மூலமாக சம்பாதித்துக் கொண்டே தமிழை இழிவு செய்வதற்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்லர் இடது சார்பாளர்கள். இலக்கிய வேசித்தனம் இல்லாத, தேசியவாத, மக்கள் நல விரும்பிகள். எத்தனை புதிய விமர்சர்கள். அப்பப்பா. ஸ்டாலின் காலத்து வார்த்தகளாம். எத்தனை காழ்ப்புகள். பசுத்தோல் போர்த்திய புலிகள். முதலில் இவர்கள் தன் சொந்த அழுக்கை தேய்த்து கழுவி விட்டு சுத்தமாய் வந்து நிற்கட்டும். பிறகு பார்க்கலாம்.
எதிராளி ஒன்று சேர்ந்து நிற்கும் போதெல்லாம் அதை பிரிக்கும் நல்ல காரியத்தை செய்யும் நல்லவர் தான் ஜெ மோவும் அவரின் வழி வருடிகளும்.
இத்தனை பேர் புதிதாக பதிவிட்டிருக்கிறார்கள். தீராத பக்கக்கங்களில் இது வரை பதிவிடாதவர்கள் ஜெ மோ னின் எரிச்சல் தந்த உத்வேகத்தால், இவர்களும் இவர்களது பங்குக்கு சொரிந்து விட்டு போகிறார்கள். ஒரு அரைபக்க கடிதம் எழுதக் கூட துணியாதவர்கள், இப்போது மாய்ந்து மாய்ந்து விமர்சிக்கிறார்கள். என்னே கரிசனம்.
பதிலளிநீக்குஇடது என்பது ஒரு கொள்கை, மனித, சமூக அறிவியலின் ஒரு சாரம். அது தன் மண்ணின் மக்களின் உணர்வுகளோடு, அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் மீதான மரியாதையோடு போராடுபவர்கள்.
நிச்சயமாய், ஒரு சாதியை பிரதிநிதிப்படுத்துவதற்காக, தமிழில் எழுதிக்கொண்டே, அதன் மூலமாக சம்பாதித்துக் கொண்டே தமிழை இழிவு செய்வதற்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்லர் இடது சார்பாளர்கள். இலக்கிய வேசித்தனம் இல்லாத, தேசியவாத, மக்கள் நல விரும்பிகள். எத்தனை புதிய விமர்சர்கள். அப்பப்பா. ஸ்டாலின் காலத்து வார்த்தகளாம். எத்தனை காழ்ப்புகள். பசுத்தோல் போர்த்திய புலிகள். முதலில் இவர்கள் தன் சொந்த அழுக்கை தேய்த்து கழுவி விட்டு சுத்தமாய் வந்து நிற்கட்டும். பிறகு பார்க்கலாம்.
எதிராளி ஒன்று சேர்ந்து நிற்கும் போதெல்லாம் அதை பிரிக்கும் நல்ல காரியத்தை செய்யும் நல்லவர் தான் ஜெ மோவும் அவரின் வழி வருடிகளும்.
தேசியத்திற்கான உழைக்கும் தோழர் அது என்ன தேசியம் என விளக்கவேண்டாமா ?
பதிலளிநீக்குசர்வதேசியமா ? உபதேசியமா? இந்திய தேசியமா? திராவிடதேசியமா ? தமிழ் தேசியமா ?
இன்பெர்மேசன் ஈஸ் வெல்த் என தோழர் செந்தில் சொன்னாரே தோழர் ?
இப்படிக்கு
இன்னொரு பாசிச ஓநாய் :)