இவர்களுக்கு நித்யானந்தா எவ்வளவோ மேல்!

karnataka_minsters-display

 

கல்லூரி மாணவிகள் எப்படி உடை உடுத்த வேண்டும் என பாடம் எடுக்கிறவர்கள் இந்தக் கும்பல்தான்.  காதலர் தினம் கொண்டாடக் கூடாது, அது நம் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று முழங்குகிறவர்கள் இந்தக் கும்பல்தான்.  பூங்காவில் உட்கார்ந்திருந்த ஆணையும், பெண்னையும் அடித்து விரட்டியவர்கள் இந்தக் கும்பல்தான். இந்துமதக் கடவுள்களை நிர்வாணமாய் வரைந்துவிட்டார் என உலகமகா ஓவியர் உசேனை நாட்டைவிட்டே விரட்டியவர்களும் இந்தக் கும்பல்தான். இப்போது கர்நாடகா சட்டசபையில்  செல்போனில் ஆபாசக்காட்சிகளைப் பார்த்துக் களித்துக்கொண்டு இருந்தவர்களும் இந்தக் கும்பல்தான்.

 

சாதாரணமானவர்கள் இல்லை இவர்கள். ஒருவர் கூட்டுறவுத்துறை அமைச்சர். அடுத்தவர் மகளிர் குழந்தைகள் நல அமைச்சர். இன்னொருவர் விளையாட்டுத்துறை அமைச்சர்.  கிருஷ்ணர், லட்சுமணன் போன்ற  புனிதக் கடவுள்களின் பெயர்களை அவர்கள் வைத்துக்கொண்டு இருப்பதற்கு ஒன்றும் குறைவில்லை. அல்லும் பகலும் இவர்களின் சிந்தனையில் நிறைந்திருப்பது எது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

 

காவி உடை தரித்துக்கொண்டு, கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு, காமத்தில் ஈடுபட்ட நித்யானந்தா கூட எவ்வளவோ மேல். ஒரு தனியறையில், தனக்குப் பிடித்த ஒரு பெண்ணோடு மட்டுமே இருந்தான் அவன்.  பொறுப்புமிக்க பதவிகளை வகித்துக்கொண்டு உயர்ந்த பீடங்களில் உட்கார்ந்து, மக்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டிய முக்கியமான தருணத்தில் எத்தகைய காரியங்களில் ஈடுபட்டு இருந்திருக்கின்றனர் இந்தக் கயவர்கள். 

 

ஒழுக்கம், நேர்மை, கலாச்சாரம், பண்பாடு பற்றி பேசுவதற்கு இவர்களின் கட்சியான பா.ஜ.கவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. காவியில் கறை பிடிக்கவில்லை. காவியே இப்போது கறையாகி விட்டிருக்கிறது.

 

இந்த அமைச்சர்கள் எந்தக் கடவுளின் பெயரால் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்களாம்?

 

“பாரத் மாதா கீ ஜெய்!”

 

பி.கு: சென்ற மாதத்தில்தான் ரூ.35.17 லட்சம் செலவழித்து கர்நாடகா அரசு எம்.எல்.சிக்களுக்கு ஐபாட்2 செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறது. உடனே தங்களுக்கு ஐபாட் 3 செல்போன் வேண்டும் என எம்.எல்.ஏக்கள் கேட்டு இருக்கிறார்களாம். அதற்கு 1.05 கோடி செலவகுமாம். ரொம்ப அவசியம்!

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //மக்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டிய முக்கியமான தருணத்தில் எத்தகைய காரியங்களில் ஈடுபட்டு இருந்திருக்கின்றனர் இந்தக் கயவர்கள். ஒழுக்கம், நேர்மை, கலாச்சாரம், பண்பாடு பற்றி பேசுவதற்கு இவர்களின் கட்சியான பா.ஜ.கவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது//

    அய்யா நீங்க சொல்றது நல்லா தான் இருக்கு ஆனா இதே ஆர்வத்துடன் உங்க கட்சியில் இருக்கும் திருட்டுகளை பற்றி பல தகவல்கள் அம்பலம்மாகியும் விவாதிக்க, பேச எது உங்களை தடுக்கிறது

    இதோ சுட்டி
    http://maduraimarxist.blogspot.in/2012/02/blog-post_04.html#comment-form

    பதிலளிநீக்கு
  2. The true faces of RSS/BJP GROUP exposed now...They are claiming that they are the watch dogs of culture.They have no moral right to say about people's dress code/cultures...The karnataka's MLAs became the disciples of Nithiyananda..we shall send them to out of assembly

    பதிலளிநீக்கு
  3. ஒரு தவறை சரியில்லை என்று நிரூபிப்பதற்காக இன்னொரு தவறை பரவாயில்லை என்று வாதாடுவது சந்தர்ப்ப வாதம்:)

    இரண்டுமே மக்கள் சார்ந்தது.நாளை இன்னுமொரு தவறு வேறு வடிவத்தில் வரும்போது ஐபோன் காதலர்களுக்கும் வாதாடுவீங்க போல இருக்குதே!

    பதிலளிநீக்கு
  4. @nellaiconspiracy!

    நிச்சயமாய் எனக்குத் தெரிந்த விபரங்களோடு பதில் சொல்வேன் நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. @vimalavidya!

    பி.ஜே.பியின் உண்மை முகம் எவ்வளவு கொடூரமானது, அருவருப்பானது என்பதை இந்த தேசம் இன்னும் அறியவில்லை. அருவருப்பான அவர்களது ஒரு முகம் இப்போது வெளிப்பட்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. @ராஜ நடராஜன்!

    இந்தவொரு விஷயத்தை வைத்தோ, இந்த ஒரு எம்.எல்.ஏவை வைத்தோ பி.ஜே.பி குறித்து முடிவுக்கு வரவில்லை நண்பரே. கர்நாடாகாவில் மட்டும் இது மட்டும் வெளியேத் தெரிந்த மூன்றாவது நிகழ்வு. நாடாளுமன்றத்துக்குள்ளேயே. வேறொரு பெண்ணை தன் மனைவி என்று பொய் சொல்லிய் பி.ஜே.பி எம்.பி பற்றியும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

    இதற்கும் மேலே, தீராத பக்கங்களில் http://www.mathavaraj.com/2011/01/blog-post_05.html பதிவைப் படியுங்கள். அங்கிங்கனெதாபடி எங்கும் குற்றச்சாட்டுகள் நிரம்பிய கட்சியை என்னவென்று சொல்வது?

    பதிலளிநீக்கு
  7. //பி.கு: சென்ற மாதத்தில்தான் ரூ.35.17 லட்சம் செலவழித்து கர்நாடகா அரசு எம்.எல்.சிக்களுக்கு ஐபாட்2 செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறது. உடனே தங்களுக்கு ஐபாட் 3 செல்போன் வேண்டும் என எம்.எல்.ஏக்கள் கேட்டு இருக்கிறார்களாம். அதற்கு 1.05 கோடி செலவகுமாம். ரொம்ப அவசியம்! // இவங்க எப்பவுமே இப்படித்தான் எசமான் ! குத்துங்க எசமான் குத்துங்க !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!