சு.வெங்கடேசனுக்கு சாகித்திய அகாதமி விருது!

suve

எனது நெருங்கிய நண்பரும், எங்கள் இயக்கத்தின் தோழரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளருமாகிய  சு.வெங்கடேசனுக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. அவர் எழுதிய ஒரே நாவலும், முதல் நாவலுமான ‘காவல் கோட்டத்திற்கு’ இந்த விருது கிடைத்திருக்கிறது. சந்தோஷம்தான். சி.பி.எம் கட்சி, எழுத்தாளர் சங்கம், எங்களைப் போன்ற அவரது நண்பர்கள் இதுகுறித்து பெருமிதமும், புளகாங்கிதமும் அடையும் இந்த நேரத்தில் பணிவோடு சில விஷயங்களை சொல்ல வேண்டியிருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்களை பகிர்வதற்கு முன்பு சில விஷயங்களை மனந்திறந்து பேச வேண்டியிருக்கிறது.

 

வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற தமிழ் இலக்கிய உலகின் வசீகரமான பரப்பில் சு.வெங்கடேசனோடு நம்மையும் சேர்த்து ஆட்கொண்டவர்களுக்கு  இந்த விருது  இன்னும் கிடைக்கவில்லை. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற இலக்கிய ஜாம்பவான்கள்  படைத்த  நாவல்களையும், இலக்கிய படைப்புகளையும் தாண்டி  சு.வெங்கடேசனுக்கு  இந்த விருது கிடைத்திருக்கிறது.  ‘ஆழி சூழ் உலகு’ ,  ‘கொற்கை’ படைத்த ஜே.டி.குருஸும்  ‘மீன்காரத்தெரு’, ‘கருத்த லெப்பை’ போன்ற அற்புதமான நாவல்களைப் படைத்த  ஜாகீர் ராஜாவும்  காத்திருக்கிறார்கள்.  இவர்கள் எனக்குத் தெரிந்த ஆளுமைகள். இன்னும் இது போல பலரைச் சொல்லலாம். இவர்களுக்கெல்லாம் கிடைக்காத இந்திய அரசின் இலக்கிய பீட விருதுகளில்  ஒன்று  சு.வெங்கடேசனுக்கு கிடைத்திருக்கிறது.

 

சென்றமுறை எழுத்தாளர். நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தபோது அவர் இதனை சொல்லாமல் சொல்லி, தமிழுக்கு இன்னும் இருபத்தைந்து பேருக்காவது விருது கொடுக்க வேண்டும் என்றார். தோழர். சு.வெங்கடேசனும் அந்த உண்மையையும், பண்பையும் இச்சமயத்தில் வெளிப்படுத்த வேண்டும். அதுதான் தமிழ் இலக்கிய உலகிற்கும், படைப்பாளிகளுக்கும் அவர் செய்கிற மரியாதை.

 

அந்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி, உங்களையும் வாழ்த்துகிறேன், வெங்கடேசன்!

கருத்துகள்

45 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வண்ணநிலவனுக்கு சாகித்ய அகடமி விருது கிடைக்காதது எமாற்றம் அளிக்கிறது. இருந்தாலும் காவல் கோட்டத்திற்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.
    இனிமேல் எல்லாரும் காவல் கோட்டத்தை படித்துப் புரட்டப் போவது உறுதி. நூறு பக்கத்தை தாண்டிவிட்டாலே அது பெரிய சாதனைதான்...!!

    பதிலளிநீக்கு
  2. அன்பு மாதவ்

    அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ..
    உங்களோடு நானும் எதிரொலிக்கிறேன் உங்களது கருத்துக்களையும்,
    சு வெங்கடேசன் தோழனுக்கு வாழ்த்துக்களையும்..

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  3. சரியாக சரியான நேரத்தில் சொன்னதற்கு பாராட்டுக்கள். காவல் கோட்டம் ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சரியாகச் சொன்னீர்கள் மாது சார். இதைப் படித்த சில த.மு.ஏ.க.ச. தோழர்கள் "மாதுவுக்கு ஏன் இந்த வேலை? சும்மா பாராட்டத் தோணலியே... இது என்ன புத்தி?" என்கிறார்களாம். (என் கணவரும் ஒரு த.மு.ஏ.க.ச. காரர்தான்.) சுந்தர ரம்சாமிக்கே கிடைக்கலை... சு. வே. க்கு கிடைச்சிடுச்சே என்ற ஒரு தோழரை "அவன் பார்ப்பான் " என்று வேங்கடேசனே சொன்னதாக இவர் சொல்கிறார். என்ன இயக்கம் நடத்துகிறீர்கள்.? நீங்கள் தான் எங்கள் மகளிர் குழுவையும், வார வழிபாட்டுக் குழுவையும் கேலிபேசுபவர்கள். என்ன முற்போக்கோ தெரில சார்.

    பதிலளிநீக்கு
  5. வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்.
    வெட்கத்தை விட்டு சொல்லப் போனால்
    இப்படி ஒரு எழுத்தாளர் இருப்பதே எனக்குத் தெரியாது.

    பதிலளிநீக்கு
  6. சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. அன்பின் மாதவ ராஜ் - காவல் கோட்டம் சு.வெங்கடேசனுக்கு நல்வாழ்த்துகள் - அவரை வாழ்த்தும் போது மற்றவர்களுக்குக் கிடைக்க வில்லையே என்ற ஆதங்கத்தினை இங்கு தெரிவிக்க் வேண்டுமா ? தெரிவிக்கும் உரிமையும் தகுதியும் உங்களுக்குக் இருக்கிறதென நினைக்கிறேன். இருப்பினும் தவிர்த்திருக்கலாமோ என்று எண்னூகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. தோழர் வெங்கடேசன் நீங்கள் குறிப்பிட்டிருபபது போலவே, முழுத்தகுதியுள்ள மூத்த எழுத்தாளர்களுக்கு இந்த விருது கிடைக்காதது குறித்து தன் விசனத்தை வெளிப்படுத்தவே செய்திருக்கிறார். இன்றைய தினமணி பேட்டி காண்க.

    அவர் இவ்வாறு கூற வேண்டும் என்பதை நீங்கள் அவருக்குத் தொலைபேசியில் தெரிவித்திருக்கலாமே, ஒரு பொது வெளியில் பதிவிட்டு, அவர் இதற்குத் தயாராக இல்லை என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிற தொனியைத் தவிர்த்திருக்கலாம் தோழர்.

    பதிலளிநீக்கு
  9. @ஜெபா!
    @எஸ்.வி.வி!
    @மஹி கரணி!
    @சிவகுமாரன்!
    @சீனா!

    அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. @சிவகுமாரன்!

    சு.வெங்கடேசன் மூன்று கவிதைத் தொகுப்புகளும், இரண்டு ஆய்வு நூல்களும் ஏற்கனவே எழுதி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  11. @தோழர் குமரேசன்!

    நேற்று எங்கள் சங்கத்தின் கமிட்டி மீட்டிங் முடிந்து இரவில்தான் வீடு வந்தேன். தோழர்.சு.வெங்கடேசனுக்கு விருது குறித்து வந்திருந்த பதிவுகளிலும், செய்திகளிலும் நான் தவறவிட்டதாக உணர்ந்ததை இங்கு பகிர்ந்தேன்.

    இதை நான் சு.வெங்கடேசனுக்காக மட்டும் சொல்லவில்லை என நினைக்கிறேன்.இதிலொன்றும் தவறு இல்லையே?

    மேலும், அவரது தினமணி பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டு இருப்பது நல்லது. நாம் எதிர்பார்ப்பது போல் ஒருவர் இருப்பது கூடுதல் சந்தோஷம்தானே!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் வெங்கடேசன்... காவல்கோட்டம் புத்தகம் மதுரையை ஆய்வு செய்த 1000 பக்கங்கள் கொண்ட நாவலென்று எனது நண்பர் இராஜபாளையம் நந்தன் அந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மதுரையை மையமாக கொண்டு வந்துள்ள சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். பெரிய நாவல் என்பதால் இன்னும் வாசிக்கவில்லை. மதுரை குறித்த ஆவணம் என்பதால் எப்படியும் 2012ல் வாசித்துவிடுவேன். மதுரை புத்தகத்திருவிழாவில் சு.வெங்கடேனின் உரையை ஒருமுறை கேட்டிருக்கிறேன். அவருக்கு மதுரை வாசகனின் வாழ்த்துகள். மதுரைக்கே விருது கிடைத்தது போலிருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ****ஜெயமோகன் போன்ற இலக்கிய ஜாம்பவான்கள் படைத்த நாவல்களையும், இலக்கிய படைப்புகளையும் தாண்டி சு.வெங்கடேசனுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. ***

    சும்மா சொல்லாதீங்க! மேதாவி ஜெயமோஹனுக்கு இன்னும் சாகித்ய அகாதமி கொடுக்கலையா!!! திறமைக்கு அதிகமாவே தாந்தான் பெரிய "இவன்"னு ரொம்ப நெனைப்பு இருந்தால் கொடுக்காமாட்டாங்களா?! :)))

    பதிலளிநீக்கு
  15. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்த நண்பர் சு .வெங்கடேசன் காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதுப் பெற்று மதுரைக்குப் புகழ் சேர்த்துள்ளார் வாழ்த்துக்கள் .சரியான தேர்வு சாகித்ய அகாதமிக்குப் பாராட்டுக்கள்
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    www.eraeravi.wordpress.com
    www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    http://en.netlog.com/rraviravi/blog
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

    பதிலளிநீக்கு
  16. மாதவ் ஜி அவர்களே! சு.வெங்கடெசனுக்கு விருது கிடைத்தது எனக்கு ஒரு இனிய அதிர்ச்சி.அவன்(ர்) எங்கண்முன்னால் வளர்ந்த குழந்தை. செம்மலரில் நடுப்பக்கத்தில் வந்த கவிதைகள் அகில இந்திய தலைவர்களால் மேடைகளில் பேசப்பட்டவை. பழைய "கெஜடி"லிருந்து சில பகுதிகளை மொழி பெயர்த்து தரும்படி ஒருமுறைகே ட்டுக் கொண்டார். அந்த தேடல் முயற்சி தான் அவருடைய பலம்.தமிழ் வளர்ந்த விதத்தை வலதுசாரி,இடதுசாரி பார்வையில் அவர் பகுத்து ஆய்ந்த பெச்சு இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. கே .முத்தையா, அருணன், ச.தமிழ்ச்செல்வன் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் சிறந்தவர்கள். எங்கள் செயலாளர் சு.வெங்கடெசனுக்கு கிடைத்த விருது அந்த பாரம்பரியத்திற்கு கிடைத்த விருது என்று கருதுகிறேன். அந்தசின்ன குழந்தைக்கு (சு.வெங்கடெசனுக்கு) ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்.---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  17. our hearty congratulations to comrade.SU.Venkatesan..He brought glorious to our TA.MU.EA.KA.SA .

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள் வெங்கடேசன் !!! 2012 ஆண்டு புத்தக விழாவில் வாங்கி படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் வெங்கடேசன் !!! 2012 ஆண்டு புத்தக விழாவில் வாங்கி படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
  20. படைப்பாளனுக்கு அங்கீகாரம் தேடுவது விருது மட்டுமே அல்ல. அதையும் தாண்டிய வாசகர்களின் ஆதரவே முக்கியம். அந்த வகையில் சு.வெங்கடேசனுக்கு நிறைய வாசகர்கள் உண்டு என்பதை நான் அறிவேன்,இவர் மிகவும் எளிமையானவர்.மேலும் இவரின் இலக்கிய பணி தொடரட்டும். மன்மார்ந்த வாழ்த்துக்கள்....................
    மு.மணிவண்ணன்

    பதிலளிநீக்கு
  21. எங்கள் பக்கத்து ஊர்க்காரர் இளம் வயதிலேயே சாகித்திய அகாதமி பெற்றிருக்கிறார் என்பதனால் மட்டும் மகிழ்ச்சி. வாழ்த்துகள். ஆனால் வரலாற்றுத் தகவல்களை அப்படியே பொதிந்து வைக்க முயன்ற இத்தகைய ஒரு நாவல் முயற்சிக்குக் கிடைத்திருக்கிறதே என்ற ஆச்சரியமும் நீங்கினபாடில்லை.

    நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல இன்னும் எத்தனையோ தகுதியுள்ள மூத்த, சமகால படைப்பாளிகள் இருக்கிறார்கள்தான். ஆனால், யாருக்குத் தகுதியுள்ளது எனத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்வுக்குழுவுக்குத்தானே இருக்கிறது? அத்தகைய தேர்வுக்குழு யாரால் தெரிவு செய்யப்படுகிறது?

    பதிலளிநீக்கு
  22. எங்கள் பக்கத்து ஊர்க்காரர் இளம் வயதிலேயே சாகித்திய அகாதமி பெற்றிருக்கிறார் என்பதனால் மட்டும் மகிழ்ச்சி. வாழ்த்துகள். ஆனால் வரலாற்றுத் தகவல்களை நாவல் வடிவத்திற்குள் பொதிந்து வைக்க முயன்ற இத்தகைய ஒரு நாவல் முயற்சிக்குக் கிடைத்திருக்கிறதே என்ற ஆச்சரியமும் நீங்கினபாடில்லை.

    நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல இன்னும் எத்தனையோ தகுதியுள்ள மூத்த, சமகால படைப்பாளிகள் இருக்கிறார்கள்தான். ஆனால், யாருக்குத் தகுதியுள்ளது எனத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்வுக்குழுவுக்குத்தானே இருக்கிறது? அத்தகைய தேர்வுக்குழு யாரால் தெரிவு செய்யப்படுகிறது?

    பதிலளிநீக்கு
  23. இந்த நாவலில் இருந்தா அங்காடிதெரு வசந்தபாலன் இப்ப படம் பண்ணிக்கொண்டிருக்கிறார்?

    பதிலளிநீக்கு
  24. எஸ்.ரா.வின் மோசமான விமர்சனத்திற்குள்ளான சு.வெங்கடசேனனின் எழுத்திற்கு சா.அ. விருது கிடைத்துள்ளது. எஸ்.ரா. இதற்கு என்ன சொல்லப்போகிறார்?

    பதிலளிநீக்கு
  25. இதுவரை தமிழில் வயதான எழுத்தாளர்களுக்கே சாகித்ய அகாதமி விருது கொடுத்துப் பழக்கமாகியிருப்பதால் அது ஒரு புத்தகத்துக்காகத் தரப்படும் விருது என்பது நமக்கு மறந்து போய் படைப்பாளியின் வாழ்நாள் சாதனைக்காகத் தரப்படுவதுபோல் ஒரு அழுத்தமான சித்திரம் உருவாகிவிட்டது.பிற மொழிகளில் இந்த நிலை இல்லை.வாழ்நாள் படைப்புச் சாதனைக்காக சாகித்ய அகாடமி இந்த விருதை வழங்கியிருந்தால் சு.வெங்கடேசனும் இதை மறுத்திருப்பார்.நாமும் மறுத்திருப்போம்.காவல் கோட்டம் நாவலுக்காக மட்டும்தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.அந்த நாவலை முன் முடிவுகள் ஏதுமின்றி வாசிக்கிற யாரும் இவ்விருது தவறாகத் தரப்பட்டுள்ளதாகக் கூறவே மாட்டார்கள்.1050 பக்க நாவல் என்பதால் பெரும்பாலானோர் வாசிக்கவில்லை.ஆகவே மௌனமாக இருக்கிறார்கள்.அது இரண்டு பதிப்புகள் வந்து விற்றுத் தீர்ந்து போய்விட்டது.வாசித்த மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.நாவலில் பலருக்கும் விமர்சனம் இருக்கும்.அது ஆரோக்கியமான ஒன்றுதான்.எனக்கும் கூட விமர்சனங்கள் உண்டு.ஆனால் விருதுக்குத் தகுதியான படைப்பு என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  26. தோழருக்கு வணக்கம் !

    ஒரு நல்ல நாவலுக்கு கிடைத்து இருக்கும், இந்த அங்கீகாரத்தை மகிழ்வோடு பாராட்டுகிறோம்!,

    --- அன்புடன்---
    த மு எ க ச .உளுந்துர்பேட்டை வட்டார கிளை






    .

    பதிலளிநீக்கு
  27. நல்லது நண்பா! வெங்கடேசனுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லி,அந்த நாவலை அனுப்ப சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  28. http://www.cpim.org/marxist/201001-rectification.pdf

    Innumerable comrades have laid down their lives for the sake of the movement. But if some
    leaders and cadres fail to live upto the communist standards and
    values, there is danger of the image of the Party getting blurred and it being seen as no different from bourgeois parties


    "The replies from the states show a distinct increase in
    parliamentary opportunism. Cases of individual comrades revolting
    when not being put up as candidates have grown."

    "The growth of parliamentarism is also connected to the desire for acquiring more
    material positions and a better life style. Since the salaries and perks of
    MPs and MLAs are much more than what cadres can get as Party
    functionaries, there is a hankering and desire to be in such positions"

    பதிலளிநீக்கு
  29. @ரத்னவேல்!

    @விச்சு!

    @நண்டு ரொண்டு!

    @சித்திரைவீதிக்காரன்!

    @கவிஞர் இரா.ரவி!

    @காஷ்யபன்!

    @விமலவித்யா!

    @மதுரைக்காரன்!

    @மணிவண்னன்!

    @மிது!

    @தமுஎச உளுந்தூர்ப் பேட்டை கிளை!

    அனைவருக்கும் நன்றி.
    @

    பதிலளிநீக்கு
  30. @வருண்!

    ஜெயமோகன் படைப்புகள், கட்டுரைகள், பார்வைகள் குறித்து எனக்கும் கடுமையான விமர்சனங்கள் உண்டு. ஆனால் ஒரு இலக்கியவாதியாக நான் அவரை மதிக்கவும் செய்கிறேன்.அவரது தொடர்ந்த உழைப்பு, வாசிப்பு, இலக்கிய உலகில் பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது. அந்த உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  31. @யுவபாரதி!

    காவல் கோட்டத்திற்கு இந்த விருது ஏற்புடையதா, இல்லையா என்பதல்ல நான் சொல்ல வந்தது. அவரைவிடவும் தமிழ் இலக்கிய உலகில் பங்காற்றியவர்கள், பங்களித்தவர்கள் இன்னும் பலர் வெளியே இருக்கிறார்கள் என்பதைத்தான்.

    பதிலளிநீக்கு
  32. நாஞ்சில் பிரதாப்!

    இதைத் தாங்கள் எஸ்.ராவிடம் கேட்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  33. @ச.தமிழ்ச்செல்வன்!


    கவிஞர் கண்ணதாசனுக்கு ’சேரமான் காதலி’ என்ற நாவலுக்கும், பாரதிதாசனுக்கு , ‘பிசிராந்தையார்’ என்ற நாடகத்துக்கும் விருதுகள் கொடுத்த சாகித்திய அகாதமியின் கடந்தகால வரலாறு, அதன் மரபுகள் குறித்து ஓரளவுக்கு தெரிந்திருந்ததால் இந்தப் பதிவை நான் எழுத நேர்ந்தது. என் புரிதல் தவறாக இருக்கலாம்.

    தமிழ் இலக்கிய உலகிற்கு மிக அதிகமாக பங்களித்தவர்கள் இன்னும் பலர் விருது கிடைக்காமல் இருக்கிறார்கள் என்பதில் உங்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்பது உங்கள் பதிலில் இருந்து புரிகிறது. அது மட்டும்தான் நான் சொல்ல வந்தது.

    நமது கொண்டாட்டங்கள், சந்தோஷங்களோடு, இதையும் அழுத்தமாக வெளிப்படுத்துவதுதான் நமக்கும் நம் இயக்கத்திற்கும் அழகு.


    நன்றி.

    பதிலளிநீக்கு
  34. எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள். உங்கள் உரை அருமை

    பதிலளிநீக்கு
  35. பரிசு கிடைத்த கதையை தோண்டினால் ஏராளமான சோகங்களும் மெனக்கெடல்களும் புதைந்திருக்கும். எந்த பரிசும் போராடாமல் கிடைக்காது. ஆனால் ஒரு இடது எழுத்தாளரின் படைப்புக்கு கிடைத்திருக்கிறது என்றால் தேர்வு கமிட்டியில் நல்ல நேர்மை உள்ளம் கொண்டவர்களும் உள்ளனர் என புரிந்து கொள்ள முடிகிறது.
    மக்களின் வலி உணர்ந்து அதை அவர்களுக்கு புரிந்த மொழியில் படைப்பதுதான் இடது எழுத்தாளர்களின் பணபரிமாற்றமற்ற கொள்கையாக உள்ளது. இதை புரிந்து இவர்களை பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  36. பரிசு கிடைத்த கதையை தோண்டினால் ஏராளமான சோகங்களும் மெனக்கெடல்களும் புதைந்திருக்கும். எந்த பரிசும் போராடாமல் கிடைக்காது. ஆனால் ஒரு இடது எழுத்தாளரின் படைப்புக்கு கிடைத்திருக்கிறது என்றால் தேர்வு கமிட்டியில் நல்ல நேர்மை உள்ளம் கொண்டவர்களும் உள்ளனர் என புரிந்து கொள்ள முடிகிறது.
    மக்களின் வலி உணர்ந்து அதை அவர்களுக்கு புரிந்த மொழியில் படைப்பதுதான் இடது எழுத்தாளர்களின் பணபரிமாற்றமற்ற கொள்கையாக உள்ளது. இதை புரிந்து இவர்களை பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  37. த மு எ க ச வுக்கு கிடைத்த மகிழ்ச்சியூட்டும் மகுடம் இது.விருதுக்கு குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை என்பதை சாகித்ய அகாடமி வெளிப்படுத்தியிருக்கிறது.இளைய படைப்பாளிகளுக்கு இது ஒரு ஊட்டச்சத்து.வாழ்த்துக்கள் சு.வெ அவர்களுக்கும்,தேர்ந்தெடுத்த குழுவிற்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  38. தோழர் வெங்கடேசன் அவர்களை சென்னை புத்தகவிழா பாரதி புத்தகாலயம் அரங்கில் சந்தித்தேன். அப்போது ஒருவர் வந்து, இவரிடம் நீங்கள் தான் வெங்கடேசனா. நம்ம முடியவில்லையே. இவ்வளவு சின்ன வயதாக இருக்கிறீர்களே என்று அவரது உருவத்தை வைத்து ஆச்சர்யப்பட்டு நின்றதை நான் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவரது எளிமையை (ஜீன்ஸ்+சட்டை) பார்த்து இவரின் சாகித்ய அகாதமி விருதை நம்பாமல் தூர மெதுவாக அசைந்து சென்றனர். நெருடலான காட்சியாக இருந்தது. உருவம் கொண்டு எள்ளாமை வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
  39. பார்வைகள் இரண்டு உண்டு.
    ஒன்று தூரத்துப்பார்வை.
    இன்னொன்று கிட்டப்பார்வை.
    சாஹித்ய அகாதெமியினரின் சிலருக்குத் தூரத்துப் பார்வை என்று தெரிகிறது.
    அவர்கள் பார்வை வெங்கடேசன்மீது விழுந்திருக்கிறது.
    வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  40. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயளாலர் அன்பு தோழர் கவிஞர் சு.வெங்கடேசன் அவர்க்ளின் முதல் புதினமான மதுரையின் தொன்மையான வரலாற்றை புனைவு இலக்கியமாக பதிவு செய்திருக்ககூடிய காவல் கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடத்திருப்பதற்கு எங்களின் மனமார்ந்த வழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
    ”மனிதாபிமானம் மாண்டு போவதை எடுத்துக் கூறும் எதுவும் இலக்கியம் - ஏமாளிகளையும் கோமாளிகளையும் அறிவாளியாக்கும் எழுத்தே இலக்கியம்”
    இவன் :-
    உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!