இங்கே ஒரு தில்லாலங்கடி!


“அப்பா.  இவனைப் பாருங்களேன்.  சட்டுசட்டுன்னு முகம் எப்படியெல்லாம் மாறுது. சரியான தில்லாலங்கடிப்பா” என்று என் மகள் அவளது டிஜிட்டல் போட்டோ காமிராவில் எடுத்த இந்த இரண்டு வீடியோ கிளிப்பிங்கையும் காண்பிக்க முனைந்தாள். “வேண்டாம், வேண்டாம். காட்டாதே!” என்ற என் மகன், பிறகு “யாரும் சிரிக்கக்கூடாது” என்கிற நிபந்தனையின் பேரில் பார்க்க  அனுமதித்தான். நீங்களும் பார்க்கலாம். ஆனால் சிரிக்கக்கூடாது. சரியா..?

1. அடுத்தவர் வேதனையில் உங்களுக்கு ஏன் சிரிப்பு?

Operation littile star

2. நண்பனின் காதல்

Littile love

கருத்துகள்

22 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. குழந்தைகளின் இயல்பான உலகம். குறிப்பாக முதல் வீடியோவில் சட்சட்டென்று மாறும் சிறுவனின் முகபாவங்கள் அட்டகாசம். இரண்டாவதில் அந்த வெட்கச் சிரிப்பு. நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர் மாதவராஜ். :-)

  பதிலளிநீக்கு
 2. So cute.. இங்கதான் லாவண்யா I love you ன்னு எழுதினான். :))) எப்டிங்க சிரிக்காம பாக்கறது... :)

  பதிலளிநீக்கு
 3. ஐயோ, கொள்ளை அழகு.இதுதான் குழந்தைகள் உலகம்.

  பதிலளிநீக்கு
 4. அட உங்க வீட்டு ராஜகுமாரன். எவ்வளவு அழகு. அத்தனை முக பாவங்களும் ஒருங்கே பெற்று, 2 நிமஷத்தில செய்து காட்டும் திறமை. இன்னொரு கலைஞன் உருவாகிவிட்டார்.

  அன்பும் வாழ்த்தும்.

  பதிலளிநீக்கு
 5. ஸாரி நிகில்! சிரிக்காமல் இருக்க முடியல.
  ரசனையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 6. எனக்கு எதையுமே அடக்கிப் பழக்கமில்லை... சிரிக்கட்டுமா..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

  பதிலளிநீக்கு
 7. முதல் வீடியோ எனக்கு தெரியலை மாது. :-(

  இரண்டாவது : - ;-)) செம!

  நிகில் யாரு மக்கா? any hw, luv u டா, களத்தூர் கண்ணம்மா கமல்! :-)

  பதிலளிநீக்கு
 8. அழகு. ஜூனியர் மாதவராஜின் வெட்கம் அழகோ அழகு.

  பதிலளிநீக்கு
 9. sorry about the unrelated post, but it is important our people to know. One more konwledge gained from wikileaks. Monsanto using GM foods as currency to make India agriculturally indebted forever.
  http://www.youtube.com/watch?v=eiK_RF3ioRw&feature=player_embedded

  There is a huge health and economic risk. Listen to him, does anyone of us have the same passion as he has towards our own future and safety.

  பதிலளிநீக்கு
 10. பயங்கரமா சிரிச்சிட்டேங்க..
  இரண்டாவது காணொளியைப் பார்த்ததும் உங்களோட "அந்தக் கெட்ட வார்த்தை" இடுகைதான் நினைவுக்கு வந்தது.
  அதை அவ்வப்போது தேடி வாசிப்பதுண்டு இன்றைக்கும் ஒரு முறை.

  பதிலளிநீக்கு
 11. அற்புதம் மாது சார்.. பையன் ரொம்ப கூயுட்.. ரொம்ப நன்றி பகிர்ந்தமைக்கு :)

  பதிலளிநீக்கு
 12. முதலாவது அழுகை..பாவமாய்.

  இரண்டாவது சிரிப்பு.. குழந்தை உலகம்.

  பதிலளிநீக்கு
 13. NIKHIL KUTTYYYYYYY
  I LOVE YOU DA!
  :))))

  Neha school vittu vanthathum kaamikiren!

  பதிலளிநீக்கு
 14. குழந்தைகளின் இயல்பான உலகம். கண்டிப்பா என்னால சிரிக்காம இருக்க முடியல.குழந்தைகள் எப்பவுமே அழகுதான்.

  பதிலளிநீக்கு
 15. அன்பு மாதவராஜ்,

  இது குயில் தோப்பாய் இருக்கவேண்டும். ஹாலோ பிளாக் காம்பவுண்டு சுவரை ஒட்டிப் போடப்பட்டிருக்கும் கட்டில்... காம்பவுண்டை ஒட்டி உள்பக்கமாகவோ அல்லது வெளிப்பக்கமாகவோ வளர்ந்திருக்கும் தென்னைமரம்... அதில் சில எழுத்துக்கள், வண்ணங்கள் சின்ன சின்ன பூச்செடிகள். ஒரு சைக்கிள் மற்றும் ஒரு பைக்... முன் நடை சிமிண்ட்தளம்... இன்னும் முழுதும் விரியாத திரையில் சித்திரம் போடுது மனசு... இது தான் குயில்தோப்பென்று...

  நிகில்... உங்களைபோல இருக்கிறான்...சுரைபெருத்த காது மடல்... பெரிய முன்பற்கள் இடைவெளி விட்டு.. பெரிய மூக்கு, ஒரு சிங்கப்பல்... தீர்க்கமான, குறும்பான கண்கள்... குழந்தைமையின் எல்லா வண்ணங்களும் அழகாய் பூசிய சித்திரம்...

  என் காலில் கருவேல முள்குத்திய நாட்கள் ஞாபகம் வந்தது... அம்மா... முனை சாமனத்தை எடுத்து முள்ளெடுத்துவிட்டு... மிளகாய் வத்தலை மைபோல அரச்சு... நல்லெண்ணையில் வதக்கி... அப்படியே சுட சுட கட்டிவிடுவாள்... முள் குத்திய இடத்தில்... உச்சி வரை ஏறும் சுள்ளென்று வலி... உயிரே போய்விடும்...

  இரண்டாவது வீடியோ... கவிதை... மாதவராஜ்...

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 16. ஐயோ, கொள்ளை அழகு.இதுதான் குழந்தைகள் உலகம்.

  பதிலளிநீக்கு
 17. so cute! வீடியோ பார்த்துட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 18. சோ க்யூட் ண்ணா, சிரிச்சிகிட்டே பாத்தன் :)

  பதிலளிநீக்கு
 19. ஹா..ஹா... சிரிக்காம பாக்கறது கஷ்டம்தான்... க்யூட் பாய்....

  பதிலளிநீக்கு
 20. நேரில் பார்ப்பதைவிட வீடியோவில் நிகில் காட்டும் எக்ஸ்ப்ரஷன்களில் குழந்தைத்தனம் அதிகம். ரசித்துப் பார்க்க முடிகிறது.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!