தீபாவளி(லி)

 

 

இன்னேரம் கொடுக்காப்புளி மரத்திலிருந்து சில கிளிகள் பேசிக்கொண்டிருக்கும். தென்னையின் மட்டையில் ஊர்ந்து வாலை உயர்த்தி உயர்த்தி அணில்கள் பாட்டுக்குப் பாட்டு விளையாடும். வழக்கமாய் பெரிய நெல்லி மரத்தில் புனில்கள் அங்குமிங்கும் தாவிக்கொண்டு இருக்கும். எப்படியும் எங்கிருந்தாவது காக்கைகள் கரைந்து கொண்டிருக்கும். நேற்றிரவு பெய்த மழையின் ஈரம் மீது காயும் வெயிலில் சிட்டுக்குருவிகள் துள்ளிக் கொண்டிருக்கும். எதையும் காணோம். ஒரே பட்டாசுச் சத்தம். ஒரே கருமருந்து வாசம்.

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அன்பு மாதவராஜ்/காமராஜ்,
  சவ்வுகளை பதம் பார்க்கும் சத்தம் அதிகமிருக்கும் தான். கரும்புகை சூழும் எல்லா பெருவழிப்பாதையிலும் தான், பறவைகளும், நாய்களும், ஆடுமாடுகளும், கோயில் யானைகளும் திடுக்கிடும் தான். மனசுக்குள் ஒரு அதிர்வை பதிவு செய்யும் தான். கரியமில வாயு கலக்கும், காட்மியம், லெட், பாஸ்பரஸ், சல்பர் என்று அனேகமும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தான். உங்கள் மூக்கினடியில் புகைபடியும், கறை சேர்க்கும் உங்கள் சுவாசப்பையில் நுழையும் காற்று, உடம்பே புகைக்கூண்டாகும் தான்.

  ஆனால் தீபாவளியைக் கொண்டாட தடை என்ன இருக்கிறது, இனிய உபசரிப்பும், நல் வார்த்தைகளும், கசப்பு மறக்கும் குணமும், இனிப்பு, நல்ல மனிதர்களும், உறவுகளும், அன்பு காட்ட உலகமே இருக்கும் போது இதை ஒரு கொண்டாட்டமாய் செய்வது எனக்கு உடன்பாடே... பட்டாசுத்தொழிலை நம்பி அனேகம் பேர் உண்டு... சுரங்கத்தில் வேலை பார்த்து இறப்பவர்கள் அனேகம் உண்டு... போக்குவரத்து தொழிலில் இருந்து விபத்துகளில் இறப்பவர்கள் அனேகம்... இதில் எல்லாவற்றிலும் மாசு கலக்காத விஷயங்களே இல்லை...எதிலும் இழப்புகள் இருக்கிறது காமராஜ்... எத்தனை விஷயங்களை நம்மால் கடக்க முடியும் மாதவராஜ்... எல்லா தொழிலிலும் உழலும் குழந்தைகளை வெளியே கொண்டு வருவோம்... பாதுகாப்பாய் தொழில் செய்வோம்... போதிய வருமானம் வழங்க பாடுபடுவோம்... இவ்வளவு பேர் பட்டினி கிடக்கும்போது, நமக்கு நல் உணவு ரசிக்கத்தான் செய்கிறது காமராஜ்... ஏறக்குறைய இருபது லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் ஈடுபட்டிருக்கும் தொழில் இது மாதவராஜ்... நிறைய பேர் இதைத் தவிர வேறொன்றும் அறியாதவர்கள்... அரசு இயந்திரங்கள் ஒழுங்காய் இயங்கும் பட்சத்தில்... எல்லா தொழிலும் பாதுகாப்பான தொழிலே, எல்லா தொழிலும் சமூக பாதுகாப்பு இருக்கும் தொழில் தான்...

  உங்களின் சிறிய பத்தி... இதை கொண்டாட உடன்பாடில்லாமல் இருப்பது போல் தொனித்ததால்... இதை எழுதுகிறேன்... நம் கொண்டாட்டத்தில் எல்லோராலும் பங்கு பெற முடியுமானால் சந்தோஷம், நம் பார்வைக்குள் இருக்கும் அன்பு தேவைப்படுகிறவர்களை அணைத்துக் கொள்வோம்... எல்லா அறிவியல் வளர்ச்சியும் ஏதோ ஒன்றின் சாம்பலில் இருந்து தான் வருகிறது. குயில் தோப்பைப் போல மரங்கள் நடுங்கள் சாத்தூர் வட்டாரம் முழுதும்... அதற்கு தகைமையான ஆட்களை கண்டு அவர்களுக்கும் அந்த பொறுப்பை கொடுங்கள்... அப்படி கொடுக்கும் பட்சத்தில் எல்லா நாளுமே இனிய நாள், கொண்டாட்டத்திற்குரிய நாள் என்று வலம்புரிஜான் போல முடித்துக் கொள்கிறேன்.

  காமராஜ், மாதவராஜ் உங்கள் இருவருக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்

  அன்புடன்
  ராகவன் & ஸாண்ட்ரா

  பதிலளிநீக்கு
 2. பட்டாசுகளால் வரும் தீமைகளில் இதுவும் ஒன்று!

  பதிலளிநீக்கு
 3. Dear Mathavraj

  I saw this blog, i concur with Mr.Ragavan. My best wishes to you nd your family. Particularly to your father.

  K.ubramanaian
  DCW Ltd.

  பதிலளிநீக்கு
 4. அன்பு மாதவராஜ், வணக்கம். தீபாவளி(லி) ஒரு பிசாசுக் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கை அதனை அப்படி உருமாற்றி இருக்கிறது. எல்லா வியாபாரிகளும் அவரவர் பொருட்களை நம் தலையில் கட்டிவிடத் துடிக்கின்றனர்... சினிமாக்காரர்கள் உட்பட. பட்டாசுக்கு ஏதாவது கட்டுப்பாடுகள் வைக்கலாம் என்றால் உடனே இந்து 'அபிமானிகள்' களமிறங்கி விடுகின்றனர். சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. நம் பொதுஜனங்களுக்கும் எதிலும் சுயகட்டுப்பாடு இருப்பதில்லை. குழந்தைகள் என்ன செய்வார்கள்? பக்கத்திலிருக்கும் மலேசியாவில்கூட சாலையில் போகிற வாகனங்கள் தேவையின்றி ஒலிப்பான்களை பயன்படுத்த முடியாதாம்.
  இன்னொரு நல்ல விடயம் மாது, இந்த ஆண்டு என் குழந்தைகள் பட்டாசில்லா தீபாவளி என்று அறிவித்து, அதன்படி ஒரு சின்ன வெடிகூட கொளுத்தவில்லை. வீட்டு வாசலில் என் மகள் லீலாவதி (8 ஆம் வகுப்பு படிக்கிறாள்) ஒரு கோலம்போட்டு, அதன் அருகே "பட்டாசில்லா தீபாவளி! உலகைக் காப்போம்!" என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி வைத்துவிட்டாள். அதோடு தன் பள்ளியில் தோழிகளிடையே சுற்றுச்சூழல் பிரச்சாரமும் செய்தாள். தன்னுடன் படிக்கும் ஏழை மாணவிக்கு புத்தாடையும் பரிசளித்தாள். எனவே எங்கள் வீட்டு வாசலில் சத்தமும் இல்லை... குப்பைகளும் இல்லை... கருமருந்து நெடியுமில்லை. மனசுமட்டும் நிறைந்திருந்தது. இப்படி தீபாவளியைக் கழித்ததால் என்ன கெட்டுப் போய்விட்டது?
  -சோழ. நாகராஜன்.
  செல்: 98425 93924 .

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!