எந்திரன் படம் பார்த்த கதை


கடைசியில் நானும் எந்திரனைப் பார்க்க வேண்டியதாயிற்று. ஒன்பது வயது மகன் ரொம்பவும்தான் துடித்துப் போயிருந்தான். அவன் கூட படித்தவர்கள் பலரும் பார்த்திருக்க, அவர்களின் கதையாடல்களில் ஏங்கிப் போயிருக்க வேண்டும். நண்பர்கள் யாருடனாவது அனுப்பிவிடலாம் என நினைத்திருந்தேன். அதற்கும் நேரம் அமையவில்லை. “தீபாவளிக்கு வேற படம் மாத்திருவாங்களாம். எந்திரனைப் பார்க்க முடியாதா?” என முந்தா நாள் இரவு அவன் தழுதழுத்துக் கேட்ட தொனியில் எல்லாவற்றையும் உதறி, அழைத்துச் செல்வதாய்ச் சொல்லியிருந்தேன். ஒரே சந்தோஷம் அவனுக்கு.

நேற்று காலையில் கண் விழித்ததும் “ராத்திரி எத்தனை மணிக்குப்பா ஷோ” என கேட்க ஆரம்பித்தான். திடுமென அருகில் வந்து ‘எங்க அப்பா..” என முத்தம் கொடுத்தான். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், “யார்லாம் போறோம்பா” என கேட்டான். கொஞ்சம் இடைவெளிவிட்டு “எப்பப்பா புறப்படணும்” என அடுத்த கேள்வி. இதுதான் சமயம் என அம்மு “ஹோம் வொர்க்கை எல்லாம் சீக்கிரம் முடி” என்றதும், உடனடியாக உட்கார்ந்து எழுத ஆரம்பித்தான். வெளியே சென்று நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த எனக்கு போன் செய்து “எப்ப வர்றீங்கப்பா” என சிறு பதற்றத்தோடு கேட்டான். வீட்டுக்கு வந்தபோது உடைமாற்றித் தயாராக இருந்தான். அவனைப் பார்த்ததும் கலங்கினேன். தியேட்டருக்கு புறப்படவும் என் கைகளை விடாமல் பிடித்துக் கொண்டான். இவ்வளவையும் இத்தனை நாள் அடக்கியா வைத்திருந்தான்? குற்ற மனப்பான்மையில் அவனை இறுக அணைத்து அருகில் வைத்துக்கொண்டேன்.

அம்மு என்னைப் பார்த்து சிரித்தாள். புரிந்தது. என்ன செய்ய? சினிமாவை வைத்து மோசடி செய்யும் ஒரு கும்பல், எவ்வளவு எளிதாக குழந்தைகளை முதலில் வசியம் செய்து விடுகிறது. ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்லி, பேச வைத்து, அதன் சுழலுக்குள் இழுத்துக்கொள்ள முடிகிறது. எதையும் விற்றுவிடுகிற மூர்க்கத்தனத்தை குழந்தைகள் எப்படி அறிவார்கள். குழந்தை ஏங்கிப் போவதை சகிக்க முடியாமல் படம் பார்க்கப் போக வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு நல்ல சினிமாவை அடையாளம் காட்டுவதன் மூலமே அவர்கள் அறிவில் எதிர்ப்பு சக்தியை வளர்க்க முடியும். இதுபோன்ற சினிமாக்களையும், அருவருப்புகளையும் அவன் ஒதுக்கிவிடும் காலம் ஒருநாள் வரும்.

தியேட்டரில் மொத்தமே நாற்பது அல்லது ஐம்பது பேரே இருந்தார்கள். காதைக் கிழிக்கும் டிஜிட்டல் சத்தங்களோடு படம் ஆரம்பமானது. சயின்ஸ், டெக்னாலஜி, பிரம்மாண்டம் என் ஊதிப் பெருக்க வைத்தவையும், பீற்றியவையும் திரையில் பெரும் அபத்தங்களாக தோன்ற ஆரம்பித்தன. ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் இருக்கும் லாஜிக்கும், ஒழுங்கும் கூட படத்தில் இல்லை. பெரும் கண்றாவி.  எந்திரனை உடைத்து நொறுக்கி, பெரும் குப்பை மேட்டில் தூக்கி எறிவது போல ஒரு காட்சி வந்தது. படத்திலேயே எனக்குப் பிடித்த காட்சி அது ஒன்றுதான்.

“என்னங்க இது படம்..” என முணுமுணுத்துவிட்டு கடைசியில் அம்மு தூங்கிப் போனாள். நான் என் மகனையே பார்த்துக் கொண்டு இருந்தேன். கொட்டக் கொட்ட அவன் கண்கள் இருட்டில் தெரிந்தன. படம் முடிந்து வெளியே வரும் போது, “தாங்ஸ்பா” என்றான்.

“பிடிச்சிருக்கா” எனக் கேட்டேன்.

“ஆமாம்பா, ஒங்களுக்கு?” என்றான். நான் பதில் சொல்லாமல் இருந்தேன்.

“ஒங்களுக்கு எந்தப் படம் பிடிக்கும்ப்பா?” கேட்டான்.

Comments

19 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. Sir, I really appreciate you.

    கடைசியில் நான் சொன்ன மாதிரி ஆயிடுச்சா. ஊரோட சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை. எங்க வீட்டில எப்போதும் தமிழ் பேசினாலும் கூட, என்னைத் தவிர யாருக்கும் தமிழ் படம் பிடிக்காது. அதனால நான் பார்த்தாலும் ஒன்னு தான் பாக்காட்டியும் ஒன்னு தான். இன்னும் பார்க்கலை.

    ஆனா வேறப் பிரச்சனை. போன வருஷம் என் பையன் வந்து 'அப்பா! நாம christian அல்லன்னு எனக்கு தெரியும். ஆனா ஒரு சின்ன கிறிஸ்துமஸ் ட்ரீ கூட வைக்கிலனா, சான்டா எனக்கு ஓர் சின்ன கிப்டு கூடத் தராதுன்னு' பரிதாபமா சொன்னான். எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. உடனே அவன் கேட்ட மாதிரி வாங்கி கொடுத்தேன். அதை வைச்சு அவன் அலங்கரிச்சு, அவனோட கிப்ட அதற்கு முன் வைச்சுட்டு, கிறிஸ்துமஸ் அன்னிக்கி எடுதுகிறேன்பனு வந்து கட்டி ஒரு முத்தம் கொடுத்தான் பாருங்க, அட இதவல்லவா வாழ்க்கைன்னு தோணிச்சு.

    ReplyDelete
  2. பையன் cute சார். வாழ்த்துகள். அப்பாவை நல்லாப் புரிஞ்சு வைச்சிருக்கிறான்.

    ReplyDelete
  3. பையன் சரியாத்தான் இருக்கான். சின்ன வயசுல எனக்கு விட்டலாச்சார்யா படம்தான் பிடிக்கும்.

    ReplyDelete
  4. Wonderful writing depicting present state of affairs in the country and the stupid way of exploiting the gullibility of children by these morons in cine field.

    ReplyDelete
  5. இதைப்போன்ற அனுபவங்கள் எல்லா தந்தைமார்களுக்கும் ஒரு முறையாவது ஏற்பட்டிருக்கும்.
    இதை விட மோசமான குப்பைகளை என் குழந்தைகளின் சந்தோசத்திற்காக சகித்துக்கொண்டு பார்த்த
    அனுபவம் எனக்கும் உண்டு.ரெண்டே நாளில் அக்குவேறு ஆணிவேராக பிரித்து போடும் என்று தெரிந்தே
    பொம்மை வாங்கி கொடுப்பதில்லையா? விடுங்க சார்!

    ReplyDelete
  6. You should be happy because you can able to see this film with your family. Sometimes, you can't able to see the good movie like "paruthi veeran" with family

    ReplyDelete
  7. எந்திரன் அனுபவம் சூப்பர்.. பையனுக்கு வாழ்த்துக்கள்.. உங்களை எப்படியோ பணிய வைத்துள்ளான்.. தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. “ஒங்களுக்கு எந்தப் படம் பிடிக்கும்ப்பா?” கேட்டான்.

    மாதவராஜ்,

    நான் கேட்க நினைத்தை உங்கள் பையன் கேட்டு விட்டான். உங்கள் பையனின் ஏக்கத்தை புரியவைத்தவிதம் மிக அருமை.

    எப்படியோ படத்தை பார்த்துவிட்டீர்கள்.

    அதை மறைக்காமல் சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  9. “ஒங்களுக்கு எந்தப் படம் பிடிக்கும்ப்பா?” கேட்டான்\\
    நல்ல கேள்வி. நிகிலுக்கு பதில் சொல்லவில்லையா?

    ReplyDelete
  10. சரி விடுங்க தோழர்.

    உங்களுக்கு பிடித்த ஸீன் எனக்கும் பிடித்தது..

    ReplyDelete
  11. //சினிமாவை வைத்து மோசடி செய்யும் ஒரு கும்பல், எவ்வளவு எளிதாக குழந்தைகளை முதலில் வசியம் செய்து விடுகிறது. ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்லி, பேச வைத்து, அதன் சுழலுக்குள் இழுத்துக்கொள்ள முடிகிறது. எதையும் விற்றுவிடுகிற மூர்க்கத்தனத்தை குழந்தைகள் எப்படி அறிவார்கள். குழந்தை ஏங்கிப் போவதை சகிக்க முடியாமல் படம் பார்க்கப் போக வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு நல்ல சினிமாவை அடையாளம் காட்டுவதன் மூலமே அவர்கள் அறிவில் எதிர்ப்பு சக்தியை வளர்க்க முடியும். இதுபோன்ற சினிமாக்களையும், அருவருப்புகளையும் அவன் ஒதுக்கிவிடும் காலம் ஒருநாள் வரும்//

    நிச்சயமாக அங்கிள்.
    நிகில் குட்டி பாவம் தான். ரொம்பவே பொறுமையா இருந்திருக்கான். :)

    ReplyDelete
  12. எதையும் விற்க்கும் மூடத்தனம்தான் இன்றைய பெரும்பாலான சினிமா,ஊடகவியலரிடம் உள்ளது.மனசாட்சி இல்லா மாக்கள்...

    ReplyDelete
  13. எந்திரனை உடைத்து நொறுக்கி, பெரும் குப்பை மேட்டில் தூக்கி எறிவது போல ஒரு காட்சி வந்தது. படத்திலேயே எனக்குப் பிடித்த காட்சி அது ஒன்றுதான்.

    I like the above words... Still i am laughing...

    ReplyDelete
  14. nee ethai seithalum athu iyarkaikku ethiranathu - antha oru vaarthai than padathil uruppadiyanathu.

    ReplyDelete
  15. really super sir , i hate monopoly in cine field .we have to show them what is aall a good film is

    ReplyDelete
  16. super sir , we have the responsibility to tell the people , how a family ruling a democratic state

    ReplyDelete
  17. very nice writing i like this post

    ReplyDelete

You can comment here