நம்பிக்கையோடு புதிய வலைப்பக்கம் ஒன்று!

maattru1

 

‘மாறும் என்பதைத் தவிர அனைத்தும் மாறும்’ என்னும் சமூக விஞ்ஞானப் பார்வையோடு தமிழில் ‘மாற்று’ என்னும் வலைப்பக்கம் துவங்கப்பட்டு இருக்கிறது. தனிநபர் வலைப்பக்கமல்ல இது. தெரிந்த நண்பர்கள், தோழர்களின் சேர்ந்த சிந்தனையில், கூட்டு முயற்சியில் வெளிப்படும் காரியம். நம்பிக்கையோடு வலையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம், வரலாறு என சகல பரிமாணங்களிலும் மாற்றுப் பார்வையுடன் வெளிப்படும் தளமாக இது இருக்கவேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான உரையாடலுக்கும், புரிதலுக்குமான வெளியாக இருக்க வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. எல்லாவற்றையும் அப்படியே ஒப்புக்கொண்டு, எதுவும் மாற்ற முடியாது என உழல்பவர்களுக்கு உறைக்கிற மாதிரி எதாவது சொல்ல வேண்டும் என்ற வேகம் இருக்கிறது. சமூக அவலங்களை அம்பலப்படுத்தும் சீற்றம் இருக்கிறது.

ஆமாம். அரட்டை, கும்மாளங்களுக்கு நடுவே தீவீரமாக சொல்வதற்கு நிறையவே இருக்கிறது இவர்களுக்கு. எனவே நானும் நெருக்கம் கொள்கிறேன்.

வாழ்த்தி வரவேற்போம். ஆதரவளிப்போம் ‘மாற்றை’!

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. "மாற்று " தளம் புத்துணர்வோடு மாற்றங்களைக் கொண்டுவர வாழ்த்துக்கள்.மாற்றுவோம் புதியதோர் உலகம் செய்வோம்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் நண்பரே. மாற்றம், மனித மனத்தை மட்டுமல்ல, உலகத்தையே மாற்றம் செய்யட்டும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!