நன்றி : தினமணி
ரசிக மனநிலையிலிருந்து பைத்திய மனநிலைக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை சன் குழுமம் உசுப்பேற்றி விட்டுக்கொண்டு இருக்கிறது. தன் படம், வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று ஒரு முதலாளியின் இயல்பாக இருக்கும் வேட்கையும், வேகமும் இங்கே வெறியாக மாறிவிட்டது. சகல நியதிகளையும், மாண்புகளையும் கிழித்தெறியும் அதன் அகோரப்பசியை ‘வியாபார உத்தி’ என்று சொல்வதற்கும், பாராட்டுவற்கும் ஒரு கூட்டமே இருக்கிறது.
‘சினிமாதானே, ஏன் இவ்வளவு சீரியஸாகிறீர்கள்’ என்கிறார்கள். ‘பொழுதுபோக்குக்குத்தானே படம், அதுகுறித்து ஏன் கவலைப்படவேண்டும்’ என எதிர்க்குரல்கள் கேட்கின்றன. அதையேத்தான் நானும் கேட்கிறேன். “சினிமாதானே, அதற்கு ஏன் ஆயிரம் பாற்குடங்களும், மொட்டையடித்தல்களும், காவடித்தூக்கல்களும்” என்று.
மனதில் விமர்சனங்கள் இருப்பினும், ‘நமக்கேன் வம்பு’ என கையது கொண்டு வாயது பொத்தி பல அறிவுஜீவிகள் நிற்கிறார்கள். ‘தமிழ்க் கலாச்சார, பண்பாட்டு பாதுகாவலர்களும், போராளிகளும்’ இங்கே, தங்கள் இளைஞர்கள் உலகத்தின் முன்னே கேவலப்படுத்தப்படுவதையும், கேலிக்குரியவர்களாய் சித்தரிக்கப்படுவதையும் கண்டு பொங்காமல் எங்கே போய்விட்டார்கள் எனத் தெரியவில்லை.
அமைப்பு ரீதியாக ஒரு குரல் இப்போது வந்திருக்கிறது. எந்திரன் திரைப்படத்திற்கான ஏற்பாடுகள் என்ற பெயரில் பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 28/21, வரதராஜபுரம் பிரதான சாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018 -----------------------------------------
மேற்கண்ட கண்டன அறிக்கையை தங்கள் இதழில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.
அருணன் ச.தமிழ்ச்செல்வன் |
சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் படைப்பாளிகளின் குரல் இது. இப்படியான குரல்கள் மேலும் தொடர்வதும், ஒன்று சேர்ந்து ஒலிப்பதும் காலத்தின் அவசியம்.
“எதிரி எந்த மூலைக்கெல்லாம் செல்கிறானோ, அங்கெல்லாம் நாமும் சென்று நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும். அவனது வீடுகளுக்கு, அவனது திரையரங்குகளுக்கும் செல்ல வேண்டும்” என்றார் புரட்சிக்காரன் சே. அவரைக் கையிலும் நெஞ்சிலும் ஏந்த வேண்டிய இளைஞர்கள் இங்கு அலகு குத்திக்கொண்டு வருகிறார்களே....
கவலையும், கோபமும் எப்படி வராமல் போகும்?
இப்படியான குரல்கள் மேலும் தொடர்வதும், ஒன்று சேர்ந்து ஒலிப்பதும் காலத்தின் அவசியம்.
பதிலளிநீக்கு----------------------------
கண்டிப்பாக...
இன்னும் இன்னும் நிறைய கோபம் வருகிறது. நான் ஒரு ரஜினி ரசிகன் தான். இதை சொல்வதில் எனக்கு எந்த வித தயக்கமும் இருந்ததில்லை. எந்திரன் படத்தை பார்த்து விடலாம் என்று தான் இருந்தேன். சமீபத்தில் காண்பித்த வெளியிட்டு விழாவை பார்த்து தொலைந்தேன். தற்போது ரஜினி ரசிகன் இருப்பதில் தயக்கமும் வெட்கமும் ஏற்படுகிறது. ஏற்படுத்துகிறார்கள்.
பதிலளிநீக்கு(வேண்டாம்...... இந்த மனநிலை தொடர்ந்து எழுதினால் கெட்ட வார்த்தைகள் வரும்). இப்போதைக்கு
இந்த பதிவை என் தளத்திற்கு எடுத்து செல்கிறேன். நன்றி சார்
Dear Mathavraj,
பதிலளிநீக்குI had earlier written you a mail and a note regarding you degrating the movie Enthiran. I still stand by that post. Enthiran as a movie has taken tamil cinema and technology to the next level. Rajini as an actor has excelled in the movie.
However, I agree with your current post. The activities going on around tamil nadu and the way Sun TV is publishing it is not good for the tamil culture and the way it is shown to the world.
I saw the movie first day. I enjoyed it. And if I want I will see it again. But that is for the quality of the movie and my liking for Rajnikanth the actor. But I totally condemn the activities of tamil youngsters and tamil society.
Even if I consider that Enthiran is a festival and people are celebrating it as such, I believe that they should rather celebbrate it by feeding the poor. I am sure even Rajni will only like that.
தனிமனிதனாக போராடுவதை விட அமைப்பு ரீதியாக போராடுவது மேலதிக பலத்தையும் உந்துதலையும் தருவது. இந்தக் கலாசார சீரழிவைக் கண்டிக்கும் தமுஎகச விற்கு என் நன்றிகளும் வணக்கங்களும்.
பதிலளிநீக்கு\\சினிமாதானே, ஏன் இவ்வளவு சீரியஸாகிறீர்கள்’ என்கிறார்கள். ‘பொழுதுபோக்குக்குத்தானே படம், அதுகுறித்து ஏன் கவலைப்படவேண்டும்’ என எதிர்க்குரல்கள் கேட்கின்றன. அதையேத்தான் நானும் கேட்கிறேன். “சினிமாதானே, அதற்கு ஏன் ஆயிரம் பாற்குடங்களும், மொட்டையடித்தல்களும், காவடித்தூக்கல்களும்” என்று.\\
பதிலளிநீக்குஅயோத்தி தீர்ப்பு தினத்தன்று, தீர்ப்பை விட அதிகம் பிரகடனப் படுத்தியது, ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதையும், கோயிலில் தங்கத்தேர் இழுத்ததையும் தான்.
அன்பு மாதவ்
பதிலளிநீக்குத மு எ க ச வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை, பண்பாட்டு வெளியில் முக்கியமான தலையீடு. நேரத்தே செய்யப்பட்டிருப்பது. எந்திரன் பட வெளியீட்டின் தன்மை பற்றி, இன்னும் கூட கடுமையாகச் சொல்லத் தக்க தேவை இருக்கிறது. ரசனையை ஒரு நுகர் பொருள் ஆக்கி அதன் மீது, தங்களுக்கு இருக்கும் பண பலம், அதிகார பலம், அடியாள் பலம் கொண்டு அவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆபாசம் நிறைந்த வன்முறை தாக்குதல் அது. இன்றைய தினமணியில், சமஸ் என்பவர் எழுதியிருக்கும் கட்டுரை எந்திரன் என்னும் எதாதிபத்தியன் என்று தலைப்பிலேயே சாடத் துவங்கி அம்பலப்படுத்தியிருக்கிறது.
எழுபதுகளின் இறுதியில் அல்லது எண்பதுகளின் முற்பகுதியில் என்று நினைக்கிறேன்...ரஜினியைக் கேவலமாகச் சித்தரித்து எழுதிக் கொண்டிருந்த ஏடுகளும், வார இதழ்களும் இன்று எப்படி நடந்து கொண்டிருக்கின்றன என்பதைத் தனியே விவரித்து எழுத வேண்டும்.
ஆன்டன் ஷோலகவ் எழுதிய கதையில் வரும்
பெரிய மீன், சின்னஞ்சிறு மீன்களை விழுங்கி அலையும் கடலாக சன் குழுமம் திரையுலகை மாற்றிக் கொண்டிருக்கிறது.
த மு எ க ச போன்ற அமைப்புகள், நூதனமான வகைகளில் ரசிகர்களின் திட்டவட்டமான மறுமொழியை இந்த பண்பாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு தெரிவிக்க ஏதாவது செய்தாலும் நல்லது.
எஸ் வி வேணுகோபாலன்
காசுக்காக எப்படிப்பட்ட காவாலித்தனத்தையும் செய்யத்துணிகிறவர்கள் இவர்கள்....
பதிலளிநீக்கு1008 பால் குடம்,
அலகு குத்துவது,
முதுகில் குத்தி குருதி வழிய வழிய எந்திரன் படப்பெட்டியை இழுத்து வருவது,
...எந்திரன் வெற்றிபெற ஆண்டவனை வேண்டி கூட்டம் கூட்டமாய் மொட்டை போடுவது,
இன்னும் எத்தனை எத்தனை........
இவற்றையெல்லாம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி, இன்னும் இன்னும் செய்யத்தூண்டி, பெரியாரின் கொள்கைகளை உயர்த்திப்பிடிக்கிறார்களாம்...
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறார்களாம்....
முதலில் தமிழ் சினிமா ரசிகர்களை பெரியாருக்கு முந்தைய காலத்திற்கு எடுத்து செல்லாமல் இருங்கள்... அதுவே போதும்....
ஒவ்வொரு விளம்பரம் போடும் முன்னும், பின்னும், இடையிலும் ஒரு அறிகுறி வருமே, அது எங்கே....? அதை முதலில் போடச் சொல்லி கட்டாயமாக்குங்கள்....
பதிலளிநீக்குஅப்புறம் எல்லாம் தானாக நடக்கும்....
மக்களின் மூடநம்பிக்கை காட்டும் நிஜம் நிகழ்ச்சியில் இது இடபெருமா ?
பதிலளிநீக்குநன்று மாது.தினமணி கட்டுரையையும்கூட நன்றியுடன் யாராவது எடுத்துப்போட்டால் நல்லது
பதிலளிநீக்கு//ரசிக மனநிலையிலிருந்து பைத்திய மனநிலைக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை சன் குழுமம் உசுப்பேற்றி விட்டுக்கொண்டு இருக்கிறது.//
பதிலளிநீக்குஇதற்க்கு பின்னால் உள்ள வியாபார அரசியல் தெரியாமல் விசிலடிச்சான் குஞ்சுகளின் கோமாளித்தனத்தை படித்த கழிசடைகள் தான் வக்காலத்து வாங்குகிறது.
சும்மாவே சன் குழுமம் லொள்ளு பண்ணுவானுக, அதோட இந்த பைத்தியக்கார ரசிகர்கள் இருக்கும் வரை , சன் குழுமம் விளையாடத்தான் செய்யும்
பதிலளிநீக்குஃபிரியா இருந்தா இதை படிச்சு பாருங்க
http://manguniamaicher.blogspot.com/2010/10/blog-post_05.html
மிக அருமையான செயல். தான் லாபம் பெறுவதற்கு மக்களின் அறியாமைத் தன செயல்பாடுகளையும் தனது வியாபார உத்திக்காக பயன்படுத்துவது தவறு. கண்டிக்கப்படவேண்டியது. பெரியாரின் சமுக சீர்திருத்தங்களுக்கு பெரும் முட்டுகட்டையே அவரின் வாரிசுகளாகிய திராவிடக் கட்சிகள் தான்.
பதிலளிநீக்குஎத்தனை பேரு சொன்னாலும் நம்மாளுங்க திருந்தப் போறதில்ல. அடுத்து அஜித் பட ட்ரைலர் ரிலீஸ்-க்கே பால் ஊத்த ஆளுக கெளம்பியாச்சு. இன்னும் பத்து வருஷம் கழிச்சு தனுஷ் அல்லது சிம்புவுக்கு ஊத்துவானுங்க.
பதிலளிநீக்குநீங்க உங்க கடமையச் செய்யுங்க. :-(
தங்களுடைய வியாபார நலனுக்காக தமிழ் மக்களை தொலைக்காட்சி ஊடகம் வழியாக அடிமையாக்கிய சன் குழுமம், இப்போது பெரிய திரையையும் ஆக்ரமித்துவிட்டது. ரஜினியின் கட்-அவுட்களுக்கு மானியவிவிலையில் பாலும் கொடுப்பார்கள்.
பதிலளிநீக்குரசிக மூடநம்பிக்கைகளைப் பணமாக்கிக்கொண்டிருக்கும் சன் குழுமத்தின் லாபவெறி வேட்டையைக் கண்டிக்கும் தங்களுக்கு பாராட்டுகள்.எதிர்ப்பு வலுக்கட்டும்.ஒற்றை ஏகபோகத்தை அனுமதிப்பது எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
பதிலளிநீக்குSorry for the long comment, but this is your third post saying same issue, so here is my point of view.
பதிலளிநீக்குI am staying in Florida now, so didn't saw any programs or comedies on SunTv about this movie. But Endhiran was released in IMAX here, friends & family's of tamil people here had great time watching this movie. we liked it so much and we even took our hindi and telugh speaking friends to see this tamil movie again and showed them what tamil cinema is capable of.
Now tell me what "sun tv" had to do with all the above good things about the movie? if you are not happy about the programs on Sun TV, then you should be fighting different battle. ask people to boycott Sun channels, pressure them to show quality programs. instead of that you are taking stand against a movie, which is a hard work of 1000's of people who don't work for Sun Tv. its like saying I won't visit "TajMahal" because MP state is ruled by corrupt goverment!!(just saying)
You are going on&on about fans doing stupid stunts, in case you didn't notice there are lot of actors who have much more stupid fans like this. Just because sun tv is covering these news will not increase or decrease the number of stupid people in this world. They were never the majority, if that the case "Baba" &"Kusalen" would have been a block buster.
We as general movie lovers(not fans) liked this movie so much, In case you haven't noticed most of the negative comments about this movie is from Hardcore Rajini fans(much like stupids you mentioned), because they couldn't get to see Rajini's usual masala movie.
This movie is not a usual Rajini movie, no punch dialogue or stupid show off scenes. this is the kind of movie we Tamil people would not mind showing others. This movie is getting great reviews from north Indian channels(NDTV, IBNLive first time for a tamil move), are you saying this is happening b'coz of Sun Tv or Stupid fans? No, this movie by itself deserves it, because of the quality and people who worked in it.
Final questions, Do you really think you are 100% right about everything you say? don't you know always there will be another side for any story? whenever you are posting your point why are clearly leaving out points which say otherwise? for instance when you said your nephew didn't like the movie, you didn't mention anything about people you knew who liked it. when you said "Kadhalan" is shankars bad movie, you didn't bother to mention about "Indian" & "Mudhalvan" which came after it.
I do like your point of view on some social issues, but do keep in mind nobody's point of view is 100% right all the time. please consider this as a constructive feedback.
Final questions, Do you really think you are 100% right about everything you say? don't you know always there will be another side for any story? whenever you are posting your point why are clearly leaving out points which say otherwise? for instance when you said your nephew didn't like the movie, you didn't mention anything about people you knew who liked it. when you said "Kadhalan" is shankars bad movie, you didn't bother to mention about "Indian" & "Mudhalvan" which came after it.
பதிலளிநீக்குI do like your point of view on some social issues, but do keep in mind nobody's point of view is 100% right all the time. please consider this as a constructive feedback.
எந்திரன் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் பார்த்தேன், ஞாயிறு அன்று ஒளிபரப்பிய நிகழ்ச்சியை மட்டும் நான் பார்க்கவில்லை (சில வினாடிகள் பார்த்துவிட்டு கடுப்பாகி மாத்திவிட்டேன்).
பதிலளிநீக்குநண்பர் VJ அவர்களே! உங்கள் கருத்துடன் நானும் ஒத்துப்போகிறேன்.
Nichayam sun kulumam seithu varuvathu samuthaaya seekaedukale....
பதிலளிநீக்குNadikargalai thookivaithu kondaada koodiyavargal samudhaya dhrogiyaago,kirukkanagavo
mattume irukkamudiyum.
படம் பார்த்தே ஆக வேண்டும் என யாரும் சொல்லவில்லை... பிடிக்கவில்லை என்றால் புறக்கணிக்காமல் பட்த்துக்கு விளம்பரம் தரும் வேலையைத்தான் தமிழ் நாட்டு அறிவு ஜீவிகள் செய்கிறார்கள்..
பதிலளிநீக்குசாதாரண மனிதனை வாட்டும் பேருந்து கட்டண கொள்ளையை பற்றியோ , அத்தியாவசிய பொருட்கள் பற்றியோ பேசாமல் , சினிமாவைப்பற்றி கவலைப்பட தமிழ் நாட்டு அறிவாளிகளால்தான் முடியும்.
good one sir.
பதிலளிநீக்குThis whole write up looks funny! Adra sakkai Chance Kidacha enna vena eluthalam. Anne ungaluku SUN kuzhumathilae velai tharankalam. Pongaya ponga oru puthu mathiri muyarchi panna ass tahngathe! Enga US ellam pogaguranga Enthiran patthi. Uzahipu enna sadarana uzipaa. Indian thiruthavey mattan! Funny though your article. What happened to Dinamalar? Ungali chollai kuttahmillai!
பதிலளிநீக்குஎன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது
பதிலளிநீக்குதமிழல்லவா என்று பாடிக்கொண்டே தமிழர்களை துரத்தி துரத்தி
அடிக்கிற பால் தாக்கரேவைப் பார்த்து வாயெல்லாம் பல்லாக
போட்டோவிற்கு போஸ் கொடுக்கிற ரஜனிகாந்த் அவரை தனது
கடவுளாக பார்க்கிறாராம். இவர்கள் வியாபாரிகள், வெட்கம்
கெட்டவர்கள். இவரது படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக
தனது உழைப்பையெல்லாம் வீணடிக்கிற ரசிகர் கூட்டம்
இவர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள வேண்டும்
கையில் கம்யூட்டரை வைத்துக் கொண்டு சிக்கிமுக்கிக் கல்லை உரச வைக்கிற தனத்தை சானல்கள் விடாமல் செய்கின்றன.
பதிலளிநீக்குஅருமை தோழரே! த.மு.எ.க.ச.அறிக்கையை எதிர்பார்த்தேன்.ஆனால் தினமணியில் எ ந்திரன் என்றொரு ஏகாதிபத்தியன் கட்டுரை எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த துரோணாச்சியாரின் அஸ்திரம்.விதம் விதமாய் மீசை வைத்தோம்..வீரத்தை மட்டும் எங்கோ வைத்தோம் என்ற கந்தர்வனின் ஏக்கத்தை போக்கிய தினமணி,த.மு.எ.க.ச. மற்றும் தங்களுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குசன் டிவி செய்யும் மாய்மாலங்களை தோலுரித்துக்காட்டும் உங்கள் கட்டுரை ஒரு சிறந்த ச்மூக விழிப்புணர்வை ஊட்டுவதாக இருக்கிறது.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குTamilargal eppovumae mathavangalukku KAVADI thookiyae palakkapattavargal. Suya sinthanai romba kammi.
பதிலளிநீக்கு// மக்களின் மூடநம்பிக்கை காட்டும் நிஜம் நிகழ்ச்சியில் இது இடபெருமா ? ///
பதிலளிநீக்குNice comment
Typically westerners will start their conversation like ‘How you doing?’ or talk about weather or sport before actually they continue their conversation. But of late (recently), among Tamilians, they start the conversation like ‘Enthiran Paarthaachaa?’. No one asks ‘Eppidi irukkeenga?’ This happened to me in the past few days when a friend’s family invited me for Navaratri function. Also when I called my mother, she was concerned whether I have seen the Enthiran movie the first day first show like any other people. She says TV channels are promoting this from morning thru evening.
பதிலளிநீக்குShould we see it as a positive trend or need to create awareness among masses. I don’t think Mathavaraj is blindly opposing it. It touches our cultural ethos. I see it as his part to create awareness. Well done Sir.
Karuthaana padhivu
பதிலளிநீக்குதோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு அனுப்பிய பின்னூட்டத்தை
பதிலளிநீக்குஇங்கேயும் பதிவு செய்துள்ளேன். எனது எச்சரிக்கை உங்களுக்கும்
பொருந்துமல்லவா?
மிகவும் சரியான நேரத்தில் த.மு.எ.க.ச சரியான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பின் மூலம் எப்படிப்பட்ட விளைவுகள்
ஏற்படுமோ என்று ஒரு பகுதி மக்கள் உண்மையான அக்கறையோடு
கவலை கொண்டிருந்த நேரம், எந்திரன் படத்தைப் பற்றி மட்டுமே ஒரு கூட்டம் கவலை கொண்டிருந்தது. சத்துணவு ஊழியர்களோடு பேச நேரம் ஒதுக்க முடியாத கலைஞரால் பிரத்யேகக் காட்சிக்கு வந்து பார்க்க மட்டும் நேரம் ஒதுக்க முடிகிறது. குடும்பப் பிரச்சினை தீர இக்காட்சி உதவியதா என்று புலனாய்வுப் பத்திரிகைகள்
பட்டிமன்றம் நடத்திக் கொண்டுள்ளபோது எந்திரன் மாயையை உடைத்தது த.மு.எ.க.ச மட்டுமே. வாழ்த்துக்கள். அதே நேரம்
எச்சரிக்கையாகவும் இருங்கள். என் தலைவன் படத்தை பழிக்கிறாயா என்று பைத்தியக்கார மனநிலைக்கு மாற்றப்படும் ரசிகர் கும்பல் ஆட்டோவோடு வந்து விடப்போகிறார்கள்!
சன் குழும சாக்சேனா மீதே சமீபத்தில் ஒரு தாக்குதல் வழக்கு
பதிவானதையும் நினைவில் கொள்ளவும்.
அன்பு மாதவ்
பதிலளிநீக்குதினமணியில் சமஸ் (யார் அவர்?) எழுதியிருந்த கட்டுரையைப் படித்த எனது நண்பர் ஒருவர் அற்புதமான சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அவற்றை உங்களது வலைப்பூ வாசகர்கள் பார்வைக்கும் முன் வைக்கிறேன்.
எஸ் வி வேணுகோபாலன்
Kalanithi Maran and his associates used a strategy in marketing called 'blitzkrieg marketing' a tactic employed successfully by the germans in the second world war.
Blitzkrieg means 'lightning war' and involved speed, movement and coordination to overwhelm enemy forces.
This is nothing new and has been employed by corporates who have a huge amount to spend on publicity and marketing. This strategy is also called saturation type of marketing wherein you saturate the market with news/information about your product only and thus deny your competitors any publicity.
Sun pictures has a huge war chest of money and employed it to promote their product. Nothing unethical about it. Far more relevant questions are, what are the sources of funds for the movie? Has the publicity expenses have been properly accounted for since the
sun pictures group mostly used their own channels to promote the picture thus accounting jugglery can take place. Who are the auditors for this venture and will the audited results be made public including the ticket receipts and the rights incomes?
இந்த விவாதம் இன்னும் நிறைய சிந்திக்கத் தூண்டுகிறது...
எஸ் வி வி
படத்த ஓட வைக்கறதுக்காக தீராத பக்கங்கள்ல இதை வெளியிட்டதுக்கு தீக்குளிப்பு நடத்திரப் போரங்கப்பு ஜாக்கிரதை ...
பதிலளிநீக்குஅதையும் சன் டிவில " இதோ வலைப்பதிவில் எந்திரன் மேலும் பரிசுத்த சன் டிவியின் மீதும் குற்றம் சுமத்தியதற்காக பெட்ரோலை மேலே ஊத்தி விட்டார் !!! இதோ கொளுத்த போகிறார்னு" வர்ணனை பண்ணி அதையும் சன் டிவி யில் காட்ட போறாங்க உஷார்.
1) தமிழ்நாட்டின் அரசியல் களத்தை திட்டமிட்டு தனது குடும்ப நலனுக்காக சீரழித்தது கருணாநிதி குடும்பம். இப்போது தனது அரசியல் செப்படி வித்தைகள் செல்லாக்காசாகி வருவது கண்டு மீண்டும் கலை இலக்கிய தளத்தின் ஆகப்பெரும் தளமான திரைப்படத்துறையை திட்டமிட்டு கைப்பற்றும் முயற்சியில் கருணாநிதி குடும்பம் இறங்கி உள்ளதன் பின்னணியில்தான் எந்திரனையும் பார்க்க வேண்டும். இதன் நுட்பமான வடிவமாகவே தொலைக்காட்சியை பயன்படுத்தி சாமானிய மக்களின் கலை இலக்கிய ரசனையை மிகக் கேவலமான முறையில் ஹை -ஜாக் செய்யும் வேலையில் கருணாநிதி குடும்பம் இறங்கியுள்ளது. இன்றைய தேதியில் எந்திரன் ஓடினால்தான் தமிழ் மக்களின் வீட்டில் உலை கொதிக்கும் என்கின்ற அளவுக்கு மூளைச்சலவை செய்யும் வேலையில் கருணாநிதி-மாறன்-சங்கர்-ரஜினி கும்பல் சன் டீ.வி.மூலம் இறங்கியுள்ளது. (உண்மை என்னவெனில் எந்திரன் ஓட வேண்டும் எனில் ஒரு மாச உலையை தியாகம் பண்ணனும்). த மு எ க ச மட்டும் அல்ல, ஏனைய கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புக்களும் இலக்கியவாதிகளும் (கனிமொழி, வைரமுத்து, அப்துல் ரஹ்மான் உட்பட) இந்த பண்பாட்டுத் தாக்குதலை பெரும் குரல் எடுத்துக் கண்டனம் செய்ய வேண்டும்.
பதிலளிநீக்கு2) ஒரு அமைச்சர் நெற்றியில் குங்குமபொட்டு இருந்தது கண்டு 'ரத்தமா' என கருணாநிதி கிண்டல் செய்ததாக நாம் அறிந்ததுண்டு. ஆனால் கேவலம் மாறன் குடும்பமும் ரஜினி சங்கர் குடும்பமும் மேலும் கோடிகளை சேர்க்க அன்றாடம் காய்ச்சி தமிழன் (எந்திரன் ஓட வேண்டி) காவடி எடுப்பதையும் அலகு குத்துவதையும் தேர் இழுப்பதையும் பாலாபிசேகம் செய்வதையும் சன் டீ.வி.யில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி மகிழும் பகுத்தறிவுப் பகலவன் குடும்பத்தை என்னென்று சொல்ல?
3) இதன் மறு பரிணாம வளர்ச்சியாக மதுரையில் தி.மு.க.தொண்டர்கள் எந்திரன் விசிடி-க்களை பறிமுதல் செய்யும் மகத்தான திராவிட அரசியல் களப்பணியில் இறக்கி விடப்பட்டுள்ளார்கள். ஆஹா! என்னே திராவிட அரசியலின் வளர்ச்சி! மனசு புளகாங்கிதம் அடையுது! (எந்திரன் படத்தின் உண்மையான செலவுகள், ரஜினிக்கு கொடுத்த சம்பளம், இதற்கெல்லாம் எங்கிருந்து வந்தது பணம் போன்ற திருட்டு விஷயங்கள் வெளிப்படையாக தெரியாத போது இதுபோன்ற சி.டி.க்களை நான் ஏன் திருட்டு சிடி என்று சொல்ல வேண்டும்? தவிர 500, 1000 ரூபாய் கொடுத்து அன்றாடம் காய்ச்சி தமிழன் தியேட்டரில் சென்று பார்ப்பானா இதுபோன்ற சிடி 20 ரூபாய்க்கு கிடைக்கும்போது அதை வாங்கி பார்ப்பானா?) போலீஸ் துறை எந்திரன் சிடிக்கள் பற்றி தகவல் தருமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாக மாறனின் சன் டிவி சொல்கின்றது, அதாவது எந்திரன் சிடிக்களை கண்ணில் விளக்கெண்ணை போட்டு தேடிப்பிடிப்பதுதான் தமிழக போலீஸ் துறையின் அடுத்த ஒரு வருடத்துக்கான வேலை என்பது கருணாநிதியின் மறைமுக கட்டளை போலும்! மக்கள் பணத்தில் போலீசுக்கு சம்பளம், வேலையோ சிடி தேடுவது!
3) "சூப்பர் ஸ்டார் நடித்த எந்திரன் படத்தை அண்ணன் கலாநிதிமாறன் 200 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளார். எந்திரன் "திருட்டு" சிடி விக்கிற கடைகளை ரஜினி ரசிகர்கள் சோதனையிட்டு கைப்பற்றி போலீசிடம் ஒப்படைத்துள்ளோம்" - இப்படித்தான் சன் டிவியில் ஒரு ரசிகர் (உடன்பிறப்பு) சொல்கின்றார். அவரைப் பார்த்தால் தெரிகின்றது, ஒரு சாதாரண கூலித்தொழிலாளி, ஒரு நாளைக்கு 200, 300 ரூபாய் சம்பாதிப்பவர் என்று. அந்த அப்பாவியைக் கேட்கின்றேன்: "நண்பா, நீ இப்படி கோடீசுவரனான மாறன் குடும்பத்துக்காக கசிந்து கண்ணீர் வடிப்பது உன் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ உன்னைப் பெற்ற தாய் தகப்பனுக்கோ தெரியுமா? நீ இப்படி உன்னுடைய சம்பாத்தியத்தை விட்டு விட்டு எந்திரன் சிடி தேடிக் கொண்டிருந்தபோது அந்த ஒரு நாளில் மட்டும் சன் டீ.வி.யின் லாபம் ரூபாய் சுமார் இரண்டு கோடி என்பதை அறிவாயா? இதை உன் பிள்ளைகளுக்கு சொல்வாயா?"
(Sun TV has posted a net profit of Rs 170.95 crore for the quarter that ended in 30th June 2010,(see www.topnews.in)).
இக்பால்
வலுத்தவர்கள் கூடிப் படம் பண்ணி, பவிசு காட்டி, (WEAKNESS) இயலாமையறிந்து,
பதிலளிநீக்குஇளைத்தவனிடமிருக்கும் மிச்சத்தையும் உருஞ்சிகிறார்கள்.
இளைத்தவனோ,பலியாடய் பூசாரி பின்னால்.
தமுஎகச விற்கு என் நன்றிகளும்.
பதிலளிநீக்குதன் உணர்வுகளை வெளிபடுத்திய அனைவருக்கும். நன்றி.
எந்திரன் விளம்பர செய்திகளை விட, இப்போது வரும் சபைசெஜேட் spicejet விளம்பர முக்கியநிகழ்வுகள் மிகப் பெரிய நகைச்சுவை
பதிலளிநீக்குenthiran-thanthiran, thamilarkalai moddai adikka vanthuviddan! ungal pathivu arumai-meerapriyan.blogspot.com
பதிலளிநீக்கு