ஜெயேந்திரக் கொழுப்பு

sankarachari தண்டத்தோடு வாய்தாவுக்கு அலைந்து கொண்டிருந்த ஜெயேந்திரர் என்றழைக்கப்படும் சுப்பிரமணி, இதோ திரும்பவும், காவி படிந்து நாற்றமெடுக்கும் தனது திருவாய் மலர்ந்தருள ஆரம்பித்திருக்கிறார். 2.10.2010 தினத்தந்தியில் ‘ஜெயேந்திரர் கருத்து’ என செய்தி வந்திருக்கிறது.

“இந்த வழக்கில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்ட 3ல் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிப்பீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டிருக்கின்றனர்.

“அதை முஸ்லீம்களே விரும்பமாட்டர்கள். முஸ்லீம்களுக்கு அயோத்தியில் 7 மசூதிகள் உள்ளன. இதனால் இன்னொரு மசூதியைக் கட்ட விரும்பமாட்டார்கள்”

அவர்கள் விரும்பக்கூடாது என்பதுதான் இதில் உள்ள செய்தி. இந்துக்களும், முஸ்லீம்களும் இணக்கமாக வாழ வேண்டும் என்கிற தொனியில்லாமல், இந்துக்களோடு முஸ்லீம்கள் அனுசரித்துப் போக வேண்டும் என்கிற அரசியலும் இந்த வார்த்தைகளுக்குள் இருக்கிறது.

இருக்கிற மசூதிகள் முஸ்லீம்களுக்கு போதும் என்று சொல்லியவர், அடுத்து மேலும் சில படிகள் ஏறிச் செல்கிறார்.

“முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு என்று இன்னொரு மசூதி தேவையில்லை. அவர்கள் எந்த இடத்திலிருந்தும் மெக்காவை நோக்கி தொழுகை நடத்த முடியும்”

ஆக, முஸ்லீம்களுக்கு மசூதியே தேவையில்லை என கடைசிப்படியில் நின்று சொல்லியே விடுகிறார்.

ராமன் இருக்குமிடம் அயோத்தி என்பது, சீதைக்கு மட்டுமல்ல, அவரை நேசிக்கிற பக்தர்கள் அனைவருக்குமான தெளிவுதானே. அப்படியானால் ராமர் வேறு எங்குமே இல்லையென்பதை இந்த ‘பீடாதிபதிகள்’ ஒத்துக்கொள்கிறார்களா? அப்புறம் நாடு முழுவதும் எதற்கு ராமர் கோவில்கள்? அயோத்தியில் ஒன்றைக் கட்டிவிட்டு அந்தத் திசையை நோக்கிக் கும்பிட்டபடி ‘சிவனே’ என இவர்களால் இருக்க முடியுமா?

பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும். சாமி சிலை இருக்கும் திசையில் ஒரு பாட்டி கால் நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்படி நீட்டக்கூடாது என பூசாரி சொல்வான். அப்படியென்றால் வேறு திசையில் உன் தெய்வம் இல்லையா என பாட்டி கேட்பார். அந்தப் பூசாரி மௌனமாகிப் போவான்.

இந்தப் பூசாரிகள் மௌனமாகிப் போக மாட்டார்கள்.

நண்பர் மயிலை பாலு அவர்கள், இந்தச் செய்தியை குறிப்பிட்டு, தீக்கதிர் பத்திரிகையில் எழுதி, “இந்தக் குசும்புதானே வேணாங்குறது..” என முடித்திருக்கிறார்.

இது குசும்பு இல்லை, கொழுப்பு.

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அயோத்தியில் அமைதி உண்டாக்குங்கள் ராமர் கோவில் கட்ட பதினெட்டு லட்ச ரூபாய் நிதி தருகிறோம் என்று முஸ்லிம் அமைப்பு கூறியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. //பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும். சாமி சிலை இருக்கும் திசையில் ஒரு பாட்டி கால் நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்படி நீட்டக்கூடாது என பூசாரி சொல்வான். அப்படியென்றால் வேறு திசையில் உன் தெய்வம் இல்லையா என பாட்டி கேட்பார். அந்தப் பூசாரி மௌனமாகிப் போவான். //

  Ha... Haa...


  ‘ஜெயேந்திரர் கருத்து’ கொழுப்பு.

  பதிலளிநீக்கு
 3. வெறும் கொழுப்பா? பார்ப்பனக் கொழுப்பா?

  பதிலளிநீக்கு
 4. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரர் மாதவராஜ்,
  காஞ்சி சங்கராச்சாரி சொல்லுவது முற்றிலும் உண்மை. அந்த இடத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதை விரும்ப மாட்டார்கள். அந்த இடத்தை பேசாமல் கப்ருஸ்தானாக மாற்றி விடுவது தான் முஸ்லிம்களுக்கு நல்லது. காசி, மதுரா உட்பட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை இந்துத்துவாக்கள் கரசேவை செய்ய வரும் போது தடுக்கின்ற முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவது உறுதி. அவர்களை புதைக்க இடப்பற்றாக்குறை கண்டிப்பாக ஏற்படும். எனவே அயோத்தியில் முஸ்லிம்கள் தமக்கு கிடைத்த இடத்தை கப்ருஸ்தானாக இப்போதே அறிவித்து விடுவது நல்லது. அந்த இடத்தில் படுகொலை செய்யப்படுகின்ற முஸ்லிம்களை அடக்கம் செய்து கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 5. ஜனநாயகத்தின் தூண்களான நாடாளுமன்றம், அரசு நிர்வாகம் மற்றும் ஊடகத்துறையின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து காலம் பல கடந்து விட்டது. நீதித்துறையை மட்டுமே முஸ்லிம்கள் நம்பினர். அங்கேயும் சட்டத்தின் ஆட்சி இல்லை என்று தெரிந்து விட்ட பிறகு அதன் மீதும் நபிக்கையை முஸ்லிம்களான நாங்கள் இழந்து விட்டோம். நீதி செத்து விட்டது என்றே நாங்கள் கருதுகிறோம். இனிமேலும் தயவு செய்து இந்த நாட்டை மதசார்பற்ற அரசு என்று தயவு செய்து யாரும் எழுதாதீர்கள். இது உலக மக்களை ஏமாற்ற போடும் வேஷமாகவே எங்களுக்கு தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 6. மரண அறிவிப்பு
  http://athikkadayan.blogspot.com/2010/10/blog-post.html
  மூன்று நாட்கள் பலவாறாக யோசித்து பார்த்தாலும் உச்ச நீதிமன்றத்திலாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அளவு ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கின்றது. விரக்தியோடு மட்டும் எழுதப்பட்டதல்ல இவ்வார்த்தைகள்.

  பதிலளிநீக்கு
 7. //பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும். சாமி சிலை இருக்கும் திசையில் ஒரு பாட்டி கால் நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்படி நீட்டக்கூடாது என பூசாரி சொல்வான். அப்படியென்றால் வேறு திசையில் உன் தெய்வம் இல்லையா என பாட்டி கேட்பார். அந்தப் பூசாரி மௌனமாகிப் போவான். /////

  சிந்திக்க வேண்டிய ஒன்றுதான் .

  பதிலளிநீக்கு
 8. இத்தீர்ப்பில் நியாயம் வழங்கியிருந்தால் கலவரம் ஏற்பட்டு இருக்கும்.நம்பிக்கை அடிப்படையில் சேது கால்வாய் திட்டத்தை விட்டு விடுவார்கள்.ஏனென்றால் இது கட்ட பஞ்சாயத்து தீர்ப்பு (இப்ப தான் தெரியுமா சேக்தாவூத் பாய்.இவ்வளவு அப்பாவியா நிங்கள் )

  பதிலளிநீக்கு
 9. அடுத்து மதுரா, கிருஷ்ணன் அவதரித்த பூமி, காசி - வாரணாசி ஆகியவைகளில் உள்ள மசூதிகளையும் அகற்றவேண்டும் - சுப்ரமணிய சாமி

  இது பற்றியும் பேசலாமே

  பதிலளிநீக்கு
 10. அன்பு மாதவராஜ்,

  நல்ல பதிவு...

  எனக்கு நிறைய எழுத கை பரபரன்னு வருது மாதவராஜ்.

  எல்லாவற்றையும் எழுத வேண்டும் பதிவுகளாய் போட நேரமில்லை... படித்த, சேகரித்த விஷயங்கள் அணைத்தையும் கொட்டி தீர்க்க வேண்டும் என்று தோன்றும் எப்போதும். உயர் நீதிமன்றம் வெர்டிக்ட் என்று அலறியதை, உப்பு சப்பில்லாது குரங்கு அப்பம் பிட்ட கதை மாதிரியான ஒரு தீர்ப்பு. எனக்கு உடண்பாடில்லை...

  எழுதவேண்டும்... எழுதுவேன்

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 11. //பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும். சாமி சிலை இருக்கும் திசையில் ஒரு பாட்டி கால் நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்படி நீட்டக்கூடாது என பூசாரி சொல்வான். அப்படியென்றால் வேறு திசையில் உன் தெய்வம் இல்லையா என பாட்டி கேட்பார். அந்தப் பூசாரி மௌனமாகிப் போவான். //

  அந்த பாட்டி ஒளவையார்

  பதிலளிநீக்கு
 12. எப்போதுமே மக்களிடம் பிரிவை ஏற்படுத்தி அதில் குளிர் காய்வது, அரசியல்வாதிகளின் சொத்துகளுக்குக் காவல்காரனாக இருப்பது, அவ்வப்போது ஏதாவது கொலை, கற்பழிப்பு வழக்கில் சிக்கிக்கொள்வது, இவற்றை எல்லாம் செய்துவிட்டு அனைத்திற்கும் கடவுள் பெயரைச் சொல்லிவிடுவது...சீ! இவனெல்லாம் ஒரு மனிதனா? இவனுடைய பேச்சை எல்லாம் செய்தியாகப் போடும் நாளிதழ்களையெல்லாம் என்ன சொல்வது?

  பதிலளிநீக்கு
 13. அடுத்தவர்கள் ஒன்று பேசும் போது இன்ன அர்த்தத்தில்தான் பேசுகிறார்கள் என்று நாம் இண்டர்ப்ரெட் செய்வது அறியாமை. அதிலும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்கிற அளவில் கருத்து தெரிவிப்பது அறியாமையிலும் அறியாமை. அறியாமை அவருக்குப் புதிதில்லை.

  இன்னொரு விஷயம், ஒரே வளாகத்தில் இரண்டு வழிபாட்டுத் தலங்கள் இருப்பது பதட்டத்தை உண்டாக்கும் என்பது வெளிப்படை.

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 14. இந்தக் கொலைக்குற்றம் சாட்டப்பட்டக், காமம் பிடித்தக் கழிசடைச் சுப்புணியும், மற்ற அரசுகளுக்குக் கைக்கூலியான மாமா சுப்புணியும் சிறையிலடைக்கப் பட வேண்டியவர்கள். "இந்து" "ராமன்" என்ற முகமூடியைக் கிழித்து அனைத்துச் சிறு பான்மையினரும், மற்றும் பிற்படுத்தத் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் இதில் ஒன்று சேர்ந்து சர்மாக்களின் நரித்தனத்தை ஒடுக்க வேண்டும். இல்லையோ பார்ப்பனீயத்தின் அட்டகாசம் மற்றவர்களைப் பிரித்து சண்டை மூட்டி வேடிக்கை பார்த்து பலனை அனுபவித்துக் கொள்ளும்.

  பதிலளிநீக்கு
 15. அன்புள்ள மாதவராஜ்...
  இதுபோன்று ஜெ..ர் சொல்லி இருக்காவிட்டால்தான் ஆச்சர்யம்.

  mkr said...

  //இத்தீர்ப்பில் நியாயம் வழங்கியிருந்தால் கலவரம் ஏற்பட்டு இருக்கும்.//

  --அப்புறம் ரூபாய் கோடி கோடியாய் கொட்டி ராணுவத்தையும் காவல் துறையையும் வைத்திருக்கிறோமே? அவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி விடலாமே...? இவ்வளவு சிந்தனை வறட்சியா?

  புரியவில்லை எனில்...

  தன் இரு புதல்வர்களில் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை மற்றொருவர் கேட்கிறார். அந்த தந்தைக்கு தெரியும் அது யாருடையது என்று. அவர் என்ன செய்கிறார் என்றால், உரியவருக்கு தராமல், அதை இரண்டாய் உடைத்து ஆளுக்கு ஒரு சக்கர பாகமாய்(!) சமமாய் பிரித்து அளித்து விடுகிறார். 'என்னங்க இது மடத்தனமா இருக்கே..?'என்று யாரவது ஒரு நடுநிலையாளர் கேட்டால், 'இல்லைங்க... நியாயம் வழங்கி இருந்தால் சண்டை வந்திருக்கும்' என்கிறார். அப்புறம் 'எதற்கு அவர் தந்தையாக இருக்கிறார்' என்பதே என் கேள்வி. அந்த தந்தை இடத்தில் உங்களை வைத்து எண்ணிப்பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 16. //இந்த வழக்கில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்ட 3ல் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிப்பீர்களா?”//

  இந்த பரதேசி நாயை கேள்வி கேட்டவனைத்தான் செருப்பால் அடிக்க வேண்டும். இந்த கிரிமினல் என்ன அனுமதிப்பது,
  அவர்களுக்கு அளித்த இடத்தில் அவர்கள்
  என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், கேள்வி கேட்டவனுக்கு இந்த ஊத்தவாயனின் லீலைகள் தெரியாதா.

  பதிலளிநீக்கு
 17. அப்புறம் நாடு முழுவதும் எதற்கு ராமர் கோவில்கள்? அயோத்தியில் ஒன்றைக் கட்டிவிட்டு அந்தத் திசையை நோக்கிக் கும்பிட்டபடி ‘சிவனே’ என இவர்களால் இருக்க முடியுமா?/////

  நல்ல கேள்வி

  பதிலளிநீக்கு
 18. எல்லாவற்றையும் விட ஆபத்தானது, நீதித்துறையின் போக்கு. அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று அறுதியிட்டுச் சொல்கிறார்கள். அப்படிச் சொல்லிய நீதிபதி சர்மாவுக்குச் சாமியார்கள் பாராட்டுவிழா நடத்தப் போகிறார்கள். ஜெயந்திரன் என்கிற சுப்புணி அழிச்சாட்டியம் நடத்தும் காஞ்சிமடம், காஞ்சிபுரத்துக் கோயில், காஞ்சி காமாட்சியம்மன் என எல்லோமே பௌத்தத்தை அழித்து உருவாக்கப்பட்டது. பௌத்தர்களின் யக்க்ஷியை இவர்கள் காஞ்சி காமாட்சி ஆக்கினார்கள். பௌத்தர்கள் அதற்கும் முந்திய நாகர்கள் முதலான பழங்குடிச் சமுக அழிவிலிருந்து தங்களுக்கான படிமங்களைச் சுவீகரித்தார்கள்.. அப்படியே பின்னோக்கிப் போனால், எல்லாம் ஆதி அமீபா, அதற்கும் முந்திய பேரண்ட வெடிப்பின் ஒளிப்பிழம்பு, அதனையும் தாங்கி நிற்கும், ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்வது போல இயற்பியலின் தன்னசைவு என்று எங்கிருந்து நீதிபதிகள் தங்கள் துவக்கப் புள்ளிகளைத் தேடுவார்களோ?
  இன்றைய காலத்தின் கொஞ்சம் நம்பிக்கை தருகிற ஒன்றாக இருக்கிற நீதிமன்றமும் ஏகாதிபத்தியக் காலத்தின் தொங்குசதையாகப் பரிணாமம் பெற்று வருவதன் அடையாளம்தான் இது போன்ற தீர்ப்புகள். நிலப்பிரபுத்துவ நம்பிக்கைகளும், நடைமுறைகளும், மக்கி அழுகி விசமாகி நாட்டை ரொம்பத்தான் வியாதியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 19. ///அயோத்தியில் ஒன்றைக் கட்டிவிட்டு அந்தத் திசையை நோக்கிக் கும்பிட்டபடி ‘சிவனே’ என இவர்களால் இருக்க முடியுமா?///

  ராமனுக்கு கோயில் கட்டிவிட்டு சிவனே என்று கும்பிடுவதா? அருமையான நகைமுரண்...

  இவனுங்க திருந்தவே மாட்டானுங்க....

  மக்கள் மாக்களாக இருக்கும் நாட்டில்..இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்...

  ஆனால், இவர்கள்தான்...சூத்திர ஆட்சியில் வாழக்கூடாதென்று எழுதி வைத்துள்ளார்கள்...ஆனாலும், வாழ்கிறார்கள்...காரணமென்ன என்று மக்கள் புரிந்து கொள்ள......வேண்டாம் எனக்கு தெரியலை...மக்களுக்கு அறிவு என்று வருமென்று

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!