“கூப்பிட வர்றீங்களா”மழை மேகம் அடர்ந்த நேற்றைய சாயங்காலம் பள்ளியிலிருந்து அம்மு போன் செய்தாள். ஈரக்காற்றோடு இருண்டிருந்த வெளி எந்நேரமும் மழை வருமெனச் சொல்லியது. வீட்டிலிருந்து அம்மு பணிபுரியும் பள்ளி இரண்டு கி.மீ தூரமாவது இருக்கும். பைக்கில் பாதி வழி செல்வதற்குள் அனேகமாய் நனைய வேண்டி இருக்குமெனத் தோன்றியது. “மழை வரும் போலிருக்கே, ஆட்டோ பிடித்து வந்துவிடேன்” என்றேன் சோம்பலுடன். “அதெல்லாம் வராது, நீங்க வாங்க” எனச் சொல்லி உரையாடலை முடித்துக் கொண்டாள்.
எரிச்சலோடு புறப்பட்டேன். நினைத்தது போலவே கொஞ்சதூரம் செல்வதற்குள் தூற ஆரம்பித்தது. போகப் போக துளிகளின் வேகம் மேலும் பெருக, பள்ளியை நெருங்குவதற்குள் நிறைய நனைந்து போனேன். என்னைப் பார்த்து அம்முவும் நனைந்துகொண்டே வந்தாள். சொன்னதைக் கேட்காமல், இப்படி அலைக்கழித்து விட்டாயே எனப் பார்த்தேன். “ஸாரி” சொல்லிக்கொண்டே பைக்கின் பின்னால் உட்கார்ந்தாள். விறைப்புடன் வண்டியை நகர்த்தினேன். “ரொம்ப நனைஞ்சுட்டீங்களோ” என்றாள். “நாந்தான் சொன்னேன்ல.... கேட்டாதானே?” வார்த்தைகளின் தொனியில் என் கோபத்தையெல்லாம் காட்டினேன். அவளிடம் பதிலில்லை.
தூறல் அடர்ந்து, கொட்ட ஆரம்பித்தது. “இப்ப பாரு. சொன்னா கேக்கணும்” அடக்கமாட்டாமல் எரிந்து விழுந்தேன். “இப்ப என்ன?” என்றாள். “என்னவா, ரொம்பத் திமிரு ஒனக்கு” என்றேன். சிரித்தாள். “எதுக்கு சிரிக்கிறே. கடுப்பக் கெளப்பாதே” என்றேன் “பின்னால் உக்காந்திருக்கிறது, கல்யாணமாகி ஒங்களோட குடும்பம் நடத்துற அம்முன்னு நெனைக்காம, கல்யாணத்துக்கு முன்னால நீங்க காதலிச்ச அந்த அம்முன்னு நெனைச்சுப் பாருங்க. இந்த மழையே வேற மாதிரி இருக்கும்” என்றாள். கொஞ்ச நேரம் அமைதியானவன், பிறகு வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தேன். வானமும் பெருஞ்சிரிப்பாய் சிரித்தது.
இப்படியாக, இருபத்தோரு வருசம் பயணம் செய்து முடித்திருக்கிறோம் இன்றோடு! காலம் வெயிலும் மழையுமாய் பெய்துகொண்டு இருக்கிறது.
//“பின்னால் உக்காந்திருக்கிறது, கல்யாணமாகி ஒங்களோட குடும்பம் நடத்துற அம்முன்னு நெனைக்காம, கல்யாணத்துக்கு முன்னால நீங்க காதலிச்ச அந்த அம்முன்னு நெனைச்சுப் பாருங்க. இந்த மழையே வேற மாதிரி இருக்கும்” என்றாள். கொஞ்ச நேரம் அமைதியானவன், பிறகு வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தேன். //
பதிலளிநீக்கு:-))) nice.
வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅழகான பகிர்வு...
அடடா....இனிமை...
பதிலளிநீக்குMenmaiyaana Kavithai!
பதிலளிநீக்குSuperb. All the best.
பதிலளிநீக்குநல்ல பதிவு... மழை வெயில் வாழ்க்கை நிகழ்வுகளோடு பொருத்துவது அருமை.
பதிலளிநீக்குmarriage day wishes.
பதிலளிநீக்குபதிவர் டுபுக்கு முன்பு தனது திருமண நாள் (1oth) குறித்து அருமையாக ஒரு பதிவு எழுதி இருந்தார். அந்த ஞாபகம் வந்து விட்டது.
http://dubukku.blogspot.com/2009/05/blog-post.html
ரசித்தேன் ...
பதிலளிநீக்குஅருமை .
வாழ்த்துக்கள் .
//இப்படியாக, இருபத்தோரு வருசம் பயணம் செய்து முடித்திருக்கிறோம் இன்றோடு//
பதிலளிநீக்குபுனைவுன்னா நல்லாயிருக்கு, உண்மைன்னா வாழ்த்துக்கள்!
அண்ணா! திருமண நாள் வாழ்த்துக்கள்...அழகான பதிவு...உங்கள் காதலைப் போல்...
பதிலளிநீக்குகாதல் மழை மிக அழகாகவே கொட்டியிருக்கிறது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிவின் மூலம் என்னையும் நிதானத்துக்கு கொண்டுவந்துட்டீங்க... அமைதியா இருக்க முயற்சிக்கும்... ஒரு முடியாதவன்
பதிலளிநீக்கு:)
:))) அம்மு இதை என்னிடம் சொன்ன போது நான் வியந்து அவளிடம் சொன்னது. "இப்படியெல்லாம் பேச நான் வாழ்நாள் பூரா உன் கிட்ட ட்யூஷன் எடுக்கணும் போலிருக்கே!"
பதிலளிநீக்குSuper post for this day!
வாழ்த்துகள் அண்ணே..:-)))
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், அம்மு, மாதண்ணா.
பதிலளிநீக்கு\\ Deepa said...
:))) அம்மு இதை என்னிடம் சொன்ன போது நான் வியந்து அவளிடம் சொன்னது. "இப்படியெல்லாம் பேச நான் வாழ்நாள் பூரா உன் கிட்ட ட்யூஷன் எடுக்கணும் போலிருக்கே!"\\
நானும் தான் தீபா!
அருமையான கதை. எதார்த்தத்தை புரிந்தால் வாழ்வில் மழைப்பொழியும் ..வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்! இனிமையான வாழ்வு நிலைக்கட்டும்!
பதிலளிநீக்கு''காலம் வெயிலும் மழையுமாய் பெய்துகொண்டு இருக்கிறது.''அருமையான பகிர்வு நன்றி தோழரே..a
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மாதவ் சார்.
பதிலளிநீக்குபயணம் நீண்டு நன்கு தொடர வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குரொம்ப நல்லாயிருக்குங்க
பதிலளிநீக்குஆனா பழைய மாதிரி வண்டிய கொண்டு போய் மரத்தில சாத்தாம இருந்தா சரி
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமணநாள் வாழ்த்துக்கள். மழைப் பயணத்துடன் தொடர்பு கொண்டு எழுதியுள்ளீர்கள் . எனவே getting showers of blessings .
பதிலளிநீக்குஅருமை அண்ணே!
பதிலளிநீக்குஎன்றுமே இருபத்தி ஒன்றை கடக்காமல் சந்தோஷமாய் இருக்க வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குஉங்கள் அம்முவிற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் .
happy anniversary
தோழரே திருமண நாள் (லேட்டான) வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎன்ன ஒரு ஒற்றுமை பாருங்க.
எனக்கும் செப்.10 தான் சம்பவம் (திருமணம்) நடந்த நாள்.
ஆனால், எங்கள் காதலில் மழை இல்லை.
அன்பு மாதவ் அம்மு இருவருக்கும்
பதிலளிநீக்குஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
எப்படியோ நேற்று கவனிக்க விட்டு விட்டதை,
எங்களது (வேணு - ராஜி )திருமண நாளான இன்று (செப்டம்பர் 11)
பார்த்து மகிழ்ந்தோம்... வாழ்த்துக்கள்...
விலகி நின்று காதலிக்கிறபோது
பரஸ்பரம் இருக்கும்
வேட்கையும், தாபங்களும்
அருகருகே இணைந்து உறவாகிவிடுகிறபோது
வேறு தளத்திற்குப் போய்விடுகிறது...
காதல் தம்பதியராய் வாழ
உண்மையில் கொடுத்துத் தான் வைத்திருக்க வேண்டும்...
உங்கள் இருவர் விஷயத்தில்
நழுவிப் போகிற அதே உணர்வுகளை
பரஸ்பரம்
ஒருவருக்கொருவர்
மீட்டெடுத்துக் கொடுத்துக் கொண்டே தொடர்கிறது வாழ்க்கை என்று
சொல்லத் தோன்றுகிறது..
இருவரில் இதில் யார் அதிகம் இதில் தேர்ச்சி உள்ளவர் என்பதை
இந்தப் பதிவு காட்டி விடுகிறது -
ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதை....
எஸ் வி வேணுகோபாலன்
வாழ்க்கையை ரசித்து வாழ காதல் காலங்கள் உதவுகிறது போல்.
பதிலளிநீக்குஅண்ணா திருமண நாள் வாழ்த்துக்கள்.
ஏமாந்துட்டீங்களே சித்தப்பா :)
பதிலளிநீக்குCongrats to both of you!!! :)
தினந்தோறும் காதலி.
பதிலளிநீக்குஇப்படிதான் மழை எப்போதும் தனியாக வருவதில்லை தோழர்...வாழ்த்துகள்
பதிலளிநீக்குதிருமண நாள் வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு!!
பதிலளிநீக்குவாழ்த்துகள் மாது! (ரமதான் வேலைகளில் போய் ஆப்டுக்கிட்டாச்சு)
பதிலளிநீக்குஇருபத்தி ஒரு வயசாச்சா? பதின்மத்திலேயே குழையுது மக்கா எழுத்து! :-))
இப்படியே இருங்க மாது. அம்மு, நீங்களும்தான்!
வாழ்த்திய அனைவர்களுக்கும் எங்கள் நன்றி.
பதிலளிநீக்கு