குறுக்கெழுத்து விளையாட்டு -1

வார்த்தைகளுடன் கொஞ்சம் விளையாட்டு இன்று. கட்டங்களுக்குள் பதிவர்கள் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள், இயக்குனர்கள், நடிக, நடிகையர் இருக்கின்றனர். கதைகள், சினிமாக்கள் இருக்கின்றன. கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

மன்னிக்கவும். புதிய பதிவர்கள் அறிமுகத்திற்கான குறிப்புகள் யாரிடமிருந்து வரப் பெறாததால் தீராத பக்கங்கள்-3 இந்த வாரம் வெளியிட முடியவில்லை.

 

இடமிருந்து வலம்:


1.ஏற்றத் தாழ்வு இன்றி அமைய இதனைச் செய்தாக வேண்டும்.
3.விவிலியத்தில் அபினோவாமின் மகன். அக்கம் பக்கம் பார்க்கிறவனோ?
7.குஜராத்தில் இங்கு அடிக்கடி கலவரம் நடந்திருக்கிறது.
9.சிங்கிஸ் ஐத்மாத்தவின் நாவல் (வல இடமாய்)
11.மாலன் இதனோடு அடையாளம் காணப்படுவதுண்டு.
13.இவரின் பேனா பேசினால் பதிவு.
14.சபதம் என்றும் பொருள் உரைக்கலாம்.
15.கவிப் பதிவர். மலையாள சினிமா ஒன்று ஞாபகம் வருமே..
16.சர்ச்சைகளில் (ஈடுபடும்) அடிபடும் எழுத்தாளர்.
17.நின்னை மகாகவி இத்தனை ஆசையாய் அழைக்கிறார்.(வல இடமாய்)
18.சிவாஜியை இளவட்டக்கல் தூக்க வைத்தவர்.
20.பதிவுலகம் நினைவில் வைத்திருக்கும் எழுத்தாளர் ஒருவரின் பதிப்பகம்.
22.பூனை வருமுன்னே பாக்கியராஜ் வருவார் பின்னே.
27.சிற்றிதழ்.
28.இதைக் காண வேண்டும் என துடிக்கிறவர் அப்துல் கலாம்.
30.சொல்லும் அளவிற்கு அறியப்படவில்லை என தன்னடக்கத்தோடு சொல்லும் பதிவர்.(வல இடமாய்)
31.ஓரெழுத்துப் படத்தின் இயக்குனர்.
32.இந்தக் கேப்டன் அந்தக் காலத்து வில்லன். (வல இடமாய்)
33.இந்த வெடி, உடனே அடங்காது.
35.கிழிக்கக் கூடியது.
36.சினிமா, இலக்கியம் பேசும் பதிவர்.

மேலிருந்து கீழ்:


1.பாலு மகேந்திராவின் படம்.
2.பதிவர். நைஜிரியா அல்ல, பெங்களூர்க்காரர். (தலை கீழாய்)
3.புரோபைல் படத்தில் தன் பெயர் கொண்ட அன்புருகும் பதிவர்.
4.’ஆக்கும்’ பதிப்பகம்.
5.சம்பூர்ண நாயகனின் ஒரு புத்திரன்.
6.உலகம் முழுவதும் விரிக்கப்பட்ட வலை. சீனாவில் மட்டும் தடை.
8.இதை கொடுப்பவர் தோழர்.
10.மைலாஞ்சி கவிதைத் தொகுப்பை எழுதியவர் (தலைகீழாய்)
12.சேட்டின் மொழியில் சாத்தான்.
13.இராமலிங்க வள்ளலார் அருளியது.
17.எம்.ஆர்.ராதாவின் மனைவியாக பத்மினி நடித்த படம். (குழம்பி கிடக்கிறது)
19.இந்த மேற்கத்திய இசை.
21.அன்பை இப்படிச் சொல்கிறார் கமல் (தலைகீழாய்)
23.இவர் இல்லாமல் இராமாயணமா? (தலை கீழாய்)
24.ஊடகங்களால் உலகம் அறியப்பெற்ற கனடா தேசத்து கவர்ச்சிப் பெண்.
25.இலக்கியத் திறனாய்வாளர், விமர்சகர்.
26.கண்ணாடி, தொப்பி எழுத்தாளரின் மகன்.
29.இதை அகற்ற கற்க வேண்டும்.
30.உடல் என்றும் பொருள் உண்டு.
31.நடிகர் கமல்ஹாசனை, பட அதிபர்கள் சங்கத்தில் புகார் செய்த இயக்குனர்.
32.ஐஸ் அல்ல. அரசன்.(தலைகீழாய்)
33.கூட இருப்பவர்களைக் குறிக்கும்.
34.மௌனியின் சிறுகதை. மிகப் பிரபலமான எம்.ஜி.ஆர் பாடலின் ஆரம்பம்.

தெரிந்ததை சொல்லுங்கள் பார்ப்போம்.

விடைகள்  நாளை..

 

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. இடமிருந்து வலம்

  1, சமன்.
  3, பராக்கு.
  7, வதேரா.
  9, குல்சாரி.
  11, திசைகள்.
  13, தியா.
  14, சூள்.
  15, யாத்ரா.
  16, சாரு
  17, ரதி.
  18, ராதா
  20, வம்சி.
  22, கன்னிப்பருவத்திலே.
  27, மீட்சி.
  28, கனா.
  30, பாலாசி.
  31, சசி.
  32, ரஞ்சன்.
  33, சர
  35, கோடு.
  36, கண்ணன்

  மேலிருந்து கீழ்.

  1, சந்தியாராகம்.
  2, ராகவன்.
  3, பாரா.
  4, க்ரியா
  5, குசா
  6, கூகிள்.
  8, தோள்.
  10, ரசூல்
  12, சைத்தான்.
  13, திருவருட்பா.
  17, சித்தி.
  19, பாப்.
  21, சிவம்.
  23, கூனி.
  24, பமீலா.
  25, திகசி
  26, லேனா.
  29, கசடு.
  30,
  31, சரண்.
  32, கோன்.
  33, சக.
  34, ஏன்.

  பதிலளிநீக்கு
 2. இடமிருந்து வலம்
  1. சமன்
  3 . பாராக்கு
  7 . வதோரா
  9. ம்ம் தெரியாது
  11. திசைகள்
  13. தியா (தியாவின் பேனா)
  14. சூள் (சூளுரைத்தான் என்றெல்லாம் சொல்வார்களே யோசிக்க வில்லை அதுவாக வந்தது)
  15. யாத்ரா
  16. சாரு (சர்ச்சை என்றவுடன் வேறு பெயர் தோன்றவே இல்லை)
  17. ரதி
  18. ராதா
  19. வம்சி (சத்தியமாக தெரியாது அதுவாகவே வந்தது)
  20. கன்னிப் பருவத்திலே ( பாக்யராஜ் ஓகே பூனைக்கு உள்ள தொடர்பு புரியவில்லை)
  22.மீட்சி
  27. கனா
  28. ம்ம் தெரியல்லையே
  30. சசி (படம் பூ)
  31. தெரியாது
  32. சர
  33. தெரியாது
  35. சுரேஷ் கண்ணன் (சட்டென இவர் மட்டுமே ஞாபகம் வந்தார் வேண்டுமானால் உங்களுக்கு மூன்றாமிடம் அய்யனார் ரெண்டாவது )

  மேலிருந்து கீழ்
  1.சந்தியாராகம் (சமன் எனப் போட்டு ச என்றவுடன் சதிலீலாவதிதான் முதலில் ஞாபகம் வந்தது நிறைய யோசித்தேன்)
  2.ராகவன்
  3.பாரா என வருகிறது ஆனால் புரியவில்லை மாயவலை எல்லாம் எழுதிய எழுத்தாளர் பா. ராகவனா
  4. க்ரியா
  5. ராமன் என யோசித்து குசன் என நினைத்தேன் ரெண்டேழுத்தல்லவா தெரியவில்லை
  6. கூகுளே
  8. தோள்
  10.ரசூல்
  12. சைத்தான்
  13. திருவருட்பா
  17. சித்தி (சத்தியமாக தெரியாது ஜஸ்ட் கெஸ்ஸிங்)
  19. பாப்
  21. சிவம்
  23. கூனி
  24. பமீலா (அன்டேர்சன்)
  25.தி.க.சி (உங்க ஆள் இல்லையா)
  26. லேனா (ஜூஜுப்பி)
  29. ம்ம் எவ்வளவோ யோசித்தும் வரவே இல்லை வறுமை ,திமிர் இல்லையே
  30. தெரியாது எனக்குத் தெரிந்து மெய், தேகம், அங்கம்
  31 சரண்
  32. கோன்
  33. சக
  34. நான் (இதுவும் ஊகம்தான் நான் ஆணையிட்டால், நான் பார்த்ததிலே என்பவற்றைக் கொண்டு)

  பதிலளிநீக்கு
 3. ஆகா இது ரொம்ப நல்லாருக்குண்ணே. மேலிருந்து கீழ் 3 வது கேள்விக்கு விடை நம்ம மக்கா தான? மற்ற விடைகளை யோசிக்க கொஞ்சம் நேரம் வேணும். ஏர்போர்ட்ல இருக்கேன். 10:30க்கு விமானம். நாளைக்கு வந்து விடைகளை தெரிஞ்சுக்கிறேன்.

  பகிர்வுக்கு நன்றி மாதவ் அண்ணா.

  பதிலளிநீக்கு
 4. தல, :-)

  நாளைக்கு வந்து பார்க்கிறேன். :-))

  பதிலளிநீக்கு
 5. அம்பிகாவும், தர்ஷனும் விடைகள் சொல்லி இருக்கிறார்கள்.

  சுவாரசியத்தை பாதுகாக்க, அந்த விடைகளை இப்போது வெளியிடவில்லை.

  பதிலளிநீக்கு
 6. இ வ.

  1. சமன்
  3. பராக்கு
  7. கோத்ரா
  14. சூள்
  16. சாரு
  17. ரதி
  18. ராதா
  20. வம்சி
  28. கனா
  33. சர‌
  35. தாள்

  மே. கீ

  1. ச‌ந்தியாராக‌ம்
  2. ராக‌வன்
  5. குசா
  8. தோள்
  13. திருவ‌ருட்பா
  17. சித்தி
  19. பாப்/ராக்/ஜாஸ்??
  21. சிவ‌ம்
  23. கூனி
  25. தி.க.சி
  26. லேனா
  29. இருள்
  30. யாக்கை

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!