ஊரிலிருந்து வந்த தாத்தாவிடம் பேசிக்கொண்டு இருந்த பேரன் ஆச்சரியத்துடன் ஓடிவந்து சொன்னான். “அம்மா, தாத்தாவுக்கு மரமேறத் தெரியுமாம். நம்ம வீட்டுக்கு முன்னால இருக்குல்ல வேப்பா மரம், அதைவிட பெரிய மரத்துலக்கூட என்னை மாதிரி இருக்கும்போது ஏறியிருக்காங்களாம். அப்படியாம்மா?” என்றான்.
“ஆமாம்ப்பா.” என்றாள் அம்மா சிரித்துக் கொண்டே.
கொஞ்ச நேரத்தில் திரும்பவும் வந்து “அம்மா, தாத்தாவுக்கு நீச்சல் எல்லாம் தெரியுமாம். பெரிய பெரிய ஆற்றில்கூட இந்தக் கரையில் இருந்து, அந்தக் கரைக்கு நீச்சல்டிச்சே போயிருவாங்களாம் “ என்றான்.
“ஆமாம்ப்பா” என்றாள் அம்மா அப்போதும் சிரித்துக் கொண்டே.
அப்புறம் வந்தவன் “அம்மா, தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியல” என்றான்.
அம்மா, “என்னப்பா?” என்று கேட்டாள்.
“கம்ப்யூட்டர்ல ரோட் ரேஸ் நா எப்படி வெளையாடுவேன்! தாத்தாவை வெளையாடச் சொன்னேன். தெரியலம்மா” என்றான் அவன் சிரித்துக் கொண்டே.!
தாத்தா காலத்தில்
பதிலளிநீக்குமரமேறுவதும்,நீச்சலும்
சாமர்த்தியங்கள்.
இப்போது கம்ப்யூட்டர் கேம்சும்,
செல்போன் மெசேஜும்
தெரியாதவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.
காலம்...
அருமை
பதிலளிநீக்குதீப்பொறி ஆறுமுகம் சமீபத்தில் மீண்டும் திமுக வில் இணைந்த பொழுது அழகிரி சொன்னாராம், யோவ் நீர் அண்ணா, எம்ஜீஆர், அப்பா காலத்து ஆளுன்னு.
தீப்பொறி பதில் சொன்னாராம், அண்ணாவே இன்னிக்கு வந்து தேர்தல்ல நின்னாலும் நீங்க இல்லாம ஜெயிக்க முடியாதுன்னு
கால மாற்றம்...
பதிலளிநீக்குதாத்தா 100 வயசுக்கும் நல்லா வாழ்ந்தாரு... நாம?
ஹாஹா... பாவம் அந்த தாத்தா, ஆஃப்ட்ர் ஆல் ஒரு மோட்டார் வண்டியை அதுவும் கணிணியில் கூட ஓட்டத் தெரியவில்லை!!! ஹாஹா
பதிலளிநீக்குஅதை விடுங்க, அந்த பையன் தாத்தா ஆனால் அவனது பேரன் கூட சொல்லுவானே இது போல.... காலம்!!!!
விஜயராஜ்!
பதிலளிநீக்குராம்ஜி யாஹூ!
சே.குமார்!
மிக்க நன்றி வருகைக்கும், பகிர்வுக்கும்.
ஆதவா!
பதிலளிநீக்குஅடேயப்பா, அவ்வளவு காலம் ஆச்சு உங்களைப் பார்த்து. உங்களை இங்கு மீண்டும் கண்டது சந்தோஷம். வாருங்கள் நண்பா, மீண்டும் எழுத வாருங்கள். ’குழந்தை ஓவியத்தை’ தீட்ட வாருங்கள்.
அழகா சொல்லியிருக்கீங்க காலத்தை :)
பதிலளிநீக்குஅண்ணா, தாதாக்களைவிட இந்த காலத்து அப்பாக்கள் தான் பாவம், பல பேருக்கு இது ரெண்டுமே தெரியல...
பதிலளிநீக்குஆறுமுகம் முருகேசன்!
பதிலளிநீக்குமிக்க நன்றி. உங்கள் வலைப்பக்கம் வந்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். இனி அடிக்கடி வருவேன்.
தோமா!
ஆமாம், தம்பி.
வணக்கம் தோழர்,
பதிலளிநீக்குஎனது கவலை பேரனுக்குத் தெரியாத மரமேறுதலும் நீச்சலும், தாத்தாவுக்கு தெரியாத கணிணி விளையாட்டும் அல்ல
எனது கவலை எல்லாம், தனக்கு தெரியாததை தாத்தாவிடம் கண்டதும் வியப்பதும், தனக்கு தெரிந்ததை தாத்தா அறியாமலிருப்பதைக் கண்டதும் வெற்றி பெற்றதாய் குதூகலிப்பதும்
எதுவாயினும் பறந்தோடி பகிர்வதுமான கள்ளங்கபடமற்ற குழந்தைமை பையப் பைய அருகி வருவது குறித்துதான்
மிக அருமை
பதிலளிநீக்குமாற்றங்கள் வேண்டும பழமையின் வேர்பிடித்தே