களவாணி படத்தில் வரும் அந்தப் பாடல்!

இரவின் ஒரு மூலையிலிருந்து அடங்காமல் அழைக்கிறது ஒரு பெண் மனம். அதன் குரலில் இருக்கும் ஏக்கத்திற்கும், தவிப்பிற்கும் நம்மை பறிகொடுக்க வைக்கிறது. பால்யம், பதின்மம், காதல், சமூகம் எல்லாமும் வரிகளுக்குள்ளிருந்து வெளிப்பட்டு அப்படியே உள்ளிழுக்கிறது.

இருபது வருடங்களுக்கு முன்னர் ஒரு கலை இலக்கிய இரவின் மேடையில் முதன்முதலாய் இந்தப் பாடலைக் கேட்ட போது ஏற்பட்ட உணர்வு இப்போதும் வருகிறது. பிரளயன் ஒரு அற்புதமான நாடகக் கலைஞர் என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு, இந்தப் பாடலை எழுதியவர் அவர்தான் என்று அறிந்தபோது மரியாதை கூடியது. அவருக்குள் மேலும் கவிதைகளும், ஒரு தொலைதூரத்து கிராமமும் இருக்கின்றன என்பதை இந்தப் பாடல் சொல்கிறது.

இந்தப் பாடல் பெண்மனதின் வரிகள். எழுதியதும், பாடியதும் ஆண்கள். ஆனாலும் கரைந்துருகும் ஒரு பெண்ணை நம்மால் பார்க்க முடிகிறது. நம்மையும் பெண்ணாக உணர முடிகிறது. அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு. கரிசல்குயில் கிருஷ்ணசாமி இதனைப் பாட, மேடைக்குக் கீழே பல்லாயிரக்கணக்கான மக்கள் உட்கார்ந்து தலையசைத்து, கண்கலங்கும் காட்சியை நான் பார்த்திருக்கிறேன். சிலிர்க்க வைக்கிறது. நீங்களும் கேளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

சமீபத்தில் இதே பாடல் களவாணி என்னும் படத்தில் வந்திருக்கிறது. பாடலைப் பாடியவர் வேறு யாரோ. ரசிக்கலாம்தான். ஆனால் கிருஷ்ணசாமியின் குரலில் இருந்த ஆன்மா இதில் இல்லை என்றுதான் சொல்வேன்.

களவாணி படத்தில் வந்த பாடலின் லிங்க் இது. அதையும் கேட்டுப் பாருங்கள்.

கருத்துகள்

31 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அருமையான பாடல் , நாட்டுப்புறப்பாட்டு என்றாலே அதில் ஒரு உயிர் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 2. கிராமிய மணம்....என் மனம் முழுவதும்...

  பதிலளிநீக்கு
 3. உள்ளத்தை உருக்கும் நல்ல பாட்டு....
  கரிசல்காட்டு மக்களின் கலாச்சர மூலமே கிராமிய பாடல் தான்...
  இன்று மக்களும் இல்லை... மனிதனேயமும் இல்லை...
  இயந்திர உலகில் எதையோ தேடி எங்கேயோ தொலைந்தோம்....

  பதிலளிநீக்கு
 4. The heart touching song throughout the day occupied the mind and heart.A great drama artist/actor/writer/play writer Pralayan has multi dimensional capacities.He is growing more and more like Habib Tanvir and Sabdhar Hashmi.He will be remembered one day as Tamil drama's diamond..His intelligence has reached a vast mass by "Kalavani" film song

  பதிலளிநீக்கு
 5. அருமை மாதவராஜ் சார். வார்த்தைகளும் குரலும் மனதில் அப்படியே உட்கார்ந்துவிட்டன. மற்றபாடல் எப்படியிருப்பினும் கேட்கத் தயாரில்லை. இந்த சு(சோகம் போதும். பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அற்புதமான குரல் .. வலி நிரம்பிய வரிகள்

  மிக்க நன்றி மாது சார் இந்தப் பாடலுக்காக

  பதிலளிநீக்கு
 7. அன்பு மாதவ்

  ஊரடங்கும் சாமத்துல நா...
  என்ற உயிரைப் பிசைந்தெடுக்கும் அந்தக் காவியப் பாடலை உங்களைப் போலவே நானும் எத்தனையோ மேடைகளில் கரிசல் குயில் பாட எதிரிருந்து கெட்டு எனது உள்ளம் பறிகொடுத்தவன் தான்.

  சொல்லப் போனால் நீங்கள் இப்போது பதிவில் இணைத்திருக்கும் பாடல் கூட சற்று வேகமான Beat-ல் இசையமைக்கப்பட்டிருப்பது.
  அவர் கலை இரவுகளில் பாடும்போது இன்னும் மெதுவாகச் சுழலும்
  அந்தச் சொற்கோலம்
  காதலின் பிழிவு, ஒடுக்குமுறைக்குக் கண்டனம், வாழ்க்கைக்கான கதறல்...என எல்லாமாக வரையப்பட்டு வந்து விழும்....

  அந்த வார்த்தையிலே நானிருக்கேன் வாக்கப்படக் காத்திருக்கேன் என்ற இடத்தில் கவிஞன்
  கம்பீர மகுடம் சூடத் தக்கவனாகிவிடுகிறான்....
  பிரளயனின் அற்புதப் பாடல் இது....

  இப்போது என்னத்துக்குக் களவாணியில் இப்படிச் செய்துவிட்டார்கள் என்ற கேள்வி எனது எல்லைக்கு அப்பாற்பட்டது...

  ஒரு நேயரின் இழப்பு அல்லது பரிதாப மறுப்பு என்று சொல்லிக் கொள்ளலாம்..

  பழைய பாடலை எங்கள் காதுகளுக்கு வழங்கிய பதிவுக்காக உங்களுக்கு நன்றி..

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 8. உலகத்துப் பாடகர்ககளையெல்லாம் ஒரு வரிசையில் நிறுத்தினாலும் நான் நான் கிருஷ்ணசாமியையும்,சுகந்தனையும் தான் தேடுவேன் அந்த இடத்தில் வேறு யாரையும் நிறுத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. இதிலும் கூட கொஞ்சம் ஆண்மா குறைகிறது.த மு எ ச ( தமுஎகச இல்லை) தொலைத்த ஆளுமைகளில் ஒரு கலைஞன் இந்த கரிசல் குயில். கம்மாக்கரையோரம் பாடிய கிருஷ்ணசாமி என்கிற தமிழ்செல்வனின் முன்னுரை இன்னும் எனக்கு ஒலித்துக்கொண்டே இருக்கிறது. என்ன நிகழ்ந்தது, என்ன நடக்கிறது.மாது இதோ உதிர்கிற என் ஒரு சொட்டுக் கண்ணீருக்கு பதில் எங்கே ஒளிந்திருக்கிறது.?.

  இன்னும் அந்த தூங்கா இரவுகள் வந்து அலைக்கழிக்கிறது.அதோ அந்த கவிஞன் ஷாஜகானின் கண்ணீர் கேலிக்குள்ளானதா மாது ?. அடக்க முடியவில்லை.அழுது தீர்ப்பதைத்தவிர வழியில்லை.

  பதிலளிநீக்கு
 9. அருமையான பகிர்வு சார்.. நானும் பல கலை இரவு மேடைகள்ல இவரோட பாட்டைக் கேட்டு அசந்திருக்கேன்..

  இவரோட “ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா?” பாட்டை எஸ்.ஜே.சூரியாவோட படத்துல கேட்டு அதிர்ச்சி அடைஞ்சிட்டேன்.. :(((

  பதிலளிநீக்கு
 10. ஆகா,
  சுள்ளி வித்து, வெள்ளி தீப்பெட்டி..வித‌வித‌மா பீடிக்க‌ட்டு.
  க‌ழ‌னியிலே க‌ளையெடுகையிலெ கிடைத்த‌ சோலி கூட‌
  அவ‌னின் சொத்தை ப‌ல்லாய்.
  என்னே....த‌ன்னுளுரிய‌, த‌கிக்கும், த‌விக்கும்,த‌னிமை க‌ல‌ந்த‌ க‌ரைய‌ல்.

  பதிலளிநீக்கு
 11. திருப்பரங்குன்றத்து 16 கால் மண்டபத்து அருகே போடப்பட்ட மேடையில் அந்தக்குயில் பாட ஷாஜகானின் கண்களில் கண்ணீர் கொப்பளிக்க, மாதவ்ஜி! ஆயிரத்துஐநூறு மைல்களுக்கு அப்பால் இருந்துகொண்டு உங்கள் இடுகையை கேட்டு விம்மிக்கொண்டு இருக்கிறென்.என்னகுரல்,என்ன குரல் ஐயா?ஆங்கிலத்தில் "டிம்பர்" என்பார்கள்.கரிசலைத்தவிர வெறு எவருக்கு அந்தக்குரல் வரும்?.பிரளயன் தவிர வேறு யாரால் இப்படி எழுத முடியும்?.இந்த அற்புதமான அனுபவத்தைத்தந்த உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்.(காமராஜின் ஆதங்கம் நியாயமாநனது. நான் அவரோடு உடன்படுகிறென்)......காஸ்யபன். .

  பதிலளிநீக்கு
 12. Very nice song. Thanks for sharing.

  BTW what happened to karisal kuzhu Krishnasamy?

  பதிலளிநீக்கு
 13. அடடா...

  மனசை உருக்குதே பாட்டு..

  பதிலளிநீக்கு
 14. அருமையான பகிர்வு மாது அண்ணா. நான் கரிசல் குயிலின் பாடல்களின் ரசிகன்.

  கலை இரவுகளில் ஒலிக்கும் 'ஆசை எனக்கொரு ஆசை' இவர் பாடியதுதானே அண்ணா?

  பதிலளிநீக்கு
 15. ஆஹா.. உங்கள் பக்கத்தை இன்று முழுவதும் மூடவேயில்லை. தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. பல வருடங்கள் பின்னோக்கி சென்றுவிட்டது மனசு . மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
 17. மனசை சுண்டுகிற வரிகளும்,குரலும் மாது.

  ஆச்சர்யமான ஒரு விஷயம்,நேற்றிரவு ஒரு கவிதை எழுதி அதை ஆ.வி.க்கும் நம் தளத்தில் பதியவென கண்ணனுக்கும் அனுப்பி தந்தேன்.இன்னும் அதை பதியவில்லை என்றாலும் இங்கு அதை பகிரனும் போலான ஒரு இளக்கம்.இந்த பாட்டில் வரும் வரியொன்று இந்த கவிதையிலும் இருக்கு மக்கா.பாருங்களேன்...

  ***

  மழையில் உடையும் சுவர்
  =========================

  முக்கா முக்கா
  மூணு தடவையடித்த
  சாட் பூட் த்ரி கைகளில்

  வழிய வழிய எழுதிய
  கள்ளிப்பால் பெயரிலிருந்து
  உருக்கொண்ட கொடுக்காப்பிலி

  மஞ்சனத்தி நாக்கு சுழட்டி
  என்ன மாமா என்றது.

  ஊறிப் பொதும்பிய
  மழைச்சுவர் உடைத்து
  என்ன புள்ள என்றேன்.

  ***

  திரை இசை கேட்கவில்லை.இதுவே போதும் போல் இருக்கு.

  பதிலளிநீக்கு
 18. நண்பர் மாதவ்,
  மிக நல்ல பதிவு! நான் முதல் முறையாக கரிசலின் குரல் கேட்கிறேன். மனசைப் பிழிவது கரிசலின் குரல் என்றால் உயிரை உருக்குவது அந்த கவிஞனின் வரிகள். அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
  பார்த்திபன்

  பதிலளிநீக்கு
 19. வணக்கம். தேனியிலிருந்தபோது, எந்த ஊரில் (த.மு.எ.ச.)கலை இரவு நடந்தாலும் நானும் என் நண்பர்களும் தேடித் தேடி ஓடுவோம். முக்கியமான இரண்டு காரணங்கள் ஒன்று, கரிசல் கிருஷ்ணசாமி, இன்னொன்று பாரதி கிருஷ்ணகுமாரின் உரைவீச்சு. சில மாதங்களுக்கு முன்னால் மக்கள் தொலைக்காட்சியில் புதிய கோணங்கிகள் நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமி பாடிக்கொண்டிருந்தார். மனிதர் கொஞ்சம் ஒடுங்கிப் போனது போல் தெரிந்தாலும் அதே குரல். மனசைப் பிடித்து உலுக்குகிற வரிகளுக்கு உயிர் கொடுக்க அவர் குரலால் மட்டும்தான் முடியும். களவாணி படத்தில் கரிசல்கிருஷ்ணசாமியின் குரலையே பயன்படுத்தியிருந்திருக்கலாம். பல பழைய நினைவுகளைக் கிளறிவிட்ட அற்புதமான பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. மாதவராஜ் சார், கரிசல் குயிலின் பாடல்கள் ஒலித் தட்டு எதுவும் உங்கக்கிட்ட இருக்கா?

  பதிலளிநீக்கு
 21. அய்யா, அழுகை ... பாடியவர் அற்புதமான மனிதர்... இவரோட மற்ற பாடல்களை கேட்க முடியுமா..

  பதிலளிநீக்கு
 22. கல்லுரி நாட்களின் நினைவுகளையும் கொண்டுவரும் கிருஷ்ணசாமியின் குரல். மாணவர் இயக்கத்தில் பணியாற்றிய காலம் அசைந்தாடுகிறது நன்றி மாது

  பதிலளிநீக்கு
 23. தோழா இபோதுதான் பாடலை கேட்டேன். அந்த குரல் என்னவோ செய்கிறது. இந்த பாடலை அவரின் அனுமதியோடுதான் படத்தில் கொண்டுவந்துருப்பார்களா?
  அவரையே பாடவைத்திருக்கலாம் அந்த பாடலின் ஆன்மா நிலைத்திருக்கும்.
  பிரளயன் தோழரின் பாடலா! ஆச்சர்யமும்,மகிழ்ச்சியும் கலந்து கட்டி அடிக்கிறது!

  பதிலளிநீக்கு
 24. //கரிசல் குயிலின் பாடல்கள் ஒலித் தட்டு எதுவும் உங்கக்கிட்ட இருக்கா?//

  http://www.keetru.com/audio/karisal_krishnasamy/krishnasamy.php

  அவருடைய பாடல்கள் சில இங்கே இருந்தன. என்னுடைய நண்பர்களுக்கெல்லாம் இதனை பகிர்ந்திருக்கிறேன்.
  தற்போது அந்த வலைபக்கத்தில் ஏதோ பிழை இருக்கிறது போலும்.

  பதிலளிநீக்கு
 25. கரிசல் கிருஷ்ணசாமியின் பல பாடல்களை கேட்கிறபோதெல்லாம் கண்ணில் நீரை வரவழைக்கும்.
  நீங்கள் பகிர்ந்துள்ள பாடலும் ஒன்று.

  என் மனதுக்குள் எப்பொழுதும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் மற்றொரு பாடல் - "இலைகள் அழுத ஒரு மழை இரவு..."

  பதிலளிநீக்கு
 26. எளிமையான ஆனால் வலிமையான மண்ணின் வாசத்தோடு கூடிய பிரளயனின் அந்த வரிகள். சாதியக் கட்டுமானங்களின் சங்கிலியில் பிணைந்து கிடக்கும் கிராமத்து வட்டத்துக்குள்ளும் பாறை வெடித்து கிளம்பும் ஒரு காட்டுச்செடி போல அந்த காதல்.. என்ன செய்து தொலைக்க? இப்படி ராப்பூராவும் உயிரை அறுக்கும் குரலில் கதறுவதைத்தவிர...? மனதின் ஒரு மூலையில் 'நீ எப்படியும் வந்துடுவ மச்சான்' எனற நம்பிக்கையை கை நழுவாமல் பிடித்துக்கொண்டு...? இதயத்தை கிழிக்கும் உயிர்வாதையுடன் அந்த ஒற்றை குரல் கிருஷ்ணசாமிக்கு மட்டுமே ஆனது. மீண்டும் ஒருவரோ எத்தனை பேரோ பாடினாலும் பாவிமக கிருஷ்ணசாமி மட்டுமே நம் மனசில் இரண்டு கையையும் விரித்தபடி கண்ணில் கண்ணீரோடு 'வா மச்சான் எப்போ வருவே' என்ற கேள்வியோடு நம்மை பார்க்கின்றான், அவன் பார்வையின் தீவிரம் தாங்கமுடியாதபடிக்கு, வெளியே கொட்டிவிடவும் பயந்தபடி அதில் தொக்கி நிற்கும் உள்ளார்ந்த அந்த பயங்கரக் கேள்விக்கு பதில் சொல்லமுடியாத படிக்கு நம் தலை கவிழ்கின்றது...நம் கண்களிலும் நீர் தாரை தாரையாய் கொட்டுகின்றது...கட்டுப்படுத்த முடியாதபடி...
  ss குமரனுக்கு ஒரு கேள்வி: எளிமையான அந்தப்பாடலின் உயிர் நீங்கள் போட்ட பாட்டில் இருக்கிறதா குமரன்? குமரனுக்கும் பிறருக்கும் வேண்டுகோள் ; இதுபோன்ற பாடல்களை அப்படியே பயன்படுத்துங்கள்...நீங்கள் ஒன்றும் தாழ்ந்துபோக மாட்டீர்கள்...
  இக்பால்

  பதிலளிநீக்கு
 27. JDK!
  உண்மைதான். நாட்டுப்புறப்பாடலில் இந்த மண்ணின் ஆன்மா இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

  ராசராசசோழன்!
  அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

  உதயதேவன்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  விமலாவித்யா!
  உங்களால்தான் இந்தப் பதிவே எழுதினேன். பிரளயனின் வரிகள் உருக வைக்கத்தான் செய்கின்றன. நன்றி.

  வானம்பாடிகள்!
  யான் பெற்ற இன்பம் (சுகம்) வையகம் பெறட்டும். நன்றி.

  நேசமித்ரன்!
  ரசித்ததுக்கு நன்றி கவிஞரே!

  பதிலளிநீக்கு
 28. எஸ்.வி.வி!
  உண்மைதான் நீங்கள் சொல்வது. தபேலா மட்டும் பின்னணியாய் இருக்க கரிசல் பாடும்போது எவ்வளவு உயிர் ததும்பும்!

  காமராஜ்!
  ஆம் தோழனே, இந்தப் பாடலைக் கேட்கும்போது, இரவெல்லாம் விழித்திருந்து கேட்ட காலங்களெல்லாம் திரும்ப வந்து அழவைக்கின்றன.

  முகிலன்!
  நானும்தான்....!

  வாசன்!
  உங்களது வார்த்தைகள், பாடலை முழுக்க உள்வாங்கி வந்திருக்கின்றன. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  சேது!
  மிக்க நன்றி. கரிசல், அமைதியாய் இருக்கிறார். எப்போதாவது சில கூட்டங்களில் பார்க்க முடிகிறது. அவரைப்பற்றி தனிப்பதிவு எழுத வேண்டுமென இருக்கிறேன்.

  ஈரோடு கதிர்!
  இதற்கு முன்னர் தாங்கள் கேட்டதில்லையா...!

  செ.சரவணக்குமார்!
  கலை இலக்கிய இரவுகள் எல்லாம் பார்த்திருக்கிறீர்களா தம்பி...!

  கையேடு!
  ஆஹா... ரொம்ப நன்றி!

  பனித்துளி சங்கர்!
  எல்லோருக்கும்தான்.....:-))))

  பதிலளிநீக்கு
 29. பா.ரா!
  மக்கா... இதுகுறித்து உடனே உங்களுக்கு ஒரு மெயில் எழுத வேண்டுமென நினைத்து, வழக்கம்போல் மறந்தும் விட்டேன். எனக்கும் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

  பார்த்திபன்!
  மிக்க நன்றி தங்கள் ரசனைக்கு.!

  பாலுசத்யா!
  ஆமாம், அவரின் குரல் என்னவோ செய்கிறது அல்லவா!

  முகிலன்!
  ஓலித்தட்டு இல்லை. அவரது சில பாடல்கள் என் கம்யூட்டரில் இருக்கின்றன. அவ்வப்போது பதிவிடலாம் என இருக்கிறேன். உங்களுக்கு சி.டி வேண்டுமானால் சொல்லுங்கள். தெரிந்தவர்களிடம் வாங்கி அனுப்புகிறேன்.

  நட்புடன் ரமேஷ்!
  நம் எல்லோரையும், ஆட்டுவித்ததில், ஆட்டுவிப்பதில் அவரது குரலுக்கும் ஒரு பங்கு உண்டுதானே?

  ரவிக்குமார்!
  பிரளயனின் பாடல்தான் அது. நம்மவர்களிடம் எத்தனை எத்தனையோ சுரங்கங்கள் இருக்கின்றன தோழா!

  யாநிலவின் தந்தை!
  அவருடைய பாடல்கள் சில எனது கம்யூட்டரில் இருக்கின்றன. விரைவில் பதிவிடுகிறேன். அடுத்து.... நீங்கள் கேட்ட பாட்டுத்தான்!

  பதிலளிநீக்கு
 30. மக்கள் தொலைக்காட்சியில் இவருடைய நிகழ்வைத்தான் பார்த்தேன் என்று நினைக்கிறேன்.தேடிக்கொண்டு வந்தபோது இத்தளம் கிடைத்தது. மற்ற பாடல்களை வலையேற்றுங்கள் தயவு செய்து.

  மயிலும் குயிலும் மொழிபழகும் பறவைகள் என்று ஒரு பாடல் நேற்று கேட்டது.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!