மின்சாரம் போன மழையிரவில் மெழுகுவர்த்தி ஏற்றினேன். இருந்த இருட்டெல்லாம் திரண்டு சுவற்றில் பெரும் ஆகிருதியென நிழலாடியது. என் தலையை விட அதன் கை பெரிதாய் இருந்தது. நான் அசைந்த போதெல்லாம் அதுவும் வீடு முழுக்க அசைந்தது. அருகில் போனேன். மேலும் அது பெரியதாகியது. தயங்கியபடி தொட்டுத் தடவினேன். பூதமென ஸ்பரிசம் தட்டுப்பட்டது. மயிர் கூச்செறிய சிலிர்த்துப் போய் வசமிழந்தேன். என்னை அப்படியே எடுத்து விழுங்கியது அது.
புரியவில்லை மாதவராஜ்...
பதிலளிநீக்குநன்றி மாதவராஜ்... உங்கள் வருகையை சற்றும் எதிர்பார்கவில்லை என் இணையத்தில்... உண்மையாக கதை நன்றாக இருகின்றதா...
பதிலளிநீக்குஇன்னும் நிறைய எழுதலாமே இதைப் பற்றி!
பதிலளிநீக்குநல்லா இருக்கு மாது சார்.
பதிலளிநீக்குசின்ன வயசுல நிழலை பாக்கக் கூடாதுன்னு பய முடுத்துவாங்க .இருந்தாலும் அதன் அசைவை பார்ப்பது ஒரு அழகிய விளையாட்டுத்தான் .
பதிலளிநீக்குசில சமயம் நிழலென நாம் நினைப்பவை நம்மையே தின்றுவிடும் .இல்லையா?
மின்சாரமற்ற சின்ன வயசு ஞாபகம் வந்து போனதுங்க :)
பதிலளிநீக்குஒரு படிமத்தை விரித்துக் கொண்டே போகையில் அது நம்மை உள்ளிழுத்து கொள்வது கடற்கரையில் கால் கீழ் நழுவும் மணல் சுகம் .. அலை திரும்பியதும் கொஞ்சம் புதைந்து
பதிலளிநீக்குநிழற்காமம் நிகழ்காமம் !
:)
அருமை மாது.
பதிலளிநீக்குதலைப்பு :-)
தயவு செய்து நீங்கள் உங்கள் வீட்டில் INVENTOR பொருத்துங்கள்!!
பதிலளிநீக்குஅருமையான பதிவு!!!
இப்ப புரியுதுங்க...
பதிலளிநீக்குமின்சாரமற்ற சின்ன வயசு ஞாபகம் வந்து போனதுங்க.
பதிலளிநீக்குநல்லா இருக்கு மாது சார்.
ராசராச்சோழன்!
பதிலளிநீக்குகடைசியில் புரிந்துவிட்டதா, மிக்க நன்றி.
அன்புடன் அருணா!
ஆமாம், இன்னும் எழுதியிருக்கலாம்.
இராமசாமிகண்ணன்!
மிக்க நன்றி, வருகைக்கும், பகிர்வுக்கும்.
பத்மா!
ஆமாம். சின்ன வயதின் அற்புதங்களைச் சுமந்துகொண்டேத் திரியவில்லையென்றால், வாழ்க்கை அதன் வனப்பை இழந்துவிடும்.
அசோக்!
தாங்கள் மின்சாரம் வந்திருக்கிறீர்கள். நன்றி.
நேசமித்ரன்!
அடிமண்ணைத் தொட்டுப் பார்க்காமல் விட மாட்டீர்கள் போல!
பா.ரா!
பதிலளிநீக்குமிக்க நன்றி மக்கா. ஆனால் உங்களைப் போல வராது....!
பொன்ராஜ்!
குசும்பா.... நன்றி.
தலைவன்!
மிக்க நன்றி.
சே.குமார்!
வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் மாதவராஜ்.
பதிலளிநீக்குஅபியின் "ராப் பிச்சைக் கார"னுக்குப் பிறகு காமம் குறித்த மிக நல்ல பதிவு
இரா.எட்வின்
நல்ல பதிவு..
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்
www.narumugai.com