அங்காடித்தெரு படத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கும் சாலையோரத்தில் படுத்துறங்கும் மனிதக் காட்சிகளை மறக்க முடியாது. வாழ்வின் விளிம்பில் தொங்கிக்கொண்டு இருக்கும் அம்மனிதர்களின் உலகம் பெருந்துயரம் பேசுபவை. எங்கிருந்து துரத்தப்பட்டு, இங்கு வந்திருக்கிறார்கள் என்னும் கேள்வியை இந்தச் சமூகம் தொலைத்துவிட்டு தலைதெறிக்க எங்கோ ஓடிக்கொண்டு இருக்கிறது. அம்மனிதர்களின் ஒரு மழை இரவை தன் கண்ணீர்த்துளிகளால் கவிஞர் நவகவி எழுத, நம் கரிசல்குயில் கிருஷ்ணசாமி அதைப் பாடியிருந்தார். பாடகனின் அடிவயிற்றிலிருந்து எழும்பும் அழைப்பை எளிதில் கடந்துவிட முடியாது. கேட்கும் போதெல்லாம் தொண்டை அடைத்து, விம்மி அழ வைக்கிறது.
|
தலைப்புக்கு மட்டுமே தனியாக ஒரு பூங்கொத்து!
பதிலளிநீக்குமாதவ்ஜி! என் பேரன் தமிழ்த்தொலைக்காட்சியைப் பார்த்து ரசிப்பான். எழுத்துப்போடும் போது என்ன சினிமா? என்று கேட்பான். நாங்கள் ஒன்றும் ஆப்பிரிக்காவில் வசிக்கவில்லை.இந்தியவிற்குள் நாகபுரியில் தான்வசிக்கிறோம்.செம்மொழி மாநாடு நடத்துங்கள் ஐயா! நவகவியின் வரிக்கு கரிசலின் குரல் ஊனை உருக்குகிறது. உமக்காவது காமராஜ்,அல்லது த.மு.எ.ச நண்பர்கள் இருப்பார்கள் ஆறுதல் கூற.தமிழ் தெரியாத வர்கள் மத்தியில் மாட்டிக்கொண்டு அழக்கூட முடியாமல் தவிக்கிறேன் ஐயா!.....காஸ்யபன்.
பதிலளிநீக்குKannil irangi varum neer vizhuthu -- Wow. Thanks for sharing this.
பதிலளிநீக்குHeared Karisal Kuzhu's songs live 25 years ago in student conferences. Still remembering few lines of the following songs:
1. Vaanathuch chandiran manmadan inthiran vazhkindra boomiyada, ingu ...
2. Ulaginai azhikkum uthame vandam, vendum samathanam.
Hope these songs are still remembered.
கிருஷ்ணசாமியின் குரலில் எப்பொழுது கேட்டாலும் அழ வைக்கிற பாடல் இது.
பதிலளிநீக்குஅம்பத்தூரில் பாரதி கலைக்குழுவைச்சேர்ந்த சுதர்சனம் என்கிற தோழரை சந்திக்கும் நேரத்திலெல்லாம் இந்த பாடலை ஒரு முறை பாட சொல்லி கேட்பது என் வழக்கம்.
அங்காடி தெரு படத்தை பார்க்கையிலும் இந்த பாடல்தான் என் காதுகளில் ரீங்காரமிட்டது.
இந்த பாடலை மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றி.
இந்த பாடலின் தொடர்புடைய என்னுடைய கவிதை இங்கே......
http://yaanilaavin-thandhai.blogspot.com/2009/11/blog-post.html
தோழரே இந்தப் பாடல் மனதை உருக்குகிறது... நம்மை விம்மி அழச்செய்துவிடலாம் அசெளகரியமான ஒரு உண்மையை, கவித்துவமாகக் கூறும் அந்தப் பாடல் ஒரு பெரிய வெற்றியைச் சாதித்துள்ளதாக எனக்குத் தோன்றவில்லை.
பதிலளிநீக்குஆனால் ”இந்த நிலை மாறும்” என்ற நம்பிக்கையை விதைக்காத ஒரு பாடலை ஒரு சிறந்த கவிதையாக என்னால் சொல்ல முடியவில்லை.
இன்னொன்று, பாடலின் மெட்டு ஒரு ரசிகனுள் எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சோதிக்காமல்.. அழகியல் சார்ந்தே கரிசல் இந்த மெட்டை உபயோகித்திருக்கிறார். அழகியல் பேச எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். அதில் ஒன்றாக இதையும் சேர்க்கலாம்.
சாலையோர மனிதர்கள் வாழ்வை படம்பிடித்த வரிகள்.
பதிலளிநீக்குதோழர் பாடல் கேட்க இனிமையாக உள்ளது. தபேலாவின் ஒலியும், பாடலில் மெட்டும் தலையாட்டவைக்கிறது. முதலில் இது இசை அதற்கடுத்தாற்போல்தான் அதன் கருத்தாக்கம். அந்தவகையில் இரண்டிலுமே சிறந்தபாடல் பாடலோடு லயித்து ஒன்றமுடிகிறது. சாலையோர மக்கள் குறித்து அவர்களருகேயே சென்று பாடப்படுவதே அவர்களுக்கு ந்ம்பிக்கை விதைப்பதற்க்காகதானே அதை சாதிக்கும் இந்தபாடல்.
பதிலளிநீக்குஇன்று டிவியை போட்டாலே நாயகர்களின் தொடக்கப்பாடல் ”உலகை புரட்ட உன்னால் முடியும்” என்ற தொனியில்தான் இருக்கிறது அதன் பயன்தான் என்ன?
Dear Comrade, I am very happy to hear the song "Ilaikal Azhutha" in
பதிலளிநீக்குyour theeratha pakkangal.It is the
great service to propagate to the
world wide Tamilians.
Thank you a lot. Yours comrade
K.Ganesan
Kanyakumari.