பூனைகள்

பூனைகளுக்கு எலியைப் பிடித்துச் சாப்பிட வேண்டும். அவைகளுக்கு எலியைப் பிடிக்க ஒரு யோசனைத் தோன்றியது. உள்ளே பார்த்தபோது வலை இல்லை. வெளியே போய் வலையைத் தேடிப்போகும்போது ஒரு புட்பால் கிரவுண்டைப் பார்த்தன. அவைகள் அங்கேயிருந்த கோல்வலையை கடித்துக் கிழித்து எடுத்தன. அந்த வலையை வாயில் கவ்விக்கொண்டு நடக்கும்போது ஒரு எலியைப் பார்த்தன. எலியை நோக்கி அவை வலையை வீசின. ஆனால் அவைகளே அந்த வலையில் சிக்கிக் கொண்டன.

(மாத்ருபூமி வாராந்திரப் பதிப்பு 1997 ஜூலை 20 வெளிவந்தது. அப்போது, இதை எழுதிய அபிமன்யுவிற்கு வயது எட்டு.)

 

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. குறுகிய வரிகளில் ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றீர்கள்.பகிர்வுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 2. பல அர்த்தங்கள் தரும் புனைவு!
  என்னேரம் அவர் பெரிய எழுத்தாளராயிருக்கனுமே!

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவு!!!

  இதில் யார் பூனை??? யார் எலி????

  பதிலளிநீக்கு
 4. அன்பு மாதவராஜ்,

  உலகத்தின் மிகச்சிறிய சிறுகதை ஒன்றை ஆண்டன் செகாவ் எழுதினாராம்... அந்த கதை இப்படித்தான் ஆரம்பித்து முடிகிறது!
  “ஒரு சின்ன மீனை ஒரு பெரிய மீன் முழுங்க வந்ததாம், அப்போ அந்த சின்ன மீனு, நீ இவ்வளோ பெருசா இருக்கியா, என்னப் போய் சாப்பிடுறியேன்னு கேட்டுச்சாம், உடனே பெரிய மீனு, சரி நான் சாப்பிடல, நீ என்ன சாப்பிடுன்னு சொல்லிச்சாம்.”
  அழகான கதை... குழந்தைகளின் விவரிப்பில் விரியும் உலகம், நாம் காணும் உலகை விட அதிக மடக்குகள் உடையது.

  அன்பும், வாழ்த்தும்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 5. நம்மளை ‌விட குழந்தைகள் சிறப்பாக சிந்திக்கிறார்கள். எழுதுகிறார்கள். நாம்தான் கருத்து சொல்லனும். இந்த இசத்தில் சொல்லனும். இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும் எ‌ன்று பார்த்து பார்த்து எழு‌தி எல்லாமே மொக்கையாக போய்விடுகிறது


  ராகவன் அந்தக்கதை பகிர்வுக்கு நன்றி. :) எனக்கு
  அசோகமித்திரனின் ரிக்.ஷா கதை நினைவுக்கு வ்ருகிறது

  http://nvmonline.blogspot.com/2009/11/blog-post_7725.html

  பதிலளிநீக்கு
 6. 8வயதில் எழுதியதென்பது வியப்பினை தருகிறது...

  பதிலளிநீக்கு
 7. பூனை அழகாகாகப் புணையப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. பிரவின்குமார்!
  சிந்திக்க வைத்தது அபிமன்யூ. நன்றி.


  வால்பையன்!
  அப்போதே எழுத்தாளராய்ட்டார். ஆனால் அவரைப்பற்றி இப்போது ஒன்றும் தெரியவில்லை.

  பொன்ராஜ்!
  அது அவரவர் புரிதலுக்கு.


  விமலவித்யா!
  மிக்க நன்றி தோழரே.

  பதிலளிநீக்கு
 9. ராகவன்!
  அந்தக்கதை அருமையான ஒன்று. இன்றைய சுதந்திரச் சந்தையில் பெரிய நாடுகளோடு போட்டி போடும் வளரும் நாடுகளைச் சுட்டிக்காட்டி பலரது அரங்கப் பெச்சுக்களில் கேட்டு இருக்கிறேன்.


  விநாயக முருகன்!
  //இந்த இசத்தில் சொல்லனும். இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும் எ‌ன்று பார்த்து பார்த்து எழு‌தி எல்லாமே மொக்கையாக போய்விடுகிறது//
  :-)))))


  க.பாலாசி!
  ஆமாம்..!


  மதுரை சரவணன்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!