ஒளி வீச வாழ்ந்திருக்கிறீர்கள் தோழர் டபிள்யூ.ஆர்.வி!

ன் டி.வியில், ‘போரூர் ஏரியில் மீட்கப்பட்ட உடல் காணாமல் போன உ.ரா.வரதாரசனா?’ என்ற கேள்வியோடு ஞாயிற்றுக்கிழமை செய்தி வந்து கொண்டு இருந்தபோது நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக் எழுதிய ‘என் பெயர் சிவப்பு’ என்னும் துருக்கிய நாவல் என் கையில் இருந்தது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிவந்த புத்தகத்தை அன்றைக்குத்தானா நான் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்! ஒன்றுபோல சில நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள் வாழ்வில் குறுக்கிடுகிற அபூர்வத்தை ரசிக்கிற மனநிலை அப்போது இல்லை. “நான் இப்போது ஒரு பிரேதம் மட்டும்தான். கிணற்றின் ஆழத்தில் கிடக்கும் ஒரு உடல்” என்னும் நுண்ணோவியன் எஃபெண்டியின் வரிகளோடுதான் அந்த நாவல் ஆரம்பித்திருந்தது. இரண்டு அத்தியாயங்கள் வரை படித்து முடித்திருந்த நான், அதற்குப் பிறகு தொடர முடியவில்லை. நாற்பது நாட்களுக்கு முன்பு, “பார்ப்போம் தோழர்” என்று கைகுலுக்கி விடைபெற்ற தோழர் டபிள்யூ.ஆர்.வியா! தாங்க முடியாமல் வீட்டிற்கு வெளியே வந்து, கொஞ்ச தூரத்தில் தெரிந்த தண்டவாளப் பாதையை வெறித்துக் கொண்டு இருந்தேன். கண்களில் நீர்த்திரையிட்டது.

 PENTAX Image

ந்த ஜனவரி 10ம் தேதி டபிள்யூ.ஆர்.வரதராஜன் அவர்களோடு விருதுநகர் பர்மா கடையில் மதிய உணவு சாப்பிட்டேன். ”இந்த ஓட்டலில் அயிரை மீன் குழம்பு நன்றாக இருக்கும்” என்றதும், ”அப்படியா, சாப்பிடுவோமே” என ஆசைப்பட்டார். ஓட்டலில் அயிரை மீன் குழம்பு  தயார் செய்திருக்கவில்லை. வேறு சிலவற்றை வாங்கிச் சாப்பிட்டோம். மேஜையில் அருகே எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சோலைமாணிக்கமும், நேர் எதிரே, எப்போதும் அணிந்திருக்கிற அந்த முரட்டு கதராடையில் அவரும் உட்கார்ந்திருந்தோம். எங்கள் வங்கி நிர்வாகத்தை எதிர்த்து வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்துச் சங்கங்களின் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு கடைசி நேரத்தில் ரத்தாகியிருந்தது.  உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க முடியாததால் தலைமை தாங்குவதற்கு தோழர் டபிள்யூ.ஆர்.வி வந்திருந்தார். அவரோடு சாவகாசமாக உட்கார்ந்து பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தோம்.

23 ஆண்டுகளாக அவரது எழுத்து, பேச்சு, நடவடிக்கைகளால் ஏற்பட்ட மரியாதையினால் வந்த உணர்வாக இருக்கலாம். இந்த அமைப்பினை மாற்ற வேண்டும் என்னும் சிந்தனைகளாலான உருவமாக அவர் எனக்குத் தெரிந்ததால் ஏற்பட்ட தாக்கமாக இருக்கலாம்.  மிக அருகாமையில் அவருடன் உட்கார்ந்து பேசுகிற பெருமை எனக்கு அப்போது இருந்தது உண்மை. ‘டபிள்யூ.ஆர்.விதானே இவர்?’ என்று குழந்தை மாதிரி ஆச்சரியப்பட்டது உண்மை. இன்றும் அதே ‘டபிள்யூ.ஆர்.விதானே இவர்?’என்ற கேள்வி வருகிறது அதிர்ச்சியுடன்.

1986ம் ஆண்டு ஒருநாள் காலை 5.30 மணிக்கு நானும், எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராயிருந்த பாரதி கிருஷ்ணகுமாரும் டபிள்யூ.ஆர்.வியைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றபோது எனக்கு இப்படியெல்லாம் பிரமிப்பு இருக்கவில்லை. கிருஷ்ணகுமாருக்கு இருந்தது. ”இந்த நேரத்தில் பார்க்க முடியாவிட்டால், பிறகு அவரைப் பார்க்க ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு பிஸியாக இருப்பார்” என்றார் அவர். கிருஷ்ணகுமாரோடு எனது சகவாசம் அப்போது நட்பு ரீதியாக இருந்ததே தவிர இயக்க ரீதியாக இருக்கவில்லை “இந்த நேரத்தில் மனுஷன் முழிச்சிருப்பாரா?” என்று மட்டும்தான் அப்போது. தோன்றியது. அவரது துணைவியார் எங்கள் அழைப்புக்கு வெளியே வந்தார்கள். கிருஷ்ணகுமார்  “டபிள்யூ.ஆர்.வியைப் பாக்கணும். சாத்தூர்லயிருந்து வந்திருக்கோம்” என்றார். “நைட்டுல ஒன்றரை மணிக்கு மேலத்தான் வந்தாங்க.ம்... போய்ப் பாருங்க” என்றார்கள். மாடிப்படிகளில் ஏறும்போது அந்த ‘ம்’ வதைத்தது. மேலே உள்ள அறையில் டபிள்யூ.ஆர்.வி உட்கார்ந்து பேப்பர்களைப் படித்துக்கொண்டு இருந்தார். களைப்பற்ற, தெளிவான உற்சாகமாயிருந்தார். “வாங்க கிருஷ்ணகுமார், வாங்க தோழர்” என உட்காரச் சொன்னார். எல்லா தினசரிகளும் அவரது மேசையிலிருந்தன. சங்கத்தின் பிரச்சினையொன்றை கிருஷ்ணகுமார் பேசினார். டபிள்யூ.ஆர்.வி உன்னிப்பாகக் கேட்டு விவாதித்தார். இறுதியாக ”நிர்வாகத்திற்கு இப்படி ஒரு கடிதம் எழுதுவோம், பிறகு லேபர் கமிஷனரிடம் செல்வோம்” என்று அவரே கடிதமும் எழுதிக்கொடுத்தார். மாடியிலிருந்து இறங்கும்போது எனக்கு பிரமிப்பும், மதிப்பும் உருவாகி இருந்தது.

கிருஷ்ணகுமார் டபிள்யூ.ஆர்.வியைப் பற்றி நிறைய சொன்னார். ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கத்தில் அவரது நடத்திய போராட்டங்கள் பற்றி, கூட பணிபுரிந்த விதவைப்பெண்ணை மறுமணம் செய்து கொண்டதையும், வங்கிப்பணியை விட்டுவிட்டு முழுக்க கட்சி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதையும், சி.ஐ.டி.யூவில் முக்கிய முன்னணித் தலைவராய் உருவாகிக்கொண்டு இருப்பதையும் தொடர்ந்த சிலதினங்களில் தெரிந்து கொண்டேன். ஒரு அரசியல் வகுப்பில் டபிள்யூ.ஆர்.வி ஆசிரியராக வந்திருந்து மூன்று மணிநேரத்துக்கு பாடம் எடுத்தார். கம்பீரமாகவும், கணீரென்றும் குரல் இருந்தது. கடினமானத் தலைப்பாக இருந்தாலும், அவற்றுக்கு ஊடே இலக்கிய நயங்களோடும் அவரால் புரியவைக்க முடிந்தது. எங்கள் சங்க மாநாட்டில் சிறப்புரையாற்ற சாத்தூருக்கு வந்தது, சென்னையில் எங்களுக்காக ரிசர்வ் வங்கி, நபார்டு அலுவலகங்களில் பேச்சுவார்த்தை நடத்த கூடவே வந்தது என மேலும் சில சந்திப்புகள் நடக்க, அவர் மீதான மரியாதை கூடிக்கொண்டே இருந்தது. எப்போதும் தீவீரமாக இயங்குகிற மனிதராகவே இருந்தார்.

சி.ஐ.டி.யூவின அகில இந்தியத் தலைவர்களில் ஒருவராகி அவர் டெல்லியில் இருந்தபோது எங்கள் அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்கத்திற்கும் பல நேரங்களில் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அந்த சமயங்களில் சங்கத்தின் பொதுச்செயலாளராக நான் சென்னையில், டெல்லியில், கல்கத்தாவில் நடந்த சில முக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். விவாதங்கள், முரண்பாடுகள் எல்லாவற்றுக்கும் பிறகு டபிள்யூ.ஆர்.வி  அவற்றைத் தொகுத்து தெளிவான பாதைகள் அமைத்துக் கொடுப்பார். எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் புரிதலையும் ஒருமித்த உணர்வையும் ஏற்படுத்துவார். அவரையேப் பார்த்துக் கொண்டு இருப்பேன். முழுவதுமாக அந்தப் பிரச்சினைகளுக்குள் தன்னைக் கரைத்துக்கொண்டு அவரது குரல் ஒலித்துக்கொண்டு இருக்கும். மற்றவர்களெல்லாம் வேறு பாஷைகள் பேசுகிறவர்களாயிருக்க, அந்த சமயங்களில் என்னைப் பார்த்ததும், ஒரு நெருக்கமான புன்னகையோடு கைகளைப் பற்றி “எப்படியிருக்கீங்க மாதவராஜ்! Bank workers unity பத்திரிகையில் உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறேன். எழுதுவதை நிறுத்திராதீங்க” என்பார். அதெல்லாம் அபூர்வமானவை.

அவர் எழுதுவதை நிறுத்தியதில்லை. தொடர்ந்து அவரைப் படித்துக்கொண்டு இருந்தேன். கட்சியின் அறிக்கைகள், முக்கியப் பிரச்சினைகளில் தத்துவார்த்த நிலைபாடுகள், அவதூறுகளுக்கு பதில் என எழுதிக்கொண்டே இருந்தார். அவரது மெயில் லிஸ்டில் நானும் இருந்தேன். சுற்றுப்பயண விபரங்கள், கட்டுரைகள், விவாதங்கள் குறித்த கடிதங்கள் அவ்வப்போது வந்துகொண்டு இருந்தன. இந்த எழுத்துக்கள் என்ன விதமானவை. எங்கேயோ இருந்து எழுதும் மனிதரை நம் அருகில் எப்போதும் இருப்பவராக பாவிக்கவைத்து விடுகிறது. அப்படித்தான் இருந்தார் அவர். என்னைப் போலவே பல ஆயிரக்கணக்கான தோழர்களுக்கும் நெருக்கமானவராகத்தானே இருந்திருப்பார். இதுபோன்று அவரோடு பழகிய காலங்களையும், அனுபவங்களையும் அந்த தோழர்களும் சுமந்து கொண்டுதானே இருந்திருப்பார்கள்!

 

விருதுநகரில் அன்று நான்கு மணிநேரத்துக்கும் மேலே அவரோடு கூடவே இருக்க முடிந்த கணங்களை இந்த நேரத்தில் திரும்பத் திரும்ப வலிய இழுத்துப் பார்க்கிறேன். சமீபகாலமாக நிர்வாகங்கள் எப்படி கண்மூடித்தனமான தாக்குதல்களில் இறங்குகின்றன என்பதை விளக்கிப் பேசிக்கொண்டு இருந்த அவரது முகத்தில் சோர்வு இருந்ததாகப் படுகிறது. இடையிடையே அவரது கவனம் கலைந்து வேறெங்கோ நிலைத்தது போலவும் இருக்கிறது. சோலைமாணிக்கம் கூட “டபிள்யூ.ஆர்.வி எதோ ஒருமாதிரி இருந்தாரே” என்று பிறகு சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. தொடர்ந்த பணிகள், பல்வேறு வகையான பிரச்சினைகளோடு இயங்குகிறவர்கள் எந்நேரமும் ஒரே மாதிரியாகவா இருக்க முடியும் என்பதுதான் இயல்பான பதிலாக எனக்குத் தோன்றியது. இப்போது எல்லாவற்றுக்கும் வேறு அர்த்தங்கள் தெரிகின்றன.

அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி வேறு எதுவுமே இந்த 23 ஆண்டுகளில் அறிந்திருக்கவில்லை. அவருடைய மகள், மகன்கள் பற்றியெல்லாம்  கூட இப்போதுதான் தெரிகிறது. அவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்னும் பிரக்ஞையற்றுத்தான் இதுபோன்ற மனிதர்களை தொடர்ந்து காலாகாலமாய் நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம். தான் சார்ந்த அமைப்பையே குடும்பமாக கருதி, சதா நேரமும் தோழர்களோடு இருந்து, இயக்கம் சார்ந்தே பேசிக்கொண்டு இருப்பவர்களை இப்படித்தான் பார்க்க வருகிறது. எனவேதான் பெரும் அதிர்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அவர் காணாமல் போனது, அவர் பற்றிய மனைவியின் புகார், கட்சி நடவடிக்கை என்கிற செய்திகள் மூலம் தெளிவான அபிப்பிராயங்களுக்குச் சென்றுவிட முடியாது. அதிலிருக்கும் ஆதாரங்களைத் தோண்டித் துருவி எந்த முடிவுக்கும் வர முடியாது. சில புதிர் நிறைந்த உரையாடல்களாக அவை பொதுவெளியில் மிதந்து கொண்டே இருக்கும் இனி. ‘அவர் வீரரா, கோழையா’எனும்  விவாதங்களும் பைத்தியக்கார சபைகளில் கலக்கும் இனி.

டபிள்யூ.ஆர்.வி நிலைகுலைந்து போயிருக்கிறார், தன்னுடைய உலகத்திலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட மனிதராகியிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள எளிய மனித உணர்வுகளே போதுமானது. தேசம் பூராவும் அறியப்பட்ட ஒரு மனிதர், இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல துடிப்போடு செயலாற்றிய ஒரு தோழர், தன் வாழ்வின் அருமையான, பெரும்பாலான நாட்களை தன் தத்துவத்திற்காக செலவிட்ட ஜீவன், எப்போது தான் நிர்க்கதியானோம் என நினைத்தார் என்பது முக்கியமானது. இப்படியான சமயங்களில் ஆற்றுப்படுத்த, அரவணைக்க, ஆதரவோடு கரங்கொடுத்து நிற்க யாருமா அவருக்கு இல்லாமல் போனார்கள் என்பதுதான் கசப்பனாது, அதிர்ச்சியானது. எவ்வளவோ ஞானம் கொண்ட, அனுபவங்கள் என்னும் தழும்பேறிய, அற்புதமான டபிள்யூ.ஆர்.வியின் கடைசி நேர சிந்தனைகளும், துடிப்புகளும் என்னவாக இருந்திருக்கும் என்பது வலி நிறைந்தது. 

‘என் பெயர் சிவப்பு’ என்னும் அந்த துருக்கிய நாவலில், நீரில் மூழ்கி இறந்து போன அந்த மனிதன் இப்படிச் சொல்கிறான் ஒரு இடத்தில்.

“நான் பிறப்பதற்கு முன்பு காலம் முடிவற்றதாக இருந்தது. இப்போது என் மரணத்திற்குப் பிறகு காலம் வற்றித் தீராததாக இருக்கிறது. இதனை இதற்கு முன்பாக நான் நினைத்துப் பார்த்ததில்லை. இருண்மையின் இரண்டு சாசுவதங்களுக்கு நடுவே ஓளிவீச வாழ்ந்திருக்கிறேன் நான்”.

உண்மைதான் தோழர் டபிள்யூ.ஆர்.வி!

கருத்துகள்

51 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. :(

  ஏதும் சொல்லத் தோன்றவில்லை அய்யா.. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 2. Com.WRV>>.a GUIDING STAR disappeared from the life>.precious life ...he cannot be compared with anything...his dedication ,simplicity,overall governance-When best things born and grow naturally negative factors also starts functioning against it..he was the man of multi faced personality.His cleverness and hard works are always remain in our hearts.

  பதிலளிநீக்கு
 3. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 4. எனக்கும் தொலைக்காட்சியில் இந்த செய்தி பற்றி படித்ததும் உங்களின், காமராஜின் (அடர் கருப்பு) நினைவு சட்டென்று வந்தது.

  நானே இன்று உங்களிடம் இவர் பற்றி ஒரு பதிவு எழுத கேட்கலாம் என்று இருந்தேன், எழுதி விட்டர்கள்.

  மிகவும் வருத்தமாக இருக்கிறது. நல்ல ஒரு மனிதர் மறைந்து விட்டாரே என்று. அதுவும் இன்றைய சந்தை மயம்மக்கள் உலகத்தில் இவரைப் போன்ற தொழிலாளர் நலன் சித்தாந்த மனிதர்கள் அவசியம் தேவை.

  நேரம் கிடைக்கும் பொழுது பிற தலைவர்கள் பற்றியும் பதிவு எழுதுங்கள்- நல்லகண்ணு, ராமக்ரிட்டிணன், தா. பாண்டியன், பால பாரதி, மகேந்திரன்.

  நல்ல மனிதர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே பதிவு எழுதி சிறப்பிப்போம்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதிவு நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. நல்ல இடுகை. மிக அற்புதமாக எழுதி உள்ளீர்கள். ஒரு நல்ல மனிதரை இழந்துள்ளது நாடு. இவரது மரணம் பல கேள்விகளை எழுப்பி சென்றுள்ளது. நீங்கள் எழுதிய படி அவற்றில் பலவற்றுக்கு சரியான விடை கிடைப்பது சிரமமே

  பதிலளிநீக்கு
 7. தோழரே நீங்கள் ஓரளவு அவரைப் பற்றித் தெரிந்திருக்கிறீர்கள். உங்கள் citu மூலம் தற்கொலை செய்யும் அளவுக்கு தள்ளப் பட்டது ஏன் என்று விளக்கி எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். பத்திரிகை செய்திகள் உதாரணமாக நக்கீரன் போன்ற வற்றில்தான் செய்திகள் கொடுக்கிறார்கள்... ஆனால் உண்மையில் என்ன என்று உங்களைப் போன்றவர்கள் கேட்டிறிந்து பதிவில் எழுதலாமே? செய்யுங்களேன்..
  கந்தசாமி

  பதிலளிநீக்கு
 8. திரு வரதராஜன் அவர்களைப் பற்றியும், அவரது பொதுவாழ்வு பற்றியும், அவரது மறைவுக்குப் பிறகுதான் தெரிந்துகொண்டேன். அவர் மீதான அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல செய்திகளைப் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். மிக உயர்ந்த இந்த சமுதாயப் போராளியின் மரணம் பெரும் துயரத்தைத் தருகின்றது. நெருங்கிய தோழரை இழந்து விட்டோம். அவரைப் பற்றிய இந்த இடுகைக்கு நன்றி தெரிவிக்கிறேன். இடுகையின் தலைப்பு, உண்மை சுமந்த ஓர் உணர்வஞ்சலி ஆகும்.

  பதிலளிநீக்கு
 9. Dear Mr. Madhav,
  Whether the time has changed his revelutonary nature or the COMRATES have changed their MORALS?
  Will the mistry of his end be a lesson to the likely people or will the time expose the cause or his drastic tragedy? Extra sence smells some rat. Shocking to see such end to such good souls.
  M.S.Vasan

  பதிலளிநீக்கு
 10. There was nobody,and Iwas alone when Iwas reading u r blog.When I came to that line " Yeppothu Nirgathiyanom" I wept uncontrolably.My neighbour a punjabi women peeped in.There is no other go for him to prove his innocence. He did it magnificiantly,warrior like...kashyapan.

  பதிலளிநீக்கு
 11. இது சிறப்பாக எழுதப்பட்ட இடுகை. சந்தேகமேயில்லை.

  பிரைன்வாசு கம்மினிஸ்டு கட்சி ஏன் அவரை கட்சியில் இருந்து அனுப்பியது என்ற வரலாற்றையும் எழுதி இணைத்திருக்கலாம். ஏன் அவர்கள் மேல் உங்களுக்கு இயல்பாக எழும் கோபம் எழவில்லை ?

  பதிலளிநீக்கு
 12. comrade,no words to say.my mind is full of emotional feelings.it is great loss to the cmp party and nation as a whole. disciplinary action on a more sensitive comrade should be more sensitive.otherwishe this type of leaders and cadre loss will continue either in the of expelsion or quit by themself from party

  பதிலளிநீக்கு
 13. அது வெறும் செய்தியாக இருக்குமென்றே எண்ணினேன். இன்றுதான் உண்மையென்று அறிந்தேன்...வருந்தினேன்..

  பதிலளிநீக்கு
 14. தனது உள்ளக் குமுறலைச் சொல்ல தோழர் W.R.V அவர்கள் உண்மையான நண்பனை தேடியுள்ளார்.மன உளைச்சலுக்கு வடிகால் இல்லாததால் ஒரு நல்ல தொழிற்சங்கவாதிக்கு இந்த முடிவு.தாங்கள் அவரைப் பற்றி நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! --தி.தமிழ் இளங்கோ

  பதிலளிநீக்கு
 15. ஒரு சமூக போராளிக்கு எனது அஞ்சலி.

  பதிலளிநீக்கு
 16. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 17. அவர் வில்லிவாக்கம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தபோது, நான் சிறுவனாக இருந்தேன். அவருடன் முதன்முதலாக நான் கைகுலுக்கிய தருணம் , இப்போது நினைவுக்கு வந்து என் கண்களை நனைக்கிறது.
  கடைசியாக த.மு.எ.க.ச மாநில மாநாட்டில் யெச்சூரியின் உரையை அவர் தமிழாக்கம் செய்தபோது பார்த்தேன். மிக அழகாக மொழியாக்கம் செய்யக்கூடியவர். அவரது இழப்பு ஈடு செய்யமுடியாத பேரிழப்புதான்.

  பதிலளிநீக்கு
 18. /கடைசி நேர சிந்தனைகளும், துடிப்புகளும் என்னவாக இருந்திருக்கும் என்பது வலி நிறைந்தது/
  எனது எண்ணமும் இதுவே.அஞ்சலிகள்

  பதிலளிநீக்கு
 19. தோழர். W.R.V இப்படி முடிவுக்கு வந்ததை மனம் ஏற்கவில்லை. 40 வருடங்களாக கட்சியையே குடும்பமாக கருதியவ்ரின் வாழ்க்கை தற்கொலையில் முடிவுற்றதை எண்ணும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

  செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்தினாலும் போராளியை தற்கொலைக்கு தூண்டிய நடவடிக்கை எடுத்த இயக்கம் மீது மிகுந்த ஆத்திரம் வருகிறது.

  அவரின் இழப்பு செங்கொடிக்கு மட்டுமல்ல இந்திய உழைப்பாளி மக்களுக்கே பேரிழப்பாகும்.

  பதிலளிநீக்கு
 20. விருமாண்டிலே கமல் தன் பாட்டி செத்துப் போனப்ப திட்டிக் கொண்டே அழுவார் பாருங்க, அது மாதிரித்தான் நானும் WRV அவர்களை இப்போ வரை திட்டிக் கொண்டிருக்கிறேன். இது சத்தியமா தற்கொலையா இருக்காதுன்னு நம்பறேன். செததப்புறம் கூட அவர் பேர்ல கோழைத் தனம் சேர்ந்திடக் கூடாதுன்னு நினைக்கிறேன். எல்லாத்துக்கும் மேலே WRV எங்கிருந்தாவது உயிரோடு வந்து, ஏரிலே கிடைச்சது அவர்ரோட உடல் இல்லைன்னு சொல்லமாட்டாரன்னு ஏங்குறேன். அவர் மாதிரி தோழரே இப்படி ஆயிட்டார்ன்னா நான் எல்லாம் எத எப்படித் தாங்கப் போறேன்னு ரொம்ப ஆயாசமா இருக்கு மாதவ். ரொம்ப உடைஞ்சு போய்ட்டது மனசு. யாருக்கு ஆறுதல் சொல்றது? அழுதா பாரம் குறையுமா?

  பதிலளிநீக்கு
 21. அன்புள்ள மாது,

  தங்களைப் போன்றவர்கள் எதையும் உருகி உருகி எழுதி விஷயங்களின் விவாதங்களுக்கான கண்களை அடைத்து விடுபவர்கள். உ.ரா.வ.வின் நீங்கள் அறிந்த பக்கங்கள் மட்டுமே உ.ரா.வ. வாக இருக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை. தான் கட்சி அதிகாரத்தின் செல்லக் குழந்தையாக இருந்தபோது அவர் நடந்து கொண்ட முறைகளின் தருணங்கள் அவருக்கு வாய்த்த போது அவரால் தாங்கிக் கொள்ள முடியாத, அவரது வார்த்தைகளிலேயே சொல்லப்போனால் தற்கொலை செய்து கொள்ளும் கம்யூனி°ட் அல்லாத நடைமுறை நோக்கி அமிழ்த்தி இருக்கிறது. காரம் உரைக்கும் அதிகாரம் மேலும் உரைக்கும். மென்மைகளில் மட்டும் உண்மைகள் இல்லை..

  பதிலளிநீக்கு
 22. இதுவரைக்கும் என் வலைப்பக்கம் வரவே வராத தோழர் ஸ்ரீரசா, இப்போது இவ்வளவு வன்மையாக (?) திடுமென வந்திருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

  //மென்மைகளில் மட்டும் உண்மைகள் இல்லை.//

  நீங்கள் உங்களுக்குத் தெரிந்த (வன்மைகளில்)உண்மைகளைச் சொல்லுங்களேன் தோழரே!

  நெகிழ்வு, அன்பு, சினேகிதம், காதல், கருணை, தோழமை எல்லாவற்றோடும்தான் நான் எழுதி இருப்பதாக நினைக்கிறேன். இது மென்மை என்றால் நான் என்ன செய்யட்டும்?

  பதிலளிநீக்கு
 23. தங்களைப் போன்றவர்கள் எதையும் உருகி உருகி எழுதி விஷயங்களின் விவாதங்களுக்கான கண்களை அடைத்து விடுபவர்கள். உ.ரா.வ.வின் நீங்கள் அறிந்த பக்கங்கள் மட்டுமே உ.ரா.வ. வாக இருக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை. தான் கட்சி அதிகாரத்தின் செல்லக் குழந்தையாக இருந்தபோது அவர் நடந்து கொண்ட முறைகளின் தருணங்கள் அவருக்கு வாய்த்த போது அவரால் தாங்கிக் கொள்ள முடியாத, அவரது வார்த்தைகளிலேயே சொல்லப்போனால் தற்கொலை செய்து கொள்ளும் கம்யூனி°ட் அல்லாத நடைமுறை நோக்கி அமிழ்த்தி இருக்கிறது. காரம் உரைக்கும் அதிகாரம் மேலும் உரைக்கும். மென்மைகளில் மட்டும் உண்மைகள் இல்லை..vazhi mozhigiren. Seeni Mohan

  பதிலளிநீக்கு
 24. அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்!

  உண்மைத்தமிழன் பதிவு படித்தீருப்பீர்கள்தானே..
  செந்தழல் ரவி கேட்ட கேள்வியே என் மனதிலும் தோன்றியது...

  பதிலளிநீக்கு
 25. மறைந்த தோழர் குறித்த உங்களுடைய அனுபவங்களை, எண்ணங்களை பகிர்ந்திருக்கிறீர்கள்... எவராக இருந்தாலும் பொது வாழ்க்கையில் இரும்பு மனிதராக இருப்பவர்கள், தனி மனிதர்களாக அரவணைப்புக்கு ஏங்குபவர்களாக தான் இருக்கிறார்கள்..

  பத்திரிகைகள் பரபரப்புக்காக பல விதங்களில் அவருடைய மரணத்தைப் பற்றி எழுதுகின்றன.. உங்களுடைய பதிவில் இருந்து தெரிந்து கொண்டதில் நிரந்தரமான வேலையை விட்டு விட்டு மக்கள் பணியாற்றச் சென்றது, விதவைப் பெண்ணை மறுமணம் செய்து இத்தனை வருடங்கள் குடித்தனம் செய்தது எல்லாம் எத்தனை பேர் நடைமுறை வாழ்க்கையில் செய்வார்கள் என்று தெரியவில்லை.. தவறு செய்வது மனித இயல்பு.. தோழரும் தவறியிருக்கலாம்... அதை சுற்றியிருப்பவர்கள் எப்படி அணுகினார்கள் என்பது தான் அவரை இப்படி ஒரு முடிவு எடுக்க நிர்ப்பந்தப்படுத்தியிருக்கிறது..


  ஆனால், இந்த கோர முடிவை உட்கட்சிப் பூசலோடு பத்திரிகைச் செய்தி படிக்கம் போது, குழப்பமாக இருக்கிறது..

  பதிலளிநீக்கு
 26. உங்கள் கட்டுரையில் உ.இரா.வரதராசனாருக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் எழுதினால் உ.இரா.வரதராசனாரை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்காகவே முந்தைய வினா! ஏனென்றால் வெகுமக்கள் ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் எவ்வளவு உண்மை என்பதை இச்செய்தியில் உணர முடியாது!

  பதிலளிநீக்கு
 27. டபிள்யு ஆர் வியைப் பார்த்தாலே மனதில் மரியாதை தோன்றும். அவரது மரணம் ஒவ்வொருவர் மனதிலும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது. அவர் வீரரா கோழையா என்று வீண் வாதம் செய்வது தேவையற்றது. அவர் மனிதர். மக்கள் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் செயல்பட்ட மாபெரும் மனிதர். அவரது மரணத்தை விமர்சனம் செய்ய நமக்கெல்லாம் அருகதை இல்லை. அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 28. டபிள்யு ஆர் வி பற்றிய உங்கள் ஞாபகங்கள் மனதை கஷ்டப்படுத்துகிறது. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 29. Dear Madhavaraj,

  This is the first time i am posting a comment in your blog despite the fact that i have, on many occasions, enjoyed your writings. Notwithstanding your party affiliation, you have come out with a balanced article, of course without causing any damage to your party. Unmaithamilan has also written a factual report on this irreparable loss. communists, because of their courage and conviction, should be more open than other political persons, to have an introspection as to what went wrong or where they went wrong. unfortunately, for the last few years, in your party, such an approach is absent which is the reason for erosion in your popular support base. The intellectual who has taken over from Surjeet, has in fact stepped in to a shoe much bigger than his size and falling over and over. if WR has been punished for his wrongs, then there are several other leaders in your party richly deserving stringent punishments for causing downslide to your party and damaging its image in the public eye. i am sure you will agree with me, albeit privately.

  jigopi@yahoo.co.in

  பதிலளிநீக்கு
 30. We do not have to dwelve in knowing the details of his death. We should pay respect for what his firm conviction on what he was doing all his life. Very few can do what he did all his life

  I salute him.

  பதிலளிநீக்கு
 31. நல்லதொரு பதிவு. அவர் கோழையா வீரனா என்பதல்ல கேள்வி?
  விளைவை மட்டுமே ஆராயாமல் இயக்கவியல் பார்வையில் காரணத்தையும்
  ஏன் தேட கூடாது
  என்னதான் அவர் தவறி இருந்தாலும், மனிதன்தானே அவரை ஒருமுறை ஏன்
  கண்டித்து மன்னிக்கவில்லை.
  அவர் தவறு செய்தார் என்றே வைத்து கொள்வோம், இந்த தண்டனைக்கு இது
  வரை எவ்வாறுதான் அனைத்து பதவிகளையும் பறித்தர்களா?
  எத்தனையோ முறைகேடுகளுக்கு உள்ளான பக்கத்து மாநில செயலாளரை என்ன
  கடுமையாக தண்டித்தீர்கள்
  உழைப்பாளி மக்களின் காசில் குளிர்சாதன புகைவண்டியில் வலம் வரும்
  தலைவர்களை என்ன செய்தீர்கள்
  பல வருடங்களாக பிரிந்து வாழும் மனைவி திடீரென, கணவன் மேல்
  அக்கறை கொண்டு அவரின் தவறுகளை ஏன் கட்சியிடம் புகார் செய்தார்?
  அவரை புகார் செய்ய தூண்டியது யார்?
  உ.ரா.வ செய்தது தவறு என்றாலும் அவரை திருத்த வாய்ப்பு தராமல், மிக பெரிய
  தண்டனை அளித்த தங்கள் கட்சியின் மாநில குழு தான் அனைத்திற்கும் பொறுப்பு
  தாங்கள் இந்த கேள்விகளுக்கு பதில் எழுதா விட்டாலும் பரவியில்லை
  தங்களின் கட்சி தலைமைக்கு தெரியபடுத்துங்கள்
  அதுவே உ.ரா.வ க்கு தாங்கள் செலுத்தும் பெரிய அஞ்சலியகட்டும்

  அன்புடன்
  உழைப்பாளி

  பதிலளிநீக்கு
 32. The people who took the extreme step against the stauch leader of the party should touch their heart and declare whether they themselves have not committed any crime or never gone against the party principle.Are all other leaders in the party AGMARK RAMA's.

  பதிலளிநீக்கு
 33. அவரது மறைவில், தண்டனையில், விசாரனை நடத்தப்பட்ட முறையில் பல மர்மங்கள் இருக்கிறது. பெண்களுடன் உறவு, தொடர்பு நிறுபிக்கப்பட்ட (அதுவே தவறு அல்ல இருவரின் சம்மதத்திடன் நடந்தால்) பல மாநில பொறுப்பாளர்களுக்கு இப்படியா தண்டனை வழங்கப்பட்டது. WRV அவர்கள் வெறும் SMS மட்டும் தானே அனுப்பினார்.
  கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டிய விஷ்யம் இது. விவாத்த்தை ஏற்படுத்துவது தான் அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. விவாதங்களை மட்டுப்படுத்த சிபிஎம் குழு அமைத்துள்ளது என்பது இப்பொழுதைய செய்தி.
  ராமானுஜம்

  பதிலளிநீக்கு
 34. The Communist Party of India (Marxist), which prides itself on inner-party fairness, and a scrupulous soliciting of views through the entire organisational chain for any major decision, appears to have drifted dangerously — the “centralism” now speaks much louder than the “democratic”. The party constitution mandates that comrades be treated sympathetically, be judged by their work and whole record of service, rather than isolated incidents, in case of a mistake. But the treatment meted out to W.R. Varadarajan, a CPM veteran, would indicate otherwise. He was abruptly removed from all party posts and publicly shamed by the central committee — no real proof (of alleged sexual harassment) was given even to other comrades on the central committee, though that did not deter them from a mechanical raising of hands when the leadership called for Varadarajan’s dismissal. While Varadarajan himself denied the charges, he knew he was pretty much on his own, up against a wall of po-faced communist solidarity. He resigned, and soon after, drowned himself in despair. It stands to sense that after a life seeped in the CPM’s stern and hyper-extended work ethic, which regulates much of a member’s daily activity and personal life (right from what percentage of his income goes to the party), this sudden fall from grace could leave Varadarajan feeling utterly alone, and bereft.

  Of course, the Left has never been afraid of looking severely at its own navel. A few months back, the party undertook a vigorous “rectification” programme, to scour its organisation for signs of weakness. The last such exercise was conducted in 1996. At the recent discussions, it was felt that sections of the party must be purged of “unethical and dishonest acts, a self-centric mentality and craving for sensual pleasures”, to make sure the party emerged stronger and more unified than before.

  But what did the party leadership achieve? Dark mutterings among party workers, including central committee members now openly questioning their leaders’ decision — pointing out that even if the disciplinary action was warranted, the complete abandonment of a former colleague betrays a fundamental soullessness in the CPM. Rectification should concentrate on the Left’s failures of imagination and persuasion, which are reflected in its slipping hold on the electorate and its inability to ignite excitement. Poking its snout into the personal lives of party members is simply unnecessary — and that level of obsessive control only reveals how desperate it is to fake some measure of command.

  பதிலளிநீக்கு
 35. தோழரின் காணாமற்போன செய்தி உண்மையாக இருக்கக் கூடாது என்று முதலில் ஆதங்கப்பட்டேன். அதன்பின் அவரது மரணம் குறித்த செய்தி உண்மையாக இருக்கக் கூடாது என்று ஆதங்கப்பட்டேன். என்ன நடந்தது என்று நானுன் ஒரு போஸ்ட்மார்டம் நடத்த விரும்பவில்லை. ஆனால் நான் இப்போது கேரளாவில் இருப்பதால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். சி,பி.எம். தோழர்கள் இங்கே இரண்டாக பிளவு பட்டிருப்பது உண்மை. அதை விட உண்மை கட்சியின் பல தோழர்கள் வருமானத்துக்கு பொருத்தமற்ற சொத்து சேர்த்திருப்பதாக சாதாரண கேரள மக்கள் (கட்சி சாராதவர்கள்) பேசுவது. தமிழ்நாட்டில் நான் இருக்கும்போது இப்படியான பேச்சுக்களுக்கு அரசியல் சாய்வும் சாயமும் இருப்பதாக நான் நினைப்பதுண்டு. ஆனால் எந்த விதமான உள்நோக்கமும் அற்ற ஒரு சாமானிய மலையாளி எதற்கு பொய் சொல்ல வேண்டும்? தான் கண்டதை சொல்வதில் அவனுக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும்? கேரளத்தில் பினராயி குறித்த குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்கின்றதா என்பதை விசாரணை முடிவு செய்யும். ஆனால் வெளிப்படையான ஆடம்பரங்களும் பல நூறு சதுர அடி பங்களாக்களும் எதை காட்டுவதாக நாம் எடுத்துக்கொள்வது? தனது சொத்துக்களை ஈ.எம்.எஸ். போல கட்சிக்கு எழுதி வைப்பது ஒருபக்கம் இருக்கட்டும், குறைந்த பட்சம் குறைந்த தேவைகளோடு வாழக் கற்றுக்கொள்ளாத கட்சியின் முன்னணித்தலைவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது? மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுக்கள் மம்தா கும்பல்களின் கூட்டணியால் உயிரை இழந்தவர்களும் இழப்பவர்களும் சி.பி.எம். தொண்டர்கள்தான், சந்தேகம் இல்லை. ஆனால் ஆடம்பர லக்சுரி பங்களாக்களும் மசாஜ் கிளப்புக்களும் தமது வாழ்க்கை நடைமுறையாக கொண்ட மே.வ. கட்சியின் தலைவர்கள் மீது என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டது? "தீ வைத்து எரிக்கப்பட்ட ஆடம்பர பங்களாக்கள் எமது கட்சிக்காரர்களுடையது அல்ல" என்று இதுவரையிலும் கட்சியால் சொல்ல முடியவில்லையே, என்? கட்சியில்மேல்மட்டத்தில் கேரள, மே.வ. ஆதிக்கம் தலை தூக்கியுள்ளதோ என்ற சந்தேகம் வருவது இயல்பே. நிலைமை இவ்வாறு இருக்க, கடும் மன உளைச்சல் காரணமாக ஒரு உலகம் அறிந்த முன்னணி ஊழியர் தனது மரணத்தை தேடிக்கொள்ள, இப்போதும் விதி எண், துணை விதி எண் என இன்ச் டேப்பை எடுத்துக்கொண்டு ஒழுக்கத்தை அளந்து கொண்டிருப்பது யாரை ஏமாற்றிக்கொள்ள?
  தோழர் அச்சுதானந்தனும் தோழர் பினராயி விஜயனும் ஏன் பொதுமேடைகளிலும் கூட ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது இல்லை? ஒருவர் கண்களோடு ஒருவர் சந்தித்துக் கொள்வது இல்லை? அப்படி என்ன அவர்களுக்குள்? முதலாளித்துவம், தரகு முதலாளித்துவம், தேசிய முதலாளித்துவம், பாசிசம்...போன்ற முக்கியமான கொள்கை விசயங்களில் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு காரணமாக இருக்கக்கூடுமோ? இந்த கேள்விக்கு விடை சொன்னால் பல சந்தேகங்களுக்கு விடை கிடைக்கலாமோ?
  சார்லி

  பதிலளிநீக்கு
 36. தன்னுடைய உணர்வுகளை மாதவராஜ் அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.அவர் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் அல்ல,கொல்கத்தாவில் கூடிய குழுவின் உறுப்பினரும் அல்ல. தயவு செய்து அவரிடம் தேவையற்ற கேள்விகளை கேட்காதீர்கள்.
  ஊடகங்கள்,பதிவர்கள்,செயமோகன் போன்றவர்கள் ஒருபுறம் கட்சி மீது குற்றம் சாட்ட இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் போது மாதவாராஜ்களும்,தமிழ்ச்செல்வன்களும் என்ன செய்ய முடியும்.கட்சியை முழுவதுமாக விட்டுக் கொடுக்கவும் முடியாது, தூக்கி எறிந்து எழுதவும் முடியாது. அவர்கள் உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கும் போதும், மனம் உடைந்து உங்களுக்காக தோழர் இந்த கதி என அதிர்ச்சியிலிருந்து விடுபடாத போதும் கேள்விகளை தொடுப்பது நியாயமா? பதில் எங்கே என்று கேட்பதும் நியாயமா?தயவுசெய்து ஊடகங்களில் வருவது, கேள்விப்படுபவை எல்லாம் உண்மைகள் என்று நம்பாதீர்கள்.அதன் அடிப்படையில் மனிதர்களை எடை போடாதீர்கள்.
  தோழர்களின் மெளனத்தினை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
  இவண்-உங்களில் ஒருவன்

  பதிலளிநீக்கு
 37. Now that the CPI(M) has punished an 'erring' leader, we expect the party to cleanse itself of other "undesirable elements" by proactively launching investigations and inquiries into the personal lives of its leaders. The members should take this as a cue to send complaints about their leaders and the party should launch a proper enquiry (not like the one in Varada Rajan's case).
  This way the party will keep itself clean and all its time and resources can be diverted to this type of cleansing. Revolution?
  Who wants it.

  பதிலளிநீக்கு
 38. indru ungal pathivu matrum pala thozarkalin pinnoottangal padithen.wrv endra manitharin maraivu thaanga mudiyaatha tukkam tharum nikalvu.pala aazamaana kelvikalai ezuppukira kodoora nikalvu.enathu muppathunaanku aandu kaala iyakka anubangalin pinnaniyil naan arintha wrv-yai ninaivu koornthu kanneer sinthave mudikirathu.iniyum mounam saathippathu iyalaatha kaariyam.en pathivilum sirithu solla muyarchi seithirukkiren.entha vinaadiyil nirkkathiyaanom endra kelviyin vidai theriya endrenum vaaippuk kidaikkumaa? kamalalayan@gmail.com

  பதிலளிநீக்கு
 39. ஹலோ இவண்-உங்களில் ஒருவன்,
  இங்கு எழுதுபவர்கள் எல்லாம் கட்சிக்கு எதிரானவர்கள் அல்ல.
  ஒரு அருமையான கட்சியை அழிவு பாதையில் சிலர் கொண்டு செல்கிறார்கள் என்ற
  ஆதங்கமும் எங்களால் கட்சி தலைமையிடம் எங்கள் கருத்துகளை பகிர இயலாததால்
  இங்கு கொட்டுகிறோம். கண்டிப்பாக இது மாது வழியில் மாநில குழுவுக்கு செல்லும் என்ற
  நம்பிக்கையில்...

  நண்பன்

  பதிலளிநீக்கு
 40. Dear Madavaraj
  I am also supporter of the CPIM since long time. In recent times I personally noticed a certain group of our leaders from Tamilnadu itself leads luxurious life (drinking only mineral water, always use the AC in the party vehicles, always taking lunch in hotels...etc) Often they forget the money spent by them is from our poor comrades & supporters. I surprised to see that one comrade using one mobile its cost nearly 25,000.I believe that group politics only kill our comrade WRV. It is possible to come forward to explain what kind of sexual harassment has been given to that lady by com.WRV? Any evidence? If he made sexual harassment to any lady why they didn’t bring this matter to the police? I expect senior leaders from Tamilnadu unit have moral responsibility to explain the mysterious behind the death of com. W.R.V. to our comrades otherwise we can’t stop the eradication of our base in the country.

  Regards
  Pandian

  பதிலளிநீக்கு
 41. Dear mathavaraj
  Your references to WRV were excellent.Though my association with him was not as intimate as yours, I too felt sorry that he could not share his feelings with anyone in his last days.
  Raju

  பதிலளிநீக்கு
 42. Dear mathavaraj
  Your references to com WRV were heart-rending. Though my association with WRV was not as intimate as yours, I too felt sorry that he could not share his feelings with anyone in his last days.
  Raju

  பதிலளிநீக்கு
 43. ஒரு நல்ல மனுஷன அநியாயத்துக்கு கொன்னுட்டீங்களே பாவிகளா....இந்த அறிக்கைய படிச்சா ஆத்திரந்தான் வருது..
  ஏற்கனவே கம்யூனிச சித்தாந்தங்கள் தெரிஞ்ச ஆட்கள் ரொம்ப கம்மியாத்தான் இருக்காங்க...புதுசா கட்சியில செர்ரவங்களையும் முறையான கம்யூனிஸ்டா வளக்குறது இல்ல....இதுல இருக்குற ஒரு சிலரையும் இப்படி கொல்றீங்களே

  பதிலளிநீக்கு
 44. Katchi meedhu izhukku vandhu vidum endra peyaril oru kutrachaattaik koori avarai thandiththu, katchiyai ivargalthaam makklin paarvaiyil izhivupaduththi vittanar. Avargal pazhi kooriya nam arumai thozharo makkalin madhippil panmadangu uyarndhu nirkirar. Idhu oru perum thuyaramaana muransuvai.
  PUCl pondra amaippugal katchikku edhiraga velai seidhukondirukkum neraththil, andha amaippaich cherndha oruvar koduththa 'sila aadhaarangalai' vaithukkondu oru maththiya kuzhu urppinar meedhu 'visaranai' nadaththuvadhu katchi virodha nadavadikkai illaiya? Ippadi kelvi ezhuppuvoraiyellam katchi virodhigal endru muththirai kuththum pokkum thodangi ullathu.
  Idathusaari iyakkaththin thevai adhikariththu varum indha velayil oru arumaiyana idadhusaarith thalaivarai ippadi izhandhadhu kodumai. Ulagamayamakkalukkum and madhavadhaththirkum thunindhu nirkum thiran konda indha katchiyaik kattaayagamaga kappaatra vendum. Yaaaridamirundhu enbathuthan kelvi.

  பதிலளிநீக்கு
 45. இதையும் கொஞ்சம் படிங்க....

  http://www.indianexpress.com/news/before-suicide-wr-to-karat-denied-fairplay/583149/௦

  எல்லாருமா சேந்து அவர கொன்னுட்டீங்களே.....

  பதிலளிநீக்கு
 46. தோழர் மாதவராஜ் அவர்களே,
  அனானி தோழர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லனும்னு அவசியமில்ல.... ஏன்னா நீங்க ஒரு கருவிதான்னு எங்களுக்கு தெரியும்.. ஆனா இந்த கேள்விகளையெல்லாம் உங்க கேடுகெட்ட மாநில குழுகிட்ட போயி குடுங்க... மனசாட்சி இருந்தா அவங்க பதில் சொல்லட்டும்.

  இது ஒரு திட்டமிட்ட கொலை அப்படின்னு போயி சொல்லுங்க....
  உ.ர.வ மாதிரியான மாணிக்கங்களை எல்லாம் கொன்னு போட்டுட்டு நீங்க என்னத்த கட்சி நடத்த போறீங்கன்னு கேளுங்க....

  பதிலளிநீக்கு
 47. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.

  பல்வேறு வகையான உணர்வின் வெளிப்பாடுகள் பின்னூட்டங்களாக இங்கு வந்திருக்கின்றன.

  ஒரு அருமையான தோழரை இழந்துவிட்டோமே என்னும் வருத்தமும், ஆதங்கமும், ஆத்திரமும் தொனிக்கின்றன.

  இப்படியான இழப்புகள் இனி இருக்கக்கூடாது என்கிற வேகமும் த்ன்னியல்பாக இருக்கிறது.

  வந்துள்ள கருத்துக்களில் ஆரோக்கியமானவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியதும், மற்றவற்றின் மீது புறந்தள்ளுவதும்தான் சரியாய் இருக்கும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 48. MICHAEL JACKSON'S SONG WHEN HE WAS ACCUSED OF SEXUAL ABUSE


  Hold Me
  Like The River Jordan
  And I Will Then Say To Thee
  You Are My Friend

  Carry Me
  Like You Are My Brother
  Love Me Like A Mother
  Would You Be There?

  Mary
  Tell Me Will You Hold Me
  When Wrong, Will You Scold Me
  When Lost Will You Find Me?

  But They Told Me
  A Man Should Be Faithful
  And Walk When Not Able
  And Fight Till The End
  But I'm Only Human

  Everyone's Taking Control Of Me
  Seems That The World's
  Got A Role For Me
  I'm So Confused
  Will You Show To Me
  You'll Be There For Me
  And Care Enough To Bear Me

  (Hold Me) show me
  (Lay Your Head Lowly)
  told me
  (Softly Then Boldly)
  yeah
  (Carry Me There)
  I'm Only Human

  (Lead Me)
  hold me
  (Love Me And Feed Me)
  yea yeah
  (Kiss Me And Free Me)
  yeah
  (I Will Feel Blessed)
  I'm Only Human

  (Carry)
  Carry
  (Carry Me Boldly)
  Carry yeah
  (Lift Me Up Slowly)
  yeah
  (Carry Me There)
  I'm Only Human

  (Save Me)
  save me
  (Heal Me And Bathe Me)
  lift me up, lift me up
  (Softly You Say To Me)
  (I Will Be There)
  I Will Be There

  (Lift Me)
  i'm gonna care
  (Lift Me Up Slowly)
  (Carry Me Boldly)
  yeah
  (Show Me You Care)
  Show Me You Care

  (Hold Me)
  whoooo
  (Lay Your Head Lowly)
  i get lonely some times
  (Softly Then Boldly)
  i get lonely
  (Carry Me There)
  yeah yeah carry me there
  yeah yeah yeah

  [Spoken]
  In Our Darkest Hour
  In My Deepest Despair
  Will You Still Care?
  Will You Be There?
  In My Trials
  And My Tripulations
  Through Our Doubts
  And Frustrations
  In My Violence
  In My Turbulence
  Through My Fear
  And My Confessions
  In My Anguish And My Pain
  Through My Joy And My Sorrow
  In The Promise Of Another Tomorrow
  I'll Never Let You Part
  For You're Always In My Heart.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!