தரையில் விழுந்ததும்
துள்ளியது
துடித்தது
காற்று வெளியில்
கடைசி மூச்சு விட்டு
அடங்கியது
நிலைகுத்திய கண்ணில்
அலையடித்துக் கிடந்தது
ஒரு கடல்
செதில்களில்
மின்னிக்கொண்டு இருந்தன
சில கனவுகள்
தரையில் விழுந்ததும்
துள்ளியது
துடித்தது
காற்று வெளியில்
கடைசி மூச்சு விட்டு
அடங்கியது
நிலைகுத்திய கண்ணில்
அலையடித்துக் கிடந்தது
ஒரு கடல்
செதில்களில்
மின்னிக்கொண்டு இருந்தன
சில கனவுகள்
நாளைக்கு sunday மீன் சாப்பிடும்போது நிலப் பிரவேசம் ஞாபகம் வரும்.
பதிலளிநீக்குஅன்புடன்
சந்துரு
அப்ப நாந்தா பஸ்டா
பதிலளிநீக்குஅன்பு மாதவராஜ்,
பதிலளிநீக்குகடலைப் பற்றி முழுசாச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை...
உள்ளங்கையில் அள்ளிய தண்ணீரில் கடலைப் பார்க்கவும், உறுத்தும் மணலில் கடல் பார்க்கவும், கற்றுக் கொண்டாகிவிட்டது.
உயர்ந்த மணல்மேடுகளை கடந்தது தடக்கென்று பசப்பு காட்டி பாயும் கடல் வினோதமானதாய் இருந்தது, மஹாபலிபுரம் தாண்டி ஆள் புழக்கமற்ற ஒரு கடல் (எல்லாமே ஒரே கடல் தானே?) தன் ஒய்யாரத்தை யாரும் இல்லை என்று மறைக்கவே இல்லை, அதே ஆரவாரம், அதே தளுக்கு, மினுக்கு.
எல்லாகடலும், கன்யாகுமரி என்று தோன்றுகிறது, மாறாத இளமையுடன்.
கவிதை கடலை மீனாகவும், மீனை கடலாகவும் பார்க்கும் ஒரு மாற்றுக் கண்ணாடி.
அன்புடன்
ராகவன்
ஒன்பது வரிகளில் ஒரு அசாத்தியமான வரிகள்,கவிதை மாது!
பதிலளிநீக்குநல்லாருக்கு நிலப்பிரவேசம் .
பதிலளிநீக்குசெதில்களில் மின்னிக்கொண்டிருந்தன சில கனவுகள். அருமை.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//நிலைகுத்திய கண்ணில்
பதிலளிநீக்குஅலையடித்துக் கிடந்தது
ஒரு கடல் //
அருமை தோழர்...
நல்லாருக்கு
பதிலளிநீக்குஅருமை மாதவராஜ்
பதிலளிநீக்குஇதை படித்து முடித்ததும் எனக்கும் மனதுக்குள் ஒரு கவிதையின் சிலவரிகள் ஓடுகின்றன.
\\செதில்களில்
பதிலளிநீக்குமின்னிக்கொண்டு இருந்தன
சில கனவுகள்\\
நிறைவேறாத கனவுகள், எல்லோருக்குமே!
கவிதை நல்லாயிருக்கு அண்ணா.
அருமை தோழர்..
பதிலளிநீக்குபல பரிமாணங்களை உள்ளடக்கி இருக்கிறது போலும் இந்த கவிதை..
எழுதி முடித்தபின் பிரதி சொல்லும் அர்த்தங்கள் அவரவர்க்கு ஆயிரம் அல்லவா..
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...
பதிலளிநீக்குசுப்பர்......
சபாஷ்!
பதிலளிநீக்கு//செதில்களில்
பதிலளிநீக்குமின்னிக்கொண்டு இருந்தன
சில கனவுகள்//
அருமையான வரிகள். நிறைவேறாத கனவுகள் மீன்களுக்கு மட்டும்தானா??..
யோசிக்க வைக்கிறது.
அருமை தோழரே...!
பதிலளிநீக்குவணக்கம்
எனது பெயர் ஜெபா..
நான் பல்லவன் கிராம வங்கியில் வேலை செய்கிறேன்...!
சொந்த ஊர் திருவேல்வேலி, உங்களை பற்றி ஏற்கனவே நான் அறிவேன், இங்கு வந்ததும் மேலும் தெரிந்து கொண்டேன்...!
எங்கள் தோழர் சுரேஷ் மூலம் அறிந்தேன்...!
உங்கள் அறிமுகம் கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆசை..!
என்னுடைய வலைப்பதிவிற்கு வந்து பாருங்கள்..!
நன்றி...
கும்க்கி said...
பதிலளிநீக்கு// பல பரிமாணங்களை உள்ளடக்கி இருக்கிறது போலும் இந்த கவிதை..//
வழிமொழிகிறேன்.
//நிலைகுத்திய கண்ணில்
அலையடித்துக் கிடந்தது
ஒரு கடல்
செதில்களில்
மின்னிக்கொண்டு இருந்தன
சில கனவுகள்//
மனதில் அதிர்வை ஏற்படுத்தும் வரிகள்.
தாமோதர்!
பதிலளிநீக்குநீங்கதான் பர்ஸ்ட்!
சரி.... நினைவுக்கு வந்ததா! :-))))
ராகவன்!
மிக்க நன்றி நண்பா.
பா.ராஜாராம்!
கவிதையில்லாத அந்த மூன்று வரி எது?
அன்புடன் அருணா!
நன்றி.
மதுரை சரவணன்!
நன்றி.
பவித்ரா பாலு!
பதிலளிநீக்குநன்றி.
தியாவின் பேனா!
நன்றி.
என்.விநாயகமுருகன்!
அந்தக் கவிதை வரிகளைத் தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறதே.... :-)))
அம்பிகா!
நன்றி தங்கையே.
கும்க்கி!
ஆஹா... மிக்க நன்றி.
விடிவெள்ளி!
பதிலளிநீக்குநன்றி.
ரிஷபன்!
நன்றி.
அமைதிச்சாரல்!
நன்றி.
ஜெபா!
பதிலளிநீக்குஉங்களை இங்கே அறிந்து கொண்டதில் சந்தோஷம்.
அவசியம் வந்து படிக்கிறேன்.
தொடர்வோம்.
ராமலஷ்மி!
பதிலளிநீக்குவருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.