வைத்த இடம்

 


“வைத்தது வைத்த இடத்தில் இருப்பதேயில்லை. ச்சே என்ன வீடு இது?”  கைக்கடிகாரத்தை தேடியபடி ஆத்திரத்தில் கத்தினேன்.

“வைத்தது வைத்த இடத்தில்தானே இருக்கும்” என்றார்கள் அம்மா கடுகை அதன் டப்பாவில் இருந்து எடுத்தபடி.

“ நீ வைத்ததை  வேறு யாரப்பா எடுப்பார்கள்” என்றார்கள் அப்பா மூக்குக் கண்ணாடியை கழற்றியபடி.

“வைத்ததை தேடுவதே உங்களுக்கு வேலையாப் போச்சு” என்றாள் மனைவி வீட்டை பெருக்கியபடி. 

“வைத்த இடம் எது?” என்றாள் மகள் பையில் வரலாற்றுப் பாட புத்தகத்தை வைத்தபடி.

வீட்டிற்குள்தான் வைத்த இடம் இருக்கிறது. வைத்த இடத்தில்தான் கடிகாரம் இருக்கிறது. நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

Comments

14 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. தலைவரே ஒரு ஜென் கதை படித்தது போல இருந்தது. :)

    ReplyDelete
  2. நன்றாக தேடுங்கள்....
    கிடைத்தவுடன் சொல்லுங்கள்!!!!!

    ReplyDelete
  3. //“வைத்த இடம் எது?”//

    ம்ம்ம்...

    ReplyDelete
  4. சாதாரண படிமங்களை,நிகழ்வுகளை சட்டென ஒரு தரிசனமாக மாற்றும் எந்த எழுத்தும் மனதில் சனலத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த குட்டிகதையைப்போல. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இப்படித் தேடாதவர்கள் யாராவது இருப்பார்களா என்று நான் தேடிக் கொண்டிருக்கிறேன்:))!

    ReplyDelete
  6. //வைத்தது வைத்த இடத்தில் இருப்பதேயில்லை.//

    இப்படி ஒரு தடவையாவது அங்கலாய்த்துக்கொள்ளாதவர்கள் இருப்பார்களா என்ன!! :-))

    ReplyDelete
  7. // வீட்டிற்குள்தான் வைத்த இடம் இருக்கிறது. வைத்த இடத்தில்தான் கடிகாரம் இருக்கிறது. நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.//

    !

    என்.விநாயகமுருகன் navina14@hotmail.com said...

    தலைவரே ஒரு ஜென் கதை படித்தது போல இருந்தது.


    ஆம் தலைவரே...

    :-)

    ReplyDelete
  8. அட!நீங்களுமா!!!நாங்களும்தான்!

    ReplyDelete
  9. கைக்கடிகாரம், மூக்குகண்ணாடி, வண்டிசாவி, ஏதாவது ஒரு தேடல்.
    ஒன்று நிச்சயம், இப்படி தேடும் போது போன முறை தொலைத்த பேனா, சாவி,ஏதாவது கண்டிப்பாக கிடைக்கும்.
    வீட்டுக்கு வீடு வாசல் படி. அவ்வளவே!

    ReplyDelete
  10. இது நீங்கள் தொலைத்த எத்தனாவது கடிகாரம் அங்கிள்?
    என்னை விட மோசமா இருக்கீங்களே!
    Very bad
    :)))

    ReplyDelete
  11. பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

    தொலைப்பது பற்றி இந்த சொற்சித்திரம் பேசவரவில்லை..

    சில அனுபவங்களை, அன்றாட நிகழ்வுகளை வைத்து இன்னொரு தளத்தில் சொல்ல முயற்சித்து இருந்தேன்.

    விநாயக முருகன், பா.ரா, ஜெயமார்த்தாண்டன் பகிர்திருப்பது போல அர்த்தங்கள் கொண்டிருக்குமானால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. இதுவும் சுவை தான்

    ஓஷோ சொன்னது போல தேடுவதை நிறுத்துங்கள் கண்டு அடைவீர்கள்.

    ப்ளாக்பெர்ரி காலத்தில் இன்னமும் கை கடிகாரம் கட்டி கொண்டு இருக்கிறீர்களா

    ReplyDelete

You can comment here