கிளிஞ்சல்கள் பறக்கின்றன (கவிதைத் தொகுப்பு)

ழுதி, எழுதி அழித்துக்கொண்டே இருக்கின்றன அலைகள். கொந்தளிப்பு, குதூகலம் எல்லாம் அடங்கமாட்டாமல் தத்தளித்துக் கிடக்கிறது. பரவசமான ஏகாந்தமும், தனிமை அடர்ந்த அமைதியும் அரவமில்லாமல் தழுவுகிறது. இழப்பின் குரலாய் காற்று இரைகிறது.

பிரம்மாண்ட நீர்ப்பரப்பில் கால் நனைக்கும் குழந்தைகளாய் யாவரும் ஒடியாடிக் கொண்டு இருக்கின்றனர். சிரிப்புகளும், கண்ணீரும் கடற்கரையெங்கும் கிளிஞ்சல்களாய் இறைந்து கிடக்கின்றன. எல்லாவற்றிலும் மனிதக் குறிப்புகளை ரகசியமாய் எழுதிய நீரின் வரிகள் அழியாமல் ஒடிக்கொண்டு இருக்கின்றன. மணலில் அளையும் கைகளிடம் அவை முறையிட்டுக் கொண்டே இருக்கின்றன. யாராவது ஒருவர் அறிந்தால் போதும், அவைகள் பறந்துவிடக் கூடும். கவிதைகளுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறது.

வலைப்பரப்பும் இப்படியான ஒரு கடற்கரைதான். அலைகள் நடமாடும் கவிதானுபவம் அங்கும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. என் சிறுகைகளால் அள்ள முடிந்தவற்றை மட்டும் எடுத்து இங்கே பறக்க விட்டு இருக்கிறேன்.

தரையெங்கும் ஈரம் சுரந்தபடி கவிதைகள் சுவாசித்துக்கொண்டு இருக்கின்றன என்பது நினைவில் உறுத்திக்கொண்டு இருக்கிறது.

 

உள்ளடக்கம்

என் புதிய அறையின் சித்திரம்
மண்குதிரை

அத்துவான நினைவுகள்
காமராஜ்

கப்பல்காரி
அய்யனார்

ஓடிப்போனவன்
என்.விநாயகப்பெருமாள்

கவிதைத்தொகுப்பு வெளியிடுதல்
கென்

வீடு
ஜ்யோவ்ராம் சுந்தர்

இரயில் பயணம்
கே.பாலமுருகன்

இங்குபேட்டர் உலகம்
நேசமித்ரன்

குலத்தொழில்
அனுஜன்யா

தொட்ட மழை விட்ட மழை
’அகநாழிகை’ பொன்.வாசுதேவன்

நுகத்தடி பூட்டிய
வடகரை வேலன்

நிகழ்ந்து விடுமோ
வேல்ஜி

திண்ணையின் கதை
அமுதா

புறாக்கள் உதறும் சுதந்திரம்
எஸ்.வி.வி.வேணுகோபாலன்

நேற்றைய மழை
உழவன்

கையளவு
காயத்ரி

நோவா
சந்தனமுல்லை

மிச்சமிருக்கிறது
கதிர்

முடியாத கதை
கார்த்திகைப் பாண்டியன்

நகரத்துப் பூக்கள்
உமா கதிர்

மஞ்சள் நிறத்தொரு கண்
சேரல்

சத்தங்கள்
அமிர்தவர்ஷிணி அம்மா

உறக்க விதி
நந்தா

நடுத்தரங்களின் விளிம்பு...
தமிழன் கறுப்பி

நெய்தல் நினைவுகள்
நவீன்

முகம்வழி நுரைத்தொழுகும் சூனியம்
நிவேதா

கவிதை உறவு
வால்பையன்

காலச்சுவடுகள்
பாலாஜி

நின்ற அருவி
பிரவின்ஸ்

எப்படி எப்படியோ
பெருந்தேவி

அறையில்
வேல்கண்ணன்

நிறங்களின் ஊடலையும் மனம்
மிஸஸ் டவுட்

இலையுதிர்க் காட்டுமரங்கள்
சென்ஷி

நிகழின் கணங்கள்
முபாரக்

சக்திவேலும் சாவிகளும்
உமாஷக்தி

கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும்
லாவண்யா

கலர்
ஆதிமூலக் கிருஷ்ணன்

'போல்'களின்றி
ஜெகதீசன்

குகைகளில் முடியும் கனவுகள்
ஜோ

நேயன் விருப்பம்
செல்வேந்திரன்

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்
அன்புடன் அருணா

குண்டுகளால் வீழ்த்தப்பட்ட குழந்தைகள்
மாதவராஜ்

மூன்று காலங்கள்
பா.ராஜாராம்

பறவை எழுதிய இறகு
ராகவன்

தொடக்கப்பள்ளி
ஹேமா

அவகாசம்
ரிஷான் ஷெரிப்

திருவினை
யாத்ரா

எல்லைக் கோட்டில் தடுக்கப் பட்டவள்
ஃபஹீமாஜஹான்

ஆதிரை என்றொரு அகதி
தமிழ்நதி

கடந்து போனது
தண்டோரா

தங்கள் கவிதைகளை வெளியிட அனுமதித்த பதிவர்களுக்கும், இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், வம்சி புக்ஸுக்கும் எனது நன்றிகள்.

இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில், (வம்சி புக்ஸ்: கடை எண்:214) கிடைக்கும்!

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது சார்...என் கவிதை உங்கள் கிளிஞ்சல்களுடனா??? நன்றி.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. மீண்டும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. மீண்டும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. தொகுப்புக்கென எனது கவிதையைத் தேர்ந்தெடுத்திருக்கும் நண்பர் மாதவராஜுக்கும், பதிப்பக நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
  சக பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 6. எனது கவிதை தேர்ந்து எடுத்தமைக்கு மிக்க நன்றி.
  அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் தோழர்..அப்படியே தொகுத்தளித்த உங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 8. சக பதிவர்களுக்கு எனது வாழ்த்துகள்

  இப்பெரும் முனைப்பில் உங்களின்
  உழைப்பு ஒருங்கிணைவு தேர்வுகள்
  அனைத்திற்கும் ஈடு எது நன்றி என்ற ஒற்றைச் சொல்லா ?

  இல்லை அன்பு நிறைய தோழர்

  பதிலளிநீக்கு
 9. அன்புத் தோழர் மாதவராஜ் அவர்களுக்கு

  இதென்ன இன்ப அதிர்ச்சி...!
  தற்போதுதான் உங்கள் வலைப்பூவைப்
  புரட்டினேன்.

  கிளிஞ்சல்கள் பறக்கின்றன என்ற தலைப்பில் வெளிவந்துள்ள - வலைப்பூ கவிதை உலகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட கவிதைகளில்

  "புறாக்கள் உதறும் சுதந்திரம்"
  என்ற எனது கவிதையும் இடம் பெற்றிருப்பது கண்டு இன்ப அதிர்ச்சியுற்றேன்.

  எனது கவிதைகள், கட்டுரைகள் எதையும் இன்னமும் தொகுக்காத நிலையில், உங்கள் தொகுப்பில் இடம் பெறுகிறது ஒரு கவிதை என்பது உங்கள் தோழமையின் இன்னொரு புதிய எல்லையாக உணர்ந்து மகிழ்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 10. எனது கவிதையை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.
  அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. மிக்க நன்றி..
  யாருடைய படைப்புகளெல்லாம் இடம்பெற்றிருக்கிறதோ அவர்களுக்கு தகவல் சொல்லியிருக்கலாம். நண்பர்கள் யாரேனும் சொல்லிதான் ஓ நம் படைப்பு இடம்பெற்றிருக்கிறதா எனத் தெரிந்துகொள்ளவேண்டியிருக்கு. அதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது என்பது வேறு விடயம்.

  அதுமட்டுமல்லாது, படைப்புகள் இடம்பெற்ற படைப்பாளிகளுக்கு, பதிப்பகத்தின் சார்பில் ஒரு புத்தகம் அனுப்பியிருக்காலம்.

  இப்புத்தகங்களைக் கொண்டுவர தாங்கள் மேற்கொண்ட உழைப்பிற்கும், ஆர்வத்திற்கும் மிக்க நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும்!

  அன்புடன்
  உழவன்

  பதிலளிநீக்கு
 12. ரொம்ப நன்றி மாதவன்!

  வம்சி புக்ஸ் பதிப்பகத்தாருக்கும் என் நன்றியை உரித்தாக்குங்கள்.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் வணக்கங்களும், நன்றிகளும். புத்தகம் படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்களேன்!

  உழவன் சொல்லியது போல், எழுதியவர்களுக்கு ஒரு புத்தகம் பதிப்பகத்தார் அளிக்க ஏற்பாடு செய்யலாம். பவாவிடம் பேசுகிறேன். நன்றி மீண்டும்.

  பதிலளிநீக்கு
 14. அன்பு மாதவராஜ் ஐயாவுக்கு,இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  வருடம் பிறந்த முதல் தினமான இன்று காலையில் எனக்கு இன்ப அதிர்ச்சி.எதிர்பாராத சந்தோஷம்.
  அன்போடு நன்றி.மற்றைய பதிவாளர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. congrats to all.anna! i am angry with u...it's all right.i give a chance to pacify me.it's very simple...get all those books & give them to me as newyear gift!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 16. நன்றி அன்பு நண்பரே :-)

  நன்றி மாதவராஜ், கலைமகள் ஷைலஜா, கலைமகன் பைரூஸ், யாழ்தேவி மற்றும் தினக்குரல் http://rishanshareef.blogspot.com/2010/02/blog-post_09.html

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!