பெருவெளிச் சலனங்கள் (வலையுலகில் அனுபவங்களின் தொகுப்பு)

ல்லாயிரக்கணக்கான அறைகள் கொண்ட ஒரு பெரும் கட்டிடத்தின் ஒரு அறையில் நாம் தங்கியிருப்பது போன்ற உணர்வை இந்த வலைப்பூக்கள்  ஏற்படுத்தும். பக்கத்து வீட்டில் இருக்கும் காமராஜும்,, சென்னையில் இருக்கும் அமிர்தவர்ஷிணி அம்மாவும், பம்பாயில் இருக்கும் அனுஜன்யாவும், துபாயில் இருக்கும் கென்னும், மொரிசியசில் இருக்கும் மண்குதிரையும் அந்தக் கட்டிடத்தில்தான் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அறை. ஒருவருக்கொருவர் பழக சில காலம் ஆகும். பழகிவிட்டால் தூரத்து  அறைகளில் இருந்தாலும், பக்கத்து அறைகளில் இருந்தாலும் ஒரே அறைபோல் ஆகி விடுகிறது. சிலநேரங்களில் காம்பவுண்டு வீடுகள் மாதிரியும் இருக்கின்றன. சில நேரங்களில் அடுக்கு மாடி வீடுகள் போலவும் இருக்கின்றன.

தாளிடப்படாத அறைகளுக்குள்ளிருந்து வெளிப்படும் குரல்கள் காற்று வெளியில் தெறிக்கின்றன. விரியும் வளையங்களின் அடுக்குகளில் அவரவர் வாழ்வின் கணங்கள் மிதக்கின்றன. அன்பும், காதலும், சோகமும் தீராமல் கரைகின்றன. பெருவெளியின் சலனங்கள் மனிதருக்கு எளிதில் புலப்படுவதில்லை. உள்ளங்கையில் அள்ளிப் பார்த்தால் அவரவர் ரேகைகளே தெரிகின்றன.

மரக்கதவை வாயில் நீர் வடிய கடிக்கும் குழந்தையாகிப் போகிறீர்கள். வீட்டுச் சுவர்களிலும், பள்ளிப் பாடபுத்தகங்களிலும் ஒளிந்திருக்கும் ஒவியர்கள் வெளியே வருகிறார்கள். ஐஸ் வண்டிக்காரன் உங்கள் வீட்டருகே நின்று குளிர்ந்த பால்யத்தை குச்சிகளில் வைத்து உங்களிடம் நீட்டுகிறான். ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்க்க வீதிக்கு வருகிறீர்கள். அதிசயம் பூத்த மரங்களில்  பின்பு பிஞ்சுகளும், காய்களும் பிடிக்கின்றன. காதல் வயப்பட்ட மனதின் ரகசியங்களை, அந்த மரத்தில் வந்தமரும் பறவைகள் பேசுகின்றன. ரணம், சுகம், அவஸ்தை, கனவு, சுவராசியம் எல்லாம் பனிபோல மரத்தை  குளிப்பாட்டுகின்றன. இவற்றின் ஊடே காலம் நகர்ந்திடும் அனுபவம் பருவங்களாய் கழிகின்றன. இலைகள் உதிர்ந்த வெறுமை பின்னர் அலைக்கழிக்கிறது. தனிமை நிழலாய் சுற்றி சுற்றி மிதக்கிறது. பெருவெளியின் சலனங்களுக்கு மரங்கள் தலையசைத்துக் கிடக்கின்றன.

இந்தத் தொகுப்பு இப்படியாகத்தான் இருக்கிறது.

உள்ளடக்கம்:

எழுத்துக்களின் ஆட்டம்
மாதவராஜ்

குளிர் நினைவுகள்
அய்யனார்

“வரக் காப்பியும் கீழ் கதவும்”-1970கள்-ஸ்காப்ரோ தோட்டம்
கே.பாலமுருகன்

மாரி என்கிற மொட்ட தாத்தா
அண்ணாமலை

ஊஞ்சலாடும் நினைவுகள்
அமுதா

அலையில் நீந்தும் மனவெளி (அ) அவஸ்தையின் ரசிகை
ஏக்நாத் (ஆடுமாடு)

உப்பு
அமிர்தவர்ஷிணி அம்மா

நான் பியர் குடித்து வளர்ந்த கதை
சுரேஷ் கண்ணன்

பிரியா பி.ஈ.,
சந்தனமுல்லை

ஆகாசக் கனவு
உண்மைத்தமிழன்

ரயில்
கார்த்திகைப் பாண்டியன்

சிறிது காற்று
ஆ.முத்துராமலிங்கம்

வாழ்வைச் சுமத்தல்
காயத்ரி

ஒரு முத்தம்
நிர்மலா

பாலைஸ்! கோனைஸ்! கப்பைஸ்!
வத்றாப்பு சுந்தர்

நகைப்புக்காக அல்ல..
தீபா

ஆணி வேர்களும், சல்லி வேர்களும்
சேரல்

சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்
வழிப்போக்கன்

ஒரு இரவின் பதிவு
தமிழ்நதி

சாமக்கோடாங்கி
காமராஜ்

கதைகளை தின்பவன்
செல்வேந்திரன்

தெருக்கள் என்னும் போதிமரம்
ச.தமிழ்ச்செல்வன்

தங்கள் பதிவுகளை வெளியிட அனுமதித்த பதிவர்களுக்கும், இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், வம்சி புக்ஸுக்கும் எனது நன்றிகள்.

இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில், (வம்சி புக்ஸ்: கடை எண்:214) கிடைக்கும்!

 

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மீண்டும் தங்களுக்கும், வம்ழி பதிப்பகத்தாருக்கு நன்றியும், சக நண்பர்களுக்கு வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும் வம்சி பதிப்பகத்தாருக்கு நன்றி. படைப்புகள் இடம் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கிராமத்து நினைவலைகள்---புகைப்படங்கள்

    http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  4. என் எழுத்திற்கும் பதிப்புயிர் கொடுத்து அங்கீகரித்தமைக்கு மிக்க நன்றிகள்ண்ணே..!

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள் தோழர்...

    தொடரலாம்...

    பதிலளிநீக்கு
  6. மிகவும் நெகிழ்வாக உணர்கிறேன் தோழர்.. எழுதும் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய எழுத்தை ஒரு முறையாவது அச்சில் பார்க்க வேண்டும் என்பது கனவு.. அதை நனவாக்கி இருக்கிறீர்கள்.. ரொம்பநன்றி..

    பதிலளிநீக்கு
  7. குழந்தைகளின் கனவுகளுக்கு வண்ணம் தீட்டி அழகு பார்க்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள் மாதவராஜ் !!

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கங்களும், நன்றிகளும். புத்தகம் படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்களேன்!

    பதிலளிநீக்கு
  9. ஆகா...சொன்னதுபோலவே கொண்டு வந்துவிட்டீர்கள்!!மகிழ்ச்சியாக இருக்கிறது! தங்களுக்கும், வம்சி பதிப்பகத்தாருக்கும் நன்றிகள்! பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. ஐயா, வணக்கம்.

    பெருவெளிச் சலனங்கள், மரப்பாச்சியின் சில ஆடைகள்... ரெண்டு புத்தகமுமே வடிவமைப்பில் மிரட்டுகின்றன. சைனிங் அட்டைப்படமும் அவ்வளவு அசத்தல்.

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பெருமுயற்சிக்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!