புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வெளிச்சம் சிந்திய இந்த பவுர்ணமியில் இரவு யாவரையும் தூக்கி இடுப்பில் வைத்தபடி பயணம் செய்கிறது. தொலைதூரத்தில் நட்சத்திரப்புள்ளிகளென வரிசையாய் கடந்து போக ஒரு டிரெயின் சப்தம் தாலாட்டியபடி அசைந்து அசைந்து கரைகிறது. குளிர் கடலைப் போல ரகசியங்களை விழுங்கியபடி எங்கும் நிறைந்திருக்கிறது

நிலப்பரப்பும், மரங்களும் நிழலாய் பாவும் வசீகரவெளியில் காதலும், கருமமும் உட்கொண்ட பித்தனைப்போல வெறிக்கிறேன். வெளிர் நிறப் பறவை ஒன்று அனாதியாய் தலைக்கு மேல் இந்த நேரத்திலும் அமைதியாய் செல்கிறது. அறியாத பாவிகள் சிலர் பட்டாசு வெடிக்கிறார்கள்.

நமக்கான பாடலை இசைத்தபடி காலம் முன்னே செல்கிறது. அதன் கைவிரலைப் பிடித்துவிடும் எத்தனிப்பில் விரல்கள் துழாவுகின்றன.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் யாவருக்கும்!

கருத்துகள்

23 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அண்ணா,

    உங்களுக்கும், உங்களின் குடும்த்தான், சுற்றம் நட்பு என அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  3. தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.அக்கறை உள்ளவன் தான் தனது கவலைகளை கோபத்தை காட்டுகிறான்.தாங்கள் சமூகத்தின் மீது காட்டும் கோபம் வெகுவாக கவர்ந்தது.தங்களின் சமூக நேசத்திற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. இந்த புத்தாண்டில் எல்லா வளமும் பெற்றிட என் வாழ்த்துக்கள்

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழர்.. இந்த வருஷம் எனக்கு ரொம்ப நல்ல விதமா ஆரம்பிக்க நீங்களும் ஒரு காரணம்.. ரொம்ப நன்றி..:-))))

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள தோழரே

    தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கும், என்னைப் போல் பின்னுட்டமிடும் ஏனைய தோழர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  9. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    இன்றைய தினமணியின் நடுப்பக்க கட்டுரையாக வெளிவந்துள்ள "வலையுலகப் படைப்பாளிகள்!" என்னும் கட்டுரை தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றிச் சொல்கிறது. கட்டுரையைப் படிக்க (தமிழ் யுனிகோடில்): http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=176715&SectionID=133

    பதிலளிநீக்கு
  10. அண்ணா...

    தமக்கான நம்பிகைகளை பலப்படுத்துவதற்காகவே போராடிக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில் பிறருக்கு நம்பிகையை வார்த்தைகளில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களால் இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம்.

    புத்தாண்டு வணக்கங்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழரே!

    பதிலளிநீக்கு
  12. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்..

    பதிலளிநீக்கு
  13. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மாதவ் அண்ணா.

    பதிலளிநீக்கு
  14. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  15. பரிசலின் பதில் புத்தாண்டு வாழ்த்து இந்த இடத்தையை வெளிச்சமாக்குகிறது மாதவன்...

    அதில் நானும் ஒண்டிக் கொள்கிறேனே..

    பதிலளிநீக்கு
  16. குப்பன் யாஹூ!
    ஜோதி!
    பிரபாகர்!
    இறை!
    ஸ்டார்ஜன்!
    satturmaikan!
    லேகா!
    கார்த்திகை பாண்டியன்!
    பவித்ராபாலு!
    அம்பிகா!
    தஞ்சை ரமேஷ்!
    உமா மகேஸ்வரன்!
    பரிசல்காரன்!
    சூர்யா கண்ணன்!
    கும்க்கி!
    சரவணக்குமார்!
    சுபாங்கன்!
    ஹரிஹரன்!
    சுரேஷ்!
    பா.ராஜாராம்!

    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    தம்பி பரிசலின் வாழ்த்துக்கள் மேலும் உத்வேகமளிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  17. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  18. anna...!!!wish u a great year.(better late than never,isn't it?)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!