பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

எந்தவித நியதிகளும், விதிகளுமற்று மூர்க்கத்தனமான தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. ‘எல்லா தர்மங்களும் எனக்குத் தெரியும், எல்லா நியாயங்களும் எனக்குத் தெரியும்’ என்று ஜனநாயகமும், சட்டமும் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. எங்கள் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் வெறிபிடித்து நிற்கிறது.

முத்துவிஜயன் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து சென்ற பதிவில் தெரியப்படுத்தி இருந்தேன். அதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் பேசுவதென 9.12.2009 அன்று சென்றிருந்தோம். பேச்சுவார்த்தைக்கு பாண்டியன் கிராம வங்கி அலுவலர் சங்கத் தலைவராயிருக்கும் முத்து விஜயன் வரக்கூடாது என்று நிர்வாகம் தடை விதித்தது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அவர் பேச்சுவார்த்தைக்கு வரும் தகுதியை இழந்து விட்டாராம். நாங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தோம். அங்கேயே காலவரையற்ற  உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தோழர்கள்.சோலைமாணிக்கமும், செல்வகுமார் திலகராஜும் உட்கார்ந்தனர்.  நிர்வாகம் காவல்துறையை அழைத்தது. தோழர்கள் இருவரையும் காவல்துறை 9.12.2009 இரவு 8 மணிக்கு கைது செய்து அழைத்துச் சென்றது. பிறகு விடுவிக்கப்பட்டனர்.

கொதிப்படைந்த அலுவலர்களும், ஊழியர்களும் Lighning Strike செய்ய, 10.12.2009 அன்று மொத்தமுள்ள 195 கிளைகளில்,  120 கிளைகள் செயலற்றுப் போயின.  அறுபது சதவீதத்திற்கும் மேல் ஊழியர்களும், அலுவலர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர். கால அவகாசம், திட்டமிட்ட ஆயுத்தங்கள் எதுவுமின்றி நடந்த இந்த போராட்டம் மகத்தான் வெற்றி பெற்றது.

தாங்கிக் கொள்ள முடியாத நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அலுவலர்களை சஸ்பெண்ட் செய்துகொண்டு இருக்கிறது. இந்த நிமிடம் வரை 14 தோழர்கள் சஸ்பெண்ட் ஆகியிருக்கின்றனர். மொத்தம் 39 பேரை சஸ்பெண்ட் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. சஸ்பென்சன் ஆர்டரில் எந்தக் காரணங்களும் முறையாகச் சொல்லப்படவில்லை.

டிசம்பர் மாதம் வங்கியின் முக்கால் வருடக் கணக்கு முடிக்கும் நேரம். இந்த நேரத்தில் மொத்தமுள்ள அலுவலர்களில் 10 சதவீதத்தினருக்கும் அதிகமானோரை சஸ்பெண்ட் செய்ய இருப்பது பெரும் கேலிக்கூத்து.

இதற்கிடையில், ஒரு சந்தோஷமான செய்தியுமுண்டு. தோழர்.முத்து விஜயன் அவர்களின் சஸ்பென்சன் ஆர்டரை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச்சில் வழக்குத் தொடுக்கப்பட்டு இருந்தது. அதில் வெற்றி பெற்றிருக்கிறோம். Stay order  கிடைத்திருக்கிறது.

இதற்கு முன்பு, ஒரு பத்திரிகையில் போராட்டம் குறித்து எழுதியதற்காக தோழர்கள் காமராஜும், அண்டோவும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதும், கோர்ட் அதற்கு stay order கொடுத்திருந்தது. இப்போது தோழர் முத்துவிஜயன் விஷயத்திலும் அப்படியே. இதற்குப் பிறகும் தொடர்ந்து அலுவலர்களை எந்தக் முறையானக் காரணங்களுமின்றி சஸ்பெண்ட் செய்யும் இந்த நிர்வாகத்தை என்னவென்று சொல்வது?

ஊழியர்களையும், அலுவலர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும், பெண் ஊழியர்கள் மீது பரிவு காட்ட வேண்டும், வங்கியை வெறும் நகைக்கடன் வங்கியாக மாற்றிடக் கூடாது என்று தொடங்கிய போராட்டம் இன்று பெரும் அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறது.

வங்கியின் தலைமையகம் இருக்கும் விருதுநகரில், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், அனைத்துத் தொழிற்சங்கங்களையும் திரட்டி மிகப்பெரும் பேரணியும், போராட்டங்களும் நடத்துவது என சங்கங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

வெயிலுக்கும் வெண்பனிக்கும்
மலைகள் அஞ்சுவதில்லை!

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. வெற்றி பெறுவீர்கள் தோழரே!

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. //
  பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்//வெயிலுக்கும் வெண்பனிக்கும்
  மலைகள் அஞ்சுவதில்லை!
  //
  இரண்டுமே உண்மைதான்!! தங்கம் செய்யாததையும் சங்கம் செய்யும் என்பார்கள்! உங்கள் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலைப்பூவில் பதிவிட்டமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 4. //வெயிலுக்கும் வெண்பனிக்கும்
  மலைகள் அஞ்சுவதில்லை! //

  மிகச் சரியாக சொன்னீர்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் தோழர்களே.

  பதிலளிநீக்கு
 5. I would say your bank management is better. Had this incident happended in ICICI bank or ABN Amro bank, you could not have fight this much at all.

  Come on, we are ina capitalistic economy and capitalistic government. We voters have also voted for the capitalistic government.

  Now there is no point in talking about communism, marxism etc.

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் அங்கிள்!
  நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
  //வெயிலுக்கும் வெண்பனிக்கும்
  மலைகள் அஞ்சுவதில்லை!//
  :-) நிச்சயமாக

  பதிலளிநீக்கு
 7. அன்பு மாதவராஜ்,

  போராட்டங்கள் எனக்கு பழக்கம் இல்லை. உங்கள் போராட்டங்களின் வலியும் வேதனையும் எனக்கு புரிகிற மாதிரி தான் இருக்கிறது. அன்று காமராஜ் உண்ணாவிரதம் இருக்க போகிறோம் இன்று என்று சொன்ன போது, சாப்பிடாம இருந்தா வாயு தொந்தரவு இருக்காதா, ஒரு வேளை சாப்பிடலேன்னா எனக்கு கையெல்லாம் நடுங்குது, கிறக்கமா இருக்கு எப்படி முடியும்னு தோனுச்சு. ஒருவிதமான உறுதி நிலைப்பாடு இது எல்லாத்தையும் மாற்றிடும் போல. தற்காலிக பணிநீக்கம் பெற்ற எல்லாருக்கும் நியாயமாய் கிடைக்க வேண்டிய நீதி, நிதி கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  எல்லாமே நல்லபடியா நடக்கும்... நிர்வாகம் உங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் என்று தீவிரமாக நம்புகிறேன்.

  மாறா அன்புடன்,
  ராகவன்

  பதிலளிநீக்கு
 8. தோழர். சுயநலமற்ற லட்சியத்திற்கான போராட்டங்கள் அடைவது தற்காலிக தோல்விகள்தாம்.
  உறுதியாக இருங்கள் தோழர்களே!
  வெற்றி நிச்சயம்!

  பதிலளிநீக்கு
 9. தோழரே

  வணக்கம். உலகெங்கும் முதலாளித்துவத்தின் கோரப்பற்கள் உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சி வருகின்றன... அதனுடைய தாக்கம் நிச்சயமாய் எல்லா பொதுத்துறை நிர்வாகங்களிலும் ஏற்படுகின்றன.. போராட்டம் என்கிற வார்த்தையை கெட்ட வார்த்தைகளின் அகராதியில் சேர்க்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.. வெகுசன ஊடகங்கள் அந்த பிம்பத்தை ஏற்படுத்துவதில் முன்னணியில் நிற்கின்றன..தொடர் போராட்டம், தொய்வில்லாமல் நடக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. வால்பையன்!
  மண்குதிரை!
  ஆதி!
  சரவணக்குமார்!
  குப்பன் யாஹூ!
  தீபா!
  ராகவன்!
  ரவிக்குமார்!
  பவித்ராபாலு!

  அனைவரின் வாழ்த்துக்களுக்கும், ஆதரவுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!