சென்னை புத்தகக் கண்காட்சியில் ’பூக்களிலிருந்து புத்தகங்கள்’!

நேற்று பவா செல்லத்துரை போன்செய்து ‘பூக்களிலிருந்து புத்தகங்கள்’ அச்சேறிவிட்டன என்றும், அதன் அட்டைப்படங்களை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். இன்று அனுப்பியும் வைத்திருக்கிறார்.

கடந்த இரண்டு மூன்று வாரங்கள் எப்படி கடந்து போயின என்பதை யோசித்துப் பார்க்கும் இன்னும் நிதானம் வரவில்லை. இதுவரை 47 அலுவலர்களை எங்கள் வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதிலும், தொடர்ந்து போராட்டங்களை தீவீரப்படுத்துவதிலுமே கவனம் முழுவதும் இருக்கிறது.

இதற்கு இடையில் அவ்வப்போது நேரம் ஒதுக்கி, புத்தகங்களுக்கான பதிவுகளை தொகுத்து, முடிந்தவரை பதிவர்களுக்கு தெரியப்படுத்தி, யுனிகோர்டிலிருந்து செந்தமிழ் எழுத்துருக்களுக்கு மாற்றி, புரூப் பார்த்து பவா செல்லத்துரைக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் இப்போது, டிசம்பர் 30ம் தேதி தொடங்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு, நமது புத்தகங்கள் வந்துவிடும் என சொல்லிவிட்டார். இன்னும் பலரது பதிவுகள் சேர்க்கப்படாமலிருக்கலாம். இன்னபிற பிழைகள்கூட ஏற்பட்டும் இருக்கலாம்.  சமீபகாலங்களில் எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளே காரணமாக இருப்பினும், நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

புத்தகக் கண்காட்சியில், வம்சி புக்ஸ்- புத்தகக் கடை எண் 214. வலைப்பதிவுகளிலிருந்து வெளிவரும் இந்தப் புத்தகங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

short story cover

(சிறுகதைத்தொகுப்பு)

 

kilinjalgal parakindrana

(கவிதைத் தொகுப்பு)

 

peruveli chalanangal

(அனுபவங்களின் தொகுப்பு)

 

mathavaraj book cover

(எனது சொற்சித்திரங்களின் தொகுப்பு)

வம்சி புக்ஸில் இருந்து வெளியாகும் அனைத்து புத்தகங்களுக்கு இங்கு சென்று பார்க்கலாம்.

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. நல்ல விஷயம்..நூலை வாங்குவதற்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். உங்கள் புத்தகங்களை வாங்கும் நாளை எதிர்நோக்கி.......

  உடன் பகிர்வுக்கு நன்றியும்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி தோழர்.ஆவலுடன் காத்திருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 4. புத்தகங்கள் தொகுக்கும் பணி முடிவடைந்து விட்டதா?

  வாழ்த்துக்கள்.

  உங்கள் போராட்டமும் விரைவில்
  வெற்றி பெற வேண்டும்

  பதிலளிநீக்கு
 5. சென்னை வந்ததும் வம்சி ஸ்டாலில் கடத்திச்செல்லவேண்டியவை நிறைய இருக்கின்றன.

  வாழ்த்துக்கள் மாதவராஜ் அவர்களே !!! பல சிரமங்களுக்கிடையில் புத்தகங்களை கொண்டுவந்தமைக்கு !!!

  பதிலளிநீக்கு
 6. பல அலுவல்களுக்கிடையில் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் போராட்டம் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துகள். கடும் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் புத்தகங்களைக் கொண்டு வந்திருப்பதில் உங்கள் உழைப்பு தெரிகிறது. //வலைப்பதிவுகளிலிருந்து வெளிவரும் இந்தப் புத்தகங்களுக்கு ஆதரவு தாருங்கள்// இதெல்லாம் நீங்க சொல்லவே வேண்டாம். தானா நடக்கும்..! நம்ம மக்கள் சீக்கிரமே இரண்டாம் பதிப்பு கொண்டுவர வைக்கிற அளவுக்கு ஆதரவு தருவாங்க!

  பதிலளிநீக்கு
 8. புத்தகங்கள் வாங்க ஆவலாக இருக்கிறேன்.... புத்தகக்கண்காட்சிக்காகவே சென்னை வர வேண்டும் எனத் தோன்றுகிறது... அது சரி... ஜா. என்பதே கிரந்த எழுத்து... அதை ஆங்கிலத்தில் 'ஜே' என நூல்களில் போட்டிருக்கிறீர்களே...விவரமறிந்த உங்களைப் போன்றவர்களே இப்படிச் செய்தால்தான் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 9. நன்றி தோழர்.ஆவலுடன் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துகள் தோழர். மகிழ்ச்சியான செய்தி. புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது சந்திக்கலாம்.

  - பொன்.வாசுதேவன்.

  பதிலளிநீக்கு
 11. பல அலுவல்களுக்கிடையில் இந்த முயற்சிக்கு பூங்கொத்து!

  பதிலளிநீக்கு
 12. பல்வேறு வேலை அழுத்தங்களுக்கிடையிலும் இந்த பெரும் பணியை தொய்வின்றி நடத்தியிருக்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்களும், நன்றிகளும்..!

  பதிலளிநீக்கு
 13. நிலாரசிகன்!
  அமிர்தவர்ஷிணி அம்மா!
  நந்தா!
  தண்டோரா!
  அம்பிகா!
  குப்பன் யாஹூ!
  butterfly surya!
  செய்யது!
  கேபிள் சங்கர்!
  அமுதா!
  RVC!
  ரவிக்குமார்!
  சென்ஷி!
  அகநாழிகை!
  அன்புடன் அருணா!
  உண்மைத்தமிழன்!

  அனைவருக்கும் நன்றி.

  ஆதி!
  நான் பொதுவாக மாதவராஜ் என்றே எழுதுகிறேன். பவா செல்லத்துரை இனிஷியலை இப்படி ஜே என்று போட்டு அட்டைப்படம் பிரிண்ட் பண்ணி விட்டார். டிசைன் பண்ணும்போதே நான் பார்த்திருந்தால் நிச்சயம் அனுமதித்திருக்க மாட்டேன். என்ன செய்ய, நேரம் காலமற்று ஓடித் திரிந்த நெருக்கடிகளால் ஏற்பட்ட தவறுகளில் இதுவும் ஒன்று. வருத்தமாயிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 14. மிக்க மகிழ்ச்சி மாதவராஜ் சார்! சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்கள் புத்தகங்களை வாங்க ஆவலோடு இருக்கிறேன்! ”வம்சி புக்ஸ்” அரங்கிலேயே வாங்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 15. அனைவருக்கும் நன்றிகள்.
  புத்தகம் வாங்கி கருத்துக்களை பகிர்ந்தால் மிக்க சந்தோஷம்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!