முக்கிய மூன்று செய்திகளும், முக்கிய நமது பத்திரிகைகளும்

 

ஒரே நாளில் சென்செக்ஸ் 507 புள்ளிகள் உயர்ந்தது! 
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.296 உயர்ந்தது!!
உணவு தானியங்களின் விலை கடுமையாக உயர்கிறது!!!

இன்றைய முக்கிய செய்திகள் இவை. முதல் இரண்டு செய்திகள் கிட்டத்தட்ட அனேகமாக அனைத்து பிரபல பத்திரிகைகளிலும் இன்று பெரிது பெரிதாய் வந்திருக்கின்றன.  மூன்றாவது செய்தியைச் சொல்லி இருப்பவர் இந்த தேசத்தின் விவசாயத்துறை அமைச்சர் மாண்புமிகு சரத்பவார் அவர்கள். புது தில்லியில் பொருளாதார பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் உணவு தானியப் பொருள் விலையில் ஏற்பட்டுள்ள கடும் பண வீக்கம் கவலையளிக்கிறது என்று ஒப்புக்கொண்டுள்ளார். தீக்கதிர் பத்திரிகையில் இதுதான் முதல் பக்கத்தின் முக்கியச் செய்தியாக வந்திருக்கிறது. முக்கிய பத்திரிகைகளுக்கு இதெல்லாம் முக்கியச் செய்தியாகத் தெரியவில்லை போலும். தங்கமும், பங்குகளுமா பசியாற்றப் போகின்றன?

பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டு இருக்கின்றனர். வரலாறு காணாத அளவுக்கு பருப்பு வகைகளின் விலை உயர்ந்து கொண்டு இருக்கிறது. அரிசி உற்பத்தி 13 மில்லியன் டன் குறைவாக இருக்கிறது. சமாளிப்பதற்குத் தேவையான கையிருப்பு இருப்பதாகக் கூறி வந்தது மத்திய அரசு. இப்போது, இறக்குமதி மூலம் சரிசெய்ய இருக்கிறோம் என்கிறார் விவசாய அமைச்சர்.

தேசத்தை அச்சுறுத்தும் ஒரு மாபெரும் ஆபத்து சுனாமி போல் வர இருக்கிறது என்பதுதான் உண்மை. அதைத் தடுப்பதற்கான தெளிவான திட்டங்கள் இல்லாமல், இன்னமும் மன்மோகன் சிங் “ஒன்பது சதவீத வளர்ச்சி” என்று சதாநேரமும் உச்சரித்துக் கொண்டு இருக்கிறார்.

ஏறிக்கொண்டு இருக்கும் விலைவாசி, மேல்தட்டில் இருப்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. மத்தியதர வர்க்கத்தினரை ஊசிமேல் உட்கார வைத்து அவதியுறச் செய்யும். அடித்தட்டு மக்களை கொன்று தீர்க்கும். ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளின் சதவீதம் 46 என UNICEF புள்ளிவிபரம் சொல்கிறது. இது ஆப்பிரிக்காவின் சஹாராப்பகுதியை விட அதிகம் என்றும் அதே அமைப்பு சான்றிதழ் வழங்கி இருக்கிறது. வரும் உணவுப் பஞ்சத்தினால் இந்தக் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.

சாதாரண மக்களின் வாழ்க்கை, வேதனைகள், துயரங்கள் எல்லாம் இந்த முக்கிய  பத்திரிகைகளின் கண்களுக்குத் தெரிவது இல்லை. அவர்களின் பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் பொதுமக்களிடம் எழுவதை அவை விரும்புவது இல்லை. அதனால்தான் இதை பெரிய அளவில் வெளிப்படுத்தும் அக்கறை இல்லை.

வாழ்க பத்திரிகை தர்மம்!!!

கருத்துகள்

24 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சென்செக்ஸ்-ம்/ தங்கமும் இருக்கப்பட்டவனோட கவலை... ஆனா அதுக்குத்தானே அத்தனே பேரும் அலறுராங்க...

    9% வளர்ச்சி பணக்காரங்களுக்கானாது....

    //உணவு தானியங்களின் விலை கடுமையாக உயர்கிறது!!! //

    ஏன் ஏறாது....
    யாரு கண்டுக்கிட்டா... வெள்ளாமையைப் பத்தி, விளைச்சளைப்பத்தி...

    பதிலளிநீக்கு
  2. எதிர்கால பயம் மனதை தோற்றிகொல்கிறது. என்ன செய்ய போகிறது அரசாங்கம்?

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. இந்த அரசியல் பீடைகள் என்றைக்கு ஒழிகிறதோ அதுவரை இது தொடரத்தான் செய்யும்.

    காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டங்கள் ஏரிகளுக்கு புகழ் பெற்றவை. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தஞ்சை மாவட்டத்துக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வந்தவை இந்த மாவட்டங்கள், நெல் விளைச்சலில்.

    1996-ல் தஞ்சை, திருச்சி மாவட்டங்களை விட 26 சதவிகிதம் அதிக நெல் விளைச்சல் கண்டு, மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்தவர்கள்தான் இந்த மாவட்ட விவசாயிகள்....

    இன்று?

    ஹூண்டாய் தொடங்கி வரிசையாக தொழிற்சாலைகள். இவை கட்டப்பட்டிருக்கும் பகுதிகளை முடிந்தால் ஒருமுறை நேரில் சென்று பாருங்கள்.... எல்லாமே பெரிய பெரிய ஏரிகள்!

    முதலில் ஏரிகளையும், தொடர்ந்து வயல்வெளிகளையும் அழித்த புண்ணியவான்கள்தான் இன்றும் நம்மை ஆள்கிறார்கள். இப்போதும் 1000 சதுரை மைல்களுக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் அறிவித்துள்ளார் துணை முதல்வர். இருக்கிற கொஞ்ச நஞ்ச நிலத்தையும், ஏரிகளையும் தொழிற்சாலை முதலாளிகளுக்கு பட்டா போட்டுத் தர.

    அப்புறம் ஏன் ஏறாது உணவுப் பொருள்கள் விலை...

    நிறைய பேர் நினைக்கிறார்கள் விலையேற்றம் இந்தியா முழுக்க கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கிறதென்று.

    ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் அது எந்த அளவுக்கு வேறுபடுகிறதென்பது போய்ப் பார்த்தால்தான் தெரியும்.

    பருப்பு ஆந்திராவில் ஒரு விலை... தமிழகத்தில் ஒரு விலை, மத்தியப் பிரதேசத்தில் ஒரு விலை...

    காரணம் அந்தந்தப் பகுதியின் விவசாய உற்பத்திதான். அதிக உற்பத்தி இருந்து உள்ளூர் நுகர்வுக்கும் அது பெருமளவு பயந்படும்போது தானாகவே விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

    தமிழகத்தில் நிலை மோசத்திலிருந்து படுமோசத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது... அந்த உணர்வே இல்லாமல் நாம் இன்னும் அரசியல்வாதி - நடிகர்களின் கீரிப்பிள்ளைச் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

    -சிவா

    பதிலளிநீக்கு
  5. தானியங்களின் விளை உயர்வு செய்தி “தமிழ் ஓசை” நாளேட்டில் முதல்பக்க முதன்மை செய்தியாக வந்தது.

    பதிலளிநீக்கு
  6. unmaithaam kavaliyalikkirathu inthach seythi

    kal illaama
    kai illaama
    uruppukal korappattu
    koramaana manusangka irukkaanghka
    VAYIRU illaatha manusa illai
    illave illai

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு, விவசாயத்தில் ஒரு புரட்சி மீண்டும் வர வேண்டும், பெரிய அளவிலான திட்டம் வேண்டும், இல்லாவிட்டால் அடுத்த 5 ஆண்டில் நாம் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரலாம்! இந்த வீணா போண கிழப்பயலுங்க ஆட்சியில இருக்கற வரைக்கும் இந்தியாவுக்கு விமோசனமே இல்லை!

    பதிலளிநீக்கு
  8. yanadu neenda naal kovam idu oru cinimaku mukkeyam kodupadu alvukku inda samudatukku koduppadilli patterkaigal yado ornru 2 patterekkaigal varuvadu unmai taan adu yanda alvukku makkalukku pooi sergeradu yanbadu tariya villai
    jani
    pls tamil la type panna tariyavillai tarindaal innum type saivean
    azze

    பதிலளிநீக்கு
  9. வாசகர்களாகிய நாமும் இந்த மாதிரி செய்திகளை தானே விரும்பி படிக்கிர்றோம், இந்த மாதிரி பத்திரிக்கைகளை தானே ஆதரிக்கிறோம்

    பதிலளிநீக்கு
  10. pathirgaigaL seiya thavaRiyathai ungaLaip ponRavargaL thaam seigiRaargaL.

    NanRi.

    பதிலளிநீக்கு
  11. இந்தியாவின் எந்த அரசியல்வாதியும் நாட்டை பற்றியும் நாட்டு மக்களைப்பற்றியும்
    சிந்தித்தாக தெரிய வில்லை, எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு தனக்கும்,தன குடும்பத்துக்கும் சொத்து சேர்த்து வைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

    எங்கிருந்து நாடு முன்னேறும்.இவர்களிடம் நாம் எதை எதிர்பார்க்கமுடியும்.

    அபுல்.

    பதிலளிநீக்கு
  12. //வாசகர்களாகிய நாமும் இந்த மாதிரி செய்திகளை தானே விரும்பி படிக்கிர்றோம், இந்த மாதிரி பத்திரிக்கைகளை தானே ஆதரிக்கிறோம்//

    இது நேர்மையான பரிசீலனை, பகுதி நேர முற்போக்கு யூனிஃபார்மை கழட்டி விட்டு பார்த்தால் உள்ளே பளிச்சிடும் உண்மை

    பதிலளிநீக்கு
  13. இடுகையையும் பின்னூட்டங்களையும் வாசிக்கும் போதே ஒரு வித நடுக்கம் வருது..

    பதிலளிநீக்கு
  14. மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை அப்படியே தருவது என்கிற போர்வையில் இவர்கள் விருப்பத்தை மக்கள் மீது சுமத்தி வருகிறார்கள். பத்திரிக்கை முதலாளிகளுக்கு பெட்டிகடை முதலாளியை பற்றியா கவலை இருக்கும்

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் மாதவராஜ்

    அனைவரும் சிந்திக்க வேண்டிய கட்டுரை.

    நம் நாட்டின் அரசியல் தலைமைகள் தங்கள் சுய நலனை
    மட்டுமே பார்கின்றன.

    ஓட்டை பணம் கொடுத்து வாங்கிவிடலாம்
    கையில் இருக்கும் மீடியாக்கள் மூலம் புத்தனுக்கு அடுத்து
    ஒரே நல்லவர்கள் நாங்கள்தான் என்று சொல்லி விடலாம்
    வீட்டில் தினம் சின்ன திரையில் காட்டும் நச்சு சீரியல்களை
    கொண்டு வரும் தலைமுறையே எதிர் காலத்தையே சூனியம்ஆக்கலாம்.

    ஆன் லைன் வர்த்தக பண முதலாளிகளின் ஆணி வேரை
    அடியோடு அழிக்க வேண்டும்.

    பாழாப்போன நமது அரசியல் அமைப்பின் சட்டத்தை மறு ஆய்வின் மூலம் மாற்றி அமைக்க வேண்டும்.

    ......

    பதிலளிநீக்கு
  16. உண்மை நிலையும் வருங்கால நினைவும் மிக்க கவலை கொள்ள வைக்கிறது.
    வேளாண்மையும் விவசாயமும் ஏட்டில் படிப்பதற்கு மட்டும் என்ற நாள் விரைவில் வந்து விடும் போல் உள்ளது.

    பதிலளிநீக்கு
  17. நல்ல பதிவு தோழா! இத பத்தி பேசுனா பக்கத்துல இருக்கற பாதிப்ப உணர்ர ஆட்களே “ஆமாப்ப என்ன பண்றது... சரி இன்னைக்கு கிரிக்கெட்ல சச்சின் 17000 ரன் எடுத்துருவாரா..னு கவல படறாரு. அந்த அளவு மக்கள களியாட்டங்களில் மூழ்கடுச்சுட்டங்க. ஆட்சில இருக்கறவங்களுக்கு என்னதான் வேலையோ?

    பதிலளிநீக்கு
  18. கவலைப்படவேண்டிய விஷயம்

    பதிலளிநீக்கு
  19. அறுப்பவனுக்கல்ல தோழரே வலி, அறுபடும் ஆட்டுக்குத்தானே அத்தனையும்.

    எல்லாம் யாவாரம் சாமி யாவாரம்...

    அவனுக்குத் தெரியும் எதை எழுதினால் அரசு விளம்பரம் கிடைக்கும், என்று......

    பத்திரிக்கையாவது....... தர்மமாவது.....



    ம்ம்ம்ம்......என்னத்தச் சொல்ல....

    பதிலளிநீக்கு
  20. Magazines telling the things to people but not showing the way.So the right messages not at all reaching the corners
    ---vimalavidya---Chalakudy

    பதிலளிநீக்கு
  21. வேதனையான விசயம். அரசு எப்போது விழிக்கும் தெரியவில்லை :((

    பதிலளிநீக்கு
  22. அனைவருக்கும் நன்றிகள்.

    உண்மைதான் கதிர். நம்மை இதுவரை ஆண்டவர்கள் விவசாயத்தை புறக்கணித்து விட்டனர். இருள் கவிந்த சாபமாய் அது நம் தலைக்கு மேலே நிற்கிறது.

    சிவா, இந்தப் பதிவுக்கு மேலும் அரத்தங்களையும், அடர்த்தியையும் தந்திருக்கிரார் எனத்தான் சொல்ல வேண்டும்.

    பிரபல ஊடகங்கள் அனைத்துமே முதலாளிகளின் கைகளில்தான் இருக்கின்றன. தங்கள் வர்க்க நலன் மட்டுமே அவைகளுக்கு பிரதானம். தர்மம் எல்லாம் பிறகுதான்.

    மக்கள் விழித்துக் கொள்வதும், கேள்விகள் கேட்பதும் மிக அவசியம்.
    புதுகை சிவா சொன்னது போல் //ஆன் லைன் வர்த்தக பண முதலாளிகளின் ஆணி வேரை
    அடியோடு அழிக்க வேண்டும்//.
    இல்லையென்றால் இளவட்டம் பகிர்ந்துகொண்ட பயம்தான் எதிர்காலமாகிப் போகும்

    பதிலளிநீக்கு
  23. ஜி மெயில் சென்று அல்லது ஜிமெயில் இல ஐ டி ஏற்படுத்திக்கொண்டு பின்னர் உங்கள் அகௌண்டை திறந்து கம்போஸ் மெயில் என்பதை click செய்தால் மெயில் பாக்ஸ் ஓபன் ஆகும் அங்கு அஎன்ற எழுது இருக்கும் அதனை click செய்து தட்டச்சு செய்து ச்பசே பார் அழுத்தினால் ஆங்கிலம் தமிழாகமாரும் அதனை கோப்பி செய்து ப்லோக்ச்போட்டில் பேஸ்ட் செய்துகொள்ளலாம் அல்லது ற்றன்ச்ளிடேரடின்.com சென்று அங்கு தமிழ் என்பதை click செய்து ந்தட்டசு செய்து கோப்பி செய்து பின்னர் வேண்டிய இடத்தில பேஸ்ட் செய்து கொள்ளலாம்
    இது azeem நண்பர் எப்படி தமிழில் இங்கு எழுதுவது என்று கேட்டிருந்தார்
    --
    அன்புடன் இனியன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!