கிண்டர் ஜாய்

 

மேன்சன் மாடியிலிருந்து
முகச்சவரம் செய்தபடி பார்த்தவன்
பட்டாம்பூச்சியானேன்
இன்று சனிக்கிழமையாதலால்
சீருடைகள் இல்லை
சாலையெல்லாம்
வண்ண வண்ணப் பூக்கள்
அரை நாள் முடித்து
ஆறரை மணி நேரம் சென்றால்
என் பூக்களை பர்ர்க்கலாம்
நேற்றிரவே
இரண்டு கிண்டர் ஜாய்களை
வாங்கி வைத்து விட்டேன்
வழித்தெறிய முடியாத
அன்பு முத்தங்களும்
ஆசை முத்தங்களும்
ஒட்டிய உரோமங்களோடு
திங்கட்கிழமை காலை
மீண்டும் இங்கே
திரும்பி வருவேன்.

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //வழித்தெறிய முடியாத
    அன்பு முத்தங்களும்
    ஆசை முத்தங்களும்
    ஒட்டிய உரோமங்களோடு//

    அழகான கவிதை

    ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  2. படம் - கலக்கல்!!
    நல்லாருக்கு கவிதை!

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப தடவை வந்து வந்து இந்த கவிதையை வாசித்து போகிறேன் மாதவன்.தட்டை மொழியில் இவ்வளவு அடர்த்தியை பீச்ச முடியுமாவென பிரமிப்பா இருக்கு.

    //வழித்தெறிய முடியாத
    அன்பு முத்தங்களும்
    ஆசை முத்தங்களும்
    ஒட்டிய உரோமங்களோடு//

    இங்கு கவிதை குதியாட்டம் போடுது.எதுவுமே பேசாத ஜெயராம் மாமா,கொஞ்சம்"தண்ணிக்கு"பிறகு.."மாப்ள"எனும் போது மனசு குதிக்குமே,அது போல.

    பதிலளிநீக்கு
  4. யதார்த்தமான அழகான கவிதை.......

    பதிலளிநீக்கு
  5. வலியையும் வலிக்காமல் தந்திருக்கிறீர்கள்.

    இனிமை

    பதிலளிநீக்கு
  6. வழித்தெறிய முடியாத
    அன்பு முத்தங்களும்
    ஆசை முத்தங்களும். கவிதையை விசுவலா உணர முடிகிறது. ஏக்கமும், ஆவலும் வரிகளில் வழிகிறது.

    பதிலளிநீக்கு
  7. அன்பு மாதவராஜ்,

    உங்கள் கவிதை ஒரு சுகானுபவம் மாதவராஜ்!

    ”இரண்டு கிண்டர் ஜாய்களை வாங்கி வைத்து விட்டேன்”.

    அன்பில் கடைவிரித்து காத்திருக்கிறேன் மாதவராஜ், கை நிறைய, மனசு நிறைய கிண்டர் ஜாய்களை அள்ளி ஏந்திக் கொள்ள! நாட்கள் நகருகிறது நரை கூடுமுன் கை கூட வேண்டும் என்று அரற்றுகிறது மனசு கிழப்பருவம் கூடி நடுங்குகிறது விரல்கள், கித்தானுக்குள் அடங்காமல் திமிரும் வர்ணங்களில் தெறித்து விழுகிறது யௌவனம், யயாதியை தியானிக்கிறது நெக்குருகி, ஒழுகும் உயிரை உள்ளங்கையில் ஏந்தி, கை பிடித்து கடைத்தேற வலிதோள்கள் பற்றிக் கொஞ்சம் ஆசுவாசமடைகிறேன்.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  8. கார்டூன் யோசனை அருமையானது

    பதிலளிநீக்கு
  9. ரசித்தவர்களுக்கும்,உணர்தவர்களுக்கும் நன்றிகள்.
    ராஜாராமின் வார்த்தைகள், இப்படியெல்லாம் எழுதுவதற்கு தைரியம் கொடுக்கிறது.
    ராகவனின் கைகளைப் பிடித்துக் கொள்கிறேன்.சொல்ல வார்த்தைகளற்று போகிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!