காட்டாறு : எழுத்தாளர் ஷாஜஹான்!

 


.ஏ.எஸ். நேர்முகத் தேர்வுக்கு அவனுக்கு அழைப்பு வந்திருக்கும். எப்படியும் ஐ.ஏ.எஸ். ஆகிவிடுவான் என வீடே அவனை நம்பியிருக்கும். தாலுகா ஆபிஸில் பியூனாக வேலை பார்க்கும் அவனது தந்தையை எடுபிடி வேலைகள் செய்யச் சொல்ல மற்றவர்களுக்கு கூச்சம் வரும். எல்லாம் பொய்த்துப் போகும். விரக்தியால் வாடுவான். ரெயில்வே நிலையம் சென்று தனிமையில் எதாவது புத்தகம் படித்துக்கொண்டு இருப்பான். கலைந்த முடியும், சவரம் செய்யப்படாத முடியுமான தோற்றம்.

அப்போது யாரோ அருகில் வருவது போலிருக்கும். நிமிர்ந்து பார்ப்பான்.  ஒரு இளம் தம்பதியினர் கையில் குழந்தையோடு நிற்பார்கள். அவளை அவனுக்குத் தெரியும். அவனோடு கல்லூரியில் படித்தவள். ”எங்க வகுப்பிலேயே இவந்தான் பிரில்லியண்ட்” என்று அவனை தன் கணவனிடம் அறிமுகம் செய்து வைப்பாள். அவள் கணவன், குழந்தைக்கு எதாவது வாங்கிவருவதாக குழந்தையோடு செல்வான். இவர்கள் இருவரும் அமைதியாகவே இருப்பார்கள். கொஞ்ச நேரத்தில் கணவன் வருவான். டிரெயினும் புறப்படும்.

ஓடிக்கொண்டு இருக்கும் டிரெயினில் அவள் குழந்தையை நெஞ்சோடு அணைத்தவாறு ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே இருப்பாள். மௌனமாய் அழுகை பெருக்கெடுக்கும். அவள் கணவன் சட்டென்று பக்கத்தில் இருந்த பேப்பரை எடுத்து தன் முகத்தை மறைத்துக் கொள்வான், தான் கவனித்து விட்டதை அவள் அறியவேண்டாம் என.(’ஆகாயப் பந்தல்’ சிறுகதை)  

வள் தன் அண்ணனோடும் அண்ணியோடும் இருப்பாள்.  ஒரு இளஞனை காதலிப்பாள். அதை அண்ணியிடம் அவ்வப்போது பகிர்ந்து கொள்வாள். அண்ணி எப்போதும் பழைய பாடல்களை பாடிக்கொண்டு இருப்பாள்.

அந்த இளைஞனுக்கு குடும்பச் சூழலால் வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடாகும். வேதக்கோயிலில் திருமணம் நடக்கும் அன்று முழுவதும் அழுது தவித்துப் போவாள். அண்ணிதான் அவளுக்கு ஆறுதல் சொல்வாள்.

பிறகு ஒருநாள் வீட்டின் பின்பக்கம் தனிமையாய் இருக்கும்போது “நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா நிலா..” என்று தன்னையுமறியாமல் பாடுவாள்.  எப்படி இந்த பாட்டு பாடத் தோன்றியது என ஒருகணம் யோசிப்பாள். எதோ புரிந்த மாதிரி இருக்க, அண்ணியைப் பார்க்க உள்ளே ஓடுவாள்.(’கண்ணில் தெரியும் வானம்’ சிறுகதை)

வை எழுத்தாளர் ஷாஜஹான் எழுதிய இரண்டு சிறுகதைகளின் சுருக்கம். மிக அற்புதமான மொழியில், நுட்பமாய் எழுதக் கூடியவர். 1980களின் பிற்பகுதியில் என்னோடு எழுத ஆரம்பித்தவர். பத்து பதினைந்து கதைகள் போல எழுதினார். பிறகு என்னைப் போலவே எழுதாமல் போனவர். நேரில் சிரிக்கச் சிரிக்க பேசும் அவரின் கதைகள் ஒவ்வொன்றையும் படித்து முடிக்கும்போது நான் தேம்பி தேம்பி அழுதுதான் போயிருக்கிறேன். ‘மனசிருந்தால் புளிய இலையில் கூட படுத்துறங்கலாம்’ என்னும் அவரின் வார்த்தைகள் மகத்தான பொன்மொழி போல் எனக்குள்ளே இருக்கிறது.

ஷாஜஹானைப் பற்றி பிறிதொரு கணம் தனியாக ஒரு பதிவு எழுதுவேன். இப்போது அவரது சிறுகதைகளைப் பற்றி மட்டுமே. இவரது சிறுகதைகளை தொகுத்து ரொம்பநாள் கழித்து வம்சி புக்ஸ் “காட்டாறு’ என வெளியிட்டு இருக்கிறது.

“எல்லாக் கதைகளிலும் சொன்னதைவிட சொல்லாததே அதிகம். இது வாசகனின் படைப்பு சக்தி மீது எழுத்தாளன் கொள்ளும் நம்பிக்கையும், மரியாதையும் சார்ந்தது” என இவரது இந்த சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் முன்னுரை எழுதியுள்ளார். “இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் வாசகனில் நுட்பமான அதிர்வலைகளை கிளர்த்துவதாய் இருக்கிறது” என்னும் அவரது வார்த்தைகள் சத்தியமான உண்மை.

கதைகளைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கும் அந்த அதிர்வுகள் நேரும்.

காட்டாறு
விலை : ரூ.50/-

வெளியிடு:
வம்சி புக்ஸ்
19, டி.எம். சாரோன்
திருவண்ணாமலை - 606 601

Comments

17 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. சுருக்கமாகச் சொன்னாலும் என் மனதை மிகவும் கவர்ந்தது.

    ReplyDelete
  2. உங்களால் சாஜகான் என்ற எழுத்தாளன் எனக்கு அறிமுகமாகியிருக்கிறான்

    ReplyDelete
  3. இரண்டு கதைச்சுருக்கங்களும் அதிர்வை ஏற்படுத்தியது உண்மை. அதிலும் இரண்டாவது கதையின் பாதிப்பு எளிதில் தீருமெனத் தோன்றவில்லை..

    பகிர்விற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. இரண்டு கதை களும் அருமை, அறிமுகம் செய்தமைக்கும் பகிர்ந்தமைக்கும் நன்றிகள்.

    வம்சி புத்தகம், சென்னையில் ஒரு கிளை திறக்க வேண்டும் அல்லது சென்னையில் ஒரு புத்தக கடையோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

    அரிய நல்ல புத்தகங்கள் திருவன்னமலையை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறது

    ReplyDelete
  5. அருமையான அறிமுகம்.
    நன்றி.

    ReplyDelete
  6. மாதவராஜ். வெகு உண்மை. அதிர்வுகள் இன்னமும் மனதை விட்டு அகல வில்லை. உடனடியாக இந்த புத்தகத்தை தேடி ஓட வேண்டி விழைகிறது மனம். நன்றிகள் பல நண்பரே.

    ReplyDelete
  7. அருமையான கதைகளாகத்தான் இருக்க வேண்டும்.. அறிமுகத்திற்கு நன்றி..!

    ReplyDelete
  8. அன்பு மாதவராஜ்,

    ஷாஜகானைப் பற்றி ஏற்கனவே என்னுடன் பேசியிருக்கிறீர்கள். இந்த சிறுகதைகள் பற்றிய பகிர்வுகள், இதை நோக்கி இன்னும் முன்னேற தள்ளுகிறது. நன்றிகள் பல!

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  9. wow rentumee vaasiththathum kanama irukku

    shajahan parri pava avarkalin blog kil vasiththieukkireen

    ingka ungkal arimukaththirku nanri

    ReplyDelete
  10. yes mathavaraj. whenever i come across the name of shajahan, the first one flashes in my mind, always, is "kannil theriyuth vaanam..." whenever i meet shajahan, the first words coming out of me: "thOzar, antha 'kannil theriyuthu....'". He would immediately start laughing. ennai aza vaiththa kathaigaLil, iravugalil thanimai ennai sutterikkum pozuthugalil suzandru Odum ninaivugalil kEliyaaga ennaip paarththu punnagaippathu 'kannil theriyuthu...' kathaithaan.. eththanai annigalh ippadi veettin kollaippurangalil thanimaiyil yaarumillaatha pozuthugalil azuthu kondirukkindraargalO....

    ReplyDelete
  11. yes mathavaraj. whenever i come across the name of shajahan, the first one flashes in my mind, always, is "kannil theriyuth vaanam..." whenever i meet shajahan, the first words coming out of me: "thOzar, antha 'kannil theriyuthu....'". He would immediately start laughing. ennai aza vaiththa kathaigaLil, iravugalil thanimai ennai sutterikkum pozuthugalil suzandru Odum ninaivugalil kEliyaaga ennaip paarththu punnagaippathu 'kannil theriyuthu...' kathaithaan.. eththanai annigalh ippadi veettin kollaippurangalil thanimaiyil yaarumillaatha pozuthugalil azuthu kondirukkindraargalO....

    ReplyDelete
  12. நல்லது தோழர்.

    ReplyDelete
  13. மனித உறவுகளை......உணர்வுகளை அப்படியே கொடுத்திருக்கும் கதைகள்...

    அறிமுகத்திற்கு நன்றி தோழர்.....

    ReplyDelete
  14. சிறுகதை 1

    இந்த கண்ணீர்கள் தான் நமது கலாசாரத்தை வாழ வைத்துக்கொண்டிருகின்றன

    ReplyDelete
  15. எனக்கென்னவோ,கதைகள் பற்றி பேசும்போது அல்லது கதை பேசும்போதுவென தனி முகம் கொள்கிறீர்களோ என்று இருக்கு மாதவன்.எனக்கு ரொம்ப பிடிச்ச முகம் இது!

    அறிமுகம் அசத்துகிறது...என்ன செய்யட்டும் என நிகழ்!பகிர்தல் சந்தோசம்,மக்கா!

    ReplyDelete
  16. ரசித்த அனைவருக்கும் நன்றி. முடிந்தால் புத்தகம் வாங்கிப் படிக்கலாம். சென்னையில் பாரதி புத்தகாலயத்திலும் கிடைக்கிறது(குப்பன் யாஹூ அவர்கள் கவனிக்க).
    உண்மைதான் ராஜாராம் நீங்கள் சொல்வது.

    ReplyDelete

You can comment here