எனக்குள் இருக்கும் அவன்!


 ல்யாணமான புதிதில் நவம்பர் ஒண்ணாம் தேதி, எனது வங்கி  முகவரிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து வந்திருந்தது. திறந்து பார்த்தேன். அழகான பூக்கள் அதில் இருந்தன. அம்முதான் அனுப்பி இருந்தாள். வீட்டில் வைத்து சொல்லாமல், இப்படி ஆச்சரியம் தரவேண்டும் என நினைத்திருக்க வேண்டும். ரசித்துவிட்டு வேலையில் மறந்து விட்டேன்.

சங்க அலுவலகம் எல்லாம் சென்று வீட்டிற்கு செல்லும்போது இரவாகி விட்டது. நானாக எதாவது சொல்லுவேன் என நினைத்திருக்க வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து ஏமாந்துபோய் அவளாக கேட்டாள். “பிறந்தநாள் வாழ்த்து உங்களுக்கு வந்திருந்ததா”வென கேட்கும்போது அவள் குரல் கம்மியிருந்தது. அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. அதை அவள் கேட்காமல், நாமேச் சொல்லாமல் போய்விட்டோமே என்று எரிச்சல் வந்தது. “ஒண்ணும் வரவில்லையே” என்றேன். பதற்றத்துடன் “வரல்லியா.... நான் அனுப்பியிருந்தேனே” என்றாள்.

இந்த இடத்திலாவது அவளை சமாதானப்படுத்த முயன்றிருக்க வேண்டும். எனது மறதி, அவளுக்கு ஒரு சின்ன சந்தோஷத்தைத் தரமுடியாத இயலாமை எல்லாம் எனக்குள் அடைந்திருந்தது. “ஆமா... இத வீட்டிலேயே சொல்லியிருக்கலாமே... ஒரு கார்டு அனுப்பனுமாக்கும்” என்றேன். துடித்துப் போனாள். “அப்ப கார்டு வந்துச்சா...” என்றாள் தழுதழுத்து. “ஆமா... பெரிய பிறந்த நாள்... இப்படியெல்லாம் கொண்டாடனுமாக்கும்” என்றேன் வீராப்புடன். “எனக்கு ஒங்க பிறந்தநாள் பெருசுதான்.... நா ஒரு முட்டாள்...” என அழ ஆரம்பித்தாள். அவளை சமாதானப்படுத்த முடியவில்லை அன்று முழுவதும்.

ஒவ்வொரு நவம்பர் 1ம் தேதியும் இந்த ஞாபகம் வந்து கொல்கிறது. ‘என்னடா மனுஷன் நீ’’ என்று அவமானமாய் உணர்கிறேன். ‘ஒனக்குல்லாம் ஒரு காதல், ஒரு கல்யாணம்’ என்று என்னையே கேட்டுக் கொள்கிறேன். ஆண் என்னும்  அகங்காரம் பிடித்த, அழுகிய மனிதனாய் என்னை நானே பார்த்துக் கொள்கிறேன். பிறப்போடு ஒட்டியிருப்பதை, பிறந்தநாளில் அறிவது சரிதான். எனக்குள் இருக்கும் அவனைக் கொல்லட்டும் அது.

Comments

48 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. இன்றுபோல் என்றும் எழுத்திலும், பேச்சிலும், தோற்றத்திலும் இளமையாகவே இருந்துவரும்படி வாழ்த்துகிறேன்..!

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! அழகான நெகிழ்வான பதிவு! :-)

    ReplyDelete
  4. உங்கள் பதிவுகள் இரண்டுமே மனதைத் தொடுகின்றன.
    இன்று என் தம்பியின் பிறந்தநாள். அவன் இந்த உலகில் இல்லை.
    என் நினைவுகளில் வாழ்கிறான்.
    இனி இந்த நாளில் உங்கள் பதிவுகளும் என் ஞாபகத்தில் வரும்.

    ReplyDelete
  5. Happy Birthdya to you ........
    Happy Birthday to you.............

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்க்கள்

    ReplyDelete
  7. உங்களுக்கும் கோணங்கிக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் தோழர்.

    இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி !!!

    ReplyDelete
  8. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. எழுத்தாளர் கோணங்கி அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

    ReplyDelete
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  10. இனிய பிறந்த நாள் வழ்த்துக்கள்.

    அன்புத்தாய்,அருமை துணை, ஆசை மகள் அனைவரது உணர்ச்சிகளையும் பகிர்ந்து எங்களை நெகிழ்ச்சி அடைய வைத்து வைத்துவிட்டீர்கள்...

    ReplyDelete
  11. நெகிழ்ச்சி

    இனிய
    பிறந்த நாள்
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. மனசை கலங்கடிக்கும் நாள் போல மாதவன் இன்று.சற்று முன்பாக,பப்பு பிறந்த நாளுக்கு சந்தனமுல்லை எழுதிய கடிதம்(பழைய பதிவு..) வாசித்து கலங்கினேன்.இப்ப,உங்கள் பிறந்த நாள் மடல்.

    //அந்த சின்ன ஊர் முழுவதும் அசையாமல் மூச்சு விட்டுக் கிடந்தது. வாசலில் நின்று அம்மா என்றேன். “யப்பு... மாதவா...” என்று அவசரமாக எழும் சப்தம் கேட்டது. “அம்மா... மெல்ல வாருங்கள்’ என்றேன். வருவதை அம்மாவிடம் சொல்லியிருக்கவில்லை. லைட்டைப் போட்டு, கதவைத் திறந்து, என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் தந்தார்கள். சிரித்துக்கொண்டே “எம்புள்ளைக்கு நாளைக்கு பொறந்த நாளுல்லா. எங்கயிருந்தாலும் நல்லாயிருக்கணும்னு சாமிய வேண்டிக்கிட்டு இருந்தேன். நீயே வந்துட்ட...” என ஒரே சந்தோஷம் அம்மாவுக்கு. இதைக் கொடுக்கத்தானே வந்தேன். ”யப்பு... இனிப்பா கொடுக்குறதுக்கு ஒண்ணுமில்லய ஒனக்கு” என்றவர்கள் கொஞ்சம் சீனியைத் தந்து, தண்ணீரும் தந்தார்கள். அந்த இனிப்பு இருக்கிறது அம்மாவின் நினைவாக மட்டும் இன்று.//

    இதில்,எல்லா அம்மாவும் இருக்கிறார்கள்,பிறந்த நாளிலாவது அம்மாவை தேடும் எல்லா மகன்களும் இருக்கிறார்கள்.வீட்டுக்கு,வீடு,ஊருக்கு,ஊரு,அம்மா அப்படியே இருக்கிறார்கள்"யப்பு ...மாதவா எனவோ,என்னை பெத்த ராசா"எனவோ அழைத்துக்கொண்டு.வாசல் படியிலேயே...போகட்டும்,

    ஏற்க்கனவே சொன்னதுதான்,ரெண்டா கொடுத்தா வாங்கிக்கிற மாட்டீங்களா என்ன?

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாதவன்!

    ReplyDelete
  15. பதிவை படிக்கும் போது அம்மா பேசுவதைப் போல் உண்ர்ந்தேன். அம்மா தந்த இனிப்பு என்றென்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அம்மாவின் உணர்வு மிக மிக நுட்பமானது...நெகிழ்வானது... அதற்கான கொடுப்பினை இருக்கும் போதே அதை போற்ற‌வேண்டும். எனக்கும் இதுபோல நடந்ததுண்டு ( பிறந்தநாளில் அல்ல)

    ReplyDelete
  17. அன்பைப் பற்றிச் சொல்லும் நெகிழ்ச்சியான பதிவு ! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாதவராஜ் சார் !

    ReplyDelete
  18. தோழா அதிகாலையிலேயே திருச்செந்தூர் கிளம்பிவிட்டேன்.
    ஒவ்வொரு பிறந்த நாளும் இப்படியே நேர்கிறது.
    எனினும்.. இதோ என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. அண்ணாச்சி எப்படி இருக்கிய? அட நீங்க நம்ம ஊருன்னு(நெல்லை/தூத்துக்குடி மண்) இப்பதான் தெரியும்.
    நல்லா பிறந்த நாள் கொண்டாடுனியளா?

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :)

    (அண்ணே எனக்கும் இந்த மாசந்தான் பொறந்த நாளு 23 நவம்பர் மறந்துடாதிய :)

    ReplyDelete
  20. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..:-))))

    ReplyDelete
  21. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாதவராஜ்.

    ReplyDelete
  22. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    அம்மாவுடன் கொண்டாடிய அந்த பிறந்தநாள் மனதை நெகிழ்வித்தது. பிள்ளையை திடீரென பார்க்கும் அம்மாக்களின் உணர்ச்சிகள் எழுத்தால் வடிக்கமுடியாதது.

    ReplyDelete
  23. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    அப்படியே என் கண் முன்னே திருநெல்வேலி திசையன்விளை ராம் பாப்புலர் பஸ் கண் முன்னே கொண்டு வந்து விட்டேர்கள்.

    ReplyDelete
  24. அன்பு மாதவராஜ்,

    விடியலில் உங்களுக்கு வாழ்த்து சொன்னதற்கு பிறகு இப்போ தான் உங்களின் பதிவை படித்தேன். பிறந்த நாளுக்கு பிறருக்கு பரிசு தருவது சிறப்பு, நீங்கள் செய்திருக்கிறீர்கள். உங்கள் அம்மாவிற்கு, உங்கள் மணைவிக்கு மற்றும் எங்களுக்கும் இந்த பதிவின் மூலம்.

    உணர்வு மேலிட தழுதழுத்து நிற்கும் எல்லா உறவுகளும் உன்னதமாய் இருக்கிறது, அம்மா, அக்கா, மணைவி, மகள், அப்பா, அண்ணன், தம்பி, நட்பு என உணர்வுகளில் எழுதிய எல்லா உறவுகளும் நமக்கு பெரிய பொறுப்பை கொடுக்கிறது, உலகையே கட்டி நேசிக்க! நேசிக்கக் கற்றுக் கொடுத்த உறவுகளின் உன்னதம் எல்லோரையும் உறவுகளாய் பார்க்கிற பட்சத்தில் பூரணம் அடைகிறது. எனக்கு காமராஜ், பா.ரா. மற்றும் உங்களின் அன்பு வியக்க வைக்கிறது, எத்தனை பிரியமானவர்களாய் இருக்கிறீர்கள், எத்தனை விஷயங்களை, மனிதர்களை, உறவுகளை கட்டி நேசிக்கிறீர்கள், சங்கப்பலகை மாதிரி விரிந்து கொண்டே இருக்கிறது உங்கள் அன்பும், பிரியமும், புண்கணீர் பூசல் தருகிறது.

    கைபிடித்து கோனங்கி போல கட்டிப் பிடிக்க தோன்றுகிறது மாதவராஜ்! வாழ்த்துக்கள், இத்தனை வாழ்த்துக்களைப் பார்க்கும் போது சந்தோஷமாய் இருக்கிறது, எத்தனை உறவுகள் உங்களுக்கு, உங்கள் பதிவை படிக்காத சன்முகவள்ளி அக்கா மாதிரி, வாழ்த்தும் எத்தனை நெஞ்சங்கள் இருக்கும் இன்னும். ”எந்தரோ மஹானுபாவுலு”ன்னு ஒரு தியாகராஜர் கிருதி ஒன்று வரும், அது போல வாழ்த்துற, நேசிக்கிற, பிரியம் வழிகிற எல்லோரையும் கைகூப்பி தொழுதேன் கடிமலர் தூவி நின்றுன்னு பேசாம வியப்பு நிலையிலேயே இருந்து விடவும் தோன்றுகிறது சிலசமயம். ”be related” ன்னு ஜேகே சொன்னது மாதிரி உறவுகளை தேடுவதும் அதில் தோய்வதும் தான் உன்னதம் என்று தோன்றுகிறது. நிறைய திறந்து விடுகிறது சாளரங்களை, இழுத்துவருகிறது உயிர் வருடும் காற்றை, அநேக சுகந்தங்களோடு. குயில் தோப்பில் குயில்கள் எல்லாமும் ஒரு கூட்டிசைக்குரலில் பாடியிருக்கும் உங்களுக்காக இன்றும்!

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  25. கலங்க வைத்த இடுகைங்க..
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  26. பிறந்த நாளில் தாயை நினைத்து சென்ற உங்களுக்கு பாராடு . அம்முமனசையும் புரிஞ்சு கொள்ளுங்க சின்னதாய் தரும் அன்பளிப்புக்கள் ,ஆழ்ந்த உண்மைகளை கொண்டவைகள்.

    ReplyDelete
  27. அன்புள்ள மாதவ் அண்ணா..

    பிறந்தநாள் வாழ்த்துக்கள். உண்மையில் இந்தப்பதிவில் உங்களை மிக நெருக்கமாக உணர்ந்தேன்.
    வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அத்தனை நெகிழ்ச்சி.

    ReplyDelete
  28. பதிவு தந்த நெகிழ்வில் வாழ்த்துச் சொல்லாமலே போய் விட்டேன்.
    இனிய வாழ்த்துக்கள் மாதவராஜ்

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்.
    சென்ஷியும், செய்யதும் பகிர்ந்துகொண்ட கோனங்கிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்களையும் , அவரிடம் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  30. சந்திரவதனா!
    நீங்கள் குறிப்பிட்ட அந்த பதிவைப் படித்து கண்கலங்கினேன்...

    ReplyDelete
  31. ஒரு நாள் தாம‌த‌மான‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக‌ள் சார். ப‌திவு ந‌ல்லா இருந்த‌து.

    ReplyDelete
  32. பின்னூட்டத்தை திரும்ப திரும்ப வாசிக்க வைக்கிற ராகவனுக்கு ரொமப் நன்றி. அழகாக இருக்கிறது......

    ReplyDelete
  33. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    நேற்று என் மகனின் பிறந்தநாளும்கூட...

    யப்பு,யய்யா,யம்மான்னு கலப்படமில்லாத பாசம் பொங்கக் கைப்பிடித்து முத்தமிடும் உறவுகளுக்காகவே அடிக்கடி ஊருக்குச் செல்லவேண்டும்போலிருக்கிறது.

    செங்குழியிலிருந்து சிலநூறு அடிகள் தள்ளியிருக்கும் பூச்சிக்காடுதான் எங்கள் பூர்வீகம்.

    ReplyDelete
  34. சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாக ஒரு பெண் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
    //

    சரி தாயி, அப்புறம் கூப்பிடுறேன்னு சொல்லிட்டீங்கதானே..

    அன்பு வாழ்த்துகள் மாதவராஜ். அம்மா குறித்த நினைவுகள் மகிழ்வைத்தந்தன.

    ReplyDelete
  35. தோழர்..
    நேற்று அலைபேசியில் பகிர்ந்துகொண்டது போலவே, இந்த பா.ராஜாராமும்,ராகவனும் ..

    எங்கேயோ கண்கானாத இடங்களில் இருந்துகொண்டு மனிதர்களின்மேல் எப்படி அன்பை பொழிய முடிகிறது இவர்களால்...

    எண்ணம் போலவே வாழ்வு சிறக்க மீண்டும் வாழ்த்துகின்றேன் தோழா.

    ReplyDelete
  36. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  37. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் : )!

    ReplyDelete
  38. Dear Mathavaraj,
    I have almost read Your 13 months of writing in this blogs and learn a little about you and the spirit in it.Your daring approch reflects the early Jeyakanthan (He deserved you as his son-in-law) Always remember your THOLAR author. You, Rajanayaghem, Kamaraj and a few more are really doing GREAT in this BLOGS.
    Wish You a very HAPPY BIRTH DAY.

    ReplyDelete
  39. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.\
    azze

    ReplyDelete
  40. dear thOzar mathavaraj,
    i am iqbal, chennai. continuously reading your creations and now following your blog. so far i have not given any feedback, but following the feedbacks too! very interesting!
    WISH YOU, YOUR BELOVED AMMU AND CHILDREN NICE DAY! A SPECIAL VAAZTHU FOR YOU! LONG LIVE COMRADE!
    iqbal

    ReplyDelete
  41. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்!

    (தாமத வாழ்த்துக்கு மன்னிக்கவும்)

    ReplyDelete
  42. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  43. sorry comrate..

    very late birthday wishes...

    its also a birthday month for soviet revoluation....

    ReplyDelete
  44. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர்! மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. மகிழ்ச்சி!

    ReplyDelete
  45. இனிய (தாமதமான) பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. உங்களுக்கும் கோணங்கிக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மாதவராஜ்.

    மிக உன்னதமான உறவுகள். உணர்வு பூர்வமாக பதிவு செய்துள்ளீர்கள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  47. நமது அன்னையின் மறுபிறப்பே நமது பிறந்தநாள் ஆகிறது.அவளின்றி அந்த நாள்......

    எனினும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் அண்ணா!

    ReplyDelete
  48. தாமதமாக வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் தாமதமான நன்றிகள்.
    சுந்தரா!
    உங்களை இங்கே சந்தித்ததில் மகிழ்ச்சி.
    வாசன், அசீம், இக்பால் அனைவரும் உற்சாகப்படுத்தி இருகிறீர்கள். மிக்க நன்றி.
    கும்க்கி!
    ஆமாம், ராகவனும், ராஜாராமும் அப்படி அன்பான மனிதர்களாய் இருக்கிறார்கள்.

    மதுமிதா!
    ரொம்ப நாள் கழித்து உங்களை இங்கே பார்க்க முடிந்திருக்கிறது..... நன்றி.

    ReplyDelete

You can comment here