இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பதி மலையடிவாரத்தில் சந்தேகத்தின் பேரில் அவனை போலீஸார் கைது செய்தனர். அவன் கையிலிருந்த டைரியின் 31.10.2009 தேதியிட்ட பக்கத்தில் தமிழில் இப்படி எழுதப்பட்டு இருந்தது.
அரக்கன் அவன் இங்கு வந்திருக்கிறான். தர்மம் அழிந்து அதர்மம் தோன்றும் போதெல்லாம் அவதாரம் எடுப்பதாகக் கூறியவர் எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்து காத்திருந்திருக்கிறார். சன்னதியில் வந்து நின்றிருக்கிறான் அவன். இன்று போய் நாளை வா என்று கூட தட்ட முடியாமல் சிறப்பு தரிசனம் தந்திருக்கிறார் இவர். ஐம்பதாயிரம் கோடி மதிப்புள்ள பெருமாளின் நகைகளோடு அவனது கணக்கும் சேர்ந்திருக்கலாம். நாள் நெடுக, கால் வலிக்க, கன்னத்தில் போட்டபடி பகவானை தரிசிக்க பொதுவழியில் நம்மக்கள் இன்னமும் நின்று கொண்டு இருக்கிறார்கள்.
கோவிந்தா! கோவிந்தா!! கோவிந்தா!!!
அதற்குப் பிறகுள்ள எல்லாப் பக்கங்களையும் அவன் கிழித்து விட்டு இருந்தான். நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தோடு வந்திருக்கக் கூடும் என போலீஸார் புலன் விசாரணை செய்துகொண்டு இருக்கின்றனர். அவனோ எல்லாம் கொள்ளை போய்விட்டது என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறான்.
நெஞ்சைப் பிசைகிறது தோழரே..
பதிலளிநீக்குமனம் வலிக்கிறது நண்பரே... படுபாவி அரசியல்வாதி நாய்களால் நம் தமிழினம் என்ன பாடுபடுகிறது? கொடுமை.
பதிலளிநீக்குபிரபாகர்.
நல்லா இருக்கு, நச்-னு!
பதிலளிநீக்குசுருக்கமா இருந்தாலும் நச்சுனு இருக்கு. ஆனா, திருப்பதில அரோஹரா கோஷம் போடமாட்டாங்க. கோவிந்தா கோஷம்தான் போடுவாங்க.
பதிலளிநீக்குபோவாஸ்!
பதிலளிநீக்குஅரோஹராவை ஒரு அர்த்தத்துக்காக எழுதியிருந்தேன். கோவிந்தா அதைவிட பொருத்தமாக இருக்கிறது. திருத்திக்கொண்டேன்.
ராஜபக்ஷே என்ற அந்த பக்தனுக்கு தரிசனம் மற்றும் தர வில்லை.
பதிலளிநீக்குபோன வருடம் அவர் வேண்டிய வேண்டுதலும் நிறைவு பெற்றதாம் .
//எல்லாம் கொள்ளை போய்விட்டது என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு //
பதிலளிநீக்குஇன்னும் என்ன இருக்கு அங்கே....
எம்மினத்தை அழித்த வெற்றி மப்பை திருப்பதியில் தம்பட்டம் அடிக்க வந்த கொலைக்காரனுக்கு பூரணகும்ப மரியாதையை கொடுத்தவர்கள், எமக்காக துடித்த ஒரு உயிரை கொள்ளைக்காரனாக சித்தரிக்கிறதா?? உண்மையில் இப்போது சுதந்திரம் யாருக்கு தேவை என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. :(:(
பதிலளிநீக்குதிருப்பதி வந்தவனுக்கு பெருமாள் 'லட்டு' கொடுத்தான்...
பதிலளிநீக்குதமிழ் நாட்டு பெரும்-ஆள் தன்மானத்தை 'விட்டு' கொடுத்தான்...
அருமை..அருமை....அற்புதமான வரிகள்.
பதிலளிநீக்குகடவுள் ஏன் கல்லானார் _ மனம்
பதிலளிநீக்குகல்லாய் போன மனிதர்களாலே!!
எங்கிருந்தோ பாடல் வரிகள்......
எல்லாமே கோவிந்தா ஆனவுடன் இங்க வந்து கோவிந்தா போடலாம்னு வேண்டிக்கிட்டா(னோ)ரோ.
பதிலளிநீக்குஆக மொத்தம் அவரோட வேண்டுதலுக்கு மட்டும் கடவுள் செவி சாய்ச்சுட்டாரு போல :(((((((
நாசமாய் போகட்டும் அவனும் அவன் கடவுளும்.........
பதிலளிநீக்குஇழப்பை எப்படி ஈடு செய்வது?
மறக்க முடியவில்லை, வலியும் வேதனையும் மீண்டும் மீண்டும் தொடர்கிறது....
Kalaingar eppodhu KOLAIngar
பதிலளிநீக்குஅய்யகோ! எதற்கும் உண்டியலை சோதனையிட்டு பாருங்கள் அதில் எம்மினத்தமிழரின் மண்டையோடுகள் கிடக்கின்றனவாவென்று. சாதாரண வார்த்தைகளில் அடர்த்தியான பதிவு தோழா!
பதிலளிநீக்குநண்பர்களே !
பதிலளிநீக்குஉங்கள் தர்மாவேசத்தை புரிந்துகொள்கிறேன். நீங்கள் கோவிந்தன் என்னவோ கலைஞர் மாதிரி இருப்பதாய் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இறைவன் இறைவனே ! இந்துக்கள் சஹஸ்ர நாம ஜெபம் செய்வது போல் இஸ்லாமில் இறைவனுக்கு 99 பெயர்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மாக்கிர் என்பதாம். அதற்கு என்ன பொருள் தெரியுமா? சதிகாரன். சதிகாரன் எப்போதும் தன் இலக்கை நோக்கி உறுமமாட்டான். புன்னகைக்கவே செய்வான். பின்னால வரும் ஆப்பு
ஏற்கெனவே ஒரு விழாவில் நாற்காலியிலிருந்து பக்சே தவறி விழுந்ததாய் செய்தி வந்தது . அப்போதே நான் அறிவித்து விட்டேன். இது அவர் அழிவுக்கு அறிகுறி.
பி.கு: ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி இந்த மறுமொழியை நீக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்
பின் நாளில் அவன் விடுதலைப்புலி எனும் காரணத்திற்காக கைது செய்யப்பட்டான் என காவல் துறயினர் சொன்னார்கள்.
பதிலளிநீக்குதமிழ்த்தோழன்
http://www.dinamani.com/Images/New_Gallery/2009/11/7/cartoon.JPG
பதிலளிநீக்குஇவர்கள் இங்கே சுவரொட்டி ஒட்டிக்கொண்டு வீளையடிக்கொண்டு இருக்கட்டும் ராமேஸ்வரத்தில் தினமும் நாலு பேர் சிங்களக் கடற்படையால் துன்பப்பட்டும் படகுகளை இழந்தும் தங்கள் வாழ்வதாரப்பிரசினையில் நொந்து நூலாகட்டும் .
பதிலளிநீக்குநமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுங்கோலன் ராஜபக்சே வுக்கு பொன்னாடை போர்த்தி அழகு பார்க்கட்டும்.
ஐரோப்பிய கூட்டமைப்பு இலங்கைக்கு எதிராக மனித உரிமை வழக்கு போட்டு பொருளாதாரத்தடை போடா முயலும்போது இந்தியா இலங்கையை காப்பாற்ற எல்லாம் செய்யட்டும்
அதுபற்றிஎல்லாம் எங்களுக்கு என்ன கவலை ?
தீபாவளி கொண்டாடி ஆயற்று அடுத்து என்ன ? ஆம் அடுத்து
கந்த சஷ்டி சூர சம்சாரம் அடுத்து கர்த்திகைதீபம்... அடுத்து ......
ஐயகோ எமது மீனவர்களே! இனி எந்த அரசாங்கத்தை நாங்கள் பாது காப்புக்காக கேட்பது என்று கேளுங்கள் .
சுண்டைக்காய் சிலோன் காரன் செய்வதை மட்டும் தன் பெயரன் விளையாடும் விளையாட்டாக தாத்தா கருதுவது போல் மகிழ்ந்து விளையாடும் இந்திய மேலாதிக்க
பார்ப்பன பனியா மேலாதிக்க அரசு என பெரியார் கூறியது சரிதானே
india takes on china over brahmaputra
india takes on pakistan over infiltration
india takes on china and condemns it over Arnachal pradesh
india takes on china over PoK.
hi hi hi hi hi hi .....................................................
if srilanka asks india wil provide financial assistance-india
இவர்களையெல்லாம் ..................
தேர்தல் வந்தபோது மட்டும் வீராவேசம் பேசும் எதிர் கட்சிகள்
வெட்கங்கெட்ட அரசுகள்
வெட்கங்கெட்ட மக்கள்
வெட்கங்கெட்ட தோல் தடித்துப்போன தமிழர்கள் .............
அன்புடன் இனியன்
தமிழீழம் வெல்வோம்