பாராளுமன்றத் தேர்தலோடு ஓய்வெடுக்கப் போன ஜெயலலிதா திரும்பவும் வந்து அறிக்கை வாள்களைச் சுழற்ற ஆரம்பித்து விட்டார். முல்லை பெரியாறு, ஸ்பெக்டராம் ஊழல், உலகத்தமிழ் மாநாடு என்று விர் விர்ரென சத்தங்கள் கேட்கின்றன. அறிக்கைகளின் அரசரை இவைகள் எதுவும் செய்துவிட முடியாது. அவரது ஆயுதக்காப்பகத்தில் ஓரு கோடி அறிக்கைகள் இருக்கின்றன. அவர் பாட்டுக்கு எடுத்து விட்டுக்கொண்டே இருக்கிறார். ”நீ யோக்கியமா” “நீ மட்டும் யோக்கியமா” இந்த முட்டல் மோதல்களை பார்த்து பார்த்து, கேட்டு கேட்டு, சலித்து சலித்துப் போனாலும் மக்கள் மீண்டும் அதை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். தங்களை வாட்டும் பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் யோசிக்காமல் சுவராசியமான மனநிலைக்கு நகர்த்தப்படுகின்றனர். இவர்களை விட்டால் ஆளில்லை என்பதாய் சூழல் உருவாக்கப்படுகிறது. இந்த ‘ஒத்தையா ரெட்டையா’விலேயே காலம் கடந்து கொண்டிருக்கிறது.
‘புன்னகைக்கும் பிங்கி’ ஞாபகமிருக்கிறதா. இந்தியாவுக்கு இன்னொரு ஆஸ்கார் வாங்கித் தந்த ஸ்மைல் பிங்கிதான். அந்த குட்டிப்பெண் இப்போது ஒன்றும் புன்னகைக்கவில்லை. ஆஸ்கார் பரிசு விழாவுக்கு லாஸ் ஏஞ்செல்ஸ் சென்று வந்த பெண் இப்போது உத்திரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டத்தின் அரசு அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டு இருக்கிறார். அவரோடு ராம்பூர் தபாயைச் சேர்ந்த பெரியவர்களும் சென்று கொண்டு இருக்கின்றனர். குடிநீர் முதல் எந்த அடிப்படை வசதியுமற்ற தங்கள் கிராமங்களுக்கு எதாவது செய்ய முடியுமா என்கிற வேட்கை அவர்களுக்குள் இருக்கிறது. தங்கள் கிராமத்தை உலக வரைபடத்தில் காட்ட வைத்த அந்தப் பெண்ணுக்கு கிடைத்த பேரை உபயோகித்து ஒரு அங்குலமாவது தங்களை உயர்த்திக் கொள்ள முடியாதா என அந்த மக்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. தூண் விட்டு தூண் என்னும் அரசின் அலைக்கழிப்பால் சோர்ந்து போகாமல் பிங்கி நடந்து கொண்டு இருக்கிறார். தன் மண்ணுக்கு எதாவது செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார் பிங்கி. ஆஸ்கார் ’புகழ்’ மற்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்.
“நான் யாரையும் புகழ்ந்ததே இல்லை. அனேகமாக எனது விமர்சனத்திற்கு ஆட்படாத தலைவர்களோ, மனிதர்களோ தமிழ்நாட்டில் இல்லை. எனக்கிருக்கிற ஆச்சரியமெல்லாம் என்னை இவர்கள் புகழ்ந்துகொண்டே இருப்பதுதான். அப்போதும் சரி, இப்போதும் சரி. எவ்வளவு நல்லவர்கள் நீங்கள். எல்லோரையும் இகழ்ந்துகொண்டே இருக்கும் ஒருவனை, புகழ்ந்துகொண்டே இருப்பதை விட உயர்ந்த குணம் வேறு இல்லை. எனவே உங்கள் அன்புக்கு நன்றி பாராட்டுகிறேன். அறியாமையால் உங்களை நான் இகழ்ந்திருக்கலாம். அறிந்து கொண்டதினால் நீங்கள் புகழ்ந்திருக்கலாம். “
இப்படி பேசியிருப்பவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட ஜே.கே பவளவிழா மலர் வெளியீட்டு விழா ஏற்புரையில்.
சமீபத்தில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் மிக்க விஷயம் ஒன்றை இணையத்தின் மூலம் அறிய நேர்ந்தது. இலட்சம் இலட்சமாக மக்களைக் கொன்று பெரும் இனவெறி கொண்டவனாய் சித்தரிக்கப்படுகிற ஹிட்லர் ஒரு ஓவியர் என்னும் செய்திதான் அது. அவர் வரைந்த படங்களும் இணையத்தில் கிடைக்கின்றன. அருமையாக இருக்கின்றன. இப்படி ஒரு கலைமனம் கொண்டவனுக்குள் மனிதர்களை அப்படி கொன்று குவிக்கும் இரக்கமற்ற கல்மனம் இருந்தது என்பது புதிராக தெரிகிறது. நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் “அந்தப் படங்களை எல்லாம் பாருங்கள். ஒரு விசித்திரம் உண்டு” என்றார். எனக்குப் புரியவில்லை. ”அவரது ஓவியங்களில் ஒரு மனிதரைக் கூட நீங்கள் பார்க்க முடியாது. எல்லாம் நிலப்பரப்புகளாகவே இருக்கும். அதுதான் அவனுக்கு தன் நிலப்பரப்பை விரித்துக்கொண்டே செல்ல வேண்டும் என்கிற வெறி!” என்றார். உண்மைதான். ஹிட்லரின் ஓவியங்களில் மனித முகங்கள் இல்லை! அவருக்கும் இல்லை!!
புஷ் மீது செருப்பு வீசப்பட்டதும், உலகம் முழுவதும் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். நேற்று அதுகுறித்த சில கார்ட்டூன்களை இந்த இணையத் தளத்தில் பார்த்தேன். வாய்விட்டு சிரிக்க வைத்தன. நீங்களும் ரசிக்க.....
அவர் அனுப்பிய குட்டிக்கதையை இங்கு பதிவிட்டதில் உற்சாகமாகிவிட்டார் போலும் பொன்ராஜ். பல செய்திகளையும், ஜோக்குகளையும் அனுப்பிக் கொண்டு இருக்கிறார். அதில் சார்லி சாப்ளிளின் புகழ்வாய்ந்த சொற்றொடர்கள் என்னைக் கவர்ந்தன. அவை இதுதான்:
- இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல, நமது துயரங்களும்தான்.
- நான் மழையில் நடந்து செல்லவே ஆசைப் படுகிறேன். ஏனென்றால் என் கண்ணீர் மற்றவர்களுக்குத் தெரியாது.
- உங்கள் வாழ்க்கையில் மிகவும் வீணடிக்கப்பட்ட நாள் எதுவென்றால், நீங்கள் சிரிக்க மறந்த நாளே!
இரண்டாவது சொற்றொடரிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.
தமிழ்நாட்டு மக்கள் துரதிர்ஷ்டசாலிகள். ஒத்தையா ரெட்டையா விளையாட்டு தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல. சினிமா ,காலை இலக்கிய உலகிலும் இதே நிலைதான். இவர் விட்டால் அவர்.அவர்விட்டால் இவர்.
பதிலளிநீக்குகார்ட்டூன்கள் எல்லாம் அருமை.
உங்கள் வாழ்க்கையில் மிகவும் வீணடிக்கப்பட்ட நாள் எதுவென்றால், நீங்கள் சிரிக்க மறந்த நாளே! //
பதிலளிநீக்குஅருமை
சாயங்கால பேப்பர் எல்லாம் இவங்களால தான் வாழுது. அவங்க பிழைப்புல மண்ணப்போடாதீங்க. முன்னாடி வாழப்பாடி, அப்புறம் ராமதாஸ்..எப்பவும்..இவங்க ரெண்டு பேர்.
பதிலளிநீக்குடீக்கடையில உட்கார்ந்து பேப்பர படிச்சுட்டு..உடனே அதுல சுட சுட வடைய வெச்சு, டீ குடிக்குற சுகம் இருக்கே..அது அலாதி. இதுக்காக அவங்களுக்கு நன்றி சொல்லணும்.
அம்மாவிற்கு கூடிய சீக்கிரம் அறிக்கை தலைவி என்ற பட்டம் கூட வழங்கலாம்.
பதிலளிநீக்குஎன்ன செய்ய இந்த அறிக்கை அரசியலையும் வாக்காளர்களாகிய நாம் மதித்து பன்னிரண்டு இடங்களில் ஜெயிக்க வைத்து இருக்கிறோமே. எனவே தவறு நம் மீதே. (specially south chennai, where an IIM uyoung guy has contested, but the winner is sitlappaakkam rajendran AIADMK)
\\அறியாமையால் உங்களை நான் இகழ்ந்திருக்கலாம். அறிந்து கொண்டதினால் நீங்கள் புகழ்ந்திருக்கலாம்.//
பதிலளிநீக்குஅழகான வரிகள். இதை அறிந்து கொண்ட பின்னராவது நாம் மற்றவர்களை இகழாமல் இருப்போமா?
நான் மழையில் நடந்து செல்லவே ஆசைப் படுகிறேன். ஏனென்றால் என் கண்ணீர் மற்றவர்களுக்குத் தெரியாது.
அருமை. பொன்ராஜ்க்கு நன்றி.
நிறைய தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள். அனைத்தும் அருமை
பதிலளிநீக்குநான் மழையில் நடந்து செல்லவே ஆசைப் படுகிறேன். ஏனென்றால் என் கண்ணீர் மற்றவர்களுக்குத் தெரியாது. //
பதிலளிநீக்குஇந்த வாசகம் எனக்கு எஸ்.எம்.எஸ் ஸாக வந்தது, இன்றைய வரைக்கும் நான் அழிக்காத எஸ்.எம்.எஸ் இது.
:)
இந்த ‘ஒத்தையா ரெட்டையா’விலேயே காலம் கடந்து கொண்டிருக்கிறது.
பதிலளிநீக்குஉண்மை
//இந்த ‘ஒத்தையா ரெட்டையா’விலேயே காலம் கடந்து கொண்டிருக்கிறது. //
பதிலளிநீக்குவிடியலை இரவிலும், இரவினை பகலிலிலுமே தேடவேண்டியுள்ளது. எப்படியேனும் விடியப்போவதில்லை மக்களுக்கு.
நகைச்சித்திரங்கள் அனைத்தும் ரசிக்கும்படியாகவே உள்ளன.
சார்லி சாப்ளினுடைய இரண்டாவது சொற்றொடர் மனதைபிசையும் வரிகள்.
நிறைய நிறைய தகவல்கள்...
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை.
//இனவெறி கொண்டவனாய் சித்தரிக்கப்படுகிற ஹிட்லர் ஒரு ஓவியர் //
பதிலளிநீக்குஹிட்லர் 'தலைகனம்' இல்லாதவரும் கூட. அவர் மண்டை ஓட்டை ஆராய்ந்தவர்கள் சொல்லி இருக்கார்கள்.
செய்திகள் அருமை! மக்கள் அங்குமிங்கும் அலைந்து என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்! 'தூண் விட்டுத் தூண்' என்பது 'pillar to post' என ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதியது போலல்லவா இருக்கிறது!?!
பதிலளிநீக்குவருவேன்.கதை கவிதை ஏதாவது இருக்கா என பார்ப்பேன்.இருந்தால் வாசிப்பேன்.பாதித்தால் பின்னூட்டம் இருக்கும்.இல்லாவிட்டால் போய் கொண்டே இருப்பேன்.முதன் முதலாக,இந்த மாதவராஜ் பக்கங்கள்!பிடிச்சுருக்கு மாதவன்.informative-வா இருக்கு.இன்னும் பதினாலு பாக்கி.பார்க்கலாம்,கதை கவிதை மாதிரி இனி இதுவும்.
பதிலளிநீக்குமக்கா,ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன்.நேரம் வாய்க்கிற போது வரணும்.
//நான் மழையில் நடந்து செல்லவே ஆசைப் படுகிறேன். ஏனென்றால் என் கண்ணீர் மற்றவர்களுக்குத் தெரியாது. //
பதிலளிநீக்குஎத்தனையோ கதைகள் சொல்லும் இந்த வாக்கியங்கள்.
இந்தியாவின் ஒரு கிராமத்திற்கு அடிப்படை வசதி பெற்று தர, ஒருத்தி ஆஸ்கார் ஆவார்ட் பெற்றாலே முடியும் போலிருக்கிறது. நம் நாட்டை ஆங்கிலேயரே ஆண்டிருக்கலாம் இந்த வாக்கியத்தை சொல்ல சற்றே கூசினாலும் நிஜம் அது தான்.
பதிலளிநீக்குகருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குஇனி,முடிந்தவரை தினம் ஒரு கார்டூன் இந்த வலைப் பக்கத்தில் இடம்பெறச் செய்வது என இருக்கிறேன். பார்ப்போம்.
சார்லி சாப்ளினின் அந்த வரிகள் பலரையும் பாதித்திருக்கிறது. சட்டென்று ஊடுருவும் வல்லமையும், வலியும் அதற்கு இருக்கின்றன.
சிறிய இடைவெளிக்குப் பின்னே ஆரூரன் அவர்களை இங்கு பார்க்க குடிந்திருக்கிறது!
பா.ராஜாராம், மிக்க நன்றி. உங்களுக்குப் பிடித்தது எதுவுமே கவிதைதானா! தீபாவளி குறித்து மூன்று பதிவுகள் எழுதிவிட்டேன். இருப்பினும் தொடர் விளையாட்டுக்கு அழைத்ததுக்கு நன்றி.
Hitler was also a vegetarian :-)
பதிலளிநீக்குhttp://en.wikipedia.org/
wiki
/Adolf_Hitler's_vegetarianism
He belonged to a race that
didn't value others existence!
We find people like him in our midst with similar mindset, but
he acted on his beliefs in an
extreme manner and his Own people
supported him.