உடைந்த பூந்தொட்டிகள்

 

வெடிப்புகை
குருதிக்காடு
பெரும் சவக்குழி
எஞ்சியவர்கள்
புழுக்களாய் நெளியும்
வெட்டவெளி
உரிமை கேட்ட
கடைசிக் குரல்கள்
எல்லாம்
அம்மண்ணாக
நான் மட்டும்
தனி மண்ணில்
நீர் சுமந்து
வேர்களுக்கு இடம் தந்து
பூக்களைத் தருவதோ?
கொலைகாரர்
உம்முகம் பார்த்து
அவை சிரிப்பதோ?

(பி.கு: டெல்லியில் இன்று இலங்கைத் தூதகரத்தில் உடைக்கப்பட்ட பூந்தொட்டிகள் பற்றி அல்ல!)

*

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. /கொலைகாரர்
    உம்முகம் பார்த்து
    அவை சிரிப்பதோ?/
    -
    காலமெல்லாம் நிலைக்கபோகும் கேள்வி.

    பதிலளிநீக்கு
  2. //புழுக்களாய் நெளியும்
    வெட்டவெளி
    உரிமை கேட்ட
    கடைசிக் குரல்கள் //

    உரிமை இழந்து சொந்த மண்ணில் அனாதைகளாய் திரியும்
    மக்களுக்கான ஒரு குரல்.

    பதிலளிநீக்கு
  3. கண்ணீர் அழகென்று சொல்வதெப்படி
    விசும்பல் இசைகுறிப்பென்று சொல்லலாமோ இந்தக் கவிதையை

    பதிலளிநீக்கு
  4. ஆம் நேசா!சொல்லலாம்.அழகாய் சொல்லி இருக்கிறாய் நண்பா.இதைவிட வேறு என்னத்த நான் சொல்லி விடமுடியும்?கூடுதலாக ஒரு அருமையை போட்டு விட்டு போகிறேன்.அருமையான வலி என்பது மாதிரி..

    பதிலளிநீக்கு
  5. நேசமித்ரன், பா.ரா, சொன்னதை வழிமொழிகிறேன்.
    இது வலி நிறைந்த கவிதை. காட்சி ஊடகங்கள்
    இருட்டடிப்பு செய்த வலிகளின் கதை.

    பதிலளிநீக்கு
  6. வேல்ஜி!
    தீபா!
    செய்யது!
    நேசமித்திரன்!
    பா.ராஜாராம்!
    காமராஜ்!
    சந்தனமுல்லை!

    ந்னறிகள் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. கனமான கவிதை

    பூந்தொட்டிகளை மட்டுமா உடைத்திருக்கனும்?

    பதிலளிநீக்கு
  8. வலியின் கொடுமை அனுபவிப்பவனுக்குத்தான் தெரியும். அருமையான கவிதை!

    பதிலளிநீக்கு
  9. மொழியையும்
    இனத்தையும்
    அடகுவாங்கி
    தேசியம் விற்கும்
    கூட்டத்திடம்
    உரக்கச் சொல்லுவேன்
    நான் தேசத்துரோகியென.

    பதிலளிநீக்கு
  10. கதிர்!
    மங்களூர் சிவா!
    மதிபாலா!
    தமிழ்நாடன்!
    மண்குதிரை!
    கருப்பன்!

    அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!