"கயை அழிந்து கிடந்தது. கபிலவஸ்து காடுமண்டிக் கிடந்தது. பாடலிபுத்திரம் செல்வச்செழிப்போடு விளங்கியது" என்கிறார் அப்போது இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் பாஹியான். சாதாரண மக்களின் பாஷையாக இருந்த பிராகிருத மொழிக்கு இல்லாத ஆசியும் அந்தஸ்தும் சமஸ்கிருத மொழிக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் நிறுவனமாக்கப்பட்ட முதல் மதமான புத்தமதத்தை நிராகரித்து, இன்று இந்து மதமாக உருவாக்கப்பட்டுவரும் அன்றைய வேத மதத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. சமுத்திர குப்தன் தலைநகரை பாடலிபுத்திரத்திலிருந்து அயோத்திக்கு மாற்றினான். விக்கிரமாத்தியன் கட்டிய ஜெயஸ்தம்பத்தின் உச்சியில் தாமரைப்பூ செதுக்கப்பட்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்தகால மகிமைகளை மீட்டெடுத்த காலமாக அவர்கள் கருதினார்கள். எனவேதான், மிக நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் கி.பி 308ம் ஆண்டிலிருந்து 160 ஆண்டுகளே இருந்த இந்த குப்த சாம்ராஜ்ஜியம்தான் இந்தியாவின் பொற்காலம் என்று உச்சரிக்கப்படுகிறது.
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னே பெண்களும் கல்வி கற்க ஏற்பாடு செய்திருந்த சக்கரவர்த்தி அசோகரின் ஆட்சி அவருக்கு மகிமை வாய்ந்ததாக இருக்காது. இந்தியா முழுவதும் பரவியிருந்த புத்தமதத்தை திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்து, சுவீகரித்து தங்களது மதமாக விழுங்கி, வர்ணாசிரம கட்டுமானத்தை இறுக்கிக் கொண்டதுதான் குப்தர்களின் காலம். புத்தமதத்தில் இருந்த ஜனநாயகத்தை கழுவிலேற்றி சர்வாதிகாரத்தை ஸ்தாபித்துக் கொண்டதுதான் குப்தர்களின் காலம். காளிதாசரையும், அஜந்தா சிற்பங்களையும் காட்டி கலைகள் வளர்ந்தன, இலக்கியம் வளர்ந்தன என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.
மன்னர்களின் சரித்திரங்களிடையே சாதாரண மக்களின் வாழ்க்கை தாழிகளில் புதைக்கப்பட்டு இருக்கின்றன. வேதமதத்தின் ஜாதிய கட்டுமானத்திலிருந்து தங்களை விடுதலை செய்து கொள்ளவே தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் புத்தமதத்தைத் தழுவினர். பிறகு சமண மதத்தைத் தழுவினர். மூஸ்லீம் மதத்திற்கும், கிறித்துவ மதத்திற்கும் முதலில் சென்ற மனிதர்கள் இவர்களாகவே இருக்கிறார்கள். தங்களை மனிதர்களாக, சம உரிமை கொண்டாடுபவர்களாக யாராவது மதிக்க மாட்டார்களா என்று வரலாற்றின் நாட்கள் முழுவதும் தேடித்தேடி அலைந்தவர்களாக இந்த சாமானியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான ஒளியைத் தராமல் தங்கள் பிடியில் எப்போதும் வைத்துக் கொள்ளவே ஆதிக்க சக்திகள் துடியாய் துடிக்கின்றன. வேதகாலத்திற்குப் பிறகு அது குப்தர்களின் காலத்தில் முன்னுக்கு வந்தது. அப்போது கடந்தகால மகிமை பேசியது. மொகலாயரின் காலத்துக்குப் பிறகு சமயமறுமலர்ச்சிக் காலமாக பேர் சூட்டிக்கொண்டு கடந்தகால மகிமை பற்றி பேசியது. இந்திய சுதந்திரத்தின் கடைசித் தருணங்களில் இந்துமகா சபையாக, ஆர்.எஸ்.எஸ்ஸாக உருவெடுத்து பாரதீய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள்ளாக பல முகங்களோடு இன்று 'கடந்தகால மகிமை' பற்றி பேசுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பிரிட்டிஷ்காரன் எடுத்துக் கொடுத்த 'இந்து' என்கிற வார்த்தையை அப்படியே பிடித்துக் கொண்டு அதையே வரலாற்றின் எல்லா காலக்கட்டங்களிலும் தங்கள் மதத்தின் பேராய் பதித்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் இந்துத்துவாவின் முகவரியும், முகங்களும்.
கடந்தகால மகிமை பற்றி பேசி, நிகழ்காலத்தை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதுதான் இவர்களின் நோக்கம். இந்துத்துவா என்பதன் வரலாற்றுப் பிண்ணனியும், அர்த்தமும் இதுதான். தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் தங்களது சேனைகளாய் உருவாக்கிக் கொள்ள ஒரு பொது எதிரியை காண்பிக்கிறார்கள். அது 'இந்து' என்று இவர்கள் காட்டுகிற அடையாளத்தில் அடங்கி இருக்கிறது. 'யார் தங்கள் தந்தையர் பூமியை புண்ணிய பூமியாக கருதுகிறானோ அவனே இந்து, இந்தியன்' என்றெல்லாம் வியாக்கியானங்கள் தருகிறார்கள். ஒரு மூஸ்லீமுக்கு, அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருக்கட்டும், சவுதி அரேபியாவைச் சார்ந்தவராக இருகட்டும். புண்ணிய பூமி என்றால் மெக்காவும் மெதினாவும்தான். இந்த ரீதியில் பார்க்கும்போது கிறித்துவர்களும், மூஸ்லீம்களும் இந்த நாட்டுக்குரியரவராக இருக்க முடியாது. சொந்த நாட்டுக்குள்ளேயே அவர்களை அந்நியர்களாக்குகிற கபடத்தனம் இது. அவர்களுக்கு எதிரான ஒரு சமூகப் பதற்றத்தை உருவாக்கி இந்த 'இந்து' என்ற ஒரு மாயமான அடையாளத்தை மேலும், மேலும் உறுதிப்படுத்துவதை அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.
அவர்களின் கடந்தகால மகிமை என்பது மக்களின் சந்தோஷத்தைப் பற்றியதாக இருக்காது. அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவது பற்றி இருக்காது. மக்களை எப்படி அடிமைப்படுத்துவது என்பதைப் பற்றியதாகவே இருக்கும். கடந்தகாலத்தில் ராமருக்கு அயோத்தியில் கோவில் இருந்தது, அது பாபரால் இடிக்கப்பட்டது என்பார்கள். கடந்தகாலத்தில் சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக இருந்தது என்பார்கள். கடந்தகாலத்தில் இராஜஸ்தான், குஜராத் வழியாக சரஸ்வதி நதி ஓடிக்கொண்டு இருந்தது, அதை மீட்க வேண்டும் என்பார்கள். கடந்தகாலத்தில் இங்கேதான் ராமர் பாலம் இருந்தது. எனவே சேதுசமுத்திரத் திட்டம் வேண்டாம் என்பார்கள்.
வரலாற்றின் பக்கங்களை கரையான்களாய் அரித்துவிட்டு அதில் என்ன எழுதியிருந்தது என்பதை அவர்களே சொல்லுகிற விசித்திரம் இது. முழுவதும் அறிய முடியாத கடந்த காலத்தை தங்களுக்குரியதாக பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகையான வரலாற்று மோசடியை அவர்கள் செய்துகொண்டே இருப்பார்கள். இதுதான் பாசிசத்தின் ஆணிவேராகவும், அடிநாதமாகவும் இருக்கிறது. எதிர்காலத்தை நிகழ்காலத்தின் வெளிச்சத்திலிருந்து ஒரு புதிய உலகமாக படைத்திட அவர்கள் நினைப்பதில்லை. எதிர்காலத்தை கடந்தகாலத்தின் இருட்டிலிருந்து கொண்டு வரவே அவர்கள் துடிக்கிறார்கள். சமூகத்தின் அழுக்குகளை உதறிவிட அவர்கள் ஒருபோதும் நினைப்பதில்லை. அழுக்குகளை மேலும் மேலும் சமூகத்தின் மீது படியச் செய்வதுதான் அவர்கள் விருப்பம். ஒன்றிலிருந்து ஒன்று பிறக்கிற பரிணாமத்தை அவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. ஒன்றே ஒன்றுதான், அதில் மாற்றமில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள்.
இவர்கள் தன்னை சவாரி செய்ய காலமென்னும் குதிரை அனுமதிப்பதில்லை. அவர்களை புறந்தள்ளிவிட்டு நகர்ந்துகொண்டே இருக்கும்!
*
இராமாயணத்தில் இலங்கைக்கு சென்ற எத்தனையோ லட்சம் தென்னிந்திய குரங்குகளின் பரம்பரைக்கு என்ன நடந்தது. அட்லீஸ்ட் சம்திங் மஸ்ட் பி தெயர்..சண்டையில் அழிந்துவிட்டதாகவும் சொல்லமுடியாது. சஞ்சிவீ மலையின் காற்றுப்பட்டு அனைத்தும் உயிர்தொழுந்துவிட்டன. தமிழகத்தமிழா...எங்கே அந்த குரங்குப்பரம்பரை?(பதிலே பதில்களிடம் கேட்வி கேட்கிறது)
பதிலளிநீக்குஇது ஒரு சிறந்த கற்பனை அனுமானமாகவே இருக்கும் என நினைக்கிறேன்!
பதிலளிநீக்குஆரியர்களின் வருகை மொகலாயர்களின் வருகைக்கு முந்தியது!, புருஸோத்தமன் என்ற பெயர் கூட சமஸ்கிருதம் தானே!
அதன் பிறகு வந்தது தான் புத்தம்!, அதன் பிறகு ஜைனம்!
புத்தம் தனியே நிற்கிறது, ஜைனம் தற்பொழுது இந்து கடவுள்களையும் ஏற்று கொண்டுவிட்டது!
\\இவர்கள் தன்னை சவாரி செய்ய காலமென்னும் குதிரை அனுமதிப்பதில்லை. அவர்களை புறந்தள்ளிவிட்டு நகர்ந்துகொண்டே இருக்கும்!\\
பதிலளிநீக்குமிகவும் நிதானமான, ஆழமான கருத்துக்கள்.. வெறுமனே ஆதிக்கவாதிகளை குறை கூறாமல், எதனால் அவர்கள் செயல்கள் வெறுக்கத்தக்கவை என்று தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நன்றி
//வரலாற்றின் பக்கங்களை கரையான்களாய் அரித்துவிட்டு அதில் என்ன எழுதியிருந்தது என்பதை அவர்களே சொல்லுகிற விசித்திரம் இது. முழுவதும் அறிய முடியாத கடந்த காலத்தை தங்களுக்குரியதாக பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகையான வரலாற்று மோசடியை அவர்கள் செய்துகொண்டே இருப்பார்கள்....//
பதிலளிநீக்கு-என்ன பேசுகிறீர்கள் தோழர்...
மக்களுக்குப் புரிகிற, மக்களால் எளிதில் கேள்வி கேட்க முடிகிற விஷயத்தை மையப்படுத்தி அரசியல் நடத்தினால், 'நீலச் சாயம்... ஸாரி... காவிச்சாயம் வெளுத்துப் போச்சு டும்டும்டும்!' என்று கொட்டடித்து கழுவிலேற்றி விடுவார்களே... அப்புறம் பிழைப்பு அரசியலில் மண் விழுந்து விடாதா...
அதனால்தான் இந்த கரையான் அரித்த பக்கங்களுக்கு புது விளக்கம் சொல்லி பதவிப் பிச்சை எடுத்து வருகிறது இந்த மோ(ச)டிக் கும்பல்!
-சிவா
ஐயா,
பதிலளிநீக்குமிகத் தவறான வரலாற்றுக் கட்டுரை.இப்பதிவை உங்கள் கற்பனைப் பதிவாகவே நான் பார்க்கிறேன்.
"இந்தியாவில் நிறுவனமாக்கப்பட்ட முதல் மதமான புத்தமதத்தை நிராகரித்து, இன்று இந்து மதமாக உருவாக்கப்பட்டுவரும் அன்றைய வேத மதத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது"
புத்தர் வாழ்ந்த காலம் கிமு 480. புத்தர், துறவு பூண்டு, மெய்ஞானத்துக்காக தேடி அலைந்தார். சமய நூல்களையும் படித்தார். அதில் அவருக்கு நாட்டம் இல்லாமல் போக, கர்ம யோகமான, தியானத்தை பின்பற்றி முக்தி அடைந்தார். அப்படியென்றால், இந்து சமயம் எப்பொழுது தோன்றியது ஐயா. இந்து என்கின்ற பெயர் மட்டும் தான் புத்தருக்கு பிறகு வந்தது. அதுவும் முகலாய, ஆங்கிலேய படையெடுப்புக்களுக்குப் பிறகு.
சங்கத் தமிழ் சமய இலக்கியங்கள் தோன்றிய காலங்களில் புத்தரே பிறக்கவில்லை என்பது என் கருத்து.
"வேதமதத்தின் ஜாதிய கட்டுமானத்திலிருந்து தங்களை விடுதலை செய்து கொள்ளவே தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் புத்தமதத்தைத் தழுவினர். "
இது மிகப் பெரிய ஜோக் ஐயா. சாதியில் இருந்து தங்களை விடுதலை செய்து கொள்ள அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வது கிறித்துவமும், இஸ்லாத்தும். பௌத்தம் அல்ல. காரணம், இந்து சமயத்தவர் சமணம், பௌத்தம் போன்ற சமயங்களை வேற்று சமயங்களாக பார்ப்பது கிடையாது.
டாக்டர் அம்பேத்கார் கூட முதலில் இஸ்லாத்தை தழுவுவதாகத் தான் செய்திகள் வந்தன. கடைசியில் தான் பௌத்தத்தை தழுவினார். அவர் ஒரு விதிவிலக்கு.
இன்னொன்று, வரலாறு என்பது ஏற்கனவே நடந்த ஒன்று. தங்கள் கருத்திற்கு ஏற்ற மாதிரி தான் வரலாறு இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?
//பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பிரிட்டிஷ்காரன் எடுத்துக் கொடுத்த 'இந்து' என்கிற வார்த்தையை அப்படியே பிடித்துக் கொண்டு அதையே வரலாற்றின் எல்லா காலக்கட்டங்களிலும் தங்கள் மதத்தின் பேராய் பதித்துக் கொண்டு இருக்கிறது.// ஆழமான கருத்துக்கள் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்
பதிலளிநீக்குவெண்காட்டான்!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
வால்பையன்!
கிண்டல் வர வர ரொம்ப கூடிக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது.:-)))))
ஆரியர்களின் வருகை கி.மு 1500ஐ ஒட்டி. அதையொட்டி வேதங்களின் காலம். அதனை எதிர்த்து. புத்த நெறிகளை உருவாக்கிய கௌதம புத்தரின் காலம் கி.மு. 500. கிட்டத்தட்ட 800, 900 ஆணடுகள் புத்தமதம் இந்த மண்ணில் செல்வாக்கு பெற்றிருந்தது. அதற்குப் பிறகு வந்த குப்த ராஜ்ஜியம் (கி.பி 400 ஐ ஒட்டி) மீண்டும் வேதங்களின் காலத்தை முன்னுறுத்தி, புத்த மதத்திற்கு எதிராக செயல்பட்டது. அதைத் தொடர்ந்து கி.பி 8ம் நூற்றாண்டில் இருந்து பக்தி இயக்கம். கி.பி 12ம் நூற்றாண்டில் மொகலாயர்கள் வருகை. கி.பி 16ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் வருகை.
இது இந்திய வர்லாற்றின் கால வரிசை. இங்கே நான் எதை கற்பனையாகச் சொல்லி இருக்கிறேன்?
ராபின்!
நன்றி
நாஸியா!
நன்றி.
சிவா!
சரிதான்.
ரவிக்குமார்!
நன்றி.
இந்த்துவா பெளத்தம்/புத்தரை தூற்றுகிறதா?. பெளத்தம் அழிக்கப்பட்டதில் இஸ்லாமியருக்கும் பங்கு உண்டே அதை ஏன் மறைக்கிறீர்கள்.தலிபான்கள் ஏன் புத்தர் சிலைகளை 21ம் நூற்றாண்டிலும் இடித்தார்கள்.
பதிலளிநீக்குஇஸ்லாம் பரவிய இடங்களில் பெளத்தம் என்ன ஆயிற்று.
சேது சமுத்திரத் திட்டத்தை இந்த்துவாவை எதிர்க்கும் ஞாநி எதிர்க்கிறார்.சூழல் பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்கள், மீனவர்
வாழ்க்கையில் அக்கறை கொண்டவர்கள் எதிர்க்கிறார்கள்.
ஆனால் எது அழிந்தாலும் அழியாவிட்டாலும் ராமர் சேது அழிக்கப்படும் அல்லது சேதம்
விளைவிக்கப்படும் என்ற ஒரே
காரணதிற்காக நீங்கள் அதாவது
போலி மதச்சார்பின்மைவாதிகள்
அதை ஆதரிக்கிறீர்கள். அது
இஸ்லாமியருக்கு புனிதமான
ஒன்றாக இருந்தால் உங்கள்
கோரிக்கை அதை எப்படியாவது
காப்பாற்ற வேண்டும் என்பீர்கள்.
உங்களுக்கு இருப்பது வெறி,
எதைக் காரணம் காட்டியாவது
இந்த்துவாவை திட்டும் வெறி.
கபிலன்!
பதிலளிநீக்குசொன்ன காலங்கள் எல்லாம் சரிதான்.
புத்தரின் காலம் கி.மு 480. சரிதான். ஆங்கிலேய படையெடுப்புக்குப் பிரகுதான் இந்து என்ற சொல் வந்தது. சரிதான்.
இங்கே சங்கத்தமிழ் இலக்கியங்கள் எதற்காக திடேரென்று முளைத்தது. நான் என் பதிவில் எங்கும் அப்படிக் குறிப்பிடவில்லையே.
பக்தி இயக்கம் என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறேன். அது கி.பி.8ம் நூற்றாண்டையொட்டி. சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் ஆகியோரின் காலங்களையொட்டி. இப்போது தங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
கௌதம புத்தர், தனது சங்கத்தில் யாரும் சேரலாம். அதற்கு வர்ணங்கள் தடையில்லை என்கிறார்.”கங்கை, யமுனை பேராறுகள் கடலில் க்லந்துவிட்டபின், அந்த ஆறுகளின் பெயர்களும், அதன் பிறப்பு-வளர்ப்பு உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளும் மறைந்து, கடலில் கலந்து விடுகின்றன. அதுப்பொல பல வர்ணங்களைச் சேர்ந்தவர்கள் நமது சங்கத்தில் சேரும்போது வர்ணம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து விடுகின்றனர்” என்கிறார். இதற்கு என்ன அர்த்தம் கபிலன?
அவருடைய பிரதான் சீடர்களில் ஒருவர் உபாலன். முடிதிருத்தும் நாவித வகுப்பைச் சார்ந்தவர். கதைன் என்பவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். நந்தா என்பவர் இடைக்குலத்தைச் சார்ந்தவர். புன்ன என்பவர் அடிமைப்பெண். இதெல்லாம் எதனை உனர்த்துகிறது கபிலன்?
ஆமாம், இந்து மன்னர்கள்தானே இங்கு பௌத்தத்தையும், சமனத்தையும் இரத்தம் சொட்ட சொட்ட கருவறுத்தவர்கள். நாலந்தாவை எரித்ததும், புத்த பிக்குகளை கொன்றதும் யார்? அது எதற்கு? மதுரையில் சமணர்களை கழுவேற்றிக் கொன்றது யார்? இந்துக்களை பௌத்தர்களோடு இணக்கமாக இருக்க விட்டார்களா அவர்கள்?
நண்பரே! உண்மைதான்.தங்கள் கருத்திற்கு ஏற்ற மாதிரி தான் வரலாறு இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?
//காரணம், இந்து சமயத்தவர் சமணம், பௌத்தம் போன்ற சமயங்களை வேற்று சமயங்களாக பார்ப்பது கிடையாது. //
பதிலளிநீக்குeppoothirunthu? From budha period?
Kabilan please read history.
//இந்த்துவா பெளத்தம்/புத்தரை தூற்றுகிறதா?. பெளத்தம் அழிக்கப்பட்டதில் இஸ்லாமியருக்கும் பங்கு உண்டே அதை ஏன் மறைக்கிறீர்கள்.தலிபான்கள் ஏன் புத்தர் சிலைகளை 21ம் நூற்றாண்டிலும் இடித்தார்கள்.
பதிலளிநீக்குஇஸ்லாம் பரவிய இடங்களில் பெளத்தம் என்ன ஆயிற்று.//
Why can't ask Taliban about this, let’s hear what they (Taliban) are saying...
(Mr. Madhavaraj, These videos are not related to your topic; this is an interview of Taliban's representative with NPR (National Public Radio, USA - a non biased radio station) I hope this will not change the purpose of this article).
The truth about the Taliban (pt.1)
http://www.youtube.com/watch?v=DWcer0iBLKg&feature=player_embedded
Truth about the Taliban (pt.2)
http://www.youtube.com/watch?v=V6QMzfQNSCI&feature=channel
Truth about the Taliban (pt.3)
http://www.youtube.com/watch?v=MPtEFdqAlNs&feature=channel
The truth about the Taliban (pt.4)
http://www.youtube.com/watch?v=UnjWX22ck2s&feature=channel
Truth about the Taliban (pt.5)
http://www.youtube.com/watch?v=giHSsE7AUBE&feature=channel
மதங்களை வெருப்போர்க்கு இந்து மதம் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுமா?
பதிலளிநீக்குஏதோ மற்ற மதங்களில் எல்லாம் தீண்டாமை என்பதே இல்லை, அவர்கள் வந்தோரை வழ வைக்கும் தெய்வங்கள், அமைதிப்புறாக்கள் என்பது போன்று சித்தரிப்பது "selective amnesia" அன்றி வேறென்ன?
இந்து மதத்தினர், நீங்கள் எவ்வளவு குத்தினாலும் சும்மா இருப்பதால், அவர்களை நோண்டி கொண்டே இருப்பதில், உங்களுக்கு அப்படி என்ன ஒரு திருப்தி?
மேலும் இந்த மாதிரி வேண்டாத வேலையையெல்லாம் விட்டு விட்டு , "தோழர்கள்" சீனா நமக்கு கொடுக்கும் தொந்தரவு பற்றி எழுதி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே. நாட்டு பற்று மொழி பற்றெல்லாம் கூட கருப்பு கண்ணாடி போட்டு, நீங்கள் பார்க்க விரும்புவதை பார்ப்பீர்களா? இன்னொரு வாசகர், ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி "தோழர்" களால் கொல்லப்பட்டதை பற்றி கேட்டு கொண்டிருக்கிறார், அவருக்கு எந்த பதிலும் காணோம்? ஏன் பாசம் தடுக்கிறதோ?
அதனால், சும்மா இந்துக்களை எதிர்ப்பதையும், முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் காவடி தூக்குவதையும் விட்டு, நாட்டுக்கும், மக்களுக்கும் உபயோகமான கட்டுரைகளை எழுதுங்கள்.
இப்படி பார்ப்பனரையும், மற்ற சாதியினரையும், இட ஒதுக்கீடு என்ற பெயரில், நாட்டை விட்டே விரட்டி விட்டு இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய அதனை பேரையும் புகழையும், கெடுத்து விட்டீர்கள். இன்னும் எதனை நாட்கள் தான் இப்படி ஒரு தணலில் குளிர் காய போகிறீர்கள்?
நல்ல ஆய்வு...
பதிலளிநீக்குMr.Madhavaraj!!!
பதிலளிநீக்குHow many years of experience you have? Please tell us honestly you never spoke about your past to your kids atleast to make them aware of your history. I hope everyone will agree that you surely discussed your past experiences. After all Mr.Madhavaraj lived 50 yrs or below but talking about the past!!! So called Hindu religion is about 1000+ yrs history as per your calculation's (I am weak in Math's) I hope nothing wrong in that talking history about Hindu. Also you are trying to attack the BJP instead you can talk about your abilities. For this too you need to tell history about Russia, China etc... Don't try to act smart be smart... I am not mean to attack you personal
Also you ppl scared about terrorism So you ppl playing it safe with Hinduism alone. If you ppl really want to get rid of caste n religion try talk about other religion too which also has equal unwanted practices etc... I know you never do that since next day you will blown away..... Is there anyone there to challenge
Cheers Have Fun.
புத்த மதமும் புத்தருக்கு பிறகு சரியான வழி காட்டல் இல்லாமல் , படுத்து விட்டது, எப்படி பெரியாருக்கு பின்னால் திராவிடர் கழகம் சிடைந்ததோ அதே போல புத்த மதம் சிதைந்தது எனலாம்.
பதிலளிநீக்குYour party is facing crisis in west bengal.In kerala the problems are mounting day by day.In the next few years in both states the LDF is likely to lose the power.
பதிலளிநீக்குAbout CPI(M) in tamil nadu the less said the better it is.
you can write 100 posts a day abusing hindutva and supporting minorities.that will serve no purpose.anyway your party is in the declining phase and CPI(M) will soon become a pale shadow of what it was once.faithful followers like you do not realise the pathetic state of your party now.hinduism has survived so many attacks.it will survive but whether CPI(M) will survive after 20 years is the question you should worry about.