“சாமியார் சமாதியாகி விட்டார்”

 

சிரிப்பை மட்டும் வரவழைப்பதில்லை இந்தக் குட்டிக் கதை. வேறு சில சூட்சுமங்களை, புனிதங்களை நடுத்தெருவில் போட்டு உடைக்கிறது.

எளிமையான, எல்லோருக்கும் தெளிவாகப் புரியும் ஒன்றிற்கு தங்கள் வியாக்கியானங்கள் மூலம் மாபெரும் அர்த்தங்களைக் கற்பித்து, அதை அசாதாரணமானதாக்கி விடுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். இது அவர்களைப் பற்றிய கதை.

எழுத்தாளர் ஜி.நாகராஜன் எழுதியது. படித்துப் பாருங்களேன்!

*

டத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டுமே பேசிக்கொண்டனர்.

“சாமியார் சமாதியாகிவிட்டார்”, “இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தாம், அப்படியே சமாதியாகிவிட்டார்” என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.

ஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்தனர். என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும், “சாமியார் சமாதியாகிவிட்டார்” என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியேக் கொண்டு வந்தனர். சாமியார் வெளியே தூக்கி வரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடீரென்று, “டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு” என்று கத்திக்கொண்டு கூட்டத்தை விட்டு ஒடிவந்தான். உடனே அத்தனைச் சிறுவர்களும், “மடத்துச் சாமியார் செத்துப் போயிட்டாரு” என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.

*

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. எனக்குச் சிரிப்பு வரவில்லை. ஆனால் அழுத்தம் திருத்தமாகப் புரிந்தது. முன்னுரைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. படித்ததும் சிரித்தேன். கதையைப் படிக்க வாசகனை ஆயத்தப்படுத்தும் தங்கள் முன்னுரை அருமை!

  பதிலளிநீக்கு
 3. இதுக்குப் பேருதான் 'டைமிங்'!

  -சிவா

  பதிலளிநீக்கு
 4. சானாக்கு சானா நம்மகிட்ட உள்ள பழக்கம் தல!

  அதான் சாமியார் சமாதியாகிட்டார்!

  சாமியார் கக்கா போயிருந்தா
  சாமியார் சாம்பார் வச்சிருக்கார்ன்னு எடுத்து கரைச்சு சாப்பிடாலும் சாப்பிடுவாங்க!

  பதிலளிநீக்கு
 5. nagarajan...what apersonality..town hall rd.of madurai is awitness for that ...who can forget him in his whitedress on his hey days...it is the same man with beard and mush begging one re from friends...my heart bleeds mathavji..kashyapan

  பதிலளிநீக்கு
 6. நல்ல பகிர்வு...மாதவ்ஜி...தெளிவாக இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. சாமியார்களுக்கும் சித்தர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சமாதி அடைவது என்பது புலன்களை அடக்கி மூச்சை நிறுத்துவது ஆகும். செயல்பாட்டு முறையில் இது சாத்தியமே. எனினும் இதை நடத்தியதாக முன்னோர் கூற கேட்டுள்ளேன். சித்தர்கள் உண்மையில் சிறந்தவர்க்ள சாமிகளைவிட. கார்களோ பணத்திற்கோ வீட்டிற்கோ எதற்கும் ஆசைப்ட்டதில்லை.
  ஆனால் ஈழத்தில் மட்டக்களப்ில் ஒரு சித்தர் பீடம் இருக்கிறது. அங்குள்ளவர் காயத்திரி சித்தர். காயத்திரி மந்திரம் புகழ்பரவதொடங்கிய காலத்தில் வந்தபடியால் அந்த பெயர். அவர் சுகயீனமுற்று சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானர். கொழும்பில் ஒரு பத்திரிகைச் செய்தி: காயத்திரி சித்தர் சமாதியடைந்தர்.
  --வடிவேலு முறையில் சொல்வதானால் முடியல..

  பதிலளிநீக்கு
 8. நல்ல கதை சமூக எதார்த்தத்தைப் பிரதிபலித்தது....

  பதிலளிநீக்கு
 9. Many times ordinary death of some so called saints may be termed as Samadhi by vested interests.

  But one need not conclude that there does not exist any thing called attaining samadhi.

  Rejecting the possibility of the existence of a yogic technology 'Samadhi' ia equally a blind belief as that of believing it without knowing.

  Children perceived it as death. It was the fact without any distortion. Truth need not be simple, even if it is simple it need not be perceived by every body the same way.

  Being open is an essential quality of a progressive person. One can be skeptical, curious but not prejudiced. Knowledge is limited , so also our perception.

  If one is interested, explore what is Samadhi; otherwise ignore it, neither ridicule nor glorify. More importantly do not conclude.

  Absence of evidence is the evidence of absence.
  - Pugazh

  பதிலளிநீக்கு
 10. It resumbles the story on the NAKED king who was exposed by a kid. (Others pretended that the King was claded with the fine dress which can be seen only by the GOOD people)

  பதிலளிநீக்கு
 11. :-) பகிர்வுக்கு நன்றி! இது ஐரோப்பிய நாடோடிக்கதை யொன்றை நினைவூட்டுகிறது!!

  பதிலளிநீக்கு
 12. முகவை மைந்தன்!
  ஆதி!
  சிவா!
  வால்பையன்!
  அனானி!
  அ.மு.செய்யது!
  வெண்காட்டன்!
  முனைவர்.குணசீலன்!
  மிக்ஸ்!
  புகழேந்தி!
  வாசன்!
  சந்தனமுல்லை!

  அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. சாமி யார் ? ஆசாமி ஹ ஹ ஹ சாமி யார் ? ஆசாமி ஹ ஹ ஹ சாமி யார் ? ஆசாமி ஹ ஹ ஹ

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!