நோபல் பரிசை திருப்பிக் கொடுத்து விடுங்கள், ஒபாமா!

 

“ஒபாமாவுக்கு கெமிஸ்ட்டிரிக்கான நோபல் பரிசையும் கொடுத்திருக்கலாம். அவரிடம் கெமிஸ்ட்ரியும் இருக்கிறது” என்று ஜோக்குகள் பொறி பறக்கின்றன இணையப் பக்கங்களில். “பிஞ்சிலே பழுத்த பழம்” என ஒபாமாவுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் அமைதிகான நோபல் பரிசை அடையாளப்படுத்துவதும் நடக்கிறது.

நோபல் பரிசை பெறுவதற்கு பெயர்கள் பரிந்துரைக்க பிப்ரவரி 1ம் தேதி இறுதிநாளாகும். இந்த தேதிக்கு 12 நாட்களுக்கு முன்புதான் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்று இருந்தார். இப்போது ஒன்பது மாதங்களே பொறுப்பில் இருந்திருக்கிறார். அதற்குள் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ‘சர்வதேச அரசியலில் புதிய சூழ்நிலையை ஒபாமா உருவாக்கியுள்ளார், பல்வேறு ராஜிய உறவுகளில் முக்கிய நிலையை அவர் எட்டியுள்ளார்’ இப்படியெல்லாம் நோபல் பரிசு கமிட்டி சொல்லியிருக்கிறது.

“நான் அதற்கு தகுதியானவனா எனத் தெரியவில்லை. ஆனால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. நான் செய்த காரியங்களுக்கான அங்கீகாரம் அல்ல இது. சர்வதேச உலகம் அமெரிக்கத் தலைமையின் மீது வைத்துள்ள எதிர்பார்ப்புகளை காட்டுகிறது” என எச்சரிக்கையோடுதான் பேசியிருக்கிறார் ஒபாமா.

பெருத்த கண்டனங்களும், விவாதங்களும் நடந்துகொண்டு இருக்கின்றன. ‘சில அறிவிப்புகள் மட்டுமே செய்திருக்கிறார் அவர். அதற்கே பரிசா..!’ என வியக்கிறார்கள். நோபல் பரிசு தன் அர்த்தத்தையும், மகிமையையும் இழந்து விட்டது என்கிறார்கள். கௌபாய் போல் திரிந்த ஜார்ஜ்புஷ்ஷின் மீதுள்ள வெறுப்பை ஐரோப்பியச் சமூகம், ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்ததன் மூலம் காட்டியுள்ளது என்கிறார்கள். அரசியல் நோக்கம் கொண்டதாக நோபல் பரிசு மாறிவிட்டதாக எழுதுகிறார்கள். பெருத்த சேதம் நடந்துவிட்டதாக சத்தங்கள் கேட்கின்றன.

இவைகளுக்கு மத்தியில் ஒரு கடிதம் என்னை வெகுவாக கவர்ந்தது.  ‘ஒருவேளை புஷ் சென்றமுறை எலக்‌ஷனில் தோற்றால் அது பாரன்ஹீட் 9/11 என்னும் அந்த ஆவணப்படத்தினால்தான் இருக்கும்’ என்ற அளவுக்கு உலகையே குலுக்கிய அந்த ஆவணப்படத்தை இயக்கிய மைக்கேல் மூர் அவர்கள் ஒபாமாவுக்கு எழுதிய கடிதம்தான் அது. கடிதத்தை படித்த பிறகு இந்த நோபல் பரிசு குறித்து ஒன்று புரிந்தது. ஒபாமாவின் தலைக்கு மேல் ஒரு மனசாட்சி போல் நோபல் பரிசு நிற்கிறது. மூரின் கடிதம் அந்த மனசாட்சிக்கு உயிரையும், சில கேள்விகளையும் கொடுக்கிறது.

‘அவர் ஒரு கொரில்லா  சினிமாக்காரர்’ என்ற அழைக்கப்படும் மைக்கேல் மூர் மிக அமைதியாக, அழுத்தமாக இங்கு கடிதத்தில் பேசுகிறார்:

அன்புள்ள அதிபர் ஒபாமா அவர்களே!

அமைதிக்கான மனிதராய் இன்று தாங்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்! ஈராக்கிலிருந்து இராணுவத்தைத் திரும்ப அழைக்கப் போவதாகச் சொன்னீர்கள். அணு ஆயுதமற்ற உலகை உருவாக்குவோம் என அறிவித்தீர்கள். ஈரானில் 1953ல் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அதிபரை நாம்(அமெரிக்கா) தலையிட்டு தூக்கி எறிந்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டீர்கள். கெய்ரோ மாநாட்டில் ‘பயங்கரவாதத்தை எதிர்த்த யுத்தம்’ என்னும் உபயோகமற்றச் சொல்லை இனி பயன்படுத்த போவதில்லை என இஸ்லாம் சமூக மக்களிடம் இணக்கமாக பேசினீர்கள். இவையெல்லாம்தான், கடந்த எட்டு வருட அழிவுகளில் இருந்து உலகத்தைக் கொஞ்சம் பாதுகப்பாக உணர வைத்திருக்கிறது. இந்த எட்டு மாதங்களில் தாங்கள் இந்த தேசத்தை ஆரோக்கியமான திசையில் அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.

ஆனால்.....

ஆப்கானிஸ்தானத்தின் மீது அமெரிக்கா தொடுத்த போரின் ஒன்பதாவது வருடத்தின் இரண்டாவது நாளான இன்று தங்களுக்கு இந்த பரிசு கொடுக்கப்பட்டு இருப்பது வஞ்சப் புகழ்ச்சியாகவேத் தோன்றுகிறது. தாங்கள் இப்போது பலவழிகள் சந்திக்கின்ற முக்கியப் புள்ளியில் நின்று கொண்டு இருக்கிறீர்கள். ஒன்று, ஜெனரல்களின் பேச்சைக் கேட்டு யுத்தத்தை விரிவாக்க வேண்டும். அல்லது, புஷ் தொடர்ந்த யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என இராணுவத்தைத் திரும்ப அழைத்தாக வேண்டும். அதுதான் ‘அமைதிக்கான உண்மை மனிதன்’ செய்தாக வேண்டியது.

உங்களுக்கு முந்தைய மனிதனைப் போலவே, செப்டம்பர் 11ல் இங்கு 3000 மனிதர்களைக் கொன்றவனையும் அதற்கு காரணமானவர்களையும் பிடிக்க வேண்டும் என்று தாங்களும் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதனை பீரங்கிகளாலும், இராணுவத் துருப்புகளாலும் செய்ய முடியாது. நீங்கள் ஒரு கிரிமினலோடு சண்டை போடுகிறீர்கள். இராணுவத்தோடு அல்ல. எலிகளை விரட்ட டைனமேட் வெடிக் குச்சிகள் எதற்கு?

அப்புறம் தலிபான்கள். அது அந்த ஆப்கானிஸ்தானத்து மக்களே தீர்வு காண வேண்டிய பிரச்சினை. அப்படித்தானே நாம் 1776ல் செய்தோம். 1789ல் பிரான்சு செய்தது. 1959ல் கியூபா செய்தது. 1989ல் கிழக்கு பெர்லின் செய்தது. ஒன்று நிச்சயம். மக்கள் தங்களுக்கான சுதந்திரத்தை தாங்களே கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். மற்றவர்கள் அதற்கு துணை வேண்டுமானால் செய்யலாம், ஆனால் டிரைவராக இருக்க முடியாது.

இப்போது ஆப்கானிஸ்தானத்தில் நமது தலையீட்டை உடனடியாக தாங்கள் நிறுத்த வேண்டும். முடியவில்லையென்றால், பரிசை ஆஸ்லோவிற்கு திருப்பி அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை.

உங்களது

மைக்கேல் மூர்

 

ஒபாமா இதைச் செய்வாரா?

சர்வதேச உலகமும், ஒபாமாவின் மனசாட்சியும் கேட்கும் கேள்வி இது!

(பி.கு: நேற்றைய பதிவின் பின்னூட்டத்தில், இப்பதிவு எழுதத் தூண்டிய இராம்கோபால் அவர்களுக்கு நன்றி.)

*

கருத்துகள்

24 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மிக அருமை தோழர்...

    ஒவ்வொரு வார்த்தையும் ஒபாமாவின் மனதில் அறையும் வலிமை மிக்கவை.

    என்ன செய்வது..இன்று வெற்று அறிவிப்புகளுக்கே மக்கள் விழா எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

    இவர்கள் மனநிலை மாற இன்னும் பல மாதவராஜுக்கள் தேவைப்படுகிறார்கள்!

    நன்றி
    சிவா

    பதிலளிநீக்கு
  2. அன்பு மாதவ்

    உடனடியாக நீங்கள் எழுதவேண்டும், எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தபடி எழுதியிருக்கிறீர்கள். இந்த 'சென்சிடிவிடி' மிகவும் முக்கியமானது. மிகவும் பாந்தமாக, மைக்கேல் மூர் கடிதம்! அவர் ஏற்கெனவே ஜார்ஜ் புஷ்க்கு நிறைய தலைவலிகள் ஏற்படுத்தியவர். ஆனால், ஒரு கொலை பாதகனுடன் நடத்திய கருத்துப் போராட்டம் அது. நம்பிக்கைகள் கொடுப்பவராக உலகம் எதிர்நோக்கும் பாரக் ஒபாமாவுடன் பேசும்போது அவரது எழுத்துக்களின் தன்மை அதற்கேற்ற தளத்தில், ஆனால் உறுதிமிக்க குரலில் ஒலிக்கிறது.

    தகுதிக்கான கெடு தேதியின்போது அதிபராக ஒன்றரை வார காலம் கூட முடித்திராத ஒரு மனிதருக்கு விழுந்தடித்து வழங்கப்படுகிற போது விருதும் கோணுகிறது. அந்த மனிதரும் நாணுகிறார். உள்ளபடியே பல லட்சம் மனிதர்களை பேச்சற்றும், மூச்சற்றும் போகச் செய்த ஜார்ஜ் புஷ்ஷ’ற்கே சமாதானத்திற்கான விருது வழங்கியிருக்க வேண்டுமென்றும் கிண்டலடிக்கத் தோன்றியது.

    எனக்கு நினைவிற்கு வந்தது தி ஹ’ண்டு நாளேட்டின் கார்ட்டூனிஸ்ட் கேஷவ் வரைந்திருந்த அந்த அற்புதமான சித்திரம்தான்: அதில் மகாத்மாவின் கல்லறையின்மீது இப்படி ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கும்: எந்த விருதும் பெற்றறியாத மகாத்மா இங்கே உறங்குகிறார் என்று......

    முடியுமானால், அந்த ஒரிஜினல் கார்ட்டூனை உங்களுக்கு மெயில் செய்கிறேன்.

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  3. அன்பு மாதவராஜ்,

    அநியாயம், அக்கிரமம் என்று குதிக்கத் தகுதியான ஒரு விடயம் இது. ஒபாமாவுக்கு நோபல் பரிசு, அதுவும் அமைதிக்காக. சாதித்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பரிசை, சாதிக்கப்போவதாக அரசியல் அரங்கங்களில் பேசிய ஒருவருக்கு கொடுத்திருப்பது ஒரு அதிர்ச்சியான விஷயம். Talker prevails over the doers. காந்தீய கொள்கைகள் பேசுவதாலும், மார்ட்டின் லூதர் கிங்-கை மேற்கோள் காட்டுவதனாலே மட்டும் ஒருவருக்கு நோபல் பரிசு கொடுப்பதாய் இருந்தாலும், இங்கும் நிறைய பேர் வரிசையில் உள்ளனர் எனது நாட்டில்.
    இனிமேல் செய்யப்போகும் ஒரு அமைதிப்புரட்சிக்கு அச்சான்யமாய், முன் தொகையாய் கொடுத்திருக்கும் விலையோ இது, அமைதிக்காய் நோபல் பரிசு வழங்கியிருப்பதால், தான் இனி எடுத்தேறும் காரியங்களில் அமைதிக்கு எந்தவித பங்கமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு சூழ்ச்சியா இது என்று நினைக்க வைக்கிறது. எனக்கு இது ஒரு பெரும் அரசியல் கேலிக்கூத்தாய் இருக்கிறது, ஒபாமா இதற்கு நான் தகுதியில்லை என்பதோடு முடித்திருக்கலாம். சிறந்த நடிகர், சிறந்த பேச்சாளர், சிறந்த மாயக்காரன் என்று இன்ன பிற விருதுகளும் ஒபாமாவுக்கு வழங்க சர்வதேச உலகம் தயாராய் இருக்கிறது. தோள்களை தினவுப் படுத்துங்கள் ஒபாமா! நிறைய மாலைகள் கோர்த்துக்கொண்டிருக்கிறோம் உங்களுக்கு.

    மிக நேர்த்தியான பதிவு, செய்திகளை பார்த்ததும் அதிர்ச்சி, இன்னும் மீள முடியாமல்.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  4. நோபல் பரிசிற்கு எல்லா விதத்திலும் தகுதியானவர் ஒபாமா.

    குறிப்பாக அமெரிக்க குழந்தைகள், மாணவர்களின் சிந்தனை போக்கை மாற்றி வருபவர். இதன் பயன் இருபது ஆண்டுகள் கழித்தே தெர்யும்.

    அடுத்த இருபது வருடம் கழித்து அமெரிக்க மக்கள் அன்பு உள்ளவர்களாய் இருப்பார்கள், போரை வெறுக்கும் சிந்தனை உடையவர்களாய் இருப்பர்.

    பதிலளிநீக்கு
  5. //நீங்கள் ஒரு கிரிமினலோடு சண்டை போடுகிறீர்கள். இராணுவத்தோடு அல்ல. எலிகளை விரட்ட டைனமேட் வெடிக் குச்சிகள் எதற்கு?//

    தேவையான கேள்வி....

    எந்தவொரு தீவிரவாதத்தையும் எதிர்தழிக்கும் போக்கில் சாமானியனும் கொல்லப்படுவானாயின் அதுவும் ஒரு தீவிரவாதமே. இதை இராணுவம் செய்தாலும் சரி...இன்னபிற அமைப்புகள் செய்தாலும் சரி.

    இதுவரை நோபல் பரிசுக்கிருநத மரியாதை இந்த செயலினால் கொஞ்சம் வலைந்துதான் நிற்கிறது.

    ஒபாமாவுக்கு இந்த பரிசினை வழங்கியதற்காக சொல்லப்பட்ட காரணங்களும் அவ்வளவு பொறுத்தமானதாக இல்லை என்றே சொல்லவேண்டும்...

    பதிலளிநீக்கு
  6. ஒபாமாவுக்கு வழங்கப்பட்ட இந்த நோபல் பரிசின் மூலம் இலங்கையில் தடங்களற்று அழிக்கப்பட்ட ஒரு சமுதாயத்திற்கும்,இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் உருக்குலைந்து போன பாலஸ்தீனிய மக்களும்,இராக்கில் இருக்கும் 20000 விதவைகளுக்கும் நீதி கிடைத்து விடுமா ???

    பதிலளிநீக்கு
  7. நல்லகாலம், இலங்கையில் அமைதியுண்டாக்கினார் என ராசபட்சேவுக்கு நோபல் கொடுக்கவில்லை! அதுவரைக்கும் சந்தோசம்!

    பதிலளிநீக்கு
  8. ஒபாமா இந்த பரிசுக்கு தகுதியானவர் தான். அவரின் பேச்சை கவனமாக கேட்டு கொண்டிருப்பவர்கள், அவரின் சிந்தனைகள் எந்த அளவுக்கு அணைத்து தரப்பு மக்களையும் சென்று அடைந்து உள்ளன என்பது வரும் வருடங்களில் தெரியும்.
    ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியே வந்து விடுங்கள் என்று சொல்வது எளிது. அங்கு தாலிபன் அவர்களது பிரச்சினை என்று சொல்வது எளிது. எப்போதிருந்து மற்றொரு சக மனிதன் துன்பம் அனுபவிக்கும் போது நாம் கண்களை மூடி கொண்டிருக்க கற்று கொண்டோம்? அது இந்தியா போன்ற முதுகெலும்பில்லாத அரசாங்கம் செய்யும் காரியம். அமெரிக்க எதை செய்தாலும் எதிர்க்கும் மனப்பான்மை உள்ள மனிதர்கள், அந்த சமூகம் படும் அவஸ்தைகளை எழுதக்கூட திரணியற்றவர்கள் தான். இராக்கை பாருங்கள், எவ்வளவு குதித்தாலும், வேறு யாராலும் செய்ய முடியாத காரியத்தை செய்த அமெரிக்க அரசாங்கத்துக்கு உங்கள் நன்றி கடன் என்ன? இந்திய அரசாங்கம் அல்லது உலகில் வேறு எந்த ஒரு அரசும் செய்ய வக்கில்லாத போது, தன் சொந்த குடிமகனை இழந்து அமெரிக்கா செய்யும் காரியம் எல்லோர் கண்களையும் உறுத்த தான் செய்யும். செய் அல்லது செத்து மடி சொன்னான் நம்மில் ஒரு கவிஞ்ன் . எத்தனை பேர் அதை மனப்பாடம் செய்வதோடு நிறுத்தி கொண்டோம்? செய் அல்லது செய்பவனை நிம்மதியாக இருக்க விடு!!!
    ஒபாமா போன்ற தலைவர்கள் தோன்றுவது மிக அபூர்வம், அதனால் அவர்களை கொண்டாட விட்டால் கூட பரவயில்லை, அடுத்தவர் கொண்டாடும் போது அதை குற்றம் சொல்லும் இந்த சமூகம் எதையாவது சாதிக்குமா?
    நம் அரசாங்கத்தை பணிய வைத்து இலங்கை வாழ் தமிழனுக்கு ஒரு சொந்த வீடு அமைக்க முடியுமா இந்த எழுத்து உலக பிரம்மாக்களுக்கு?

    பதிலளிநீக்கு
  9. //ஒபாமாவுக்கு வழங்கப்பட்ட இந்த நோபல் பரிசின் மூலம் ...நீதி கிடைத்து விடுமா ???//

    ஏனய்யா குழப்புகிறீர்? நோபல் பரிசின் மூலம் நீதி கிடைக்கும் என உமக்கு யார் சொன்னது?

    பதிலளிநீக்கு
  10. And when I say, people in trouble means, not just due to terrorism, just imagine who is helping people recover from recent Indonesian floods, first to reach is the US aid and US forces. And this award is a recognition of US regaining the world leadership after eight years of Bush years.

    பதிலளிநீக்கு
  11. இதுவரை, உலக அமைதிக்கான நோபல் பரிசு, அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய சுயநலன்களுக்காக மட்டுமே பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளன.

    மாறாக, இம்முறை ஒரு உலகப்பொதுநல தூர நோக்குடன், 'உலக அமைதிக்கு ஒருகாலும் அமெரிக்க அதிபரால் குந்தகம் ஏற்படுத்தப்படக்கூடாது' என்ற கண்டிப்பான நிர்பந்தத்தை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தவேண்டியும், எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி தரப்பட்டுள்ளது.

    இது எப்படிஎன்றால், கிட்டத்தட்ட திருடன் என்று அறியப்பட்டவனிடம் அனைத்து சாவிகளையும் கொடுத்து, ஒரு பிரபல வங்கிக்கு காவல் வைத்து, அவனின் காவல் திறனை அனைத்து தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்திருந்தால், அவன் எப்பேர்பட்ட திருடனானாலும், திருடும் எண்ணம் வரவே வராதல்லவா? அதைத்தான்-அந்த கடிவாளம் போடுவதைத்தான்- நோபல் பரிசுக்கமிட்டி சமயோசிதமாக செய்துள்ளது.

    என்னை கேட்டால் இந்த அமைதிக்கான நோபல் பரிசை உண்மையிலேயே பெற தகுதியானவர், இந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை தேர்ந்தெடுத்த அந்த நோபல் பரிசுக்கமிட்டி தான். வாழ்க அவர்களது அறிவும், பொதுநல சேவையும்.

    பதிலளிநீக்கு
  12. I was quite surprised when I sad this morning news paper which carried the news of Noble Laureate Obama. Was thinking whether reading 2009 or 2029 news paper.

    Fantastic timely atricle. Hats off to You and Michael Moor.

    Alagumukilan

    பதிலளிநீக்கு
  13. //குறிப்பாக அமெரிக்க குழந்தைகள், மாணவர்களின் சிந்தனை போக்கை மாற்றி வருபவர். இதன் பயன் இருபது ஆண்டுகள் கழித்தே தெர்யும்.//
    //ஒபாமா இந்த பரிசுக்கு தகுதியானவர் தான். அவரின் பேச்சை கவனமாக கேட்டு கொண்டிருப்பவர்கள், அவரின் சிந்தனைகள் எந்த அளவுக்கு அணைத்து தரப்பு மக்களையும் சென்று அடைந்து உள்ளன என்பது வரும் வருடங்களில் தெரியும்.//


    அப்பூடியா? அப்ப தெரிஞ்ச பின்னாடி கொடுத்த யாரும் கேட்ட மாட்டாங்க அல்லவா?

    அறிவியலுக்காக தரும் போது கண்டு பிடிப்பு நிகழ்ந்து 20-30 வருடத்திற்கு பின் கண்டுபிடிச்சவனே மறந்த பின்தானே தருகிறார்கள்?

    பதிலளிநீக்கு
  14. //இது எப்படிஎன்றால், கிட்டத்தட்ட திருடன் என்று அறியப்பட்டவனிடம் அனைத்து சாவிகளையும் கொடுத்து, ஒரு பிரபல வங்கிக்கு காவல் வைத்து, அவனின் காவல் திறனை அனைத்து தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்திருந்தால், அவன் எப்பேர்பட்ட திருடனானாலும், திருடும் எண்ணம் வரவே வராதல்லவா? அதைத்தான்-அந்த கடிவாளம் போடுவதைத்தான்- நோபல் பரிசுக்கமிட்டி சமயோசிதமாக செய்துள்ளது.
    //

    :) :)

    நானும் அப்படித்தான் நினைத்தேன்

    வகுப்பில் அதிகம் சேட்டை செய்யும் மாணவனை மானிட்டர் ஆக்குவார்களே !!

    பதிலளிநீக்கு
  15. நோபல் பரிசு பெறுமளவுக்கு இன்னும் எதையும் சாதித்து விடவில்லை ஒபாமா. சாதிக்க எவ்வளவோ இருக்கிறது.

    சில பின்னூட்டங்களைப் பார்க்கும்போது... சின்னத் திருட்டு செய்தால் பிரம்படி, பெரிய கொள்ளைக்காரனாக இருந்தால் நோபல் பரிசு... என்பது போல தொனிக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. சிவா!
    நன்றி.


    வேணுகோபாலன்!
    அடேயப்பா! மிகுந்த உற்சாகத்தை தருகிறீர்கள்.நன்றி. அந்த கார்ட்டூனை எதிர்பார்க்கிறேன்.


    மண்குதிரை!
    நன்றி.


    ராகவன்!
    உங்கள் பின்னூட்டங்களே ஒரு அழகுதான்.


    குப்பன் யாஹூ!
    பார்ப்போம். நன்றி.


    க.பாலாஜி!
    பகிர்வுக்கு நன்றி.



    செய்யது!
    அப்படி மேலும் எதுவும் நடந்துவிடக் கூடாது என்றுதான் இந்தப் பரிசு!


    நந்தக்குமார்!
    நன்றி.


    அனானி!
    இதென்ன, இப்படி பயமுறுத்துகிறீர்கள்!


    Itsdifferent!
    உங்கள் கருத்தில் நிறையவே உடன்பாடு உண்டு. அந்த நாட்டில் உள்ள மக்கள் எதற்கும் லாயக்கில்லாதவர்கள், யாராவது ஒரு தேவன் வந்துதான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் போல் இருக்கிறது. இது அந்தந்த நாட்டு மக்களை மேலும் அடிமைத்தனத்தீர்கே இட்டுச் செல்லும்.


    Mohaashik!
    //என்னை கேட்டால் இந்த அமைதிக்கான நோபல் பரிசை உண்மையிலேயே பெற தகுதியானவர்//
    இதுவும் கூட சரிதான். பார்ப்போம்...!


    அழகுமுகிலன்!
    மிக்க நன்றி.


    அனானி!
    பகிர்வுக்கு நன்றி.


    புருனோ!
    ஆமாம், சார், இது அப்படித்தான் தோன்றுகிறது.


    மஹேஷ்!
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. dynamite கண்டுபிடிச்சவர் nobel தான அதா use பண்ணதுக்கு இவருக்கு இந்த nobel prize கொடுத்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  18. dynamite கண்டுபிடிச்சவர் nobel தான அதா use பண்ணதுக்கு இவருக்கு இந்த nobel prize கொடுத்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  19. dear Madhav

    I have just now mailed to you, Keshav's cartoon in The Hindu published on 30 01 2008, on Mahatma that says: Persons without a Bharat Ratna or a Nobel still inspire us......
    if possible you may tag it to your write up on Obama and Nobel. But, mention: Courtesy: The Hindu.


    s v venugopalan

    s v venugopalan

    பதிலளிநீக்கு
  20. They are the first to arrive,

    They are the last to leave,

    Symbol of Courage,

    Batch of Excellence,

    Mark of distinction in the battle field,

    hats of to United states armed forces and Barack Obama

    பதிலளிநீக்கு
  21. சொல்ல வந்ததை எழுத்தில் கொண்டு வந்த நடையும்,மூரின் கடிதமும் நன்றாக இருந்தது.பின்னூட்ட பரிமாணங்களும் Quite interesting.பின்னூட்டக்காரர்கள் இன்னும் கொஞ்சம் அடிச்சு ஆடினால் இடுகை உட்கார்ந்து பார்க்கறவங்களுங்கு அவல் கிடைச்ச மாதிரி இருக்கும்:)

    இன்னிங்ஸ்,சரி அது வேண்டாம்.டென்னிஸ்ல ஒரு ஓவர் முடிஞ்சு உட்கார்ந்து தண்ணி குடிச்சு ரிலாக்ஸ் செய்யற மாதிரி அமெரிக்காவுக்கு இது ரிலாக்ஸ் நிமிடங்கள்.இதுவரைக்கும் போட்ட சண்டைகளுக்கான செலவு,உலகப் பொருளாதாரம் போன்ற காரணிகள் ஒபாமாவே நினைச்சாலும் போய் ஈரானைக் கூட குஸ்திக்கு இழுக்க முடியாது.தொடர்ந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஜிம்மி கார்ட்டர் மற்றும் கொஞ்சம் நோஞ்சான் மாதிரி தெரிகிறது.அதற்கு அப்புறம் ஒபாமா.நோஞ்சானாக இருப்பதனாலேயே நோபல் என்றால் ஒபாமா பரிசுக்குரியவர்தான்.ஆட்சிக்காலம் இன்னும் கால அவகாசம் இருப்பதால் பொறுத்திருந்தாவது கொடுத்திருந்திருக்கலாம்.

    இந்த நிமிடத்தில் வடிவேலு நன்றாக அடிவாங்கிவிட்டு அடிவாங்கினவனுக்குத்தான் பரிசுன்னு பரிசுகோப்பையை லவட்டிட்டு போவது
    நினைவுக்கு வருகிறது:)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!