பாவம், அந்த பூனைக்கண் புவனேஸ்வரி

 

எழுத்தெலாம் கொழுப்பு பிடித்த அந்த பத்திரிகையால் வந்த வினையே எல்லாம். இன்று திரையுலகத்துக்கும், பத்திரிகை உலகத்துக்குமான மோதலாய் தோன்றுகிறது. நாளை சரியாகிவிடும். ஒருவரை விட்டு ஒருவர் இங்கு பிழைப்பு நடத்த முடியாத அளவுக்கு சமரசங்கள் உலாவும் இடம் அது. இதில் போய் பெரிசாய் மண்டை உடைத்துக் கொள்ளத் தேவையில்லை. (நேற்றைய எனது பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் சிவா இப்பிரச்சினை குறித்து தனிப் பதிவாக நான் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் இதனை எழுதுகிறேன்)

வியாபாரமும், அரசியலுமே பின்னணியில் இருக்கும் இந்த விவகாரத்தில் இப்போது அடிபட்டுக் கொண்டு இருக்கிற வார்த்தை ‘சுதந்திரம்’. அதை முன்னுறுத்தி சர்ச்சைகள் எழும்புகின்றன. கிட்டத்தட்ட அனைவருமே மறந்து போய்விட்ட விஷயம் ‘தர்மம்’ என்பதாகும். ஒவ்வொருவருக்கும் அதனை ஞாபகப்படுத்த வேண்டுமானால் செய்யலாம் இந்த நேரத்தில்.

இதுபோன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொச்சையான ரசனையோடு எழுதப்படுவது பத்திரிகை தர்மமா?

திரையுலகம் சாராத வேறு பாவப்பட்ட பெண்களைப் பற்றி இப்படி எழுதப்பட்டு இருந்தால் இந்த அரசு என்ன செய்யும்? முதல்வர் என்ன செய்வார்? அதிலும் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் ஒதுங்கி இருந்தால் இத்தனை வேகமான, கெடுபிடியான நடவடிக்கைகள் இருந்திருக்குமா? இதுதான் அரசின் தர்மமா?

இப்படி நடிகர்களும், நடிகைகளும் போராட்டத்தில் ஈடுபடுவது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் பெண்களை இந்த திரையுலகம்  எப்படி பயன்படுத்துகிறது, பெண்ணுடல் மீது எப்படிப்பட்ட பிம்பங்களை காலம் காலமாய் உருவாக்கிக் கொண்டு இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்குமா? நடிகைகள் குறித்து சமூகத்தின் பொதுப்புத்தியில் உருவாக்கப்படும்  கருத்துக்களுக்கு தாங்களும் பொறுப்பு என்பதை உணருமா? இதுதான் ஒரு கலையின் தர்மமா?

அவரவர்களுக்கு பின்னால் பெரும் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டு, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இவர்களுக்கு முடியும்.  பாவம், அந்த பூனைக் கண் புவனேஸ்வரி. யாரும் அந்தப் பெண்ணை நினைத்துப் பார்க்கவில்லை. அவளுக்காக யார் குரல் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், நாகராஜன் தொடங்கி சுஜாதாவும் வந்து நிற்கிறார்கள்.

சுஜாதாவின் அந்தக் கதையை இங்கு சொல்லவேண்டும். கதையின் பேரே ‘பூனை’தான். பூனை ஒன்றை எடுத்துக்கொண்டு ஒருவர் அந்த சினிமா ஷூட்டிங்கிற்குச் செல்வார். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பூனை தாவுகிற காட்சி அந்த படத்தில் வரும். பூனை சரியாக நடித்து விட்டால் ஒரு ஐநூறு ருபாய் போலக் கிடைக்கும். சிலநாட்கள் வாழ்க்கையை தாக்கு பிடித்து விடலாம்.  பூனையோ சரியாகத் தாவவே தாவாது. நான்கைந்து டேக்குகள் எடுக்கப்படும். டைரக்டர் பொறுமை இழப்பார். பூனையைக் கொண்டு போன மனிதர் பெரும் அவஸ்தையில் இருப்பார். பூனையிடம் மானசீகமாக மன்றாடுவார். இந்த இடத்தையெல்லாம் எழுத்தாளர் சுஜாதா, மிக அற்புதமாக எழுதியிருப்பார். பூனையால் கடைசிவரை முடியாமல் போகும். பூனையையும், பூனையைக் கொண்டு வந்தவரையும் அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள். ஏமாற்றத்தோடும், வலியோடும் அவர் செல்வார்.  வீட்டு வாசலில் ஒரு பெண் நிற்பாள். “என்னப்பா, என்னாச்சு, பூனை சரியாகச் செய்ததா?” என்பாள். “இல்லம்மா..” என்று சோகத்தோடு சொல்வார். “சரிப்பா, அப்ப நான் கிளம்புறேன்” என வேறு சேலை கட்டிக் கொண்டு, பூ வைத்துக் கொண்டு தெருவில் நடக்க ஆரம்பிப்பாள். கடுமையான கோபத்தோடு அந்த மனிதர் பூனையை எதிரே இருந்த சுவரில் எறிவார். சின்ன முனகலோடு அது விழும்.

இந்த ‘அதிர்ஷ்டம்’ கெட்ட பூனைகளும், புவனேஸ்வரிகளும் பாவம்தான்.

*

கருத்துகள்

28 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. புவனேஸ்வரி நிறைய 'உண்மைகளை' சொன்னதால் தான் கொதிக்கிறார்கள். கண்டிப்பாய் அதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஜினி அவரது பழைய பெட்டியில் நடிகை பற்றி குறிப்பிட்டதை நினைத்து பார்க்க வேண்டுகிறேன்... பூனை கதையினை ஒப்பிட்டது அருமை.

  பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 2. பூனை கதை ரொம்ப பிடிச்சிருந்துதுங்க...( மீத எஸ்கேப்பு !! )

  பதிலளிநீக்கு
 3. பாவம் தான் புவனேஸ்வரி.

  திரை உலகில் (கோலிவூட் மட்டும் அல்ல) விபசாரம் நடப்பது நாடு அறிந்த உண்மை.

  ஆனால் புவனேஸ்வரியின் மனப்பான்மையும் தவறு. நான் மட்டுமா தவறு செய்தேன், இங்கே எல்லாரும் தான் தவறு செய்கிறார்கள் என்று காட்டி கொடுக்கும் மனப்பாங்கு தவறு.

  நான் தவறு செய்தேன் தண்டிக்கப் பட்டேன், மற்றவர்களாவது பிழைத்து kollattum, அல்லது வாழட்டும் என்ற எண்ணம் இல்லாமல், நான் பட்ட துன்பம் எல்லாரும் பெற வேண்டும் என்ற எண்ணம் ஒரு தவறான எண்ணம்,


  அரசும் சரி ரஜினியும் சரி லெனின் கைது விவகாரத்தில் காட்டிய தீவிரத்தை , முல்லைப் பெரியாறு, ஒகேனக்கல் ஆணை, நாங்குநேரி தோழில் நுட்ப பூங்கா, திருப்பூர் சாயப் பட்டறை விவகாராத்தில் காட்டி இருந்தால் பாராட்டி இருக்கலாம்.

  ஒரு வேளை திரை உலகை சர்ர்ந்த ஜெயலலிதா இப்போது முதல்வராக இருந்து இருந்தால், லெனின் பொடாவில் போயிருப்பார்.

  பதிலளிநீக்கு
 4. சரியான கருத்து! வினை விதைத்தவர்கள் வினையைத்தான் அறுவடை செய்ய வேண்டி இருக்கும்!

  பதிலளிநீக்கு
 5. மிக்க நன்றி தோழரே...

  //ஆனால் பெண்களை இந்த திரையுலகம் எப்படி பயன்படுத்துகிறது, பெண்ணுடல் மீது எப்படிப்பட்ட பிம்பங்களை காலம் காலமாய் உருவாக்கிக் கொண்டு இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்குமா? நடிகைகள் குறித்து சமூகத்தின் பொதுப்புத்தியில் உருவாக்கப்படும் கருத்துக்களுக்கு தாங்களும் பொறுப்பு என்பதை உணருமா? இதுதான் ஒரு கலையின் தர்மமா?//

  -இங்குதான் அனைத்துக் கோளாறுகளும் ஆரம்பிக்கின்றன. இவர்கள் வெறும் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தும் நடிகைகளை அதே கோணத்தில்தான் பெரும்பாலானோர் அணுகுகிறார்கள்.

  அதைத்தான் பத்திரிகைகளும் செய்கின்றன.

  இந்த சட்டப்பிரிவின் கீழ்தான் அந்த எடிட்டரைக் கைது செய்ய வேண்டும் என்று நடிகர்கள் சிலர் முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதன் பேரில், அதே சட்டப்பிரிவில் கைது நடக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவு வந்ததாகவும் கூறப்படுகிறது.

  ஆக... திரையில் நாட்டாமைகளாக வேஷம் கட்டியவர்களை, தமிழக அரசையும் நாட்டாமை செய்பவர்களாக மாற்றியிருக்கிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள்...

  ஒரு விபச்சார வழக்கை பத்திரிகையுலகப் போராட்டமாக மாற்றியுள்ளார் முதல்வர்...

  நினைக்கவே மிக வேதனையாக உள்ளது நண்பரே.

  இது ஒரு நிகழ்வுக்காக மட்டும் இந்த வார்த்தையைப் பிரயோகிக்கவில்லை. தமிழகத்தில் நடப்பவற்றைப் பார்க்கும் போது எழும் வேதனைக் குரல். எப்படி... எப்போது மாற்றம் சாத்தியமாகும்?

  -சிவா

  பதிலளிநீக்கு
 6. அந்த பத்திரிகை குறித்த நமது பார்வையில் மாற்றமில்லை... அவர்கள் இப்போதைக்கு திருந்துவார்கள் என்றும் தோன்றவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்!

  -சிவா

  பதிலளிநீக்கு
 7. Hats off! A very humane point of view.
  Also, the mention about Sujatha's story is very apt in this context.

  பதிலளிநீக்கு
 8. எந்த பூனை சரியா தாவாமல்..! பூனைக்கண் புவனேஸ்வரியை பூவைச்சு, புது சேலை கட்ட வைச்சுதோ ...???

  பதிலளிநீக்கு
 9. உலகறிந்த உண்மை ஒன்று , தினமலரில் வந்ததுதான், அவர்களுக்கு வருத்தம்,மூன்றடி நடந்தாலே மூச்சி வாங்கும் வயதான hero , அவருக்கு 15 வயது பெண் குழந்தை ஜோடி, கிட்டதட்ட அவரின் பேத்தி வயதுக்கும் குறைவான வயதுடைய பெண் அவருக்கு தேவை.இது ஒரு, child abuse. இதை முதலில் அவர்கள் நிறுத்தட்டும்.
  ஹீரோ , ஹீரோயின் இடைய வயது வித்தியாசம் அதிக பட்சம் 10 வருடம் என சட்டம் கொண்டுவரவேண்டும்.தமிழ் மக்களின் வாழ்கையை வீணடிக்கும் திரைத்துறையை தடை செய்ய வேண்டும்.
  தமிழ் வாலிபர்களின் எதிர்காலத்தையே பாழடிக்கும் ரசிகர் மன்றங்களை தடை செய்ய வேண்டும். கலாசார சிரழிவின் முக்கிய காரணமான சினிமாவை தடை செய்ய வேண்டும் .
  சென்சார் போர்டின் உறுபினர்களாக பத்திருக்கியாளர்களை நியமிக்க வேண்டும்.
  கதாநாயகி அணியும் உடைகளுக்கு அளவு நிர்ணயம் செய்யவேண்டும்.
  முக்கியமாக திரைப்படங்களை consumer துறையின் கீழ் வர வகை செய்ய வேண்டும்.
  தரமில்லா படங்களை பார்த்த ரசிகர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் .

  பதிலளிநீக்கு
 10. //ஆக... திரையில் நாட்டாமைகளாக வேஷம் கட்டியவர்களை, தமிழக அரசையும் நாட்டாமை செய்பவர்களாக மாற்றியிருக்கிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள்...
  //

  தமிழகத்தில் சினிமாவையும் அரசியலையும்
  ஒன்றாக பிணைத்து வைத்திருக்கிறார்கள்.
  சினிமாவுக்கு அரசியல் தேவைப்படுகிறது.
  இப்போதைய கைது நடவடிக்கை ஒரு உதாரணம்.
  முன்பு விஜய் வக்கீல்களை இழிவு படுத்தியதாக ஒரு புகார்.
  அது சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து
  விஜய் உட்பட மன்னிப்பு கேட்டார்கள் என்பது வரலாறு.
  appoathu yaarum kalaignaraiyoa kamishanaraiyoa chanthikavillai.

  ஆனால் சினிமாகாரர்களுக்கு தான் செல்வாக்கு இருக்கிறதே.
  உடனடி கைது. அடி தூள்.


  அரசியலுக்கு சினிமா தேவைப்படுகிறது.
  ஒக்கனேக்கல் விவகாரம். அது முழுக்க முழுக்க அரசியல்
  சார்ந்த ஒரு விஷயம். உடனே சினிமா காரர்கள்
  எங்கிருந்தோ தூண்டப்படுகிறார்கள். ஒரு நாள் ஆர்ப்பாட்டம்.
  லைவ் ஷோ பெட்டிக்குள் போய்விட்டது ஒக்கனேக்கல்.
  அது தான் டெக்னிக்.

  எனவே கலைஞர் சினிமாகாரர்களை திருப்தி படுத்தி ஆக
  வேண்டும். சினிமா காரர்களும் கலைஞரை அழைத்து
  திரைப்பட சி.டி வெளியிட்டாக வேண்டும்.
  எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னியிருக்க தண்டிக்கப்பட்டது மட்டும்
  பத்திரிகை காரன்.

  விபசாரம் பசிக்காக செய்யப்படும் ஒரு தொழில் என்று
  ரஜினி இப்போது கண் விழித்திருக்கிறார்.
  இவ்வளாவு நாள் எத்தனை ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.
  அப்போதெல்லாம் கண் விழிக்காத ரஜினிக்கு பாபாவின் அருள்
  கிடைத்திருப்பது மகிழ்ச்சியே.
  என்னை பொறுத்தவரை புவனேஸ்வரியானாலும்
  பீச்சில் ஐம்பது ரூபாய்க்கு வெயிலில் காத்திருக்கும்
  பெண்ணானாலும் பசியும் ஒன்று தான் குற்றமும் ஒன்று தான்
  தண்டனையும் ஒன்று தான்.
  விபசாரம் பசி போக்க செய்யப்படுவது ஒரு 10% தான்.
  மற்றபடி எல்லாம் சுக போக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தான்
  செய்கிறார்கள். என்னுடைய பதிவை படியுங்கள் புரியும்.

  http://writervisa.blogspot.com/2009/10/blog-post_08.html

  பதிலளிநீக்கு
 11. நேரடியாக முதல்வரிடம் சென்று மனு கொடுப்பதும்.. கைதுக்குபின்னும் முதல்வரிடம் நேரடியாகச் சென்று நன்றி சொல்வதும்... இதிலிருந்தே தெரியவில்லை அரசுதான் இவர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்று.
  அடுத்த தேர்தலில் இவர்கள் எல்லாரும் திமுக ஆதரவு பிரச்சார பீரங்கிகளாக ஆகிவிடுவார்கள் பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 12. தோழர், கொஞ்சம் சீக்கிரம் எழுதுங்க. ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசாம். கொஞ்ச நாளைக்கு தமிழக அரசின் திரைப்பட விருதினை கிண்டலடித்த உங்களுக்கு இந்த காமெடி எப்படி இருக்கு? இருங்க, இது காமெடியா, இல்லை டிராஜடியா? ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், குவாண்டனமோ பகுதிகளில் நடப்பவை அமைதிக்கானவையா? தோழர், உங்க மெயிலில் அவருக்கு அந்தப் பட்டம் கொடுத்ததற்கான காரணாங்களாக நோபல் பரிசுக்குழு சொன்னவை உள்ளது. அந்தக் கொடுமையை படியுங்கள்.

  பதிலளிநீக்கு
 13. //உலகறிந்த உண்மை ஒன்று , தினமலரில் வந்ததுதான், அவர்களுக்கு வருத்தம்,மூன்றடி நடந்தாலே மூச்சி வாங்கும் வயதான hero , அவருக்கு 15 வயது பெண் குழந்தை ஜோடி, கிட்டதட்ட அவரின் பேத்தி வயதுக்கும் குறைவான வயதுடைய பெண் அவருக்கு தேவை.இது ஒரு, child abuse. இதை முதலில் அவர்கள் நிறுத்தட்டும்.
  ஹீரோ , ஹீரோயின் இடைய வயது வித்தியாசம் அதிக பட்சம் 10 வருடம் என சட்டம் கொண்டுவரவேண்டும்.தமிழ் மக்களின் வாழ்கையை வீணடிக்கும் திரைத்துறையை தடை செய்ய வேண்டும்.
  தமிழ் வாலிபர்களின் எதிர்காலத்தையே பாழடிக்கும் ரசிகர் மன்றங்களை தடை செய்ய வேண்டும். கலாசார சிரழிவின் முக்கிய காரணமான சினிமாவை தடை செய்ய வேண்டும் .
  சென்சார் போர்டின் உறுபினர்களாக பத்திருக்கியாளர்களை நியமிக்க வேண்டும்.
  கதாநாயகி அணியும் உடைகளுக்கு அளவு நிர்ணயம் செய்யவேண்டும்.
  முக்கியமாக திரைப்படங்களை consumer துறையின் கீழ் வர வகை செய்ய வேண்டும்.
  தரமில்லா படங்களை பார்த்த ரசிகர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் .//

  இப்படியே ஆப்கானிஸ்தான் போய்ருவீங்க போலிருக்கே. கிட்டத்தட்ட தலிபான் நெடி வீசுது.

  பதிலளிநீக்கு
 14. அன்பு மாதவராஜ்,

  பூனைக்கதை நானும் படித்திருக்கிறேன். எத்தனை அழகான ஓ ஹென்றி முடிவு அதில். அதை எத்தனை அழகாக செருகியிருந்தீர்கள் உங்கள் பதிவில். (யாரும் அதைப்பற்றி குறிப்பிடாதது ஆச்சரியமாயிருக்கிறது). இன்னும் ஒரு தொப்பிச்சிறகு உங்களுக்கு அது, எங்கோ, எப்போதோ படித்த ஒரு சிறுகதையை மீண்டும் அகழ்ந்தெடுத்து தேவையான இடத்தில் செருகுவதற்கு மஹாசாமர்த்தியம் வேண்டும், மாதவராஜ்!
  எந்த பெண் நடிகைகளுக்கும் பெண் கதாபாத்திரங்கள் எப்படி புனையப்படுகிறது, ஏன் இப்படி புனையப்படுகிறது என்ற கேள்வி இல்லை. யாரை எதிர்த்து இந்த போராட்டங்கள் நடத்த வேண்டும் என்பது இவர்களுக்கு எப்போது தெரியப்போகிறது என்று யாருக்கும் கேள்வி இல்லை. எது விபச்சாரம் என்பது பற்றி சரியான புரிதல்கள் இல்லை யாருக்கும்.
  நன்றாக வந்திருக்கிறது, ஆனால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், எள்ளலும் இருந்திருக்கலாம்.

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 15. /
  ஜீவன் said... 9

  எந்த பூனை சரியா தாவாமல்..! பூனைக்கண் புவனேஸ்வரியை பூவைச்சு, புது சேலை கட்ட வைச்சுதோ ...???
  /

  ரிப்பீட்டு

  பதிலளிநீக்கு
 16. // இந்த ‘அதிர்ஷ்டம்’ கெட்ட பூனைகளும், புவனேஸ்வரிகளும் பாவம்தான். //

  எனக்குப் பூனைகளை (மட்டும்) பிடிக்காது என்றாலும் ... உங்கள் கூற்றின் நியாயத்தை (மட்டும்) ஏற்றுக் கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 17. Hi
  whatever dinamalar said is already what we have heard here and there. somebody had the guts to put it in black & white. i hope that govt or media should not bog down to the pressure of tamil artists.
  May be our media should learn a lesson or two from the Electronic media of Delhi. Though they go little overboard and most of the time sensationalize the news they are almost acting as a watch dog for the government.
  whereas our media in tamil nadu has never shown any guts in tackling the government or the worst movies that these protesting artists are making every year.

  பதிலளிநீக்கு
 18. //திரையுலகம் சாராத வேறு பாவப்பட்ட பெண்களைப் பற்றி இப்படி எழுதப்பட்டு இருந்தால் இந்த அரசு என்ன செய்யும்? முதல்வர் என்ன செய்வார்? அதிலும் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் ஒதுங்கி இருந்தால் இத்தனை வேகமான, கெடுபிடியான நடவடிக்கைகள் இருந்திருக்குமா? இதுதான் அரசின் தர்மமா? //
  வேற ஏதாவது பெண்ணுக்கு என்றால் சூப்பர் ஸ்டார் கலைஞர் சப்போர்ட் செய்வார்களா ........
  சூப்பர் ஸ்டார் சொல்வதை போல் இவர்கள் என்ன வயற்றுகாகவா விபசாரம் செய்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 19. நல்ல பதிவு. ஆனால் நீங்கள் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். இது குறித்து தினமணியின் தலையங்கம் சிறப்பாக இருக்கிறது.


  http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=137524&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

  பதிலளிநீக்கு
 20. see this link also
  http://tamilniruban.blogspot.com/

  பதிலளிநீக்கு
 21. பிரபாகர்!
  ரஜினி பழைய பேட்டியில் என்ன சொல்லியிருக்கிறார் நண்பரே?


  செய்யது!
  யாரிடமிருந்து எஸ்கேப்?


  குப்பன்.யாஹூ!
  பாவம், புவனேஸ்வரி மட்டுமல்ல. நாமும்தான்.


  தமிழ்நாடன்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 22. சிவா!
  //தமிழகத்தில் நடப்பவற்றைப் பார்க்கும் போது எழும் வேதனைக் குரல். எப்படி... எப்போது மாற்றம் சாத்தியமாகும்?//
  இந்த தேர்தல் முறையில் மாற்றம் வரும்போது.


  தீபா!
  நன்றி.


  பித்தனின் வாக்கு!
  நன்றி.


  ஜீவன்!
  புவனேஸ்வரியிடம் கேட்க வேண்டிய கேள்வி.


  அனானி!
  எத்தனை வேண்டுதல்கள்! அதுசரிங்க. சினிமாவையே தடை செய்ய வேண்டும் என்பது ஒவரா இல்ல?
  பல வேண்டுதல்கள் ரசிக்க முடிந்தது.
  நன்றி.  விசா!
  சொல்வது சரிதான். இங்கு ஒருவருக்கு ஒருவர் ஒத்து ஊதுவதுதான் நடக்கிறது. தர்ம நியாயங்கள், உண்மைகள் குறித்து அக்கறையுமில்லை. பொறுப்புமில்லை.

  பதிலளிநீக்கு
 23. உழவன்!
  இந்த பிரச்சார பீரங்கி என்னும் வார்த்தை என்னமோ தெரியவில்லை, ரொம்ப நாளாய் அணிச்சையாகவே அருவருப்பான ஒன்றாகி இருக்கிறது.


  இராம்கோபால்!
  நன்றி. எழுதிவிட்டேன்.படித்தீர்களா?


  காளவாசல்!
  இதை யாராவது சொன்னால், நிர்ப்பந்தித்தால தலிபான். சமூகமே இந்தக் கட்டுப்பாட்டுக்கு தன்னை தயர் செய்து கொண்டால்...?

  பதிலளிநீக்கு
 24. ராகவன்!
  உங்கள் பின்னூட்டம் ரொம்ப பிடித்திருந்தது.
  //யாரை எதிர்த்து இந்த போராட்டங்கள் நடத்த வேண்டும் என்பது இவர்களுக்கு எப்போது தெரியப்போகிறது என்று யாருக்கும் கேள்வி இல்லை. எது விபச்சாரம் என்பது பற்றி சரியான புரிதல்கள் இல்லை //

  முக்கியமான விஷயம். சரியோ, தவறோ இதுகுறித்து எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது.


  மங்களூர் சிவா!
  அவருக்குச் சொன்னது இங்கு ரிப்பீட்டு...  நந்தா!
  மிக்க நன்றி... வருகைக்கும், புரிதல்களுக்கும்.  கலீல்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


  வெண்ணிற இரவுகள்!
  உங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. தஸ்தாவஸ்கியின் இந்த நாவலை எத்தனை முறை படித்திருப்பேன் எனச் சொல்ல முடியாது. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


  ஒப்பாரி!
  நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். அவசரமாகத்தான் நேற்று காலையில் எழுதினேன்.


  அனானி!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 25. so class -A wrokers cannot be arrested in tamil nadu. CM himself will interfere and stop it.

  Then they should stop harassing the little poor outfits. who will fight for them? Will the CM say we will not arrest these poor level sex workers.?

  paavam bhuvaneswariyaa? ( i think she was doing in the 50000 rs range).

  alla dhu paavam ennatra paaliyal thozhilaaligala?

  பதிலளிநீக்கு
 26. aathirai!

  புவனேஸ்வரி இங்கு ஒரு குறியீடுதான். அதிர்ஷ்டம் இருந்திருந்தால், பெரிய நட்சத்திரமாகக் கூட ஆகியிருப்பாங்க. அப்ப எல்லாக் கதவுகளும் அவங்களுக்கு திறக்கும். பூ கேட்டால் பூ விழும். தலை கேட்டால் தலை விழும். இப்போ, கதவுகள் இழுத்து மூடப்பட்டு இருக்கு.

  பதிலளிநீக்கு
 27. i whole heartedly accept what aathirai said (26). what about nayanthara, nameetha etc etc. every one knows about them. but the press never revealed openly about them. bhuvaneswari has become a scapgoat. i dont want to justify her action. because of male shauvanism in the cinema field, the female artistes are suffering.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!