உனக்குப் பின்னால் ஒருவன்

 

ஆஸ்பத்திரியில் இருந்தவனைப் போய்ப் பார்த்தேன். தலையில் கட்டு. இடது முழங்கையிலும் கட்டு. நல்ல வேளை எலும்பு முறிவு இல்லை. முகத்தில் அதிர்ச்சி இருந்தது.

இருக்கன்குடி அம்மன்கோவிலுக்குச் சாமி கும்பிடச் சென்றிருக்கிறான். ஆற்றைத் தாண்டி மரங்களின் ஊடே நடந்து போய்க்கொண்டு இருக்கும்போது எதோ சலசலப்பு கேட்டிருக்கிறது. திரும்பினால், ஒருவன் பின்னால்  விறகுக் கட்டையை ஓங்கிக் கொண்டு வந்திருக்கிறான். தடுத்த கையையும் மீறி தலையில் தாக்கி இருக்கிறது. இவன் கத்திய கத்தலில் அக்கம் பக்கம் இருந்து  ஆட்கள் வர, அடிக்க வந்தவன் ஓடிப் போயிருக்கிறான்.

“யாரு அவன்?”

“எங்க ஊருக்குப் பக்கத்து ஊருதான்”

“பழக்கமானவனா?”

“இரண்டு மூணு தடவப் பாத்துருக்கேன். பேங்குக்கு வரும்போது பேசியிருக்கேன். பழக்கமெல்லாம் பெரிசா இல்ல”

“அப்புறம் ஏன் அடிச்சான்”

“அதான் எதுக்குனே தெரியல”

“பைத்தியமா அவனுக்கு”

“ஆனா ஒரு விஷயம் யோசிச்சா ஞாபகத்துக்கு வருது. ஒருதடவ பேங்க்குக்கு நகை திருப்ப அவன் வந்தான். மணி அப்ப மூணு. இரண்டு மணிக்குள்ள பணம் வாங்குறதும், கொடுக்குறதும் முடிஞ்சிரும். நாளைக்கு வாங்கன்னு சொன்னேன். கண்டிப்பா நகையத் திருப்பணும்னு நின்னான். முடியாதுங்கன்னு சொல்லி அனுப்புனேன். அது நடந்தும் ஒரு வருஷத்துக்கு மேல ஆவுது. அதுக்கா இப்ப வந்து அடிப்பான்?”

அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தேன். பின்னால் யாரோ என்னைத் துரத்திக்கொண்டு இருப்பது போலிருந்தது.

*

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அடக்கொடுமையே

    என்னதான் நடக்குதுங்க

    பதிலளிநீக்கு
  2. சக மனிதர்களை அடிப்பது என்பது விலங்கின செயல்.

    நமக்கு இந்த அடிக்கும் பழக்கம் வர காரணம் ஒரு வேலை பள்ளியில் ஆசிரியர்கள் நம்மை அடிப்பதால் வந்ததோ.

    பதிலளிநீக்கு
  3. //ஆனா ஒரு விஷயம் யோசிச்சா ஞாபகத்துக்கு வருது. ஒருதடவ பேங்க்குக்கு நகை திருப்ப அவன் வந்தான். மணி அப்ப மூணு. இரண்டு மணிக்குள்ள பணம் வாங்குறதும், கொடுக்குறதும் முடிஞ்சிரும். நாளைக்கு வாங்கன்னு சொன்னேன். கண்டிப்பா நகையத் திருப்பணும்னு நின்னான். முடியாதுங்கன்னு சொல்லி அனுப்புனேன். அது நடந்தும் ஒரு வருஷத்துக்கு மேல ஆவுது. அதுக்கா இப்ப வந்து அடிப்பான்?”

    அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. ஆஸ்பத்திரியை
    //
    இதுக்கு எல்லாமா அடிக்கிறார்கள் மனிதன் எங்கே பொய் கொண்டிருகிறான்

    பதிலளிநீக்கு
  4. மனிதனுக்குள் எப்போதும் மிருக உணர்வு இருந்து கொண்டேதான் உள்ளது.

    இன்று நேற்றல்ல... ஆபேலைக் கொன்ற காயின் காலத்திலிருந்து.

    அந்த மிருக உணர்வை மழுங்கடித்து நாகரீக வழிக்குக் கொண்டுவரத்தான் முந்தைய தலைமுறை மனிதர்கள் பாடுபட்டார்கள்.

    ஆனால் இன்று மிருக உணர்ச்சியை ரஜினிகாந்துகளாக, கமலஹாஸன்களாக உருவகப்படுத்தி வழிபடும் காலமல்லவா... இனி இந்த உணர்வுதான் சமூகத்தை ஆக்கிரமிக்கும் தோழர்.

    வில்லனிஸமும் ஹீரோயிஸமும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்திக் கொண்டேதான் இருக்கப்போகிறது.

    'முதலில் வில்லனாக ஆரம்பிக்கலாம்... நாடாளும் ஹீரோவாக மாற அது உதவும்' என்பதால், விறகுக்கட்டையால் அடிக்கும் வில்லன்கள் பெருகிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

    சமூக மாற்றத்துக்கு ஏதாவது ஒரு முதல் பொறி ஏற்பட வேண்டும். எங்கே எப்போது என்றுதான் புரியவில்லை!

    நன்றி

    சிவா

    பதிலளிநீக்கு
  5. அடிச்சவன் லூசா இருப்பானோ? எதுக்கும் நீ ஹெல்மெட் போட்டுட்டு நடந்து போண்ணா!

    பதிலளிநீக்கு
  6. அன்பின் மாதவராஜ்

    நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் - என்ன நடக்கிறது நாட்டில் - கொடுமை

    பதிலளிநீக்கு
  7. கதிர்!
    குப்பன் யாஹூ!
    வெண்ணிற இரவுகள்!
    மஹேஷ்!
    சிவா!
    மங்களூர் சிவா!
    அம்பிகா!
    சீனா!

    அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. செய்யது!
    நீங்கள் ரொம்பவே sharpதான். ஒத்துக்குறேன்.
    :-))))))

    பதிலளிநீக்கு
  9. மாதவராஜ் அண்ணா...
    தலைப்பு பார்த்துட்டு 'உன்னைப்போல் ஒருவன்' பற்றிய மற்றொரு பதிவோன்னு பயந்துட்டேன். ஆனாலும் சரியான நேரத்தில் எழுதப்பட்ட பதிவுன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அன்பு மாதவராஜ்,

    இதைப்படித்தவுடன், பெயர் ஞாபகம் இல்லாத லா.ச.ரா வின் சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது. அவரும் பேங்கில் வேலை செய்யும் போது, பந்த நல்லூருக்கு மாற்றலாகி போகும் போது இது போல நகையை மீட்க அகால வேளையில் வந்திருந்த ஒரு வாடிக்கையாளரை பற்றி எழுதியிருப்பார்.

    நகையை அன்று திருப்ப முடியாததால், அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும்? ஒரு வருஷம் கழித்து அவனை அந்த விஷயம் பாதித்திருக்கலாம், ஏதாவது பெரிய இழப்பு நேர்ந்திருக்கலாம், அது இறப்பாய் கூட இருக்கலாம்.

    நூல் பிடித்து இழுக்க கதையாய் வளர்கிறது. எனக்கு இது மிருகத்தனமான நிகழ்வாக தெரியவில்லை, இருக்கன்குடி மாரியம்மன் கோவில்ல திடீர்னு பார்த்தவுடனே, அவனோட நகைய அன்னைக்கு மீட்க முடியாததால ஏற்பட்ட இழப்பு ஞாபகம் வந்து, பக்கத்துல கிடச்ச கட்டைய எடுத்து அடிக்கத் தோன்றியது, மிருக நிலை வெளிப்பாடாக தோன்றவில்லை. ஒரு ரிஃப்ளெக்ஸ் ஆக்‌ஷனா தான் தெரியுது, நிறைய நாள் திட்டம் போட்டா மாதிரி தெரியலை.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  11. சரவணக்குமார்!
    நன்றி.

    ராகவன்!
    நீங்கள் சொல்வது உண்மைதான் இங்கு.

    பதிலளிநீக்கு
  12. சந்தனமுல்லை!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. கதையா நான் கூட நிஜமுன்னு நினைசிட்டேன்

    பதிலளிநீக்கு
  14. எங்கள் வங்கித் தோழனுக்கு நிஜமாகவே நடந்ததுதான். லேசாய் புனைவு உண்டு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!