சில நாட்களுக்கு முன் ‘இப்படியும் ஒரு அவுட் சோர்சிங்’ என்று ஒரு பதிவில் எங்கள் கிராம வங்கியில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் குறித்தும், அவர்களின் அவல நிலை குறித்தும் தெரியப்படுத்தி இருந்தேன்.
இதே கருத்துக்களை தோழர்கள் காமராஜ் (அடர்கருப்பு), அண்டோ கால்பட் (கொக்கரக்கோ) ஆகிய இருவரும் Bank Workers Unity என்னும் தொழிற்சங்கப் பத்திரிகையில் எழுதியிருந்தனர். அதனால் வங்கியின் imageக்கு பாதிப்பு உண்டாக்கி விட்டார்கள் என அவர்கள் இருவரும் நேற்று காலையில் எங்கள் வங்கி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டனர்.
கருத்துச் சுதந்திரம் என்னும் fundamental rightsக்கு புறம்பாக, அனாயசமாக எந்தக் கேள்வியும் இல்லாமல் இங்கே ஒரு அரசு வங்கியில் நடவடிக்கை எடுக்க முடிகிறது. இதுதான் இன்று நிர்வாகங்களின் கோர முகமாக இருக்கிறது. சட்டம் , ஜனநாயகம் என சகலத்தையும் துச்சமாக தூக்கியெறிகிறது அதிகாரத்தின் பீடங்கள்.
அந்த இரு தோழர்களையும் மீண்டும் பணியிலமர்த்துவதற்கான தொட்ர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
எனவே, இப்போதைக்கு -
வலைப்பக்கங்களுக்கு தொடர்ந்து வருவதிலும், படிப்பதிலும், எழுதுவதிலும் சிரமங்கள் இருக்கின்றன.
*
தங்கள் போராட்டம் வெற்றியடையட்டும்!
பதிலளிநீக்குதோழர்,
பதிலளிநீக்குவலைப்பூக்களில் இயங்குகிற அதே நேரத்தில் நாம் மிக கவனமாக நேரம் கொடுத்து செய்ய வேண்டிய விஷயங்கள் சங்க நடவடிக்கைகள், அதன் பயனாக சமூக மாற்றம். நீங்கள் சொன்ன அண்ட்டோ மற்றும் காமராஜ் ஆகியோரின் கட்டுரைகளை நான் bank workers unity இதழில் படித்தேன். இதற்கு முன்னரும் இதே போன்ற கட்டுரைகள் அந்த தரமான இதழில் இடம் பெற்றுள்ளன. அதன் மீதான நடவடிக்கை என்பது நிச்சயம் கண்டிக்கத்தக்கது வன்மையுடன். தோழர், பெருமைமிகு பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் இந்த போராட்டத்தில் வெற்றி காணும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு. தோழர்கள், அதை சீக்கிரம் முடித்து மீண்டும் விரைவில் வலைப்பக்கத்திற்கு திரும்ப வேண்டுகிறேன்.
அநியாயத்தின் உச்சம். அதிகாரம் பணிந்து தோழர்களை விரைவில் பணியில் அமர்த்த வேண்டும்.
பதிலளிநீக்குபோராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
what to do, Last elections we voters have totally rejected communism, socialism and voted for capitalistic government.
பதிலளிநீக்குso we have to bear these damages and do our fights endlessly.
இடை நீக்கம் வருத்தம் அளிக்கிறது.
பதிலளிநீக்குசிக்கலிருந்து சீக்கிரம் மீண்டு வாருங்கள் நண்பர்களே
அவர்களின் இருவரின் இடை நீக்கம் வருத்தமளிக்கிறது. கோபமும்.முதலில் அவர்களுக்கு உதவுங்கள்.
பதிலளிநீக்குவருத்தமளிக்கின்றது.
பதிலளிநீக்குஉங்கள் (அனைவரின்) முயற்சியும் உதவியும் நிச்சயம் அவர்களுக்கு தேவை.
வருத்தமா இருக்கு தோழர். நடைமுறையில் உள்ளதை எழுதியதற்கு இது அதிகபட்ச தண்டனை. எதேச்சதிகாரப் போக்கைத்தான் காட்டுகிறது.
பதிலளிநீக்குசீக்கிரம் பிரச்சினை தீர விரும்புகிறேன்.
இடை நீக்கம் வருத்தம் அளிக்கிறது.
பதிலளிநீக்குமிக அநியாயமாக இருக்கிறது, உங்கள் போராட்டம் வெற்றி பெறும்.
பதிலளிநீக்குமிக அநியாயமாக இருக்கிறது. நடைமுறையில் உள்ளதை சுட்டிகாட்டியது தவறா? இது அதிகபட்ச தண்டனை.
பதிலளிநீக்குசீக்கிரம் பிரச்சினை தீர போராட்டம் வெற்றியடையட்டும்.
அன்பு மாதவ்.
பதிலளிநீக்குமுகத்தில் அப்பியிருக்கிற கரியைத் துடைக்காமல் அதைக் காட்டிவிடுகிற கண்ணாடியை உடைக்கிற புத்திஜ“விகள் எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்கின்றனர். தோழர்கள் காமராஜ், ஆன்ட்டோ விஷயத்தில் பெருமைக்குரிய செய்திகள் எனக்கு நிறைய கிடைத்தன.
1. தற்காலிக ஊழியர்களின் நிரந்தரத்திற்கான போர்க்குரலை எதிரொலித்ததற்காகத் தாங்கள் தண்டனையை எதிர்கொள்வது மரியாதைக்குரிய தொழிற்சங்க நடவடிக்கை.
2. தமது எழுத்துக்களில் சுடரும் உண்மையின் வெப்பம் தாங்க மாட்டாத நிர்வாகத்தின் தாக்குதலை எதிர்கொள்வது வணக்கத்திற்குரிய முற்போக்குக் கருத்தியல் நடவடிக்கை. பாங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி இதழின் 30 ஆண்டு இயங்குதலில் இத்தகைய பரிசு வேறு எந்த எழுத்தாளருக்கும் வாய்த்ததில்லை. அது தனி பாராட்டுதலுக்குரிய நடவடிக்கை.
3. தற்காலிக வேலை நீக்கத்தை, மிக இளையவரான ஆன்ட்டோவும் (அண்மையில் திருமணமாகி, தந்தை என்ற பதவியை விரைவில் பெற இருக்கிறவர்), ஐம்பதைத் தொடும் தூரத்தில் இருக்கும் காமராஜூம் சந்திப்பது வாழ்க்கைப் போராட்டத்தில் விசித்திர முரண். அதை இயல்பாகப் பகிர்ந்து கொள்ளும் பக்குவமான இடத்தில் குடும்பம் அமையப் பெற்றிருப்பது போற்றுதலுக்குரிய வாழ்க்கை.
பொதுக் கோரிக்கைகளுக்காகப் பழிவாங்குதலைச் சந்திப்பது தொழிற்சங்க இயக்கத்திற்குப் புதிதல்ல. அதன் கம்பீரம் உருக்குலையாமல் தளபதிகளை ஈன்றெடுத்துக் கொண்டே இருப்பதுதான் அதன் புரட்சிகரத் தாய்மையைக் குறிக்கும்.
வாழ்த்துக்கள் தோழா, உடன் இருக்கிறோம் எப்போதும்...........
எஸ் வி வேணுகோபாலன்
இரு சஸ்பென்ஷனுக்கு எதிரான அதிர்ச்சி கலந்த வருத்தங்களையும், போராட்டம் வெற்றி பெற தெரிவித்த வாழ்த்துக்களையும் உங்கள் அனைவரிடமிருந்து பெற்றது, போராட்ட காலத்தில் தார்மீக ஆதரவாக இருந்தது. இன்று அவ்விரு தோழர்களும் மீண்டும் பணியில் சேர்ந்ததில், உங்களது அன்புக்கும் பாத்திரமுண்டு. நன்றி அனைவருக்கும்.
பதிலளிநீக்கு